BK Murli 26 September 2016 Tamil

BK Murli 26 September 2016 Tamil

26.09.2016    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்

இனிமையான குழந்தைகளே! தன்னை விட பெரியவர்களுக்கு மதிப்பு அளிப்பது கூட தெய்வீக குணம் ஆகும். யார் புத்திசாலியாகவும் நன்றாக புரியவும் வைக்கிறார்களோ, அவர்களைப் பின்பற்ற வேண்டும்.கேள்வி :

சத்யுகத்தில் யாரிடமும் பக்தியின் பழக்க வழக்கம் இல்லை? ஏன்?பதில் :

ஏனென்றால் ஞானக்கடல் தந்தை ஞானத்தை அளித்து சத்கதிக்கு அனுப்பி விடுகிறார். பக்தியின் பலன் கிடைத்துக் கொண்டிருக்கிறது. ஞானம் கிடைத்தவுடன் பக்தி விவாகரத்து ஆகிவிடுகிறது. ஞானத்தின் பலனை அனுபவிக்கும் நேரத்தில் பக்தி தவம், தானம், புண்ணியங்களை செய்வதற்கு அவசியம் என்ன? அங்கே இந்த பழக்கங்கள் எதுவும் இருக்காது.ஓம் சாந்தி.

பதீத பாவனர் சிவபகவான் வாக்கு. இப்போது தந்தை வந்து ஞானத்தைக் கூறுகின்றார். நான் இங்கே வருகின்ற போது அழுக்கானவர்களை தூய்மையாக்குவதற்கான ஞானத்தைக் கூறுகின்றேன். வேறு யாரும் இந்த ஞானத்தைக் கற்பிக்க முடியாது என குழந்தைகளுக்கு புரிய வைக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் பக்தியைத் தான் கற்பிக்கிறார்கள். யார் தன்னை பிரம்மா குமார் பிரம்மா குமாரிகள் என நினைக்கிறீர்களோ அப்படிப்பட்ட குழந்தைகளாகிய நீங்கள் மட்டும் தான் ஞானத்தை கற்கிறீர்கள். தில்வாடா கோவில் உங்கள் முன்பு இருக்கிறது. அங்கே கூட இராஜயோகத்தின் தவத்தில் அமர்ந்திருக்கிறார்கள். ஜகத்தம்பா கூட இருக்கிறார். பிரஜா பிதா கூட இருக்கிறார். குமாரி கன்னியா, அதர் குமாரி கூட இருக்கிறார். பாபா இராஜயோகத்தைக் கற்பித்துக் கொண்டிருக்கிறார். மேலே இராஜ்யத்தின் சித்திரங்கள் கூட இருக்கின்றது. பாபா ஒரு போதும் பக்தியை கற்பிக்கவில்லை. யார் சொல்லி கொடுத்து விட்டு சென்று விட்டனரோ அவர்களுடைய பக்தியை செய்கிறார்கள். ஆனால் யார் இராஜயோகத்தைக் கற்பித்து இராஜ்யத்தை உருவாக்கி விட்டு சென்றனர் என்பது அவர்களுக்கு தெரியவில்லை. பக்தி என்பது தனி விஷயம், ஞானம் என்பது தனி விஷயம் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிகிறீர்கள். ஞானத்தைக் கற்றுத் தருபவர் ஒருவரே. வேறு யாரும் கற்றுத் தர முடியாது. ஞானக் கடல் ஒருவரே. அவரே வந்து ஞானத்தினால் அழுக்கானவர்களைத் தூய்மையாக மாற்றுகின்றார். வேறு எந்த எந்த சத்சங்கள் இருக்கின்றதோ அவர்கள் யாரும் ஞானத்தை சொல்லித் தர முடியாது. அவர்கள் தங்களை ஸ்ரீஸ்ரீ108 ஜகத்குரு, பகவான் என்று கூட கூறிக் கொள்ள முடியாது. ஆனால் நான் அனைவருக்கும் பரம்பிதா தான் பரமாத்மா ஞானக் கடல் என்று வேறு