07 May 2016

BK Murli 8 May 2016 TamilBK Murli 8 May 2016 Tamil

08.05.2016  காலை முரளி         ஓம் சாந்தி       ''அவ்யக்த பாப்தாதா''  ரிவைஸ் 11.04.1981  மதுபன்

'' சத்தியத்தின் சக்தி மூலம் உலக மாற்றம் '' 


இன்றைய இந்த சபை எந்த மாதிரியான சபை? இது விதியை உருவாக்குபவர்களின் சபை, சித்தியை (வெற்றியை) வழங்குபவர்களின் சபை. தன்னை அந்த மாதிரி விதியை உருவாக்குபவர் அல்லது சித்தி அதாவது வெற்றியை வழங்குபவர் என்று நினைக்கிறீர்களா? இந்த சபையின் விசேஷங்களை தெரிந்திருக்கிறீர்களா? விதியை உருவாக்குபவர்களின் விசேஷ சக்தி எது, அதன் மூலமாக ஒரு நொடியில் அனைவரையும் விதி மூலமாக வெற்றி சொரூபியாக ஆக்க முடியும். அதை தெரிந்திருக்கிறீர்களா? அது தான் சத்தியம் அதாவது உண்மை நிலை. சத்தியத்திற்கு மகான் (மேன்மை) தன்மை இருக்கிறது. சத்தியம் தான் மரியாதைக் குரியது. அந்த சத்தியத்தை அதாவது மகான் தன்மையை தெளிவான ரூபத்தில் தெரிந்திருக்கிறீர்களா? விசேஷ விதி சத்தியத்தின் ஆதாரத்தில் இருக்கிறது. முதல் அஸ்திவாரம் தன்னுடைய ஞானம் அதாவது தன்னுடைய சொரூபத்தின் சத்தியத்தை பாருங்கள். சத்திய சொரூபம் எது மற்றும் முன்பு என்னவென்று நம்பியிருந்தீர்கள்? அப்படி முதலாவதாக சத்தியமான ஆத்மா சொரூபம் என்பதானதை. எதுவரை இந்த சத்தியத்தை தெரிந்திருக்கவில்லையோ அதுவரை மகான் தன்மை இருந்ததா? மகானாக இருந்தீர்கள் அல்லது மகானின் பூஜாரியாக இருந்தீர்கள், எப்பொழுது தன்னைத் தானே தெரிந்து கொண்டீர்கள் என்றால் என்ன ஆகிவிட்டீர்கள்? மகான் ஆத்மா ஆகிவிட்டீர்கள். சத்தியத்தின் அதிகாரம் மூலம் மற்றவர்களுக்கும் நாம் ஆத்மா என்றும் கூறுகிறீர்கள். இதே விதமாக சத்தியமான தந்தையின் சத்தியமான அறிமுகம் கிடைப்பதினால் பரமாத்மா எங்களுடைய தந்தை என்று அதிகாரத்துடன் கூறுகிறீர்கள். ஆஸ்தியின் அதிகாரத்தின் சக்தியினால் தந்தை எங்களுடையவர் மற்றும் நாங்கள் தந்தையினுடையவர்கள் என்று கூறுகிறீர்கள். அதே போல் தன்னுடைய படைப்பின் அல்லது சிருஷ்டி சக்கரத்தின் சத்தியமான அறிமுகத்தை-இப்பொழுது இந்த சிருஷ்டி சக்கரம் முடிவடைந்து மீண்டும் நடந்தது போல் அப்படியே நடக்க வேண்டும் என்று அதிகாரத்துடன் கூறுகிறீர்கள். இப்பொழுது நடப்பது சங்கமயுகமேயன்றி கலியுகம் அல்ல. முழு உலகின் வித்வான்கள், பண்டிதர்கள் மற்றும் அனேக ஆத்மாக்கள் சாஸ்திரங்களின் அனுசாரம் கலியுகம் தான் நடக்கிறது என்று நம்பினாலும், நீங்கள் ஐந்து பாண்டவர்கள் அதாவது கோடியில் சிலர் மிகக் குறைந்த ஆத்மாக்கள், இப்பொழுது நடப்பது கலியுகம் அல்ல சங்கமயுகம் என்று சவால் விடுகிறீர்கள் என்றால் எந்த அதிகாரத்தோடு இதைக் கூறுகிறீர்கள்? சத்தியத்தின் மகான் தன்மை காரணமாக கூறுகிறீர்கள். வாருங்கள் மற்றும் வந்து புரிந்து கொள்ளுங்கள் என்று உலகிற்கு செய்தி கொடுக்கிறீர்கள். தூங்கிக்கொண்டிருக்கும் கும்பகர்ணர்களை எழுப்பி நேரம் வந்து விட்டது என்று கூறுகிறீர்கள். இது தான் சத்தியமான தந்தை, சத்தியமான ஆசிரியர், சத்குரு மூலமாக சத்தியத்தின் சக்தி கிடைத்திருக்கிறது. இது தான் சத்தியம் என்று அனுபவம் செய்கிறீர்கள்.

