BK Murli 7 August 2016 Tamil

BK Murli 7 August 2016 Tamil

07.08.2016  காலை முரளி   ஓம் சாந்தி  ''அவ்யக்த பாப்தாதா''  ரிவைஸ் 01.11.1981  மதுபன்

 '' சேவையின் வெற்றிக்கான சாவி ''

இன்று பாப்தாதா குழந்தைகளை எந்த ரூபத்தில் பார்த்துக் கொண்டிருக்கிறார்? இன்று உலக சேவாதாரி தந்தை தன்னுடைய சேவாதாரி குழந்தைகளை பார்த்துக் கொண்டிருக்கிறார் அதாவது தன்னுடைய இறை சேவாதாரி குழந்தைகளை பார்த்துக் கொண்டிருக்கிறார். யார் இறை சேவாதாரியாக இருக்கிறாரோ அவருக்கு எப்பொழுதும் இயல்பாகவே தந்தை மற்றும் சேவை இரண்டும் சேர்ந்தே நினைவில் இருக்கிறது. பொதுவாகவே இன்றைய உலகத்தில் கூட யாராவது ஒருவருடைய காரியத்தை செய்யவில்லை மற்றும் உதவி செய்பவராக ஆகவில்லை என்றால் பகவானின் பெயரால் இந்தக் காரியம் செய்யுங்கள் என்று கூறுவார்கள். ஏனென்றால் பகவானின் பெயரால் உதவி கிடைத்து விடும் மற்றும் வெற்றியும் கிடைத்து விடும் என்று நினைக்கிறார்கள். ஏதாவது சம்பவமற்ற காரியம் மற்றம் நம்பிக்கையிழந்த விஷயம் இருக்கிறது என்றாலும் 'பகவானின் பெயரை கூறுங்கள் காரியம் நடந்து விடும்' என்று கூறுகிறார்கள். இதன் மூலம் என்ன நிரூபணம் ஆகிறது? சம்பவமற்றது சம்பவமாக அல்லது நம்பிக்கையிழந்த நிலையிலிருந்து நம்பிக்கைக்குரிய காரியத்தை தந்தை வந்து செய்தார். அதனால் தான் இன்று வரையிலும் இந்த பழமொழி நடைமுறையில் இருக்கிறது. ஆனால் நீங்கள் அனைவருமோ இறைவனின் சேவாதாரிகள் தான். நீங்கள் பகவானின் பெயரை மட்டும் சொல்பவர்கள் அல்ல ஆனால் பகவானின் துணைவர்களாகி உயர்ந்த காரியம் செய்பவர்கள். அப்படி இறை சேவாதாரி குழந்தைகளின் ஒவ்வொரு காரியத்திலும் வெற்றி நிச்சயிக்கப்பட்டது. இறை சேவாதாரிகள் செய்யும் காரியத்தில் எந்த அசம்பவ விஷயம் கிடையாது. அனைத்தும் சம்பவம் மற்றும் சுலபமானது. இறை சேவாதாரி குழந்தைகளுக்கு உலக மாற்றத்தின் காரியம் கடினமாக அனுபவம் ஆகிறதா? ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது என்று அனுபவம் ஆகிறது தான் இல்லையா? எப்பொழுதுமே இதையோ அனேக தடவைகள் செய்திருக்கிறோம் என்ற இந்த அனுபவம் தான் செய்கிறீர்கள். எதுவும் புதிய விஷயமாக அனுபவம் ஆவதில்லை. ஆகுமா, ஆகாதா, எப்படி ஆகும் என்ற இந்த கேள்வியே எழுவதில்லை. ஏனென்றால் தந்தையின் துணைவர்களாக இருக்கிறீர்கள். எப்பொழுது இன்று வரையிலும் பகவானின் பெயரை