05 July 2016

BK Murli 5 July 2016 Tamil

BK Murli 5 July 2016 Tamil

05.07.2016    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


இனிமையான குழந்தைகளே! குழந்தைகள் பெரியவர்களான பிறகு நமக்கு சேவை செய்வார்கள் என்ற பேராசை கூட சிவபாபாவிற்கு கிடையாது. அவர் ஒரு பொழுதும் முதியவர் ஆவதில்லை. தந்தை இருப்பதே பலனை எதிர்பாராத சேவாதாரியாக.கேள்வி:

கள்ளம் கபடமற்ற (போலாநாத்) சிவபாபா குழந்தைகளாகிய நம் அனைவரின் மிகப் பெரிய வாடிக்கையாளர் ஆவார் - எப்படி?பதில்:

பாபா கூறுகிறார், நான் எவ்வளவு கள்ளம் கபடமற்ற வாடிக்கையாளர் என்றால், உங்களுடைய எல்லா பழைய பொருட்களையும் வாங்கிக் கொண்டு விடுகிறேன். அதற்குப் பதிலாக எல்லா புதுப் புது பொருட்களையும் கொடுக்கிறேன். பாபா இந்த உடல், மனம், பொருள் எல்லாமே உங்களுடையது என்று நீங்கள் கூறுகிறீர்கள். பின் அதற்குக் கைமாறாக உங்களுக்கு அழகான உடல் கிடைத்து விடுகிறது. அளவற்ற செல்வம் கிடைத்து விடுகிறது.பாடல்:

போலாநாத்தைத் தவிர அலாதியானவர்..ஓம் சாந்தி.

