25 April 2017

BK Murli 26 April 2017 Tamil

BK Murli 26 April 2017 Tamil

26.04.2017    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


இனிமையான குழந்தைகளே! தந்தை, ஆசிரியர், சத்குரு மூவருமே பரமபிரியமானவர்கள். மூவருமே ஒருவர். ஆகவே நினைவு செய்வதும் சுலபமாக இருக்க வேண்டும்.கேள்வி:

இந்தக் கலியுகத்தில் சதா இளைஞராக யார் இருக்கிறார், எப்படி?பதில்:

இங்கே இராவணன் (விகாரம்) சதா இளைஞனாக உள்ளான். மனிதர்கள் வயோதிகராக ஆகலாம். ஆனால் அவர்களிடம் உள்ள விகாரங்கள் மற்றும் கோபம் உள்ளது, அது ஒரு போதும் முதுமை அடைவதில்லை. அது எப்போதுமே இளமையாக உள்ளது. இறக்கும் வரையிலும் கூட விகாரத்தின் அம்சம் இருந்து கொண்டிருக்கிறது. காமம் மிகப்பெரிய விரோதி என்று பாபா சொல்கிறார். ஆனால் மனிதர்களுக்கு அது தான் பரம (உற்ற) நண்பனாக உள்ளது. அதனால் ஒருவர் மற்றவர்க்குத் தொந்தரவு கொடுத்துக் கொண்டே உள்ளனர்.பாடல்:

நான் ஒரு சின்னஞ்சிறிய குழந்தை....ஓம் சாந்தி.

குழந்தைகள் தந்தையை நினைவு செய்கின்றனர். நாம் இச்சமயம் மாயா அல்லது பலவான் இராவணனின் விலங்குகளில் சிக்கிக் கொண்டுள்ளோம் எனப் புரிந்து கொண்டிருக்கின்றனர். பாபா சொல்கிறார், விடுவிப்பவர் சக்தி மிக்கவர். குழந்தைகள் நீங்கள் அறிவீர்கள், நாம் ஆத்மாக்கள் பலவீனமாக உள்ளோம். இராவணன் நம்மை பலவீனமாக ஆக்கியுள்ளான். இந்த ஞானம் எந்த ஒரு மனிதரிடமும் கிடையாது. பாபா அமர்ந்து குழந்தைகளுக்கு ஞானம் தருகிறார். நீங்கள் எவ்வளவு சர்வசக்திவான், உலகத்தின் எஜமானர்களாக இருந்தீர்கள்! இப்போது எவ்வளவு ஏழையாக, பலமற்றவராக ஆகியிருக்கிறீர்கள்! அதனால் தான் அனைவரும் அழைக்கின்றனர், ஹே பரமபிதா பரமாத்மா! வந்து இந்த இராவணனின் விலங்குகளில் இருந்து எங்களை விடுவியுங்கள். ஹே பதீத-பாவனா வாருங்கள். அவர் தான் தூய்மை இல்லாதவர்களைப் தூய்மையாக்குபவர். இச்சமயம் இராவண இராஜ்யம். சொர்க்கம் இராமராஜ்யம் என்றும், நரகம் இராவண இராஜ்யம் என்றும் சொல்லப் படுகின்றது. இராவணனும் பலவான், இராமரும் பலவான். ஏனென்றால் இருவருமே பாதி-பாதி கல்பம் இராஜ்யம் செய்கின்றனர். மனிதர்களோ அனைவரும் தூய்மையற்றவர்கள். நீங்களும் முதலில் தூய்மை இல்லாதவர்களாக இருந்தீர்கள். இப்போது பதீத-பாவனர் வந்து உங்களுக்கு தூய்மையாவதற்கான ஞானம் கொடுத்துக் கொண்டிருக்கிறார். யோகம் மற்றும் ஞானம். முதலிலோ பாபாவிடம் புத்தி தொடர்பு வேண்டும். உலகத்தில் தந்தை தனி, ஆசிரியர் தனி, குரு தனி. நினைவு செய்ய