19 June 2016

BK Murli 20 June 2016 Tamil

BK Murli 20 June 2016 Tamil

20.06.2016    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


இனிமையான குழந்தைகளே! சிவபாபா உங்களுடைய மலர்களை ஏற்பதில்லை. ஏனென்றால் அவர் பூஜைக்குரியவராகவோ அல்லது பூஜாரியாகவோ மாறுவதில்லை. நீங்கள் கூட சங்கம யுகத்தில் மலர் மாலைகளை அணிந்துக் கொள்ள வேண்டியதில்லை.கேள்வி :

எதிர்கால இராஜ்ய சிம்மாசனத்தில் அமர்வோராக யார் மாறுகிறார்கள்?பதில் :

இப்போது தாய் தந்தையின் இதய சிம்மாசனத்தின் வெற்றி அடைபவர்களே எதிர்கால சிம்மாசனத்தில் அமரக்கூடியவர் ஆவார். குழந்தைகள் தாய் தந்தையின் மீது கூட வெற்றி அடைவது அதிசயமாக இருக்கிறது. முயற்சி செய்து தாய் தந்தையை விட முன்னேறிச் செல்கிறார்கள்.பாடல் :

ஆகாய சிம்மாசனத்தை விட்டு.....ஓம் சாந்தி.

இனிமையிலும் இனிமையான செல்லமான குழந்தைகள் பாடலைக் கேட்டீர்கள். இந்த பாடலினால் சர்வ வியாபி என்ற ஞானம் போய் விடுகிறது. நினைக்கிறார்கள், இப்போது பாரதம் மிகவும் துக்கத்தில் இருக்கிறது. நாடகத்தின் படி இந்த பாடல்கள் அனைத்தும் உருவாக்கப்பட்டிருக்கிறது. உலகத்தினர் அறியவில்லை. அழுக்கானவர்களைத் தூய்மையாக மாற்றுவதற்கு அல்லது துக்கத்தில் இருப்பவர்களை துக்கத்திலிருந்து விடுவித்து சுகம் கொடுப்பதற்கு பாபா வந்திருக்கிறார். அதே தந்தை வந்து விட்டார் என குழந்தைகள் அறிந்துக் கொண்டீர்கள். குழந்தைகளுக்கு அறிமுகம் கிடைத்திருக்கிறது. நான் சாதாரண உடலில் பிரவேசம் ஆகி முழு சிருஷ்டிக்கும் முதல், இடை, கடை ரகசியத்தைக் கூறுகிறேன் என பாபாவே தெரிவிக்கிறார். சிருஷ்டி ஒன்று தான், புதியதாகவும் மற்றும் பழையதாகவும் மாறுகிறது; குழந்தைப் பருவத்தில் உடல் புதியதாகவும் பிறகு பழையதாகவும் மாறுவது போன்று தான். அதே போன்று உலகம் ஒன்று தான், புதியதிலிருந்து இப்போது பழையதாகிறது. புதியதாக எப்போது இருந்தது. இதை யாரும் சொல்ல முடியாது. தந்தை வந்து புரிய வைக்கின்றார். குழந்தைகளே! புதிய உலகமாக இருந்த போது பாரதம் புதியதாக இருந்தது. சத்யுகம் என்று கூறப்பட்டது. அதே பாரதம் இப்போது பழையதாகி இருக்கிறது. இதற்கு மிகப்பழைய உலகம் என்று கூறப்படுகிறது. புதியதிலிருந்து பழையதாகி விட்டது. பிறகு அதை நிச்சயம் புதியதாக மாற்ற வேண்டும். புதிய உலகத்தை குழந்தைகள் சாட்சாத்காரம் செய்திருக்கின்றனர். சரி, அந்த புது உலகத்தின் அதிபதியாக யார் இருந்தனர். நிச்சயமாக இந்த லஷ்மி நாராயணன் தான் இருந்தனர். ஆதி சனாதன தேவி தேவதைகள் அந்த உலகத்தின் அதிபதியாக இருந்தனர். இந்த தந்தை குழந்தைகளுக்குப் புரிய வைத்துக் கொண்டிருக்கின்றார். இப்போது நிரந்தரமாக