எவரும் கூற முடியாது. அவர்களை யாரும் பரம்பிதா என்று கூறுவதில்லை. பரமபிதா தான் பதீத பாவனர் என்பதை அறிகிறார்கள். இந்த கருத்துக்களை நன்கு புத்தியில் வைக்க வேண்டும். இந்த பிரம்மா குமாரிகள் பக்திக்கு விவாகரத்து கொடுக்கிறார்கள் என்று மனிதர்கள் கூறுகிறார்கள். ஆனால் ஞானம் கிடைக்கின்ற போது பக்தியை விவாகரத்து செய்து தான் ஆக வேண்டும். பக்தியில் செய்யும் போது நாம் ஞானத்திற்கு விவாகரத்து அளிக்கிறோம் என்பதை அச்சமயம் தெரிவதில்லை. அவர்கள் தானாகவே இராவண இராஜ்யத்தில் வந்து விடுகிறார்கள். பாபா நமக்கு இராஜயோகத்தைக் கற்பித்துக் கொண்டிருக்கின்றார் என்று புரிந்துக் கொண்டீர்கள். இது இராஜயோக ஞானம் ஆகும். இதை பக்தி என்று கூற முடியாது. பகவான் ஞானக் கடல். அவர் ஒரு போதும் பக்தியைக் கற்பிக்க முடியாது. பக்தியின் பலன் ஞானம் ஆகும். ஞானத்தினால் தான் சத்கதி கிடைக்கிறது. கலியுகத்தின் முடிவில் அனைவருமே துக்கத்தினராக இருக்கின்றனர். ஆகவே இந்த பழைய உலகம் துக்க தாமம் எனப்படுகிறது. இந்த விசயங்களை இப்போது நீங்கள் புரிந்துக் கொள்கிறீர்கள். பக்தியின் பலனை சத்கதியினை அளிக்க பாபா வந்திருக்கின்றார். இராஜயோகத்தினை கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். இது பழைய உலகம் ஆகும். இது அழியப் போகின்றது. நமக்கு புது உலகத்தில் இராஜ்யம் வேண்டும். இது இராஜயோக ஞானம் ஆகும், ஞானத்தைக் கற்றுத் தருபவர் ஒரேயொரு பரம்பிதா பரமாத்மா சிவன் ஆவார். அவரைத் தான் ஞானக் கடல் என்று கூறப்படுகிறது. கிருஷ்ணருக்குக் கூறப்படுவதில்லை. கிருஷ்ணரின் மகிமைகள் தனியாகும். நிச்சயமாக போன பிறவியில் இளவரசன் ஆவதற்கு ஏற்ப கடமையைச் செய்திருக்கிறார்.இப்போது நாம் இராஜயோகத்தின் ஞானத்தை அடைந்து புது உலகத்தில் இளவரசன் இளவரசியாக மாறுவோம் என அறிகிறீர்கள். சொர்க்கத்திற்கு சத்கதி என்றும், நரகத்திற்கு துர்கதி என்றும் கூறப்படுகிறது. நாம் நமக்காக இராஜ்யத்தை ஸ்தாபனை செய்துக் கொண்டிருக்கிறோம். மற்றபடி யார் இந்த ஞானத்தை அடைய வில்லையோ தூய்மையாக மாறவில்லையோ இராஜ்யத்தில் வர முடியாது. ஏனென்றால், சத்யுகத்தில் மிகச் சிலரே இருப்பார்கள். கலியுக முடிவில் இத்தனை பல மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்கள் நிச்சயமாக முக்தி தாமத்தில் இருப்பார்கள் காணாமல் போக மாட்டார்கள். அனைவருமே வீட்டிற்குச் சென்று விடுகிறார்கள். இப்போது குழந்தைகளுக்கு வீட்டின் ஞாபகம் வருகிறது. அதாவது 84 பிறவிகளின் சக்கரம் முடிவடைகிறது. நாடகம் நிறைவு பெறுகிறது. பல முறை சக்கரத்தில் சுழன்று வந்திருக்கின்றோம். இதை பிராமண குழந்தைகளாகிய நீங்கள் தான் அறிகிறீர்கள். பிராமணர் ஆகிக் கொண்டே போகிறார்கள். 