02 March 2017

BK Murli 3 March 2017 Tamil

BK Murli 3 March 2017 Tamil

 03.03.2017 காலை முரளிஓம் சாந்தி பாப்தாதா, மதுபன்

இனிமையான குழந்தைகளே! பிராமணர்களாகிய நீங்கள் யக்ஞத்தை பாதுகாக்கக் கூடியவர்கள், இந்த யக்ஞம் தான் உங்களது மன விருப்பத்திற்கான பலனை கொடுக்கக் கூடியது.

கேள்வி:

எந்த இரண்டு விசயங்களின் ஆதாரத்தில் 21 பிறவிகளுக்கு அனைத்து துக்கங்களிலிருந்தும் தூர விலகி விட முடியும்?

பதில்:

அன்பாக யக்ஞ சேவை செய்யுங்கள் மற்றும் தந்தையை நினைவு செய்தால் 21 பிறவிகளுக்கு ஒருபொழுதும் துக்கமானவர்களாக ஆக மாட்டீர்கள். துக்கக் கண்ணீர் விடமாட்டீர்கள். குழந்தைகளாகிய உங்களுக்கு தந்தையின் ஸ்ரீமத் என்னவெனில் குழந்தைகளே, தந்தையைத் தவிர வேறு எந்த உற்றார் உறவினர்கள், நண்பர்கள் போன்றவர்களை நினைவு செய்யாதீர்கள். பந்தனமற்றவர்களாகி அன்பாக யக்ஞத்தை பாதுகாக்கும் பொழுது மன விருப்பத்திற்கான பலன் கிடைக்கும்.

பாட்டு:

குழந்தைப் பருவத்தை மறந்து விடாதீர்கள் ......

ஓம்சாந்தி.