எடுப்பதினால் மட்டும் காரியம் நடந்தேறி விடுகிறது என்றால் உடன் காரியம் செய்யும் குழந்தைகளின் ஒவ்வொரு காரியத்திலும் வெற்றி நிச்சயிக்கப்பட்டது. எனவே பாப்தாதா குழந்தைகளை எப்பொழுதும் வெற்றி அடைபவர்கள் என்று கூறுகிறார். வெற்றி நட்சத்திரங்கள் தன்னுடைய வெற்றி மூலமாக உலகை ஒளிமயமாக ஆக்குபவர்கள். தன்னை எப்பொழுதுமே அந்த மாதிரி வெற்றி அடைபவர் என்று அனுபவம் செய்கிறீர்களா? ஒருவேளை நடைமுறையில் எப்பொழுதாவது வெற்றி கிடைக்காமல் அல்லது கடினம் அனுபவம் ஆகிறது என்றால் அதற்கான காரணம் சேவாதாரியாக மட்டும் ஆகிறீர்கள். இறைவனின் சேவாதாரியாக ஆவதில்லை. இறைவனை சேவையிலிருந்து பிரித்து விடுகிறீர்கள். எனவே தனியாக இருக்கும் காரணத்தினால் சுலபமானது கூட கடினம் ஆகிவிடுகிறது மற்றும் வெற்றியின் லட்சியம் மிக தூரமாக தென்படுகிறது. ஆனால் பெயரே இறைவனின் சேவாதாரிகள் என்றால் இணைந்திருப்பவரை தனியாக பிரிக்காதீர்கள். ஆனால் தனியாக பிரித்து விடுகிறீர்கள். எப்பொழுதும் இந்த பெயர் நினைவிருக்கிறது என்றால் சேவையில் இயல்பாகவே இறை மந்திரம் நிரம்பியதாக இருக்கும். சேவைக் களத்தில் தனக்காக மற்றும் சேவைக்காக விதவிதமான தடைகள் என்ன வருகின்றனவோ அதற்கான காரணமும் கூட தன்னை சேவாதாரி என்று மட்டும் நினைக்கிறீர்கள் என்பது தான். ஆனால் ஈஸ்வரிய சேவாதாரி, சேவை மட்டும் இல்லை ஆனால் இறைவனின் சேவை என்ற இந்த நினைவு மூலம் நினைவு மற்றும் சேவை இயல்பாகவே இணைந்ததாக ஆகிவிடுகிறது. நினைவு மற்றும் சேவை எப்பொழுதும் சமநிலையில் இருக்கிறது. எங்கு சமநிலை இருக்கிறதோ அங்கு சுயம் அவரே எப்பொழுதும் ஆனந்தம் நிறைந்த மற்றும் மற்றவர்களுக்காக எப்பொழுதும் பிலஸ்ஸிங்க்ஸ் அதாவது கருணை நிறைந்த பார்வை சுலபமாகவே இருக்கிறது. இவர் மேல் கருணை செய்யுங்கள் என்று யோசிப்பதற்கான அவசியமே இருக்காது. கருணை நிறைந்தவராகத் தான் இருக்கிறார். எப்பொழுதும் செய்யும் வேலையே தான் கிருபை செய்வது. அந்த மாதிரி அனாதி சம்ஸ்காரம் சொரூபமாக ஆகியிருக்கிறதா? எது விசேஷ சம்ஸ்காரமாக இருக்குமோ அது இயல்பாகவே காரியம் செய்து கொண்டே இருக்கும். யோசித்து செய்ய மாட்டார்கள் ஆனால் இயல்பாகவே நடந்து விடும். என்னுடைய சம்ஸ்காரம் அந்த மாதிரியானது எனவே அப்படி நடந்தே விட்டது என்று அடிக்கடி கூறுகிறீர்கள். என்னுடைய நோக்கம் அல்ல, என்னுடைய லட்சியம் அல்ல ஆனால் ஆகிவிட்டது. ஏன்? சம்ஸ்காரம். அந்த மாதிரி