BK Murli 10 September 2016 Tamil

BK Murli 10 September 2016 Tamil

10.09.2016    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


இனிமையான குழந்தைகளே! இந்த எல்லையற்ற நாடகத்தின் கதாநாயகன்- கதாநாயகியின் பாகம் உங்களுடையது, பாபாவினுடையதல்ல, பாபாவிடம் பதீத்தமானவர்களை பாவனமாக்கும் கலையாக உள்ளது.கேள்வி:

பிரம்மாவினுடைய படத்தைப் பார்த்து கேள்வி கேட்கிறார்கள், அவர்களுக்கு எந்த ரகசியத்தை புரிய வைக்க வேண்டும்?பதில்:

அவர்களுக்குப் புரிய வையுங்கள், இவரே ஆதியிலிருந்து இறுதி வரை வரக்கூடிய ஆத்மா! முதல் இளவரசன் ஸ்ரீ கிருஷ்ணர், அவரது கடைசி பிறவியில் தான் தந்தை (சிவபாபா) வருகிறார். இது பதீத்தமான சரீரம், இதனைத்தான் தூய்மையாக்க வேண்டும். இவர் பகவான் அல்ல, பகவானோ எப்பொழுதும் தூய்மையாக இருப்பவர். அவர் இவரது சரீரத்தை ஆதாரமாக எடுத்துள்ளார்.பாட்டு:

மனிதர்களே உங்கள் முகத்தைப்பாருங்கள்....ஓம் சாந்தி!

பாபா குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றார், சாந்திக்காக எங்கும் வெளியே ஒவ்வொரு இடமாக சென்று கஷ்டப்படவேண்டாம். எப்படி ஹடயோகி சந்நியாசிகள் நினைக்கின்றார்களோ அதாவது இல்லற மார்க்கத்தில் இருந்துக் கொண்டே அமைதி கிடைக்காது. அமைதி என்பது காட்டில் தான் கிடைக்கும்! ஆனால் பாபா புரிய வைக்கின்றார் : அமைதி எங்குமே கிடைக்காது, இதில் ஒரு கதை அல்லது உதாரணத்தை கூறுகிறார்கள் அல்லவா? இராணி தனது கழுத்திலேயே மாலையே போட்டுக் கொண்டு வெளியே உலககெல்லாம் தேடிக் கொண்டிருந்தார்.... அவ்வாறே அமைதி என்பது உங்கள் கழுத்திலேயே கிடக்கிறது, ஆனால் வெளியே எங்கே தேடப்போகிறீர்கள், பாபா வந்து புரிய வைக்கின்றார், குழந்தைகளே! ஆத்மாக்களாகிய உங்களது சுய தர்மமே சாந்தி, இந்த சரீரமோ உங்களது கர்மேந்திரியங்கள் (செயல் உறுப்புகள்) அதன் மூலம் உங்கள் பாகத்தை நீங்கள் நடிக்க வேண்டியுள்ளது. ஆத்மா அழியாதது, ஆத்மா என்பது சிறியதாகவோ, பெரியதாகவோ இருப்பதில்லை, அழிவதும் இல்லை. ஆனால் பதீத்தமாகிறது. அது பாவனமாக வேண்டியுள்ளது. ஆத்மாவிற்கு குழந்தையின் சரீரம் கிடைக்கிறது, பிறகு இளைஞன், வயது முதிந்தோர் ஆகிறது. ஒரே ஒரு ரசனையில் இருப்பதுவே ஆத்மா. முதன் முதலில் ஆத்மாவை அறிய வேண்டும். ஆத்மாவாகிய நானே பாரிஸ்டர், மருத்துவர் ஆகிறேன். இதுவே ஆத்ம அபிமானி பவ என்பதாகும். பாபா புரிய வைக்கின்றார், குழந்தைகளே! நீங்கள் தேக அபிமானியாகக் கிடக்கிறீர்கள், எனவே தன்னை சரீரமாக நினைத்துக் கொள்கிறீர்கள், நான் ஆத்மா என்பதை மறந்து போகிறீர்கள், இது எனது சரீரம் என்று தன்னை உய்த்துணரவேண்டும். 