BK Murli 1 April Tamil

bk murli today

Posted by: BK Prerana

BK Prerana is executive editor at bkmurlis.net and covers daily updates from Brahma Kumaris Spiritual University. Prerana updates murlis in English and Hindi everyday.
Twitter: @bkprerana | Facebook: @bkkumarisprerana
Share:






    BK Murli 1 April Tamil

    01.04.2017    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்

    இனிமையான குழந்தைகளே! உங்களுடைய புத்தியில் முழு நாளும் சேவையைப் பற்றிய சிந்தனைதான் வர வேண்டும். நீங்கள் அனைவருக்கும் நன்மை செய்ய வேண்டும். ஏனெனில், நீங்கள் கண் இழந்தவர்களின் ஊன்றுகோல் ஆவீர்கள்.



    கேள்வி:-

    உயர்ந்த பதவியை அடைவதற்காக முக்கியமான எந்த தாரணை இருக்க வேண்டும்?



    பதில்:-

    எப்பொழுது தனது கர்மேந்திரியங்கள் மீது முழுமையிலும் முழுமையான கட்டுப்பாடு இருக்குமோ, அப்பொழுதே உயர்ந்த பதவி கிடைக்கும். ஒருவேளை, கர்மேந்திரியங்கள் கட்டுப்பாட்டில் இல்லை, நடத்தை சரியாக இல்லை, மிக அதிகமான விருப்பங்கள் உள்ளன, பேராசை உள்ளது எனில், உயர்ந்த பதவியிலிருந்து வஞ்சிக்கப்பட்டுவிடுவீர்கள். உயர்ந்த பதவியை அடைய வேண்டுமெனில், தாய், தந்தையை முழுமையாகப் பின்பற்றுங்கள். கர்மேந்திரியங்களை வென்றவர்கள் ஆகுங்கள்.



    பாடல்:-

    கண் இழந்தவர்களுக்கு வழி காண்பியுங்கள் பிரபு



    ஓம் சாந்தி.

    இந்தப் பாடல் கண்காட்சியில் ஒலிக்கச் செய்வதற்கான மிக நல்ல பாடல் ஆகும். கண்காட்சியில் பாடல் ஒலிக்க முடியாது என்பது கிடையாது. இதைப் பற்றிக் கூட நீங்கள் புரிய வைக்க முடியும். ஏனெனில், அனைவரும் அழைக்கின்றனர். ஆனால், எங்கு செல்ல வேண்டும் மற்றும் யார் அழைத்துச் செல்வார்கள் என்பதை அறியவில்லை. நாடகம் அதாவது விதியின் அனுசாரம் பக்தர்கள் பக்தி செய்ய வேண்டும். எப்பொழுது பக்தி முடிவடைகிறதோ, அப்பொழுதே தந்தை வருகின்றார். வீதி வீதியாக எவ்வளவு அலைகின்றனர்! திருவிழாக்கள் போன்றவை நடைபெறுகின்றன. நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. சிரத்தையோடு தீர்த்த ஸ்தலங்களுக்குச் செல்வது, அலைந்து திரிவது வழக்கத்தில் உள்ளது. நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது என்றால் அரசாங்கம் தபால்தலை போன்றவற்றை வெளியிடுகிறது. சாதுக்களுடைய தபால்தலையைக் கூட வெளியிடுகிறது. பிறந்த நாள் கொண்டாடுகின்றனர். இவை அனைத்தும் இராவண இராஜ்யத்தின் அதாவது மாயையின் பகட்டு ஆகும். அதனுடைய திருவிழாவும் நடைபெற வேண்டும். அரைக் கல்பமாக நீங்கள் இராவண இராஜ்யத்தில் அலைந்து கொண்டு இருந்தீர்கள். இப்பொழுது பாபா வந்து இராவண இராஜ்யத்திலிருந்து விடுவித்து இராம இராஜ்யத்திற்கு அழைத்துச் செல்கின்றார். தாமே பூஜைக்குரியவர், தாமே பூஜாரி என்ற இந்த மகிமை யாருடையது என்பதை உலகம் அறியவில்லை. முதலில் 16 கலைகள் சம்பூரணமாக, பூஜைக்குரியவர்களாக இருக்கின்றோம்.பிறகு, 2 கலைகள் குறைந்துவிடுகின்றன. அவர்களை அரை பூஜைக்குரியவர் கள் எனலாம். முழு பூஜைக்கு உரியவர்கள் பிறகு, இரண்டு கலைகள் குறைவதால் அரை பூஜைக்கு உரியவர்கள் என்று கூற முடியும். பூஜாரியிருந்து பிறகு பூஜைக்கு உரியவர்கள் ஆகிக் கொண்டு இருக்கின்றோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். பின்னர், அரை பூஜைக்கு உரியவர்கள் ஆகிவிடுவீர்கள். இப்பொழுது இந்தக் கலியுகத்தின் இறுதியில் நமது பூஜாரி நிலையின் நடிப்பானது முடிந்துவிடுகிறது. பூஜைக்கு உரியவர்களாக ஆக்குவதற்காக பாபா வரவேண்டியதாக உள்ளது. இப்பொழுது பாபா உலகத்தின் எஜமானர் ஆக்குகின்றார். இதுவும் உலகம் தான், அதுவும் உலகமாக (சத்யுகம்) இருக்கும். அங்கே மிகவும் குறைவான மனிதர்களே இருப்பார்கள். ஒரு தர்மம் இருக்கும். அனேக தர்மங்கள் ஆகிவிடுவதனாலேயே குழப்பம் ஏற்படுகிறது.