 

சத்தியத்திற்கு இரண்டு அர்த்தங்கள் இருக்கின்றன. ஒன்று சத்தியம், இன்னொன்று சத்தியம் என்றால் அழியாதது. அப்படி தந்தை சத்தியமாகவும் இருக்கிறார், அழியாதவராகவும் இருக்கிறார் எனவே தந்தை மூலமாக என்ன அறிமுகம் கிடைத்திருக்கிறதோ அவை அனைத்தும் சத்தியம் மற்றும் அழியாதவை. பக்தர்கள் கூட தந்தையின் மகிமையாக ''சத்தியம், சிவம், சுந்தரம்'' என்று பாடுகிறார்கள். சத்தியமானவர் என்றும், அழியாதவர் என்றும் நம்புகிறார்கள். காட் இஸ் ட்ரூத் அதாவது கடவுள் உண்மையானவர் என்றும் நம்புகிறார்கள். எனவே தந்தை மூலமாக சத்தியத்தின் அதிகாரம் கிடைத்து விட்டது. இந்த ஆஸ்தியும் கிடைத்து விட்டது தான் இல்லையா. சத்தியத்தின் அதிகாரம் உள்ளவர்களின் மகிமையும் கேட்டிருக்கிறீர்கள், அதன் அடையாளமாக என்ன இருக்கும்? சிந்தி மொழியில் எங்கு ''சத்தியம் உள்ளதோ அங்கு மனம் சதா குஷியில் நடனமாடும்'' என்ற பழமொழி இருக்கிறது. இன்னும் பழமொழிகள் இருக்கின்றன - 'சத்தியத்தின் படகு ஆடும் அசையும் ஆனால் மூழ்காது'. உங்களையும் அசைப்பதற்கு மிகுந்த முயற்சி செய்கிறார்கள் தான் இல்லையா. இது பொய், இது கற்பனை என்று கூறுகிறார்கள் இல்லையா. ஆனால் உண்மை இருக்கிறது என்றால் குஷியில் மனம் நடனமாடும். நீங்கள் சத்தியத்தின் மகான் நிலையின் போதையில் எப்பொழுதும் குஷியின் ஊஞ்சலில் ஆடிக்கொண்டே இருக்கிறீர்கள். குஷியில் நடனமாடிக்கொண்டே இருக்கிறீர்கள். எவ்வளவு தான் அவர்கள் உங்களை ஆட்டுவதற்கு முயற்சி செய்கிறார்களோ அந்த அளவே என்ன ஆகிறது? உங்களுடைய ஊஞ்சலை ஆட்டுவதினால் இன்னும் அதிகமாகவே ஆடுகிறீர்கள். இது அசைப்பது அல்ல ஆனால் ஊஞ்சலில் ஆட்டுவது. அந்த மாதிரி அனுபவம் செய்கிறீர்களா? அசைவதல்ல ஆனால் ஊஞ்சலில் ஆடுகிறீர்கள். சத்தியத்தின் சக்தி முழு இயற்கையையும் (தூய்மையாக) சதாபிரதானமாக ஆக்கிவிடுகிறது. யுகத்தை சத்யுகமாக ஆக்கிவிடுகிறது. அனைத்து ஆத்மாக்களின் சத்கதியின் எதிர்கால பாக்கியத்தை உருவாக்கிவிடுகிறது. ஒவ்வொரு ஆத்மாவும் உங்களுடைய சத்தியத்தின் சக்தி மூலமாக அவரவர்களின் சக்திகேற்றபடி அவர்களின் தர்மத்தில், அவர்களுடைய நேரத்தில் முக்திக்குப் பிறகு ஜீவன் முக்தியில் தான் அவதரிப்பார்கள். ஏனென்றால் விதியை உருவாக்குபவர்களின் மூலமாக சங்கமயுகத்தின் இறுதி வரை தந்தையை நினைவு செய்வதற்கான விதியின் செய்தி அவசியம் கிடைக்க வேண்டும். பின்பு சிலருக்கு வாய்மொழி மூலமாக, சிலருக்கு படங்கள் மூலமாக, சிலருக்கு செய்திகள் மூலமாக, சிலருக்கு உங்கள் அனைவரின் சக்திசாலியான எண்ண அலைகள் மூலமாக, சிலருக்கு இறுதி விநாச லீலையின் கூச்சல் குழப்பம் மூலமாக, வைராக்கிய உள்உணர்வின் வாயுமண்டலம் மூலமாக கிடைக்கும். இந்த அனைத்து அறிவியலின் சாதனங்கள், உங்களுடைய இந்த செய்தி கொடுக்கும் காரியத்தில் சகயோகியாக இருக்கும்.