இது பக்தி மார்க்கத்தில் பாடல் பாடுகிறார்கள். பாடல்கள் அனைத்துமே பக்தி மார்க்கத்தினுடையவை. அவற்றினுடைய பொருளையும் தந்தை புரிய வைக்கிறார். போலாநாத் என்று யாருக்கு கூறப்படுகிறது என்பதை குழந்தைகளும் புரிந்து கொண்டு விடுகிறார்கள். தேவதைகளுக்கு போலாநாத் என்று கூறமாட்டார்கள். குசேலர் இரண்டு பிடி அரிசி கொடுத்தவுடன் அரண்மனை கிடைத்து விட்டது என்று பாடப்பட்டுள்ளது. அதுக் கூட எவ்வளவு காலத்திற்காக? 21 பிறவிகளுக்காக. தந்தை வந்து பாரதவாசிகளுக்கு உண்மையில் வைரம், வைடூரியங் களின் மாளிகை அளிக்கிறார் என்பதை இப்பொழுது குழந்தைகள் புரிந்துள்ளார்கள். எதற்குப் பதிலாக அளிக்கிறார்? பாபா இந்த உடல், மனம், பொருள் அனைத்தும் உங்களுடையது என்று குழந்தைகள் கூறுகிறார்கள். உங்களால் தான் கொடுக்கப்பட்டவையாகும். யாருக்காவது குழந்தை பிறந்தது என்றால் பகவான் அளித்தார் என்கிறார்கள். பணத்திற்காகாவும் கூட பகவான் கொடுத்தார் என்பார்கள். கூறுவது யார்? ஆத்மா! பகவான் அதாவது தந்தை அளித்தார். இப்பொழுது நீங்கள் எல்லாமே கொடுக்க வேண்டியுள்ளது என்று தந்தை கூறுகிறார். அதற்குப் பதிலாக நான் உங்களுக்கு மிகவும் அழகான உடலை டிரான்ஸ்ஃபர் செய்து விடுவேன். அளவற்ற செல்வம் கொடுப்பேன். ஆனால் யாருக்குக் கொடுப்பேன்? அவசியம் குழந்தைகளுக்குத் தான் கொடுப்பேன். லௌகீக தந்தையிடமிருந்து அற்ப காலத்திற்குச் செல்வம் கிடைக்கிறது. செல்வம் இருக்கிறது என்றால் சுகம் இருக்கிறது. பணம் இல்லை என்றால் மனிதர்கள் எவ்வளவு வருத்தம் அடைகிறார்கள்! பாபா நமக்கு ஏராளமான செல்வம் அளிக்கிறார் என்பதை குழந்தைகள் அறிந்துள்ளார்கள். எனவே, மகிழ்ச்சி ஏற்படுகிறது. சுகதாமத்தில் சுகத்திற்கு எந்த ஒரு குறைவும் இருக்காது. ஒவ்வொருவருக்கும் அவரவர் இராஜதானி இருக்கும். அதற்கு தூய்மையான கிரஹஸ்த ஆசிரமம் என்று கூறப்படுகிறது. எனவே, தந்தை எவ்வளவு கள்ளம் கபடமற்றவர். என்ன பெறுகிறார் மற்றும் என்ன கொடுக்கிறார்? தந்தை எவ்வளவு நல்ல வாடிக்கையாளர் ஆவார்? அப்படியும் தந்தை குழந்தை களினுடைய வாடிக்கையாளர் தான் ஆவார். குழந்தை பிறந்த உடனேயே எல்லா சொத்தும் அவருடையதாகி விடுகிறது. அவர்கள் எல்லைக்குட்பட்ட வாடிக்கையாளர்கள் ஆவார்கள். இவர் எல்லையில்லாத போலாநாத் ஆவார். எல்லையில்லாத குழந்தைகளின் வாடிக்கையாளர். நான் பரந்தாமத்திலிருந்து வந்துள்ளேன் என்று தந்தை கூறுகிறார். பழையது அனைத்தையும் உங்களிடமிருந்து பெற்றுக் கொண்டு புது உலகத்தில் உங்களுக்கு எல்லாமே கொடுத்து விடுகிறேன். எனவே வள்ளல் என்று கூறப்படுகிறது. வள்ளல் கூட இவர் போல வேறு யாருமில்லை. பலன் எதிர்பாராத சேவை செய்கிறார். நான் பலன் எதிர்பாராதவன் ஆவேன் என்று தந்தை கூறுகிறார். எனக்கு எந்தவிதமான பேராசையும் இல்லை. வயோதிகரான தந்தையைப் பராமரிப்பது குழந்தைளுடைய வேலையாகும். ஏனெனில், நான் ஒன்றும் உங்களை பராமரித்தேன் என்று கூறுவதில்லை. தந்தை முதியவராகும் பொழுது குழந்தைகள் அவரைப் பராமரிக்க வேண்டும் என்று நியமம் இருக்கிறது. இந்த தந்தை எப்பொழுதும் முதியவர் ஆவதில்லை. எப்பொழுதும் இளமையாக இருக்கிறார். ஆத்மா ஒரு பொழுதும் முதுமை