06 March 2017

BK Murli 7 March 2017 Tamil

BK Murli 7 March 2017 Tamil

07.03.2017    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


இனிமையான குழந்தைகளே! தந்தை உங்களை இந்த துக்கமான உலகத்திலிருந்து வெளியேற்றி சுகத்தின் தாமத்திற்கு அழைத்துச் செல்ல வந்துள்ளார். தாமம் என்று தூய்மையான இடத்திற்குத்தான் கூறப்படுகிறது.கேள்வி:

இந்த எல்லையில்லாத நாடகம் எந்த 2 வார்த்தைகளின் ஆதாரத்தில் அமைக்கப்பட்டுள்ளது?பதில்:

ஆஸ்தி மற்றும் சாபம். தந்தை சுகத்தின் ஆஸ்தி அளிக்கிறார். இராவணன் துக்கத்தின் சாபம் கொடுக்கிறான். இது எல்லையில்லாத விஷயமாகும். தேவி தேவதா தர்மத்தினர் தந்தையிடமிருந்து ஆஸ்தி பெறுகிறார்கள். அரை கல்பத்திற்குப் பிறகு இராவணன் சாபம் கொடுக்கிறான். நாம் நிராகார உலகத்தில் இருந்து கொண்டிருந்தோம். பிறகு சுகத்தின் பாகத்தை ஏற்று நடித்தோம் என்பது இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு நினைவு வந்துள்ளது. நாமே தான் தேவதை, க்ஷத்திரியர், வைசியர் மற்றும் சூத்திரர் ஆனோம். இப்பொழுது பிராமணராகி, தேவதை ஆகிறோம்.பாடல்:

ஓம் நமோ சிவாய .. .. ..ஓம் சாந்தி.