கூறுகிறீர்கள் தான் இல்லையா. நான் கோபப்படவில்லை ஆனால் நான் பேசும் சம்ஸ்காரமே அந்த மாதிரி என்று அநேகர்கள் கூறுகிறார்கள். இதன் மூலம் என்ன நிரூபணம் ஆகிறது? அற்ப காலத்து சம்ஸ்காரம் கூட இயல்பாகவே பேச்சை மற்றும் காரியத்தை செய்வித்துக் கொண்டே இருக்கிறது. அப்படியானால் அனாதி ஒரிஜினல் சம்ஸ்காரம் உயர்ந்த ஆத்மாக்கள் உங்களுடையதாக என்ன இருந்தது? எப்பொழுதும் சம்பன்னமான மற்றும் வெற்றி அடைந்தவர். எப்பொழுதும் வரம் அளிப்பவர் மற்றும் பெரும் வள்ளல். அப்படி இந்த சம்ஸ்காரம் நினைவில் இருப்பதினால் இயல்பாகவே அனைவருக்காகவும் கருணை பார்வை இருக்கிறது.அற்ப காலத்து சம்ஸ்காரங்களை அனாதி சம்ஸ்காரங்களினால் பரிவர்த்தனை செய்யுங்கள். அப்படி வரும் விதவிதமான தடைகள் அனாதி சம்ஸ்காரம் வெளிப்படுவதினால் சுலபமாகவே முடிவடைந்து விடும். பாப்தாதாவிற்கு இதுவரையிலும் கூட சுயமாற்றம் மற்றும் உலகமாற்றத்தின் சேவையில் குழந்தைகள் செய்யும் கடின உழைப்பை பார்த்து சகித்துக் கொள்ள முடிவதில்லை. இறைவனின் சேவாதாரிகளாக இருந்தும் கடின உழைப்பா? எப்படி பெயரைக் கூறியே காரியத்தை செய்விக்கிறார்கள் என்றால் நீங்களோ அதிகாரி ஆவீர்கள். உங்களுக்கு கடின உழைப்பு எப்படி இருக்க முடியும்? பிறகு சின்னஞ்சிறு தவறு செய்கிறீர்கள், என்ன தவறு செய்கிறீர்கள் என்று தெரிந்திருக்கிறீர்களா? நன்றாகவே தெரிந்தும் இருக்கிறீர்கள் பிறகு ஏன் செய்கிறீர்கள்? கட்டாயத்தில் வந்து விடுகிறீர்கள். பிறகு 'என்னுடைய சம்ஸ்காரம், என்னுடைய சுபாவம்' என்று சிறிய தவறு செய்கிறீர்கள். அனாதி காலத்திற்கு பதிலாக மத்திய காலம் என்று நினைத்து விடுகிறீர்கள். மத்திய காலத்தின் சம்ஸ்காரம் மற்றும் சுபாவத்தை என்னுடைய சம்ஸ்காரம், என்னுடைய சுபாவம் என்று புரிந்து கொள்ளும் இந்த தவறை செய்கிறீர்கள். இது இராவணனின் சுபாவம், உங்களுடையது அல்ல. மாற்றான் பொருளை தன்னுடையதாக்கும் தவறை செய்கிறீர்கள். என்னுடையது என்று கூறுவதினால் மற்றும் புரிந்து கொள்வதினால் என்னுடையது என்பதில் வளைந்து கொடுப்பது இயல்பாகவே வந்து விடுகிறது. எனவே விட விரும்பினாலும் விட முடிவதில்லை. தவறு என்ன என்று புரிந்ததா.