BK Murli 8 March 2017 Tamil

BK Murli 8 March 2017 Tamil

08.03.2017    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


இனிமையான குழந்தைகளே! உங்களிடம் என்னென்ன இருக்கிறதோ, அதை ஈஸ்வரிய சேவையில் ஈடுபடுத்திப் பயனுள்ளதாக ஆக்குங்கள். (ஆன்மீக) கல்லூரி இணைந்த பல்கலைக் கழகங்களை திறந்து கொண்டே செல்லுங்கள்.கேள்வி :

குழந்தைகளாகிய உங்களுக்கு சிவபாபாவோடு உள்ள எந்த ஒரு சம்மந்தம் மிகவும் மகிழ்வூட்டக் கூடியதாகவும் ஆழமானதாகவும் உள்ளது?பதில் :

நீங்கள் சொல்கிறீர்கள், சிவபாபா நம்முடைய தந்தையாகவும் உள்ளார் என்றால் குழந்தையாகவும் உள்ளார். ஆனால் தந்தையே பிறகு குழந்தையாகவும் உள்ளார் என்பது எப்படி? இது மிகவும் மகிழ்ச்சி தரக்கூடிய மற்றும் ஆழமான விஷயமாகும். நீங்கள் அவரைக் குழந்தை என்றும் புரிந்து கொண்டிருக்கிறீர்கள், ஏனென்றால் அவர் மீது முழுமையாக அர்ப்பணம் ஆகிவிடுகிறீர்கள். முழு ஆஸ்தியையும் நீங்கள் முதலில் அவருக்குக் கொடுக்கிறீர்கள். யார் சிவபாபாவைத் தங்கள் வாரிசாக ஆக்குகின்றனரோ, அவர்கள் தான் 21 பிறவிகளுக்கான ஆஸ்தி பெறுகின்றனர். இந்தக் குழந்தை (சிவபாபா) சொல்கிறார், எனக்கு உங்கள் பணம் வேண்டாம். நீங்கள் ஸ்ரீமத் படி நடந்தாலே போதும், உங்களுக்கு இராஜ்ய பதவி கிடைத்து விடும்.பாடல் :

மாதா ஓ மாதா.........ஓம் சாந்தி.

ஓம் சாந்தி என்று சொன்னவர் யார்? சரீரம் சொன்னதா, ஆத்மா சொன்னதா? இதைக் குழந்தைகள் நல்லபடியாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஒன்று ஆத்மா, மற்றது சரீரம். ஆத்மாவோ அவிநாசி. இந்த ஆத்மா சுயம் தன்னுடைய அறிமுகம் கொடுக்கிறார். அதாவது நானும் ஆத்மா, பிந்து சொரூபமாக இருக்கிறேன். எப்படி பரமாத்மா தந்தை அறிமுகம் கொடுக்கிறார் - என்னைப் பரமாத்மா என்று ஏன் சொல்கின்றனர்? ஏனென்றால் நான் அனைவருக்கும் தந்தையாக இருக்கிறேன். அனைவரும் அழைக்கின்றனர்- ஹே பரமபிதா பரமாத்மா! ஹே பகவானே! என்று இவையனைத்தும் புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களாகும். குருட்டு நம்பிக்கையின் விஷயம் கிடையாது. எப்படி மற்றவர்கள் என்ன சொன்னார்களோ, அது சத்தியமல்ல. மனிதர்கள் ஈஸ்வரனைப் பற்றி என்ன சொல்கின்றனரோ, அவை அனைத்தும் அசத்தியம். ஓர் ஈஸ்வரன் மட்டுமே சத்தியம். அவர் சத்தியத்தையே சொல்வார். மற்ற மனிதர்கள் அனைவரும் அவரைப் பற்றிப் பொய் தான் சொல்வார்கள். அதனால் தந்தை சத்தியமானவர் எனச் சொல்லப் படுகிறார். உண்மையான