14 April 2017

BK Murli 15 April 2017 Tamil

BK Murli 15 April 2017 Tamil

15.04.2017    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


இனிமையான குழந்தைகளே! எந்த பழைய தேகம் மற்றும் தேகத்தின் உறவினர்கள் ஒருவருக்கு ஒருவர் துக்கம் கொடுக்ககூடியவர்களோ, அவர்கள் அனைவரையும் மறந்து ஒரு தந்தையை நினைவு செய்யுங்கள், ஸ்ரீமத்படி நடங்கள்.கேள்வி:

தந்தையுடன் சேர்ந்து வீடு திரும்பிச் செல்வதற்காக தந்தையின் எந்த ஸ்ரீமத்தை பாலனை (கடைபிடிக்க) வேண்டும்?பதில்:

தந்தையின் ஸ்ரீமத் - குழந்தைகளே! தூய்மை ஆகுங்கள். ஞானத்தை முழுமையாக தாரணை செய்து தனது கர்மாதீத் நிலையை உருவாக்குங்கள். அப்பொழுதே தந்தையுடன் சேர்ந்து வீடு திரும்பிச் செல்ல இயலும். கர்மாதீத் ஆகவில்லை என்றால், இடையில் நின்று தண்டனைகளை அடைய வேண்டியது இருக்கும். வினாச நேரத்தில் சில ஆத்மாக்கள் சரீரத்தை விட்டுவிட்டு அலைந்து திரியும். உடன் செல்வதற்குப் பதிலாக இங்கேயே முதலில் தண்டனையை அனுபவித்து கணக்கை முடிக்கும். ஆகையினாலே, தந்தையின் ஸ்ரீமத் என்னவென்றால் குழந்தைகளே! தலை மீது பாவங்களின் சுமை என்ன உள்ளனவோ, பழைய கணக்கு வழக்கு என்ன உள்ளனவோ, அவை அனைத்தையும் யோகபலத்தின் மூலம் சாம்பல் ஆக்குங்கள் என்பதாகும்.பாடல்:

ஓ! தூரத்து வழிப்போக்கரே.......ஓம்சாந்தி.