 

சங்கமயுகத்தில் இயற்கை சகயோகி ஆவதற்கான தன்னுடைய பங்கை தொடங்கி விடும். அனைத்து பக்கங்களிலிருந்தும் இயற்கையின் தலைவனை மற்றும் மாஸ்டர் இயற்கையின் தலைவர்களை வரவழைப்பார்கள். அனைத்து பக்கங்களிலிருந்தும் தானாகவே வலிய வந்து அர்ப்பணம் மற்றும் சகயோகம் செய்வர். பின்பு என்ன செய்வீர்கள்? ஒவ்வொரு இயற்கையின் தத்துவத்தை தேவதையின் ரூபத்தில் காண்பித்திருக்கிறார்கள். இந்த மாதிரி பக்தியில் மகிமை செய்யப்பட்டிருக்கிறது. தேவதை என்றால் கொடுப்பவர். அப்படி இறுதியில் இந்த அனைத்து இயற்கையின் தத்துவம் உங்கள் அனைவருக்கும் சகயோகம் கொடுக்கக்கூடிய வள்ளல் ஆகிவிடுவார்கள். இந்த கடலும் உங்களுக்கு சகயோகம் கொடுக்கும். முழு உலகில் நாலாபுறங்களிலும் உள்ள பொருட்களை பாரத பூமியில் கொண்டு வருவதில் சகயோகியாக இருப்பார்கள். எனவே கடல் தன்னிடமுள்ள இரத்தினங்கள் நிரப்பிய தட்டுக்களை கொடுத்தன என்று கூறுகிறார்கள். அதே போலவே பூமி (நிலம்) அதிர்பு பூகம்பம் போன்றவற்றால் அனைத்து மதிப்புள்ள பொருட்கள் உயர்ந்த ஆத்மாக்கள் உங்களுக்காக ஒரு இடத்தில் பாரதத்தில் ஒன்றாக கொண்டு வந்து சேர்ப்பதில் சகயோகியாக இருக்கும். இந்திர தேவன் (மழைக்கு அதிபதி) என்று கூறுகிறார்கள் இல்லையா. அப்படி மழையும் நிலத்தை சுத்தப்படுத்தும் சகயோகத்தில் ஆஜராகி விடும். இந்த அனைத்து குப்பைகளையும் நீங்களோ சுத்தப்படுத்த மாட்டீர்கள். இந்த முழு இயற்கையின் சகயோகம் கிடைக்கும். காற்று சிலவற்றை அகற்றும், சிலவற்றை மழை தன்னுடன் எடுத்துச் செல்லும். அக்னியையோ தெரிந்தே இருக்கிறீர்கள். அப்படி இறுதியில் இந்த அனைத்து தத்துவங்கள் சிரேஷ்ட ஆத்மாக்கள் உங்களுக்கு சகயோகம் கொடுக்கும் தேவதை ஆவார்கள். மேலும் அனைத்து ஆத்மாக்களும் அனுபவம் செய்வார்கள். பிறகு பக்தியில் இப்பொழுது சகயோகம் கொடுக்கும் காரியத்தின் காரணமாக தேவதை ஆவீர்கள். அந்தக் காரியத்தின் அர்த்தத்தை மறந்து மனிதர்கள் தத்துவங்களுக்கு தேவதை ரூபங்களை கொடுத்து விடுகிறார்கள். எப்படி சூரியன் தத்துவமாகும், ஆனால் அதற்கு மனித ரூபம் கொடுத்துவிட்டார்கள். அப்படி விதியை உருவாக்குபவராகி என்ன காரியம் செய்ய வேண்டும் என்று புரிந்து கொண்டீர்களா?

