06 May 2016

BK Murli 6 May 2016 Tamil

BK Murli 6 May 2016 Tamil

06.05.2016    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்

இனிமையான குழந்தைகளே! இப்போது நீங்கள் சூத்ரவம்சத்திலிருந்து பிராமண வம்சத்திற்கு வந்திருக்கிறீர்கள், தந்தை பிரம்மா வாயின் மூலம் உங்களை தத்தெடுத்திருக்கின்றார் – இதே குஷியில் இருங்கள்.


கேள்வி:

எந்த ரகசியத்தை பிராமண குலத்தைச் சார்ந்த குழந்தைகள் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்?


பதில்:

நிராகார சிவபாபா நமக்கு தந்தையாக இருக்கின்றார், மேலும் இந்த பிரம்மா நமது தாயாக இருக்கின்றார். நிராகார பகவான் தாய், தந்தையாக, நண்பன், துணைவனாக எப்படி ஆகின்றார்? என்ற ஆழமான, குப்தமான ரகசியத்தை பிராமண குலத்தைச் சார்ந்த குழந்தைகள் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். அதிலும் யார் தெய்வீக குலத்தில் உயர்ந்த பதவி அடையக் கூடியவர்களோ அவர்களே இந்த இரகசியத்தை யதார்த்தமாக புரிந்து கொள்வார்கள்.


ஓம்சாந்தி.