    இப்பொழுது தகுதியானவர் ஆக்குவதற்காக பாபா வந்திருக்கிறார். எந்தளவு பாபவை நினைவு செய்வீர்களோ அந்தளவு தனக்கும் நன்மை செய்வீர்கள். நன்மை செய்வதற்கான ஆர்வம் எந்தளவு உள்ளது என்று பார்க்க வேண்டும். மனிதர்கள் நல்ல முறையில் புரிந்துகொள்ளும்படியான சித்திரங்களை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் ஓவியர்களுக்கு இருக்கிறது. நாம் எல்லையற்ற தந்தையின் சேவை செய்கிறோம் என்று புரிந்து கொள்வார்கள். பாரதத்தை சொர்க்கமாக்க வேண்டும். கண்காட்சியில் பாருங்கள், எவ்வளவு பேர் வருகிறார்கள்! எனவே, கண்காட்சியில் அத்தகைய சித்திரங்களை உருவாக்க வேண்டும், யார் வந்தாலும், இந்த சித்திரம் மிகச்சால்யான வழியை காண்பிக்கக் கூடியது என்று புரிந்துகொள்ள வேண்டும். திருவிழாக்கள் போன்றவை என்ன உள்ளனவோ, அவை இதற்கு முன் ஒன்றுமே இல்லை. இந்த ஞானத்தைப் புரிந்துள்ள ஓவியருடைய புத்தியில் அனேகருக்கு நன்மை ஏற்படும்படியான சித்திரங்களை உருவாக்க வேண்டும் என்பது இருக்கும். இரவு பகலாக புத்தி இந்த விஷயத்தில் ஈடுபட்டு இருக்க வேண்டும். இந்த பொருட்கள் மீது மிகுந்த ஆர்வம் உள்ளது. மரணம் திடீரென்று வருகிறது. ஒருவேளை, காலணி போன்றவற்றின் நினைவில் இருக்கும்பொழுது மரணம் வந்துவிடுகிறதென்றால் காலணி போன்ற பிறப்பு கிடைக்கும். இங்கேயோ தேக சகிதம் அனைத்தையும் மறந்துவிட வேண்டும் என்று தந்தை கூறுகின்றார். தந்தை யார்? என்பதைக் கூட நீங்கள் புரிந்திருக்கிறீர்கள். ஆத்மாக்களின் தந்தையை அறிவீர்களா? என்று எவரிடம் வேண்டுமானாலும் கேளுங்கள். தெரியாது என்று கூறுவார்கள். எவ்வளவு நினைவு செய்கிறார்கள்! வேண்டிக்கொண்டே இருக்கிறார்கள். தேவிகளிடம் கூட சென்று வேண்டுகின்றனர். தேவியினுடைய பூஜை செய்தார்கள் மேலும், ஏதாவது கிடைத்துவிடுகிறது என்றால், அவ்வளவுதான் அவர்களிடம் பலியாகி விடுகிறார்கள். பின்னர், பூஜாரியையும் கூட பிடித்துக் கொள்கின்றனர். அவரும் கூட ஆசிர்வாதம் செய்கின்றார். எவ்வளவு மூடநம்பிக்கை! எனவே, அத்தகைய பாடல்களின் விளக்கத்தை கண்காட்சியில் கூட புரியவைக்க முடியும். இந்தக் கண்காட்சி கிராமம் கிராமமாகச் செல்லும். தந்தை ஏழைப்பங்காளனாக இருக்கின்றார். அவர்களை நன்றாக முன்னேற்ற வேண்டும். செல்வந்தரோ கோடியில் ஒருவர்தான் வருவார். பிரஜைகள் அனேகர் உள்ளனர். இங்கே மனிதரிலிருந்து தேவதை ஆக வேண்டும். தந்தையிடமிருந்து ஆஸ்தி கிடைக்கிறது. முதன்முதலில் தந்தை நமக்குக் கற்பிக்கின்றார் என்று அவரை அறிந்துகொள்ள வேண்டும். இந்த சமயத்தில் மனிதர்கள் எவ்வளவு கல்புத்தி உடையவர்களாக இருக்கின்றனர்! இத்தனை பேர் சேவை கேந்திரங்களுக்கு (சென்டர்) வருகின்றனர், அனைவருக்கும் நம்பிக்கை உள்ளதா என்றும் பார்க்கின்றார். தந்தை, ஆசிரியர், சத்குருவாக இருக்கின்றார் என்பதைக் கூட புரிந்திருக்கவில்லை.



