01 March 2017

BK Murli 2 March 2017 Tamil

BK Murli 2 March 2017 Tamil

02.03.2017    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


இனிமையான குழந்தைகளே! தந்தை, ஆசிரியர், சத்குரு மூவரும் ஒன்றாக விளங்கக் கூடிய தந்தை கிடைத்துள்ளார். ஆகையால் இப்போது அலைந்து திரிவதை விட்டு விட்டு, உண்மையிலும் உண்மையான வருமானத்தில் ஈடுபடுங்கள்.கேள்வி:

புதிய உலகத்தில் ராஜ்யத்தை ஆளக்கூடிய தகுதி வாய்ந்தவர்களாக யார் ஆகின்றனர்?பதில்:

சர்வசக்திவான் தந்தையிடம் அனைத்து சக்திகளையும் பிராப்தி செய்பவர்களே புதிய உலகத்தில் ராஜ்யத்தை ஆளக்கூடிய தகுதி வாய்ந்தவர்கள் ஆவர். குழந்தைகளாகிய நீங்கள் ஆன்மீக போர் வீரர்கள் ஆவீர்கள். தந்தையின் வழிப்படி தம்முடைய ராஜ்யத்தை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறீர்கள். யோக பலத்தின் மூலம் நீங்கள் வெற்றி பெறுங்கள் என்று தந்தை உங்களுக்கு ஸ்ரீமத் கொடுக்கிறார்.கேள்வி:

எந்த குழந்தைகளின் ஒவ்வொரு அடியிலும் வருமானம் சேமிப்பு ஆகிறது?பதில்:

ஒவ்வொரு கர்மமும் ஸ்ரீமத்படி செய்யக்கூடியவர்களின் ஒவ்வொரு அடியிலும் வருமானமே வருமானம் ஆகும். நினைவில் இருப்பதும் வருமானம், சேவை செய்வதும் வருமானம், யக்ஞ சேவை செய்வதும் வருமானமே.பாடல்:

ஒம் நமோ சிவாய....ஓம் சாந்தி.