குழந்தைகள் அமர்ந்திருக்கிறீர்கள், நமது பாப்தாதா வந்திருக்கின்றார் என்பதை புரிந்து கொண்டிருக்கிறீர்கள். தந்தை (பாப்) தாதாவுடன் சேந்து விடும் பொழுது பாப்தாதா வந்திருக்கின்றார் என்று கூறுவீர்கள். அவர் ஆசிரியராகவும் இருக்கின்றார். தந்தை தாதாவின்றி எதையும் கூற முடியாது. புத்தி வேலை செய்ய வேண்டும், ஏனெனில் இது புது விசயம் அல்லவா! பக்தி மார்க்கத்தில் ஒருவரை மட்டுமே நினைவு செய்கின்றனர். நமது குரு இந்த இடத்தில் இருக்கின்றார் என்று கூறுவர். அவரது சரீரத்தின் பெயரை அறிந்திருக்கின்றனர். எமது பாபா, எமது தாய் இந்த இடத்தில் வசிக்கின்றனர். அவர்களுக்கு பெயர், உருவம் அனைத்தும் இருக்கிறது. பிறகு மனிதர்கள் சுருக்கமாக எழுதி வைத்து விட்டனர். மனிதர்கள் எதை உருவாக்கியிருக்கின்றனரோ அதில் சிறிது தவறு இருக்கிறது. நீங்கள் தான் தாயும், தந்தையுமாக இருக்கிறீர்கள் ....... என்று பாடுகின்றனர், இது ஒரே ஒருவருக்குத் தான் பாடப்பட்டிருக்கிறது. பிரம்மாவிற்காகவும் பாடப்படவில்லை, விஷ்ணுவிற்கும் அல்ல, சங்கருக்கும் அல்ல. அவரது பெயர், உருவம் புத்தியில் வருவது கிடையாது. நீங்கள் தான் தாய், தந்தை, நாங்கள் உங்களது குழந்தைகளாக இருக்கிறோம் என்று பாடினாலும் புத்தி மேலே சென்று விடுகிறது.. கிருஷ்ணரை யாரும் நினைவு செய்ய முடியாது. நிராகாரமானவரைத் தான் நினைவு செய்வர், அவருக்குத் தான் மகிமைகள் உள்ளன. ஆக இங்கு அமர்ந்தி!ருக்கும் பொழுது லௌகீக சம்மந்தங்களிலிருந்து புத்தியை நீக்கி பரலௌகீகத் தந்தையை நினைவு செய்ய வேண்டும் என்று தந்தை புரிய வைக்கின்றார். இந்த நேரத்தில் இவர் உங்கள் எதிரில் இருக்கின்றார். பக்தி மார்க்கத்தில் என்ன பாடினாலும் கண்களால் மேலே பார்த்து கூறுகின்றனர் - நீங்கள் தான் தாய், தந்தை ....... ஹே பகவான் என்று கூறி நினைவு செய்கின்றனர். பகவான் என்று கூறுகின்ற பொழுது சிவலிங்கத்தையும் நினைப்பது கிடையாது. கிளிப்பிள்ளையைப் போன்று அவ்வாறே பாடுகின்றனர். லெட்சுமி நாராயணனுக்கும் இவ்வாறு கூற முடியாது, அவர்கள் மகாராஜா, மகாராணி ஆவர். அவர்களது குழந்தை தான் தாய், தந்தை என்று கூறுவர், துணைவன் என்று கூறமாட்டார்கள். பதீத பாவன் என்று பக்தர்கள் பாடுகின்றனர், ஆனால் சிவலிங்கமாக இருப்பார் என்று புத்தியில் வருவது கிடையாது. ஹே பகவான், என்று அவ்வாறே கூறிவிடுகின்றனர். ஹே பகவான் என்று கூறியது யார்? யாரைப் பார்த்து கூறுகிறோம்? என்பது