நான் இறைவனின் சேவாதாரி என்பதை எப்பொழுதும் நினைவில் வையுங்கள். நான் செய்தேன் என்றல்லாமல் இறைவன் என் மூலமாக செய்வித்தார். இந்த ஒரு நினைவு மூலம் சுலபமாகவே அனைத்து தடைகளின் விதையை நிரந்தரமாக அழித்து விடுங்கள். அனைத்து விதமான தடைகளின் விதை இரண்டு வார்த்தைகளில் இருக்கிறது. அது என்ன இரண்டு வார்த்தைகள், அந்த வார்த்தைகளிலேயே தடை ரூபம் வருகிறது. தடை வருவதற்கான வாசலை தெரிந்திருக்கிறீர்களா? அப்படி எல்லோருக்கும் தெரிந்த அந்த இரண்டு வார்த்தைகள் எவை? விஸ்தாரமோ அதிகமாக இருக்கிறது ஆனால் இரண்டு வார்த்தைகளில் சாரம் வந்து விடுகிறது. 1) அபிமானம் மற்றும் 2) அவமானம். சேவையின் சேத்திரத்தில் விசேஷமாக தடை இந்த இரண்டு பாதைகளிலிருந்து வருகிறது. ஒன்றோ 'நான் செய்தேன்', இதில் அபிமானம் மற்றும் என்னையோ ஏன் முன்னுக்கு வைக்கவில்லை, எனக்கு ஏன் இது கூறப்பட்டது, இது எனக்கு அவமானம் கொடுக்கப்பட்டது இதே அபிமானம் மற்றும் அவமானத்தின் பாவனை விதவிதமான தடைகளின் ரூபத்தில் வந்து விடுகிறது. எப்பொழுது நீங்கள் இருப்பதே இறைவனின் சேவாதாரிகள் என்றால், செய்பவர், செய்விப்பவர் தந்தை என்றிருக்கும் போது அபிமானம் எங்கிருந்து வந்தது? மேலும் அவமானம் எங்கிருந்து ஏற்பட்டது. அப்படி மிகச் சிறிய தவறு தான் இல்லையா. எனவே இறைவனை விட்டு பிரியாதீர்கள் என்று கூறப்படுகிறது. சேவையிலும் இணைந்த ரூபத்தை நினைவில் வையுங்கள். இறைவன் மற்றும் இறை சேவை. இதைச் செய்ய தெரியாதா? மிகவும் சுலபம். கடின உழைப்பிலிருந்து விடுபட்டு விடுவீர்கள். புரிந்ததா என்ன செய்ய வேண்டும் என்று. நல்லது.அந்த மாதிரி எப்பொழுதும் அனாதி சம்ஸ்காரத்தின் நினைவு சொரூபமாக இருக்கும், எப்பொழுதும் தன்னை ஒரு கருவி என்று மட்டும் உணர்ந்து மேலும் தந்தையை செய்பவர், செய்விப்பவர் என்று அனுபவம் செய்யும், எப்பொழுதும் சுயம் அனாதி சொரூபத்தில் அதாவது ஆனந்தம் நிறைந்திருக்கும், எந்தவிதமான தடைகளின் விதையை அழிக்கக்கூடிய சக்தி நிறைந்த ஆத்மாக்களுக்கு, அந்த மாதிரி எப்பொழுதும் தந்தையின் துணைவனாக இருக்கும் ஈஸ்வரிய சேவாதாரிகளுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.அதர் குமாரர்களுடன் (இல்லறத்தில் இருக்கும் சகோதரர்களுடன்) சந்திப்பு –அனைவரும் தன்னை தந்தை மேல் அன்பு வைத்திருக்கும் மற்றும் சகயோகி உயர்ந்த ஆத்மாக்கள் என்று நினைக்கிறீர்கள் தான் இல்லையா? நான் உயர்ந்ததிலும் உயர்ந்த ஆத்மா ஏனென்றால் தந்தையுடன் என் வாழ்க்கை பங்கை செய்பவன் என்ற இந்த போதை எப்பொழுதும் இருக்கிறதா? முழுச் சக்கரத்திற்குள் இந்த நேரம் தந்தையுடன் சேர்ந்து தன்னுடைய வாழ்க்கை