16 July 2016

BK Murli 17 July 2016 Tamil


BK Murli 17 July 2016 Tamil

17.07.2016  காலை முரளி  ஓம் சாந்தி  ''அவ்யக்த பாப்தாதா''  ரிவைஸ் 19.10.1981  மதுபன்

 '' ஒவ்வொரு பிராமணனும் சைத்தன்ய நட்சத்திர மண்டலத்தின் அலங்காரம் ''


இன்று ஞான சூரியன், ஞான சந்திரன் தங்களுடைய நட்சத்திர மண்டலத்தை பார்ப்பதற்காக வந்திருக்கிறார்கள். நட்சத்திரங்களின் நடுவே ஞான சூரியன், ஞான சந்திரன் இருவர்களுமே சேர்ந்து வந்திருக்கிறார்கள். பொதுவாக இந்த பௌதீக உலகத்தில் சூரியன், சந்திரன் மற்றும் கூடவே நட்சத்திரங்கள் சேர்ந்திருப்பதில்லை. ஆனால் சைத்தன்ய நட்சத்திரங்கள் சூரியன் மற்றும் சந்திரனின் உடன் இருக்கிறார்கள். இது நட்சத்திரங்களின் ஆன்மீகக் கூட்டம். இன்று பாப்தாதா விதவிதமான நட்சத்திரங்களை பார்க்கிறார். ஒவ்வொரு நட்சத்திரத்திலும் அவரவர்களின் விசேஷம் இருக்கிறது. சின்ன சின்ன நட்சத்திரங்களும் இந்த நட்சத்திர மண்டலத்தை மிக நல்ல அழகானதாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். பெரியவர்களும் இருக்கத் தான் இருக்கிறார்கள் ஆனால் சிறியவர்களின் மின்மினுப்பு கூட்டத்தின் அழகை அதிகரிக்கிறது. பாப்தாதா ஒவ்வொரு நட்சத்திரத்தின் அவசியம் எவ்வளவு இருக்கிறது என்ற இந்த விஷயத்தைப் பார்த்து பார்த்து தான் மகிழ்ச்சி அடைந்து கொண்டிருக்கிறார். சிறியதிலும் சிறிய நட்சத்திரமும் மிக அவசியமாக இருக்கிறது. மகத்துவம் நிறைந்த காரியம் செய்பவர்களாக இருக்கிறார்கள் என்றால் இன்று பாப்தாதா ஒவ்வொருவரின் மகத்துவத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். எப்படி வெளியுலக குடும்பத்தில் தாய் தந்தையர் ஒவ்வொரு குழந்தையின் குணங்களின், செய்யும் காரியங்களின், நடத்தையின் விஷயங்களை பேசுகிறார்கள். அதே போலவே எல்லைக்கப்பாற்பட்ட தாய் தந்தையாகிய ஞான சூரியன் மற்றும் சந்திரன் எல்லைக்கப்பாற்பட்ட பரிவாரத்தின் மற்றும் அனைத்து நட்சத்திரங்களின் விசேஷங்களை பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். பிரம்மா பாபா அல்லது சந்திரன் இன்று உலகின் நாலாபுறங்களிலும் மூலை மூலையில் மின்னிக் கொண்டிருக்கும் தன்னுடைய நட்சத்திரங்களை பார்த்து பார்த்து விசேஷமாக ஒμயில் ஆடிக்கொண்டிருந்தார். ஞான சூரியன் தந்தையோ ஒவ்வொரு நட்சத்திரங்களின் அவசியம் மற்றும் விசேஷத்தை கூறிக் கொண்டே அந்த அளவு மகிழ்ச்சி அடைந்து கொண்டிருந்தார், அதை வார்த்தைகளால் வர்ணிக்கவே முடியாது. அந்த நேரத்தின் சித்திரத்தை புத்தியின் நினைவு என்ற கேமரா மூலம் படம் பிடிக்க முடியுமா? சாகாரத்தில் யார் யாரெல்லாம் அனுபவம் செய்திருந்தார்களோ அவர்களோ நல்ல முறையில் தெரிந்து கொள்ள முடியும். முகம் எதிரில் வந்து விட்டது தான் இல்லையா? என்ன தென்படுகிறது? கண்களில் முத்து ஜொலிக்கும் மாதிரி அந்த அளவு மகிழ்ச்சி அடைந்து கொண்டிருந்தார்கள். இன்று எப்படி வைர வியாபாரி ஒவ்வொரு வைரத்தின் மகத்துவத்தை வர்ணனை செய்கிறார், அதே போல் சந்திரன் ஒவ்வொரு வைரத்தின் மகிமை செய்து கொண்டிருந்தார். உங்கள் அனைவரின் மகிமையாக என்ன கூறியிருப்பார் என்று நீங்கள் புரிந்து கொள்ள முடியுமா? தன்னுடைய மகான் நிலையின் மகிமையை தெரிந்திருக்கிறீர்களா?