05 June 2016

BK Murli 6 June 2016 Tamil

BK Murli 6 June 2016 Tamil

06.06.2016    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


இனிமையான குழந்தைகளே! குழந்தைகளாகிய உங்களுக்கு சேவை செய்வதற்காக தந்தை வந்திருக்கிறார், நீங்களும் தந்தைக்குச் சமமாகி அனைவருக்கும் சேவை செய்யுங்கள்.கேள்வி :

பிரம்மா பாபாவிற்கு எந்த எண்ணம் உருவாகிறது, அதற்கு சிவபாபா பொறுத்திருந்து பார் மற்றும் கவலை படாதே என்று கூறுகிறார்?பதில்:

நேரம் மிகவும் நெருங்கிக் கொண்டே போகிறது, குழந்தைகள் அழிவற்ற ஞான ரத்தினங்களை எடுக்க தந்தையிடம் வந்து தான் ஆக வேண்டும். அந்தளவு குழந்தைகள் இங்கே வந்து தங்குவார்கள். எத்தனை கட்டிடங்களை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் பாபாவிற்கு வந்துக் கொண்டே இருக்கிறது, பொறுத்திருந்து பார் போன கல்பத்தில் எப்படி வந்து தங்கினார்களோ அப்படியே தங்குவார்கள். நீ கவலைப் படாதே, நீ படித்துக் கொண்டே இரு, மன்மனாபவ, கர்மாதீத் நிலையை அடைய முயற்சி செய்ய வேண்டும் என்று சிவபாபா கூறுகின்றார்.பாடல் :

உங்களை அடைந்து நாங்கள்.....ஓம் சாந்தி.

குழந்தைகளே ! ஓம் சாந்தி, என்று பாபாவும் கூறுகிறார். வேறு என்ன கூறுவார்? குழந்தைகளே! ஓம் சாந்தி அவ்வாறே ஆகுக ! என குழந்தைகளுக்குக் கூறுகின்றார். குழந்தைகளே நீங்களும் சாந்த சொரூப மானவர்கள். நீங்களும் மாஸ்டர் பதீத பாவனர். இது போன்று வேறு யாரும் கூறமுடியாது. எப்படி தாயோ அப்படியே குழந்தைகள் ! என கூறப்படுகிறது. எப்படி தந்தையோ அப்படியே நாம் ! என குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துக் கொள்கிறீர்கள். நான் ஞானக்கடல் என பாபா கூறுகிறார். நான் மாஸ்டர் ஞானக் கடல் என்றால் நதிகளாகிய நீங்களும் அவ்வாறே என புரிந்துக் கொள்கிறீர்கள். கடலின் குழந்தைக் குட்டிகள் கூட இருப்பார்கள் அல்லவா ? பெரிய பெரிய நதிகள் கூட இருக்கின்றன. பெரிய பெரிய குளங்கள், பெரிய பெரிய ஏரிகள் கூட இருக்கின்றன. அவை ஜடமாக இருக்கின்றன. நீங்களோ சைத்தன்யமாக இருக்கிறீர்கள். கடலில் இருந்து தான் தோன்றி இருக்கிறீர்கள். நிறைய குழந்தைகள் இந்த விஷயங்களைப் புரிந்துக் கொள்வதில்லை. ஏனென்றால், பெண் குழந்தைகள் படிக்க எழுத தெரிந்திருக்கவில்லை. ஒரு முறை பாபா சர்க்கரை எப்படி தயாராகிறது? வெல்லம் எப்படி தயாராகிறது என கேட்டார். சிகப்பு கரும்பிலிருந்து வெல்லம் உருவாகிறது, வெள்ளை கரும்பிலிருந்து சர்க்கரை உருவாகிறது என சொன்னார்கள். பாவம், படிக்கவில்லை. இப்போது உங்களுக்கு எவ்வளவு பெரிய விஷயங்களைப் புரிய