இனிமையிலும் இனிய குழந்தைகள் பாட்டு கேட்டீர்கள் மற்றும் இதன் பொருளையும் புரிந்திருப்பீர்கள் - இது நமது ஈஸ்வரிய பிறப்பு, இந்த பிறப்பில் நாம் யாரை மம்மா, பாபா என்று கூறுகின்றோமோ அவர்களது வழிப்படி நடப்பதன் மூலம் தான் நாம் உலகிற்கு எஜமானர்களாக ஆவோம். ஏனெனில் அவர் புது உலகை படைக்கக் கூடியவர். இந்த நம்பிக்கையுடன் நீங்கள் இங்கு அமர்ந்திருக்கின்றீர்கள், மேலும் உலகத்தின் எஜமானனுக்கான ஆஸ்தி அடைந்து கொண்டிருக்கின்றீர்கள். இந்த பழைய உலகமானது விநாசம் ஆகக் கூடியது, இதில் எந்த சுகமும் கிடையாது. அனைவரும் விஷக் கடலில் மூழ்கிக் கொண்டிருக்கின்றனர். இராவணனின் சிறையில் துக்கமானவர்களாகி அனைவரும் இறக்க வேண்டும். இப்பொழுது தந்தை குழந்தைகளுக்கு ஆஸ்தி கொடுப்பதற்காக வந்திருக்கின்றார். நாம் யாருடையவர்களாக ஆகியிருக்கின்றோமோ அவரிடமிருந்து நாம் ஆஸ்தி அடைய வேண்டும் என்பதை குழந்தைகள் அறிவீர்கள். அவர் நமக்கு இராஜயோகத்தை கற்றுக் கொடுக்கின்றார். எவ்வாறு வக்கீல் நாங்கள் வக்கீல்களை உருவாக்குவோம் என்று கூறுகின்றனர். தந்தை கூறுகின்றார் -உங்களை சொர்கத்தில் இரட்டை கிரீடதாரிகளாக ஆக்குவேன். ஸ்ரீ லெட்சுமி நாராயணன் அதாவது அவர்களது ராஜ்யத்தின் ஆஸ்தியை கொடுப்பதற்காக வந்திருக்கின்றேன். அதற்காக நீங்கள் இராஜயோகத்தை கற்றுக் கொண்டிருக்கின்றீர்கள். இந்த விசயங்களை மறந்து விடாதீர்கள். மாயை மறக்க வைக்கும். பரம்பிதா பரமாத்மாவிடமிருந்து முகத்தை திருப்ப வைக்கும். அதன் தொழிலே இது தான். எப்பொழுதிலிருந்து அதன் ராஜ்யம் ஆரம்பமானதோ, நீங்கள் முகத்தை திருப்பி வந்தீர்கள். இப்பொழுது எந்த வேலைக்கு உதவாதவர்களாக ஆகிவிட்டீர்கள். முகம் மனிதனாக இருக்கலாம், ஆனால் தோற்றம் குரங்கு போன்று இருக்கின்றது. இப்பொழுது உங்களது முகம் மனிதர்கள் போன்ற தோற்றம், குணம் தேவதைகளைப் போன்று உருவாகிக் கொண்டிருக்கின்றன. ஆகையால் பாபா கூறுகின்றார் - குழந்தைப் பருவத்தை மறந்துவிடாதீர்கள். இதில் எந்த கஷ்டமும் கிடையாது. யார் பந்தனமற்றவர்களாக இருக்கின்றார்களோ அவர்கள் ஆஹா! சௌபாக்கியசாலிகள் என்று கூறலாம். அந்த லௌகீக தாய் தந்தை விகாரத்தில் கொண்டு செல்லக் கூடியவர்கள், மேலும் இந்த தாய் தந்தை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்பவர்கள். ஞானக் குளியல் செய்வித்துக்கொண்டிருக்கின்றார். ஓய்வாக அமர்ந்திருக்கின்றீர்கள். ஆம், சரீரத்தின் மூலம் காரியங்களும் செய்விக்க வேண்டும். எல்லையற்ற தந்தையிடமிருந்து ஆஸ்தி கிடைத்துக் கொண்டிருக்கின்றது, வேறு யாருடைய நினைவும் தொந்தரவு செய்வது கிடையாது. ஒருவேளை வேறு ஏதாவது பந்தனம் இருந்தால் பிறகு நினைவு தொந்தரவு செய்யும். ஏதாவது உறவினர்களின் நினைவு வரும், நண்பனின் நினைவு வரும், சினிமா நினைவிற்கு வரும் ...... உங்களுக்கு தந்தை கூறுகின்றார் - வேறு யாரையும் நினைவு செய்யாதீர்கள். யக்ஞ சேவை செய்யுங்கள் மற்றும் தந்தையை நினைவு செய்தால் 21 பிறவிகளுக்கு நீங்கள் ஒருபொழுதும் துக்கமடைய மாட்டீர்கள். துக்கக் கண்ணீர் விடமாட்டீர்கள். இப்படிப்பட்ட எல்லையற்ற தாய் தந்தையை ஒருபொழுதும் விட்டு விடக்கூடாது. யக்ஞ சேவை செய்ய வேண்டும். நீங்கள் யக்ஞ பாதுகாவலர்கள். யக்ஞத்தின் ஒவ்வொரு வகையான சேவையும் செய்ய வேண்டும். இந்த யக்ஞம் மன விருப்பப்படியான பலன் கொடுக்கின்றது. அதாவது ஜீவன்முக்தி, சொர்க்கத்தின் ராஜ்யத்தை கொடுக்கின்றது. ஆக இப்படிப்பட்ட யக்ஞத்தை எந்த அளவிற்கு பாதுகாக்க வேண்டும்! எவ்வளவு சாந்தியாக