இதை நினையுங்கள் என பாபா கூறுகின்றார். அப்பா பரந்தாமத்திலிருந்து நம்மை படிக்க வைக்க வருகிறார். இராஜயோகத்தைக் கற்பிப்பதற்காக வருகின்றார். எல்லா புகழும் அவர் ஒருவருக்கே! இவருடைய புகழ் எதுவும் இல்லை. இச்சமயம் அனைவரும் கீழான புத்தி உடையவராக இருக்கின்றனர். எதையும் புரிந்துக் கொள்ளவில்லை. ஆகவே நான் வருகிறேன். எனவே தான் பாட்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. சர்வ வியாபி என்ற ஞானம் பறந்து போகிறது. ஒவ்வொருவருக்கும் தனக்கென்று நடிப்பு இருக்கிறது. அப்பா தேக உணர்வை விட்டு நீங்கள் ஆத்ம உணர்வடையுங்கள். மேலும் உடல் மூலமாகப் பாடத்தைக் கடைபிடியுங்கள் என அடிக்கடி கூறுகின்றார். போகும் போதும், வரும் போதும் இந்த பாபாவை பார்க்கிறீர்கள். ஆனால் சிவபாபாவை நினைவு செய்யுங்கள். அனைத்தையும் சிவபாபா தான் செய்கிறார் என நினையுங்கள். பிரம்மா கிடையாது. இவருடைய ரூபம் இந்த கண்களில் தெரிகிறது. உங்களுடைய புத்தி சிவபாபாவின் பக்கம் இருக்க வேண்டும். சிவபாபா இல்லை என்றால், இவருடைய ஆத்மா இவருடைய உடலுக்கு எந்த வேலையும் இல்லை. இவருக்குள் சிவபாபா இருக்கின்றார் என்று எப்போதும் புரிந்துக் கொள்ளுங்கள். அவர் இவர் மூலமாகப் படிக்க வைக்கிறார். இவர் உங்களுடைய டீச்சர் கிடையாது. சுப்ரீம் டீச்சர் அவர் ஆவார். அவரைத்தான் நினைக்க வேண்டும். ஒரு போதும் உடலை நினைக்கக் கூடாது. புத்தியோகம் பாபாவுடன் இருக்க வேண்டும். மீண்டும் வந்து ஞான யோகத்தைப் கற்பியுங்கள் என குழந்தைகள் நினைக்கிறார்கள். பரம்பிதா பரமாத்மாவைத் தவிர வேறு யாரும் இராஜயோகம் கற்றுத்தர முடியாது. அவரே அமர்ந்து கீதா ஞானத்தைக் கூறுகின்றார். பிறகு இந்த ஞானம் மறைந்து போகும் என்பது குழந்தைகளின் புத்தியில் இருக்கிறது. அங்கே அவசியம் இல்லை. இராஜ்யம் உருவாகிக் கொண்டிருக்கிறது. சத்கதி கிடைத்து விடுகிறது. கெட்ட நிலையிலிருந்து நல்ல நிலையை அடைவதற்காக ஞானம் கொடுக்கப்படுகிறது. மற்றபடி அவை அனைத்தும் பக்தி மார்க்கத்தின் விஷயங்கள் ஆகும். மனிதர்கள் ஜபம், தவம், தானம், புண்ணியம் போன்றவைகளைச் செய்கிறார்கள். அது அனைத்தும் பக்தி மார்க்கத்தின் விஷயங்கள் ஆகும். இதனால் யாரும் என்னை அடைய முடியாது. ஆத்மாவின் சிறகுகள் துண்டிக்கப் பட்டிருக்கிறது. கல் புத்தி ஆகி விட்டனர். கல்லிருந்து மீண்டும் தங்கமாக மாற நான் வர வேண்டியிருக்கிறது. இப்போது எத்தனை மனிதர்கள் இருக்கிறார்கள், கடுகுகளைப் போன்று உலகம் நிறைந்திருக்கிறது. இப்போது அனைத்தும் அழியப்போகிறது என பாபா கூறுகின்றார். சத்யுகத்தில் இவ்வளவு மனிதர்கள் இருக்க மாட்டார்கள். புது உலகில் வைபவங்கள் நிறைய