84 பிறவிகளை ஆத்மா எடுக்கிறது. தற்போது பாபா புரிய வைக்கின்றார், பிராமணர்களாக யார் ஆகியிருக்கின்றீர்களோ அவர்களே பிறகு தேவதை ஆகக்கூடியவர்கள். எல்லோருமே 84 பிறவிகள் எடுப்பதும் இல்லை. சிலர் முதலில் வருவர், சிலர் 50-100 வருடங்களுக்குப் பிறகு வந்து கொண்டிருப்பர். சிலருக்கு 80-82, வேறு சிலருக்கு வேறு எண்ணிக்கையில் பிறவிகள் இருக்கலாம். மனிதர்கள் 84 லட்சம் பிறவிகள் என்று கூறிவிடுகின்றனர். இதிலும் திருப்தி அடைவதில்லை, பிறகு ஒவ்வொரு கணத்திலும் (இடத்தில்) பகவான் உள்ளதாகக் கூறிவிடு கின்றனர். தற்போது பகவான் கூறுகிறார் : நான் எந்த மனித உடலிலும் இருப்பதில்லை என்றால் மிருகங்கள், கல் முள்ளில் எப்படி இருப்பேன்? பாபா புரிய வைக்கின்றார், நம்பர் 1 ஆக இருந்தவரே இறுதி நம்பரில் தமோபிரதானமாக ஆகிறார். நானே கூறுகிறேன். பல பிறவிகளின் இறுதியில் சாதாரண சரீரத்தில் பிரவேசம் செய்கிறேன். யார் 84 பிறவிகளை எடுத்துள்ளாரோ அவர் நிச்சயமாக பதீத்தமாகத்தான் இருப்பார். பாவனமாக இருக்க முடியாது. பாபாவே கூறுகிறார், முதல் நம்பரில் வருபவர் ஸ்ரீ கிருஷ்ணர், முதல் இளரவசர்! ஸ்ரீ நாராயணராக பிறகு ஆகிறார் அவரே பெரியவராக ஆகும்போது! அவருக்கும் 20-25 வருடங்கள் குறைவாக உள்ளது. அவருக்கு 84 பிறவிகள் முழுமையாக என்று கூற முடியாது. நம்பர் 1 ஸ்ரீ கிருஷ்ணர். பிறகு அவரே சுயம் வரத்திற்குப் பிறகு நாராயணர் ஆகிறார், ஆனால் கணக்கு பார்க்க வேண்டியது குழந்தைகளினுடைய வேலை., முழுமையாக 84 பிறவிகள் 5000 வருடங்கள் என்று ஸ்ரீ கிருஷ்ணருக்குத்தான் கூற முடியும். ஆக பாபா வந்து புரிய வைக்கின்றார். நான் ஒவ்வொரு கல்பத்திலும் அதே சரீரத்தில் வருகிறேன். அவருக்கே முதலில் இருந்து கடைசி வரை பாகம் உள்ளது. வேறு எவரது உடலிலும் நான் வருவதில்லை. கணக்கு இருக்கிறது அல்லவா? பிரம்மாவே முதல் நம்பரில் உள்ளார். நான் வேறு எவரிலும் வரமுடியாது. ஒரே அந்த பிரம்மாவில் மட்டும் ஏன் வருகிறார் என்று அநேகம் பேர் கேட்கின்றனர். ஆனால் இது கணக்கு அல்லவா! இது புரிந்துக் கொள்ள வேண்டிய விசயம். பிரம்மாவின் மூலம் ஸ்தாபனை செய்கிறார் என்று பாடப்பட்டுள்ளது. விஷ்ணு மற்றும் சங்கர் மூலம் ஸ்தாபனை செய்வதில்லை. இது வேறு எவரது வேலையும் அல்ல. மனிதர்கள் படைப்பவர் மற்றும் படைப்பைப் பற்றி அறிவதில்லை. இதுவும் நாடகத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நிர்ணக்கப்பட்ட, நடந்து கொண்டிருக்கின்ற.... இந்த விஷயம் (பழமொழி) தற்போதைய விசயமே! எது நடக்கவேண்டுமோ அதுவே நடக்கிறது. அது மாற முடியாது. இன்று என்ன நடக்கிறதோ அதுவே 5000 வருடங்களுக்குப் பிறகும் நடக்கும் - பாபா புரியவும் வைத்துள்ளார் - எந்தவொரு விஷயத்தையும் இந்த கண்ணோட்டத்தோடு பாருங்கள், இது ஒன்றும் புதிய