இருக்க வேண்டும்! யார் வந்தாலும் இங்கு சுகம் சாந்தி நிறைந்திருக்கின்றது என்று தோன்ற வேண்டும். இங்கு ஓசை எழுப்புவது முற்றிலும் பிரியப்படுவது கிடையாது. இராவண ராஜ்யத்திலிருந்து விடுபட்டு வந்திருக்கின்றோம், இப்பொழுது நாம் இராம ராஜ்யத்திற்குச் செல்கின்றோம். யார் பந்தனமற்றவர்களாக இருக்கின்றார்களோ அவர்கள் ஆஹா சௌபாக்கியசாலிகள். இலட்சாதிபதிகள், கோடிஸ்வரர்களை விட அவர்கள் மகான் பாக்கியசாலிகள், அவர்கள் எல்லையற்ற தந்தையிடமிருந்து ஆஸ்தி அடைகின்றனர். யாருடைய பந்தனம் துண்டிக்கப்பட்டுவிட்டதோ அவர்களையும் ஆஹா! சௌபாக்கியசாலிகள் என்று கூறலாம். யார் பந்தனமற்றவர்களாக ஆகி பாபாவிடமிருந்து ஆஸ்தி அடைகின்றார்களோ, அவர்களுக்கு எவ்வளவு அதிர்ஷ்டம் திறக்கப்பட்டுவிடுகின்றது! வெளியில் கொடூரமான நரகமாக இருக்கின்றது. அதில் துக்கத்தைத் தவிர வேறு எந்த சுகமும் கிடையாது. மற்ற அனைத்து கவலைகளையும் விட்டு விடுங்கள், யக்ஞ சேவை அன்பாக செய்யுங்கள் என்று தந்தை கூறுகின்றார். தாரணை செய்யுங்கள். முதலில் தனது வாழ்க்கையை வைரம் போன்று ஆக்கிக் கொள்ள வேண்டும். அது ஸ்ரீமத் மூலமாகத் தான் ஆகும். இங்கு அனைத்துக் குழந்தைகளும் பந்தனங்களிலிருந்து விடுபட்டு இருக்கின்றீர்கள். தனது சுபாவத்தையும் மிக நன்றாக வைத்துக் கொள்ள வேண்டும். சதோ பிரதானமாக ஆக வேண்டும். இல்லையெனில் சதோ பிரதான உலகில் உயர்ந்த பதவி அடைய முடியாது. யக்ஞத்திலிருந்து என்ன கிடைத்தாலும் அதனை சுவிகாரம் செய்ய வேண்டும். பாபா அனுபவியாக இருக்கின்றார். எவ்வளவு தான் பெரிய வைர வியாபாரியாக இருந்தாலும், எந்த ஆசிரமத்திற்குச் சென்றாலும் அந்த ஆசிரமத்தின் நியமப்படி முழுமையாக நடப்பார். எனக்கு இந்தப் பொருள் கொடுங்கள் என்று கேட்க மாட்டார். எந்த உணவு அனைவருக்கும் கிடைக்கின்றதோ அதுவே மிக ராயல்டியுடன் சாப்பிட்டார். இந்த ஈஸ்வரிய ஆசிரமத்தில் மிகவும் அமைதியாக இருக்க வேண்டும்.
யார் இறைவன் கூடவே இருக்கின்றார்களோ.... இங்கு இரண்டு பேரும் பாப்தாதா அமர்ந்திருக்கின்றனர். எதிரில் அமர்ந்து கேட்கின்றீர்கள். இப்பொழுது சேவைக்கு தகுதியானவர்களாக ஆகவில்லையெனில் கல்ப கல்பத்திற்கும் பதவி குறைந்து விடும். குருடர்களுக்கு ஊன்றுகோலாகி, இந்த மகா மந்திரத்தை அனைவருக்கும் கொடுக்க வேண்டும். இது தான் சஞ்சீவினி மூலிகையாகும். சிலரை மாயை முற்றிலுமாக மயங்கச் செய்து விடுகின்றது. இந்த யுத்த மைதானத்தில் தந்தை மற்றும் ஆஸ்தியை நினைவு செய்யுங்கள் என்று கூறப்படுகின்றது. இது சஞ்சீவினி மூலிகையாகும். நீங்கள் தான் ஹனுமானாக இருக்கின்றீர்கள். வரிசைக்கிரமமாக மகாவீரர்களாக ஆகின்றீர்கள். பலர் மயக்கத்தில் இருக்கின்றனர். அவர்களை விழிப்படையச் செய்ய வேண்டுமெனில் வாழ்க்கையை சிறிதாவது உருவாக்கிக் கொள்ள வேண்டும். தேகத்தின் மீதும் பற்றுதல் வைக்கக் கூடாது. தந்தை மற்றும் அழிவற்ற ஞான ரத்தினங்களின் மீது பற்றுதல் வைக்க வேண்டும். எந்த அளவிற்கு தாரணை ஏற்படுகின்றதோ அந்த அளவிற்கு மற்றவர்களையும் செய்விப்பீர்கள். தந்தை கூறுகின்றார் - எனக்கு ஞானி ஆத்மாக்கள் பிரியமானவர்களாக இருக்கின்றனர். கண்காட்சியின் சேவைக்காக பாபா ஞானி குழந்தைகளைத் தான் தேடுகின்றார். புரிய வைப்பது மிகவும் எளிது. பெரிய பெரிய மனிதர்கள் கேட்டு குஷியன்ட!