எதுவும் தெரியாது. நான் ஆத்மா, அவரை அழைக்கிறேன் என்ற ஞானம் ஒருவேளை இருந்தால் அவர் நிராகார பரமாத்மா என்பதையும் புரிந்து கொள்வர். அவரது ரூபமே லிங்கமாகும். யதார்த்த முறையில் யாரும் தந்தையை நினைவு செய்வது கிடையாது. அவர் மூலம் என்ன பிராப்தி கிடைக்கும்? எப்பொழுது கிடைக்கும்? என்று எதுவும் தெரியாது. நீங்களும் அறியாமல் இருந்தீர்கள். இப்போது தந்தையினுடையவர்களாக ஆகிவிட்டீர்கள். சிவபாபா நம்மை பிரம்மாவின் மூலம் தனது குழந்தைகளாக ஆக்கியிருக்கின்றார் என்பதை அறிவீர்கள். இந்த பிரம்மா தாயாக இருக்கின்றார். இந்த பிரம்மா தாயின் மூலம் சிவபாபா தத்தெடுத்திருக்கின்றார். இந்த நேரத்தில் நீங்கள் நல்ல முறையில் அறிவீர்கள். நாம் சிவபாபாவின் குழந்தைகளாக இருக்கிறோம். சாகாரத்தில் பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகளாக இருக்கிறோம். பிரஜாபிதா பிரம்மாவின் மூலம் மனித சிருஷ்டியை படைக்கின்றார். புது உலகை படைக்கின்றார் என்பது கிடையாது. இந்த நேரத்தில் வந்து மடியில் அமரச் செய்கின்றார், தத்தெடுக்கின்றார். தாய், தந்தை என்று இப்போது கூறுகின்றோம் எனில் சிவன் தந்தையாகவும், பிரம்மா தாயாகவும் ஆகிவிடுகின்றார். அவர்கள் தான் தாய், தந்தை என்று கூறப்படுகின்றனர். ஆத்மாக்களாகிய நீங்கள் எனது குழந்தைகளாக ஆகிவிட்டீர்கள் என்று பிரம்மாவின் மூலம் தந்தை கூறுகின்றார். பிறகு ஆத்மாக்களுக்கு அமர்ந்து அறிமுகம் கொடுக்கின்றார் - ஆத்மா என்றால் என்ன? புருவங்களுக்கு நடுவில் நட்சத்திரம் போன்று இருக்கிறது என்று கூறுகின்றனரே தவிர வேறு எதுவும் தெரியாது. ஆத்மா 84 பிறவிகள் எடுக்கிறது, ஆத்மா சரீரத்தின் மூலம் நடிப்பு நடிக்கிறது. ஆத்மா ஒரு சரீரத்தை விடுகின்ற பொழுது பெயர், உருவம், தேசம், காலம் மற்றும் முழு குடும்பமும் மாறி விடுகிறது. யாராவது தத்தெடுக்கின்றனர் எனில் குடும்பமே மாறி விடுகிறது. எந்த தாய், தந்தை பிறப்பு கொடுத்தார்களோ அவர்களையும் அறிவர், பிறகு யார் தத்தெடுத்தார்களோ அவர்களுடைய குடும்ப வாரிசாக ஆகிவிடுவர். இங்கு நீங்கள் சூத்ரவம்சத்திலிருந்து பிராமண வம்சத்திற்கு வந்திருக்கிறீர்கள். பிரம்மா உடலின் மூலம் பிரவேசமாகி உங்களை தத்தெடுத்திருக்கின்றார். நீங்கள் பிராமண குலத்திற்கு வந்து விட்டீர்கள். இந்த விசயங்களை சாஸ்திரங்களில் எழுத முடியாது, இது புரிய வைக்கப்படுகிறது. எழுதுவதன் மூலம் யாரும் புரிந்து கொள்ளவும் முடியாது.