வைக்கின்றார். கடலிலிருந்து தான் தண்ணீர் ஓடும் நதிகள் தோன்று கின்றன. மனிதர்கள் நிறைய பெருகிக் கொண்டே போகிறார்கள் என்றால், தண்ணீர் கூட நிறைய வேண்டும் அல்லவா? எத்தனை கால்வாய்களை உருவாக்கிக் கொண்டே போகிறார்கள். குழந்தை களாகிய உங்களுக்கு உட்கார்ந்தாலும், எழுந்தாலும், நடந்தாலும், சுற்றினாலும் நாம் இந்த பதீத உலகத்தை தூய்மையாக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்க வேண்டும். பாட்டில் கூட பாபா நாங்கள் உலகத்தின் இராஜ்ய பதவியை ஆஸ்தியாக அடைகிறோம், இதை எங்களிடமிருந்து யாரும் பறிக்க முடியாது, 21 பிறவிகள் இந்த இராஜ்யம் நிலையாக இருக்கும் என கூறுகிறார்கள். எல்லையற்ற தந்தை வந்து எல்லையற்ற இராஜ்ய பாக்கியத்தை அளிக்கிறார். இராஜ்ய பாக்கியத்தை அடையும் தகுதியை அடைய வைக்கிறார். தூய்மையாகவும் மாற்றுகிறார். பதீத பாவனா வாருங்கள் ! எனவும் அழைக்கிறார்கள். கிருஷ்ணரை அழைக்கவில்லை. நிராகாரர் பகவானை அழைக்கிறார்கள். ஓ, பதீத பாவனா ! என்று கூறும் போது புத்தியில் கிருஷ்ணரின் நினைவு வருவதில்லை. பரமாத்மாவின் நினைவு தான் வருகிறது. பாபா வந்து ஒவ்வொரு விஷயத்தையும் புரிய வைக்கிறார். இப்போது குழந்தைகளாகிய நீங்கள் எதிரில் இருக்கிறீர்கள். இவர் யாரோ சாது சன்னியாசி கிடையாது. நிராகாரர் சிவபாபா இந்த பிரம்மாவின் உடலில் பிரவேசமாகி நம்மை படிக்க வைக்கிறார் என அறிகிறீர்கள். பரம்பிதா பரமாத்மா பிரம்மா உடல் மூலமாக ஆதி சனாதான தேவி தேவதா தர்மத்தை ஸ்தாபனை செய்கிறார் என பாடப்பட்டிருக்கிறது. ஸ்தாபனைக்குப் பிறகு தான் அழிவு நடக்கிறது. பழைய உலகத்தில் வருகிறார் என்பது இதிலிருந்து தெளிவாகிறது. பிரம்மா மூலமாக புது உலகத்தின் ஸ்தாபனை சங்கரன் மூலமாக பல தர்மங்களின் (மதங்கள்) அழிவை செய்விக்கிறார். சத்யுகத்தில் ஒரு தர்மம் இருந்தது. இப்போது பல தர்மங்கள் இருக்கின்றன. ஒரே தர்மத்தைச் சார்ந்த தேவி தேவதைகளின் அடையாளம் சக்கரம் போன்றவை இருக்கிறது. இந்த லஷ்மி நாராயணனுக்கு உலகத்திற்கே அதிபதி என்று பெயர். சொர்க்கத்திற்கே அதிபதி என்றால், உலகத்திற்கே அதிபதியாகி விட்டார். இந்த விஷயங்கள் குழந்தைகளாகிய உங்களின் புத்தியில் இப்போது இருக்கிறது. குழந்தைகளே ! மன்மனாபவ என்று பாபா கூறுகின்றார். குழந்தைகளாகிய உங்களுக்கு அடிக்கடி எச்சரிக்கை கிடைக்கிறது. அப்பாவையும் ஆஸ்தியையும் நினையுங்கள் ! மற்ற கருத்துக்களை மறந்தாலும் இதை மறக்காதீர்கள். இது முக்கியமானதல்லவா?. தந்தை தான் பதீத பாவனர். தூய்மையாவதற்கான யுக்தியைக் கற்றுத் தருகிறார். நீங்கள் சதோபிரதானமாக இருந்தீர்கள் என பாபா கூறுகின்றார். இப்போதோ தமோபிரதானமாக பதீதமாகி விட்டீர்கள். 84 பிறவிகளை எடுத்திருக்கிறீர்கள். இப்போது நீங்கள் மீண்டும் தூய்மையாக வேண்டும். தூய்மையாகினால் தான் நீங்கள் தூய்மையான உலகத்திற்குப் போக முடியும். நிராகார உலகம் கூட தூய்மையாக இருக்கிறது. சாகார உலகம் கூட தூய்மையாக இருக்கிறது. அபவித்திரமான பதீத உலகமாக இது இருக்கிறது. ஆத்மாவும் தமோபிர தானமாக இருக்கிறது. சரீரமும் தமோபிரதானமாக இருக்கிறது. இது சிருஷ்டியின் நாடகம் ஆகும். இதில் பிரம்மாண்டம் மற்றும் சூட்சும வதனம் கூட வந்து விடுகிறது. சிருஷ்டி சக்கரம் இங்கே சுழன்று கொண்டிருக்கிறது. சத்யுகம், திரேதா இங்கே இருக்கிறது. சூட்சும வதனம் அல்லது மூல வதனத்தில் இது இருக்காது. இது இங்கே தான் இருக்கிறது. இதற்கு மனித சிருஷ்டி என கூறப்படுகிறது. அதற்கு ஆத்மாக்களின் நிராகார உலகம் என்று பெயர். அது பிரம்மா விஷ்ணு சங்கரரின் ஆகார உலகம் ஆகும். இந்த சாகார சிருஷ்டி எவ்வளவு பெரியதாக இருக்கிறது. சத்யுகத்தில் எவ்வளவு சிறிய சிருஷ்டி இருக்கும். அங்கே ஒரு தர்மம் தான் இருக்கிறது. மற்றபடி அங்கே கூட அசுரர்கள் இருந்தார்கள் என மனிதர்கள் கூறுகிறார்கள். அது அனைத்தும் பொய்யாகும்.புது உலக ஸ்தாபனை, பழைய உலகத்தின் அழிவு என பாடப்பட்டிருக்கிறது என நீங்கள் புரிந்துக் கொள்கிறீர்கள். அனைத்தும் அழிந்து போகும். சத்யுக சொர்க்கம் உருவாகும். நீங்களும் பாபாவுடன் சேவை செய்துக் கொண்டிருக்கிறீர்கள். குழந்தைகளுக்கு சேவை செய்வதற்காக பாபாவும் வருகின்றார். இவர் எல்லையற்ற தந்தையாவார். நம்முடைய குழந்தைகள் மிகவும் துக்கமாக இருக்கிறார்கள் என பார்க்கின்றார். நிச்சயம் இரக்கம் வரும் அல்லவா. அவர் இரக்க மனமுடைய தந்தை இப்போது முழு உலகிலும் அசாந்தி நிலவுகிறது. ஒரு பாபாவைத் தவிர வேறு யாரும் அமைதியை அளிக்க முடியாது. ஹடயோகிகள் பலர் இருக்கிறார்கள். ஆத்மாவைப் பொறுத்தவரை அதில் எதுவும் ஒட்டாது என சொல்லி விட்டார்கள். மனிதர்களுக்குத் தவறான விஷயங்களை சொல்லி விடுகிறார்கள். உண்மையில் ஆத்மாவில் தூய்மை வேண்டும். ஆத்மாவில் தான் துரு படிந்திருக்கிறது. வேறு யாருக்கும் தெரியவில்லை. இது பாவாத்மா, நிறைய பாவங்களைச் செய்கிறது, இது மகாத்மா, புண்ணிய ஆத்மா என்றும் கூறுகிறார்கள். மகான் பரமாத்மா என்று கூறுவது கிடையாது. சன்னியாசிகளுக்காக பவித்ர ஆத்மா என கூறுவார்கள். ஏனென்றால் சன்னியாசம் செய்திருக்கினறனர். ஆத்மாவை தூய்மையாக மாற்றக் கூடியவர் ஒரேயொரு பரமாத்மா தந்தையைத் தவிர வேறு யாரும் இருக்க முடியாது என இப்போது பாபா புரிய வைக்கிறார். அழுக்கான