கண்டத்தை (உலகை) ஸ்தாபனை செய்பவர். பாரதம் தான் உண்மையான கண்டமாக இருந்தது. பாபா சொல்கிறார், நான் தான் உண்மையான கண்டத்தை உருவாக்கினேன். அந்தச் சமயம் பாரதம் தவிர வேறு எந்த ஒரு கண்டமும் கிடையாது. இவையனைத்தையம் சத்தியமான தந்தை தான் சொல்ல முடியும். முன்பிருந்த ரிஷி, முனி அனைவரும் ஈஸ்வரனாகிய படைப்பவர் மற்றும் படைப்பின் முதல், இடை, கடை பற்றி அறிந்திருக்கவில்லை. நேத்தி-நேத்தி (தெரியாது-தெரியாது) என்றே சொல்லி வந்தனர். யாருமே அறிமுகம் கொடுக்க முடியாது. தந்தையின் அறிமுகத்தைத் தந்தை தான் கொடுக்கிறார். நான் தான் உங்களுடைய தந்தை. நான் தான் வந்து புது உலகின் ஸ்தாபனை செய்து பழைய உலகத்தை சங்கர் மூலமாக விநாசம் செய்விக்கிறேன் – புதிய சிருஷ்டியை பிரம்மா மூலம் படைக்கிறேன். நான் தான் உங்களுக்கு என்னைப் பற்றிய சத்திய அறிமுகம் கொடுக்கிறேன். மற்றவர்கள் என்னைப் பற்றிச் சொல்கின்றனர் என்றால் பொய்யை மட்டுமே சொல்வார்கள். யார் வாழ்ந்திருந்து சென்றுள்ளனரோ, அவர்கள் பற்றி யாருக்கும் தெரியாது. சத்யுக லட்சுமி-நாராயணர் உயர்ந்தவரிலும் உயர்ந்தவராக இருந்தனர். புது உலகம் உயர்ந்த உலகமாக இருந்தது. அதன் எஜமானராக அவர்கள் இருந்தனர். மற்றப்படி இவ்வளவு உயர்ந்த உலகத்தை யார் உருவாக்கினார்? மற்றும் அதன் எஜமானராக அவர்களை யார் ஆக்கினார்? இதை யாருமே அறிந்திருக்கவில்லை. பாபா அறிவார், யார் சொர்க்கத்தின் இராஜ்யத்தினுடைய ஆஸ்தியை அடைந்திருப்பார்களோ, அவர்களின் புத்தியில் தான் இந்த விசயங்கள் பதியும். பாடவும் செய்கின்றனர் - நீங்கள் தான் தாயும் தந்தையும், நாங்கள் உங்கள் குழந்தைகள், உங்கள் கிருபையால் எங்களுக்கு அளவற்ற சுகம் கிடைத்தது என்று. இதை யாருக்காகப் பாடுகின்றனர்? லௌகிக் தந்தைக்காகவா அல்லது பரலௌகிகத் தந்தைக்காகவா? லௌகிக் தந்தைக்கோ இந்த மகிமை இருக்க முடியாது. சத்யுகத்திலும் கூட இந்த மகிமை யாருக்கும் இருக்க முடியாது. நீங்கள் இங்கே வந்திருப்பது அந்தத் தாய்-தந்தையரிடம் இருந்து 21 பிறவிகளுக்கான அளவற்ற சுகத்தின் ஆஸ்தி பெறுவதற்காக, இராஜ்ய பாக்கியத்தின் ஆஸ்தி பெறுவதற்காக. பகவான் படைப்பவர் என்றால் அவருடன் கூடவே தாயும் இருப்பார் இல்லையா? இங்கே குழந்தைகள் நீங்கள் சொல்கிறீர்கள், நாங்கள் தாய்-தந்தையிடம் வந்துள்ளோம். இங்கே எந்த ஒரு குரு-கோசாயியும் கிடையாது. பாபா சொல்கிறார், நீங்கள் என்னிடமிருந்து