இப்போது குழந்தைகளாகிய உங்களுக்கு இது தெரிந்துள்ளது - ஒருவர் லௌகீக தந்தை, மற்றவர் பரலௌகீக தந்தை ஆவார். எந்த ஒரு துக்கம் ஏற்பட்டாலும் பரலௌகிக தந்தை, தாயை நினைவு செய்யப்படுகிறது. சிலர் பரமாத்மாவை மட்டும் நினைவு செய்கின்றனர். சிலரோ நீங்கள் தாயும் தந்தையும்... என்று கூறுகின்றனர். யாரேனும் தாயை நினைவு செய்யலாம், செய்யாமலும் இருக்கலாம். ஆனால் இறைத்தந்தை என்று கூறுகின்றனர் என்றால் கண்டிப்பாக தாய் இருக்கவே செய்கிறார். தாய் இல்லாமல் குழந்தைகள் பிறக்கவும் முடியாது. ஆக, பரலௌகீக தாய் தந்தை இருக்கிறார்கள், அவரை நினைவு செய்யப்படுகிறது. அவசியம் அவர் சிறிதளவு சுகத்தைக் கொடுத்துச் சென்றுள்ளார். பாரதம் சுகதாமமாக, சொர்க்கமாக இருந்தது என்று நினைவு வருகிறது. லௌகீக தாய் தந்தையிடமிருந்து துக்கம் கிடைக்கிறது. ஆகவே பரலௌகீக தந்தையை நினைவு செய்யப்படுகிறது, ஏனென்றால், அவரிடமிருந்து நிறைய சுகம் கிடைக்கிறது. நரகத்தில் உள்ளனர், எனவே மீண்டும் சொர்க்கத்திற்குச் சென்று அளவற்ற சுகத்தை அடையலாம் என்று நினைவு செய்கின்றனர். குருமார்கள் கூறுகின்றனர் - ஜபம், தவம், பக்தி முதலானவைகளைச் செய்யுங்கள். பாபாவோ அப்படிப்பட்ட வழியைக் கொடுப்பதில்லை. படிப்பதற்காக ஆசிரியரிடம் செல் என்றும், பின் வானப்பிரஸ்த (வயோதிக) நிலை ஏற்பட்டால் ஏதாவது குருவிடம் செல் என்றும் லௌகீக தந்தையர் கூறுவார்கள். பாபா உங்களை அப்படி செய்யச் சொல்வதில்லை. லௌகிக மற்றும் பரலௌகீக தந்தையரிடையே எவ்வளவு வித்தியாசம் உள்ளது பாருங்கள். அவர்கள் எவ்வளவு அலைய வைக்கின்றனர். இவரோ நான் உங்களுடைய தந்தையாகவும், ஆசிரியர், சத்குருவாகவும் உள்ளேன் எனும் போது உங்களை எவ்வாறு அலைய வைப்பேன்? என்று கூறுகிறார். இவர் தானே இந்த மூவருமாக உள்ளார். ஆகையால் இவரை அனைவரும் நினைவு செய்கின்றனர். மனிதர்கள் பக்தி மார்க்கத்தில் அதிக ஏமாற்றத்தை அடைகின்றனர். ஞான மார்க்கத்தில் அடிதடி சண்டை போன்ற விஷயமே இல்லை. இந்த பக்தி மற்றும் ஞானம், துக்கம் மற்றும் சுகத்தினுடைய விளையாட்டு உருவாக்கப்பட்டுள்ளது. அதை குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார். எல்லைக்குட்பட்ட ஆசிரியர் எல்லைக்குட்பட்ட படிப்பை படிப்பிக்கிறார். நான் எல்லைக்கப்பாற்பட்ட ஆசிரியர் ஆவேன். உங்களுக்கு எல்லைக்கப்பாற்பட்ட படிப்பை படிப்பிக்கிறேன். இது மரண லோகமாக உள்ளது என்று நீங்கள் அறிவீர்கள். அவர்கள் படிக்கும் படிப்பு பழைய உலகத்திற்காக மற்றும் நான் சொல்லிக்கொடுப்பது அனைத்தும் புதிய உலகத்திற்காக. இந்த உலகம் நாளுக்கு நாள் பழையதாக ஆகியபடி இருக்கும். இதில் சுகம் ஒரு போதும் கிடைப்பதே இல்லை. சுகம் மற்றும் துக்கத்தின் இந்த விளையாட்டு எப்படி உருவாக்கப்பட்டுள்ளது என்பதை தந்தைதான் புரிய வைக்கிறார். தந்தை ஆத்மாக்களிடம் பேசுகிறார் - குழந்தைகளே! நீங்கள் தான் சுகத்தில் இருந்தீர்கள். பிறகு இராவணனின் பிரவேசம் ஏற்படும்போது மெல்ல மெல்ல துக்கம் தொடங்குகிறது. பின் கல்பத்தின் சங்கம யுகத்தில் வந்து உங்களை சுகத்தில் அழைத்துச் செல்கிறேன். இப்போது உங்களுடைய புத்தியின் பூட்டு திறக்கப்பட்டுள்ளது. நீங்கள் அறிந்துள்ள அனைத்து விஷயங்களும் சரியானதாகும். இதை தந்தையைத் தவிர வேறு யாராலும் கூற முடியாது. பாபாதான் வந்து குழந்தைகளாகிய உங்களுக்கு சுகத்தைக் கொடுக்கிறார். ஆத்மா அழிவற்றது என்பதை இப்போது நீங்கள் அறிவீர்கள். இந்த சரீரம் மாற வேண்டியுள்ளது. பரமாத்மாவும் பரம் ஆத்மா ஆவார். அவரது பெயர் சிவன் ஆகும். மனிதர்கள் அனைவரையும் படைப்பவர் ஆவார். இங்கே உள்ள அனைவரும் எல்லைக்குட்பட்ட படைப்பவர் ஆவார்கள். பாபா எல்லைக்கப்பாற்பட்ட படைப்பவர் ஆவார்.