இப்பொழுது பிராமணர்களாகிய உங்களுடைய புத்தியிலிருந்து சர்வவியாபி என்ற ஞானம் நீங்கிவிட்டது. பரமபிதா பரமாத்மா பிரஜாபிதா பிரம்மா மூலம் புது உலகைப்படைக்கின்றார் என்பதை நல்ல முறையில் புரிய வைக்கப்படுகிறது. அவர் படைப்பாளர் ஆவார், அவர் பரமாத்மா என்று அழைக்கப்படுகின்றார். அவர் வருகின்றார், வந்து குழந்தைகளை தன்னுடையவர்கள் ஆக்குகின்றார் என்பதையும் குழந்தைகள் அறிவீர்கள். மாயையிடமிருந்து விடுவிக்கின்றார். பழைய தேகம், தேக சகிதம் ஒருவருக்கு ஒருவர் துக்கம் கொடுக்கக்கூடிய உற்றார் உறவினர் போன்ற அனைத்தையும் மறக்க வேண்டும். யாராவது வயோதிகர் இருக்கிறார் என்றால் இராமரை நினைவு செய்யுங்கள் என்று அவரது உற்றார் உறவினர் கூறுவர். அது கூட பொய் தான் கூறுகின்றனர். சுயம் அவர்களே அறிந்திருக்கவில்லை, அவர்களுடைய புத்தியில் பரமாத்மாவின் நினைவு தங்குவதில்லை. பரமாத்மா சர்வவியாபி என்று புரிந்திருக்கின்றனர். ஒருபுறம் தூரத்து வழிப்போக்கரே என்று பாடுகின்றனர்.ஆத்மாக்கள் தூரத்திலிருந்து வந்து சரீரத்தை தாரணை செய்து அதனதன் நடிப்பை நடிக்கின்றன. மனிதர்களுக்காகவே இந்த அனைத்து விசயங்களும் புரிய வைக்கப்படுகின்றன. மனிதர்கள் சிவன் கோவில் கட்டுகின்றனர். பூஜை செய்கின்றனர். பின்னர் கூட இங்கே அங்கே தேடிக்கொண்டு இருக்கின்றனர். எனக்குள், உங்களுக்குள் மற்றும்அனைத்திலும் வியாபித்திருக்கின்றார் என்று கூறுகின்றனர். தந்தையை அறியாதவர் களை அனாதைகள் என்று கூறுகின்றார். ஹே, பகவான்! என்று நினைவு செய்கின்றனர், ஆனால், அவரை அறியவில்லை. அவர் நிராகாரமாக இருக்கின்றார் என்று புரிந்திருக்கின்றனர். நமது ஆத்மாவும் நிராகாரமானது ஆகும். இது ஆத்மாவின் சரீரம் ஆகும். ஆனால், ஆத்மாவை யாருமே அறியவில்லை. புருவங்களுக்கு நடுவில் ஜொலிக்கக்கூடிய நட்சத்திரம் போல் உள்ளது என்று கூறவும் செய்கின்றனர். ஒருவேளை நட்சத்திரம் போன்றது எனில், பின்னர் இவ்வளவு பெரிய லிங்கத்தை ஏன் செய்கிறீர்கள்? ஆத்மாவில் தான் 84 பிறவிகளின் நடிப்பு உள்ளது. இதைக் கூட அறியவில்லை. இங்கே அங்கே தேடி ஏமாற்றத்தை அடைந்து கொண்டு இருக்கின்றனர். அனைவரையும் பகவான் என்று கூறுகின்றனர். பத்ரிநாதரும் பகவான், கிருஷ்ணரும் பகவான், கல்லிலும், முள்ளிலும் கூட பகவான் இருக்கின்றார் என்றால், பின்னர் இவ்வளவு தூரம் தூரமாக ஏன் தேடிச் செல்கின்றனர்? யார் நம்முடைய தேவி தேவதை தர்மத்தைச் சேர்ந்தவர்கள் இல்லையோ, அவர்கள் பிராமணன் ஆகமாட்டார்கள், அவர்களுக்கு தாரணையும் ஏற்படாது. அவர்கள் நல்லது, நன்றாக உள்ளது என்று மட்டும் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். குழந்தைகளே! நான் உங்களை உடன் அழைத்துச் செல்வேன் என்று தந்தை கூறுகின்றார். எப்பொழுது நீங்கள் ஸ்ரீமத்படி நடந்து முதலில் தூய்மை ஆவீர்களோ, ஞானத்தை தாரணை செய்வீர்களோ, தனது கர்மாதீத நிலையை உருவாக்குவீர்களோ, அப்பொழுதே என்னுடன் இணைந்து வீட்டைச் சென்றடைவீர்கள். இல்லையேல், நடுவில் நின்று மிகவும் கடுமையான தண்டனையை அடைய வேண்டியது இருக்கும். இறந்த பின் சில ஆத்மாக்கள் அலைந்து திரிகின்றன. சரீரம் கிடைக்கும் வரை அலைந்து திரியும் தண்டணையை அனுபவிக்கும். வினாச நேரத்தில் இங்கே மிகவும் அசுத்தமாகிவிடும். பாவங்களின் சுமை தலை மீது அதிகமாக