உலகத்தில் தூய்மையான ஆத்மா யாரும் இருக்க முடியாது. இப்போது நாற்று நடப்படுகிறது. மெல்ல மெல்ல வளர்ச்சி அடைந்துக் கொண்டே இருக்கும். இந்த சிறிய சிறிய மடங்கள், ஆசிரமம் போன்றவை கிளைகள் ஆகும். அதில் எந்த உழைப்பும் கிடையாது. பல்வேறு விதமான மந்திரங்களை அளிக்கிறார்கள். விதவிதமான மந்திரங்களை கொடுக்கிறார்கள். இதுவும் வசீகரம் செய்யும் மந்திரம் ஆகும். இதன் மூலம் 5 விகாரங்களை வெற்றி அடைகிறீர்கள். இராம்... இராம்... என்ற மந்திரத்தை ஜபிக்கிறார்கள். இதனால் நன்மை ஒன்றும் இல்லை. இங்கே என்னை நினைத்தால் உங்களுடைய பாவங்கள அழிந்து போகும் என பாபா கூறுகின்றார். நீங்கள் தூய்மையான ஆத்மா ஆகிவிடுவீர்கள். நினைவைத்தான் யோகா என்கிறார்கள். பாரதத்தின் பழமையான யோகம் மிகவும் பிரசித்தமானது. இந்த யோகத்தினால் தான் நீங்கள் உலகத்தை வெற்றி அடைகிறீர்கள். பாரதத்தின் இராஜயோகம் மிகவும் பெயர் பெற்றது. பாபாவைத் தவிர வேறு யாரும் இதைக் கற்பிக்க முடியாது. நீங்கள் பிரம்மா குமார் குமாரிகள். பி.கே. இங்கே தான் இருப்பார்கள் அல்லவா? பிரஜா பிரதா பிரம்மாவின் குழந்தைகள் என்றால் நிச்சயம் பிரம்மா உடன் தான் இருப்பார்கள். பிராமண குலம் கூட நிச்சயம் வேண்டும். உயர்ந்ததிலும் உயர்ந்தது, மிகவும் உத்தமமானது பிராமண குலம் என்று கூறப்படுகிறது. இப்போது நீங்கள் பிராமணர்கள். பிறகு வீழ்ச்சி அடைவீர்கள். குட்டிக்கரண விளையாட்டு விளையாடுகிறார்கள் அல்லவா? சூத்திரனிலிருந்து பிராமணன் ஆகிறீர்கள். பிறகு தேவதை, சத்ரியன்..... ஆகவே இப்போது இனிமையிலும் இனிமையான குழந்தைகளே ! ஒரு சிறு விஷயம், பாபாவை நினையுங்கள் என பாபா புரிய வைக்கிறார். பாபா நமக்கு 84 பிறவிகளின் ரகசியத்தை சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்பது கூட புத்தியில் இருக்கட்டும். 84 லட்சம் மற்றும் 84 பிறவிகளின் கணக்கு வேண்டும் அல்லவா? யாருக்கும் தெரியவில்லை. 84 லட்சத்தின் கணக்கு யாரும் சொல்ல முடியாது. மனிதர்கள் 84 பிறவிகளின் சக்கரத்தை சுற்றுகிறார்கள். ஆத்மாக்கள் மேலிருந்து நடிப்பதற்காக வருகின்றன. சத்யுகத்திலிருந்து கலியுகத்தின் கடைசி வரை வந்துக் கொண்டே இருக்கின்றன. ஒவ்வொருவரும் அவரவர் நடிப்பை நடித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த விஷயங்கள் மனிதர்களுக்கு தெரியவில்லை. ஒரு தந்தை தான் அறிந்திருக்கிறார். மனிதர்களை ஒரு போதும் பரமபிதா, இறை தந்தை என கூற முடியாது. காட்ஃபாதர் என்று கூறுவதால் நிராகாரர் சிவனின் பக்கம் புத்தி செல்கிறது. ஜீவ ஆத்மாக்களின தந்தை இருப்பார் அல்லவா ! ஆத்மா ஒரு உடலை விட்டு