அனைவரின் ஒரு முக்கியமான விஷயத்தின் விசேஷம் மற்றும் மகான் நிலை மிகத் தெளிவாக இருக்கிறது. அது யாராக இருந்தாலும் யானைப்படையோ (மகாரதியோ) அல்லது காலாட்படையோ, சின்ன நட்சத்திரமோ அல்லது பெரிய நட்சத்திரமோ ஆனால் தந்தையை தெரிந்திருக்கும் விசேஷம், தந்தையின் குழந்தையாக ஆகியிருக்கும் விசேஷமோ அனைவரிலும் இருக்கிறது தான் இல்லையா. தந்தையை சாஸ்திரங்களின் அதிகாரம் உள்ள மிகப்பெரியவர்கள், மதத்தின் அதிகாரம் உள்ளவர்கள், அறிவியலின் அதிகாரம் உள்ளவர்கள், இராஜ்ஜியத்தின் அதிகாரம் உள்ளவர்கள், பெரிய பெரிய அழியும் பட்டங்களின் அதிகாரம் உள்ளவர்கள் அனைவருமே தந்தையை தெரிந்திருக்கவில்லை ஆனால் நீங்கள் அனைவரும் தந்தையை தெரிந்து கொண்டீர்கள். அவர்கள் இதுவரையிலும் வாருங்கள் வாருங்கள் என்று அழைத்துக் கொண்டே தான் இருக்கிறார்கள். சாஸ்திரவாதிகளோ இப்பொழுது கணக்கைத் தான் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். விஞ்ஞானிகளோ தங்களுடைய கண்டுபிடிப்புகளில் அந்தளவு மூழ்கியிருக்கிறார்கள், அதனால் தந்தையின் விஷயங்களை கேட்பதற்கும் மற்றும் புரிந்து கொள்வதற்கும் நேரமே இருப்பதில்லை. தன்னுடைய காரியங்களிலேயே மூழ்கியிருக்கிறார்கள். இராஜ்ய அதிகாரம் உள்ளவர்கள் தன்னுடைய இராஜ்ஜியத்தின் நாற்காலியை பாதுகாப்பதிலேயே பிஸியாக இருக்கிறார்கள், நேரமே இருப்பதில்லை. மதத்தலைவர்களோ தங்களுடைய மதம் அழிந்து விடக்கூடாது என்று அதை பாதுகாப்பதிலேயே பிஸியாக இருக்கிறார்கள். இந்த என்னுடைய என்னுடையது என்பதிலேயே மிகவும் பிஸியாக இருக்கிறார்கள். ஆனால் நீங்கள் அனைவரும் வரவழைப்பதற்கு பதிலாக சந்திப்பு செய்பவர்கள், இந்த விசேஷம் மற்றும் மகான் தன்மை உங்கள் அனைவரிடமும் இருக்கிறது. என்னிடம் என்ன விசேஷம் இருக்கிறது மற்றும் என்னிடமோ ஒரு குணமும் இல்லை என்று அப்படி நினைக்கவில்லையே. என்னில் ஒரு குணமும் இல்லை என்ற வார்த்தையோ பக்தர்களினுடையது. குணங்களின் கடல் தந்தையின் குழந்தை ஆவது என்றால் குணம் நிறைந்தவர் ஆவது. அப்படி ஒவ்வொருவரிலும் ஏதாவது குணத்தின் விசேஷம் இருக்கிறது. மேலும் தந்தை அந்த விசேஷத்தைத் தான் பார்க்கிறார். எப்படி இராஜ பரிவாரத்தின் ஒவ்வொரு நபரிலும் அந்த அளவு சம்பன்னம் அவசியம் இருக்கிறது. அவர் ஒருபொழுதும் யாசிப்பவராக இருக்க முடியாது என்று தந்தை தெரிந்திருக்கிறார். அந்த மாதிரி குணங்களின் கடல் தந்தையின் குழந்தைகள் ஏதாவது