நாம் பரம்பிதா பரமாத்மாவின் குழந்தைகளாக ஆகியிருக்கிறோம் என்பதை இப்போது குழந்தைகளாகிய நீங்கள் மட்டுமே அறிவீர்கள். இவர் பிரம்மா தாயாக ஆகிவிடுகிறார். பிரம்மாவை பிரஜாபிதா என்று தான் கூறுகின்றனர். இவர் மூலம் குழந்தைகளாகிய உங்களை தத்தெடுக்கின்றார் - இது எவ்வளவு குப்தமான விசயமாகும். நேராக வராமல் யாரும் புரிந்து கொள்ள முடியாது. யார் இந்த பிராமண குலத்தைச் சார்ந்தவர்களோ, தெய்வீக குலத்தில் உயர்ந்த பதவி அடையக் கூடியவர்களோ அவர்கள் தான் புரிந்து கொள்ளவும் முடியும். புதியவர்களின் புத்தியில் இந்த விசயங்கள் அமரவே அமராது. புத்தியில் அமராது, யாருக்கும் புரிய வைக்கவும் முடியாது. உங்களிலும் வரிசைக் கிரமமான முயற்சியின் படி தான் புத்தியில் அமர்கிறது. தாயும் நீயே, தந்தையும் நீயே ...... என்று பாடப்படுகிறது. சிவபாபா தான் நினைவு செய்யப்படுகின்றார், பிறகு நீங்கள் தான் தாயாக, தந்தையாக இருக்கின்றீர்கள் என்றும் கூறுகின்றனர். ஒருவர் தந்தை எனில் பிறகு அவர் எப்படி தாயாக ஆக முடியும்? இந்த விசயங்களை வேறு யாரும் புரிய வைக்க முடியாது. சாஸ்திரங்களில் வியாசர் எழுதியதை மனிதர்கள் மனப்பாடம் செய்து விட்டனர், அவ்வாறே உங்களுக்கும் கூறுவர். உங்களுக்கு யாராவது கூறியிருப்பர், நீங்களும் மனப்பாடம் செய்து விட்டீர்கள். புது மனிதர்கள் புரிந்து கொள்வது மிகவும் கடினமாகும். இங்கு இருக்கக் கூடியவர்களும் மற்றவர்களுக்கு அந்த அளவிற்கு புரிய வைக்க முடிவதும் கிடையாது. நீங்கள் ஆத்மாக்கள், உங்களது தந்தை பரம்பிதா பரமாத்மா ஆவார். அந்த எல்லையற்ற தந்தை தான் எல்லை யற்ற ஆஸ்தி கொடுக்கின்றார். ஆஸ்தி கொடுத்திருந்தார், பிறகு மறுபிறப்பு எடுத்து எடுத்து 84 பிறவிகள் முடித்து விட்டோம், இப்போது தந்தை மீண்டும் ஆஸ்தி கொடுப்பதற்காக வந்திருக்கின்றார். இது மற்றவர்களுக்கு புரிய வைப்பது எவ்வளவு எளிதாகும்! நீங்கள் யாரை தாய், தந்தை என்று அழைக்கிறீர்கள்? – சிந்தனைக்கான விசயம் அல்லவா! பிரம்மாவின் மூலம் தத்தெடுக்கின்றார் எனில் பிறகு அவசியம் தாயும் தேவை. ஆக யார் முழு ஈடுபாடுள்ள பெண் குழந்தை இருக்கிறாரோ அவருக்கு நாடகப்படி ஜெகதம்பா என்ற பட்டமும் கொடுக்கப் படுகிறது. ஆண்களை ஜெகதம்பா என்று கூற முடியாது, இவரை ஜெகத்பிதா என்று கூறலாம். இவரது பிரஜாபிதா என்ற பெயர் மிகவும் பிரபலமானது. நல்லது, பிரஜா மாதா எங்கு இருக்கிறார்? ஆகவே தாய் தத்தெடுக்கப்படுகின்றார். ஆதிதேவன் இருக்கின்றார், பிறகு ஆதிதேவி தத்தெடுக்கப்படுகின்றார். ஜெகதம்பா ஒரே ஒருவர் தான், அவருக்குத் தான் மகிமை பாடப்படுகிறது. ஜெகதம்பாவிற்கு எவ்வளவு திருவிழாக்கள் (மேளா) நடைபெறுகின்றன! ஆனால் அவரது தொழிலைப் பற்றி யாரும் அறியவில்லை. கல்கத்தாவில் காளியின் கோயில் இருக்கிறது. மும்பையிலும் ஜெகதம்பாவின் கோயில் இருக்கிறது. முகம் தனித்தனியாக இருக்கிறது. ஜெகதம்பா யார்? என்பதை யாரும் அறியவில்லை. அவரையும் பகவதி என்று கூறுகின்றனர். ஜெகதம்பாவை பகவதி என்று கூற முடியாது. அவர் பிராமணி ஆவார், ஞான, ஞானேஸ்வரி ஆவார். அவருக்கு தந்தையிடமிருந்து ஞானம் கிடைத்திருக்கிறது. நீங்கள் அனைவரும் ஜெகதம்பாவின் குழந்தைகள். ஞானம் கேட்டு பிறகு மற்றவர்களுக்கு கூறுகிறீர்கள். உங்களது தொழிலே இது தான். உங்களுக்கு ஈஸ்வரன் கற்பிக்கின்றார், இந்த பிரம்மாவும் மனிதர் தான். மனிதர் யாரையும் தூய்மை (பாவனம்) ஆக்க முடியாது. எதையும் புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு மனிதர்களின் புத்தி மந்தமாக ஆகிவிட்டது. பதீத பாவன் ஒரே ஒரு தந்தை ஆவார். அவர் பதீதமானவர்களை பாவனம் ஆக்குவதற்காகவே அவர் வருகின்றார். இந்த முழு உலகமும் தமோ பிரதானமாக இருக்கிறது. அனைவரும் பதீதமாக இருக்கின்றனர். புது உலகம் பாவனமாகவும், பழைய உலகம் பதீதமாகவும் இருக்கிறது. பழைய உலகில் நரகவாசிகள் இருக்கின்றனர். புது உலகில் சொர்க்கவாசிகள் இருக்கின்றனர். சத்யுகத்தில் பாரதவாசி தேவி தேவதைகள் மட்டுமே இருந்தனர், வேறு யாரும் இல்லை என்று புத்தி கூறுகிறது. இப்போது குழந்தைகளாகிய உங்களுக்கு இந்த ஞானம் கிடைத்திருக்கிறது. புது உலகில் முதலில் சூரியவம்சி தேவதைகள் இருந்தனர், பிறகு சந்திரவம்சம் ஏற்பட்டது எனில் சூரியவம்சம் கடந்து விட்டது. சந்திரவம்சத்திற்குப் பிறகு வைஷ்யவம்சி ...... வரும் எனவே நிச்சயமாக லெட்சுமி நாராயணனின் இராஜ்யம் இருந்தது. நல்லது, அவர்கள் அதற்கு முன்பு எப்படி இருந்தனர்? என்பதை யாரும் புரிந்து கொள்ள முடியாது. குழந்தைகளாகிய உங்களுக்கு தந்தை கால சக்கரத்தின் இரகசியத்தைப் புரிய வைத்திருக்கின்றார். துவாபரத்தில் வைஷ்யவம்சம் ஆகும். கலியுகத்தில் சூத்திரவம்சம் ஆகும்.