உள்ளது. அனைவரும் கணக்கு வழக்கை முடித்து தான் ஆகவேண்டும். சில குழந்தைகள் இப்பொழுது வரை கூட நினைவைப் பற்றி புரிந்து கொள்ளவில்லை. ஒரு நிமிடம் கூட தந்தையை நினைவு செய்வதில்லை. பாபாவை நினைவு செய்யுங்கள், ஏனெனில், தலை மீது சுமை அதிகம் உள்ளது என்று குழந்தைகளுக்கு அடிக்கடி கூறப்படுகிறது. பரமாத்மா சர்வ வியாபியாக இருக்கின்றார் என்று மனிதர்கள் கூறுகின்றனர். பின்பும் கூட தீர்த்த யாத்திரைக்காக எவ்வளவு அலைகின்றனர்! இந்த அனைத்து சடங்குகளை செய்வதன் மூலம் நமக்கு பரமாத்மாவை சந்திப்பதற்கான வழி கிடைக்கும் என்று நினைக்கின்றனர். தூய்மை அற்றவர்கள், கீழான நிலையிருப்பவர்கள் (பிரஷ்டாச்சாரி) என்னை வந்தடைய முடியாது என்று தந்தை கூறுகின்றார். இன்னார் நிர்வாண தாமம் சென்றடைந்துவிட்டார் என்று கூறுகின்றனர். ஆனால், பொய் கூறுகின்றனர். எவருமே செல்வதில்லை. பக்தி மார்க்கத்தில் எவ்வளவு ஏமாற்றத்தை அடைகின்றனர் என்பதை இப்பொழுது நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். இந்த சாஸ்திரங்கள் அனைத்தையும் படித்து படித்து மனிதர்கள் கீழே விழுந்து தான் ஆக வேண்டும். தந்தை உயர்த்துகின்றார், இராவணன் கீழே விழவைக்கின்றது. நீங்கள் எனது வழிப்படி நடந்து தூய்மை ஆனீர்கள் மற்றும் நல்லமுறையில் படித்தீர்கள் என்றால் சொர்க்கம் செல்வீர்கள், இல்லை என்றால், அந்தளவு உயர்ந்த பதவியை அடைய இயலாது என்று இப்பொழுது தந்தை புரிய வைக்கின்றார். எவ்வளவு கண்காட்சி சேவை நடைபெறுகிறது! இப்பொழுது இந்த சேவை அதிகரிக்கும். கிராமம் கிராமமாகச் செல்வீர்கள். இது புதிய படைப்பாகும். புதுப்புது கருத்துக்கள் (பாய்ண்ட்ஸ்) வெளிப்படுகின்றன. எதுவரை வாழ்கிறோமோ அதுவரை கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். உங்களுடைய இலட்சியமே எதிர்காலத்திற்காகத் தான். இந்த சரீரத்தை விட்டுவிட்ட பின் நீங்கள் சென்று இளவரசன், இளவரசி ஆகப்போகிறீர்கள். சொர்க்கம் என்றால் சொர்க்கம் தான். அங்கே நரகத்தின் பெயர் அடையாளம் கூட இருக்காது. பூமி கூட தலைகீழாக மாற்றமடைந்து புதியதாகிவிடுகிறது. இந்த கட்டிடங்கள் முதலிய அனைத்தும் அழிந்துவிடும். தங்க துவாரகை கீழே சென்றுவிட்டதாகக் கூறுகின்றனர். கீழே எதுவும் செல்வதில்லை. சக்கரம் சுழல்கிறது. இந்த தீர்த்த யாத்திரை போன்ற அனைத்தும் பக்தி மார்க்கம் ஆகும். பக்தி என்பது இரவாகும். எப்பொழுது பக்தியின் இரவு முடிவடைகிறதோ அப்பொழுது பகல் ஆக்குவதற்காக பிரம்மா வருகின்றார். துவாபர, கலியுகம் பிரம்மாவின் இரவு ஆகும். பிறகு பகலில் வரவேண்டும். குழந்தைகளாகிய உங்களுக்குள்ளும் வரிசைக்கிரமமாக உள்ளீர்கள். அனைவரும் ஒன்று போல் கற்க இயலாது. வெவ்வேறு நிலைகள் உள்ளன. கண்காட்சியில் பாருங்கள் எத்தனை பேர் வருகின்றனர். 5-7 ஆயிரம் நபர்கள் தினமும் வருகின்றனர். பின்னர், யார் குழந்தையாக ஆகிறார்கள்? கோடியில் ஒருசிலர், அந்த சிலரிலும் ஒருவர். பாபா, 3-4 பேர் குழந்தைகள் ஆகியிருக்கின்றனர், அவர்கள் தினந்தோறும் வருகின்றனர் என்று எழுதுகின்றனர். சிலர் 7 நாட்கள் பாடம் கேட்கின்றனர், பிறகு, வருவதில்லை. யார் தேவி தேவதை தர்மத்தினராக இருப்பார்களோ அவர்களே இங்கு நிலைத்திருப்பார்கள். சாதாரண ஏழைகளே குழந்தைகள் ஆவார்கள். செல்வந்தர்கள் நிலைப்பது