குணத்தின் விசேஷம் இன்றி குழந்தை என்று கூற முடியாது. அப்படி நீங்கள் அனைவரும் குணம் நிறைந்தவர்கள் மகான், விசேஷ ஆத்மாக்கள், சைத்தன்ய நட்சத்திர மண்டலத்தின் அலங்காரம் ஆவீர்கள். நீங்கள் யார் என்று இப்பொழுது புரிந்து கொண்டீர்களா? நீங்கள் பலமற்றவர் அல்ல, பலம் நிரம்பியவர்கள் ஏனென்றால் நீங்கள் மாஸ்டர் சர்வ சக்திவான் ஆவீர்கள். அந்த மாதிரி ஆன்மீக போதை எப்பொழுதும் இருக்கிறதா? ஆன்மீக நிலையில் ஒருபொழுதும் அபிமானம் இருக்காது, சுவமானம் இருக்கும். சுவமானம் என்றால் சுயம் - ஆத்மாவின் உணர்வு. சுவமானம் மற்றும் அபிமானம் இரண்டிற்கும் வித்தியாசம் இருக்கிறது. எனவே எப்பொழுதும் சுவமானம் என்ற ஆசனத்தில் அமர்ந்திருங்கள். அபிமானம் என்ற ஆசனத்தை விட்டு விடுங்கள். அபிமானத்தின் ஆசனம் மேலோட்டமாக மிக அலங்கரிக்கப்பட்டதாக இருக்கும். பார்க்கும் பொழுது இதயத்திற்கு பிடித்ததாக ஓய்வாக அமரலாம் என்ற விருப்பம் இருக்கும். ஆனால் உள்ளே முட்களின் ஆசனம் இருக்கும். இந்த அபிமானத்தின் ஆசனம் எப்படி சாப்பிட்டாலும் வேதனை அடை மற்றும் சாப்பிடாவிட்டாலும் வேதனை அடை என்ற பழமொழி இருக்கிறது, இந்த ஆசனமும் அதே போல் தான். ஒருவர் மற்றவரை பார்த்து நானும் ருசி பார்த்து விட வேண்டும் என்று யோசிக்கிறார்கள். இன்னார் இன்னார் அனுபவம் செய்திருக்கிறார், எனவே நானும் ஏன் அனுபவம் செய்யக்கூடாது. அப்படி விடவும் முடியாது, மேலும் எப்பொழுது அமருகிறார்களோ அப்பொழுது முள்ளோ கண்டிப்பாக குத்தும். அந்த மாதிரி வெளிப்படையாக மிக நன்றாக இருப்பதாக தோன்றும். ஏமாற்றம் அளிக்கும் அபிமானத்தின் ஆசனத்தில் அமருவதற்கு ஒருபொழுதும் முயற்சி செய்யாதீர்கள். சுவமானத்தின் ஆசனத்தில் எப்பொழுதும் சுகமானவராக, எப்பொழுதும் உயர்ந்த, எப்பொழுதும் அனைத்து பிராப்தி சொரூபத்தின் அனுபவம் செய்யுங்கள். தந்தையை தெரிந்து கொள்வது மற்றும் சந்திப்பு செய்வதற்கான விசேஷத்தை மட்டும் நினைவில் வைத்து எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருங்கள். எப்படி சந்திரன் நட்சத்திரங்களை பார்த்து மகிழ்ச்சி அடைந்து கொண்டிருக்கிறார் என்று ஏற்கனவே கூறியிருந்தோம். அதே போல் தந்தையை பின்பற்றி நடங்கள் - நல்லது.அந்த மாதிரி எப்பொழுதும் சுவமானத்தின் ஆசனத்தில் அமர்ந்திருக்கக்கூடிய, எப்பொழுதும் தன்னை விசேஷ ஆத்மா என்று புரிந்து விசேஷங்கள் மூலமாக மற்றவர்களையும் விசேஷ ஆத்மாவாக ஆக்கக்கூடிய, சந்திரன் மற்றும் ஞான சூரியனை எப்பொழுதும் பின்பற்றி நடக்கக்கூடிய, அந்த மாதிரி நம்பிக்கைக்குரிய, கட்டளைப்படி நடக்கும் உண்மையான குழந்தைகளுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.தாதி அவர்களுடன் சந்திப்பு -

