28 July 2016

BK Murli 29 July 2016 Tamil

BK Murli 29 July 2016 Tamil

29.07.2016    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்

இனிமையான குழந்தைகளே! முழு உலகிலும் உங்களைப் போன்ற அதிஷ்டசாலிகள் யாரும் கிடையாது, நீங்கள் இராஜரிஷிகள், இராஜ்யத்திற்காக இராஜயோகம் கற்றுக் கொண்டிருக்கிறீர்கள்.கேள்வி:

நிராகார தந்தையிடம் எந்த சம்ஸ்காரம் இருக்கிறது, அதை குழந்தைகளாகிய நீங்களும் சங்கமத்தில் தாரணை செய்கிறீர்கள்?பதில்:

நிராகார தந்தையிடம் ஞானத்தின் சன்ஸ்காரம் இருக்கிறது, அவர் உங்களுக்கு ஞானம் கூறி தூய்மையற்றதிலிருந்து தூய்மையானவராக ஆக்கிவிடுகின்றார். அதனால் தான் அவர் ஞானக் கடல், பதீத பாவனன் என்று கூறப்படுகின்றார். குழந்தைகளாகிய நீங்களும் இப்போது அந்த சன்ஸ்காரத்தை தாரணை செய்கிறீர்கள். நமக்கு பகவான் கற்பிக்கின்றார், நாம் அவரிடம் கேட்கின்றோம், கூறுகின்றோம் என்று நீங்கள் போதையுடன் கூறுகிறீர்கள்.பாட்டு:

கடைசியில் அந்த நாள் வந்து விட்டது ........ஓம் சாந்தி.

இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகள் இந்த பாட்டைக் கேட்டீர்கள். இந்த மகிமை யாருடையது? ஒரு தந்தையினுடையது. சிவாய நன்ஹ, உயர்ந்ததிலும் உயர்ந்தவர் பகவான் அல்லவா! அவர் நமது தந்தை என்பதை குழந்தைகள் அறிவீர்கள். நாம் அனைவரும் தந்தை என்று கிடையாது. உலகம் முழுவதும் சகோதரத்துவம் என்று பாடப்பட்டிருக்கிறது. சந்நியாசிகள் அல்லது வித்வான்கள் கூற்றுப் படி ஈஸ்வரன் சர்வவியாபி எனில் அது அனைவருமே தந்தை என்றாகிவிடுகிறது. சகோதரர்கள் ஆகின்ற போது தந்தை என்பது நிரூபணம் ஆகிறது, அவரிடமிருந்து ஆஸ்தி கிடைக்கிறது. அனைவரும் தந்தை எனில் பிறகு ஆஸ்திக்கான விசயமே கிடையாது. நம் அனைத்து ஆத்மாக்களுக்கும் தந்தை ஒருவர் தான் என்பதை குழந்தைகள் அறிவீர்கள், அவர் தான் உலக (ஜகத்) பிதா என்று கூறப்படுகின்றார். உலகில் யார் இருக்கின்றனர்? அனைவரும் சகோதரர்கள், ஆத்மாக்கள். அனைவருக்கும் இறை தந்தையானவர் ஒரே ஒருவர் தான். அந்த தந்தையைத் தான் அனைவரும் வழிபடுகின்றனர். ஒரே ஒருவருக்குத் தான் வழிபாடு அல்லது பூஜை நடைபெற வேண்டும். அது சதோபிரதான பூஜையாகும். ஞானம், பக்தி மற்றும் வைராக்கியம் என்பதும் புரிய வைக்கப்பட்டிருக்கிறது. சத்கதிக்காக தந்தை ஞானம் கொடுக்கின்றார். ஜீவன்முக்திதாமத்திற்குத் தான் சத்கதி என்று கூறப்படுகிறது. இதை ஆத்மா புத்தியில் தாரணை செய்ய வேண்டும். நமது வீடு சாந்திதாமம் ஆகும். அது முக்திதாமம், நிர்வாணதாமம் என்றும் கூறப்படுகிறது. அனைத்தையும் விட மிக நல்ல பெயர் – சாந்திதாமம் ஆகும். இங்கு