மீண்டும் சொர்க்கத்தின் ஆஸ்தியைப் பெற்றுக் கொண்டிருக்கிறீர்கள். சத்யுகத்தில் லட்சுமி-நாராயணர் தான் ஆட்சி செய்தனர். ஸ்ரீகிருஷ்ணர் மீது அனைவரும் அன்பு செலுத்துகின்றனர், சரி இராதை மீது ஏன் அன்பு செலுத்துவதில்லை? லட்சுமி-நாராயணர் சிறு வயதில் யாராக இருந்தனர்? இதை யாரும் அறிய மாட்டார்கள். மனிதர்கள் நினைக்கின்றனர், இவர்கள் துவாபர யுகத்தில் இருந்துள்ளனர் என்று. மாயா இராவணன் முற்றிலும் கீழான புத்தி உள்ளவர்களாக ஆக்கி விட்டான். நீங்களும் கூட முதலில் கல் புத்தியினராக இருந்தீர்கள். பாபா உங்களைப் பாரஸ் (தங்க) புத்தியினராக ஆக்கியிருக்கிறார். பாரஸ் புத்தியினராக ஆக்குபவர் ஒரே ஒரு பாபா மட்டுமே! சொர்க்கத்தில் தங்கத்தாலான மாளிகைகள் இருக்கும். இங்கே தங்கம் என்ன, செம்பு கூடக் கிடைப்பதில்லை. பணத்தைச் செம்பினால் கூட செய்வதில்லை. அங்கோ செம்புக்கு எந்த ஒரு மதிப்பும் இருக்காது. இந்தப் பாடல் உள்ளதே-சிலருடையது மண்ணோடு மண்ணாகி விடும். சிலருடையதை அரசாங்கம் அபகரித்துக் கொள்ளும் என்று-அது நிச்சயமாக நடக்கப் போகிறது. நிச்சயமாக நெருப்புப் பற்றியது. விநாசம் ஏற்பட்டது. அது மீண்டும் நடைபெறும். 5000 ஆண்டுகளுக்கு முன் போலவே மீண்டும் தெய்விக சுயராஜ்யம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. குழந்தைகளாகிய உங்களுக்கு இராஜ்யத்தைத் தருகிறேன், இப்போது எவ்வளவு ஒருவர் படிக்கிறாரோ, அதற்குத் தகுந்த பலனை அடைவார். சிந்தனை செய்ய வேண்டும்-சத்யுகத்தில் இந்த லட்சுமி-நாராயணர் மற்றும் பிரஜைகள் எங்கிருந்து வந்தனர்? அவர்கள் இராஜ்யத்தை எங்கிருந்து பெற்றனர்? ஒருவர் மற்றவரிடம் இருந்து பெற்றனரா அல்லது சூரியவம்சியிடம் இருந்து சந்திர வம்சத்தினர் பெற்றார்களா? சந்திரவம்சிகளிடம் இருந்து பிறகு விகாரி ராஜாக்கள் பெற்றனர், பிறகு ராஜாக்களிடம் இருந்து காங்கிரஸ் அரசாங்கம் பெற்றது, இப்போதோ எந்த ஒரு இராஜ்யமும் இல்லை. லட்சுமி-நாராயணர் சொர்க்கத்தின் எஜமானர்களாக இருந்தனர் இல்லையா? - 8 இராஜ வம்ச ஆட்சி நடைபெற்றன. திரேதாயுகத்தில் சீதாராமரின் ஆட்சி நடந்தது. பிறகு மாயாவின் இராஜ்யம் ஆரம்பமானது. விகாரி ராஜாக்கள் நிர்விகாரி ராஜாக்களின் கோவில்களைக் கட்டிப் பூஜை செய்யத் தொடங்கினர். பூஜைக்குரியவர்களாக இருந்தவர்கள் தான் பிறகு பூஜாரி ஆனார்கள். இப்போதோ விகாரி ராஜாக்கள் கூட இல்லை. இப்போது மீண்டும் புது உலகத்தின் சரித்திரம் ரிப்பீட் ஆகும். புது உலகிற்காக பாபா உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பித்திருந்தார். எல்லையற்ற தந்தையிடம் ஆஸ்தி பெற வேண்டும். யார் பரீட்சையில் பாஸ் செய்கிறார்களோ, அவர்கள் தான் கல்ப-கல்பமாக உயர்ந்த பதவி பெறுவார்கள். இது ஆன்மீக படிப்பு, இது கீதா பாடசாலை. உண்மையில் இதை இறைத் தந்தையின் பல்கலைக்கழகம் என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் இதனால் தான் பாரதம் சொர்க்கமாக ஆகின்றது. ஆனால் இவ்விஷயத்தை அனைவரும் புரிந்து கொள்ளவில்லை. கொஞ்சம் தாமதமாகிறது. இன்னும் போனால் செல்வாக்கு (மகிமை) வெளிப்படும். இவையனைத்தையும் சிவபாபா தான் புரிய வைக்கிறார். சிவபாபா எனச் சொல்வதா அல்லது குழந்தை சிவன் எனச் சொல்வதா? சிவபாபாவாகவும் (தந்தையாக) உள்ளார், தாயாகவும் உள்ளார். சிவபகவான் தாயாக இல்லை என்றால் நீங்கள் ஏன் இதுபோல் அழைக்கிறீர்கள் - நீங்கள் தாயும் தந்தையும் என்று. நாங்கள் உங்கள் பாலகர்கள் என்று? புத்தி வேலை செய்கிறது. சிவபகவான் தந்தையாக இருக்கிறார் என்றால் தாயாகவும் இருக்கிறார். இப்போது சொல்லுங்கள், சிவன் உங்கள் தாயா? சிவன் உங்கள் குழந்தையா? சிவன் எங்கள் தந்தையாகவும் இருக்கிறார், குழந்தையாகவும் இருக்கிறார் எனச் சொல்பவர்கள் கை உயர்த்துங்கள். இது மிகவும் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய, ஆழமான விஷயமாகும். தந்தையே பிறகு குழந்தை யாகவும் எப்படி இருக்க முடியும்? உண்மையில் கிருஷ்ணரோ கீதையைச் சொல்லவில்லை. அவரோ தாய்- தந்தைக்கு ஒரே குழந்தையாக இருந்தார். சத்யுகத்திலோ பானை முதலியவற்றை உடைக்கும் விஷயம் கிடையாது. கீதையைச் சொன்னவர் சிவன். அவரைக் குழந்தையாகவும் புரிந்து கொண்டுள்ளனர். ஏனென்றால் அவர் மீது பலியாகவும் செய்கின்றனர். ஆஸ்தி முழுவதையும் அவருக்குக் கொடுத்து விடுகின்றனர். நீங்கள் பாடிக் கொண்டும் இருந்தீர்கள்-சிவபாபா, நீங்கள் வருவீர்களானால் நாங்கள் சமர்ப்பணமாகி விடுவோம். இப்போது பாபா சொல்கிறார், நீங்கள் என்னை வாரிசாக ஆக்குவீர்களானால் நான் உங்களை 21 பிறவிகளுக்கு வாரிசாக ஆக்குவேன். லௌகிக் குழந்தை உங்களிடம் எதையும் பெறவோ கொடுக்கவோ மாட்டார்கள். இவரோ பிறகு எவ்வளவு கொடுக்கிறார் பாருங்கள். ஆம், உங்கள் குழந்தைகளையும் கவனித்துக் கொள்ளுங்கள். ஆனால் ஸ்ரீமத் படி நடந்து செல்லுங்கள். இந்தக் காலத்தில் குழந்தைகள் தந்தையின் செல்வத்தால் பாவங்களையே செய்வார்கள். இந்தக் குழந்தை சொல்கிறது - நான் உங்கள் செல்வத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது? நானோ உங்களுக்கு இராஜ பதவி தருவதற்காக வந்துள்ளேன். ஸ்ரீமத்படி மட்டும் நடந்து கொள்ளுங்கள். யோகத்தினால் 21 பிறவிகளுக்கு ஆரோக்கியம், ஆகவே படிப்பினால் இராஜ்யம் கிடைக்கும். இத்தகைய கல்லூரி மற்றும் மருத்துவமனை திறந்து வையுங்கள். சிவபாபாவோ வள்ளல். நான் பெற்றுக் கொண்டு என்ன செய்யப் போகிறேன்? ஆம், யுக்தி சொல்கிறார் - ஈஸ்வரன் பெயரால் சேவையில் ஈடுபடுத்துங்கள். ஸ்ரீமத் படி நடந்து செல்லுங்கள். ஸ்ரீகிருஷ்ணர் பெயரால் அர்ப்பணம் செய்கின்றனர். அவரோ இளவரசராக இருந்தார். அவர் ஒன்றும் பசியோடு இருந்ததில்லை. சிவபாபா உங்களுக்கு பதிலாக அதிகமாகவே தருகிறார். பகவான் பக்திக்கான பலனைக் கொடுக்கிறார். அவர் துக்கத்தைப் போக்கி சுகம் கொடுப்பவர். உங்களுக்கு சத்கதி அளிப்பவர் வேறு யாரும் அதுபோல் கிடையாது. நான் குழந்தைகளாகிய உங்களுக்கு சத்கதி அளிக்கிறேன். நல்லது பாபா, துர்கதி அளிப்பது யார்? ஆம் குழந்தைகளே, இராவணனின் பிரவேசம் ஆன காரணத்தால் இராவணனின் வழிப்படி அனைவரும் உங்களுக்கு துர்கதியே அளித்து வந்துள்ளனர். இராவணனின் வழிப்படி முற்றிலும் பிரஷ்டாச்சாரி ஆகி விட்டுள்ளனர். இப்போது நான் உங்களை சிரேஷ்டாச்சாரி ஆக்கி சொர்க்கத்தின் எஜமானராக ஆக்குகிறேன். இங்கே நீங்கள் எதைச் செய்தாலும் அதை அசுர வழிப்படி தான் செய்வீர்கள். இப்போது தேவதையாக ஆக வேண்டுமானால் மற்ற சேர்க்கைகள் அனைத்தையும் விட்டு என்னுடைய சேர்க்கையில் மட்டுமே இணையுங்கள். எந்தளவு எனது வழிப்படி நடக்கிறீர்களோ, அந்த அளவு உயர்ந்த பதவி பெறுவீர்கள். படிக்க வில்லை என்றால் பிரஜையிலும் கூட குறைந்த பதவியே பெறுவீர்கள். ஒரு தடவை கேட்டீர்கள், தாரணை செய்தீர்கள் என்றால் சொர்க்கத்தில் வருவீர்கள். ஆனால் குறைந்த பதவி பெறுவீர்கள். நாளுக்கு நாள் அதிகக் கஷ்டங்கள் நடந்து கொண்டே இருக்கும். நிச்சயமாக இது (முன் கல்பத்தைப் போல) அதே சமயம் தான் என மனிதர்களும் புரிந்து கொள்வார்கள். ஆனால் அதிகத் தாமதமாக வருவதால் இவ்வளவு உயர்ந்த பதவி பெற முடியாது. யோகம் இல்லாமல் விகர்மங்கள் விநாசமாகாது. இப்போது அனைவருக்கும் கயாமத் (விசாரணை மற்றும் தீர்ப்பிற்கான) நேரமாகும். கணக்கு-வழக்கை முடித்தாக வேண்டும். இங்கே உங்கள் கர்மங்கள் விகர்மங்களாக ஆகிக் கொண்டே செல்கின்றன. கர்மமோ நிச்சயமாக அனைவருமே செய்வார்கள். கர்மம் இல்லாமலோ யாராலும் இருக்க முடியாது. ஆத்மா