இன்னொன்றை எடுக்கிறது. நிராகாரர் தந்தையின் பெயர் சிவனாகும். உங்களுக்கும் ஒரே பெயர் ஆத்மா. பிறகு உடலுக்கு விதவிதமான பெயர்கள் வைக்கப்படுகின்றன. பரம்பிதா பரமாத்மா கூட சரீரத்தில் வந்து ஞானத்தைக் கூறுகிறார். சரீரம் இல்லாமல் கூற முடியாது. இவருக்காவது தனக்கென்று பெயர் இருக்கிறது. என்னுடைய சரீரத்திற்கு என்று எந்த பெயரும் இல்லை. நான் மறுபிறவியில் வருவதும் இல்லை என பாபா புரிய வைக்கிறார். நான் இவருக்குள் பிரவேசம் ஆகிறேன். இவருக்கும் தெரியாது. எந்த நாள், தேதி என்பது இல்லை. ஆம் ! நான் கல்பத்தின் முடிவு என்றால், இரவில் வருகிறேன். இப்போது இரவல்லவா ! இது பதீதர்களின் உலகம் ஆகும். நான் தூய்மையான உலகமாக அதாவது பகலாக மாற்ற வருகிறேன். பாபா எப்போது பிரவசேம் ஆனார் என்பதையும் அறியவில்லை. ஆம். வினாச காட்சிகளைப் பார்த்தார். நிறைய தியானத்தில் சென்றார் அந்த நாள், நேரம், தேதி போன்றவைகளை கணக்கிட முடியாது. கிருஷ்ணரையும் பூஜை செய்கிறார்கள். அவரும் இரவில் பிறந்ததாகக் காண்பிக்கிறார்கள். எந்த நேரம், எந்த நிமிடம் போன்றவைகளை கணக்கிடுகிறார்கள். நானோ நிராகாரமானவர் என பாபா கூறுகிறார். மற்ற மனிதர்கள் பிறப்பதைப் போன்று என்னுடைய பிறவி இருக்காது. என்னுடையது தெய்வீகமான அலௌகீக பிறப்பாகும். நான் இவருக்குள் பிரவேசம் ஆகிறேன். பிறகு சென்று விடுகிறேன். காளை மாட்டின் மீது முழு நாளும் சவாரி செய்ய மாட்டார்கள். எந்த நேரத்தில் குழந்தைகள் என்னை நினைக்கின்றார்களோ அப்போது நான் வருகிறேன். தந்தை வந்து குழந்தைகளைச் சந்திக்கிறார், காலை வணக்கம் கூறுகின்றார். எப்படி மனிதர்கள் ஒருவருக்கொருவர் சந்திக்கிறார்களோ அப்போது இராம் ! இராம் அல்லது நமஸ்தே ! என்கிறார்கள். இதை ஆன்மீக எல்லையற்ற தந்தை புரிய வைக்கின்றார். நான் குழந்தைகளாகிய உங்கள் அனைவருக்கும் தந்தையாக இருக்கிறேன். சிவபாபாவின் வாரிசுகளாகிய நீங்கள் அனைத்து ஆத்மாக்களும் சகோதரர்கள். இந்த குஷியின் அளவு அதிகரிக்க வேண்டும். எல்லையற்ற தந்தை வந்திருக்கின்றார். நமக்கு எல்லையற்ற ஆஸ்தியை கொடுத்துக் கொண்டிருக்கின்றார். குழந்தைகளைப் பார்த்து தந்தைக்கும் குஷி ஏற்படுகிறது. நிறைய குழந்தைகள் இருக்கிறார்கள். நம்மை பாபா சொர்க்கத்திற்கு அதிபதியாக மாற்றிக் கொண்டிருக்கிறார். இராஜ்ஜிய பதவியை அளிக்கிறார் என குழந்தைகள் அறிகிறார்கள். பிரஜைகள் கூட எங்கள் இராஜ்யம் என்று தான் கூறுவார்கள். பாரதவாசிகள் எங்கள் பாரத தேசம் என்று கூறுவது போல ஆகும். ராஜா, பிரஜைகள் இருவருமே எங்கள் தேசம் என்பார்கள். குழந்தைகளாகிய நீங்கள் நரகவாசியாக