அடைவதில்லை. நாம் வயோதிகர் ஆகி விட்டால் குழந்தைகள் நமக்கு சேவை செய்வார்கள் என்று லௌகீக தந்தை குழந்தை களிடம் நம்பிக்கை வைக்கிறார் என்பதை அறிந்துள்ளீர்கள். எல்லாமே குழந்தைகளுக்கு கொடுத்து விடுகிறார்கள் என்றாலும் கூட பிறகும் சேவை ஆகிறது. நான் இருப்பதே அபோக்தா (எதையும் அநுபவிக்காதவர்) என்று இந்த சிவபாபா கூறுகிறார். நான் ஒரு பொழுதும் சாப்பிடுவதே இல்லை. நான் வருவதே குழந்தைகளுக்கு ஞானத்தை அளிக்க மட்டுமே. பரம ஆத்மா ஆத்மாக்களுக்கு வந்து புரிய வைக்கிறார். ஆத்மா தான் கேட்கிறது. ஒவ்வொரு விஷயமும் ஆத்மா தான் செய்கிறது. சம்ஸ்காரத்தைக் கூட ஆத்மா எடுத்துக் கொண்டு செல்கிறது. அதனுடைய ஆதாரத்தில் உடல் கிடைக்கிறது. இங்கு மனிதர்களின் அநேக வழிகள் உள்ளன. ஒரு சிலர் ஆத்மா தான் பரமாத்மா என்பார்கள். அதன் மீது எதுவும் பதிவுகள் ஏற்படுவதில்லை என்பார்கள். ஆத்மா நிர்லேப் பதிவுகளற்றது என்று கூறி விடுகிறார்கள். ஒரு வேளை ஆத்மா பதிவுகளற்றது என்றால் பின் ஏன் பாவ ஆத்மா, புண்ணிய ஆத்மா என்கிறார்கள்? ஆத்மா பதிவுகளற்றது என்றால் பின் பாவ சரீரம், புண்ணிய சரீரம் என்று கூறலாமே? அனைத்து ஆத்மாக்களின் ஆன்மீகத் தந்தை, ஆத்மாக்களாகிய நமக்கு இந்த சரீரத்தின் மூலமாக கற்பித்துக் கொண்டிருக்கிறார் என்பதை இப்பொழுது நீங்கள் அறிந்துள்ளீர்கள். ஆத்மாவை அழைக்கவும் செய்கிறார்கள் அல்லவா? என்னுடைய தந்தையின் ஆத்மா வந்தது, ருசி பார்த்தது என்று கூறுகிறார்கள். ஆத்மா தான் சுவைக்கிறது. தந்தை இப்படி கூற மாட்டார். அவர் அபோக்தா (எதையும் அனுபவிக்காதவர்). பிராமணர்களுக்கு உணவூட்டுகிறார்கள். ஆத்மா வருகிறது. எங்காவது வீற்றிருக்கக் கூடும். பிராமணர்கள் ஆகியோருக்கு உணவூட்டுவது பாரதத்தில் சாதாரண விஷயமாகும். ஆத்மாவை அழைக்கிறார்கள். அதனிடம் கேட்கும் பொழுது அவர் கூறும் நிறைய விஷயங்கள் உண்மையாகவும் வெளிப்படுகின்றது. இந்த பித்ருக்கள் ஆகியோருக்கு படைப்பது - இதுக் கூட நாடகத்தில் பொருந்தியுள்ளது. இதில் ஒன்றும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. தந்தை சுருக்கமாக நாடகத்தின் இரகசியத்தைக் கூறுகிறார். விளக்கமாக அந்த அளவிற்கு நாடகத்தின் விளக்கவுரையை அளிக்க முடியாது. பின் ஒவ்வொருவருடைய விளக்கவுரையிலேயே வருடங்கள் ஆகி விடும். குழந்தைகளாகிய உங்ளுக்கு மிகவும் சுலபமான அறிவுரை கிடைக்கிறது. ஹே பதீத பாவனரே வாருங்கள், வந்து எங்களை பாவனமாக ஆக்குங்கள் என்று பாடவும் செய்கிறார்கள். அவருடைய பெயரே பதீத பாவனர் என்பதாகும். பிரம்மா, விஷ்ணு, சங்கரனுக்கு பதீத பாவனர் என்று கூற முடியாது. தந்தைக்குத் தான் பதீத பாவனர், -பரேட்டர் என்று கூறுகிறார்கள். துக்க ஹர்த்தா, சுக கர்த்தா (துக்கத்தை நீக்கி, சுகம் அளிப்பவர்) என்றும் அவருக்குத் தான் கூறப்படுகிறது. அவர் நிராகாரமானவர் ஆவார். சிவனின் கோவிலுக்கு போய் பார்த்தீர்கள் என்றால், அங்கு லிங்கம் வைக்கப்பட்டுள்ளது. அவசியம் உயிரூட்டமாக இருந்துள்ளார். எனவே தான் பூஜை செய்கிறார்கள். இந்த தேவதைகள் கூட எப்பொழுதாவது உயிரூட்டமாக இருந்துள்ளார்கள். அதனால் தான் அவர்களுக்கும் மகிமை உள்ளது. நேரு உயிரூட்டமாக