நாம் பிராமணர்களாக ஆகியிருக்கிறோம் என்பதை இப்போது நீங்கள் அறிவீர்கள். உங்களை தந்தை தன்னுடையவராக ஆக்கியிருக்கின்றார், அதாவது சூத்திர தர்மத்திலிருந்து தேவதா தர்மத்திற்கு மாற்றல் செய்திருக்கின்றார். இப்போது சூரியவம்சம், சந்திரவம்சம் கிடையவே கிடையாது. லெட்சுமி நாராயணின் இராஜ்யமும் கிடையாது, இராம இராஜ்யமும் கிடையாது. இப்போது கலியுகத்தின் கடைசியாகும். கலியுகத்திற்குப் பிறகு அவசியம் சத்யுகம் வரும். கலியுகத்தில் இது பழைய, தூய்மையில்லாத உலகமாகும், மிகுந்த துக்கமானவர்களாக இருக்கின்றனர். அததனால் தேவதைகளிடம் சென்று மகிமை பாடுகின்றனர், தலைவணங்குகின்றனர். நல்லது, லெட்சுமி நாராயணனுக்கு இந்த இராஜ்யம் கொடுத்து யார்? யாராவது கூற முடியுமா? யாருடைய எண்ணத்திலும் வர முடியாது. ஏனெனில் கலியுகம் இப்போது சிறு குழந்தையாக இருக்கிறது, இன்னும் 40 ஆயிரம் ஆண்டுகள் இருக்கிறது என்று புத்தியில் இருக்கிறது. அதனால் தான் இந்த எண்ணம் வருவதே கிடையாது. இப்போது உங்களுக்கு இந்த எண்ணம் வருகிறது. நமக்கு நினைவில் இருப்பது கிடையாது என்று சில குழந்தைகள் கூறுகின்றனர். ஏன் இருப்பது கிடையாது? ஏனெனில் அதிகாலையில் எழுந்து நினைவில் அமர்ந்து தாரணை செய்வது கிடையாது. புரிந்து கொள்ளவும் செய்கிறீர்கள், பிறகு யாருக்கும் புரிய வைக்க முடிவது கிடையாது. இம்மாதிரியான நிலை அவசியம் ஏற்படத் தான் செய்யும். அனைவரும் ஒன்று போல் புத்திசாலிகளாக ஆகிவிட முடியாது. புத்திசாலிகளும் தேவை, புத்தியற்றவர்களும் தேவை. அதிபுத்திசாலிகள் சென்று இராஜா, இராணியாக ஆவார்கள். யார், எந்த அளவிற்கு அதிகம் புரிந்து கொண்டு, புரிய வைக்கிறார்களோ அவர்களது பெயர் பிரபலமாகிறது. கண்காட்சிக்கான ஏற்பாடு நடக்கிறது எனில் பாபா, இன்னாரை அனுப்புங்கள் என்று எழுதுகின்றனர். நீங்கள் புரிய வைக்க முடியாதா? பாபா, அவர்களுக்கு பயிற்சி அதிகம் இருக்கிறது. நாம் சிறிது அறை குறையாக (கச்சாவாக) இருக்கிறோம். யார் அழைப்பு கொடுக்கின்றனர்? அழைப்பு எங்கிருந்தெல்லாம் வருகிறது? என்று எழுதி அனுப்புங்கள் என்று பாபா சுயம் கூறுகின்றார். யாரை அனுப்ப வேண்டும் என்று நான் பார்த்துக் கொள்கிறேன். சந்நியாசிகளும் அந்த அழைப்பில் இருக்கிறார்களா என்ன? பிறகு மிக நல்ல பிரம்மா குமாரியை அனுப்ப வேண்டியிருக்கும். குமாரகா, மனோகர், கங்கா போன்றவர்கள் இருக்கின்றனர் - இவர்களில் யாரையாவது அனுப்பி விடுங்கள். குழந்தைகள் பலர் இருக்கின்றனர். ஜெகதீசை அனுப்புங்கள், ரமேஷ் - ஐ அனுப்புங்கள். ஒருவரை விட மற்றொருவர் புத்திசாலி என்று நீங்களும் புரிந்து கொள்கிறீர்கள். நீதிபதிகள் இருப்பது போன்று! ஒருவரை விட மற்றொருவர் புத்திசாலிகளாக இருப்பர். ஒருவரை விட