கர்மேந்திரியங்கள் இருக்கின்ற காரணத்தினால் ஆத்மா பேச்சுக்களில் (டாக்கி) வந்து விட்டது, பேச வேண்டியிருக்கிறது. சூட்சுமவதனத்தில் சைகைகள் இருக்கும். சைகைகளினால் பேசிக் கொள்வர், சப்தங்கள் இருக்காது. மூன்று லோகங்களையும் நீங்கள் அறிந்து கொண்டீர்கள். மூலவதனம், சூட்சுமவதனம், ஸ்தூலவதனம், புத்தியில் இது நன்றாக அமர்ந்திருக்கிறது. இந்த சிருஷ்டிச் சக்கரம் சுற்றிக் கொண்டே இருக்கிறது என்று மனித சிருஷ்டிக்காகத் தான் பாடப்பட்டிருக்கிறது. இது தான் உலக சரித்திர, பூகோளம் என்று கூறப்படுகிறது. இதை மனிதர்கள் தான் அறிந்து கொள்வார்கள் அல்லவா! உலக சரித்திர, பூகோளத்தை கூறுகின்றனர். உயர்ந்ததிலும் உயர்ந்தவர் தந்தை ஆவார். உலக சரித்திர, பூகோளம் எவ்வாறு திரும்பவும் நடைபெறுகிறது என்பதை அவர் மட்டுமே அறிவார். இந்த சக்கரத்தை அறிந்து கொள்வதன் மூலம் நீங்கள் சக்கரவர்த்தி ராஜாவாக ஆகிறீர்கள். தேவதைகள் சம்பூர்ண நிர்விகாரிகள் என்று பாடவும் செய்கின்றனர். லெட்சுமி நாராயணனின் சிலை இருக்கிறது அல்லவா! அவர்கள் சம்பூர்ன நிர்விகாரி என்றும் தன்னை சம்பூர்ண விகாரி என்றும் கூறிக் கொள்கின்றனர். சத்யுகத்தில் சம்பூர்ண நிர்விகாரிகள் அதாவது சம்பூர்ண பாவனமாக இருந்தனர். கலியுகத்தில் சம்பூர்ண விகாரிகள், முற்றிலும் தூய்மை இழந்தவர்கள். பாரதத்திற்கான விசயமாகும். இதை தந்தை வந்து தான் புத்தியில் அமர்த்துகின்றார், வேறு யாரும் அறியவில்லை. அவர்கள் சத்யுகத்திற்கு நீண்ட காலம் கொடுத்து விட்டனர். இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு சத்யுகம் இருந்தது என்று நினைக்கின்றனர். ஆக யாருடைய புத்தியிலும் இந்த விசயம் வருவதே கிடையாது.இப்போது நாம் சம்பூர்ண விகாரியிலிருந்து சம்பூர்ண நிர்விகாரிகளாக ஆகிக் கொண்டிருக்கிறோம் என்பதை இப்போது குழந்தைகள் அறிவீர்கள். சம்பூர்ண பதீதத்திலிருந்து சம்பூர்ண பாவனமாக ஆக வேண்டும். ஆத்மாவில் தான் கறை படிந்திருக்கிறது, தங்க யுகத்திலிருந்து இப்போது இரும்பு யுகத்திற்கு வந்து விட்டது என்பதை தந்தை புரிய வைக்கின்றார். இவ்வாறு ஆத்மாவைத் தான் ஒப்பிடப்படுகிறது. இதை நல்ல முறையில் புரிந்து கொள்ள வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள், உங்களைப் போன்ற அதிர்ஷ்டசாலி கள் வேறு யாரும் கிடையாது. இப்போது நீங்கள் இராஜ யோகத்தில் அமர்ந்திருக்கிறீர்கள், நீங்கள் இராஜ ரிஷியாக இருக்கிறீர்கள். இராஜ்யத்திற்கென ஏதாவது படிப்பு இருக்கிறதா என்ன? வக்கீலாக ஆக்குவார்கள், ஆனால் உலகிற்கு மகாராஜாவாக யாரும் யார் ஆக்குவார்கள்? தந்தையைத் தவிர வேறு யாரும் ஆக்க முடியாது. இங்கு மகாராஜாவாக