வேண்டி உள்ளது. இன்ன ஆசிரியர் நமக்குப் படிப்பு சொல்லித் தருகிறார். இங்கே நீங்கள் மூன்று சம்மந்தங்களிலும் ஒருவரையே நினைவு செய்கிறீர்கள். மூவரின் பெயர் ஒரே சிவன் என்பது தான். பரமபிரிய பரமபிதா, பரமபிரிய ஆசிரியர், பரமபிரிய சத்குரு அனைத்தும் ஒருவர் தான். மனிதர்களோ, ஆசிரியரைத் தனியாக, குருவைத் தனியாக, தந்தையைத் தனியாக நினைவு செய்வார்கள். அவர்களின் பெயர் வடிவம் தனித்தனியாக உள்ளது. இங்கே மூவரின் பெயர் வடிவமாக ஒன்று தான் புத்தியில் வருகின்றது. வடிவம் நிராகார், பெயர் சிவன். புத்தியில் ஒருவர் தான் நினைவு வருகிறது. சிவபாபா சொல்கிறார், குழந்தைகளாகிய உங்களை இந்த மரண உலகத்தில் இருந்து அழைத்துச் செல்வதற்காக நான் வருகிறேன். இதன் அறிகுறிகளையும் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். பலவான் ஆவதில் மாயா அதிகமாக எதிர்க்கிறது. விக்னங்களை ஏற்படுத்துகிறது. நீங்கள் அதிகமாகக் காயப் படுகிறீர்கள். மாயா சில நேரம் வேகமாக அடி கொடுக்கிறது, சில நேரம் இலேசாக அடி கொடுக்கிறது. வேகமாக அப்படி அடி கொடுக்கிறது, அதனால் விகாரத்தில் கூட விழுந்து விடுகின்றனர். பிறகு அந்தப் (பிரபாவம்) பாதிப்பு அதிக காலம் இருக்கின்றது. புத்திக்குப் பூட்டுப் போடப் பட்டது போல் ஆகி விடுகிறது. இப்போது பாபா சொல்கிறார், மாயா மறக்கடிப்பதற்கு அதிக முயற்சி செய்யும். ஆனால் நீங்கள் மறக்கக் கூடாது. எவ்வளவு நீங்கள் என்னை நினைவு செய்கிறீர்களோ, அப்போது ஆஸ்தியும் புத்தியில் வரும், மேலும் உயர்ந்த பதவியும் பெறுவீர்கள். தந்தையின் ஆஸ்தி நினைவுக்கு வராத அளவிற்கு எந்த ஒரு குழந்தையும் இருக்க முடியாது. ஆஸ்தி குழந்தையிடமிருந்து மறைந்திருக்க முடியாது. நீங்களும் அறிவீர்கள், நாம் உலகத்தின் இராஜ்ய பதவி பெற முடியும், நம்பர்வார் புருஷார்த்தத்தின் அனுசாரம். அனைவரும் ஒரே மாதிரி இராஜதானி பெற முடியாது. இந்த இராஜதானி ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. மற்ற (மத ஸ்தாபகர்) யார் வருகிறார்களோ, அவர்கள் இராஜதானியை ஸ்தாபனை செய்வதில்லை. அவர்கள் (மற்ற தர்மத்தினர்) இராவணனின் இராஜ்யத்தில் வருகின்றனர் எனச் சொல்ல மாட்டார்கள். இராவணனின் தொடர்பே பாரதத்தோடு தான். இங்கே தான் இராவணனை எரிக்கின்றனர். மற்ற இடங்களிலோ இராவணனப் பற்றியே தெரியாது. அரைக்கல்பத்திற்குப் பின் இராவண இராஜ்யம் வருகிறது. நிச்சயமாக சூரியவம்சி அல்லது சந்திரவம்சிகளில் இருந்து தான் இஸ்லாமிய தர்மத்தினர் வெளிப்பட்டிருப்பார்கள். ஒரு