ஒருவர் புத்திசாலி என்பதை அரசாங்கம் அறிந்திருக்கிறது. அதனால் தான் வழக்கு ஒருவரிடமிருந்து மற்றொருவரிடம் செல்கிறது, பிறகு உயர்நீதி மன்றம் செல்கிறது, பிறகு அதற்கும் மேல் செல்கிறது. அவரும் சரியான தீர்ப்பு சொல்லவில்லையெனில் பிறகு அவரை விட உயர்ந்தவர்களிடம் செல்வர். எங்கள் மீது கருணை காட்டுங்கள். இந்த விசயங்கள் அனைத்தும் இங்கு நிகழ்கின்றன. சத்யுகம், திரேதாவில் நடைபெறாது. பிறகு துவாபரத்தில் இராஜா, இராணியின் இராஜ்யம் நடைபெறுகிறது. அங்கு மகாராஜா, மகாராணி தான் வழக்குகளை கவனித்துக் கொள்வர். வழக்குகளும் குறைவாகத் தான் இருக்கும். இப்போது தமோபிரதானமாக, பதீதமாக இருக்கிறது அல்லவா! ஆக சக்கரவர்த்தியிடம் வழக்கு செல்கின்ற போது குறைந்த தண்டனை கொடுத்து விடுவார். கடுமையான தவறு எனில் கடுமையான தண்டனை கொடுப்பார். இங்கு எத்தனை நீதிபதிகள், வக்கீல்கள் உள்ளனர்! காரியங்களிலும் இந்த அளவிற்கு வித்தியாசம் இருக்கிறது. சத்யுகத்தில் எப்படி இருக்கும்? என்பது யாருக்கும் தெரியாது. இப்போது தந்தை புரிய வைக்கின்றார் - இந்த லெட்சுமி, நாராயணனை அறிவீர்களா? என்று யாரிடம் வேண்டுமென்றாலும் கேளுங்கள். பிர்லா பல கோயில்களை கட்டிக் கொண்டிருக்கின்றார், அவருக்கு கடிதம் எழுதுங்கள். நீங்கள் லெட்சுமி நாராயணனின் கோயில்களை அதிகம் உருவாக்குகிறீர்கள். சத்யுகத்திற்கு முன்பு கலியுகமாக இருந்தது எனில் இவர்களுக்கு இந்த இராஜ்யம் எப்படி கிடைத்தது? கலியுகத்தில் எதுவும் கிடையாது. தேவதைகளிடம் யாரும் யுத்தம் செய்திருக்க இருக்க முடியாது. யுத்தத்தின் மூலம் யாரும் உலகிற்கு எஜமானர்களாக ஆகிவிட முடியாது. உலகிற்கு எஜமானர்களாக இந்த லெட்சுமி நாராயணன் இருந்திருக்கின்றனர், அவர்களது சிலையைத் தான் வைத்திருக்கிறீர்கள். இப்போது கலியுகமாக இருக்கிறது. இங்கு ஆயுதங்களின் மூலம் யுத்தம் நடைபெறுகிறது. கிறிஸ்தவ தர்மத்தைச் சார்ந்தவர்கள் தங்களுக்குள் ஒன்றாக சேர்ந்து விட்டால், தங்களுக்குள் அன்பாக இருந்து விட்டால் உலகிற்கு எஜமானர்களாக ஆகிவிடுவர் என்ற தந்தை புரிய வைத்திருக்கின்றார். ஆனால் உலகிற்கு எஜமானர்களாக லெட்சுமி நாராயணன் தான் ஆகின்றனர். இவர்கள் தங்களுக்குள் சேர்ந்து விட்டால் எஜமானர்களாக ஆகிவிடுவர் என்று புத்தி கூறுகிறது. ஆனால் சத்யுகத்தின் மகாராஜா, மகாராணியாக யாரும் ஆகிவிட முடியாது. நாடகமே இவ்வாறு உருவாக்கப்பட்டிருக்கிறது. இப்போது நாம் மீண்டும் யோக பலத்தின் மூலம் சொர்க்கத்தின் ஆஸ்தி அடைந்து கொண்டிருக்கிறோம். கல்பத்திற்கு முன்பும் சங்கமத்தில் தந்தையிடமிருந்து பதவி அடைந்திருந்தோம் என்று நீங்கள் கூற முடியும். 84 பிறவிகள் முடிவடைந்து விட்டது, மீண்டும் ஆஸ்தி அடைந்து கொண்டிருக்கிறோம். நல்லது.