இருந்தார். அதனால் தான் அவரது புகைப்படத்தை எடுத்து மகிமை செய்கிறார்கள். யாராவது நல்ல காரியம் செய்து விட்டு செல்கிறார்கள் என்றால், அவர்களது ஜட சித்திரத்தை அமைத்து மகிமை செய்கிறார்கள். தூய்மைக்குத் தான் பூஜை செய்கிறார்கள். எந்த ஒரு மனிதனுக்கும் பூஜை செய்ய முடியாது. விகாரத்தில் பிறக்கிறார்கள் அல்லவா? எனவே அவர்களுக்கு பூஜை நடக்க முடியாது. பூஜை தேவதைகளுக்குத்தான் நடக்கிறது. அவர்கள் எப்பொழுதும் தூய்மையாக இருக்கிறார்கள். தந்தை வந்திருந்தார். இப்பொழுது மீண்டும் சங்கமத்தில் சொர்க்கத்தை ஸ்தாபனை செய்ய வந்துள்ளார் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். பின்னர் துவாபர முதல் இராவண இராஜ்யம் ஆரம்பமாகும். இராவண இராஜ்யம் ஆரம்பமான உடனே சட்டென்று சிவனின் கோவில் அமைக்கிறார்கள். இப்பொழுது உயிரூட்டமாக ஞானம் கூறிக் கொண்டிருக்கிறார். அவர் சத்தியமானவர், சைதன்யமானவர் (உயிரூட்டமானவர்). அவருக்குத் தான் மகிமை பாடுகிறார்கள் - நிராகாரமானவருக்கு சரீரம் வேண்டும் அல்லவா? எனவே தந்தை தான் வந்து உலகத்தை சொர்க்கமாக ஆக்குகிறார். அந்த சொர்க்கத்தில் ஆட்சி புரிவதற்காக நீங்கள் முயற்சி செய்துக் கொண்டிருக்கிறீர்கள். சொர்க்கவாசியாக நீங்கள் ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். நிராகார பரமபிதா பரமாத்மா ஞானக் கடல் ஆவார். ஆனால் எவ்வாறு ஞானத்தை கூறுவார்? நான் இந்த சரீரத்தில் வந்துள்ளேன் என்று கூறுகிறார். எனக்கு நாடகத்தில் இந்த பாகம் உள்ளது. நான் இயற்கையின் ஆதாரத்தை எடுக்கிறேன். முதல் நம்பரில் இருந்த இவருடையதே அநேக பிறவிகளின் கடைசியில் நான் வந்து பிரவேசம் செய்கிறேன். மேலும் இவரது பெயரை பிரம்மா என்று வைக்கிறேன். முதலில் இவர்கள் எல்லோருமே பட்டியில் இருந்தார்கள். எனவே அநேகருக்கு பெயர்கள் கொடுத்திருந்தார். ஆனால் நிறைய பேர் பிறகு விட்டு போய் விட்டார்கள். எனவே பெயர் வைப்பதால் என்ன லாபம்? நீங்கள் அந்த பெயர்களைக் கேட்டீர்கள் என்றால், ஆச்சரியப்படுவீர்கள். ஒட்டு மொத்தமாக எல்லோருக்கும் எவ்வளவு அழகான பெயர்கள் வந்தன. செய்தி எடுத்து வரும் சகோதரி (சந்ன்தஷி) பெயர்கள் எடுத்துக் கொண்டு வருவார். அந்த பட்டியல் கூட அவசியம் வைக்க வேண்டும். சந்நியாசிகள் கூட சந்நியாசம் செய்யும் பொழுது அவர்களுடைய பெயர்கள் கூட மாறி விடுகிறது. வீடு, வாசலை விட்டு விடுகிறார்கள். நீங்கள் வீடு வாசலை விடுவதில்லை. நீங்கள் வந்து பிரம்மாவினுடையவர் ஆகிறீர்கள். சிவனினுடையவர்களாக இருக்கவே இருக்கிறீர்கள். நீங்கள் கூறுவதே பாப்தாதா என்று. சந்நியாசி களினுடையது அவ்வாறு ஆவதில்லை. பெயர்கள் மாறுகிறது என்றாலும் கூட பாப்தாதா கிடைப்பதில்லை. அவர்களுக்கு குரு மட்டுமே கிடைக்கிறார். ஹடயோகி எல்லைக்குட்பட்ட சந்நியாசி, ஆனால் இராஜயோகி எல்லையில்லாதவர், சந்நியாசிகளுக்கிடையே இரவு பகலுக்கான வித்தியாசம் உள்ளது. ஞானம், பக்தி மற்றும் வைராக்கியம் என்றும் பாடப்படுகிறது. அவர்களுக்கும் வைராக்கியம் இருக்கிறது. ஆனால் அவர்களுடையது வீடு வாசல் மீது வைராக்கியம். உங்களுக்கு முழு உலகத்தின் மீது வைராக்கியம் உள்ளது. சிருஷ்டி மாறுகிறது என்று