நீங்களும் அனைவரின் விசேஷங்களை பார்த்திருக்கிறீர்கள் இல்லையா. (சென்ற இடங்களை) சுற்றி வந்ததில் என்ன பார்த்தீர்கள்? சிறியவர்களின் விசேஷத்தையும், பெரியவர்களின் விசேஷத்தையும் பார்த்தீர்கள் இல்லையா. அப்படி விசேஷத்தை வர்ணனை செய்வதில், கேட்பதில் அனைவரும் எவ்வளவு மகிழ்ச்சி அடைகிறார்கள். அனைவரும் மகிழ்ச்சி அடைந்து கேட்டுக் கொண்டிருந்தார்கள் இல்லையா (தாதி அவர்கள் அம்பாலா மற்றும் பிரோஸாபாத் மேளாவின் செய்தியை வகுப்பில் கூறினார்) அதே போலவே எப்பொழுதும் அனைவரும் விசேஷத்தை மட்டுமே வர்ணனை செய்கிறார்கள் என்றால் என்னவாகிவிடும். எப்படி விசேஷ காரியத்தில் எப்பொழுதும் குஷியின் இசை ஒலிக்கும் இல்லையா. அதே போல் பிராமண பரிவாரத்தில் நாலாபுறங்களிலும் குஷியின் இசை தான் ஒலித்துக் கொண்டே இருக்கும். சுறுக்கமான மற்றும் இனிமையான பயணமாக இருந்தது. குஷியின் சுரங்கத்தைப் பெற்று அனைவரையும் குஷியால் அனைத்தும் நிறைந்தவராக ஆக்கி வந்திருக்கிறீர்கள். ஒவ்வொரு ஸ்தானத்தின் தைரியம் மற்றும் உற்சாகம், ஒன்று இன்னொன்றை விட உயர்ந்தது. தந்தையும் குழந்தைகளின் தைரியம் மற்றும் உற்சாகத்திற்காக ஒவ்வொரு குழந்தையின் மகிமையின் குணங்களின் மலர் மழை பொழிகிறார். நல்லது.பார்ட்டிகளுடன் சந்திப்பு -

ஒவ்வொருவரும் தன்னுடைய உயர்ந்த எதிர்காலத்தை தெரிந்திருக்கிறீர்கள் இல்லையா? எவ்வளவு உயர்ந்த எதிர்காலத்தை உயர்ந்த காரியங்கள் மூலமாக உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள்? எவ்வளவு உயர்ந்த காரியமோ அந்த அளவே எதிர்காலத்தின் ரேகை நீளமானதாகவும் தெளிவானதாகவும் இருக்கிறது. எப்படி கைகள் மூலமாக எதிர்காலத்தை பார்க்கிறார்கள் என்றால், என்ன பார்க்கிறார்கள்? ரேகை நீளமாக இருக்கிறதா, இடையிடையில் துண்டிக்கவோ படவில்லையே என்று பார்க்கிறார்கள். அதே போல் இங்கேயும் அந்த மாதிரி தான். ஒருவேளை எப்பொழுதும் உயர்ந்த காரியம் செய்பவராக இருக்கிறார் என்றால் எதிர்காலத்தின் ரேகையும் நீளமானதாக மற்றும் நிரந்தரமாக தெளிவானதாக மற்றும் உயர்ந்ததாக இருக்கிறது. ஒருவேளை சில நேரம் உயர்ந்ததாக, சில நேரம் சாதாரணமானதாக இருக்கிறது என்றால் ரேகையும் இடையிடையே துண்டிக்கப்பட்டிருக்கும், அழியாததாக இருக்காது. சில நேரம் நிற்பார்கள், சில நேரம் முன்னேறிச் செல்வார்கள், எனவே எப்பொழுதும் உயர்ந்த காரியம் செய்பவராக இருக்க வேண்டும். தந்தையோ எதிர்காலத்தை உருவாக்கும் சாதனத்தையோ தந்து விட்டார் - உயர்ந்த காரியம். எதிர்காலத்தை உருவாக்குவது எவ்வளவு சுலபமானதாக இருக்கிறது. உயர்ந்த காரியம் செய்யுங்கள், மேலும் பல கோடி மடங்கு பாக்கியசாலியின் எதிர்காலத்தை அடையுங்கள். உயர்ந்த காரியத்தின் ஆதாரம் - உயர்ந்த நினைவு. உயர்ந்ததிலும் உயர்ந்த தந்தையின் நினைவில் இருப்பது என்றால் உயர்ந்த காரியம் நடப்பது. அந்த மாதிரி நீங்கள் நல்ல எதிர்காலம் உள்ளவர்கள் தான் இல்லையா. அனைவருமே எதிர்காலம் உள்ளவர்கள் தான் ஆனால் உயர்ந்ததாக