16 March 2017

BK Murli 17 March 2017 Tamil

BK Murli 17 March 2017 Tamil


17.03.2017    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்

இனிமையான குழந்தைகளே! நீங்கள் தந்தையினுடையவராக ஆகி இருப்பது வாழ்ந்து கொண்டே இந்த உலகத்திலிருந்து இறப்பதற்காகவே. எனவே கடைசியில் தந்தையைத் தவிர வேறு யாருடைய நினைவும் வராத அளவிற்கு உங்களுடைய மன நிலையை உறுதிப்படுத்துங்கள்.கேள்வி:

இச்சமயத்தில் முழு உலகத்தில் எல்லாவற்றையும் விட எந்த ஒரு அதிக தீவிரமான நெருப்பு பிடித்துள்ளது? அதை அணைப்பதற்கான வழி கூறுங்கள்?பதில்:

முழு உலகில் இச்சமயம் காமம் என்ற தீ பிடித்துள்ளது. இந்த நெருப்பு எல்லாவற்றையும் விட அதிக தீவிரமானது (உக்கிரமமானது). இந்த தீயை அணைக்கக் கூடிய ஆன்மீக தொண்டு நிறுவனம் (மிஷன்) ஒன்றே ஒன்று தான். இதற்காக தங்களை தீ அணைப்பு படையினராக ஆக்கிக் கொள்ள வேண்டும். யோக பலம் இன்றி இந்த தீயை அணைத்து விட முடியாது. காம விகாரம் தான் எல்லாவற்றையும் சர்வநாசம் செய்கிறது. எனவே இந்த பூதத்தை விரட்டுவதற்கான முழுமையான முயற்சி (புருஷார்த்தம்) செய்யுங்கள்.பாடல்:

சபை கூட்த்தில் விளக்கொளி எரிந்து பிரகாசித்து .. .. .. ..ஓம் சாந்தி.