 

அவர்களுடையது விதானசபை அதாவது சட்டசபை மேலும் இது விதியை உருவாக்குபவர்களின் சபை. அங்கு சபையின் உறுப்பினர்கள் இருப்பார்கள். இங்கு அதிகாரியாக மகான் ஆத்மாக்கள் இருப்பார்கள். அப்படி சத்தியத்தின் மகான் தன்மை எவ்வளவு என்று புரிந்து கொண்டீர்களா? சத்தியம் பாரஸ் என்ற உலோகத்திற்கு சமமானது. எப்படி பாரஸ் இரும்பையும் தங்கமாக்கிவிடுகிறது. உங்களுடைய சத்தியத்தின் சக்தி ஆத்மாவை, இயற்கையை, காலத்தை, அனைத்து பொருட்களை, அனைத்து சம்மந்தத்தை, சம்ஸ்காரங்களை, உணவை, செயல்பாட்டை அனைத்தையும் சதோபிரதானம் அதாவது மிக தூய்மையாக ஆக்கிவிடுகிறது. தமோகுணத்தின் அதாவது மிக மோசமான தரத்தின் பெயர் அடையாளத்தை அழித்து விடுகிறது. சத்தியத்தின் சக்தி உங்களுடைய பெயரை, ரூபத்தை சத்தியம் அதாவது அழியாததாக ஆக்கிவிடுகிறது. அரைக் கல்பம் உணர்வுள்ள (சாகார) ரூபத்தில், அரைக்கல்பம் மூர்த்திகளின் (சிலை) ரூபத்தில். அரைக் கல்பம் பிரஜைகள் உங்களுடைய பெயர் புகழை பாடுவார்கள், அரைக்கல்பம் பக்தர்கள் உங்களுடைய பெயர், புகழை பாடுவார்கள். உங்களுடைய வார்த்தை சத்தியவாக்கின் ரூபத்தில் வர்ணிக்கப்படுகிறது. இன்று வரையிலும் கூட ஒன்று அல்லது பாதி வார்த்தைகளை கேட்பதினால் தன்னை மகான் என்று அனுபவம் செய்கிறார்கள். உங்களுடைய சத்தியத்தின் சக்தி மூலம் உங்களுடைய தேசமும் அழியாததாக ஆகிவிடுகிறது. வேஷமும் அழியாததாக ஆகிவிடுகிறது. அரைக்கல்பம் தேவதை வேஷத்தில் இருப்பீர்கள், அரைக் கல்பம் தேவதைகளின் வேஷத்தில் நினைவுச் சின்னம் இருக்கும். இன்று வரையிலும் கூட பக்தர்கள் உங்களுடைய விக்ரகங்களை நல்ல நல்ல ஆடைகளினால் அலங்கரித்து கொண்டிருக்கிறார்கள். செய்த காரியம் மற்றும் சரித்திரம் இவை அனைத்தும் சத்தியமாக ஆகிவிட்டது. செய்த காரியத்தின் நினைவாக பாகவதத்தை எழுதி விட்டார்கள். சரித்திரங்களின் அனேக கதைகள் எழுதிவிட்டார்கள். இவை அனைத்தும் சத்தியமாக ஆகிவிட்டது. எந்தக் காரணத்தினால்? சத்தியத்தின் சக்தியின் காரணமாக. உங்களுடைய தினசரி நடவடிக்கைகள் கூட சத்தியமாகிவிட்டது. உணவு அருந்துவது, அமிர்தம் குடிப்பது இவை அனைத்தும் சத்தியமாகிவிட்டது. உங்களுடைய விக்கிரகங்களையும் தூக்குகிறார்கள், அமர வைக்கிறார்கள், சுற்றி வலம் வருகிறார்கள், பிரசாதம் படைக்கிறார்கள், அமிர்தம் அதாவது தீர்த்தம் வைக்கிறார்கள் மற்றும் குடிக்கிறார்கள். ஒவ்வொரு காரியமும் செயலும் நினைவுச் சின்னமாக ஆகிவிட்டது. இந்த அளவு சக்தியை தெரிந்திருக்கிறீர்களா? இந்த அளவு அதிகாரத்தோடு அனைவருக்கும் சவால் விடுகிறீர்களா அல்லது சேவை செய்கிறீர்களா? புதியவர்கள் வந்திருக்கிறார்கள் இல்லையா. நாங்கள் வெகு சிலர் தான் என்று நினைக்காதீர்கள், ஆனால் சர்வ சக்திவான் உங்களுடைய துணைவனாக இருக்கிறார். நீங்கள் சத்தியத்தின் சக்தி உள்ளவர்கள். நீங்கள் ஐவர் மட்டும் இல்லை ஆனால் உலகை படைப்பவர் உங்களுடன் துணைவனாக இருக்கிறார். இதை தங்கு தடையின்றி தயக்கமில்லாமல் சொல்லுங்கள். ஏற்றுக்கொள்வார்களா அல்லது ஏற்றுக் கொள்ளமாட்டார்களா, சொல்லலாமா, எப்படிச் சொல்வது என்ற இந்த எண்ணமோ வருவதில்லையே. எங்கு சத்தியம் இருக்கிறதோ, அங்கு சத்தியமான தந்தை இருக்கிறார் எப்பொழுதும் வெற்றி தான். நிச்சயத்தின் ஆதாரத்தில் அனுபவி ஆகி சொன்னீர்கள் என்றால் வெற்றி எப்பொழுதும் உங்களுடன் இருக்கும்.