பங்கை செய்வதற்கான பொறுப்பாளர் ஆகியிருக்கிறீர்கள். உயர்ந்ததிலும உயர்ந்த பங்கை செய்வதற்கு பொறுப்பாளர் ஆகியிருக்கிறீர்கள். உயர்ந்ததிலும் உயர்ந்த பகவானுடன் தன் பங்கை செய்யக்கூடியவர்கள் எவ்வளவு உயர்ந்த ஆத்மாக்களாக ஆகிவிட்டார்கள். உலகத்திலும் யாராவது 05யர்ந்த பதவியில் இருப்பவருடன் சேர்ந்து வேலை செய்கிறார்கள் என்றால் அவர்களுக்கும் எவ்வளவு போதை இருக்கிறது? பிரதம மந்திரியின் தனிச்செயலாளருக்கும் எவ்வளவு போதை இருக்கிறது. ஆனால் நீங்கள் யாருடன் இருக்கிறீர்கள்? உயர்ந்ததிலும் உயர்ந்த தந்தையுடன் இருக்கிறீர்கள். மேலும் பிறகு அதிலேயும் கூட ஒரு கல்பத்திற்காக இன்றி, அனேக கல்பங்கள் இந்த பங்கை செய்திருக்கிறீர்கள் மேலும் செய்து கொண்டே இருப்பீர்கள் என்ற விசேஷமும் இருக்கிறது. இது மாற முடியாது. அந்த மாதிரி போதையில் இருந்தீர்கள் என்றால் தடையற்றவராக இருப்பீர்கள். ஏதாவது தடையோ வருவதில்லை தான் இல்லையா? சூழ்நிலையின், எண்ண அதிர்வலைகளின், தொடர்பில் இருப்பவர்களிடமிருந்து ஏதாவது தடையோ இல்லையே? தாமரை மலருக்குச் சமமாக இருக்கிறீர்களா? தாமரை மலருக்குச் சமமாக விலகியிருப்பவர் மற்றும் அன்பானவர். தந்தையின் அன்பிற்குரியவனாக எவ்வளவு ஆகியிருக்கிறேன் என்ற கணக்கை விலகியிருக்கும் நிலை மூலம் போட முடியும். ஒருவேளை கொஞ்சம் விலகியிருக்கிறீர்கள், மீதி மாட்டிக்கொள்கிறீர்கள் என்றால் அன்பிற்குரிய வராகவும் அந்த அளவே ஆகிறீர்கள். யார் எப்பொழுதும் தந்தையின் அன்பிற்குரியவராக இருக்கிறாரோ அதனுடைய அடையாளம் இயல்பாகவே நினைவில் இருப்பது. மிகப் பிரியமான பொருள் இயல்பாகவே எப்பொழுதும் நினைவு வரும் இல்லையா. இவரோ ஒவ்வொரு கல்பமும் மிகப் பிரியமானவர். தந்தையின் குழந்தையாக ஒரு தடவை ஆகவில்லை, ஒவ்வொரு கல்பத்திலும் ஆகியிருக்கிறீர்கள். எனவே அந்த மாதிரி பிரியமான ஒருவரை எப்படி மறக்க முடியும். எப்பொழுது மறக்கிறீர்கள் என்றால் எப்பொழுது தந்தையையும் விட அதிகமாக யாராவது ஒரு நபரை அல்லது பொருளை பிரியமானது என்று நினைக்கிறீர்களோ அப்பொழுது தான். ஒருவேளை தந்தையை எப்பொழுதும் பிரியமானவர் என்று நினைத்தீர்கள் என்றால் மறக்க முடியாது. நினைவு எப்படி செய்வது என்பதை யோசிக்க வேண்டியதாக இருக்காது, ஆனால் மறப்பது எப்படி என்று ஆச்சரியமாக இருக்கும். அப்படி உங்களுடைய பெயர் அதர் குமார் ஆனால் பிரம்மா குமார் ஆகத்தான் இருக்கிறீர்கள். பிரம்மா