நல்ல நல்ல சேவை செய்யக் கூடிய குழந்தைகள் இந்த பாடலின் பொருளை நல்ல விதத்தில் புரிந்து கொண்டு விடுவார்கள். இந்த பாடலை கேட்கும் பொழுது முழு சிருஷ்டி சக்கரம், படைப்பவர் மற்றும் படைப்பின் முதல் இடை கடை பற்றி அறியப்படுகிறது. மனிதர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக பாட்டு ஒலிக்கப்படுகிறது. யார் மூலமாக? ஞானக் கடலின் மூலமாக. இந்த பழைய உலகத்திலிருந்து இறந்து நமது பரந்தாமம் செல்வதற்காக நாம் தந்தையினுடையவராக ஆகிறோம் என்பதை குழந்தைகள் அறிந்துள்ளார்கள். இந்த புருஷார்த்தம் ஒரு தந்தையைத் தவிர வேறு யாரும் செய்விக்க முடியாது. என்னுடையவராக ஆகும் பொழுது நீங்கள் இந்த உலகத்திலிருந்து இறக்க வேண்டி வரும் என்று தந்தை கூறுகிறார். ஒரு தந்தையைத் தவிர வேறு யாருடைய நினைவும் வராத அளவிற்கு கடைசியில் அப்பேர்ப்பட்ட நிலை பக்குவமாக ஆகி இருக்க வேண்டும். ஒளியானவர் (சிவ பாபா) விட்டில் பூச்சிகளை (குழந்தைகளை) திரும்ப அழைத்து செல்ல வந்துள்ளார் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். விட்டில் பூச்சிகளோ ஏராளமானோர் இருக்கிறார்கள். கண்காட்சியில் கூட பாருங்கள் ஏராளமானோர் வருகிறார்கள். ஒரு சில குழந்தைகளோ கண்காட்சி யின் பொருளைக் கூட புரிந்திருக்க மாட்டார்கள். இது பழைய உலகத்தை மீண்டும் புதிய உலகமாக ஆக்குவதற்கான கண்காட்சி. பழைய உலகத்தின் விநாசம் ஆகி மீண்டும் புதிய உலக ஸ்தாபனை எவ்வாறு ஆகிறது. இது சங்கமத்தில் தான் காண்பிக்கப்படுகிறது. இரண்டும் ஒன்றாகவோ நடக்க முடியாது. ஒன்று அவசியம் அழிந்து போய் விட வேண்டும். இதை உங்களிலும் நல்ல நல்ல குழந்தைகளாக இருப்பவர்கள் அறிந்திருக்கிறார்கள். இராம இராஜ்யம் அதாவது புதிய உலகத்தின் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. இராம இராஜ்யத்தின் ஸ்தாபனை யான பிறகு இராவண இராஜ்யம் முடிந்து போய் விடும். நீங்கள் இராம இராஜ்யத்தை சேர்ந்தவர்களாக ஆகிறீர்கள். எனவே உங்களுக்குள் எந்த ஒரு பூதமும் இருக்கக் கூடாது. பூதங்களை விரட்டி விடுவதற்கான முயற்சி செய்ய வேண்டும். முதன் முதலில் காமத்தீயை அணைக்க வேண்டும். தங்களுக்கு தாங்களே தீயணைப்பு படை வீரராக வேண்டும். இந்த நெருப்பு எல்லாவற்றையும் விட தீவிரமான மற்றும் முற்றிலும் அசுத்தமானது. யோக பலம் இன்றி அணைக்க முடியாது. அதுவும் முழு உலகத்தைப் பற்றிய இதே கேள்வி தான் உள்ளது. எல்லோருக்கும் காமத்தீ பிடித்துள்ளது. இந்த நெருப்பை அணைக்கக் கூடிய ஆன்மீகத் தொண்டு நிறுவனம் ஒன்றே ஒன்று தான். அவர் அவசியம் இங்கு வர வேண்டி உள்ளது. ஹே, பதீத பாவனரே வாரும்! என்று கூறவும் செய்கிறார்கள். காம வேட்கை உடையவர்களுக்குத் தான் தூய்மையற்றவர் என்று கூறப்படுகிறது. ஹே, காமத்தீயை (பூதத்தை) சாம்பலாக்குபவரே! வாருங்கள். இங்கு பெரும்பான்மையானவர்கள் தூய்மை இல்லாதவர்களாக உள்ளார்கள். ஒரு சிலர் தூய்மையாக இருக்கிறார்கள் தான். இதை எப்படி அணைக்க வேண்டும் என்ற யுக்தியை நான் உங்களுக்குக் கூறுகிறேன். இந்த காம அக்கினி கூட சதோ, ரஜோ, தமோ நிலைகளில் வருகிறது. யார் இந்த தீ இல்லாமல் முற்றிலும் இருக்க முடிவதில்லையோ அவர்கள் தமோபிரதானம் ஆவார்கள். தீ எரிந்து கொண்டே இருக்கிறது. இந்த காமவிகாரம் மனிதனை சர்வநாசம் செய்து விடுகிறது. சத்யுகத்தில் எந்த எதிரியும் இருப்பதில்லை. அங்கு இராவணனும் இருப்பதில்லை. மனித எதிரிகளும் இருப்பதில்லை. பாரதத்தினுடைய எல்லோரையும் விட பெரிய எதிரி இராவணன் ஆவார் என்பதை நீங்கள் புரிய வைக்கிறீர்கள். விளையாட்டே முழுமையாக பாரதத்தின் மீது அமைந்துள்ளது. சத்யுகத்தில் இராம இராஜ்யம், கலியுகத்தில் இராவண இராஜ்யம். கார்ட்டூனில் (நகைச்சுவை சித்திரம்) கூட காண்பித்திருக்கிறார்கள். அவரும் மனிதர் இவரும் மனிதர். தேவதைகளுக்கு முன்னால் நின்று கை கூப்பிக் கொண்டு கூறுகிறார்கள், நீங்கள் சர்வகுண சம்பன்னராவீர்கள், நாங்கள் பாவிகள் துக்கமுடையவர்கள் என்று. இந்த பாரதம் உயர்வான தூய்மையானதாக நிச்சயமாக இருந்தது.அங்கு தேவி தேவதைகள் ஆட்சி புரிந்து கொண்டிருந்தார்கள். இலட்சுமி நாராயணர் மற்றும் இராமர் சீதை -இருவருடைய இராஜ்யம் இருந்தது. அது அவர்களுடைய வம்சம் ஆகும். பிரஜைகளின் உருவச் சிலைகள் அல்லது சித்திரங்கள் அமைக்க மாட்டார்கள். இப்பொழுது தந்தை எவ்வளவு சுலபமாக ஆக்கி புரிய வைக்கிறார். புரிய வைத்த பின் புத்தியில் தாரணை ஆகிறது அல்லவா! என்று கூறுகிறார். எப்படி என்னுடைய புத்தியில் தாரணை ஆகி உள்ளது, விருட்சம், நாடகத்தின் ஞானம் என்னிடம் உள்ளது. எனவே தான் என்னை ஞானக்கடல் என்று கூறுகிறார்கள். படைப்பினுடைய முதல் இடை, கடை பற்றிய ஞானம் என்னிடம் உள்ளது. என்னை தூய்மையின் கடல் என்றும் கூறுகிறார்கள். பதீத பாவனர் என்றும் என்னை தான் கூறுகிறார்கள். அவர் வந்து முழு பாரதத்தை தூய்மையாக்குகிறார். இது இராஜயோகம் மற்றும் ஞானம் ஆகும். சட்டவியல் படிக்கிறார்கள் என்றால் அதற்கு சட்டவியல் யோகம் (படிப்பு) என்பார்கள். ஏனெனில் அந்த படிப்பின் மூலமாகத் தான் சட்டநிபுணர் ஆகி விடுகிறார்கள். இந்த தந்தை கூறுகிறார், குழந்தைகளாகிய உங்களுக்கு வந்து இராஜயோகம் கற்பிக்கிறேன். இராஜாக்கள் கூட எல்லோரும் பகவானை நினைவு செய்கிறார்கள். பகவானிடமிருந்து என்ன கிடைக்கும்? அவசியம் சொர்க்கத்தின் ஆஸ்தி கிடைக்க வேண்டும்.பரமபிதா பரமாத்மாவின் அறிமுகம் உள்ளதா என்று நீங்கள் எல்லோரையும் கேட்கிறீர்கள். அந்த தந்தை படைப்பு கர்த்தா ஆவார். எனவே அவசியம் சொர்க்கத்தைப் படைத்திருக்கக் கூடும் மற்றும் சொர்க்கத்தின் அரசாட்சியைத் தருகிறார். அது குழந்தைகளாகிய நமக்கு கிடைத்திருந்தது. இப்பொழுது இல்லை. மீண்டும் அடைந்து கொண்டிருக்கிறோம். எப்படி முந்தைய கல்பத்தில் பாரதவாசிகள் அடைந்திருந்தார்கள். இப்பொழுது மீண்டும் பாரதவாசிகள் எடுக்க வேண்டி உள்ளது. (நாரதரின் உதாரணம்) வைகுண்டம் போகலாமா என்று குழந்தைகளாகிய நீங்களும் கேட்கிறீர்கள். பகவானிடமிருந்து புதிய உலகத்தின் ஆஸ்தி பெறுவீர்களா? பாரதத்திற்கு தான் ஆஸ்தி கிடைத்திருந்தது. இப்பொழுது இல்லை. வேறு யாருக்கும் கிடைக்க முடியாது. ஏனெனில் பாரதம்தான் பகவானின் ஜன்ம பூமி ஆகும். எனவே தானம் முதலில் தனது வீட்டில்தான் துவங்கும். இங்கு இருப்பவர்களுக்குத் தான் கொடுப்பார். ஆனால் நிறைய சகோதரிகளால் புரிய வைக்க முடிவதில்லை. நிறைய குழந்தைகளுக்கு சாட்சாத்காரம் கூட செய்விக்கிறார். நீங்கள் வைகுண்டத்தில் இளவரசர் இளவரசி ஆகிறீர்கள் என்று காண்பிக்கிறார். இது இருப்பதே மனிதனிலிருந்து இளவரசர் ஆவதற்கான பாடசாலை. இளவரசர் ஆவது அல்லது ராஜா