    இந்தப் பாவ உலகத்திருந்து... என்ற மற்றுமொரு பாடலும் உள்ளது. அதுவும் நல்ல பாடலாகும். இது பாவங்கள் நிறைந்த உலகமாகும். பகவானின் வாக்கியம் - இது அசுர சம்பிரதாயம் ஆகும், நான் இதை தெய்வீக சம்பிரதாயமாக ஆக்குகின்றேன். பின்னர், மனிதர்களின் கமிட்டிகள்(செயற்குழு) போன்றவை இந்தக் காரியத்தை எவ்வாறு செய்ய முடியும்? இங்கே அனைத்தும் புத்திக்கான விசயம் ஆகும். நீங்கள் தூய்மை அற்றவர்களாக இருக்கிறீர்கள், உங்களை எதிர்காலத்திற்காக தூய்மையான தேவதை ஆக்குகின்றேன் என்று பகவான் கூறுகின்றார். இந்த சமயத்தில் அனைவரும் தூய்மை அற்றவர்களாக(பதீதமாக) உள்ளனர். பதீதம் என்ற வார்த்தையே விகாரத்தைக் குறிப்பதாகும். சத்யுகத்தில் விகாரமற்ற உலகமாக இருந்தது. இது விகாரி உலகம் ஆகும். கிருஷ்ணருக்கு 16108 இராணிகள் இருப்பதாகக் காண்பித்துள்ளனர். இது கூட நாடகத்தில் பதிவாகி உள்ளது. என்னவெல்லாம் சாஸ்திரங்கள் உருவாக்கி இருக்கின்றனரோ, அவற்றில் அவதூறாக எழுதி விடுகின்றனர். சொர்க்கத்தைப் படைக்கும் பாபாவைப் பற்றியும் கூட என்னென்ன கூறுகின்றனர்! பாபா நம்மை எவ்வளவு உயர்ந்தவர்களாக ஆக்குகின்றார்! என்பதை இப்பொழுது நீங்கள் அறிவீர்கள். எவ்வளவு நல்ல அறிவுரைகள் வழங்குகின்றார்! உண்மையிலும் உண்மையான சத்சங்கம் இதுவாகும். மற்ற அனைத்தும் பொய்யான சங்கம்(தொடர்பு) ஆகும். அத்தகையவர்களை பின்னர், பரமபிதா பரமாத்மா வந்து உலகத்தின் எஜமானர் ஆக்குகின்றார். குழந்தைகளே! நீங்கள் இப்பொழுது கண் இழந்தவர்களின் ஊன்றுகோல் ஆகவேண்டும் என்று தந்தை புரிய வைக்கின்றார். யார் சுயம் ஆயத்தம் ஆகவில்லையோ அவர்கள் பிறருக்கு ஊன்று கோலாக எவ்வாறு ஆவார்கள்! ஞானம் ஒருபொழுதும் அழிந்து போவதில்லை. ஒரு முறை தாய், தந்தை என்று கூறினாலே ஏதாவது கொஞ்சம் பலன் கிடைத்து விடும். ஆனால், வரிசைக்கிரமமான பதவி உள்ளது அல்லவா! நடத்தை மூலம் கூட கொஞ்சம் தெரிந்துவிடும். பிறகும் கூட முயற்சி செய்விக்கப்படுகிறது. என்ன கிடைத்துள்ளதோ அது போதும் என்பது கூடாது. முயற்சி மூவம் உயர்ந்த பிராப்தி கிடைக்கும். முயற்சி இல்லாமல் தண்ணீர் கூட கிடைக்காது. இதை கர்மச்சேத்திரம் என்று சொல்லப்படுகிறது. இங்கே கர்மம் செய்யாமல் மனிதர்கள் இருக்க இயலாது. கர்ம சந்நியாசம் என்ற வார்த்தையே தவறானது ஆகும். அனேகர் ஹடயோகம் செய்கின்றனர். தண்ணீர் மீது, நெருப்பின் மீது நடப்பதற்குக் கற்றுக் கொள்கின்றனர். ஆனால், என்ன லாபம்? வீணாக ஆயுளை இழக்கின்றனர். இராவணனுடைய துக்கத்திலிருந்து விடுபடுவதற்காகவே பக்தி செய்யப்படுகிறது. விடுபட்டு பின்னர் வீடு திரும்பிச் செல்ல வேண்டும். ஆகையினால், நாங்கள் முக்திதாமம் செல்ல வேண்டும் அல்லது சுகதாமம் செல்ல வேண்டும் என்று அனைவரும் நினைவு செய்கின்றனர். இரண்டுமே கடந்தகாலம் ஆகிவிட்டன. பாரதம் சுகதாமமாக இருந்தது. இப்பொழுது நரகமாக உள்ளது எனில், நரகவாசி என்று சொல்லலாம் அல்லவா! இன்னார் சொர்க்கவாசி ஆகிவிட்டார் என்று சுயம் நீங்களே கூறுகிறீர்கள். நல்லது, அவ்வாறெனில் நீங்கள் நரகத்தில் இருக்கிறீர்கள் அல்லவா ! சொர்க்கத்திற்கு எதிரானது நரகம் ஆகும். மற்றபடி, அதுவோ சாந்திதாமம் ஆகும். பெரிய முக்கிய மனிதர்கள் இதைக்கூட புரிந்து கொள்ளவில்லை. நாங்கள் நரகத்தில் இருக்கிறோம் என்று தன்னைத் தானே நிரூபித்துக் கொள்கின்றனர். நீங்கள் மிகுந்த யுக்தியுடன் நிரூபித்து எடுத்துரைக்க வேண்டும். இந்தக் கண்காட்சியானது மிக உயர்ந்த காரியம் செய்து காண்பிக்கும். இந்த சமயத்தில் மனிதர்கள் எவ்வளவு பாவம் செய்கின்றனர்! சொர்க்கத்தில் அத்தகைய விசயங்கள் இருக்காது. அங்கோ பிராப்தி கிடைக்கிறது. நீங்கள் மீண்டும் சொர்க்கம் செல்கிறீர்கள். அனேக முறை இந்த உலகத்தின் எஜமானர்களாக நாம் ஆகி இருக்கிறோம், பின்னர் இப்பொழுது ஆகிக் கொண்டு இருக்கிறோம் என்று நீங்கள் கூறுவீர்கள். உலகில் எவருக்கும் தெரியாது. உங்களில் கூட சிலர் மட்டும் புரிந்திருக்கின்றனர். இந்த விளையாட்டிலிருந்து எவரும் விலக இயலாது. மனிதர்கள் எப்பொழுது துக்கம் நிறைந்தவர்கள் ஆகின்றனரோ அப்பொழுது மோட்சத்தை விரும்புகின்றனர். நல்ல முறையில் முயற்சி செய்யுங்கள் என்று பாபா கூறுகின்றார். தாய், தந்தையைப் பின்பற்றி நல்ல பதவியை அடையுங்கள், தனது நடத்தையை மாற்றுங்கள். தந்தை அறிவுரைகள் வழங்குகின்றார். பிறகு, அதன்படி ஏன் நடப்பதில்லை? அதிகமான விருப்பங்கள் இருக்கக் கூடாது. யக்ஞத்திலிருந்து என்ன கிடைக்கிறதோ அதை உண்ண வேண்டும். பேராசை உள்ளது, கர்மேந்திரியங்கள் கட்டுப்பாட்டில் இல்லை எனில், பதவி கூட உயர்ந்ததாக அடைய முடியாது. எனவே, அத்தகைய பாடலை கண்காட்சியில் ஒலிக்கச் செய்து அதைப் பற்றி நீங்கள் புரிய வைக்க இயலும்.