16108-ன் மாலை இருக்கிறது. சத்யுக்ததில் நிறைய பேர் இருக்க மாட்டார்கள். சத்யுகத்தின் மாடல் வடிவத்தைக் கூட காண்பிக்கிறார்கள் அல்லவா? பெரிய பொருளின் மாடல் சிறியதாக இருக்கிறது. எப்படி தங்கத்தின் துவாரகையை காண்பித்திருக்கிறார்கள். துவாரகாவில் கிருஷ்ணரின் இராஜ்யம் இருந்தது என்று கூறப்படுகிறது. இப்போது துவாரகாவில் இருந்ததா? அல்லது டில்லியில்

இருந்ததா? யமுனை ஆற்றங்கரை டில்லியில் இருக்கிறது. அங்கேயோ கடல் இருக்கிறது. யமுனை ஆற்றங்கரையில் தலை நகரம் இருந்தது என்பதை குழந்தைகள் புரிந்து கொள்கிறார்கள். துவாரகா தலைநகரம் கிடையாது. டில்லி பழமையானதாகும். யமுனை நதியும் வேண்டும். யமுனைக்கு மகிமை இருக்கிறது. சொர்க்கம் என்று டில்லிக்கு கூறப்படுகிறது. பெரிய சிம்மாசனமாக டில்லி தான் இருக்கும். பக்தி மார்க்கம் முடிந்து ஞான மார்க்கம் உருவாகிறது என்பதை குழந்தைகள் புரிந்துக் கொள்கிறார்கள். இந்த தெய்வீக இராஜ்யம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. இன்னும் போகப் போக உஙகளுக்கு இது அனைத்தும் தெரிந்து விடும் என பாபா கூறுகின்றார். யார் யார் எவ்வளவு தேர்ச்சி பெறுகிறார்கள் பள்ளிக் கூடத்தில் கூட தெரிகிறது. இன்னார் இவ்வளவு மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்தனர். இப்போது அடுத்த வகுப்பிற்கு செல்கிறார்கள். கடைசி நேரத்தில் நிறைய தெரிய வரும் யார் யார் தேர்ச்சி பெறுகிறார்கள். பிறகு டிரான்ஸ்பர் ஆகிறார்கள். வகுப்பு பெரியதல்லவா? எல்லையற்ற வகுப்பாகும். சென்டர்ஸ் ஒவ்வொரு நாளும் பெருகிக் கொண்டே போகும். சிலர் வந்து 7 நாள் பாடத்தை நன்கு புரிந்துக் கொள்வார்கள். ஒரு நாள், இரண்டு நாள் பாடம் கூட குறைந்தது கிடையாது. கலியுகத்தின் அழிவு எதிரில் நிற்கிறது என்பதைப் பாôக்கிறார்கள். இப்போது தூய்மையாக மாற வேண்டும். என்னுடன் புத்தியின் நினைவை இணைத்தால் தூய்மையாகி விடுவீர்கள் என பாபா கூறுகின்றார். தூய்யைமான உலகில் வருவீர்கள். போன கல்பத்தில் எப்படி நடித்து முடித்தாகி விட்டதோ அவ்வாறு நிச்சயமாக நடிப்பை நடிக்கத்தான் வேண்டும். பாரத வாசிகள் தான் இராஜ்யம் செய்தனர். பிறகு விருத்தி அடைந்தனர். மரம் வளர்ந்து கொண்டே போகிறது அல்லவா? பாரத வாசிகள் தேவி தேவதா தர்மத்தைச் சார்ந்தவர்கள். ஆனால் தூய்மையாக இல்லாத காரணத்தினால் அந்த தூய்மையான தேவதைகளை பூஜிக்கிறார்கள். கிறிஸ்தவர்கள் எப்படி கிறிஸ்துவை பூஜிக்கிறார்கள். அப்படி தான் ஆதி சனாதன தேவி தேவதா தர்மம் சத்யுகத்தில் இருக்கிறது. சத்யுகத்தை ஸ்தாபனை செய்பவர் தந்தையாவார். உண்மையில் சத்யுகத்தில் இந்த