கிடையாது. சத்யுகத்திற்கு அவசியம் தேவை. அதற்காக அவசியம் வர வேண்டியிருக்கிறது. எப்போது பக்தி முடிவடைகிறதோ அப்போது நான் வருகிறேன் என்று தந்தை கூறுகின்றார். இப்போது பக்தி முடிவடைந்து விட்டது, இதில் வேறு எந்த சந்தேகமும் கிடையாது. எனக்கு தந்தை அமர்ந்து கற்பிக்கின்றார் என்ற போதை இருக்க வேண்டும். ஆத்மாக்களாகிய நமக்கு நிராகார தந்தை பரம்பிதா பரமாத்மா சிவன் கற்பிக்கின்றார். சிவனை யாரும் அறியவில்லை. இப்போது பாபா மீண்டும் சொர்க்கத்தின் இராஜ்யத்தை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கின்றார் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். நாம் அவரை மகாராஜா ஸ்ரீநாராயணன் என்றும், மகாராணி ஸ்ரீலெட்சுமி என்றும் கூறுகிறோம். பக்தி மார்க்கத்தில் சத்திய நாராயணனின் கதை கூறுகின்றனர். அமரக் கதை மற்றும் மூன்றாம் கண் உருவாக்கும் கதை. தந்தை மூன்றாவது கண் கொடுக்கின்றார். நரனிலிருந்து நாராயணன் ஆகக் கூடிய கதை கூறப்படுகிறது. எந்த விசயம் கடந்து முடிந்ததோ அதுவே பிறகு பக்தி மார்க்கத்தில் காரியத்திற்குப் பயன்படுகிறது. பாபா நம்மை சொர்க்கத்திற்கு எஜமானர்களாக ஆக்குகின்றார் என்பதை இப்போது குழந்தைகளாகிய நீங்கள் புரிந்திருக்கிறீர்கள். நாம் உரிமையுள்ளவர்கள். பகவான் சொர்க்கத்தைப் படைப்பவர் அல்லவா! நாம் பகவானின் குழந்தைகள் எனில் நாம் ஏன் சொர்க்கத்தில் இல்லாமல் இந்த கலியுகத்தில் இருக்கிறோம்? பரம்பிதா பரமாத்மா புது உலகை படைக்கின்றார். பகவான் பழைய உலகை படைப்பது கிடையாது. முதலில் புது உலகை படைக்கின்றார். அதன் பிறகு பழையதை அழித்து விடுவார். நாம் சத்யுகத்திற்கான இராஜ்யத்தை அடைந்து கொண்டிருக்கிறோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். சத்யுகத்தில் யார் இருப்பார்கள்? இந்த லெட்சுமி நாராயணனின் இராஜ்யம் இருக்கும், மற்ற அரசர்களும் இருப்பார்கள் அல்லவா! அதன் அடையாளம் தான் வெற்றி மாலை ஆகும். இப்போது நாம் வெற்றி மாலையில் வருவதற்கான முயற்சி செய்து கொண்டிருக்கிறோம் என்பதை குழந்தைகள் அறிவீர்கள். மாலை, இதன் பொருளை உலகில் யாரும் அறியவில்லை, இது ஏன் பூஜிக்கப்படுகிறது? மேலே மலராக இருப்பது யார்? மாலை உருட்டிய பிறகு மலரை வணங்குகின்றனர், பிறகு மீண்டும் மாலை உருட்டுவர். வெளியில் மனம் சென்று விடக் கூடாது என்பதற்காக அமர்ந்து மாலை உருட்டுகின்றனர். உள்ளுக்குள் ராம், ராம் என்று உச்சரித்துக் கொண்டே இருப்பர், அதிக பயிற்சி செய்கின்றனர். இவை அனைத்தும் பக்தி மார்க்கத்தின் விசயமாகும். அதிக பக்தி செய்பவர்கள் எந்த விகர்மமும் செய்யமாட்டார்கள். இவர் சத்தியமானவர் என்று அதிக