குமார் வெற்றி அடைபவர்கள் தான் இல்லையா? அதர் குமார் என்றால் அனுபவம் நிறைந்த குமார். அனைத்தையும் அனுபவம் செய்து விட்டீர்கள். அனுபவி ஒருபொழுதும் ஏமாற்றம் அடைய மாட்டார். கடந்த காலத்தின் அனுபவியாகவும் இருக்கிறீர்கள். மேலும் நிகழ் காலத்து அனுபவியாகவும் இருக்கிறீர்கள். ஒவ்வொரு அதர்குமாரும் தன்னுடைய அனுபவங்கள் மூலமாக அனேகர்களுக்கு நன்மை செய்ய முடியும். இது உலகிற்கே நன்மை செய்யும் குரூப் ஆகும். நல்லது.மாதர்களுடன் சந்திப்பு -

இல்லறத்தில் இருந்து கொண்டே ஒரு தந்தையைத் தவிர வேறு யாரும் இல்லை என்ற நினைவிலேயே இருக்கிறீர்கள் தான் இல்லையா. இந்த சோதனை செய்கிறீர்களா? ஏனென்றால் இல்லறத்தின் சூழ்நிலையில் இருந்து கொண்டே அதனுடைய பாதிப்பு ஏற்படக்கூடாது, எப்பொழுதும் தந்தையின் பிரியமானவராக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த விஷயத்தின் சோதனை வேண்டும். ஒரு காரணத்திற்காக மட்டும் இல்லறத்தில் இருக்கிறீர்கள் இருந்தும் தந்தையின் நினைவில் இருக்க வேண்டும். பரிவாரத்தின் சேவையில் எத்தனை விதமான சேவை செய்ய வேண்டியதிருந்தாலும் ஆனால் டிரஸ்டி ஆகி செய்ய வேண்டும். டிரஸ்டியாக இருந்தீர்கள் என்றால் பற்றுதலை வென்றவராக ஆகி விடுவீர்கள். குடும்பஸ்தன் என்ற நிலை இருக்கிறது என்றால் மோகம் வந்து விடும். தந்தையின் நினைவு வரவில்லை என்றால் மோகம் இருக்கிறது. தந்தையின் நினைவு மூலம் குடும்பத்தின் ஒவ்வொரு காரியமும் சகஜம் ஆகிவிடும். ஏனென்றால் நினைவின் மூலம் சக்தி கிடைக்கிறது. அப்படி தந்தையின் நினைவின் குடைநிழலின் கீழே இருக்கிறீர்கள் தான் இல்லையா? குடை நிழலின் கீழே இருப்பவர் ஒவ்வொரு தடையிலிருந்தும் விடுபட்டு இருப்பார். மாதர்களோ பாப்தாதாவின் மிகப் பிரியமானவர்கள் ஏனென்றால் மாதர்கள் மிக அதிகமாக சகித்துக் கொண்டிருக்கிறார்கள். தந்தை அந்த மாதிரி குழந்தைகளுக்கு சகித்துக் கொண்டதின் பலனாக சகயோகம் மற்றும் அன்பு கொடுக்கிறார். எப்பொழுதும் சுமங்கலியாக இருக்க வேண்டும் இந்த வாழ்க்கையில் எவ்வளவு உயர்ந்த மாங்கல்யம் கிடைத்திருக்கிறது. எங்கு மாங்கல்யம் இருக்கிறதோ அங்கு பாக்கியமோ இருக்கவே இருக்கிறது. எனவே எப்பொழுதும் சுமங்கலியாக ஆகுக.