 

நீங்கள் அனைவரும் வந்திருக்கிறீர்கள் என்றால் பாப்தாதாவும் வந்திருக்கிறார், நீங்களும் வர வேண்டியதாக இருக்கிறது என்றால் பாப்தாதாவிற்கும் வர வேண்டியதாக இருக்கிறது. தந்தைக்கும் மற்றவரின் உடலில் அமர வேண்டியதாக இருக்கிறது இல்லையா. உங்களுக்கு இரயில் வண்டியில் அமர வேண்டியதாக இருக்கிறது என்றால் தந்தைக்கும் மற்றவரின் உடலில் அமர வேண்டியதாக இருக்கிறது. சிரமம் தெரிகிறதா என்ன? இப்பொழுதோ உங்களுடைய பேரன் பேத்திகளோ வரப்போகிறார்கள். பக்தர்களும் வருவார்கள் என்றால் என்ன செய்வீர்கள். பக்தர்களோ உங்களை அமரவே விட மாட்டார்கள். இப்பொழுதோ சௌகரியமாக அமர்ந்திருக்கிறீர்கள். பிறகு சௌகரியத்தை கொடுத்து விட வேண்டியதாக இருக்கும். இருந்தும் மூன்றடி நிலமோ கிடைத்திருக்கிறது இல்லையா. பக்தர்களோ நின்று கொண்டே தபஸ்யா செய்கிறார்கள். உங்களுடைய நினைவு சின்னமான சிலைகளை பார்ப்பதற்காக வரிசையில் நிற்கிறார்கள். அப்படி நீங்களும் அனுபவத்தையோ செய்யுங்கள். பருவத்தின் பழத்தை அருந்துவதற்காக வந்திருக்கிறீர்கள் இல்லையா. புதுப்புது குழந்தைகளுக்கு பாப்தாதா விசேஷமாக அன்பு கொடுக்கிறார். ஏனென்றால் இந்த இறுதியில் வந்திருப்பவர்கள் மிக வேகமாக முன்னேறுவார்கள் என்று தெரியும். எப்பொழுதும் முழு ஈடுபாடு மூலமாக விக்ன விநாஷக் ஆகி வெற்றி ரத்தினம் ஆவீர்கள். எப்படி உலகியல் ரூபத்தில் கூட பெரியவர்களை விட சிறியவர்கள் நன்றாக ஓடுவார்கள். அப்படி நீங்கள் அனைவரும் கூட பந்தயத்தில் நன்றாக ஓடி நம்பர் ஒன்னில் வந்து விடுங்கள். அந்த மாதிரி ஊக்கம் உற்சாகம் வைக்கும் குழந்தைகளுக்கு பாப்தாதா எப்பொழுதுமே சகயோகியாக இருக்கிறார். உங்களுடைய யோகம் மற்றும் தந்தையின் சகயோகம். இரண்டின் மூலமாக எவ்வளவு விரும்புகிறீர்களோ அந்த அளவு முன்னேறிச் செல்ல முடியும். இப்பொழுது வாய்ப்பு இருக்கிறது, பிறகு இந்த நேரமும் முடிவடைந்து விடும்.