பக்தி செய்பவர்களை நினைப்பர். கோயிலில் மாலை வைத்திருப்பர். மாலை உருட்டிக் கொண்டும் வாயில் ராம், ராம் என்று கூறிக் கொண்டும் இருப்பர். பக்தியில் பாவம் இருக்காது என்று பலர் நினைக்கின்றனர். தீவிர பக்தியின் மூலம் மனிதர்கள் முக்தி அடைந்து விடுவர் என்று கூறுகின்றனர். ஆனால் எதுவும் ஏற்படுவது கிடையாது. இது ஒரு நாடகமாகும். இதில் சதோ பிரதானம், சதோ, ரஜோ, தமோவில் அனைவரும் வந்தே ஆக வேண்டும். திரும்பி ஒருவரும் சென்று விட முடியாது. எவ்வாறு மேலே இடம் காலியாகி விடுமோ அதே போன்று இங்கும் அதிக இடம் காலியாகி விடும். டில்லி மற்றும் அதன் அருகாமையில் இனிமையான நீரோடும் நதிக்கரையில் இராஜ்யம் இருக்கும். கடற்கரையில் இருக்காது. இந்த மும்பை இருக்காது. அது முன்பு மீன் பிடிக்கும் இடமாக இருந்தது. மீன் பிடிப்பவர்கள் அங்கு வாழ்ந்தனர். இப்போது சமுத்திரத்தை அதிகம் வற்ற வைத்து விட்டனர். மீண்டும் மீன் பிடிக்கும் இடமாக ஆகிவிடும். சத்யுகத்தில் மும்பை இருக்காது. அங்கு மலைகளும் இருக்காது. எங்கும் செல்ல வேண்டிய அவசியமே இருக்காது. இங்கு மனிதர்கள் களைப்படைவதால் ஓய்வெடுப்பதற்குச் செல்கின்றனர். சத்யுகத்தில் களைப்பு ஏற்படுத்தும் எந்த வகையான கஷ்டமும் இருக்காது. நீங்கள் சொர்க்கவாசிகளாக ஆகிவிடுவீர்கள். துளியளவும் கஷ்டம் இருக்காது. ஆக குழந்தைகள் இப்போது தந்தையின் ஸ்ரீமத் படி நடக்க வேண்டும்,தந்தை கூறுகின்றார் - இனிமையான செல்லக் குழந்தைகளே! சரீர நிர்வாகத்திற்காக தொழில் போன்றவைகள் செய்ய வேண்டும். பள்ளியில் மாணவர்கள் படித்து விட்டு பிறகு வீட்டிற்குச் சென்றும் படிப்பார்கள். வீட்டு வேலைகளும் செய்வார்கள். இங்கும் அவ்வாறே இருக்கிறது. இந்த படிப்பில் உங்களுக்கு எந்த கஷ்டமும் கிடையாது. அந்த படிப்பில் உங்களுக்கு எத்தனையோ பாடங்கள் இருக்கின்றன! இங்கு ஒரே ஒரு படிப்பு மற்றும் ஒரே ஒரு கருத்து - மன்மனாபவ. இதன் மூலம் உங்களது பாவங்கள் அழிந்து விடும். பகவானின் மகாவாக்கியம் அல்லவா! கீதையை பகவான் துவாபர யுகத்தில் கூறியதாக அவர்கள் நினைக்கின்றனர். ஆனால் துவாபர யுகத்தில் கூறி என்ன செய்வார்? கிருஷ்ணரின் சித்திரத்தில் மிக நன்றாக எழுதப்பட்டிருக்கிறது. இந்த யுத்தம் ஒரு காரண கருவியாகப் பயன்படுகிறது. அனைவரும் இறந்து விடுவார்கள், அப்போது தான் முக்தி, ஜீவன் முக்திக்கு திரும்பிச் செல்வார்கள். அதுவும் யுத்தத்தில் இறந்து விடமாட்டார்கள். பல வகையான சீற்றங்கள் ஏற்படும். குழந்தைகளுக்கு எந்த வகையான துக்கமும் ஏற்படக் கூடாது. மனிதர்களுக்கு இதயம் நின்று விட்டால் அதில் எந்த துக்கமும் ஏற்படுவது கிடையாது, இறப்பு என்றால் இவ்வாறு