என்பது கடினம். மிகவும் உழைக்க வேண்டியதாக உள்ளது. கடிதம் கூட எழுதுகின்றனர். இரத்தத்தினால் கூட எழுதிக் கொடுக்கின்றனர். பின்னர், போகப் போக மாயை விழுங்கிவிடுகிறது. யுத்தம் நடக்கிறது. இராவணன் வென்றுவிடுகிறான். மற்றபடி, ஞானம் கொஞ்சம் கேட்கின்றனர். அதனால், அவர்கள் பிரஜையில் சென்றுவிடுவார்கள். ஸ்ரீமத்படி நடக்க வேண்டும் என்று பாபா புரிய வைத்துக் கொண்டிருக்கின்றார். மம்மா, பாபா மற்றும் ஒப்பற்ற குழந்தைகள் முயற்சி செய்து கொண்டு இருக்கின்றனர். மகாரதிகளின் பெயர் புகழப்படுகிறது அல்லவா! பாண்டவ சேனையில் யார் யார் இருக்கிறார்களோ, அவர்களுடைய பெயர் புகழப்படுகிறது. எனில், கௌரவ சேனையைச் சேர்ந்த முக்கியஸ்தர்களின் பெயரும் புகழப்படுகிறது. ஐரோப்பிய வாசிகள் யாதவர்களின் பெயரும் புகழப்படுகிறது. செய்தித்தாளில் கூட புகழ்வாய்ந்தவர்களின் பெயர் போடப்படுகிறது. பரமபிதா பரமாத்மாவுடன் அவர்கள் அனைவருக்கும் விபரீத (அன்பற்ற) புத்தி உள்ளது. பரமாத்மாவை அறிந்தால் தானே அன்பு செலுத்த முடியும். இங்கே கூட குழந்தைகள் அன்பு செலுத்த இயலுவதில்லை. அடிக்கடி மறந்துவிடுகின்றனர். பிறகு, பதவி கீழானதாக ஆகிவிடுகிறது. எவ்வளவு தந்தையை நினைவு செய்வீர்களோ, அவ்வளவு விகர்மங்கள் வினாசம் ஆகும் மற்றும் உயர்ந்த பதவி கிடைக்கும். பிறரையும் தனக்குச் சமமாக ஆக்க வேண்டும். இரக்க உள்ளம் உடையவர் ஆகவேண்டும். கண் இழந்தவர்களுக்குக் கூட ஊன்றுகோல் ஆகவேண்டும். சிலர் கண் இழந்தவர்கள், சிலர் ஒற்றைக் கண் உள்ளவர்கள், சிலர் ஊனமுற்றவர்களாக உள்ளனர். இங்கே கூட குழந்தைகள் வரிசைக்கிரமமாக உள்ளனர். அத்தகையவர்கள் பிறகு சாதாரண பிரஜையில் சென்று வேலைக்காரன் வேலைக்காரி ஆவார்கள். போகப்போக நீங்கள் அனைத்துக் காட்சிகளையும் காண்பீர்கள். ஈஸ்வரனை சர்வ வியாபி என்று கூறுவது அறிவான செயல் அல்ல. ஈஸ்வரனோ ஞானக்கடல் ஆவார். அவரே வந்து உங்களுக்கு ஞானம் அளித்துக் கொண்டு இருக்கின்றார், இராஜயோகமும் கற்பித்துக் கொண்டு இருக்கின்றார். ஸ்ரீகிருஷ்ணரது ஆத்மா, யார் இப்பொழுது 84 பிறவிகள் எடுத்து முடித்துவிட்டாரோ, அந்த ஆத்மா இப்பொழுது இராஜயோகம் கற்றுக் கொண்டிருக்கிறது. எவ்வளவு ஆழமான விசயங்கள்! இந்த சமயத்தில் அனைவரும் தந்தையை மறந்த காரணத்தினால் மகான் துக்கம் நிறைந்தவர்கள் ஆகிவிட்டனர். குழந்தைகளாகிய நீங்கள் எவ்வளவுக்கெவ்வளவு முயற்சி செய்வீர்களோ, அவ்வளவு உங்களிடமிருந்து குறைகள் நீங்கிவிடும். குறிக்கோள் மிக உயர்ந்தது ஆகும். கோடிக்கணக்கானோரிலிருந்து முக்கியமானவர்கள் 8 பேர் வெளிப்படுகின்றனர். பிறகு, 108 மணி மாலை உருவாகிறது. பின்னர், 16 ஆயிரம் உருவாகிறது. இது கூட முயற்சி செய்வதற்காகவே பயம் ஏற்படுத்தப்படுகிறது. உண்மையில், 16 ஆயிரம் இல்லை. மாலை என்பது 108 மணியினுடையது தான். மேலே மலர், பிறகு ஜோடி மணிகள், வரிசைக்கிரமமாக விஷ்ணு மாலை உருவாகிறது. முயற்சி செய்விப்பதற்காக எவ்வளவு புரிய வைக்கப்படுகிறது! யார் இந்த தர்மத்தைச் சேர்ந்தவர்களாக இல்லையோ, அவர்கள் எதையும் புரிந்து கொள்ளமாட்டார்கள். சொர்க்கத்தின் சுகத்தை அடைவதற்குத் தகுதியானவர்கள் அல்ல. பூஜாரிகள் அனேகர் உள்ளனர், அவர்கள்கூட வருவார்கள் என்றால், பிரஜைகளாகத் தான் வருவார்கள். பிரஜை பதவி என்பது ஒன்றுமே கிடையாது. மம்மா, பாபா