விஷயம் அல்ல! 5000 வருடங்களுக்கு முன்பே நடந்துள்ளது. இம்மாதிரி சரியாக எழுதுங்கள். பிறகு அவர்கள் வந்து கேட்கட்டும். எழுதுவது என்பது ஒரு விசயமே அல்ல. இந்த சச்சரவு என்பது ஏற்கனவே நடந்தது, எதுவும் புதியதல்ல! மகாபாரத யுத்தம் 5000 வருடங்களுக்கு முன்பும் நடந்தது. கிறிஸ்தவர்கள் பாரதத்தில் வந்து இராஜ்யத்தை எடுத்துக் கொண்டார்கள், இதுவும் புதியதல்ல. பிறகு கல்பத்திற்குப் பின்னரும் இவ்வாறே நடக்கும். இந்த உலகத்தின் சரீரத்திரம் மற்றும் பூகோளம் மீண்டும் மீண்டும் திரும்ப நடந்து கொண்டிருக்கின்றது. தற்போது மீண்டும் ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தின் ஸ்தாபனை நடந்து கொண்டிருக்கிறது. எவரது 84 பிறவிகள் பூர்த்தியாகியிருக்கிறதோ அவர்களே முதல் நம்பரில் லட்சுமி-நாராயணன் ஆவார்கள், இந்த அனைத்து இரகசியங்களையும் பாபாவே வந்து புரிய வைக்கின்றார்.பாபா கூறுகிறார் - நான் மனித சிருஷ்டியின் விதை ரூபமாவேன். இது தலைகீழான மரத்தின் படத்தில் கூறப்படுகிறது. இந்த கல்ப விருட்சத்தின் ஆயுள் 5000 வருடம் ஆகும். சுவஸ்த்திக்கில் 4 பாகங்கள் ஒரே மாதிரியாகத்தான் தென்படும். யுகமும் சரிசமமானது. அதில் எந்த வேறுபாடும் இல்லை. பாபா புரிய வைக்கின்றார், உலகத்தில் என்னவெல்லாமோ நடந்து கொண்டிருக்கிறது, சிலர் சந்திரனுக்கு செல்கின்றனர், சிலர் தீயில் குதிக்கின்றனர், வேறு சிலரோ தண்ணீரில் நடக்கக் கற்றுக் கொள்கின்றனர். இவை அனைத்தும் வீணானவை ! இதனால் எந்தவித லாபமும் இல்லை. மனிதர்கள் தூய்மையாகி முக்தி ஜீவன் முக்தி அடைய முடியாது. என்ன செய்தாலும் சரி, வீட்டிற்குத் திரும்பச் செல்ல முடீயாது. ஆத்மாவிற்கு தன்னுடைய வீடு, தந்தையின் வீட்டை மறந்து விட்டது. ஆத்மா தன்னையே மறந்து தேக அபிமானத்தில் வீழ்ந்து கிடக்கிறது. பிறகு கோவில்களில் சென்று மகிமைப் பாடுகின்றனர். நீங்கள் அனைத்து குணங்களையும் பெற்றவர்கள், நாங்கள் நீச்சர்கள், பாவிகள் என்று தங்களேயே இகழ்வாக கூறிக்கொள்கின்றனர். பாபாவோ ஒருபோதும் பூஜாரி ஆவதில்லை. பிறகு அடுத்த நம்பரில் கூறலாம், சங்கர் கூட எப்பொழுதும் பூஜிக்கத்தக்கவராக இருக்கிறார், அவரும் பூஜாரி ஆவதில்லை. அவரது பாகமே இங்கு இல்லை. எந்த மேடையில் பிரம்மா மற்றும் விஷ்ணுவின் பாகம் மட்டுமே உள்ளது. பிரம்மா மற்றும் விஷ்ணுவின் பாகம் என்ன இது உலகத்தில் எவருக்கும் தெரியாது. திருமூர்த்தி பிரம்மா என்று கூறிவிடுகின்றனர். அர்த்தம் எதையும் புரிந்துக் கொள்வதில்லை. பிரம்மா மூலம் ஸ்தாபனை யார் செய்விக்கின்றார் என்பது யாருக்கும் தெரியாது. அவருக்கும் உடல் இலலை என கூறுகின்றனர். ஆனால் அவர் எங்கு இருக்கிறார்? சிவம் என்றால் என்ன