இருக்க வேண்டும். அமர்ந்திருக்கும் போதே இதயம் நின்று விடுகிறது, இறந்து விடுகின்றனர். மருத்துவர் வருவதற்குள் ஆத்மா வெளியேறி விடுகிறது. இப்போது அனைவருக்கும் மரணம் ஏற்பட வேண்டும். கடைசியில் இதயக் கோளாறும் இருக்காது, மருத்துவர்களும் இருக்கமாட்டார்கள். இறுதிச் சடங்கு செய்பவர்களும் இருக்க மாட்டார்கள். எதுவும் இருக்காது. அனைவரின் உயிரும் உடலிலிருந்து போய் விடும். அடை மழை பெய்யும். மரணம் நிகழ்வதற்கு தாமதம் எற்படாது. மனிதர்கள் உடனேயே இறந்து விடுமளவிற்கு அணுகுண்டுகளை தயாரிப்பதற்கான முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர். இப்படிப்பட்ட அணுகுண்டுகளை தயாரித்துக் கொண்டிருக்கின்றனர். அணுகுண்டுகள் தயாரிப்பதிலும் முன்னேற்றம் அடைந்து கொண்டிருக்கின்றனர். இது நாடகத்தில் பதிவாகியிருக்கிறது. நாடகம் ஏற்கெனவே உருவாக்கப்பட்ட விளையாட்டாகும். கல்ப கல்பமாக விநாசம் ஏற்படுகிறது. சத்யுகத்தில் உங்களிடம் இந்த ஞானம் இருக்காது. தந்தை வந்து தான் ஞானம் கொடுக்க வேண்டியிருக்கிறது. ஸ்தாபனை ஆகிவிட்டால் பிறகு ஞானத்தின் அவசியம் இருக்காது. பிறகு எப்போது இராவண இராஜ்யம் ஆரம்பமாகிறதோ அப்போது பக்தி ஆரம்பமாகி விடுகிறது. இப்போது பக்தி முடிவடைகிறது, இப்போது நீங்கள் யோக பலத்தின் மூலம் தூய்மையானவர்களாக ஆக வேண்டும். தூய்மை ஆவதன் மூலம் தான் நீங்கள் சுகமதாமம், சாந்திதாமத்திற்குச் செல்ல முடியும். சார்ட் வைக்க வேண்டும். நாம் தந்தையை நினைவு செய்து தமோபிரதானத்திலிருந்து சதோ பிரதானமாக இங்கேயே ஆக வேண்டும் என்பதை புரிந்து கொண்டீர்கள். இவ்வாறு எந்த சாஸ்திரங்களிலும் எழுதப்படவில்லை. கடைசியில் அந்த நாள் வந்து விட்டது ....... என்ற பாடலையும் கேட்டீர்கள். பாரதவாசிகள் இராஜாவிற்கெல்லாம் இராஜவாக ஆகின்றனர். இராஜாவிற்கெல்லாம் இராஜா என்றால் மகாராஜா ஆவதாகும். பிறகு திரேதாவில் இராஜா, இராணி ஆகின்றனர். பிறகு பூஜ்ய நிலையிலிருந்த மகாராஜா, மகாராணி, துவாபார யுகத்தில் விகார மார்க்கத்தில் வந்து பூஜாரிகளாக ஆகிவிடுகின்றனர். நீங்களே பூஜிக்கத் தகுந்த நிலையிலிருந்து பூஜாரிகளாக ஆகிவிடுகிறீர்கள். நான் பூஜாரியாக ஆவது கிடையாது என்று தந்தை கூறுகின்றார். தேவதைகள் பூஜைக்குரியவர்களாக இருப்பர், நான் ஆவது கிடையாது. பூஜாரியாக ஆவதும் கிடையாது. பாரதவாசிகள் தேவி தேவதைகளின் கோயில் கட்டி அவர்களை பூஜிக்கின்றனர். முதலில் பூஜைக்குரியவர்களாக இருந்த லெட்மி நாராயணன், பிறகு பக்தி மார்க்கத்தில் அவர்களே சிவபாபாவின் பூஜாரிகளாக ஆகின்றனர். எந்த சிவபாபா மகாராஜா, மகாராணியாக ஆக்கினாரோ, அவருக்கு கோயில் கட்டி பூஜை