இருக்கிறது. மனிதர்கள் குறைவாக இருப்பார்கள். இங்கே இவ்வளவு மனிதர்கள் இருக்கிறார்கள். சாப்பிடுவதற்குக் கூட கிடைப்பதில்லை. பழைய தரிசு நிலமாக இருக்கிறது. பிறகு புதியதாக மாறும். அங்கே அனைத்தும் புதியதாக இருக்கும். சொர்க்கம், ஹெவன், தேவதைகளின் புதிய உலகம் என பெயர். எவ்வளவு இனிமையாக இருக்கிறது. பழையதை இடித்து விட்டு புதியதில் அமர மனம் விரும்புகிறது அல்லவா? இப்போது புதிய உலகம் சொர்க்கத்திற்கு செல்வதற்கான விஷயம் ஆகும். இதில் பழைய உடலுக்கு எந்த மதிப்பும் இல்லை. சிவபாபாவிற்கு எந்த உடலும் இல்லை.பாபாவிற்கு மாலை போடலாம் என குழந்தைகள் கூறுகிறார்கள். ஆனால் இவருக்கு மாலை அணிவித்தால் உங்களுடைய புத்தியின் தொடர்பு இவர் மீது போகும் மாலையின் அவசியம் இல்லை என சிவபாபா கூறுகிறார். நீங்கள் தான் பூஜைக்குரியவராக மாறுகிறீர்கள். பூஜாரியாகவும் நீங்கள் தான் மாறுகிறீர்கள். தாங்களே பூஜைக்குரியவர், தாங்களே பூஜாரி! எனவே தங்களின் சித்திரத்தையே (சிலை) பூஜை செய்ய ஆரம்பித்து விடுகின்றனர். நான் பூஜைக்குரியவராக மாறுவதில்லை. மலர்களின் அவசியமும் இல்லை என பாபா கூறுகின்றார். நான் எதற்காக இதை அணிந்துக் கொள்ள வேண்டும். ஆகவே ஒரு போதும் மாலை போன்றவைகளை எடுத்துக் கொள்வதில்லை. நீங்கள் பூஜைக்கு உரியவராக மாறுகிறீர்கள். பிறகு எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு மலர்களை அணிந்துக் கொள்ளுங்கள். நான் குழந்தைகளாகிய உங்களுக்கு மிகவும் அன்பான கீழ்படிந்த தந்தையாக, ஆசிரியராக, வேலைக்காரனாக இருக்கிறேன். பெரிய பெரிய ராயலான மனிதர்கள் எழுதும் போது கீழே கையெழுத்திடும் போது மின்டோ, கர்சென் என...... கையெழுத்திடுகிறார்கள். தன்னை ஒரு போதும் லார்ட் என எழுதவில்லை. இங்கேயோ ஸ்ரீலஷ்மி நாராயணன், ஸ்ரீ இன்னார், ஒரேயடியாக ஸ்ரீ என்ற வார்த்தை போட்டு விடுகிறார்கள். இப்போது இந்த உடலை நினைக்காதீர்கள் என பாபா புரிய வைக்கிறார். தன்னை ஆத்மா என்று உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள். தந்தையை நினையுங்கள். இந்த பழைய உலகத்தில் ஆத்மா மற்றும் உடல் இரண்டும் அழுக்காக இருக்கிறது. தங்கம் 9 காரட் என்றால், நகையும் 9 காரட் தான். தங்கத்தில் தான் கலப்படம் சேறுகிறது. ஆத்மாவில் எதுவும் ஒட்டாது, ஒரு போதும் நினைக்கக் கூடாது. இந்த ஞானம் இப்போது உங்களுக்கு இருக்கிறது. நீங்கள் அரை கல்பத்திற்கு 21 பிறவிகளுக்கு சொத்தை அடைகிறீர்கள் என்றால், எவ்வளவு முயற்சி செய்ய வேண்டும். ஆனால் குழந்தைகளோ அடிக்கடி மறந்து போகிறீர்கள். சிவபாபா பிரம்மா மூலமாக நமக்கு கல்வியைக் கற்றுக் கொடுக்கின்றார். பிரம்மாவின் ஆத்மா கூட அவரை