என்று கூறுகிறீர்கள் எனில், அவர்களைப் பின்பற்றி மம்மா, பாபாவின் சிம்மாசனதாரி ஆகுங்கள். ஏன் மனம் உடைந்து போகிறீர்கள்? பள்ளியில் பயிலும் ஏதாவது குழந்தை நான் தேர்ச்சி பெறமாட்டேன் என்று கூறினால் இது மந்த புத்தி உடைய குழந்தை என்று அனைவரும் கூறுவார்கள். புத்திசாலி குழந்தைகள் மிகவும் நன்றாகப் படிக்கின்றனர் மற்றும் உயர்ந்த எண்ணில் வருகின்றனர். குழந்தைகளாகிய நீங்கள் கண்காட்சியில் மிகவும் நன்றாக சேவை செய்ய இயலும். பாபாவிடம் கூட, நான் சேவை செய்வதற்குத் தகுதியானவராக இருக்கிறேனா என்று கேட்கலாம். குழந்தைகளே! இப்பொழுது நீங்கள் அதிகமாகக் கற்றுக் கொள்ள வேண்டும். அதாவது தகுதியானவர் ஆகவேண்டும் என்று பாபாவால் கூற இயலும். வித்வான்களுக்கு முன் புரிய வைக்கக்கூடியவர் கூட புத்திசாலியானவராக இருக்க வேண்டும். முதன்முதலில், பகவான் வந்துவிட்டார் என்ற நம்பிக்கை ஏற்படுத்தப்படுகிறது. தூர தேசத்தில் இருப்பவரே வாருங்கள், எங்களை உடன் அழைத்துச் செல்லுங்கள், ஏனெனில், நாங்கள் மிகவும் துக்கம் நிறைந்தவர்களாக இருக்கிறோம் என்று அழைக்கிறார்கள். சத்யுகத்தில் இவ்வளவு மனிதர்கள் இருக்கமாட்டார்கள். அனைத்து ஆத்மாக்களும் முக்திதாமம் சென்றுவிடும். அதற்காகவே உலகம் இவ்வளவு பக்தி செய்கிறது. நான் அனைவரையும் அழைத்துச் செல்வேன் என்று தந்தை கூறுகின்றார். நொடியில் முக்தி, ஜீவன்முக்தி கிடைக்கிறது. நம்பிக்கை ஏற்பட்டு விட்டால் ஜீவன்முக்தி நிலை அடைவீர்கள். பின்னர், ஜீவன்முக்தியில் கூட பதவி உள்ளது. ஜீவன்முக்தியில் இராஜா, இராணி பதவி அடைவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.மம்மா, பாபா மகாராஜா, மகாராணி ஆகின்றனர் எனில், நாம் ஏன் பதவி அடையக்கூடாது! முயற்சி செய்பவர்கள் மறைந்து இருக்க இயலாது. முழு இராஜ்யம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. தெய்வீக தர்மத்தைச் சேர்ந்தவர்களாக யாரெல்லாம் இருக்கின்றனரோ, அவர்கள் அவசியம் வருவார்கள். மம்மா, பாபா இராஜா, இராணி ஆகின்றார்கள் என்றால், நாமும் கூட ஏன் முயற்சி செய்யக் கூடாது!பாபா அவ்வப்போது சென்டருக்கு வருகிறேன். இப்பொழுது மகளுக்குத் திருமணம் முடிக்க வேண்டும். யாராவது ஞானி பையனைக் காண்பித்தால் மணம் முடித்து வைப்பேன் என்று பாபாவிற்குக் குழந்தைகள் கடிதம் எழுதுகின்றனர். நான் திருமணம் செய்து கொள்ளமாட்டேன் என்று பெண் சொல்ல வேண்டும். அனேகப் பெண்கள் அடி வாங்குகிறார்கள். அபலைகள் மீது கொடுமைகள் இழைக்கப்படுகின்றன. தாய், தந்தை மற்றும் குழந்தைகள் ஆகிய மூவருமே பாபாவிடம் வந்தீர்கள் என்றால், பாபா புரியவைப்பார் என்று பாபா எழுதுகின்றார். மதிப்பிற்குரிய பிதாஸ்ரீ என்று எழுதுகிறீர்கள், எனவே, வாருங்கள். டிக்கட் எடுப்பதற்குப் பணம் இல்லை என்றாலும் கூட கிடைத்துவிடும். எதிரில் வரும்பொழுது ஸ்ரீமத் கிடைக்கும். குமாரியை வதைக்கக் கூடாது அல்லவா. இல்லையெனில், பாவ ஆத்மா ஆகிவிடுவீர்கள். தந்தையின் ஸ்ரீமத்படி நடந்து தூய்மை ஆகவேண்டும். நல்லது.இனிமையிலும் இனிமையான தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்காக தாய், தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மிகக் குழந்தைகளுக்கு ஆன்மிகத் தந்தையின் நமஸ்காரம்.தாரணைக்காக முக்கிய சாரம்:

1. ஜீவன்முக்தி பதவியை அடைவதற்கான முயற்சி செய்ய வேண்டும். எவ்வாறு தாய், தந்தை மகாராஜா, மகாராணி ஆகின்றார்களோ, அவ்வாறு அவர்களைப் பின்பற்றி சிம்மாசனதாரி ஆகவேண்டும். புத்திசாலி ஆகி படிப்பை நல்லமுறையில் படிக்க வேண்டும்.2. தந்தையிடம் உண்மையான அன்பு செலுத்த வேண்டும். இரக்க உள்ளம் உடையவர்கள் ஆகி கண் இழந்தவர்களுக்கு வழி காண்பிக்க வேண்டும். தந்தைக்கு எதிரில் வந்து ஸ்ரீமத் பெற்று பாவ ஆத்மா ஆவதிலிருந்து தப்பிக்க வேண்டும் மற்றும் காப்பாற்ற வேண்டும்.வரதானம்:

அனேக விதமான உணர்வுகளை முடித்துவிட்டு, ஆன்மிக உணர்வை தாரணை செய்யக்கூடிய அனைவரின் சினேகி ஆவீர்களாக !தேக உணர்வில் இருப்பதன் மூலம் அனேக விதமான உணர்வுகள் உருவாகின்றன. அவ்வப்போது சிலர் நன்றாகத் தோன்றுவார்கள், அவ்வப்போது சிலர் மோசமாகத் தோன்றுவார்கள். ஆத்மா என்ற ரூபத்தில் பார்ப்பதன் மூலம் ஆன்மிக அன்பு பிறக்கும். ஆன்மிக உணர்வு, ஆன்மிகப் பார்வை, ஆன்மிக விருத்தியில் இருப்பதனால் ஒவ்வொருவருடைய சம்பந்தத்தில் வந்தாலும் மிகவும் விடுபட்டவராக மற்றும் அன்பானவராக இருப்பீர்கள். எனவே, போகும் போதும் வரும்போதும் நான் ஆத்மா என்று பயிற்சி செய்யுங்கள். இதன் மூலம் அனேக விதமான உணர்வுகள், சுபாவங்கள் முடிந்துவிடும் மற்றும் தானாகவே அனைவருடைய சினேகி ஆகிவிடுவீர்கள்.சுலோகன்:

யாரிடம் ஊக்கம், உற்சாகம் என்ற இறக்கைகள் உள்ளனவோ, அவர்களுக்கு எளிதாக வெற்றி பிராப்தமாகக் கிடைக்கிறது.***OM SHANTI***

Whatsapp Button works on Mobile Device only