 

அந்த மாதிரி எப்பொழுதும் சத்தியத்தின் மகான் நிலையில் இருக்கக்கூடிய, அனைத்து ஆத்மாக்களின் விதியை உருவாக்கக்கூடிய, சத்கதி வழங்கக்கூடிய, உலகை தன்னுடைய சத்தியத்தின் சக்தி மூலமாக சதோபிர தானமாக ஆக்கக்கூடிய, அந்த மாதிரி பாப்தாதாவின் எப்பொழுதும் அன்பிற்குரிய மற்றும் சகயோகி குழந்தை களுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.

 

பார்ட்டிகளுடன்:-

1) எப்பொழுதும் தன்னை சக்திசாலியான ஆத்மா என்று அனுபவம் செய்கிறீர்களா? சக்திசாலியான ஆத்மாவின் ஒவ்வொரு எண்ணமும் சக்திசாலியாக இருக்கும். ஒவ்வொரு எண்ணத்தில் சேவை நிரம்பியிருக்க வேண்டும். ஒவ்வொரு வார்த்தையிலும் தந்தையின் நினைவு நிரம்பியிருக்க வேண்டும். ஒவ்வொரு காரியத்தில் தந்தை மாதிரியான சரித்திரம் நிரம்பியிருக்க வேண்டும். அப்படி தன்னை அந்த மாதிரியான சக்திசாலியான ஆத்மா என்று அனுபவம் செய்கிறீர்களா? வாயிலும் (வார்த்தையிலும்) தந்தை, நினைவிலும் தந்தை மற்றும் காரியத்திலும் தந்தையின் சரித்திரம் - இப்படிப்பட்டவரைத்தான் தந்தைக்குச் சமமான சக்திசாலியானவர் என்று கூறுவது. நீங்கள் அந்த மாதிரி இருக்கிறீர்களா? 'பாபா' என்பது ஒரு வார்த்தை ஆனால் அந்த ஒரு வார்த்தையே மந்திர வார்த்தை ஆகும். எப்படி மந்திரத்தில் சொரூபம் மாறிவிடுகிறது அப்படி ஒரு தந்தை என்ற வார்த்தை சக்தி நிறைந்த சொரூபம் ஆக்கிவிடுகிறது. குணம் மாறிவிடுகிறது, காரியம் மாறி விடுகிறது, வார்த்தைகள் மாறிவிடுகிறது. இந்த ஒரு வார்த்தை தான் மந்திரத்தின் வார்த்தை ஆகும். அப்படி அனைவரும் மந்திரவாதிகள் ஆகிவிட்டீர்கள் இல்லையா. மந்திரம் போடத் தெரியும் இல்லையா. பாபா என்று கூறினீர்கள் மற்றும் பாபாவின் குழந்தையாக ஆக்கினீர்கள், இது தான் மந்திரம்.