இது எல்லையில்லாத தந்தையின் மகிமையாகும். உயர்ந்ததிலும் உயர்ந்தவர் அந்த பகவான் ஆவார் என்பதை அனைவரும் அறிந்துள்ளார்கள். உயர்ந்ததிலும் உயர்ந்த பகவானின் வழி கூட நிச்சயம் உயர்ந்ததாக இருக்கும். எனவே தான் ஸ்ரீமத், அதாவது சிறந்த வழி என்று கூறப்படுகிறது. எல்லா பக்தைகளும் அவரை நினைவு செய்கிறார்கள். அவர் பகவான் ஆவார். எனவே பகவதி கூட வேண்டும். பிதா இருக்கிறார் என்றால் மாதா கூட வேண்டும். ஒன்று, லௌகீக தாய் தந்தை, இரண்டாவது, பரலோக தாய் தந்தை! லௌகீக தாய் தந்தை இருக்கும் பொழுது கூட யாராவது துக்கமடையும் பொழுது பரலோகத்திலிருப்பவரை நினைவு செய்யப்படுகிறது. இப்பொழுது உங்களுடைய லௌகீக சம்பந்தம் கூட உள்ளது. பரலோக தாய் தந்தை உங்களை பரலோகத்திற்கு அழைத்துச் செல்கிறார். லௌகீகத்தை பந்தனம் என்று கூறுவார்கள். அதில் துக்கம் உள்ளது. இரண்டு பரலோகம் உள்ளது. ஒன்று நிராகாரி உலகம். அங்கு ஆத்மாக்கள் இருக்கிறார்கள். இரண்டாவது சாகாரி உலகம். அதற்கு சுகதாமம் என்று கூறப்படுகிறது. அது சாந்திதாமம். அடுத்தது, சுகதாமம். பாபா வந்து மரண உலகம் அல்லது தூய்மையற்ற (பதீத ப்ரஷ்டாச்சாரி) இழிந்த உலகம் என்று கூறப்படும் இந்த துக்கமான உலகத்திலிருந்து அழைத்துச் செல்கிறார். இங்கு எல்லாமே தூய்மையற்று (பதீதமாக) இருக்கிறார்கள். யார் விகாரத்தில் செல்கிறார்களோ அவர்கள் பதீதர்கள் என்று கூறப்படுகின்றனர். சத்யுகத்தில் பாவனமாக அதாவது சம்பூர்ண நிர்விகாரியாக இருக்கிறார்கள். முதலில் இலட்சுமி நாராயணரின் மகிமை பாடிக் கொண்டிருந்தீர்கள். தங்களை விகாரி என்று உணர்ந்திருந்தீர்கள். இலட்சுமி நாராயணர் மகாராஜா மகாராணி தூய்மையாக இருந்தார்கள். பின் பிரஜைகளைக் கூட தூய்மையானவர்கள் என்று கூறுவார்கள். அது சுகதாமம் வைகுண்டம் ஆகும். நரகத்திற்கு தாமம் என்று கூறமாட்டார்கள். தாமம் என்று தூய்மையான இடத்திற்கு கூறப்படுகிறது. இது தூய்மையற்ற உலகமாகும். பாரதம் சுகதாமமாக இருந்தது. இப்பொழுது பதீதமாக ப்ரஷ்டாச்சாரியாக நரகமாக உள்ளது. இப்பொழுது அனைவரையும் சுகத்தின் தாமத்திற்கு அழைத்து செல்ல வேண்டி உள்ளது. எனவே தந்தை தான் அவசியம் வந்து குழந்தைகளை சுகமுடையவர்களாக ஆக்குகிறார். பாபா சொர்க்கத்தின் படைப்புகர்த்தா ஆவார். ஹே, பாபா ! முதன் முதலில் நீங்கள் எங்களுக்கு சொர்க்கத்தின் ஆஸ்தியைக் கொடுத்திருந்தீர்கள். அரை கல்பம் நாங்கள் சொர்க்கத்தில் இருந்தோம். அதற்கு சூரிய வம்சத்தின் சந்திர வம்சத்தின் இராஜதானி என்று கூறப்படுகிறது. 21 பிறவிகள் நீங்கள் சொர்க்கத்தில் இருந்தீர்கள் என்று பாபா நினைவூட்டுகிறார். 