அவர்களுக்கு தெரியவே தெரியாது. உங்களுடையது எல்லையில்லாத வைராக்கியம். இந்த சிருஷ்டி முடிந்து விடப் போகிறது. உங்களுக்காக புதிய உலகம் அமைந்துக் கொண்டிருக்கிறது. அங்கு செல்ல வேண்டும். ஆனால் தூய்மை ஆகாமல் அங்கு போக முடியாது. உண்மையில் புது உலகத்தில் தேவி தேவதைகளின் இராஜ்யம் இருந்தது என்பது மனதில் பதிகிறது. அதை இப்பொழுது தந்தை ஸ்தாபனை செய்கிறார். சிவபாபாவை நினைவு செய்வதால் நாம் புண்ணிய ஆத்மா ஆகி விடுவோம் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். மிகவும் சுலபமானதாகும். ஆனால் நினைவு மறந்து விடுகிறது. பக்தி மார்க்கத்தின் பழக்க வழக்கம் முற்றிலுமே தனிப் பட்டதாகும். தங்கள் வீட்டிற்கு யாருமே திரும்பிச் செல்ல முடியாது. அனைவரும் அவசியம் மறு பிறவி எடுக்க வேண்டி உள்ளது. வீடு செல்வதற்கான நேரம் ஒன்றே தான். இன்னார் மோட்சத்தை அடைந்தார். இது பொய்யாகும். எந்த ஒரு ஆத்மாவும் இடையில் திரும்பிப் போக முடியாது என்று தந்தை கூறுகிறார். இல்லையென்றால் முழு நாடகமே கெட்டுப் போய் விடும். ஒவ்வொருவரும் சதோ, ரஜோ, தமோவில் அவசியம் வர வேண்டியுள்ளது. மோட்சத்திற்காக நிறைய பேர் வருகிறார்கள். மோட்சம் ஆவதில்லை என்று புரிய வைக்கப்படுகிறது. இது அநாதி அமைந்த அமைக்கப்பட்ட நாடகமாகும். அது ஒரு பொழுதும் மாற முடியாது. ஒரு ஈ இங்கிருந்து கடந்து சென்றது. மீண்டும் 5 ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு இவ்வாறே கடந்து செல்லும். பாபா எவ்வளவு கள்ளம் கபடமற்றவர் என்பதை அறிந்துள்ளீர்கள். பதீத பாவன தந்தை பாகத்தை ஏற்று நடிக்க தனது பரந்தாமத்திலிருந்து வருகிறார். இந்த நாடகம் எப்படி அமைக்கப்பட்டுள்ளது என்பதை அவரே புரிய வைக்கிறார். இதில் முக்கியமானவர்கள் யார் யார்? எப்படி கூறுகிறார்கள் அல்லவா? இந்த உலகத்தில் எல்லோரையும் விட பணக்காரன் யார்? அதில் வரிசைக்கிரமப்படி பெயர் வெளிப்படுத்துகிறார்கள். எல்லோரையும் விட பணக்காரர் யார் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். அவர்கள் அமெரிக்கா என்பார்கள். ஆனால் சொர்க்கத்தில் எல்லோரையும் விட செல்வந்தராக இந்த இலட்சுமி நாராயணர் ஆகிறார்கள் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். நீங்கள் வருங்காலத்திற்காக முயற்சி செய்கிறீர்கள். எல்லோரையும் விட செல்வந்தராக ஆவதற்காக முயற்சி செய்கிறீர்கள். இது பந்தயமாகும். இந்த இலட்சுமி நாராயணரைப் போல செல்வந்தராக யார் இருப்பார்கள்? அல்லாவுதீன் என்ற கதையும் அமைக்கிறார்கள். டக் என்ற உடனேயே குபேரனின் கஜானா வெளி வந்து விட்டது. நிறைய விதவிதமான நாடகங்களை எழுதுகிறார்கள். இந்த சரீரத்தை விட்டு விட்டு சொர்க்கத்திற்குச் செல்வோம் என்பது இப்பொழுது உங்கள் புத்தியில் உள்ளது. நமக்கு அளவற்ற பொக்கிஷங்கள் கிடைக்கும். என்னை நினைவு செய்வதால் மாயை ஒரேயடியாக ஓடிப் போய் விடும் என்று தந்தை கூறுகிறார். தந்தையை நினைவு செய்யவில்லை என்றால் பின் மாயை தொல்லைப்படுத்துகிறது. பாபா எங்களுக்கு மாயையின் புயல்கள் நிறைய வருகின்றது என்று கூறுகிறார்கள். நல்லது. தந்தையை மிகவும் அன்புடன் நினைவு செய்தீர்கள் என்றால் புயல்கள் பறந்து போய் விடும். மற்றபடி நாடகங்கள் ஆகியவை அமைத்துள்ளார்கள். விஷயங்கள் ஒன்றுமே இல்லை. தந்தை எவ்வளவு சுலபமாகக் கூறுகிறார் – தந்தையை நினைவு மட்டும் செய்யுங்கள் அப்பொழுது உங்களுக்குள் இருக்கும் துரு நீங்கிப் போய் விடும். வேறு எந்த கஷ்டமும் கொடுப்பதில்லை. தூய்மையான, உண்மையான தங்கமாக இருந்த ஆத்மா இப்பொழுது பொய்யாக ஆகி விட்டுள்ளது. மீண்டும் இந்த நினைவு அக்னி மூலமாக உண்மையானதாக ஆகி விடும். நெருப்பில் போடாமல் தங்கம் தூய்மையாக ஆக முடியாது. இதற்கும் யோக அக்னி என்று கூறுகிறார்கள். இருப்பது இது நினைவின் விஷயமாகும். அவர்கள் அநேகவிதமான ஹடயோகத்தைக் கற்பிக்கிறார்கள். உங்களுக்கு தந்தை எழுந்தாலும் அமர்ந்தாலும் நினைவு செய்யுங்கள் என்று கூறுகிறார். ஆசனம் ஆகியவை போட்டு எதுவரை உங்களால் அமர முடியும். இது நடந்தாலும், சென்றாலும், காரியம் செய்யும் பொழுதும் நினைவில் இருக்க வேண்டும். நோய்வாய்ப்பட்டிருந்தாலும் கூட இங்கு படுத்தபடியே தந்தையை நினைவு செய்யலாம். சிவபாபாவை நினைவு செய்யுங்கள் மற்றும் சக்கரத்தை சுற்றுங்கள். அவ்வளவே! அவர்கள் பிறகு எழுதியுள்ளார்கள் - கங்கையின் கரையிலிருக்க வேண்டும். அமிருதம் வாயில் இருக்க வேண்டும். கங்கையின் கரையிலோ கங்கா ஜலம் தான் கிடைக்கிறது. எனவே மனிதர்கள் ஹரிதுவாரத்தில் போய் அமருகிறார்கள். தந்தை கூறுகிறார் - நீங்கள் எங்கு வேண்டுமானாலும் அமருங்கள், நோய்வாய்ப்பட்டிருந்தாலும் சரி, தந்தையை நினைவு மட்டுமே செய்யுங்கள். சுயதரிசன சக்கரத்தை சுற்றிக் கொண்டே இருங்கள். அப்பொழுது உயிர் உட—ருந்து நீங்கவேண்டும். இந்த பயிற்சி செய்ய வேண்டி உள்ளது. அந்த பக்தி மார்க்கத்தின் விஷயங்கள் மற்றும் இந்த ஞான மார்க்கத்தின் விஷயங்களில் எவ்வளவு இரவு பகலுக்கான வித்தியாசம் உள்ளது. தந்தையின் நினைவினால் நீங்கள் சொர்க்கத்தின் அதிபதியாகி விடுவீர்கள். அவர்களோ போர்க்களத்தில் இறந்தால் அவர் சொர்க்கத்திற்கு சென்று விடுவார் என்று போர் புரிபவர்களுக்கு கூறுகிறார்கள். உண்மையில் யுத்தம் இது தான். அவர்கள் கௌரவர்கள் பாண்டவர்களின் சேனையைக் காண்பித்துள்ளார்கள். மகாபாரதப் போர் ஆகியது, பிறகு என்ன ஆயிற்று? ரிஸல்ட் ஒன்றுமே இல்லை. முற்றிலுமே கோரமான இருளாகும். எதுவுமே புரியாமல் உள்ளார்கள். எனவே அஞ்ஞான இருள் என்று கூறப்படுகிறது. தந்தை மீண்டும் வெளிச்சமாக ஆக்க வந்துள்ளார். அவருக்கு ஞானக்கடல், நாலேஜ்ஃபுல் என்று கூறப்படுகிறது. இப்பொழுது உங்களுக்கும் முழு ஞானம் கிடைத்துள்ளது. அது மூலவதனமாகும். அங்கு ஆத்மாக்களாகிய நீங்கள் இருக்கிறீர்கள். அதற்கு பிரம்மாண்டம் என்றும் கூறப் படுகிறது. இங்கு ருத்ர ஞான யக்ஞத்தை இயற்றுகிறார். பின் தந்தையுடன் கூடவே ஆத்மாக்களாகிய உங்களுக்கும் பூஜை செய்கிறார்கள். ஏனெனில் நீங்கள் அநேகருக்கு நன்மை செய்கிறீர்கள். தந்தையுடன் கூடவே நீங்கள் குறிப்பாக பாரதம் மற்றும் பொதுவாக உலகிற்கு ஆன்மீக சேவை செய்கிறீர்கள். எனவே தந்தையுடன் கூடவே குழந்தைகளாகிய உங்களுக்கு பூஜை நடக்கிறது. நல்லது.இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.தாரணைக்கான முக்கிய சாரம்:

1. மாயையின் புயல்களை விரட்டுவதற்காக தந்தையை மிகமிக அன்புடன் நினைவு செய்ய வேண்டும். ஆத்மாவை யோக அக்னியினால் உண்மையிலும் உண்மையான தங்கமாக ஆக்க வேண்டும்.2. எல்லையில்லாத வைராக்கியம் உடையவராக ஆகி இந்த பழைய உலகத்தை மறந்து விட வேண்டும். உலகம் மாறிக் கொண்டிருக்கிறது. புது உலகிற்குச் செல்ல வேண்டும். எனவே இதிலிருந்து சந்நியாசம் பெற்றுக் கொண்டு விடவேண்டும்.வரதானம்:

மகான் மற்றும் மெஹமான் (விருந்தாளி) - இந்த இரண்டு நினைவுகள் மூலமாக அனைத்துக் கவர்ச்சிகளிலிருந்தும் விடுபட்டவராக ஆகி விடும் விடுபட்டவர் (உபராம்) மற்றும் பார்வையாளர் (சாட்சி) ஆவீர்களாக.விடுபட்ட நிலை அல்லது பார்வையாளரின் நிலையை அடைய வேண்டும் என்றால், இரண்டு விஷயங்கள் கவனத்தில் இருக்கட்டும்: ஒன்று, நான் ஆத்மா, மகான்ஆத்மா ஆவேன். இரண்டாவது, நான் ஆத்மா, இப்பொழுது இந்த பழைய சிருஷ்டியில் மற்றும் இந்த பழைய சரீரத்தில் விருந்தாளி ஆவேன். இந்த நினைவில் இருப்பதால், இயல்பாகவும் மற்றும் எளிதாகவும் அனைத்து பலவீனங்கள் அல்லது பற்றுதல்களின் கவர்ச்சி முடிந்து போய் விடும். மகான் என்று உணர்ந்திருக்கும் பொழுது, எவரது சாதாரண செயல்கள் அல்லது சங்கல்பங்கள் மற்றும் சம்ஸ்காரங்களின் வசப்பட்டு நடக்கிறார்களோ அவை பரிவர்த்தனை (மாற்றம்) ஆகி விடும். மகான் மற்றும் மெஹ்மான் (விருந்தாளி) என்று உணர்ந்து நடப்பதால், மகிமைக்கு உரியவர் கூட ஆகி விடுவீர்கள்.சுலோகன்:

அனைவரின் சுபபாவனை மற்றும் சகயோகத்தின் (ஒத்துழைப்பு) துளி மூலமாக பெரிய காரியம் கூட சுலபமானதாக ஆகி விடும்.

 ***OM SHANTI***

Whatsapp Button works on Mobile Device only