உத்திரபிரதேசம் மற்றும் குஜராத் மண்டலங்களை சேர்ந்தவர்கள் பாப்தாதாவின் எதிரில் அமர்ந்திருக்கிறார்கள், அவர்களுடைய விசேஷத்தை பாப்தாதா கூறுகிறார் –அனைத்து ஸ்தானங்களுக்கும் அதனதன் விசேஷம் இருக்கிறது. உத்திரபிரதேசமும் குறைந்தது அல்ல என்றால் குஜராத்தும் குறைந்தது அல்ல. யார் தொடக்கத்தில் ஸ்தாபனை காரியத்தில் பொறுப்பாளராக ஆனார்களோ அவர்களுக்கும் நாடகத்தில் விசேஷ பங்கு இருக்கிறது. இருந்தாலும் தொடக்கத்தில் வந்தவர்களோ இரட்டை லாட்டரியை பெற்றார்கள் தான் இல்லையா. சாகார பாபா மற்றும் நிராகார பாபா - இரண்டு லாட்டரி கிடைத்தது இதுவும் குறைந்த பங்கா என்ன? ஒவ்வொரு கல்பத்தின் சரித்திரத்தின் எப்பொழுதும் உடன் இருப்பதின் நினைவுச் சின்னம் இதுவும் விசேஷ பாக்கியம்.இப்பொழுது கூட பாப்தாதா அவ்யக்த ரூபத்தில் அனைத்து பங்கையும் செய்கிறார். ஆனால் சாகாரத்தில் இருந்தவரோ சாகாரம் தான். சாகார பாபா காலத்தில் வந்தவர்களுக்கு அவர்களுடைய விசேஷம் இருக்கிறது. இவர்களுக்கு அவர்களுடைய விசேஷம். இவர்கள் அவ்யக்த பாப்தாதாவிடமிருந்து சாகார பாபாவின் அன்பை இழுப்பவர்கள். அனேகர்கள் அந்த மாதிரியும் இருக்கிறார்கள் யார் சாகார பாபாவுடன் இருந்தவர்களையும் விட அதிகமாக இப்பொழுது அனுபவம் செய்கிறார்கள். அப்படி அனைவரும் ஒருவர் இன்னொருவரை விட முன்னுக்கு இருக்கிறார். நல்லது.இன்று உத்திரபிரதேசத்தைச் சேர்ந்தவர்களுக்கு சேவைக்கான வாய்ப்பு. நதிகளின் கரைகளில் உ.பி. அதிகமாக இருக்கிறது. யமுனை நதிக்கரையில் ராஜ்ய தலைநகரத்தையும் மற்றும் நடனத்தையும் காண்பிக்கிறார்கள். ஆனால் உ.பி -யின் பதீத பாவனி மிகவும் பிரபலமானது, அதாவது உ.பி.யின் சேவை ஸ்தானத்தை காண்பித்திருக்கிறார்கள். எனவே அந்த மாதிரி யாராவது உ.பி-யிலிருந்து அவசியம் உருவாவார்கள் அவர்கள் அனேகர்களின் சேவைக்கு பொறுப்பாளர் ஆவார்கள். அந்த மாதிரி யாராவது தயார் ஆகிவிடுவார்கள். எப்படி அமெரிக்காவிலிருந்து ஒருவர் மூலமாக அனேகர்களின் சேவை நடந்து கொண்டிருக்கிறது. அந்த மாதிரி உ.பி-யிலிருந்தும் யாராவது ஒருவர் உருவாகிவிடுவார் அந்த ஒருவர் மூலம் அனேகர்களின் சேவை நடந்து விடும். செய்தியோ பரவும் தான் எப்பொழுது வெளிநாடிலிருந்து செய்தி வருமோ அப்பொழுது அனைவரும் விழித்து விடுவார்கள். இப்பொழுது மிகப் பெரிய வி.ஐ.பி யாரும் உருவாகவில்லை. இன்று வரையிலும் யாரெல்லாம் வி.ஐ.