8 பிறவிகள் சத்யுகத்தில், 12 பிறவிகள் திரேதாவில். இந்த எல்லா விஷயங்களையும் தந்தை வந்து புரிய வைக்கிறார். குழந்தைகளே நீங்கள் உங்கள் பிறவிகளைப் பற்றி அறியாமல் இருக்கிறீர்கள். நான் உங்களுக்கு எல்லாமே சொல்கிறேன் என்று கூறுகிறார். நிராகார தந்தை, நிராகார குழந்தைகளிடம் உரையாடுகிறார். இந்த சாதாரண உடலை கடனாக எடுத்து நான் உங்களுக்குப் புரிய வைக்கிறேன் என்று கூறுகிறார். அரைகல்பம் நீங்கள் அசோக வனத்தில் இருந்தீர்கள். பிறகு நீங்கள் சோக வனத்தில் வந்து விட்டீர்கள். சுகம் முடிந்து போய் துக்கம் வந்து விட்டது. வாம மார்க்கம் என்றால் நரகம். அதில் நீங்கள் துக்கம் எடுக்கிறீர்கள். பிறகு தந்தை வந்து இராவண இராஜ்யத்திலிருந்து விடுவித்து இராம இராஜ்யத்திற்கு அழைத்துச் செல்கிறார். இந்த நாடகம் அமைக்கப்பட்டுள்ளது. தந்தை சுகத்தின் ஆஸ்தி அளிக்கிறார். இராவணன் துக்கத்தின் சாபம் கொடுக்கிறான். இது எல்லையில்லாத விஷயமாகும். இப்பொழுது தந்தை உங்களுக்கு 21 பிறவிகளுக்கு சுகத்தின் ஆஸ்தி அளித்துக்கொண்டிருக்கிறார். பகவான் சொர்க்கத்தைப் படைக்கிறார். எனவே சொர்க்கத்தின் ஆஸ்தி கிடைக்க வேண்டி உள்ளது. ஆஸ்தி பெறப்பட்டு இருந்தது. மாயை அரைகல்பம் சாபம் கொடுத்து விட்டது. உங்களுடைய புத்தியில் முழு சக்கரம் உள்ளது. இந்த சக்கரத்திற்கு ஒரு பொழுதும் முடிவு ஆவதில்லை. பிறகு ஆஸ்தி வழங்குவதற்கு தந்தை அவசியம் வரவே வேண்டியுள்ளது. இப்பொழுது தந்தை வந்துள்ளார். யார் முந்தைய கல்பத்திலும் ஆஸ்தி எடுத்திருந்தார்களோ அவர்களே தான் ஆஸ்தி எடுப்பார்கள் என்பதை அறிந்துள்ளார். தேவி தேவதா தர்மத்தினரைத் தவிர வேறு யாரும் ஆஸ்தியை எடுக்க முடியாது. முதலில் பிராமணர் ஆகாமல் தேவதை ஆக முடியாது. முதலில் ஆத்மாக்களாகிய நாம் நிராகாரி உலகத்தில் இருப்பவர்கள் ஆவோம். பிறகு சுகத்தின் பாகத்தை நடிக்க வருகிறோம். நாமே தேவதையாக ஆனோம். பிறகு க்ஷத்திரியர், வைசியர் மற்றும் சூத்திரர் ஆனோம். நாம் இந்த வர்ணங்களில் வருகிறோம். இப்பொழுது யார் பிராமணர்கள் ஆகிறார்களோ அவர்கள் தங்களை பிரம்மா குமார் மற்றும் குமாரிகள் என்று அழைத்து கொள்கிறார்கள். நாம் சகோதர சகோதரி ஆகி விட்டோம் என்று புரிந்திருப்பார்கள். பிறகு விகாரத்தின் பார்வை இருக்க முடியாது. நாம் தூய்மையாக ஆகி தூய்மையான உலகத்திற்கு அதிபதி ஆவோம் என்பதை அறிந்திருப்பார்கள். தந்தை மற்றும் சொர்க்கத்தை நினைவு செய்கிறோம். மேலும் இந்த ஒரு பிறவி தூய்மையாக இருக்கிறோம். இது மரண உலகம் ஆகும். இது ஒழிந்து போய் அமரலோகம் வாழ்க என்று ஆகப் போகிறது. அங்கு 5 விகாரங்கள் இருக்காது. இராவண இராஜ்யம் முடிந்து போய் விடும். சத்யுக திரேதாவிற்கு இராம இராஜ்யம் என்றும் துவாபர கலியுகத்திற்கு இராவண இராஜ்யம் என்றும் கூறப்படுகிறது. அதே பாரதம் வைரம் போல இருந்தது. இப்பொழுது சோழி போல ஆகி விட்டுள்ளது. இப்பொழுது உங்களுக்கு வைரம் போல ஜென்மம் அளிக்க வந்துள்ளேன் என்று தந்தை கூறுகிறார். நீங்கள் என்னுடைய ஸ்ரீமத் படி நடங்கள். இல்லை என்றால், நீங்கள் சொர்க்கத்தின் சுகத்தை பார்க்க முடியாமல் போய் விடுவீர்கள். சொர்க்கத்தில் துக்கத்தின் பெயர் இருக்காது. வேறு எந்த கண்டமும் இருக்கவில்லை. பாரதம் தான் உண்மையில் பழைமையான கண்டமாகும். தேவி தேவதைகளின் இராஜ்யம் மட்டுமே