தேவதைகளின் இராஜ்யம் இருந்தது. எனவே, ஒரு பிறவி முன்பாகவே இவர்கள் முயற்சி செய்திருப்பார்கள். நிச்சயமாக அது சங்கமாக இருக்கும். அப்போது தான் பழைய உலகம் மாறி புதிய உலகம் வருகிறது. கலியுகம் மாறி சத்யுகம் வர வேண்டும் என்றால் கலியுகத்தில் அழுக்காக இருப்பார்கள். இந்த லஷ்மி நாராயணன் படத்தை உருவாக்குவோம் அல்லது புத்தகங்களை அச்சடிக் கின்றோம் என்றால் அதில் இவர்கள் இந்த எளிய இராஜயோக ஞானத்தால் போன பிறவியில் இந்த முயற்சி செய்தனர் என எழுத வேண்டும் என பாபா புரிய வைத்திருக்கிறார். வெறும் ராஜா ராணி மட்டும் இருக்க மாட்டார்கள். பிரஜைகள் கூட உருவாகுவார்கள் அல்லவா? அறியாமை காலத்தில் மனிதர்கள் எதையும் புரிந்துக் கொள்ளவில்லை. வெறுமனே பூஜை செய்துக் கொண்டிருந்தார்கள். அந்த மனிதர்கள் பூஜை செய்கிறார்கள் என்றால் லஷ்மி நாராயணனை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என இப்போது நீங்கள் புரிந்துக் கொள்கிறீர்கள். ஞானம் எதுவும் இல்லை. பக்தியில்லாமல் பகவான் கிடைக்க மாட்டார். என மட்டும் நினைக்கிறார்கள். நீங்கள் யாருக்காவது பகவான் வந்து விட்டார் என கூறினால் உங்களைப் பார்த்து சிரிக்கிறார்கள். பகவான் கலியுகத்தின் முடிவில் வருவார். இப்போது எங்கிருந்து வந்தார். கலியுகத்தின் முடிவில் என்று ஏன் கூறுகிறார்கள். இதையும் புரிந்துக் கொள்ளவில்லை. அவர்களோ கிருஷ்ணரை துவாபர யுகத்தில் கொண்டு சென்று விட்டனர். மனிதர்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதைக் கூறுகிறார்கள். ஒன்றும் புரியாமல் கூறுவதால் முற்றிலும் முட்டாளாகி விட்டனர் என்று பாபா கூறுகிறார். தந்தையை சர்வவியாபி என கூறுகிறார்கள். வெளியிலிருந்து பார்க்கும் போது பக்தி மிகவும் அழகாக தெரிகிறது. பக்தி எவ்வளவு பிரகாசமாகத் தெரிகிறது. உங்களிடம் ஒன்றும் இல்லை. வேறு எந்த சத்சங்கத்திற்கு சென்றாலும் நிச்சயம் சத்தம் இருக்கும். பாட்டு பாடுவார்கள். இங்கேயோ பாபா பாடல்களைக் கூட விரும்புவதில்லை. இன்னும் போகப் போக ஒரு வேளை, இது கூட முடிந்து விடும்.இந்த பாடல்கள் போன்றவற்றின் சாரம் அனைத்தையும் உங்களுக்குப் புரிய வைக்கிறேன் என பாபா கூறுகிறார். நீங்கள் பொருளை அறிகிறீர்கள். இது படிப்பாகும். நாம் இராஜயோகத்தைக் கற்றுக் கொண்டிருக்கிறோம் என குழந்தைகளுக்குத் தெரியும். ஒரு வேளை குறைவாகப் படித்தால் பிரஜையில் சென்று விடுவார்கள். எனவே, யார் மிகவும் புத்திசாலியாக இருக்கிறார்களோ அவர்களைப் பின்பற்ற வேண்டும். ஏனென்றால், அவர்களுக்கு படிப்பில் அதிக கவனம் இருக்கும். அதனால் நன்மையும் நடக்கும். யார் நன்கு புரிய வைக்கின்றார் களோ அவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டும். யார் நன்கு புரிய வைக்கின்றார்களோ அவர்களை சென்டர்களில் நினைக்கிறார்கள் அல்லவா? பிரம்மா குமாரி இருக்கின்றார். இருப்பினும் இன்னார் வர வேண்டும் என கூறுகிறார்கள். இவர்கள் மிகவும் புத்திசாலி என நினைக்கிறார்கள். அவ்வாறு இருக்கும் போது அவர்களுக்கு மரியாதையும் அளிக்க வேண்டும். பெரியவர்களுக்கும் மரியாதை கொடுக்க வேண்டும். இந்த ஞானத்தில் நம்மை விட வேகமாக செல்கின்றனர். நிச்சயமாக இவர்களுக்கு உயர்ந்த பதவி கிடைக்கும். இதில் அகங்காரம் வரக் கூடாது. பெரியவர்களுக்கு பெரிய மரியாதை இருக்கிறது. குடியரசுத் தலைவருக்கு நிச்சயமாக அதிகமாக மரியாதை இருக்கும். ஒவ்வொருவருக்கும் வரிசைக் கிரமத்தில் நிச்சயமாக மரியாதை இருக்கும். ஒருவருக்கொருவர் மரியாதை அளிப்பாôகள் அல்லவா? வக்கீல்களில் கூட வரிசைக் கிரமம் இருக்கின்றது. பெரிய வழக்குகளில் பெரிய புத்திசாலி வக்கீல்கள் இருக்கிறார்கள். ஒரு சிலரோ லட்ச ரூபாக்கு வழக்கை எடுக்கிறார்கள். நிச்சயம் வரிசைக் கிரமமாக இருக்கிறார்கள். நம்மை விட புத்தசாலிகள் என்றால் மரியாதை அளிக்க வேண்டும். சென்டரையும் பார்த்துக் கொள்ள வேண்டும். அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டும். பாபாவிற்கு முழு நாளும் கவலை இருக்கிறது அல்லவா? படக் கண்காட்சிகளை எப்படி உருவாக்குவது? முழு கவனம் கொடுக்க வேண்டும். பாபா வந்திருப்பதே தூய்மையாக மாற்றுவதற்காக ! பதீத பாவனர் பாபா தான். பிறகு இங்கே பதீத பவானி கங்கை என கூறுகிறார்கள். அதில் பல பிறவிகளாக நீராடி வந்திருக்கிறார்கள். ஒருவரும் தூய்மையாக மாறவில்லை. இது அனைத்தும் பக்தியாகும். ஓ, பதீத பாவனா ! வாருங்கள் என்று கூறுகிறார்கள். அவர் நிச்சயமாக சங்கமத்தில் தான் வருவார். ஒரு முறை தான் வருகிறார். ஒவ்வொருவருக்கும் அவரவர் பழக்க வழக்கம் இருக்கிறது. நேபாளத்தில கூட அஷ்டமியின் போது பலி கொடுக்கிறார்கள். சிறிய குழந்தைகளின் கையில் துப்பாக்கியைக் கொடுத்து பயன்படுத்த வைக்கிறார்கள். அவர்களும் பலி கொடுக்கிறார்கள். பெரியவர்கள் ஆனதும் ஒரே தடவையில் காளை கன்றை வெட்டி விடுவார்கள். யாராவது குறைவாக அழுத்தம் கொடுத்தால் ஒரே வெட்டில் இறக்கவில்லை என்றால், அது பலி கிடையாது. அதை தேவிக்கு அர்ப்பணிக்க மாட்டார்கள். இது அனைத்தும் பக்தி மார்க்கமாகும். ஒவ்வொருவருக்கும் அவரவருக்கு என்று கற்பனை இருக்கின்றது. கற்பனைக்கு ஏற்ப சீடர்கள் உருவாகி விடுகிறார்கள். இங்கே இது புது விசயம் ஆகும். இவைகளைக் குழந்தைகள் தான் புரிந்துக் கொள்ள முடியும். ஒரேயொரு தந்தை வந்து சிருஷ்டியின் முதல் இடை கடை