நினைக்கிறது. பிரம்மா, விஷ்ணு, சங்கரர் சூட்சும வதனவாசி ஆவார். அப்பா முதலில் சூட்சும சிருஷ்டியைப் படைக்கிறார். நிர்வாணதாமம் உயர்ந்ததிலும் உயர்ந்த தாமம் ஆகும். ஆத்மாக்களின் நிர்வாணதாமம் அனைத்தையும் விட உயர்ந்தது. ஒரு பகவானை அனைத்து பக்தர்களும் நினைக்கிறார்கள். ஆனால் அழுக்காக மாறி விட்டதால் அப்பாவை மறந்து கல், முள் அனைத்தையும் பூஜை செய்துக் கொண்டிருக்கிறார்கள். என்னென்ன நடக்கிறதோ நாடகத்தில் பதிவாகிக் கொண்டிருக்கிறது என்பது மட்டும் நமக்குத் தெரியும். நாடகத்தில் ஒரு முறை என்ன பதிவாகி விடுகிறதோ அதாவது ஒரு பறவை பறப்பது போன்று இடையில் பதிவாகி விட்டால் அந்த நொடி வரும் போது அதே திரும்ப நடக்கும். பட்டம் பறப்பது போன்று பதிவாகி விட்டால் அது மீண்டும் திரும்ப நடக்கும். இதுவும் நாடகத்தில் ஒவ்வொரு நொடியும் திரும்ப நடக்கிறது. பதிவாகிக் கொண்டே இருக்கிறது. இது ஏற்கனவே உருவாக்கப்பட்ட நாடகம் ஆகும். நடிகர்களாகிய நீங்கள் முழு நாடகத்தையும் சாட்சியாக இருந்து பார்க்கிறீர்கள். ஒவ்வொரு நொடியும் நாடகத்தின் படி கடந்து போகிறது. இலை அசைகிற காட்சியும் நாடகத்தில் நடந்தது. ஆனால் ஒவ்வொரு இலையும் பகவானின் கட்டளையால் அசைகிறது என்பது கிடையாது. இல்லை. இது அனைத்தும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. இதை நன்கு புரிந்துக் கொள்ள வேண்டும். தந்தை தான் வந்து இராஜயோகத்தைக் கற்பிக்கின்றார். மேலும் நாடகத்தின் ஞானத்தைக் கொடுக்கிறார். படங்கள் கூட எவ்வளவு நன்றாக உருவாக்கப்பட்டிருக்கிறது. சங்கமயுகத்தில் கடிகார முள் கூட பொருத்தப்பட்டிருக்கிறது. கலியகத்தின் முடிவு சத்யுகத்தின் ஆரம்பம் சங்கமம் ஆகும். இப்போது பழைய உலகத்தில் பல தர்மங்கள் (மதம்) இருக்கின்றன. புதிய உலகத்தில் பிறகு இவை இருக்காது. நம்மை பாபா படிக்க வைக்கின்றார், நாம் இறை மாணவர்கள் என குழந்தைகளாகிய நீங்கள் எப்போதும் புரிந்துக் கொள்ளுங்கள். பகவான் வாக்கு: நான் உங்களை ராஜாக்களுக்கு ராஜாவாக மாற்றுகிறேன். ராஜாக்கள் கூட லஷ்மி நாராயணனை பூஜை செய்கிறார்கள். எனவே அவர்களை பூஜைக்குரியவர்களாக மாற்றுவது நானே! யார் பூஜைக்குரியவராக இருந்தார்களோ அவர்களே இப்போது பூஜாரி ஆகிறார்கள். நாம் பூஜைக்குரியவர்களாக இருந்தோம். பிறகு நாமே பூஜாரி ஆகியிருக்கிறோம் என குழந்தைகள் புரிந்துக் கொள்கிறீர்கள். பாபா மாறுவதில்லை. நான் பூஜாரியும் ஆவதில்லை. பூஜைக்குரிய வராகவும் ஆவதிலை என பாபா கூறுகின்றார். ஆகையால் நான் மாலையை அணிந்துக் கொள்வதில்லை. அணிவிக்க வேண்டியதும் இல்லை. பிறகு நாம் ஏன் மலர்களை ஏற்றுக் கொள்ள வேண்டும். நீங்களும் ஏற்றுக் கொள்ள முடியாது. சட்டப்படி