தர்மத்தில் இருந்து தான் பிறகு மற்ற கிளைகள் வெளிப்படுகின்றன இல்லையா? ஒரு கிளை வெளிப்படுகிறது என்றால் அந்தச் சமயம் அங்கே இராவண இராஜ்யம் இருக்கும் என்பதில்லை. அவர்களோ பின்னால் வருகின்றனர். பாபாவே வந்து இராஜதானியை ஸ்தாபனை செய்கிறார். அவர்களில் சிலர் பாதியில், சிலர் கால்பகுதியில் வருகின்றனர். சதோப்ரதானத்தில் இருந்து பிறகு தமோபிரதானமாக ஆக வேண்டும். அவர்களுக்கு அல்ப கால சுகம் மற்றும் நீண்ட கால துக்கம் இருக்கும். இந்த விளையாட்டும் புரிய வைக்கப்படுகின்றது. முதலில் தூய்மையாக இருந்தனர். பிறகு தூய்மை இல்லாதவர்களாக ஆகின்றனர். முதலில் ஒரு தேவி-தேவதா தர்மம் மட்டுமே இருந்தது. பிறகு மற்ற தர்மங்களின் வளர்ச்சி ஏற்படுகிறது. தேவதைகள் தாங்களே இந்துவாக ஆகி விடுகின்றனர். பிறகு விதம்-விதமாக பலவகையில் பல்கிப் பெருகிக் கொண்டே போகிறது. அவர்கள் பிறகு தங்கள் தர்ம ஸ்தாபகரின் பின்னால் சென்று விடுகின்றனர். தேவதா தர்மம் மறைந்து விட்டது. அனைவரும் தேவி-தேவதா தர்மத்தினர் தான், ஆனால் தங்களை தேவதா எனச் சொல்லிக் கொள்ள முடிவதில்லை. ஏனென்றால் தூய்மை இல்லை. தூய்மை இல்லாமல் தங்களை தேவதை எனச் சொல்லிக் கொள்வது என்பது விதிமுறைக்குப் புறம்பானதாக ஆகி விடுகின்றது. யார் அசல் தேவி-தேவதைகளாக இருந்தனரோ, பிறகு அவர்களே சத்திரியர். பிறகு அவர்களே வைசியர், அவர்களே சூத்திரர்களாக ஆகி விடுகின்றனர். இப்போது மீண்டும் நீங்கள் பிராமணர் ஆகியிருக்கிறீர்கள். இந்த விஷயங்களை வேறு தர்மங்களைச் சேர்ந்தவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள். தேவதா தர்மத்தினர் தான் இங்கே வருவார்கள். மற்றவர்களோ பின்னால் வந்து கொண்டே இருப்பார்கள். இன்னும் போகப்போக அதிக பெருக்கம் ஆகி விடும். வாய் வழி வம்சத்தினர் அதிகமாவார்கள் பிரஜாபிதா பிரம்மா, பிராமண தர்மத்தை இப்போது ஸ்தாபனை செய்கிறார். பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகள் நிச்சயமாக பிரம்மாகுமார் குமாரிகளாக இருப்பார்கள் இல்லையா? பிராமண வர்ணத்தினர் தான் தேவதை ஆவார்கள். ஏராளமானவர்கள் வந்து ஞானத்தைப் பெறுவார்கள்.