ன்றனர். இந்த இயக்கத்தின் மூலம் வாழ்க்கை நல்லதாக ஆகின்றது என்று நினைக்கின்றனர். ஆனால் இதனையும் கோடியிலும் சிலர் தான் புரிந்து கொள்கின்றனர். இது எல்லையற்ற சந்நியாசமாகும். இந்த பழைய உலகில் எதையெல்லாம் பார்க்கின்றீர்களோ இவையனைத்தும் அழிந்து போய்விடும். இப்பொழுது தந்தையிடமிருந்து ஆஸ்தி அடைய வேண்டும். திரும்பிச் செல்ல வேண்டும். மீண்டும் நாம் சூரியவம்சத்தில் வந்து ராஜ்யம் செய்வோம். இராஜ்யம் செய்திருந்தோம், பிறகு மாயை அபகரித்து விட்டது. எவ்வளவு எளிதான விசயம்! இனிமையிலும் இனிய தந்தையை நினைவு செய்ய வேண்டும். உள்ளம் தந்தையிடத்திலேயே ஈடுபட்டிருக்க வேண்டும். மற்றபடி கர்மேந்திரியங்களின் மூலம் காரியங்கள் செய்தே ஆக வேண்டும். ஸ்ரீமத்படி நடக்க வேண்டும். செல்லமான, இனிமையிலும் இனிய குழந்தைகளே! தந்தை கூறுகின்றார் - வாயின் மூலம் சதா ஞான ரத்தினங்களை மட்டுமே வெளிப்படுத்துங்கள், கற்களை வெளிப்படுத்தாதீர்கள். உலகாய விசயங்கள் எதையும் வெளிப்படுத்தாதீர்கள். இல்லையெனில் வாய் கசப்பானதாக ஆகிவிடும். ஒருவருக்கொருவர் ரத்தினம் கொடுத்துக் கொண்டிருங்கள், உங்களிடத்தில் ரத்தினங்களின் பை இருக்கின்றது. அழியும் செல்வத்தை தானம் செய்கின்றனர். பாரதம் மகாதானி என்று கூறப்படுகின்றது. இந்த நேரத்தில் குழந்தைகளுக்கு தந்தை தானம் செய்கின்றார், குழந்தைகள் தந்தைக்கு தானம் செய்கின்றனர். பாபா, சரீர சகிதமாக இவை அனைத்தும் உங்களுடையது. பிறகு தந்தை கூறுகின்றார் - இந்த உலக ராஜ்யம் உங்களுடையது. இந்த பழைய உலகின் அனைத்தும் அழிந்து போக வேண்டும். ஏன் நாம் பாபாவிடம் வியாபாரம் செய்யக் கூடாது! பாபா, இவையனைத்தும் உங்களுடையது, எதிர்காலத்தில் எங்களுக்கு ராஜ்யம் கொடுங்கள். நாம் இதைத் தான் விரும்புகின்றோம், வேறு எந்த பொருளும் நமக்குத் தேவையில்லை. நான் உடல், மனம், பொருளை கொடுத்தால் பட்டினியால் இறந்து விடுவோம் என்று யாரும் நினைக்காதீர்கள். இது சிவபாபாவின் பண்டாரமாகும். இதன் மூலம் அனைவருக்கும் சரீர நிர்வாகம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றது, ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். திரௌபதியின் உதாரணம். இப்பொழுது நடைமுறையில் நடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. சிவபாபாவின் பண்டாரம் சதா நிறைந்திருக்கின்றது. இதுவும் ஒரு சோதனையாக இருந்தது. யாருக்கு பயம் ஏற்பட்டதோ அவர்கள் சென்று விட்டனர். மற்றபடி உதவி செய்பவர்கள் இருந்து கொண்டிருக்கின்றனர். பசியால் இறக்கும் விசயம் கிடையாது. இப்பொழுது குழந்தைகளுக்காக மாளிகை உருவாகிக் கொண்டிருக்கின்றது. நன்றாக இருக்க வேண்டுமெனில் முயற்சி செய்து தனது பதவியை உயர்ந்ததாக ஆக்கிக் கொள்ள வேண்டும். இது கல்ப கல்பத்திற்கான விசயமாகும். இந்த முறை தேர்வில் தோற்றால் கல்ப கல்பத்திற்கும் தோற்றுக் கொண்டே இருப்பீர்கள். மம்மா பாபாவின் சிம்மாசனத்தில் அமருமளவிற்கு தேர்ச்சி பெற வேண்டும். 21 பிறவிகளுக்கு சிம்மாசனத்தில் அமர வேண்டும்.
ஒரு தந்தையைத் தவிர வேறு யாரையும் நினைவு செய்யக் கூடாது. முரளி எழுதுவது மிக நல்ல சேவையாகும். அனைவரும் குஷியன்டவர். ஆசீர்வாதம் செய்வர். பாபா என்ற வார்த்தை மிகவும் நன்றாக இருக்கின்றது. இல்லையெனில் வார்த்தைகள் தெளிவாக இல்லை என்று எழுதுகின்றனர். பாபா நமக்கு வாணியை துண்டித்து அனுப்பி வைத்து விடுகின்றார். நமது ரத்தினங்கள் திருடப்பட்டு விடுகின்றன. பாபா நாம் அதிகாரிகளாக இருக்கின்றேன் - உங்களது வாயிலிருந்து வெளிப்படும் ரத்தினங்கள் அனைத்தும் நம்மிடத்தில் வர வேண்டும். மிகவும் ஒப்பற்றவர்கள் தான் இவ்வாறு கூற முடியும். முரளியின் சேவை மிகவும் நல்ல முறையில் செய்ய