இனிமையிலும் இனிமையான, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாய் தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.


தாரணைக்கான முக்கிய சாரம்:

1) தானும் தாரணை செய்யவும் மற்றும் மற்றவர்களுக்கும் செய்விப்பதற்காகவும் அதிகாலையில் எழுந்து தந்தையின் நினைவில் அமர வேண்டும். என்ன புரிந்து கொண்டீர்களோ அதை மற்றவர்களுக்குப் புரிய வைக்கும் பயிற்சி செய்ய வேண்டும்.


2) லௌகீக சம்மந்தங்களிலிருந்து புத்தியின் தொடர்பை நீக்கி ஒரு பரலௌகீகத் தந்தையை நினைவு செய்ய வேண்டும். தந்தையிடமிருந்து எந்த ஞானத்தை அடைந்தீர்களோ அதை கேட்டு அனைவருக்கும் கூற வேண்டும். இது தான் உங்களது தொழிலாகும்.


வரதானம்:

அனைத்து ஆத்மாக்களுக்கும் சக்திகளை தானம் செய்யக் கூடிய மாஸ்டர் விதை ரூபமானவர் ஆகுக.


காய்ந்த இலைகளாகவும், வாடியிருக்கும் பல பக்த ஆத்மாக்களுக்கு தனது விதை ரூப ஸ்திதியின் மூலம் மீண்டும் சக்திகளை தானம் செய்யுங்கள். அவர்களுக்கு அனைத்து பிராப்திகளையும் அடையச் செய்வதற்கு ஆதாரம் உங்களது ஆசையற்ற (இச்சா மாத்ரம் அவிக்தா) நிலையாகும். எப்போது சுயம் ஆசையற்ற நிலையில் இருப்பீர்களோ அப்போது தான் மற்ற ஆத்மாக்களின் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்ற முடியும். ஆசையற்ற நிலை என்றால் சம்பூர்ண சக்திசாலி விதை ரூப நிலையாகும். ஆக மாஸ்டர் விதை ரூபமானவர் ஆகி பக்தர்களின் கூக்குரலைக் கேளுங்கள், பலனை அடையச் செய்யுங்கள்.


சுலோகன்:

சதா பரமாத்மாவின் குடை நிழலில் இருப்பது தான் அலௌகீக வாழ்க்கையில் பாதுகாப்பாக இருப்பதற்கான சாதனமாகும்.


***ஓம் சாந்தி***

Whatsapp Button works on Mobile Device only