அதையும் அறிவதில்லை. ஆத்மாவைப் பற்றிக் கூறும்போது நெற்றிப்பொட்டின் நடுவில் பிரகாசிக்கும் நட்சத்திரம்... நான் ஆத்மா, அழியாதவன், சரீரம் அழியக்கூடியது. எத்தனை சரீரங்கள் எடுத்தாகி விட்டது, எதுவுமே தெரியாது. மனிதர்கள் எவ்வளவு துக்கமாக மாக இருக்கின்றனர். ஏ! கடவுளே, தந்தையே ! என்று கூச்சல் போடுகின்றனர். எப்பொழுதிலிருந்து துக்கம் ஆரம்பமானது கூப்பிட்டுக் கொண்டே வருகின்றனர். பாரதத்தில் எப்போது இராவண இராஜ்யம் ஆரம்பமாகிறதோ அப்பொழுது பிற மதங்களிலும் இராவண இராஜ்யம் ஆகிவிட்டது என்பது கிடையாது. அவைகளின் நேரத்தில் சதோ ரஜோ-தமோவில் வந்தே ஆக வேண்டும். இந்த கதை அனைத்தும் பாரதத்தில் தான் உள்ளது. ஆனால் அவைகளோ துணைக்கதைகள். பாபா இடையில் வருகிறார். பாரதம் எப்போது தமோபிரதானமாகிறதோ பிறகு முழு மரமும் தமோபிரதானம் ஆகிவிடுகிறது,. அவர்களும் சுகம் துக்கங்களை அனுபவிக்க வேண்டும். மரத்தில் புதுப் புது இலைகள் முளைக்கின்றன. அவை மிக அழகாக இருக்கின்றன. ஆனால் புதியவைகளும் சதோ ரஜோ தமோவில் நிச்சயமாக வந்தே ஆக வேண்டும். பின்னால் யார் வருகின்றனரோ அவர்களுக்கு சற்று புகழ் இருக்கின்றது. ஒரே பிறவியில் கூட சதோ ரஜோ தமோவில் கடந்து செல்கின்றனர். ஆனால் அதில் அவ்வளவு மதிப்பு கிடையாது. ஆனால் மதிப்பு என்பது கதா நாயகன், கதாநாயகியாக யார் பாகத்தை நடிக்கிறார் களோ அவர்களுக்கே உண்டு. பாபாவே கதா நாயகன், கதா நாயகி நடிக்கிறார் என்றும் கூற முடியாது. அவரோ வந்து பதீத்தர்களை பாவனமாக ஆக்குகிறார். அவர் தான் பதீத்தமாக ஆவதில்லை. நீங்கள் பதீதத்திலிருந்து பவானமாகும் முயற்சியை செய்கிறீர்கள். ஸ்ரீமத்படி இராஜயோகத்தின் மூலம் இராஜ்யத்தை அடைந்தீர்கள். தற்போது மீண்டும் அடைந்து கொண்டிருக்கிறீர்கள். பாபா கூறுகின்றார், நான் இராஜ்யம் செய்வதில்லை. உங்களை இராஜாவுக்கெல்லாம் இராஜாவாக மாற்றுகிறேன். தற்போது உலகத்தில் மனிதர்கள் மிக அதிகமாக பேசுகின்றார்கள், ஆனால் பகவானின் வாக்கியம் - நான் உங்களை இராஜாக்களுக்கெல்லாம் இராஜாவாக ஆக்குகிறேன். ஆனால் இதன் அர்த்தத்தை தாங்களும் புரிந்துக் கொள்வதில்லை, பிறருக்கும் புரிய வைக்க முடிவதில்லை - பகவானின் மகா வாக்கியம் - நிச்சயமாக பகவான் வந்திருந்தார், எனவே தான் கூறியிருக்க முடியும் அல்லவா! ஏ! குழந்தைகளே, பாரத தேசத்தில் தான் சிவஜெயந்தி, சிவராத்திரி கொண்டாடுகின்றனர். தந்தை வருவதே பாரத கண்டத்தில் தான். பாரதமே அழியாத கண்டமாகும். அதனுடைய மகிமை அளவற்றது. எப்படி பாபாவின் மகிமை அளவு கடந்தோ அப்படி பாரத தேசத்தின் மகிமையும் அளவு கடந்தாகும். பாரதத்தில் தான் பரம தந்தை பரமாத்மா வந்து அனைத்து மனிதர்களுக்கும் சத்கதி அளிக்கின்றார். அனைவருக்கும் சுகத்தை