இருக்கும். எனவே அதற்கு சொர்க்கம் என்று கூறப்படுகிறது. அரை கல்பம் நீங்கள் சொர்க்கத்தின் சுகத்தை அனுபவித்தீர்கள். பிறகு இராவண இராஜ்யம் ஆரம்பமாகியது. சத்யுகத்திற்கு சிவாலயம் என்று கூறப்படுகிறது. சிவபாபாவினால் ஸ்தாபிக்கப்பட்டது ஆகும். சிவபாபா பிரம்மா மூலமாக சொர்க்கத்தின் ஸ்தாபனை, சங்கரன் மூலமாக நரகத்தின் விநாசம் செய்விக்கிறார். யார் ஸ்தாபனை செய்வார்களோ அவர்களே சொர்க்கத்தின் பாலனையும் செய்வார்கள். அவர்களே விஷ்ணுபுரிக்கு அதிபதியும் ஆவார்கள். சிவபாபா தான் சூத்திரரிலிருந்து பிராமணராக ஆக்குகிறார். இச்சமயம் உங்களுடையது பிராமண வர்ணமாகும். பிறகு தேவதைகளின் வர்ணம் ஆகி விடும். இப்பொழுது நீங்கள் இறைவன் மூலமாக பிராமண வர்ணத்தில் வந்துள்ளீர்கள். பிறகு நீங்கள் ஈசுவரிய வர்ணத்தில் தந்தையுடன் கூட பரந்தாமத்தில் இருப்பீர்கள். பிறகு அங்கிருந்து தேவதா வர்ணத்தில் வருவீர்கள். சத்யுகத்தில் ஒரு தேவதைகளினுடையது தான் இராஜ்யம் இருந்தது. அச்சமயத்தில் வேறு எந்த கண்டமும் இருக்கவில்லை. பின்னால் இஸ்லாமியர் பௌத்தியர் ஆகியோர் வந்தார்கள்.இப்பொழுது பாண்டவர்களாகிய நீங்கள் யோக பலத்தினால் 5 விகாரங்கள் மீது வெற்றி அடைந்து உலகத்தை வென்றவர்களாக உலகத்தின் அதிபதி ஆகிறீர்கள். இலட்சுமி நாராயணர் சூரிய வம்சத்தினராக சொர்க்கத்தின் அதிபதியாக இருந்தார்கள். அவர்களுக்கு கூட சங்கமத்தில் தந்தையிடமிருந்து தான் ஆஸ்தி கிடைத்தது. சங்கமயுகம் பிராமணர்களினுடையது ஆகும். யார் பிராமணர் ஆவதில்லையோ அவர்கள் கலியுகத்தில் இருக்கிறார்கள் என்று பொருள். தந்தை உங்களை வைசியாலயத்திலிருந்து வெளியேற்றி சிவாலயத்திற்கு அழைத்துச் செல்கிறார். இப்பொழுது நீங்கள் பிரம்மாவின் குழந்தைகள் பிரம்மாகுமார் மற்றும் பிரம்மா குமாரிகள் ஆவீர்கள். நீங்கள் சகோதர சகோதரி ஆவீர்கள். ஒரு பொழுதும் விஷத்தைப் பருக முடியாது. ஆம். இல்லற விவகாரங்களில் இருந்தே ஆக வேண்டும். ஆனால் விகாரத்தில் போக முடியாது. இந்த இராவண இராஜ்யத்தில் இருந்தபடியே தாமரை மலர் போல தூய்மையாக இருக்க வேண்டும். பிறகு இந்த சிருஷ்டி எப்படி பெருகும் என்ற கேள்வி எழ முடியாது. தந்தையின் கட்டளையாவது - நான் தூய்மையான உலகத்தை அமைக்க வந்துள்ளேன். நீங்கள் இந்த கடைசி பிறவியில் தூய்மை ஆனீர்கள் என்றால், நீங்கள் தூய்மையான உலகத்திற்கு அதிபதி ஆக முடியும். இதன் மீது தான் அபலைகள் மீது கொடுமைகள் ஏற்படுகின்றன. ருத்ரஞான யக்ஞத்தில் அசுரர்களின் தடைகளும் ஏற்படுகின்றன. ஸ்ரீமத்படி நடப்பதாலேயே நீங்கள் சிறந்தவர்களாக ஆகி விடுவீர்கள் என்று தந்தை கூறுகிறார். இவ்வளவு காலம் நாங்கள் அசுர வழி படி அதாவது 5 பூதங்களின் வழியில் இருந்தோம். நான் ஆத்மா ஆவேன். நான் இந்த சரீரத்தின் மூலம் பாகம் ஏற்று நடிக்க வேண்டும் என்பது யாருக்குமே தெரியாது. ஆத்மா என்று சாலிகிராமத்தைத் தான் கூறுகிறார்கள். சாலிகிராமம் கூட இவ்வளவு பெரியதாக இல்லை. ஆத்மா அல்லது