நீங்கள் சூரியவம்சி இராஜதானியில் வருவதற்கான புருஷார்த்தம் செய்கிறீர்கள். அவர்களிலும் முக்கியமானவர்கள் எட்டுப் பேர், மற்றது வளர்ச்சியாகி விடும். யார் மம்மா-பாபாவுடையவர்களாக ஆகின்றனரோ, ஞானத்தை கொஞ்சம் கேட்கின்றனரோ, அவர்கள் வருவார்கள். கண்காட்சிகளில் ஏராளமானவர்கள் வருகின்றனர். அவர்களில் நன்கு புருஷார்த்தம் செய்பவர்கள் யாரோ சிலர் வெளிப்படுகின்றனர். முதல்-முதலில் பாபாவின் அறிமுகத்தை அவசியம் கொடுக்க வேண்டும். பிறகு சிலர் லிங்க ரூபம் எனச் சொல்லலாம் அல்லது ஜோதி சொரூபம் எனச் சொல்லலாம். தந்தை எனப் புரிந்து கொள்வார்களானால் பிறகு பிரம்மம் எனப்படும் மகாதத்துவத்தை பகவான் எனச் சொல்ல முடியாது. பரமபிதா பரமாத்மாவோ ஞானம் நிறைந்தவர். பிரம்மம் ஞானம் நிறைந்தது அல்ல. நீங்கள் கேட்கிறீர்கள், ஆத்மாவின் ரூபம் என்ன என்று. அப்போது லிங்கம் எனச் சொல்கின்றனர். ஏனென்றால் லிங்க ரூபத்திற்குத் தான் பூஜை நடைபெறுகின்றது. நட்சத்திரத்தின் பூஜையோ எங்கும் கிடையாது. தெரியாத காரணத்தால் பிறகு எதையாவது உருவாக்கி விடுகின்றனர். கல்-மண் அனைத்திலும் பகவான் இருப்பதாகச் சொல்லி விடுகின்றனர். பாபா புரிய வைக்கிறார், ஆத்மாவோ நட்சத்திரமாக உள்ளது. ஆத்மாக்களை ஒன்றாகக் கூட்டமாகவும் பார்க்க முடியும். ஆத்மாக்கள் அனைத்தும் திரும்பிச் செல்லுமானால் பெரிய கூட்டமாக இருக்கும் இல்லையா? அது சூட்சுமத்திலும் சூட்சுமமானது எனச் சொல்லப் படுகின்றது. சாட்சாத்காரத்தினால் யாரும் எதையும் புரிந்து கொள்ள இயலாது. யாருக்காவது சிவனுடைய அல்லது பிரம்மா விஷ்ணு சங்கரின் சாட்சாத்காரமும் கிடைக்கிறது என வைத்துக் கொள்ளுங்கள், ஆனால் அதனால் எந்த ஒரு பயனும் கிடையாது. இங்கோ சிருஷ்டியின் முதல்-இடை-கடை பற்றி அறிந்து கொள்ள வேண்டும். இது படிப்பாகும். பரமாத்மாவும் ஒரு நட்சத்திரமாக உள்ளார். இவ்வளவு சிறிய பொருளுக்குப் பாருங்கள், எவ்வளவு பெரிய மகிமை! ஞானக்கடல்,  அன்புக்கடல், சுகக்கடலாக இருக்கும் அவர் தான் அனைத்துக் காரியங்களையும் செய்கிறார். இவை மிக சூட்சுமமான விஷயங்கள் எனச் சொல்லப்படுகிறது.பாபா எனச் சொல்வதால் நிச்சயமாக அவர் சொர்க்கத்தைப் படைப்பவர் என்பது. புத்தியில் வர வேண்டும் - நிச்சயமாக பகவான் எங்கோ வந்திருப்பார் எனச் சொல்லவும் செய்கின்றனர். கீதையின் பகவான் ஸ்ரீகிருஷ்ணராக இருந்தால் அந்த தேகதாரி மறைந்திருக்க முடியாது. இவை முற்றிலும் ஆழமான விசயங்களாகும். பரமபிதா பரமாத்மா என்பவர் என்ன பொருள், ஆத்மா என்பது என்ன பொருள் என்று ஒரு போதும் கேட்டிருக்கவில்லை. வெறுமனே சொல்லி விடுகின்றனர் - புருவ மத்தியில் ஒரு அதிசயமானதொரு நட்சத்திரம் ஜொலிக்கிறது என்று. பிறகு அவரைப் பரமபிதா பரமாத்மா எனச் சொல்லி விடுகின்றனர். இப்போது ஆத்மா மற்றும் பரமாத்மாவின் ரூபத்தில் வித்தியாசமோ ஒரு சிறிதும் கிடையாது. பரமாத்மா என்ன ஒரு பெரிய