செய்கின்றனர். விகாரிகளாக உடனேயே யாரும் ஆவது கிடையாது. சிறிது சிறிதாக ஆகின்றனர். அடையாளமாக தேவதைகளை விகார மார்க்கத்தில் இருப்பதாக காண்பிக்கின்றனர். யார் பூஜைக்குரிய லெட்சுமி நாராயணனாக இருந்தார்களோ, அவர்களே பிறகு பூஜாரிகளாக ஆகிவிடுகின்றனர். முதன் முதலில் சிவன் கோயில் கட்டினர். அந்த நேரத்தில் பூஜைக்காக வைரத்தால் ஆன லிங்கம் உருவாக்கினர். பரமாத்மா சிறிய பிந்துவாக இருக்கின்றார் என்பது யாருக்கும் தெரியாது. பெரிய லிங்கம் கிடையாது என்பதை இப்போது நீங்கள் புரிந்து கொண்டீர்கள். அதிக கோயில்கள் கட்டுவார்கள். இராஜாவைப் பார்த்து பிரஜைகளும் அவ்வாறு செய்வர். முதன் முதலில் சிவபாபாவிற்கு பூஜை நடைபெறுகிறது. அது தான் கலப்படமற்ற, சதோபிரதான பூஜை என்று கூறப்படுகிறது. பிறகு சதோ, ரஜோ, தமோவாக ஆகிறது. நீங்கள் ரஜோ, தமோவில் வருகின்ற போது இந்து என்று பெயர் வைத்துக் கொண்டீர்கள். உண்மையில் தேவி தேவதைகளாக இருந்தீதர்கள். நீங்கள் உண்மையில் தேவி தேவதா தர்மத்தினர்கள் என்று தந்தை கூறுகின்றார். ஆனால் நீங்கள் மிகவும் தூய்மையற்றவர்களாக ஆகிவிட்டீர்கள். ஆகையால் தன்னை தேவதை என்று கூறிக் கொள்ள முடிவது கிடையாது, ஏனெனில் அசுத்தமானவர்களாக இருக்கிறீர்கள். இந்து என்ற பெயரும் வெகு காலம் கழித்து வைத்துக் கொண்டீர்கள்.நாம் தான் பூஜைக்குரியவர்களாக இருந்தோம், இப்போது சங்கமயுகத்தில் பூஜைக்குரியவர்களாகவும் கிடையாது, பூஜாரிகளாகவும் கிடையாது என்பதை இப்போது நீங்கள் புரிந்து கொண்டீர்கள். நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? ஸ்ரீமத் மூலம் பூஜைக்குரியவர்களாக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள், மற்றவர்களையும் ஆக்கிக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் பிராமணர்கள், உங்களது ஆத்மா தூய்மையாக ஆகிக் கொண்டிருக்கிறது. முழு தூய்மையாக ஆகின்ற போது பிறகு இந்த பழைய ஆடையை நீக்க வேண்டியிருக்கும். முற்றிலும் எளிது என்று தந்தை கூறுகின்றார். வயோதிக தாய்மார்களுக்கு தாரணை ஏற்படுவது கிடையாது. நான் ஆத்மா என்பதை புரிந்து கொண்டீர்கள், ஆத்மாவில் தான் நல்லது அல்லது கெட்ட சம்ஸ்காரம் இருக்கிறது என்று தந்தை கூறுகின்றார். ஆத்மா என்ன காரியம் செய்கிறதோ அதை அடுத்த பிறவியில் அனுபவிக்க வேண்டி யிருக்கும். தந்தையும் ஆத்மாக்களிடம் உரையாடல் செய்கின்றார். தந்தை கூறுகின்றார் - ஹே குழந்தைகளே! ஆத்ம அபிமானிகளாக ஆகுங்கள். நிராகார சிவபாபா நிராகார ஆத்மாக்களுக்குக் கற்பிக்கின்றார். நிராகார பாபாவிடம் ஞான சம்ஸ்காரம் இருக்கிறது. அவருக்கு சரீரம் கிடையவே கிடையாது. ஆக அவர் ஞானக் கடலாக, பதீத