பரமாத்மா நட்சத்திரம் போன்று இருக்கிறார்கள். ஆத்மாவில் முழு பாகமும் நிரம்பி உள்ளது. பாகத்தை ஏற்று நடிப்பதற்காக நான் ஒரு உடலை விட்டு மற்றொன்றை தாரணை செய்கிறேன் என்று ஆத்மா கூறுகிறார். நான் ஸ்ரீநாராயணரின் ரூபத்தை தாரணை செய்து இத்தனை பிறவிகள் ஆட்சி புரிவேன் என்று ஸ்ரீ நாராயணரின் ஆத்மா கூறுவார். ஆத்மாவில் தான் முழுமையாக அழியாத பாகம் நிரம்பி உள்ளது. இதற்கு தான் காட்ஃபாதர்நாலேஜ் - இறை தந்தையின் ஞானம் என்று கூறப்படுகிறது. ஸ்பிரிச்சுவல் ஃபாதர் ஆத்மாக்களுக்கு வந்து புடிப்பிக்கிறார் என்று பகவான் கூறுகிறார். எந்த மனிதனும் படிப்பிப்பதில்லை. இது எல்லையில்லாத தந்தை கற்பிக்கிறார். எனவே இந்த சக்கரம் எப்படி சுற்றுகிறது -இந்த சிருஷ்டி சக்கரம் மற்றும் படைப்புக்கர்த்தா அல்லது படைப்பினுடைய ஞானத்தை எந்த ஒரு மனிதனும் அறிவதில்லை. இப்பொழுது நீங்கள் சிவாலயமான சத்யுகத்தில் ஆட்சி புரிவதற்கு தகுதியுடையவராக ஆகிறீர்கள். பாரதம் லாயக்காக இருக்கும் பொழுது மிகவுமே அறிவு நிறைந்து இருந்தது. இப்பொழுது தந்தை மீண்டும் வைரம் போல ஆக்குவதற்காக வந்துள்ளார். எனவே அவரது ஸ்ரீமத்படி நடக்க வேண்டி உள்ளது. இராவணனினுடைய வழி உங்களை சோழி போல ஆக்குகிறது.இந்த உலகத்தின் ஆயுள் 5 ஆயிரம் வருடங்கள் ஆகும் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். அதிலேயே தான் உலகம் பழையதாகவும் மற்றும் புதியதாகவும் ஆகிறது. சத்யுகம் திரேதாயுகம் என்பது புதிய உலகம். துவாபரம் கலியுகம் என்பது பழைய உலகம். தந்தை மீண்டும் தெய்வீக உலகத்தின் ஸ்தாபனை செய்யவந்துள்ளார். ஆத்மாக்களாகிய நீங்கள் முழுமையாக 84 பிறவிகள் எடுக்கிறீர்கள். ஆத்மா தான் இந்த உறுப்புக்கள் மூலமாக பேசுகிறது மற்றும் கேட்கிறது. ஒரு பழைய உடலை விட்டு புதியதை எடுக்கிறது. நாம் தந்தையுடன் முதலில் இனிய இல்லத்தில் இருந்தோம். பிறகு நாமே தான் தேவதை க்ஷத்திரியர் வைசியர் சூத்திரர் ஆனோம் என்ற இந்த ஞானத்தை ஆத்மாக்களுக்கு தந்தை கொடுத்துள்ளார். இப்பொழுது இது நம்முடைய கடைசி பிறவியாகும். பிராமணர்களாகிய நாம் சொர்க்கத்தின் ஆஸ்தி பெற்று தேவதை ஆகிடுவோம். புதிய சரீரத்தை தரிப்போம். இந்த சக்கரம் புத்தியில் சுற்ற வேண்டும். தூய்மையாக இருப்பதால் நீங்கள் சொர்க்கத்தின் சக்கரவர்த்தி மகாராஜா ஆகி விடுவீர்கள். யார் முந்தைய கல்பத்தில் அவ்வாறு ஆனார்களோ அவர்களுடைய புத்தியில் இந்த விஷயங்கள் வரும். இல்லை என்றால் புத்தியில் வரவே வராது. உலகத்தின் சரித்திரம் பூகோளம் புரிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும். ஒரு சிலர் தெரிந்த பிறகும் கூட இந்த படிப்பை விட்டு விடுகிறார்கள். சொர்க்கத்தில் வருவார்கள். ஆனால் யோகி ஆகி விகர்மங்களை விநாசம் செய்யவில்லை என்றால் தண்டனை அனுபவிக்க வேண்டி வரும். சொர்க்கத்தில் வருவார்கள். ஆனால் பிரஜையிலும் குறைந்த பதவியை அடைவார்கள். சொர்க்கத்தில் முதலில் பாவன மகாராஜா