பி உருவாகியிருக்கிறார்களோ அவர்களையும் விட அதிகம் பெயர் பெற்றவர்கள் என்று அந்த வெளிநாட்டினரைத் தான் கூறுவோம் இல்லையா. அவர் நடைமுறையில் அனேகர்களுக்கு செய்தியை கொண்டு சேர்ப்பதில் காரணமானவர் ஆகிக்கொண்டிருக்கிறார். பாரதமும் முன்னுக்கு செல்ல முடியும், ஆனால் இப்பொழுதைக்கான விஷயம். இறுதியில் வெற்றி முழக்கமோ பாரதத்திலே தான் ஏற்படும் இல்லையா. வெளிநாட்டிலிருந்தும் வெற்றியின் முரசு அடித்து அடித்து பாரதத்தில் வந்து சேருவார்கள் இல்லையா. அவர்களுடைய வாயிலிருந்தும் நம்முடைய பாரதம் என்பது தான் வெளியாகும். பாரதத்தில் தந்தை வந்திருக்கிறார் என்று தான் கூறுவார்களேயன்றி ஐ.நா-வில் தந்தை வந்திருக்கிறார் என்று கூற மாட்டார்கள். பந்தயத்தில் இந்த நேரம் வெளிநாடு முன்னுக்கு சென்று கொண்டிருக்கிறது இப்பொழுதைக்கான விஷயம் இது, நாளை இன்னொருவரும் மாற முடியும். ஒருவர் இன்னொருவரைப் பார்த்து இன்னும் முன்னேறிச் செல்வார்கள். இப்பொழுது உ.பி-யிலிருந்து வி.ஐ.பி யாரையாவது கொண்டு வாருங்கள். பதீத பாவனி யாரையாவது பாவனமாக்கி சூ மந்திரம் போடுங்கள்.குஜராத் வளர்ச்சி அடைந்ததில் நம்பர் ஒன் ஆகிவிட்டது. வி.ஐ.பி-க்களும் மேடையில் வந்து விடுவார்கள். எல்லைக்கப்பாற்பட்ட சேவை செய்யும் மாதிரி வி.ஐ.பி இருக்க வேண்டும். குஜராத்தைச் சேர்ந்தவருக்கு குஜராத்தில் செய்தீர்கள், அவரோ சிறிய மைக் ஆகிவிட்டார். நாலாபுறங்களிலும் செய்தீர்கள் என்றால் தான் அவரை பெரிய மைக் என்று கூறுவோம். நல்லது.வரதானம் :

தன்னுடைய சஞ்சலமான உள் உணர்வை பரிவர்த்தனை செய்து சதோபிரதான வாயுமண்டலத்தை உருவாக்குவதற்கு பொறுப்பான சிரேஷ்ட ஆத்மா ஆகுக.எந்தக் குழந்தைகள் தங்களுடைய சஞ்சலமான உள்உணர்வுகளை பரிவர்த்தனை செய்து விடுகிறார்களோ அவர்கள் தான் சதோபிரதான வாயுமண்டலத்தை உருவாக்க முடியும். ஏனென்றால் உள்உணர்வு மூலம் வாயுமண்டலம் உருவாகிறது. எப்பொழுது உள்உணர்வில் இவ்வளவு பெரிய காரியத்தின் நினைவு இருப்பதில்லையோ அப்பொழுது உள்உணர்வும் சஞ்சலமாகிறது. ஒருவேளை ஏதாவது மிக சஞ்சலமான குழந்தை மிகவும் பிஸியாக இருந்த போதும் தன்னுடைய சஞ்சலத்தன்மையை விடவில்லை என்றால் அவரை கட்டி வைப்பார்கள். அதே போலவே ஒருவேளை ஞானம் யோகத்தில் பிஸியாக இருந்த போதிலும் உள்உணர்வு சஞ்சலமாக இருக்கிறது என்றால் ஒரு தந்தையுடன் அனைத்து உறவுகளின் பந்தனத்தில் உள்உணர்வை கட்டி விட்டீர்கள் என்றால் சஞ்சலத்தன்மை சுலபமாக முடிவடைந்து விடும்.சுலோகன் :

அலட்சியத் தன்மையின் உணர்வை முடிப்பதற்கான வழி எல்லைக்கப்பாற்பட்ட வைராக்கியம்.***OM SHANTI***