வழங்குகிறார். அவரது பிறந்த இடமே பாரதம் ஆகும். பாரத தேசமே மிகப் பழமையான தேசமாகும். பகவான் இராஜயோகத்தைக் கற்பிக்க பாரதத்தில் தான் வந்திருந்தார். ஆனால் கிருஷ்ணரை பகவான் என்று கூறிவிடுவதால் இவரது மகிமை இல்லாது போயிற்று. பகவான் ஒரே ஒருவரே ஆவார். அவரே சத்குரு என அழைக்கப்படுகிறார். மற்றப்படி மனித குருக்களோ அநேகம் உள்ளனர். வியாபாரம் செய்யக்கற்றுக் கொடுப்பவரைக்கூட குரு என்றே கூறுகின்றனர். இன்றைய நாட்களில் அனைவரையும் அவதாரங்கள் என்று நினைத்துக் கொள்கின்றனர். எதுவுமே புரிவதில்லை. எப்பொழுது முற்றிலும் பதீத்தமாக ஆகின்றனரோ அப்பொழுது அழைக்கின்றனர் – கடவுளே வந்து எங்களை பாவனமாக்குங்கள் !பாபாவே வந்து உண்மையிலும் உண்மையான அமரகதையைக் கூறுகின்றார். தற்போது உங்களது புத்தியில் நாம் 84 பிறவிகளில் எப்படி வருகிறோம் என்பது தெரிகிறது. முதலில் நல்ல பிறவிகள் பிறகு கீழே இறங்கி வருவீர்கள். உலகத்திற்கும் கீழே இறங்கும் கலை ஏற்படுகிறது. மனிதர்களின் புத்தி சதோ-ரஜோ-தமோ ஆகிறது. சத்யுகத்தில் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக இறங்கும் கலை ஆரம்பிக்கிறது. உங்களுக்கு உயரும் கலை ஆகும் போது அனைவருக்கும் நன்மை. அனைவருக்கும் சத்கதியை அளிக்கும் வள்ளல் ஒரே ஒரு தந்தையாவார். ஆனால் அந்த குருமார்களோ வெறும் சாஸ்திரங்களை மட்டும் கூறுகின்றார்கள். கேட்டுக் கேட்டு கீழே இறங்கியே வந்துள்ளனர். எல்லையற்ற தந்தை வந்து குழந்தைகளிடம் கேட்கின்றார் நான் உங்களை அவ்வளவு செல்வந்தர்களாக ஆக்கிவிட்டுச் சென்றேன். அவ்வளவு வைர வைடூரியங்களையும் தந்து விட்டுச் சென்றேன். அவை அனைத்தும் எங்கே சென்றன? லௌகீக தந்தை குழந்தைகளுக்கு பணம் தருகின்றனர், ஆனால் குழந்தைகள் அப்பணத்தை வீணாக்கி விடுகின்றனர் என்றால் தந்தை அழைத்து பணத்தையெல்லாம் எங்கே வீணாக்கினாய் என்று கேட்கின்றார், குழந்தைகளிடம் செல்வம் அதிகம் இருக்கும்பொழுது மிகவும் அதிகம் செலவு செய்து விடுகின்றனர். பாபா தர்ம ஆத்மா ஆவார், குழந்தைகள் வெளிநாடு சென்று செல்வத்தை செவழித்து விடுகின்றனர். தந்தையால் ஒன்றும் செய்ய முடிவதில்லை. அவர்களை வெளியேற்றவும் முடியாது. ஏனெனில் தாத்தாவினுடைய சொத்தாகும். எனவே மனதிற்குள்ளேயே எரிந்துக் கொண்டிருக்கின்றனர். தந்தை இறந்த பிறகு சில குழந்தைகளோ மிகவும் அழுக்காகி விடுகின்றனர். ஒரே வருடத்தில் அனைத்து செல்வத்தையும் கரைத்துவிடுகின்றனர். இவையெல்லாம் எல்லைக்குட்பட்ட விஷயங்கள். ஆனால் இதுவோ எல்லைக்கப்பாற்பட்ட விசயம். எல்லைக்கு அப்பாற்பட்ட தந்தை கூறுகின்றார். நீங்கள் எவ்வளவு செல்வந்தர்களாக இருந்தீர்கள். உலகத்திற்கே எஜமானர்களாக இருந்தீர்கள், பிறகு