மகாராணியாக இருந்தார்கள். அவர்களே பிறகு பதீத (தூய்மையற்ற) இராஜா இராணி ஆனார்கள். இப்பொழுது அந்த இராஜா இராணி கூட இல்லை. மீண்டும் இப்பொழுது தந்தை மூலமாக பாவன இராஜா இராணி ஆகிக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஈசுவரிய ஞானத்தை நிராகார தந்தை தான் படிப்பிக்கிறார். சாகாரத்தில் இந்த பிரம்மா கூட அந்த நிராகாரமானவரிடமிருந்து தான் கேட்டு கொண்டிருக்கிறார். நிராகார தந்தை வந்து கற்பிக்கிறார். இந்த ஞானத்தினால் தான் மனிதனிலிருந்து தேவதை ஆகிறீர்கள். இந்த பிரம்மாவின் ஆத்மா கூட படிக்கிறது. குழந்தைகளுடைய ஆத்மா கூட படிக்கிறது. நல்லது அல்லது தீய சம்ஸ்காரங்கள் ஆத்மாவில் தான் இருக்கிறது. நல்ல சம்ஸ்காரங்கள் இருந்தது என்றால் நல்ல வீட்டில் ஜென்மம் எடுப்பார்கள். படிக்க படிக்க பின் ஞானத்தையே விட்டு விடுகிறார்கள். மாயை தன் பக்கம் இழுத்து கொண்டு விடுகிறது. ஒரு புறம் இருப்பது இராவணனின் வழி மறுபுறம் இருப்பது இராமரின் வழி. இந்த கடைசி பிறவியில் இராமரின் வழி படி நடக்க வேண்டும். இராவணனுக்கு வெற்றி ஆகி விடும் பொழுது சில நேரங்களில் அங்கு சென்று விடுகிறார்கள். பிறகு இராமருக்கு எதிரி ஆகி விடுகிறார்கள். அவர்களுக்கு மிகுந்த கடுமையான தண்டனை உள்ளது. நீங்கள் இராமரின் அடைக்கலம் புகுந்துள்ளீர்கள். பிறகு ஒரு வேளை துரோகியாகி இராவணனின் அடைக்கலம் புகுந்தீர்கள் என்றால் இராமரை நிந்திப்பீர்கள். இது உண்மையில் இராம இராஜ்யம் மற்றும் இராவண இராஜ்யத்தின் நாடகம் அமைக்கப்பட்டுள்ளது என்பது உங்களுடைய புத்தியில் உள்ளது. சத்யுகம் சதோபிரதானம், திரேதா சதோ, பிறகு துவாபரம் ரஜோ, கலியுகத்தில் தமோ - நீங்கள் இப்பொழுது சதோபிரதான நிலையில் செல்வீர்கள். பாபா வந்து சதோபிரதானமாக ஆக்குகிறார். பிறகு 16 கலையிலிருந்து 14 கலையில் வர வேண்டி உள்ளது. பிறகு இராவணனின் தொடர்பில் கலைகள் குறைந்து கொண்டே போகிறது. இப்பொழுது கலியுகத்தில் எந்த ஒரு கலையும் இல்லை. எல்லோருமே நாங்கள் (பதீத பிரஷ்டாச்சாரி) தூய்மையற்று தாழ்ந்த நிலையில் இருக்கிறோம் என்று கூறுகிறார்கள். பதீத உலகத்தின் விநாசம் ஆகப் போகிறது. பாவன உலகத்தின் ஸ்தாபனை ஆகிக் கொண்டு இருக்கிறது. எல்லையில்லாத தந்தை குழந்தைகள் பற்றித் தெரிந்திருக்க முடியும். இப்பொழுது நீங்கள் பகவானின் வீட்டில் அமர்ந்துள்ளீர்கள். பிராமண பிராமணிகளாகிய நீங்கள் பிறகு தேவதை ஆகி விடுவீர்கள். பிறகு க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் .. .. .. இது சக்கரமாகும். பிராமணர்களாகிய நீங்கள் சக்கரவர்த்தி ஆவீர்கள். இராஜயோகத்தைக் கற்றுக் கொண்டு ஞானத்தை தாரணை செய்வதால் சக்கரவர்த்தி இராஜா இராணி ஆகிடுவீர்கள். எனவே முயற்சி செய்து சொர்க்கத்தில் உயர்ந்த பதவியை அடைய வேண்டும். நல்லது.இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு, ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.தாரணைக்கான முக்கிய சாரம்:

1. இந்த கடைசி பிறவியில் இராமரின் வழிப்படி நடக்க வேண்டும். ஒரு பொழுதும் இராமரின் அடைக்கலத்தை விட்டு விட்டு இராவணனின் அடைக்கலத்தில் சென்று, தந்தைக்கு நிந்தை செய்விக்க கூடாது.2. தண்டனைகளிலிருந்து விடுபடுவதற்காக யோகி ஆகி, விகர்மங்களை விநாசம் செய்ய வேண்டும். தூய்மையான உலகிற்குச் செல்ல வேண்டும் என்றால், அவசியம் தூய்மை ஆக வேண்டும்.வரதானம்:

பணம் சம்பாதிக்கையிலும் அல்லது சம்பந்தங்களை ஏற்று நடத்துகையிலும் துக்கங்களிலிருந்து விடுபட்டு இருக்கும் நஷ்ட மோகா (மோகத்தை நீக்கிய) டிரஸ்டி ஆவீர்களாக!லௌகீக சம்பந்தங்களுக்கிடையில் இருக்கும் பொழுது சம்பந்தங்களை ஏற்று நடப்பது தனி விஷயம். மேலும் அவற்றின் பக்கம் கவரப்பட்டு விடுவது தனி விஷயம் ஆகும். டிரஸ்டி ஆகி பணம் சம்பாதிப்பது தனி விஷயம். பற்றுதலுடன் சம்பாதிப்பது, மோகத்துடன் சம்பாதிப்பது தனி விஷயம். நஷ்ட மோகா (மோகத்தை நீக்கிய) அல்லது டிரஸ்டியின் அடையாளமாவது துக்கம் மற்றும் அசாந்தியின் பெயர் அடையாளம் இருக்கக் கூடாது. சில சமயம் சம்பாதிப்பதில் பணம் மேலும் கீழும் ஆகலாம். சம்பந்தங்களை ஏற்று நடத்தும் பொழுது ஒருவர் நோய்வாய்ப்பட்டு விடலாம். ஆனாலும் கூட துக்கத்தின் அலைகள் வரக் கூடாது. எப்பொழுதுமே கவலையில்லாத சக்கரவர்த்தி.சுலோகன்:

யார் பலவீனமானோருக்கு தைரியத்தையும் பலத்தையும் கொடுத்துக் கொண்டே இருக்கிறாரோ அவருக்குத் தான் கருணையுள்ளம் என்று கூறப்படுகிறது.


***OM SHANTI***

Whatsapp Button works on Mobile Device only