பொருளா, பெரிய ஒளியா? கிடையாது. அவரோ ஞானம் நிறைந்தவராக மட்டும் உள்ளார். கதி-சத்கதிக்காக ஞானம் கொடுக்கிறார். ஆக, அவர் ஞானக்கடல். இப்போது ஞானக்கடல் என்று பரமபிதா பரமாத்மாவைச் சொல்வீர்களா, அல்லது இராவணனின் வழிப்படி நடக்கும் மனிதர்களைச் சொல்வீர்களா? பாபா சொல்கிறார், நான் அத்தாரிட்டி. மற்ற இவையனைத்தும் பக்தி மார்க்கத்தின் சாதனங்கள். பிரம்மாவின் கைகளில் சாஸ்திரத்தைக் காட்டுகின்றனர். ஆனால் அவர்களுக்கு பிரம்மா என்றால் யார் என்பது தெரியாது. பாபா சொல்கிறார், நான் முன்பும் கூட சொல்லியிருக்கிறேன்-நான் சாதாரண வயோதிகரின் உடலில் வருகிறேன். இந்த நந்தியின் மூலமாக வந்து ஞானம் சொல்கிறேன். மனிதர்கள் பாகீரதத்தையும் காட்டுகின்றனர் என்றால் கௌமுகத்தையும் (பசுவின் வாய்) காட்டுகின்றனர். இப்போது பாகீரதத்திலிருந்தும் கங்கை, காளை மாட்டிலிருந்தும் கங்கையைக் காட்டுகின்றனர். சரி எது, தவறு எது என்பதைப் புரிந்து கொள்ள முடிவதில்லை. காளைமாடு என்ற விலங்கிலிருந்து கங்கை வெளிப்பட்டுள்ளதா என்ன? கௌமுகத்தைக் காட்டுகின்றனர் என்றால் பசு இருக்க வேண்டும். நந்திகணத்தைக் காளைமாடாகக் காட்டுகின்றனர் இதுவோ நிச்சயமாக ஆண் தான். மனிதர் தான். பசு என்று சொன்னால் அதுவும் மாதா இல்லையா? இவ்விஷயங்களை மனிதர்கள் முற்றிலும் மறந்து விட்டனர். சரியானது எதையும் சொல்வதில்லை. பிரம்மா மூலம் சூரியவம்சி இராஜதானியின் ஸ்தாபனை நடைபெற்றுக் கொண்டுள்ளது. இங்கே எந்த ஒரு இராஜ்யமும் கிடையாது. இந்த எல்லையற்ற தந்தை எல்லையற்ற இராஜ்யத்தைத் தருகிறார். படிப்பின் மூலம் யார் சூரியவம்சி, சந்திரவம்சி குலத்தினராக இருப்பார்களோ, அவர்களின் புத்தியில் இது பதியும். முதலில் இந்த நிச்சயம் வேண்டும்-சிவபாபா தான் நம்மை உடன் அழைத்துச் செல்வார். வேறு எந்த ஒரு குரு-கோசாயிக்கும் இதைச் சொல்வதற்கான சக்தி கிடையாது. பதீத-பாவனரோ ஒரு தந்தை மட்டுமே. அவரைத் தான் நினைவு செய்கின்றனர்-வந்து தூய்மையாக்குங்கள் என்று. புதியது பழையதாகும், பழையது புதியதாகும் – இதுவோ நடக்கத் தான் செய்யும். பரமபிதா பரமாத்மாவைத் தவிர யாராலும் தூய்மையான உலகத்தை உருவாக்க முடியாது. பாபாவிடமிருந்து தான் சூரியவம்சி மற்றும் சந்திரவம்சியின் இராஜ்யத்தின் ஆஸ்தி கிடைக்கின்றது. இங்கோ எந்த ஓர் இராஜ்யமும் இல்லை. இவை மிகவும் புரிந்து கொள்வதற்கான விஷயங்களாகும். சாஸ்திரங்கள் உண்மையானவை, ஏனென்றால் அவற்றை பகவான் உருவாக்கியுள்ளார் என