ஞானத்தைக் கூறுகின்றார். நாம் சுய தரிசன சக்கரதாரி என்ற குஷி உங்களுக்கு இருக்கிறது. வேறு யாரும் புரிந்துக் கொள்ள முடியாது. சர்வோத்தம பிராமண குல பூசணம், சுயதரிசன சக்கரதாரி என்பதன் பொருளை நீங்கள் புரிந்துக் கொள்கிறீர்கள் என சபையில் உங்களுக்கு நான் கூறலாம். புதியதாக யாரவது இருந்தால் குழம்பிப் போவார்கள். இவர்கள் என்ன சொல்கின்றனர். சுயதரிசன சக்கரதாரியோ விஷ்ணு ஆவார். புது விசயம் அல்லவா? ஆகவே தான் வெளியில் மைதானத்தில் வந்தால் தெரியும் என்று உங்களுக்கு கூறுகின்றேன். உங்களுடையது ஞான மார்க்கமாகும். நீங்கள் 5 விகாரங்களை வெற்றி கொள்கிறீர்கள். இந்த அசுரர்களோடு (5 விகாரங்கள்) உங்களுடைய போராகும். பிறகு நீங்கள் தேவதையாகிறீர்கள். வேறு சண்டை போடுவதற்கு எந்த விசயமும் இல்லை. எங்கே அசுரர்கள் இருக்கிறார்களோ அங்கே தேவதைகள் கிடையாது. நீங்கள் பிராமணர்கள் தேவதைகள் ஆகக் கூடியவர்கள். அதற்காக முயற்சி செய்துக் கொண்டிருக்கிறீர்கள். ருத்ர ஞான யாகத்தில் நிச்சயம் பிராமணர்கள் வேண்டும். பிராமணர்களின் யக்ஞயத்தைத் தவிர வேறு யாருடையதும் இல்லை. ருத்திரன் சிவன் ஆவார். பிறகு கிருஷ்ணர் எங்கிருந்து வந்ததார். நீங்கள் இந்த உலகத்திலிருந்து முற்றிலும் விடுபட்டிருக்கிறீர்கள். மேலும் நீங்கள் எவ்வளவு குறைவாக இருக்கிறீர்கள். பறவைகள் கடலை முழுங்கி விட்டது. சாஸ்திரங்களில் எத்தனை கட்டுக் கதைகள் இருக்கின்றது. இப்போது அனைத்தையும் மறந்து என்னை மட்டும் நினையுங்கள் என பாபா கூறுகின்றார். ஆத்மா தான் பாபாவை நினைக்கிறது. பாபா ஒருவர் அல்லவா? ஓ,பரமாத்மா! பிரபு, என கூறுகின்றோம் எனில் அச்சமயம் லிங்கத்தின் நினைவு கூட வருவதில்லை. ஈஸ்வரா பிரபு என்று மட்டும் கூறுகிறார்கள். ஆத்மாவிற்கு பாபாவிடமிருந்து அரை கல்பத்தின் சுகம் கிடைக்கிறது. எனவே பக்தி மார்க்கத்தில் நினைக்கிறார்கள். இப்போது உங்களுக்கு ஞானம் கிடைத்திருக்கிறது. ஆத்மா என்றால் என்ன? பரமாத்மா என்றால் என்ன? நாம் அனைத்து ஆத்மாக்களும் மூல வதனத்தில் இருக்கக் கூடியவர்கள். அங்கிருந்து வரிசைக் கிரமத்தில் நடிப்பதற்காக வருகின்றோம். முதலில் தேவி தேவதைகள் வருகிறார்கள். கிறிஸ்துவிற்கு முன்பாக தேவி தேவதா தர்மம் இருந்தது என கூறுகிறார்கள். 5000 வருடத்தின் விஷயம் ஆகும். 50,000 வருடத்தின் பழைய பொருள் இது என மக்கள் கூறுகிறார்கள். 