சத்யுகத்திலிருந்து கலியுகம் வரை கிடைத்திருந்த தந்தையர் அனைவரும் எல்லைக்குட்பட்டவர் ஆவர். உங்களுடைய பலன் சத்யுகத்தில் உள்ளது. அங்கே உங்களுக்கு ஒரு தந்தை, ஒரு குழந்தை கிடைக்கும். கலியுகத்தில் ஒரு தந்தைக்கு 8-10 குழந்தைகள் இருப்பார்கள். பிரஜாபிதா பிரம்மாவுக்கு எவ்வளவு குழந்தைகள் உள்ளனர் பாருங்கள். ஆனால் அவர்கள் வாய் வம்சாவளியினர். அவர்கள் பிரம்மா குமார்/குமாரிகள் ஆகின்றனர். பிறகு சத்யுகத்தில் சென்று தேவதைகள் ஆவார்கள். அந்த லௌகிக தந்தை, ஆசிரியர், குரு அனைவரும் எல்லைக்குட்பட்ட விஷயங்களைக் கூறுகின்றனர். இந்த பாரலௌகிக தந்தை எல்லைக்கப்பாற்பட்ட விஷயங்களைக் கூறுகிறார். புதிய விஷயங்களை தந்தை குழந்தைகளுக்கு முன்பாகத்தான் கூறுவார். வீட்டில் இருந்தாலும் கூட நீங்கள் இந்த புதிய் கல்வியை பிராப்தி செய்யுங்கள். இது பகவானுடைய பாடசாலையாகும். இது பகவத் கீதா பாடசாலை அல்லது ஞானத்தின் பாடல்கள். அதை நீங்கள்தான் கேட்கிறீர்கள். ஞானக்கடல் தந்தைதான் வந்து உங்களை ஞான-ஞானேஸ்வரியாக ஆக்குகிறார். மம்மாவை ஞான ஞானேஸ்வரி என்று கூறுகிறோம். மனித குலம் ஆரம்பம் ஆகின்றது. முதலில் பிரஜாபிதா பிரம்மா, பிறகு ஜகதம்பா ஆவார். முதன் முதலில் பிராமணர்களை படைக்கிறார், பிறகு தேவதைகள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்கள். ஜகதம்பாவுடையதும் கூட பெரிய பதவி ஆகும். ஆனால் அவரை யாரும் அறிவதே இல்லை. அதிகமான தேவதைகளின் சித்திரங்களை உருவாக்கி விட்டுள்ளனர். உண்மையில் 8-10 புஜங்கள் உள்ள மனிதர்கள் யாரும் இருப்பதே இல்லை. விஷ்ணுவிற்கு நான்கு புஜங்களைக் காட்டியுள்ளனர். ஆனால் 4 கால்களைக் காட்டுவதில்லை. இவையனைத்தும் பொம்மைகளின் விளையாட்டாகும். கல்கத்தாவில் நிறைய தேவிகளை சித்திரங்களை உருவாக்குகின்றனர். நிறைய செலவு செய்கின்றனர். சாப்பிட, குடிக்க வைத்துவிட்டு, பிறகு நீரில் மூழ்கடித்து விடுகின்றனர். இவையனைத்தும் பக்தி மார்க்கமாகும். நாமே தேவி, தேவதைகளாக இருந்தோம். பிறகு அசுரர்கள் ஆகி விட்டோம். பின் தந்தை வந்து நம்மையே தேவி தேவதைகளாக்குகிறார். இப்போது இது பிரஷ்டாச்சாரி (கீழான) உலகமாக உள்ளது. அரசாங்கமும் கூறுகிறது. ஆனால் நீங்கள் தூய்மையற்றவரா? என்று நேரடியாகக் கேட்டீர்கள் என்றால் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். நீங்கள் பதீத பாவனரை அழைக்கிறீர்கள். அனைவரும் அழைக்கின்றனர். ராஜா ராணி எப்படியோ அப்படியே பிரஜைகளும் ஆவார்கள். சன்னியாசிகள் தூய்மையாகின்றனர். இதுவும் கூட நாடகத்தில் பதிவாகியுள்ளது. பாரதத்தைப் போன்ற தூய்மையான கண்டம் எதுவும் இருப்பதே இல்லை. ஆகையால் அது உண்மையான கண்டம் என்று கூறப்படுகிறது. பிறகு அதுவே பொய்யான கண்டம் ஆகிறது. பாரதத்தை தூய்மைப்படுத்துவதற்காக தந்தை பாரதத்தில்தான் வருகிறார். பாரதத்தில்தான் சிவனின் அவதாரம் ஏற்படுகிறது. எவ்வளவு பெரிய சோம் நாத் கோவில் கட்டியுள்ளனர். யாரை தந்தை அவ்வளவு செல்வந்தர்களாக ஆக்கியிருந்தாரோ அந்த பாரதவாசிகள்தான் கட்டியுள்ளனர். தந்தை தூய்மைப் படுத்துவதற்காக தூய்மையற்ற உலகில் மற்றும் தூய்மையற்ற