தேவதைகளுக்குத்தான் உரிமை இருக்கிறது. அவர்களுடைய ஆத்மா மற்றும் உடல் தூய்மையாக இருக்கிறது. அவர்களே மலர்களை அணிவதற்கு உரிமையாளர்கள். அங்கே சொர்க்கத்திலோ மணம் உள்ள மலர்கள் இருக்கின்றன. நறுமணத்திற்காக மலர்கள் இருக்கின்றது. அணிந்துக் கொள்வதற்காகவும் இருக்கின்றது. இப்போது குழந்தைகளாகிய நீங்கள் விஷ்ணுவின் கழுத்து மாலை ஆகிறீர்கள் என பாபா கூறுகின்றார். வரிசைக்கிரமத்தில் நீங்கள் சிம்மாசனத்தில் அமர வேண்டும். யார் எவ்வளவு, போன கல்பத்தில் முயற்சி செய்தனரோ இப்போது செய்கிறார்கள். செய்ய வேண்டியிருக்கும். வரிசைக் கிரமம் இருக்கிறது. இந்த குழந்தை மிகவும் சேவை செய்ய கூடியவர் என புத்தி கூறுகிறது. எப்படி கடையில் சேட்டாக இருக்கிறார்கள், பங்குதாரராக இருக்கிறார்கள், மேனேஜராகவும் இருக்கிறார்கள். கீழே இருப்பவர்களுக்குக் கூட லிப்ட் (உயர் பதவி அடைய) கிடைக்கிறது. இங்கே கூட அப்படியே! குழந்தைகளாகிய நீங்கள் கூட தாய் தந்தையின் மீது வெற்றி அடைய வேண்டும். தாய் தந்தையை விட முன்னேறி எப்படி போக முடியும்? என நீங்கள் அதிசயப்படுவீர்கள். பாபா குழந்தைகளை கடின உழைப்பு செய்வித்து தகுதி படுத்துகிறார். சிம்மாசனத்தில் அமரக் கூடியவர்களாக மாறுவதற்காக இப்போது என்னுடைய இதய சிம்மாசனத்தை வெற்றி அடைபவர்களே எதிர்காலத்தில் சிம்மாசனத்தில் அமரக் கூடியவர்களாக மாறுவார்கள் என கூறுகிறார். நரனிலிருந்து நாராயணன் ஆகும் அளவிற்கு முயற்சி செய்யுங்கள். குறிக்கோள் முக்கியமானது ஒன்றே ஆகும். பிறகு இராஜ்யம் உருவாகிக் கொண்டிருக்கிறது. அதில் விதவிதமான பதவி இருக்கிறது.நீங்கள் மாயாவை வெற்றி அடைவதற்கு முழுமையாக முயற்சி செய்ய வேண்டும். குழந்தைகளை கூட அன்போடு நடத்துங்கள். ஆனால் டிரஸ்டியாக இருங்கள். பிரபு இது அனைத்தும் தாங்கள் கொடுத்தது. தாங்கள் கொடுத்த பொருளை தாங்களே எடுத்துக் கொண்டீர்கள் என பக்தி மார்க்கத்தில் கூறுகிறார்கள் அல்லவா? சரி, பிறகு அழக்கூடிய விஷயமே இல்லை. ஆனால் இதுவோ அழுகையின் உலகம் ஆகும். மனிதர்கள் நிறைய கதைகளைக் கூறுகிறார்கள். மோகஜீத் ராஜாவின் கதையைக் கூட கூறுகிறார்கள். பிறகு யாருக்கும் துக்கம் ஏற்படுவதில்லை. ஒரு உடலை விட்டு சென்று இன்னொன்றை எடுத்தனர். அங்கே ஒரு போதும் யாரும் நோய் வாய்ப்படுவதில்லை. மிகவும் ஆரோக்கியமான நோயற்ற உடல் 21 பிறவிகளுக்கு கிடைக்கிறது. குழந்தைகளுக்கு அனைத்து காட்சிகளும் கிடைக்கிறது. அவ்விடத்தின் பழக்க வழக்கங்கள், எப்படி நடக்கிறது? எப்படி இருக்கிறது, எந்த ஆடைகளை அணிகிறார்கள், சுயம்வரம் போன்றவை எப்படி நடக்கிறது? என்பதை குழந்தைகள் காட்சிகளாகப் பார்த்திருக்கிறார்கள். அந்த நடிப்பு