ஆவது இரண்டும் ஒரே விஷயம் தான். முயற்சி (புருஷார்த்தம்) செய்து இது போல ஆகுங்கள் என்பதற்காக இந்த சாட்சாத்காரம் ஆகிறது. தந்தையின் ஸ்ரீமத் படி நடந்து புருஷார்த்தம் செய்யுங்கள். கிருஷ்ணரை பார்த்து விட்டீர்கள் அவ்வளவே! இது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. அந்த மாதிரி முன்பெல்லாம் நிறைய பார்த்தார்கள். பின் போய் விட்டார்கள். சாட்சாத்காரம் ஆகியது. பிறகு படிப்பது இல்லை. அவர்களைப் போல ஆவது இல்லை. இந்த அளவு புருஷார்த்தம் செய்வதில்லை. ஏனெனில் பூதங்களின் தாக்குதல் உள்ளது. தேக அபிமானம் என்ற கடுமையான பூதம் உள்ளது. நாடகம் முடிவடைகிறது. நாம் 84 பிறவிகளின் பாகத்தை முடித்து விட்டோம். இப்பொழுது நான் இந்த பழைய சட்டையை (சரீரம்) விடுகிறேன் என்பது புத்தியில் இருக்க வேண்டும். இது மட்டும் நினைவு வந்தது என்றால் கூட ஆஹா, பாக்கியம்! அளவு கடந்த குஷி இருக்கும். இப்பொழுது நாம் திரும்ப முக்தி தாமம் செல்கிறோம். இது யாருடைய புத்தியிலும் பதிய முடியாது. சந்நியாசிகளும் இருக்கிறார்கள் தான். அவர்கள் நாங்கள் சரீரத்தை விட்டு பிரம்மத்துடன் கலந்து போய் விடுவோம் என்று கூறுகிறார்கள். ஆனால் தத்துவத்தை நினைவு செய்வதால் விகர்மங்கள் விநாசம் ஆகாது. பிறகு எவ்வாறு திரும்பிச் செல்ல முடியும்! அழைத்து செல்பவர் ஒரே ஒரு இராமர் ஆவார். எல்லா குழந்தைகளையும் அழைத்து செல்வார். தானாகவே யாரும் போக முடியாது. புருஷார்த்தம் (முயற்சி) செய்கிறார்கள். ஏனெனில் இந்த உலகத்தில் இருப்பது நல்லதாக தோன்றுவதில்லை. ஒரு சிலர் நாம் இந்த நாடகத்தில் வரவே வேண்டாம் என்று கூறுகிறார்கள். அனேக கருத்துகள், வழிகள் உள்ளன. குருமார்கள் ஆகியோர் கோடிக்கணக்கில் இருக்கிறார்கள். எல்லோருக்கும் அவரவர் வழிகள் உள்ளன. உங்களுடைய ஞானம் மிகவும் நன்றாக உள்ளது என்று கூறுகிறார்கள் தான். வெளியில் சென்றார்களோ அவ்வளவு தான் முடிந்து விட்டது. வருவதோ நிறைய பேர் வருகிறார்கள். ஆனால் அவர்களுடைய அதிர்ஷ்டத்தில் இல்லை. இவ்வளவு பதவியை எல்லாம் விட்டு விட்டு வருவது என்பது நடக்க முடியாது. எனவே ஏழைகள் தான் இந்த ஞானத்தை எடுக்கிறார்கள். இங்கோ குழந்தை ஆக வேண்டி உள்ளது. யாராவது ஒரு சந்நியாசி அல்லது குரு தனது இத்தனை சீடர்களையும் விட்டு விட்டு வந்து விடுவது என்பது கடினம். அதுவும் இது இல்லற மார்க்கம். ஆண் பெண் இருவரும் சேர்ந்து இருக்க வேண்டி உள்ளது. நிச்சய புத்தி உடையவர்கள் உடனே சோதிக்கப்படுகிறார்கள். குரு என்ற உணர்வை விடுகிறார்களா பார்ப்போம். பாபாவினுடையவராக ஆக வேண்டி உள்ளது அல்லவா? பாபா அனைவருக்கும் புரிய வைப்பதற்கான எளிய உபாயத்தைக் கூட புரிய வைக்கிறார். பரமபிதா பரமாத்மாவுடன் உங்களுக்கு என்ன சம்பந்தம் உள்ளது என்று மட்டும் கேட்க வேண்டும். அவர் அவசியம் முக்தி ஜீவன் முக்தி அளிப்பார். மனிதர் மனிதருக்கு கொடுக்க முடியாது. பாபாவிடமிருந்து ஆஸ்தி எடுக்க வேண்டுமென்றால் வந்து கற்றுக் கொள்ள வேண்டி இருக்கும். ஸ்ரீமத் என்ன கூறுகிறதோ அவ்வாறே செய்வோம். முதலாவதாக நிச்சய புத்தி வேண்டும். பின் ஸ்ரீமத் என்ன கிடைக்கிறதோ அதன்படி நடக்க வேண்டும். ஏராளமானோர் வருகிறார்கள். இது மிகவும் நல்ல விசயம் என்கிறார்கள், ஆனால் சுயம் தாங்கள் அதில் உறுதியாக நிற்கிறார்களா