உடலில் வருகிறார். ஆனால் பல குழந்தைகள் புரிந்து கொள்வதே இல்லை. ஏனென்றால் அவர் சாதாரணமாக உள்ளார். பின், பக்தி மார்க்கத்தில் உங்களிடம் நிறைய செல்வம் இருக்கும் போது வைர, வைடூரியங்களால் ஆன கோவில்களை நீங்கள் கட்டுகிறீர்கள். சத்யுகத்திலோ அளவற்ற செல்வம் இருக்கும். அங்கே பணத்திற்கு கணக்கே இல்லை. அளவற்ற செல்வம் இருக்கும். ஆக, தந்தை யாரை செல்வந்தர்களாக ஆக்குகிறாரோ அவர்கள் எவ்வளவு பெரிய நினைவுச் சின்னத்தை உருவாக்குகின்றனர். யார் முதலில் லட்சுமி நாராயணராக இருந்தார்களோ அவர்கள் 84 பிறவிகள் எடுக்கின்றனர். முதலாவதாக அவர்கள் கீழே விழுகின்றனர். பக்தர்கள் ஆகின்றனர். ஆக, யார் அப்படி ஆக்கினாரோ அவரது நினைவுச்சின்னத்தைத் தான் உருவாக்குகின்றனர். லட்சுமி நாராயணர் பாவ கர்மங்களை வென்றவராக ஆகினர், பிறகு அவர்களே பாவம் செய்பவர் ஆகின்றனர். எனவே அவர்களது கடமை, யாரால் இப்படி ஆகினார்களோ அவரின் பூஜையைச் செய்வது. சோம்நாத்தின் கோவில் எவ்வளவு முதல் தரமானதாக இருந்தது. யார் கொள்ளை அடித்தனரோ அவர்கள் இறந்து விட்டனர். மற்றபடி அடையாளங்கள் ஏற்பட்டுள்ளன. நாமே பூஜைக்குரியவர் ஆகிக்கொண்டிருக்கிறோம், பிறகு பூஜாரி ஆவோம், அதன் பின் கோவில்கள் கட்டத்தொடங்குவீர்கள். ஒரு கோவில் மட்டும் இருப்பதில்லை. இராஜாக்கள் தன்னுடைய வீட்டில் கூட கோவில்களை கட்டுகிறார்கள். வீட்டில் குருத்வாரா கட்டுவது போலாகும். யார் முதலில் குருத்வாரா கட்டினார்களோ பிறகு பக்தி மார்க்கம் அதிலிருந்து ஆரம்பமாகிறது. முதலில் அவிபச்சாரி பக்தி (ஒருவரை வணங்குதல்) செய்கின்றனர். பிறகு விபச்சாரி பக்தி (பலரை வணங்குதல்) செய்கின்றனர். இன்றைய காலத்தில் மனிதர்கள் தனக்கும் கூட பூஜை செய்விக்கின்றனர். அது பூத பூஜை என்று சொல்லப்படுகிறது. பூத பூஜை கூட உலகத்தில் நிறைய நடக்கிறது. எப்படி வருகிறதோ அப்படியே சித்திரங்களை உருவாக்கிக் கொண்டேபோகிறார்கள். பக்தி மார்க்கம் அல்லவா! இப்போது உங்கள் புத்தியில் முழு ஞானமும் இருக்கிறது. பாபா சங்கமயுகத்தில் ஒரு முறை தான் வந்து ஞானம் கொடுக்கின்றார். ஆனால் சாஸ்திரங்களில் பல அவதாரங்களை எழுதிவிட்டனர். ஒரு அவதாரம் தான் ஏற்படுகிறது. ஆத்மா கூட அவதரிக்கிறது. ஆனால் மனிதர்களை அவதாரம் என்று சொல்வதில்லை. ஒரே ஒரு நிராகார தந்தை தான் அவதாரம் ஆவார். அவரை முழு உலகமும் அழைக்கிறது. தந்தை ஒருவர் தான் இருப்பார் அல்லவா!, அவர் பந்தாமத்தில் இருக்கின்றார். ஆக தாயும் வேண்டும். தாயும் கூட பரந்தாமத்தில் இருப்பார்களா என்ன? இல்லை. தாய் தந்தை இங்கே வெளிப்படுகிறார்கள். தந்தை இங்கே வந்து படைக்க வேண்டியுள்ளது. ஆகையால், எல்லைக்கப்பாற்பட்ட தந்தையை நினைவு செய்கின்றனர். பாபா வந்து சொர்க்கத்தை படையுங்கள், அவரை சொர்க்கத்தை படைக்கும் இறை தந்தை என்று சொல்லப்படுகிறது. இப்போது எவ்வளவு துக்கம் சண்டை, அடிதடி ஏற்படுகிறது. ஆகையால், இறை தந்தையே இரக்கம் காட்டுங்கள் என்று அழைக்கின்றனர். ஓ! பதீத பாவனரே வாருங்கள் நாங்கள் அனைவரும் துக்கமானவர்களாக, தூய்மையற்றவர்களாக இருக்கிறோம். ஓ! பாபா மீண்டும் வந்து சொர்க்கம் சிரேஷ்டாச்சாரி உலகத்தை உருவாக்குங்கள். நீங்கள் அனைவரும் கீழானவர்களாக (பிரஷ்டாச்சாரி) இருந்தீர்கள், இப்போது உயர்ந்தவர்களாக (சிரேஷ்டாச்சாரி) ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். கீழானவர்களை உயர்வானவர்களாக ஆக்குவது ஒரு தந்தையின் காரியம் தான் ஆகும். யார் உலகத்தின் இறை தந்தையோ அவர் தெரிந்திருக்கிறார் - இந்த நேரம் அனைத்து குழந்தைகளும் அநாதையாக ஆகிவிட்டனர். அவர்களை பகவானுடையவர்களாக உயர்ந்தவர்களாக ஆக்க வேண்டும். 