இருக்கிறதா அல்லது சாதாரணமானதாக இருக்கிறதா என்ற இதில் வரிசை எண் வந்து விடுகிறது. நிரந்தரமான எதிர்காலத்தின் ரேகையை போட்டு விட்டீர்களா அல்லது சின்னஞ்சிறியதை போட்டிருக்கிறீர்களா? நீளமானது தான் இல்லையா, அழியாதது தான் இல்லையா. இடையிடையே அழியக்கூடியது அல்ல, எப்பொழுதுமே இருக்கக்கூடியது. அந்த மாதிரி எதிர்காலம் உள்ளவர்கள். இப்போதைக்கும் நல்ல எதிர்காலம் உள்ளவர் மற்றும் அனேக ஜென்மங்களுக்கும் நல்ல எதிர்காலம் உள்ளவர்.2) அனைவரும் தன்னை இந்த நாடகத்திற்குள் தந்தையுடன் அன்பான மற்றும் சகயோகி ஆத்மாக்கள் என்று அப்படி புரிந்து நடந்து கொள்கிறீர்களா? ஆத்மாக்கள் நமக்கு இந்த அளவு உயர்ந்த பாக்கியம் கிடைத்திருக்கிறது, இந்த பதவி எப்பொழுதும் நினைவிருக்கிறதா? எப்படி உலகில் கூட உயர்ந்த பதவியில் இருக்கும் ஆத்மாவின் உடன் காரியம் செய்பவர்களும் எவ்வளவு உயர்ந்ததாக நினைக்கிறார்கள். ஆனால் உங்களுடைய பங்கு, உங்களுடைய காரியம் சுயம் தந்தையுடன் இருக்கிறது. அப்படியென்றால் எவ்வளவு உயர்ந்த பங்காக ஆகிவிட்டது. அந்த மாதிரி நினைக்கிறீர்களா? முன்போ சிறிதளவு தரிசனம் கிடைத்து விடட்டுமே என்று அழைத்துக் கொண்டு மட்டும் இருந்தீர்கள். இந்த ஆசையைத் தான் வைத்திருந்தீர்கள் இல்லையா. அதிகாரி ஆவதற்கான ஆசை மற்றும் எண்ணத்தையோ நினைத்துக்கூட பார்க்க முடியாது, அசம்பவம் என்று நினைத்தீர்கள். ஆனால் இப்பொழுது அசம்பவ விஷயமாக என்ன இருந்ததோ அது சம்பவமாக மற்றும் நடந்தேறிவிட்டது. இந்த நினைவு இருக்கிறதா? எப்பொழுதும் இருக்கிறதா அல்லது சில நேரம் இருக்கிறதா? ஒருவேளை சில நேரம் இருக்கிறது என்றால் பிராப்தியாக என்ன அடைவீர்கள்? சில நேரம் இராஜ்ஜியம் கிடைக்கும், சில நேரம் இராஜா ஆவீர்கள், சில நேரம் பிரஜை ஆவீர்கள். யார் நிரந்தரமான சகயோகியாக இருக்கிறாரோ அவர் தான் நிரந்தரமான இராஜா. அதிகாரமோ அழியாததாக மற்றும் நிரந்தரமானதாக இருக்கிறது. எவ்வளவு காலம் தந்தை உத்திரவாதம் கொடுத்திருக்கிறாரோ, அரைக்கல்பம் அதில் எப்பொழுதிற்குமான இராஜ பதவியை பிராப்தி செய்ய முடியும். ஆனால் இராஜயோகி இல்லை என்றால் இராஜ்ஜியமும் இல்லை. எப்பொழுது வாய்ப்பு நிரந்தரமாக இருக்கிறது என்றால் சிறிது காலத்திற்காக ஏன் பெற்றுக் கொள்கிறீர்கள். நல்லது.3) சங்கமயுகத்தை புதிய யுகம் என்றும் கூற முடியும். ஏனென்றால் அனைத்தும் புதியதாக ஆகிவிடுகிறது. புதிய யுகத்தைச் சேர்ந்தவர்களின் ஒவ்வொரு நேரத்தின் ஒவ்வொரு நடத்தையும் புதியது. எழுவதும் புதியது, பேசுவதும் புதியது, நடப்பதும் புதியது. புதியது என்றால் ஆன்மீகம். புதிய கௌரவம், புதிய விஷயம், அனைத்தும் புதியதாக ஆகிவிட்டது இல்லையா. நினைவிலும் புதுமை வந்து விட்டது. எப்படி நினைவோ அப்படி நிலையும் ஆகிவிட்டது. விஷயங்களும் புதியது, கிடைப்பதும் புதியது, அனைத்தும் புதியது. பார்க்கிறார்கள் என்றாலும் ஆத்மா, ஆத்மாவை