 

2) வரதானி பூமியில் வந்து வரமளிக்கும் வள்ளல் மூலமாக வரதானத்தைப் பெறுவதற்கான பாக்கியத்தை உருவாக்கியிருக்கிறீர்களா? பாக்கியத்தை உருவாக்கும் தந்தை மூலமாக எப்படி விரும்புகிறீர்களோ அப்படி தன்னுடைய பாக்கியத்தின் ரேகையை போட முடியும் என்ற வர்ணனை என்னவாக இருக்கிறதோ அது இந்த நேரத்தின் வரதானம் ஆகும். அப்படி வரதானத்தின் நேரத்தை, வரதானத்தின் ஸ்தானத்தை காரியத்தில் கொண்டு வந்தீர்களா? என்ன வரதானம் பெற்றிருக்கிறீர்கள்? எப்படி தந்தை சம்பன்னமாக இருக்கிறார் அப்படி தந்தைக்குச் சமமாக ஆவதற்கான திட எண்ணத்தை வைத்தீர்களா 'குழந்தையாக இருப்பவர் நாளை எஜமானன்' என்று குழந்தைகளுக்காக மகிமை பாடுவார்கள். அப்படி குழந்தைகள் தந்தையின் எஜமானர்கள். எஜமானத் தன்மையின் போதையில் இருப்பதற்காக தந்தைக்குச் சமமாக தன்னை சம்பன்னமாக ஆக்க வேண்டியதாக இருக்கும். தந்தையின் விசேஷம் சர்வ சக்திவான் அதாவது அனைத்து சக்திகளின் விசேஷம் இருக்கிறது. அப்படி யார் குழந்தையாக இருப்பவரிலிருந்து எஜமானன் ஆகிறாரோ அவரிடமும் அனைத்து சக்திகளும் இருக்கும். ஒரு சக்தியின் குறை கூட இருக்காது. ஒருவேளை ஒரு சக்தியின் குறை இருந்தால் கூட சர்வ சக்திவான் என்று கூறப்பட மாட்டீர்கள், சக்திவான் என்று மட்டுமே அழைக்கப்படும். அப்படியானால் நீங்கள் யார்? சர்வ சக்திவான் என்றால் அவர் என்ன விரும்புகிறாரோ அதை செய்ய முடியும், ஒவ்வொரு கர்ம இந்திரியங்களும் தன்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கும். நினைத்தார் மற்றும் நடந்தது ஏனென்றால் மாஸ்டர் இல்லையா. அப்படி நீங்கள் அனைவரும் சுயராஜ்ய அதிகாரி தான் இல்லையா. முதலில் சுயராஜ்யம் பிறகு உலக இராஜ்யம்.

 

டெல்லி தலைநகரத்தில் இருப்பவர்கள் சுயராஜ்ய அதிகாரி தான் இல்லையா? இதற்கு வெகு காலத்தின் சம்ஸ்காரம் வேண்டும். ஒருவேளை இறுதியில் ஆனீர்கள் என்றால் உலக இராஜ்யமும் எப்பொழுது கிடைக்கும்? ஒருவேளை உலகத்தின் இராஜ்யத்தை தொடக்கத்தில் பெற வேண்டும் என்றால் தொடக்கத்திலிருந்து இந்த சம்ஸ்காரமும் வேண்டும். நீண்ட காலத்து இராஜ்யம், நீண்ட காலத்தின் சம்ஸ்காரம். மாஸ்டர் சர்வ சக்திவானின் முன் எதுவும் பெரிய விஷயம் இல்லை. டெல்லி நிவாசிகள் இப்பொழுது என்ன நினைத்து கொண்டிருக்கிறீர்கள்? மகா யக்ஞம் செய்தோம் முடிந்து விட்டது அப்படி யோசிக்கவில்லையே. முன்னேறும் கலையின் பக்கம் சென்று கொண்டிருக்கிறீர்கள் இல்லையா. என்ன செய்திருக்கிறீர்களோ அதை விட இன்னும் அதிகம். இன்னும் அதிகம் செய்து செய்து தன்னுடைய இராஜ்யம் வந்து விடும். இப்பொழுதோ மற்றவர்களின் இராஜ்யத்தில் தன்னுடைய காரியத்தை செய்ய வேண்டியதாக இருக்கிறது, பிறகு நம்முடைய இராஜ்யம் ஆகிவிடும். இயற்கையும் உங்களுக்கு வாய்ப்பு கொடுக்கும். இயற்கை வாய்ப்பு கொடுக்கும்போது ஆத்மாக்கள் என்ன செய்வார்கள். ஆத்மாக்களும் பின்பு தலை வணங்குவார்கள். அப்படியானால் இப்பொழுது என்ன செய்வீர்கள்? இருந்தும் என்ன செய்திருக்கிறீர்களோ அது நாடகத்தின் அனுசாரம் தைரியம், உல்லாசத்தோடு காரியத்தை வெற்றிகரமாக செய்திருக்கிறீர்கள் அதற்காக பாப்தாதா உங்களுடைய தைரியத்தின் மேல் குஷி அடைகிறார். என்னென்ன கடின உழைப்பு செய்திருக்கிறீர்களோ அதுவோ சேமிப்பாகிவிட்டது. தற்சமயமும் உருவாகியிருக்கிறது மேலும் எதிர்காலமும் உருவாகியிருக்கிறது.