வேண்டும். அனைத்து மொழிகளும் கற்றுக் கொள்ள வேண்டும். மராட்டி, குஜராத்தி போன்ற ...... பாபா எவ்வாறு கருணை உள்ளம் உடையவராக இருக்கின்றாரோ குழந்தைகளும் கருணை உள்ளம் உடையவர்களாக ஆக வேண்டும். முயற்சி செய்து வாழ்க்கையை உருவாக்குவதில் உதவி செய்ய வேண்டும். மற்றபடி அந்த உலக வாழ்க்கை முற்றிலும் சாரமற்றதாகும். ஒருவரையொருவர் கொலை செய்து கொண்டிருக்கின்றனர். எவ்வளவு பதீதமாக இருக்கின்றனர்! இப்பொழுது நாம் ஏன் பாபாவின் ஸ்ரீமத்படி நடக்கக் கூடாது! பாபா, நான் உன்னுடையவன், நீங்கள் எந்த சேவையில் வேண்டுமென்றாலும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். பிறகு பாபா பொறுப்பாளியாக ஆகிவிடுவார். அடைக்கலமாக வருபவர்களை பாபா அனைத்து பந்தனங்களிலிருந்தும் விடுவித்து விடுவார். மற்றபடி இந்த உலகில் அழுக்கு நிறைந்திருக்கின்றது. ஈஸ்வரன் சர்வவியாபி என்று கூறி முகத்தை திருப்பிவிட்டனர். ஒருவேளை சர்வவியாபியாக இருக்கின்றார், எதிரில் அமர்ந்திருக்கின்றார் எனில் பிறகு ஹே பிரபு என்று கூறி அழைக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கின்றது? புரிய வைத்தால் குர் குர் என்று செய்கின்றனர். அடடா, பகவான் சுயம் கூறுகின்றார் - நான் சர்வவியாபி என்று நான் ஒருபொழுதும் கூறவேயில்லை. இவ்வாறு பக்திமார்க்கத்தில் உள்ளவர்கள் எழுதி வைத்து விட்டனர். நானும் சுயம் படித்து வந்தேன். ஆனால் இது நிந்தனை என்று அந்த நேரத்தில் புரிந்து கொள்ளவில்லை. பக்தர்களுக்கு எதுவும் தெரிவது கிடையாது. என்ன கூறினாலும் அது சத்யம் என்று ஏற்றுக் கொண்டு விடுகின்றனர். பாபா எவ்வளவு நல்ல முறையில் புரிய வைக்கின்றார். பிறகு வெளியில் சென்று பிரச்சனை செய்கின்றனர். அங்கு சென்று தாச, தாசிகளாக ஆவார்கள். கடைசி நேரம் வருகின்ற பொழுது உங்களுக்கு அனைத்தும் தெரிந்து விடும் என்று பாபா கூறியிருக்கின்றார். சாட்சாத்காரம் செய்து கொண்டே இருப்பீர்கள் மற்றும் இன்னார் இவ்வாறு ஆவார்கள் என்றும் கூறிக் கொண்டே இருப்பீர்கள். பிறகு அந்த நேரத்தில் தலை கீழே தொங்க போட வேண்டியிருக்கும். அந்த குஷியிருக்காது, அது ராஜ்யம் அடைபவர்களுக்கு இருக்கும். உள்ளத்தில் முள் குத்திக் கொண்டே இருக்கும் - ஏன் இவ்வாறு நடந்தது? ஆனால் மிகவும் தாமதமாகி விட்டது, அதிகம் பட்சாதப்படுவீர்கள். எதுவும் செய்ய முடியாது. தந்தை கூறுகின்றார் - உங்களுக்கு எவ்வளவோ புரிய வைத்தேன், இருந்தும் நீங்கள் என்ன செய்து வந்தீர்கள்? இப்பொழுது உங்களது நிலையைப் பாருங்கள். கல்ப கல்பத்திற்கும் பட்சாதாபப்படுவீர்கள். நாயகிகளை வரிசைக்கிரமமாக அழைத்துச் செல்வார் அல்லவா! முதல் நம்பரிலிருந்து கடைசி வரைக்கும் புரிந்து கொள்வர். படிப்பு நல்ல முறையில் படிக்கவில்லை எனில் கடைசியில் அமருவீர்கள். நான் எவ்வளவு மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெறுவேன்? என்பது தேர்வுக்கான நேரத்தில் தெரிந்து விடும். நான் என்ன பதவி அடைவேன்? என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள். சேவை செய்யவில்லையெனில் தூசி தான் கிடைக்கும். படிப்பு மற்றும் சேவையில் கவனம் கொடுக்க வேண்டும். இனிமையிலும் இனிய பாபாவின் குழந்தையாக இருக்கின்றீர்கள் எனில் மிக இனிமையானவர்களாக ஆக வேண்டும். சிவபாபா எவ்வளவு இனிமையானவராக இருக்கின்றார்! எவ்வளவு அன்பானவராக இருக்கின்றார்! நம்மையும் அவ்வாறு ஆக்குகின்றார். எவ்வளவு உயர்ந்த பல்கலைக்கழகம்! நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