50,000 வருடத்தின் பழைய பொருள் என்று எதுவும் கிடையாது. நாடகமே 5000 வருடத்தின் உடையதாகும். இதுவே முக்கியமான தர்மம் ஆகும். இந்த தர்மத்தைச் சார்ந்தவர்களின் வீடு போன்றவைகள் இருக்கும், முதன் முதலில் ரஜோ குண புத்தி இருந்தது. இப்போதோ இன்னும் தமோ குண புத்தி உடையவராக இருக்கின்றனர். பட கண்காட்சியில் எவ்வளவு புரிய வைகிறார்கள். யாருடைய புத்தியிலும் புரிய வில்லை. பிராமணர்களின் நாற்று நட வேண்டும். ஞானம் தனி விஷயம், பக்தி தனி விஷயம் என குழந்தைகளுக்குப் புரிய வைக்கப்படுகிறது ஞானத்தினால் சத்கதி கிடைக்கிறது. பதீத பாவனா வாருங்கள், துக்கத்திலிருந்து விடுவியுங்கள் என இதனால் தான் கூறுகிறார்கள். பிறகு வழிகாட்டியாக இருந்து உடன் அழைத்துச் செல்வார். தந்தை வந்து ஆத்மாக்களை அழைத்துச் செல்கிறார். உடல் அனைத்தும் அழிந்து போகும். வினாசம் நடக்கும் அல்லவா? சாஸ்திரங்களில் ஒரேயொரு மகாபாரத யுத்தத்தைப் பாடியிருக்கின்றனர். இது அதே மகாபாரத யுத்தம் என கூறுகிறார்கள். அது நடந்து தான் ஆக வேண்டும். அனைவருக்கும் பாபாவின் அறிமுகத்தைக் கொடுத்துக் கொண்டே இருங்கள். அழுக்கிலிருந்து தூய்மையாவதற்கான வழி ஒன்று தான். என்னை மட்டும் நினைத்தால் விகர்மங்கள் அழியும். மேலும் ஆத்மா என்னுடன் வந்து விடும் என பாபா கூறுகிறார். அனைவருக்கும் செய்தியைக் கொடுத்துக் கொண்டே இருந்தால் பலருக்கு நன்மை நடக்கும். நல்லது.இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம் ! ஆன்மீகக் குழந்தைகளுக்கு, ஆன்மீக தந்தையின் நமஸ்தே.தாரணைக்கான முக்கிய சாரம் :

1. யார் படிப்பில் புத்திசாலிகளாக இருக்கிறார்களோ, நன்கு புரிய வைக்கிறார்களோ அவர்களின் சங்கத்தில் இருக்க வேண்டும். அவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். ஒரு போதும் அகங்காரத்தில வரக் கூடாது.2. ஞானத்தின் புதுப் புது விசயங்களை நன்கு புரிந்துக் கொள்ள வேண்டும். மற்றும் புரிய வைக்க வேண்டும். நாம் சுயதரிசன சக்கரதாரி என்ற குஷியில் இருக்க வேண்டும்.வரதானம் :

கள்ளம் கபடம் அற்ற தன்மையுடன் ஆல்மைட்டி அத்தாரிட்டியாகி மாயையை எதிர் நோக்கக் கூடிய சக்தி சொரூபம் ஆகுக.சில நேரங்களில் கள்ளம் கபடம் அற்ற தன்மை மிகப் பெரிய நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. எளிமை கள்ளம் கபடம் அற்ற ரூபத்தை ஏற்கிறது. ஆனால் எதிர் நோக்க முடியாத அளவிற்கு கள்ளம் கபடம் அற்றவராக இருக்கக் கூடாது. எளிய தன்மையின் கூடவே உள்ளடக்கும் மற்றும் பொருத்து கொள்ளும் சக்தி தேவை. எப்படி பாபா கள்ளம் கபடம் அற்றவராக இருப்பதன் கூடவே ஆல்மைட்டி அத்தாரிட்டியாக இருக்கிராறோ அதே போன்று தாங்களும் கள்ளம் கபடம் அற்றவராக இருப்பதன் கூடவே சக்தி சொரூபமாகினால் மாயாவின் குண்டு தாக்காது. மாயை எதிர்ப்பதற்குப் பதிலாக நமஸ்காரம் செய்து விடும்.சுலோகன் :

தங்களின் மனதில் நினைவின் கொடியை பறக்கவிட்டால் பிரத்யக்ஷ்த்தின் கொடி பறக்கும்.***OM SHANTI***