பாவனாக இருக்கின்றார். அவரிடத்தில் அனைத்து குணங்களும் உள்ளன. நான் வந்து குழந்தை களாகிய உங்களை தூய்மை ஆக்குகிறேன் என்று தந்தை கூறுகின்றார். எவ்வளவு எளிய யுக்தியாகும்! ஒரே ஒரு வார்த்தை தான் - மன்மனாபவ, என் ஒருவனை நினைவு செய்யுங்கள். நினைவின் மூலம் தான் உங்களது விகர்மங்கள் அழிந்து போகும். இப்போது நாம் பிராமணர்களாக இருக்கிறோம், பிறகு சூரியவம்சி, சந்திரவம்சி, வைஷ்யா, சூத்ரர்களாக ஆவோம் என்பதையும் அறிவீர்கள். நாம் தான் இந்த 84 பிறவிச் சக்கரத்தில் வருவோம். மேலிருந்து கீழே இறங்குவோம், பிறகு பாபா வருவார். இந்த சிருஷ்டிச் சக்கரம் சுற்றிக் கொண்டே இருக்கும். இந்த சிருஷ்டி பழையதாக ஆகின்ற போது புதிதாக்குவதற்காக பாபா வருவார். இது புத்தியில் பதிகிறது அல்லவா! இந்த சக்கரம் புத்தியில் சுற்றிக் கொண்டே இருக்க வேண்டும். இப்போது நீங்கள் சுயதரிசன சக்கரதாரிகளாக ஆகிறீர்கள். இதன் மூலம் நீங்கள் சென்று சக்கரவர்த்தி இராஜவாக ஆவீர்கள். நல்லது.இனிமையிலும் இனிமையான, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாய் தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.தாரணைக்கான முக்கிய சாரம்:

1) ஸ்ரீமத்-படி நடந்து பூஜைக்குரியவர்களாக ஆக வேண்டும். ஆத்மாவில் பதிந்திருக்கும் கெட்ட சம்ஸ்காரத்தை ஞான, யோகத்தின் மூலம் அழித்து விட வேண்டும். சம்பூர்ண நிர்விகாரிகளாக ஆக வேண்டும்.2) சரீர நிர்வாகத்திற்காக காரியங்கள் செய்தாலும் படிப்பு படிக்க வேண்டும் மற்றும் கற்றுக் கொடுக்கவும் வேண்டும். யோக பலத்தின் மூலம் தூய்மையானவராகி இராஜ்ய பதவி அடைய வேண்டும்.வரதானம்:

புத்தி என்ற கால் மூலம் இந்த ஐந்து தத்துவங்களின் கவர்ச்சிகளிலிருந்து விலகியிருக்கக் கூடிய ஃபரிஸ்தா சொரூபம் ஆகுக.ஃபரிஸ்தாவை எப்போதும் பிராகாசமான (ஒளி) உடலுடன் தான் காண்பிப்பர். பிரகாசமான உடலுடையவர்கள் இந்த தேகம் என்ற நினைவிலிருந்தும் விலகியிருப்பார்கள். அவர்களது புத்தி என்ற கால் இந்த ஐந்து தத்துவங்களின் கவர்ச்சிகளிலிருந்து விலகி அதாவது உயரத்தில் இருப்பர். இப்படிப்பட்ட பரிஸ்தாக்களை எந்த ஒரு மாயையோ அல்லது மாயாவியோ தொடவும் முடியாது. ஆனால் இவ்வாறு ஆக வேண்டுமெனில் எதற்கும் அடிமையாக இருக்கக் கூடாது. சரீரத்திற்கும் அதிகாரியாக இருந்து நடந்து கொள்ள வேண்டும், மாயைக்கும் அதிகாரியாக ஆக வேண்டும், லௌகீகம் அல்லது அலௌகீக சம்மந்தங்களுக்கும் அடிமையாக ஆகிவிடக் கூடாது.சுலோகன்:

உடலை பார்க்கும் பழக்கம் இருந்தால் ஒளி உடலைப் பாருங்கள், ஒளி ரூபத்தில் நிலைத்திருங்கள்.***OM SHANTI***

Whatsapp Button works on Mobile Device only