ஏன் வாழ்ந்து கெட்டவர்களாகி விடுகின்றீர்கள். அந்த செல்வங்கள் அனைத்தையும் என்ன செய்தீர்கள்! குழந்தைகளிடமே பாபா கேட்கின்றார் - பாரத தேசத்தை அவ்வளவு செல்வந்த நாடாக ஆக்கினார். அந்த செல்வம் அனைத்தும் எங்கே போயிற்று? பிறகு பாபாவே வந்து புரிய வைக்கின்றார். பக்தி மார்க்கத்தில் எவ்வளவு செலவு செய்கின்றனர். சாஸ்திரங்கள் போன்றவைகளுக்காக எவ்வளவு செலவு செய்கின்றனர்? தலை குணிந்து முடி அனைத்தும் போய், செல்வம் அனைத்தையும் இழந்து கிடக்கின்றனர். இதுவே நாடகம். நான் உங்களை செல்வந்தர்களாக ஆக்குகிறேன். இராவணன் உங்களை பரம ஏழையாக ஆக்குகிறான். பாரத வாசிகளுக்கே பாபா புரிய வைப்பார் இல்லையா? பாரதமே தங்கக் குருவியாக இருந்தது. அவ்வளவு செல்வம் இருந்தது. அதையெல்லாம் பிற மதத்தினர் கொள்ளையடித்துச் சென்று விட்டனர். பாரதம் எப்படி இருந்தது என்று நினைத்துப் பாருங்கள். இதுவும் நாடகத்தில் பதிந்துள்ளது. பாரதமே சொர்க்கமாக இருந்தது பாரதமே நரகமாகிவிட்டது. தற்போது நரகம். எனவே பாபா ஏணிப்படி படம் கூட அம்மாதிரி செய்துள்ளார். நாங்கள் பதீத்தமாகிவிட்டோம் என்று எவரும் புரிந்துக் கொள்கின்ற மாதிரி. சிறுசிறு குழந்தை களுக்கும் கூட படங்களின் விளக்கம் தரப்படுகிறது. படங்கள் இல்லாது குழந்தைகள் எப்படி புரிந்து கொள்வர். பாபாவே வந்து பதீதத்திலிருந்து பாவனமாகும் எளிய வழியைக் கூறுகிறார். எளிதிலும் எளிதானது, அதே சமயத்தில் கஷ்டத்திலும் கஷ்டமானதும் கூட! சத்யுகத்தில் தேகீ அபிமானியாக வாழ்ந்தீர்கள். தற்போது சரீரம் பெரிதாகி விட்டது என்று ஆத்மாவே உணர்கிறது. இந்த பழைய உடலை விட்டுவிட்டு அடுத்ததை எடுக்க வேண்டும். தற்போது போய் குழந்தையாக பிறக்க வேண்டும், பழைய சரீரத்தை விட்டு விடுகின்றனர் என்று சாட்சாத்காரம் (காட்சி) கூட தென்படுகிறது. இங்கே எவரேனும் இறந்து விட்டால் அழுகின்றனர். மேள தாளத்துடன் எடுத்து செல்கின்றனர். சத்யுகத்திலோ மிகவும் குஷியுடன் ஒரு சரீரத்தை விட்டு அடுத்ததை எடுக்கின்றனர்... அதனைக் கொண்டாடவும் செய்கின்றனர். ஆனால் இங்கோ எவ்வளவு வருத்தப்படுகின்றனர். எவரேனும் இறந்து விட்டால் சொர்க்கத்தை அடைந்து விட்டனர் என்கின்றனர். இதனுடைய அர்த்தம் அவர் இது வரை நரகத்தில் இருந்தார் என்பது - தற்போது நீங்கள் முயற்சி செய்கின்றீர்கள் - சொர்க்கவாசி ஆவதற்காக! பாபா உங்களை சொர்க்க வாசியாக ஆக்குகின்றார். பாபா வருவதே ஜீவன் முக்தி அளிப்பதற்காக. இராவணனுடைய பந்தனத்திலிருந்து விடுவித்து ஜீவன் முக்தி அளிக்கின்றார். - பாபா கூறுகின்றார் - நான் முந்தைய கல்பத்தைப்போல வந்து மீண்டும் இராஜயோகத்தைக் கற்பிக்கிறேன். ஒவ்வொரு கல்பத்திலும் பிரம்மாவின் சரீரத்தில் தான் வருகிறேன். நீங்கள