இருக்கிறீர்கள். பிறகு சொர்க்கவாசி ஆவீர்கள். அப்பாவை மற்றும் ஆஸ்தியை நினைக்க வேண்டும். வேறு எந்த துன்பத்தையும் பாபா அளிக்க வில்லை. இல்லறத்தில் தான் இருக்க வேண்டும். இங்கேயே வந்து இருக்க முடியாது. அனைவரும் இங்கே ஓடி வந்தால் இவ்வளவு பேரையும் பாபா எங்கே வைக்க முடியும். இத்தனை குழந்தைகள் ஒரே முறை எப்படி ஒன்றாக இருக்க முடியும். அனைத்து சென்டர்களின் குழந்தைகள் ஒரே நேரத்தில் ஒன்றாக எப்படி சந்திக்க முடியும்? ஒன்றாக எங்கே தங்க முடியும். கடினம் அல்லவா? ஒவ்வொரு நாளும் குழந்தைகள் விருத்தி அடைந்துக் கொண்டே போகிறார்கள். இதற்காக சில யுக்திகளைக் கண்டுபிடிக்க வேண்டும். இங்கே பக்கத்தில் இருக்க கூடிய கட்டிடங்களை எல்லாம் எடுத்துக் கொள்ள வேண்டும். கட்டிட உரிமையாளர்களிடம் எவ்வளவு கேட்பீர்கள் என கேட்க வேண்டும். தேவையான நேரத்திற்கு எடுக்க வேண்டும் அல்லவா? பணத்தைப் பற்றி எந்த விஷயமும் இல்லை. நேரம் மிகவும் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அப்பா மற்றும் குழந்தைகள் இருவரும் அழிவற்றவர்கள். அழிவற்ற பொக்கிஷத்தை குழந்தைகளுக்கு அளிக்கிறார். நிறைய குழந்தைகள் வர வேண்டியிருக்கிறது. இவ்வளவு குழந்தைகள் எங்கே வந்து தங்குவார்கள் என பாபா சிந்திக்கின்றார். நீ ஏன் கவலை படுகிறாய். பொறுத்திருந்து பார் ! என பாபா கூறுகின்றார். நீங்கள் படித்துக் கொண்டே இருங்கள், மன்மனாபவ.இப்போது நாம் கர்மாதீத நிலையை அடைய வேண்டும். தூய்மையாக வேண்டும் என்ற எண்ணம் குழந்தைகாளகிய உங்களுக்கு இருக்க வேண்டும். நினைவினால் தான் தூய்மையாவீர்கள். பாபா மிகவும் எளிதான விஷயங்களைத் தெரிவிக்கிறார். பாபாவை நினைப்பது மிகவும் எளிதாகும். பாருங்கள் பசுவின் குழந்தைகளுக்கு தாயின் நினைவு வந்ததும் கத்துகிறது அல்லவா? அதுவோ விலங்காகும். குழந்தைகளாகிய நீங்களும் கத்தி கூச்சலிட்டீர்கள் (பக்தியில்) அல்லவா? இன்னும் போகப் போக நிறைய பேர் கதறுவார்கள். நிறைய நினைவு செய்வார்கள். பாபா வந்து விட்டார். வினாசம் கண்டிப்பாக நடக்கும் என குழந்தைகளாகிய நீங்கள் அறிகிறீர்கள். இயற்கைச் சீற்றங்கள் வரும். அனைவரும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டே இருப்பார்கள் எவ்வளவு செலவு செய்து அணுகுண்டுகளைத் தயாரிக்கிறார்கள். நிறைய பணம் செலவாகிறது. இவ்வளவு செலவு எங்கிருந்து வரும். மரணத்தைப் பார்த்து பயப்படவும் செய்கிறார்கள். இருப்பினும் அணுகுண்டுகள் உருவாக்குவதை நிறுத்தவில்லை. அணுகுண்டுகளின் சண்டை நடக்கும். இப்போது அணுகுண்டு விழுந்ததுமே மனிதர்கள் இறந்து போவது போன்றெல்லாம் தயாரிக்கிறார்கள். முன்பு