என்ன? தங்களுடைய ஆலோசனையை மட்டும் கொடுத்து விட்டுச் சென்று விடுகிறார்கள். இவர்கள் யாருடைய வழிப்படி நடந்து கொண்டிருக்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரிய வருவதில்லை. இப்பேர்ப்பட்ட கண்காட்சியோ ஆங்காங்கே வைக்க வேண்டும் என்பார்கள். ஆலோசனை கூற முற்படுவார்கள். அட! இறைவனுக்கு யாராவது ஆலோசனை கூறுவார்களா என்ன? ஆனால் ஆலோசனை கூறுவதற்கான அப்பியாசம் (பழக்கம்) ஏற்பட்டுள்ளது. மற்றபடி சுயம் தாங்கள் அமர்ந்து புரிந்து கொள்ளலாம் என்பது இல்லை. இங்கு எந்த வழியும் (ஆலோசனை) அளிக்க வேண்டியதில்லை. ஸ்ரீமத்படி நடக்க வேண்டும். முதலில் தந்தையினுடையவர் ஆக வேண்டும். பிறகு அவர் ஸ்ரீமத் அளிப்பார் அதன்படி நடந்து கொள்ள வேண்டும். பின் யாருக்காவது புரிய வைக்கும் பொழுது நான் ஸ்ரீமத்படி நடக்க வேண்டும் என்று அவர் எழுதிக் கொடுக்க வேண்டும். அப்பொழுது அவர் ஏதோ கொஞ்சம் சரியாகப் புரிந்து கொண்டுள்ளார் என்று நினைக்கலாம். வருவதோ ஏராளமானோர் வருகிறார்கள். ஆனால் நல்ல முறையில் புரிந்து கொள்வது இல்லை. ஞான வழி தருபவருடையவராக ஆவது இல்லை. இந்த சமயத்தில் எல்லோரும் பக்தியின் வழியில் நடப்பவர்களாக இருக்கிறார்கள். ஜபம், தவம், பாராயணம் ஆகியவை எல்லாம் பக்திக்காகச் செய்கிறார்கள். பகவானை அடைவதற்காக நீங்கள் அரைக் கல்பம் பக்தி செய்துள்ளீர்கள் என்று பகவான் கூறுகிறார். எல்லோரும் பக்தர்களாக இருக்கிறார்கள். பகவானோ ஒரே ஒருவர் ஆவார். அந்த ஒருவரைத் தான் பதீத பாவனர் என்று கூறுகிறார்கள். எனவே சுயம் தாங்கள் அனைவரும் தூய்மையற்றவர்களாக இருக்கின்றீர்கள். இது இராவண இராஜ்யம் ஆகும். இந்த கல்பத்தின் சங்கமத்திற்கு தான் பாடல் (மகிமை) உள்ளது. கல்பத்தின் சங்கம யுகே - யுகே தந்தை வருகிறார்.சத்யுகம் என்பது கல்யாணகாரி சொர்க்கம், கலியுகம் என்பது அகல்யாணகாரி நரகம். இராவணன் அகல்யாணகாரி ஆவான். இராமர் கல்யாணகாரி (நன்மை செய்பவர்) ஆவார். இந்த ஞானம் குழந்தைகளின் புத்தியில் சிந்தனை ஓடிக் கொண்டே இருக்க வேண்டும். பாவம், ஒன்றும் அறியாமல் இருக்கிறார்கள். அவர்களுக்குப் போய் நன்மை செய்ய வேண்டும் என்ற கவலை (ஆர்வம்) இருக்க வேண்டும். ஒரு சில குழந்தைகளிடம் உள்ள குறைகளினால் மற்ற எல்லோரும் துன்பத்துக்குள்ளாகின்றனர், தொல்லைபடுகின்றனர். பாபா இன்னாரிடம் இந்த அவகுணம் உள்ளது என்கிறார்கள். நிறைய சமாசாரம் வருகிறது. பாபா கூறுவது என்னவென்றால் செய்திகளைக் கொடுங்கள். அப்பொழுது எச்சரிக்கை கிடைக்கும். ஏதாவது அவகுணம் உள்ளது என்றால் சேவை குறைவாகச் செய்வார்கள். தற்சமயத்தில் நன்றாக படித்த வித்துவான் பண்டிதர்கள் கூட நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்கள் மிகவும் புத்தி கூர்மையுள்ளவர்களாக இருப்பார்கள். பக்குவமில்லாத குழந்தைகள் புத்தியை கெடுத்து விடுவார்கள். எனவே புத்தி நுட்பமுடைய கூர்மையான குழந்தைகளையே அழைக்கிறார்கள். இவர்கள் நம்மை விட புத்திசாலிகள் என்பதைப் புரிந்துள்ளார்கள். கண்காட்சிகள் பற்றிய செய்திகளைக் கூட பாபா கேட்டுக் கொண்டே இருப்பார். யார் யார் நன்றாக சேவை செய்கிறார்கள், இதில் மிகவும் புத்திசாலிகள் வேண்டும். நீங்கள் சாஸ்திரங்கள் ஆகியவை படிக்கிறீர்களா என்று யாராவது கேட்டால் கூறுங்கள் - ஆம், இவைகளை