அனைத்தும் முடிந்து விட்டது. அச்சமயம் இவ்வளவு ஞானம் இல்லை. இப்போது ஒவ்வொரு நாளும் குழந்தைகளாகிய உங்களுக்குள் சக்தி அதிகரித்துக் கொண்டே போகிறது. இதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. அதிசயமாக உள்ளது அல்லவா? பரமபிதா பரமாத்மாவிற்கு கூட எவ்வளவு நடிப்பு இருக்கிறது. பக்தி மார்க்கத்தில் கூட மேலே உட்கார்ந்து நான் எவ்வளவு வேலை செய்கிறேன் என அவரே வந்து புரிய வைக்கிறார். கீழே கல்பத்தில் ஒரு முறை தான் வருகிறேன். நிறைய பேர் நிராகாரரின் பூஜாரிகளாக இருக்கிறார்கள். ஆனால் நிராகாரர் பரமாத்மா எப்படி வந்து படிக்க வைக்கின்றார். இந்த விஷயங்களை மறைத்து விட்டார்கள். கீதையில் கூட கிருஷ்ணரின் பெயரை போட்டு விட்டார்கள். எனவே நிராகாரரின் மீது அன்பு துண்டிக்கப்பட்டு விட்டது. இதை பரமாத்மா வந்து சகஜயோகத்தைக் கற்பித்தார். மேலும் உலகத்தை மாற்றினார். உலகம் மாறிக் கொண்டிருக்கிறது. யுகங்கள் சுற்றிக் கொண்டே இருக்கிறது. இந்த நாடகத்தின் சக்கரத்தை இப்போது நீங்கள் புரிந்துக் கொண்டீர்கள். மனிதர்கள் எதையும் புரிந்துக் கொள்ளவில்லை. சத்யுகத்தின் தேவி தேவதைகளைக் கூட அறியவில்லை. தேவதைகளின் அடையாளம் மட்டும் இருக்கின்றது. நாம் சிவபாபாவினுடயவர் என எப்போதும் புரிந்துக் கொள்ளுங்கள் என பாபா புரிய வைக்கிறார். சிவபாபா நம்மை படிக்க வைக்கின்றார். சிவபாபா இந்த பிரம்மா மூலமாக எப்போதும் பாடங்களை அளிக்கிறார். சிவபாபாவின் நினைவில் மிகவும் ஆனந்தம் வந்துக் கொண்டே இருக்கும். இப்படிப்பட்ட இறை தந்தை யார்? அவர் ஆசிரியராகவும், டீச்சராகவும், சத்குருவாகவும் இருக்கிறார். சில தந்தையர் குழந்தைகளைப் படிக்கவும் வைக்கிறார்கள். நிச்சயமாக அவர்கள் எங்களுடைய இந்த தந்தை ஆசிரியராகவும் இருக்கிறார் என கூறுவார்கள். ஆனால் அந்த தந்தையே குருவாக இருக்க முடியாது. ஆம் டீச்சராக முடியும். தந்தையை ஒரு போதும் குரு என கூற முடியாது. இவருடைய(பாபாவினுடைய) தந்தை டீச்சராக இருந்தார். படிக்கவும் வைத்தார். அவர் எல்லைக்குட்பட்ட தந்தை ஆசிரியர் ஆவார். இவர் எல்லைக்கப்பாற்பட்ட தந்தை ஆசிரியர் ஆவார். நீங்கள் தங்களை இறை மாணவர் என உணர்ந்தால் ஆஹா! சௌபாக்கியம். இறை தந்தை படிக்க வைக்கிறார். எவ்வளவு தெளிவாக இருக்கிறது. எவ்வளவு இனிமையான பாபா. இனிமையான விஷயம் நினைவு செய்யப்படுகிறது. எப்படி மணவாளன் மணப்பெண்ணுக்கு அன்பு ஏற்படுகிறது. அவர்களிடம் விகாரத்திற்கான அன்பு கிடையாது. ஒருவர் ஒருவரை பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள். உங்களுடையது ஆத்மா பரமாத்மா வுடனான தொடர்பாகும். பாபா எவ்வளவு ஞானத்தின் கடல், அன்பின் கடல் என ஆத்மா