பொருட்களை தயாரிப்பதில் நேரம் ஆகியது. பிறகு ஒரு சில நிமிடத்தில், வெகு விரைவாக தயாரித்துக் கொண்டே போகிறார்கள். அணுகுண்டுகள் கூட கொஞ்சமாக தயாரிப்பார்களா என்ன? இந்த பழைய சிருஷ்டி அழியப் போகிறது என உங்களுக்குத் தெரியும். இந்த எல்லையற்ற தந்தையிடமிருந்து ஆஸ்தி அடைய வேண்டும. பாரதவாசிகளாகிய உங்களின் தேவி தேவதா தர்மத்தின் சாஸ்திரம் கீதையாகும். மற்றவை சிறியதாக இருக்கிறது. அவைகளுக்கு மகிமை கிடையாது. அனைத்தையும் விட உயர்ந்தது பிராமண தர்மம் ஆகும். பிராமணர்களின் வேலை கதை சொல்வதாகும். நாங்கள் பிரம்மா குமார் பிரம்மா குமாரிகள். பிரம்மாவின் குழந்தைகள், எங்களுக்கு தந்தையின் சொத்து கிடைத்துக் கொண்டிருக்கிறது என நீங்கள் கூறலாம். நல்லது.இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்குத் தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு, ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.தாரணைக்கான முக்கிய சாரம் :

1. நாடகத்தின் ஒவ்வொரு ரகசியத்தையும் தெரிந்துக் கொண்டு எந்த விஷயத்தைப் பற்றியும் கவலைப் படக் கூடாது. படிப்பை படித்துக் கொண்டே இருக்க வேண்டும். மன்மனாபவ ஆகி கர்மாதீத நிலையை அடைய சிந்திக்க வேண்டும். தன்னைத் தூய்மையாக மாற்றிக் கொள்ள வேண்டும்.2. ஆத்மாக்களாகிய நாம் சிவபாபாவின் வாரிசு தங்களுக்குள் சகோதரர்கள் ஆவர். சிவபாபாவிடமிருந்து ஆஸ்தி அடைந்துக் கொண்டிருக்கின்றோம். இந்த மகிழச்சியில் இருக்க வேண்டும்.வரதானம் :

அடிமைத்தனம் என்ற பந்தனத்தை முடித்து விட்டு உண்மையான சுதந்திரத்தை அனுபவம் செய்ய கூடிய மாஸ்டர் சர்வ சக்திவான் ஆகுக !உலகத்திற்கு அனைத்து சக்திகளையும் தானம் அளிப்பதற்கு சுதந்திர ஆத்மா ஆகுங்கள். அனைத்தையும் விட முதல் சுதந்திரம் பழைய தேகத்தின் உள்ளே உள்ள உறவுகள் ஆகும். ஏனென்றால், தேகத்தின் அடிமைத்தனம் பல பந்தனங்களை விரும்பாமலேயே உருவாக்கி விடுகிறது. அமைத்தனம் எப்போதும் கீழே கொண்டு செல்கிறது. குழப்பம் அல்லது சாரமற்ற நிலையை அனுபவம் செய்விக்கிறது. அவர்களுக்கு எந்த ஒரு உதவியும் தெளிவாகத் தெரியவில்லை. துன்பத்தின் அனுபவமும் இல்லை, மகிழ்ச்சியின் அனுபவமும் இல்லை. இடையில் சுழலில் இருக்கிறார்கள். ஆகவே மாஸ்டர் சர்வ சக்திவான் ஆகி அனைத்து பந்தனங்களிலிருந்தும் விடுபடுங்கள். தங்களின் உண்மையான சுதந்திர நாளை கொண்டாடுங்கள்.சுலோகன் :

பரமாத்ம சந்திப்பில் அனைத்து பிராப்திகளின் ஆனந்தத்தை அனுபவம் செய்து திருப்தியான ஆத்மா ஆகுங்கள்***OM SHANTI***

Whatsapp Button works on Mobile Device only