சொல்கிறது, நான் இந்தக் கர்மத்தைச் செய்கிறேன். இரவில்களைத்துப் போவதால் ஓய்வெடுக்கிறேன். இந்த உடல் உறுப்புகளைத் தனியானதாக உணர்ந்து தூங்கி விடுகிறேன். அது உறக்கம் எனச் சொல்லப் படுகின்றது. இப்போது பாபா சொல்கிறார், ஹே ஆத்மாக்களே! நான் உங்களுக்குச் சொல்கிறேன், அதை தாரணை செய்யுங்கள். இல்லற விவகாரங்களில் இருந்து கொண்டு படிப்பையும் படியுங்கள். படிப்பின் மூலம் தான் உயர்ந்த பதவி கிடைக்கும். தூய்மை ஆகாமல் இந்த ஞானம் புத்தியில் பதியாது. மாயா புத்தியை தூய்மை இழக்க வைக்கிறது. அதனால் பாபாவின் பெயர் பதீத-பாவனர் என்பதாகும். பாடுகின்றனர், நீங்கள் தாயும் தந்தையும், நாங்கள் உங்கள் பாலகர்...... ஆனால் நீங்கள் இப்போது நடைமுறையில் அமர்ந்திருக்கிறீர்கள். நீங்கள் அறிவீர்கள், இந்த சகஜ இராஜயோகத்தின் மூலம் 21 பிறவிகளுக்கு நாம் சொர்க்கத்தின் அதிபதி ஆகப் போகிறோம். அதற்காகத் தான் நீங்கள் வந்திருக்கிறீர்கள். பக்தி மார்க்கத்தில் நீங்கள் பாடியிருந்தீர்கள், இப்போது பாடல் நின்று போனது. சொர்க்கத்தில் பாடல் கிடையாது. பிறகு பக்தியில் இருக்கும். பாபா சொல்கிறார், நான் உங்கள் தாய்-தந்தை ஆகி உங்களை சொர்க்கவாசி ஆக்குகிறேன். மாயா பிறகு நரகவாசி ஆக்குகிறது. இது விளையாட்டு. இதைப் புரிந்து கொண்டு இறப்புக்கு முன்பு பாபாவிடம் ஆஸ்தியைப் பெற்றுக் கொள்ளுங்கள். இல்லையென்றால் இராஜ்ய பாக்கியத்தை இழந்து விடுவீர்கள். தூய்மையற்றவர்கள் ஆஸ்தியைப் பெற முடியாது. அவர்கள் பிறகு பிரஜையில் சென்று விடுவார்கள். அவர்களிலும் நம்பர்வார் பதவிகள் உள்ளன. பாபா சொல்கிறார், இந்த மரண உலகத்தில் இது உங்களுடைய கடைசிப் பிறவி. இப்போது எனது வழிமுறைப் படி நடப்பீர்களானால் உங்கள் துன்பங்கள் விலகி விடும். இதில் குருட்டு நம்பிக்கையின் விஷயம் எதுவும் கிடையாது. படிப்பில் ஒரு போதும் குருட்டு நம்பிக்கை இருப்பதில்லை. பரமாத்மா படிப்பு சொல்லித் தருகிறார். நிச்சயம் இல்லாமல் எப்படிப் படிப்பீர்கள்? படித்துப் படித்துப் பிறகு மாயா விக்னத்தை ஏற்படுத்துகிறது என்றால் அப்போது படிப்பை விட்டு விடுகின்றனர். அதனால் பாடப் பட்டுள்ளது - ஆச்சரியப் படும்படியாகக் கேட்கின்றனர், சொல்கின்றனர்...... பிறகு பாபாவின் கையை விட்டுப் போய் விடுகின்றனர். ஆனால் பிறகும் கூட அன்பு இருக்குமானால் வந்து சந்திக்கின்றனர். இன்னும் போனால் வருத்தப் படுவார்கள் – தந்தையின் குழந்தைகளாக ஆகிப் பிறகு தந்தையின் கையை விட்டுப் போய் விட்டனர். போய் மாயாவினுடையவர்களாக