பிராமணர்களாக நிச்சயம் ஆக வேண்டும். யக்ஞத்தில் பிராமணர்கள் நிச்சயம் வேண்டும் அல்லவா? இது இராஜ்சூய அசுவமேத அவிநாசி ருத்திர ஞான யக்ஞம் ஆகும். இந்த ரதத்தை (சரீரத்தை) இதில் அர்ப்பணிக்க வேண்டும். அசுவம் (குதிரை) என்றால் இந்த உடலுக்கு கூறப்படுகிறது. இராஜ்சூய, சுய ராஜ்யத்திற்காக இந்த அனைத்து குதிரைகளும் (சரீரம்) இதில் சுவாஹா! (அர்ப்பணம்) ஆக வேண்டும். ஆத்மா சுவாஹா ஆவிதில்லை. ஆத்மாக்கள் தனது கணக்கு வழக்குகளைப் பூர்த்தி செய்து சென்று விடும். பிறகு புதிதாக அனைவரின் பாகமும் ஆரம்பமாகும். இதுவே சரீரத்திர பூகோளம் மீண்டும் நடப்பது என்று கூறப்படுகிறது. பாபா வருவதே புதிய உலகத்தை ஸ்தாபனை செய்து பழைய உலகத்தை அழிப்பதற்காகும். இது ஒரே ஒரு மாகாபார யுத்தமாகும். இதுவே சாஸ்திரங்களிலும் கூறப்பட்டுள்ளது. இந்த யுத்தத்தின் மூலம் சொர்க்கத்தின் வாசல் திறக்கப்படுகிறது என்று புரிய வைக்க வேண்டும். எனவே தான் இதன் புகழ் சாஸ்திரங்களில் எழுதப்பட்டுள்ளது. நல்லது.இனிமையிலும் இனிமையான, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாய் தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீக குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.தாரணைக்கான முக்கிய சாரம்:

1) கடந்து போன விசயங்களைப் பற்றி ஒருபோதும் சிந்திக்கக்கூடாது. எது நடந்து முடிந்து போய்விட்டதோ எதுவும் புதிதல்ல என்று அதனை நினைத்து மறந்து விடவேண்டும்.2) இந்த இராஜ்சூய அசுவமே யக்ஞத்தில் தனது உடல், மனம், செல்வம் அனைத்தையும் அர்ப்பணம் செய்து முழுமையாக ஈடுபடுத்த வேண்டும். இந்த கடைசி பிறவியில் முழுமையாக தூய்மை அடையும் முயற்சி செய்ய வேண்டும்.வரதானம்:

நியாரா (விலகிய) மற்றும் ப்யாரா (அன்பு) நிலையின் தகுதி மூலம் மோகத்திலிருந்து விடுதலை பெறக்கூடிடய சகஜயோகியாக ஆகுக !சகஜயோகி வாழ்க்கையின் அனுபவம் செய்வதற்கு, ஞானத்துடன் பற்றற்ற நிலை உடையோர் ஆகுக. வெறும் வெளிமுகமான நியாரா நிலை மட்டும் அல்ல. ஆனால் மனதில் கூட மோக ஈடுபாடு இருக்கக்கூடாது. எவ்வளவு பற்றற்றவர்களாக ஆகிறார்களோ அவ்வளவு அன்பானவராக நிச்சயம் ஆகிவிடுகிறார்கள். நியாரா நிலை மிகவும் அன்பாக உள்ளது. யார் வெளிமுக பற்றிலிருந்து விலகவில்லையோ அவர்கள் அன்பானவர்களுக்குப் பதிலாக எப்பொழுதும் தொந்தரவு, சச்சரவில் இருக்கிறார்கள். எனவே சகஜயோகி என்றால் நியாரா (விலகிய) மற்றும் ப்யாரா (அன்பான) நிலையை உடையவர்கள், அனைத்து பற்றுகளிலிருந்தும் விடுப்பட்டவர்கள்.சுலோகன்:

சுய புருஷார்த்தம் மற்றும் சேவையின் சமநிலை மூலமாக பந்தனம் என்பது சம்மந்தமாக மாறிவிடும்.***OM SHANTI***

Google+ Followers