நாங்கள் அறிந்திருக்கிறோம். இந்த வேத சாஸ்திரங்கள் எல்லாமே பல பிறவிகளாக படித்துக் கொண்டே வந்துள்ளோம். இப்பொழுது எதுவுமே படிக்காதீர்கள் என்று நமக்கு பாபாவின் டைரக்ஷ்ன் (உத்தரவு) உள்ளது. நான் என்ன கூறுகிறேனோ அதைக் கேளுங்கள். என்னுடைய வழிப்படி நடங்கள். என்னை நினைவு செய்யுங்கள். அப்பொழுது விகர்மங்கள் விநாசம் ஆகும். இப்பொழுது மரணம் எதிரிலேயே நின்றுள்ளது. நான் உங்களை அழைத்துச் செல்ல வந்துள்ளேன். நான் உங்கள் தந்தை ஆவேன். உங்களுக்கு முக்தி ஜீவன் முக்தியை அளிப்பேன். ஒவ்வொருவரும் நாடகப்படி முதலில் முக்தியில் செல்ல வேண்டும். பின் ஜீவன் முக்தி சதோபிரதானத்தில் வருகிறீர்கள். எனவே அனைவரின் சத்கதி தாதா (சத்கதி அளிக்கும் வள்ளல்) சர்வோதயா (அனைத்துமாயிருப்பவர், அனைவருக்கும் கருணை காட்டுபவர்) என்று கூறப்படுகிறது. சர்வ என்பதில் முழு உலகம் வந்து விடுகிறது. சர்வ என்றால் முழு உலகத்தின் தந்தை புரிய வைக்கிறார் - அவர்கள் அனைவரும் குறுகிய கால எல்லைக்குட்பட்ட சேவை செய்பவர்கள். எல்லையில்லாத சர்வோதயா லீடர் - தலைவரோ ஒரே ஒருவர் ஆவார். முழு உலகத்தின் மீது தயை புரிந்து உலகத்தை மாற்றுபவர் ஆவார். பாபா நம்மை உலகிற்கு அதிபதியாக ஆக்க வந்துள்ளார் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். என்றும் நிரந்தரமாக ஆரோக்கியம், செல்வம் உடையவர்களாக ஆகி விடுவீர்கள். ஆனால் இந்த அளவு கூட யாருடைய புத்தியிலும் பதிவதில்லை. இரண்டு வார்த்தைகள் பதிந்தாலும் கூட நல்லது தான். நாம் பகவான் தந்தையின் குழந்தைகள். பகவானிடமிருந்து சொர்க்கத்தின் ஆஸ்தி கிடைக்க வேண்டும். முந்தைய கல்பத்தில் கிடைத்திருந்தது. இப்பொழுது இல்லை. மீண்டும் கிடைத்துக் கொண்டிருக்கிறது. என்னை நினைவு செய்யுங்கள். ஆஸ்தியை நினைவு செய்யுங்கள் என்று தந்தை கூறுகிறார். நான் உங்களுடைய எல்லையில்லாத தந்தையாவேன், இதே மந்திரத்தை ஒருவருக்கொருவர் கொடுங்கள். தர்ம ஸ்தாபனைக்காக கஷ்டப்பட வேண்டி இருக்கும் தான். இப்பொழுது நாடகம் முடிவடைகிறது என்பது புத்தியில் இருக்க வேண்டும். இன்னும் சிறிது காலமே மீதி உள்ளது. நமது வீட்டிற்குச் செல்ல வேண்டும். பிறகு புதியதாக நமது நடிப்பின் பாகம் ஆரம்பமாகும். இது புத்தியில் இருந்தது என்றால் மிகவும் நல்லது.இனிமையிலும் இனிமையான செல்லக் குழந்தைகளுக்கு தாய் தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம்.குழந்தைகளாகிய உங்களுடைய ஒவ்வொரு அடியிலும் கோடி நன்மை நிரம்பி உள்ளது. மிகவும் சக்தி வாய்ந்த சம்பாத்தியம் ஆகும். சுயம் பகவான் சம்பாத்தியம் செய்வதற்கான ஆலோசனை தருகிறார். ஆலோசனைப் படி நடப்பதால் சொர்க்கத்திற்குப் போய் சேர்ந்து விடுவீர்கள். ஆனால் சொர்க்கத்தில் கூட உயர்ந்த பதவி அடையவேண்டும். இது மௌனமாக இருந்து செய்ய வேண்டிய சம்பாத்தியம் ஆகும். கர்ம இந்திரியங்கள் மூலமாக கர்மம் செய்யுங்கள். ஆனால் இதயம் மணமகன் பக்கம் இருக்கட்டும். அவ்வளவே, படகு கரையேறி விடும். மிகவும் சக்தி நிறைந்த சம்பாத்தியம் ஆகும். தந்தையின் சேவையில் இருப்பதால் தானாகவே நிறைய சம்பாத்தியம் ஆகிறது. நல்லது.இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தாய் தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.தாரணைக்கான முக்கிய சாரம்:

1. இப்பொழுது இந்த நாடகம் முடிவடைந்தது. நாம் திரும்பி முக்தி தாமத்திற்குச் செல்ல வேண்டும். இந்த குஷியில் இருந்து பழைய தேகத்தின் அபிமானத்தை விட்டு விட வேண்டும்.2. ஒரு தந்தையின் வழிப்படி நடக்க வேண்டும். தந்தைக்கு நமது வழியைக் கூறக் கூடாது. நிச்சய புத்தி உடையவராக ஆகி தந்தையிடமிருந்து கிடைத்திருக்கும் ஸ்ரீமத்படி நடந்து கொண்டே இருக்க வேண்டும்.வரதானம்:

ஆகாரி (ஃபரிஸ்தா) மற்றும் நிராகார (அசரீரி) ஸ்திதிக்கான பயிற்சியின் மூலம் குழப்பமான சூழ்நிலையிலும் உறுதியாக இருக்கக் கூடிய பாப்சமான் ஆகுக.எவ்வாறு சாகாரத்தில் இருப்பது இயற்கையாக ஆகிவிட்டதோ அதே போன்று நான் ஆகாரி ஃபரிஸ்தா மற்றும் நிராகார சிரேஷ்ட ஆத்மா என்ற இரண்டு நினைவும் இயற்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் சிவபாபா நிராகாராக மற்றும் பிரம்மா பாபா ஆகாரியாகவும் இருக்கின்றார். இருவரின் மீதும் அன்பு இருக்கிறது எனில் சமமாக ஆகுங்கள். சாகாரத்தில் இருந்தாலும் அவ்வப்பொழுது ஆகாரியாகவும், அவ்வப்பொழுது நிராகாரிக்கான பயிற்சியும் செய்யுங்கள். இந்த பயிற்சி தான் குழப்பமான சூழ்நிலையிலும் உறுதியானவர்களாக ஆக்கி விடும்.சுலோகன்:

தெய்வீக குணங்களை பிராப்தியாக (பலனாக) அடைவது தான் பிரபுவின் சர்வ சிரேஷ்ட (எல்லாவற்றிலும் உயர்ந்த) பிரசாதமாகும்.

***OM SHANTI***

Whatsapp Button works on Mobile Device only