ஆகி விட்டனர் என்றால் அதற்கான தண்டனைகளும் அதிகம் வருகின்றன. மேலும் பதவியும் கீழானதாக ஆகி விடுகின்றது. கல்ப-கல்பாந்தரமாகத் தனது இராஜ்ய பாக்கியத்தை இழந்து விடுவீர்கள். தண்டனை அடைந்து பிரஜையின் பதவி பெற்றனர் என்றால் அதனால் பயன் என்ன? பாபாவின் முன்னிலையில் வந்து அநேகர் கேட்கின்றனர் - பிறகு வேலை-சம்மந்தமாக ஈடுபடும்போது மறந்து போகின்றனர். முதல் நம்பர் பாவம் எனப்படுவது காமக் கட்டாரி செலுத்துவதாகும். அதனால் பாபா சொல்கிறார், ஒரு போதும் அசுத்த ஆத்மாவாக ஆகக் கூடாது. பாபா வந்து அனைவரின் ஆடைகளையும் (ஆத்மாவை) சுத்தம் செய்கிறார். பாபா தான் தூய்மை இல்லாதவர்கள் அனைவரையும் தூய்மையாக்குபவர். சத்யுகத்தில் தூய்மையற்றவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். நீங்கள் பாபாவிடம் ஆஸ்தி பெற்று உலகத்தின் அதிபதி ஆகி விடுவீர்கள். நல்லது.இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!தாரணைக்கான முக்கிய சாரம் :

1) இப்போது இராவணனின் வழிமுறையை விட்டு ஸ்ரீமத் படி நடக்க வேண்டும். மற்ற அனைத்து தொடர்புகளையும் விட்டு விட்டு ஒரு பாபாவின் தொடர்பில் இணைய வேண்டும்.2) நிச்சயபுத்தி உள்ளவர் ஆகி படிப்பை அவசியம் படிக்க வேண்டும். எந்த மாதிரியான தடை ஏற்பட்டாலும் பாபாவின் கையை விட்டுவிடக் கூடாது. யோகத்தினால் ஆரோக்கியத்தையும் படிப்பினால் இராஜ்யத்தையும் பெற வேண்டும்.வரதானம் :

உயர்வான தூய்மை தன்மையை தாரணை செய்து எப்போதும் நற் செயல்களையே செய்யக்கூடிய உத்தம மற்றும் விசேஷமான ஆத்மா ஆகுக.சாதாரண ஆத்மா எப்போது தூய்மையை தாரணை செய்கின்றனரோ, அப்போது மகான் ஆத்மா எனச் சொல்லப் படுகின்றனர். தூய்மை தான் உயர்வாகும். தூய்மை தான் பூஜைக்குரியதாகும். பிராமணர்களின் தூய்மைக்குத் தான் மகிமையின் பாடல் உள்ளது. எந்த ஒரு காரியம் என்றாலும் பிராமணர்களைக் கொண்டு தான் செய்விப்பார்கள். அத்தகைய பெயரளவிலான பிராமணர்களோ அநேகம் உள்ளனர். ஆனால் நீங்கள் உங்களுடைய பெயர் எப்படியோ காரியமும் அப்படியே செய்யக்கூடிய விசேஷமான ஆத்மாக்கள். சாதாரண கர்மமும் கூட பாபாவின் நினைவில் இருந்து செய்வீர்களானால் அது விசேஷமாகி விடுகின்றது. அதனால் அத்தகைய விசேஷ செயல்களைச் செய்யக் கூடிய உத்தமமான மற்றும் விசேஷமான ஆத்மாக்கள் நீங்கள்.சுலோகன் :

தன் மூலமாக சர்வ ஆத்மாக்களுக்கும் சுகத்தின் அனுபவத்தை செய்விப்பது தான் மாஸ்டர் சுகம் தரும் வள்ளல் ஆவதாகும்.


***OM SHANTI***