கூறுகிறது. இந்த அழுக்கான உலகம் அழுக்கான உடலில் வந்து நம்மை எவ்வளவு உயர்ந்தவராக மாற்றுகிறார். மனிதனிலிருந்து தேவதையாவதற்கு எந்த சண்டையும் செய்வதில்லை என பாடப்பட்டிருக்கிறது. நொடியில் வைகுண்டத்திற்கு போகிறார்கள். நொடியில் மனிதனிலிருந்து தேவதை ஆகிறார்கள். இதுவே குறிக்கோள் ஆகும். இதற்காக படிப்பை படிக்க வேண்டும். குருநானக் கூட அழுக்கான அசுத்தமான துணிகளை துவைக்க..... என கூறியிருக்கிறார். இலட்சியம் என்ற சோப்பு இருக்கிறது அல்லவா? நான் எவ்வளவு நல்ல வண்ணாராக இருக்கிறேன் என பாபா கூறுகிறார். உங்களுடைய உடை, உங்களுடைய ஆத்மா மற்றும் உடலை எவ்வளவு தூய்மையாக மாற்றுகிறேன். எனவே இவரை (தாதாவை) ஒரு போதும் நினைக்கக் கூடாது. இந்த காரியம் முழுவதும் சிவபாபாவினுடையதாகும். அவரையே நினையுங்கள் இவரை விட இனிமையானவர் அவர் ஆவார். உங்களுக்கு இந்த கண்கள் மூலமாக பார்ப்பதற்கு இந்த பிரம்மாவின் ரதம் தெரிகிறது. ஆனால் நீங்கள் சிவபாபாவை நினையுங்கள் என ஆத்மாவிற்குப் கூறுகிறார். சிவபாபா இவர் மூலமாக உங்களை கூழாங்கல்லிலிருந்து வைரம் போன்று மாற்றிக் கொண்டிருக்கிறார். நல்லது.இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.தாரணைக்கான முக்கிய சாரம் :

1. பாபாவின் இதயம் என்ற சிம்மாசனத்தை வெற்றி அடைய முயற்சி செய்யுங்கள். குடும்பத்தில் டிரஸ்டியாக இருந்து அன்போடு அனைவரையும் நடத்த வேண்டும். மோகத்தை வென்றவர் ஆக வேண்டும்.2. யோகபலத்தால் ஆத்மாவை சுத்தமாக்க வேண்டும். இந்த கண்களினால் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தாலும் ஒரு தந்தையை நினைக்க வேண்டும். இங்கே மலர் மாலையை ஏற்றுக் கொள்ளாமல் மணமுள்ள மலராக வேண்டும்.வரதானம் :

சங்கமயுகத்தில் அதீந்திரிய சுகத்தின் அனுபவம் செய்யக் கூடிய டபுள் பிராப்தியின் அதிகாரி ஆகுக.எந்த குழந்தைகள் சங்கமயுகத்தில் அதீந்திரிய சுகத்தின் அனுபவம் செய்கிறார்களோ அவர்களுக்கே சதா அமைதி மற்றும் மகிழ்ச்சியின் டபுள் பிராப்தியின் பெருமிதம் இருக்கிறது. ஏனென்றால் அதீந்திரிய சுகத்தில் இந்த இரண்டு பிராப்திகளும் கலந்திருக்கிறது. இப்போது குழந்தைகளாகிய உங்களுக்கு கிடைக்கக் கூடிய அப்பா மற்றும் ஆஸ்தியின் பிராப்தி முழு கல்பத்தில் கிடைக்காது. இச்சமயத்தின் பிராப்தியாகிய அதீந்திரிய சுகம் மற்றும் ஞானம் கூட பிறகு ஒரு போதும் கிடைப்பதில்லை. எனவே இந்த டபுள் பிராப்திக்கு அதிகாரி, (உரிமை) ஆகுங்கள்.சுலோகன்:

ஒருவருக்கொருவருடைய சம்ஸ்காரங்களை தெரிந்துக் கொண்டு அவர்களுடன் இணைந்து செல்வதே முன்னேற்றத்திற்கான சாதனம் ஆகும்.***OM SHANTI***

Whatsapp Button works on Mobile Device only