10-20 மனிதர்களை மட்டும் உயர்ந்தவர்களாக ஆக்குவதில்லை. பாரதம் சிரேஷ்டாச்சாரியாக இருந்த போது தெய்வீக அரசாங்கம் இருந்தது. இப்போது இராவண ராஜ்ஜியம் இருப்பதால் 5 விகாரங்கள் பிரவேசம் ஆகிவிட்டது. பகவானுடைய மகாவாக்கியம் - ஒரு நிராகார தந்தையைத்தான் பகவான் என்று சொல்லப்படுகிறது. ஒரு கீதையை கண்டனம்(தவறாக) செய்துவிட்டதால் அனைத்து சாஸ்திரங்களும் கண்டனம் ஆகிவிட்டது. பாபா சொல்கிறார் – நான் உங்களுக்கு எப்போது இராஜயோகம் கற்று கொடுத்தேனோ அப்போது பாரதம் சொர்க்கமாக உருவானது. நான்தான் கீதையை கூறியிருந்தேன். கிருஷ்ணரை முழு உலகத்தின் பகவான் என்று சொல்ல முடியாது. நம் ஆத்மாக்களின் தந்தையோ நிராகார பகவான் ஆவார். மற்றபடி கீதையின் பகவான் என்று ஸ்ரீகிருஷ்ணர் என்று எப்படி சொன்னார்கள்! வியாசர் எழுதினார் என்று சொல்கிறார்கள். ஆனால் பாபா சொல்கிறார் - ஞானக்கடல் பதீத பாவனராகிய நான்தான் புதிய உலகத்தை படைப்பவர் ஆவேன். என்னைத்தான் அனைத்து ஆத்மாக்களும் அழைக்கிறார்கள் - ஓ! பதீத பாவனன் பரமாத்மாவே வாருங்கள், வந்து எங்களை தூய்மையாக்குங்கள். நிராகார தந்தைதான் பிரம்மா மூலமாக தூய்மையான உலகத்தின் ஸ்தாபனை, தூய்மையற்ற உலகத்தின் வினாசம் செய்விக்கிறார். பிறகு யார் தூய்மையாகிறார்ளோ அவர்கள் தான் ராஜ்ய பாக்யத்தை அடைகிறார்கள். நீங்களோ சிவசக்தி சேனை, ஜகதம்பா பொறுப்பாளராக ஆகியிருந்தார். அவரும் இராவணனை வெற்றி கொள்வதற்காக சிவபாபாவோடு யோகம் செலுத்தி சக்தி பெற்றுக்கொண்டிருக்கிறார். பாரதத்தில் தான் இராவண ராஜ்யம் இருக்கிறது, பாரதத்தில் தான் இராவணனை எரிக்கின்றனர். பாரதம் சிரேஷ்டாச்சாரியாக இருந்தது, இங்கே கலியுகத்தில் பாரதம் பிரஷ்டாச்சாரியாக இருக்கிறது. பிரஷ்டாச்சாரியிலிருந்து சிரேஷ்டாச்சாரி மற்றும் சிரேஷ்டாச்சாரியிலிருந்து பிரஷ்டாச்சாரி. இது தான் விளையாட்டு. இந்த சக்கரம் எப்படி சுற்றுகிறது. மிகவும் புரிந்து கொள்ள வேண்டிய விஷயமாகும்.குழந்தைகளாகிய நீங்கள் தெரிந்திருக்கிறீர்கள் - நாம் அனைத்தையும் செய்து கொண்டே தந்தையின் ஸ்ரீமத் படி பாரதத்தை சொர்க்கமாக ஆக்கிக் கொண்டிருக்கிறோம். நீங்கள் யோகபலம் நிறைந்த ஆன்மீக போர் வீரர்கள். சர்வ சக்திவான் தந்தையின் வழிப்படி தன்னுடைய ராஜ்யத்தை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறீர்கள். பாபா வழி கொடுக்கின்றார் - யோக பலத்தின் மூலம் நீங்கள் வெற்றி அடைய முடியும். யோகத்தில் இருப்பது கூட வருமானமாகும். யக்ஞ சேவை செய்வது கூட வருமானமாகும். மற்ற அனைவரும் மனிதர்களின் வழிப்படி நடந்து கொண்டிருக்கிறார்கள் மற்றும் நீங்களோ சர்வ சக்திவான் தந்தையின் வழிப்படி நடந்து கொண்டிருக்கிறீர்கள். வேறு யாரும் உலகத்தின் மீது வெற்றி அடைய முடியாது. உலகத்தின் மீது ராஜ்யம் செய்வதற்கு நாடகத்தில் அவர்களின் பாகமே கிடையாது. எவ்வளவு பெரியதிலும் பெரிய மற்றும் சாதாரண விஷயங்களாகும். கண்காட்சியில் இப்போது வரை இந்த அளவு புரிந்து கொள்வதில்லை என்றாலும் பிரஜைகள் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். நல்லது!இனிமையிலும் இனிமையான காணாமல் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.தாரணைக்கான முக்கிய சாரம்:-