தாரணைக்கான முக்கிய சாரம்:

1) தேக சகிதமாக அனைத்தின் மீதிருக்கும் பற்றுதலை நீக்கி, தந்தை மற்றும் அழிவற்ற ஞான ரத்தினங்களின் மீது பற்று வைக்க வேண்டும். ஞான ரத்தினங்களை தானம் செய்து கொண்டே இருக்க வேண்டும்.

2) படிப்பு மற்றும் சேவையின் மீது முழு கவனம் கொடுக்க வேண்டும். பாப்சமான் இனிமையானவர்களாக ஆக வேண்டும். உலகாய விசயங்களை கேட்க வேண்டாம், மற்றவர்களுக்கும் கூறி வாயை கசப்பாக்கிக் கொள்ளக் கூடாது.
வரதானம்:

குறைந்த சமயத்தில் முழுமையுடைய உயர்ந்த குறிக்கோளை பிராப்தி அடைய கூடிய டபுள் லைட் ஆகுக.

டபுள் லைட் ஸ்தீதியின் மூலம் தீவிரமான நிலை தான் புருஷாரத்தின் அடையாளம், அவர்கள் எந்தவிதமான சுமை அனுபவமானாலும் பஞ்சதத்துவங்கள் மூலமாகவும் அல்லது டபுள் லைட் என்ற ஸ்திதி தீவிர முயசியாளர்களின் அடையாளம் அனுபவம் ஆனாலும் இதன் மூலமாக பரஸ்திதின் மூலமாக அனுபவம் ஆனாலும் அப்படிபட்ட எந்த ஒரு பரஸ் திதியை தன்னுடைய சுய ஸ்திதின் மூலமாக எந்த ஒரு சுமையும் அனுபவம் ஆகாது.

சுலேகன் :

இந்த துக்கதாமத்தை ஒதிக்கி விடுங்கள் அப்போது துக்கத்தின் அலைகள் உங்களை நெருங்க முடியாது
ஒம்சாந்தி

***OM SHANTI***

Whatsapp Button works on Mobile Device only