பார்ப்பார்கள். முன்பு உடலைப் பார்த்தார்கள், இப்பொழுது ஆத்மாவை பார்க்கிறார்கள். முன்பு தொடர்பில் வந்தார்கள் என்றால் பல விகார பாவனையோடு வந்தார்கள். இப்பொழுது சகோதரன் சகோதரனின் பார்வையோடு தொடர்பில் வருகிறீர்கள். இப்பொழுது தந்தையின் துணைவன் ஆகிவிட்டீர்கள். முன்பு உலகியல் குடும்பத்தின் துணைவர்களாக இருந்தீர்கள். பிராமணர்களின் பாஷையும் புதியது, உங்களுடைய பாஷையை உலகத்தினர் புரிந்து கொள்ள முடியாது. பகவான் வந்து விட்டார் என்ற இந்த விஷயத்தை மட்டும் கூறுகிறீர்கள் என்றாலும் ஆச்சரியம் அடைகிறார்கள். புரிந்து கொள்வதில்லை. இவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று கூறுகிறார்கள். அப்படி உங்களுடைய அனைத்து விஷயங்களும் புதியவை எனவே ஒவ்வொரு நேரமும் தனக்குள்ளும் புதுமையை கொண்டு வாருங்கள். என்ன மனநிலை ஒருநொடி முன்பு இருந்ததோ அது அடுத்த விநாடி இல்லை, அதை விட மேலாக இருந்தது. இதைத் தான் வேகமான முயற்சி என்று கூறுவது. யார் சில நேரம் முன்னேறும் கலையிலும் சில நேரம் நிற்கும் கலையிலும் இருப்பாரோ அவரை நம்பர் ஒன் முயற்சியாளர் என்று கூறமாட்டோம். நம்பர் ஒன் முயற்சி செய்பவரின் அடையாளம் ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு எண்ணத்திலும் முன்னேறும் கலை. இந்த நேரம் 80 சதவிகிதம் இருக்கிறது என்றால் ஒரு விநாடிக்கு பிறகு 81 சதவிகிதம் என்று இருக்க வேண்டும், 80 ற்கு 80 ஆகவே இருக்க வேண்டாம். ஏறும் கலை என்றாலே எப்பொழுதும் முன்னேறிச் சென்று கொண்டிருப்பது. பிராமண வாழ்க்கையின் காரியமே முன்னேறுவது மற்றும் மற்றவர்களை முன்னேற்றுவது. உங்களுடைய முன்னேறும் கலையில் அனைவருக்கும் நன்மை இருக்கிறது. அந்த அளவு உங்கள் அனைவர் மேலும் பொறுப்பு இருக்கிறது. நல்லது - ஓம் சாந்தி.வரதானம் –

வீணானதின் கசிவை முடித்து சக்தி நிறைந்தவர் ஆகக்கூடிய குறைந்த செலவில் நிறைந்த பலன் பெறுபவர் ஆகுக.சங்கமயுகத்தில் பாப்தாதா மூலமாக என்னென்ன பொக்கிஷங்கள் கிடைத்திருக்கின்றனவோ அந்த அனைத்து பொக்கிஷங்களை வீணாக செல்வதிலிருந்து பாதுகாத்தீர்கள் என்றால் குறைந்த செலவில் நிறைந்த பலன் அடைபவராக ஆகிவிடுகிறீர்கள். வீணானவற்றிலிருந்து மிச்சப்படுத்துவது என்றால் சக்தி நிறைந்தவர் ஆவது. எங்கு சக்தி நிறைந்த நிலை இருக்கிறது என்றால் அங்கு வீணானவை இருக்கிறது என்பது இருக்க முடியாது. ஒருவேளை வீணானவற்றின் கசிவு இருக்கிறது என்றால் சோதனை செய்து அதை முடித்து விட்டீர்கள் என்றால் வீணானவையிலிருந்து சக்தி நிறைந்தவர் ஆகிவிடுவீர்கள்.சுலோகன் :

இல்லறத்தில் இருந்து கொண்டே சம்பூர்ண தூய்மையாக இருப்பது - இது தான் யோகி மற்றும் ஞான சொரூப ஆத்மாவிற்கான சவாலாகும்.***OM SHANTI***

Whatsapp Button works on Mobile Device only