1) ஒவ்வொரு கர்மத்தையும் ஸ்ரீமத்படி செய்ய வேண்டும். நினைவில் இருந்து யக்ஞ சேவை செய்து தன்னுடைய வருமானத்தை சேமிக்க வேண்டும்.2) அலைந்து திரிவதை விட்டு எதிர்கால புது உலகத்திற்காக படிப்பை படிக்க வேண்டும். ஞானத்தை தாரனை செய்து ஞான-ஞானேஸ்வர், ஞான-ஞானேஸ்வரி ஆக வேண்டும்.வரதானம்.

ஆன்மிக சமூக சேவாதரியாக ஆகி குழப்பமான சமையத்தில் பரஸ்திதியை கடந்து செல்லக் கூடிய தைரியத்தை கொடுக்க கூடிய உண்மையான சேவாதரி ஆகுங்கள்.இப்போது மேலும் மேலும் சமையத்திற்கு ஏற்றார்போல் உலகத்தில் குழப்பங்கள் ஆதிகமாகி கொண்டே போகும் அசாந்தி மற்றும் ஹிம்சையினுடைய செய்திகளை கேட்டாலும் கேட்டுகொண்டு இருந்தாலும் ஆன்மிக சேவாதாரி குழந்தைகளாகிய நீங்கள் விஷேசமாக கவனமாக இருந்து தன்னுடைய சக்திசாலி எண்ணத்தின் மூலமாக அனைவர் மீதும்  மற்றும் பொறுமையின் சக்தியினுடைய தைரியத்தை நிரப்ப வேண்டும், லைட் ஹவுஸ் ஆகி அனைவருக்கும் சாந்தியினுடைய சக்தியை கொடுக்கவேண்டும், இந்த ஒரு பொறுப்பு என்பதை தீவிரமான வேகத்தில் பாலனை கொடுத்து அதன் மூலமாக ஆத்மாக்களுக்கு வழி கிடைக்க வேண்டும். திரிந்து கொண்டு இருக்கும் துக்கமான ஆத்மாகளுக்கு அந்த நெருப்பில் இருந்து குளிர்ச்சியான நீரை நிரப்பக்ககூடிய அனுபவம் செய்யட்டும்.சுலோகன்

அனைவருடைய மதிப்பை பெறுவதற்காக நீங்கள் பணிவுடையவர் ஆகுங்கள்,


***OM SHANTI***

Whatsapp Button works on Mobile Device only