 

சேவையின் விதை அழியாததாக இருக்கும் காரணத்தினால் கொஞ்சம் சப்தம் வெளியானது மேலும் வெளியாகிக்கொண்டே இருக்கும். விதை போடப்பட்டதினால் அனேக ஆத்மாக்களுக்கு குப்த ரூபத்தில் செய்தி கிடைத்தது. உங்கள் அனைவரின் களைப்போ அகன்று விட்டது தான் இல்லையா. இருந்தும் பாப்தாதாவின் அன்பு, சகயோகம் எப்பொழுதும் கிடைப்பதினால் முன்னேறிக் கொண்டே இருப்பீர்கள். உயர்ந்த காரியம் செய்வதற்கு மற்றும் பொறுப்பாளர் ஆவதற்காக டெல்லிக்கும் இந்த வரதானம் கிடைத்திருக்கிறது. இருந்தும் சேவையின் ஜென்ம பூமி இல்லையா. சேவையின் சரித்திரத்தில் பெயரோ வருகிறது தான் இல்லையா. மேலும் அனேகர்களுக்கு சேவை செய்வதற்காக சாதனம் கிடைத்து விடுகிறது. சேவையின் பூமியில் இருப்பவர்களோ வரதானி ஆகிவிட்டார்கள் இல்லையா. மிக நல்ல உழைப்பு செய்திருக்கிறீர்கள். நல்லது.

 

வரதானம்:–

தன்னுடைய தெய்வீக, ஆன்மீக ஜென்மத்தின் நினைவு மூலமாக மரியாதையின் கோட்டிற்கு உள்ளே இருக்கக்கூடிய மரியாதா புருஷோத்தமர் ஆகுக.

 

எப்படி ஒவ்வொரு குலத்தின் மரியாதையின் கோடு இருக்கிறது. அதே போல் பிராமண குலத்தின் மரியாதைகளின் கோடு இருக்கிறது. பிராமணன் என்றால் தெய்வீக மற்றும் ஆன்மீக ஜென்மம் எடுத்த மரியாதா புருஷோத்தமர். அவர்கள் எண்ணத்தில் கூட எந்த ஈர்ப்பின் வசமாகி மரியாதைகளை மீறி நடக்க முடியாது. யார் மரியாதையின் கோட்டை எண்ணத்தில் கூட தாண்டுகிறார்களோ அவர்கள் தந்தையின் ஆதரவை அனுபவம் செய்ய முடிவதில்லை. குழந்தைகளுக்குப் பதிலாக வேண்டும் என்று யாசிக்கும் பக்தன் ஆகிவிடுகிறார்கள். பிராமணன் என்றால் அழைப்பது, யாசிப்பது முடிவடைந்தது. ஒருபொழுதும் இயற்கை அல்லது மாயாவின் பற்றுதலின் கிரீடம் இல்லாதவர். அவர்கள் எப்பொழுதும் தந்தையின் தலையின் கிரீடமாக இருக்கிறார்கள்.

 

சுலோகன்:-

அமைதியின் தூதுவனாகி தன்னுடைய தபஸ்யா மூலமாக உலகில் அமைதியின் கிரணங்களை பரப்புங்கள்.

 

***ஓம் சாந்தி***

Whatsapp Button works on Mobile Device only