    நீங்கள் சிவபாபாவின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். சிவபாபாவிற்கும் மேலே(உயர்ந்தவர்) வேறு எவரும் கிடையாது. உங்கள் அனைவரையும்விட உயர்ந்தவர் எவராவது இருப்பார்கள்! 84 பிறவிகளில் 84 தாதா, பாபா கூட கிடைக்கின்றனர். சிவபாபா படைப்பாளர் ஆவார். இப்பொழுது புதிய படைப்பைப் படைத்துக் கொண்டு இருக்கின்றார். அதாவது பழையதை புதியதாக ஆக்குகின்றார். நாம் கருமையிலிருந்து வெண்மை (தூய்மை) ஆகிறோம் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். சொர்க்கத்தில் முதல் எண்ணில் வருபவர் ஸ்ரீகிருஷ்ணர் ஆவார். பின்னர், இறுதியில் அவரது பிறப்பு உள்ளது. பிறகு, இவரே முதல் எண்ணிற்கு உரியவர் ஆகிறார். முழுமையிலும் முழுமையான 84 பிறவிகளை ஸ்ரீகிருஷ்ணர் எடுத்திருக்கிறார். சூரியவம்சத்தின் தெய்வீக சம்பிரதாயத்தினர் முழுமையான 84 பிறவிகள் எடுக்கின்றனர். எந்த ஸ்ரீகிருஷ்ணர் முதல் எண்ணில் இருந்தாரோ, அவருடைய கடைசி பிறவியில் பிரவேசம் செய்து, பிறகு, அவரை ஸ்ரீகிருஷ்ணர் ஆக்குகின்றேன் என்று தந்தை கூறுகின்றார். நல்லது.



    இனிமையிலும் இனிமையான வெகு காலத்திற்குப் பிறகு தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாய், தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மிகக் குழந்தைகளுக்கு ஆன்மிகத் தந்தையின் நமஸ்காரம்.



    தாரணைக்காக முக்கியமான சாரம்:-

    1. அழியக்கூடிய ஆசைகள் எதையும் வைத்துக் கொள்ள வேண்டாம். தன்னுடைய மற்றும் அனைவருடைய நன்மை செய்ய வேண்டும்.



    2. தேக சகிதம் அனைத்தையும் மறந்து வீட்டிற்குத் திரும்பிச் செல்ல வேண்டும். ஆகையினால், புத்தி எங்காவது மாட்டிக் கொள்ளாமல் இருக்கிறதா என்று சோதனை செய்ய வேண்டும்.



    வரதானம்:-

    முற்றுப்புள்ளி என்ற புள்ளி வைத்து எந்த ஒரு விசயத்தையும் முடிக்கக்கூடிய சகஜயோகி ஆவீர்களாக.



    அனைத்து கருத்துக்களின் (பாய்ண்ட்ஸ்) சாரம் - புள்ளி (பாய்ண்ட்) ஆவது ஆகும். புள்ளி ரூபத்தில் நிலைத்து இருந்தீர்கள் என்றால் கேள்விக்குறியின் வரிசை முடிந்துவிடும். எப்பொழுதாவது ஏதாவது ஒரு விசயத்தில் கேள்வி வந்தால் புள்ளி(ஃபுல் ஸ்டாப்) வைத்துவிடுங்கள். முற்றுப்புள்ளி வைப்பதற்கான எளிய சுலோகன் என்னவென்றால், என்ன நடந்ததோ, என்ன நடந்து கொண்டு இருக்கிறதோ, என்ன நடக்குமோ அது நன்றாக நடக்கும் என்பதாகும். ஏனெனில், சங்கமயுகமே நல்லதிலும் நல்ல யுகம் ஆகும். நல்லது என்று சொல்வதால் நல்லது நடந்துவிடுகிறது. இதன் மூலம் சகஜயோகி வாழ்க்கையின் அனுபவத்தைச் செய்து கொண்டே இருப்பீர்கள்.



    சுலோகன்:-

    அன்பு தான் எளிய நினைவிற்கான சாதனம் ஆகும், அன்பில் மூழ்குவது என்றால் சகஜயோகி ஆகுவது ஆகும்.


    ***OM SHANTI***