மனிதர்கள் நினைக்கின்றனர். பகவான் மனிதரின் சரீரத்தில் வந்து கீதை சொல்லியுள்ளார் என்பது மனிதர்களுக்குத் தெரியாது. அதன் மீது கிருஷ்ணரின் பெயரைப் போட்டு விட்டனர். இந்தத் தவறு புத்தியிலிருந்து எப்போது வெளியேறுவது? முதலில் சிவபாபாவை அறிந்து கொள்ள வேண்டும். அப்போது அவர் சொர்க்கத்தின் ஸ்தாபனை செய்கிறார் என்று புரிந்து கொள்வார்கள். அறிந்து கொள்ளவில்லை என்றால் சண்டை-சச்சரவு செய்து கொண்டே இருக்கின்றனர். பாபா சொல்வார், நீங்கள் சொர்க்கத்தில் உயர்ந்த பதவி பெறுவதற்குத் தகுதியுள்ளவரல்ல. தெய்விக குணங்கள் உள்ளவரல்ல. தாரணை ஆகவில்லை என்றால் விகாரங்கள் நிச்சயமாக இருக்கும். சிலர் வயோதிகராக இருக்கலாம், கோபமோ அவர்களிடமும் அதிகம் உள்ளது. கோபத்திற்கு வயதாவதில்லை. தற்சமயம் வயதானவர்களும் விகாரத்தில் செல்கின்றனர். பாபா சொல்கிறார், காமம் மிகப்பெரிய விரோதி. மனிதர்களுக்கு அது பிறகு நண்பன். விகாரத்திற்காகப் பாருங்கள், எவ்வளவு துன்புறுத்துகின்றனர்! இராவணன் அனைவருக்கும் நண்பன். விஷத்தைப் பிறப்பிக்கிறவன் இல்லையா? விஷத்தின் பிறப்பு என்றால் இராவணனின் உற்பத்தி. மனிதர்களுக்கு இது பற்றித் தெரியாது. பாபாவின் ஸ்ரீமத் படி நடக்க வேண்டும், அப்போது நல்லவர் எனச் சொல்லப் படுவார்கள். விகர்மம் செய்கின்றனர் என்றால் உடனே எச்சரிக்கை செய்யப் படுகிறது. அநேகரிடம் ஏதேனும் பழக்கங்கள் இருந்து கொண்டிருக்கிறது. பொய் பேசுவது, திருடுவது, யாசிப்பது போன்றவை. பாபா சொல்கிறார், நானோ கொடுக்கின்ற வள்ளல். நீங்கள் யாரிடமாவது ஏன் யாசிக்கிறீர்கள்? யார் இன்சுரன்ஸ் செய்ய வேண்டுமோ, அவர்கள் தாமாகவே செய்வார்கள். ஒரு போதும் யாசிக்க மாட்டார்கள். இன்று பாபாவின் ஜென்மதினம், ஏதாவது அனுப்பி வையுங்கள் - இது போல் யாசிக்காதீர்கள். புரிய வைக்க வேண்டும் - இன்சுரன்ஸ் செய்வதானால் செய்யுங்கள். பக்தி மார்க்கத்தில் மனிதர்கள் தங்களை ஈஸ்வரனிடம் இன்சுரன்ஸ் செய்து கொள்கின்றனர். இது தானம் எனச் சொல்லப்படுகின்றது. அதற்கான பலனையும் பாபா தருகிறார். அது எல்லைக்குட்பட்ட இன்சுரன்ஸ். இது எல்லையற்றது. பக்தி மார்க்கத்தில் பரமபிதா பரமாத்மா இந்த பக்தியின் பலனைக் கொடுத்துள்ளார் என்று சொல்லியே வந்துள்ளனர். பணக்காரர்களாக இருந்தால் சொல்வார்கள், இது கடந்த காலக் கர்மங்களின் பலன் கிடைத்துள்ளது என்று. சிலர் ஏழைகளாக உள்ளனர், ஏனென்றால் இன்சுரன்ஸ் செய்து கொள்ளவில்லை. அதனால் செல்வம் கிடைப்பதில்லை. பாபா சொல்கிறார், என்னிடம் தான் அனைவரும் இன்சூர் செய்கின்றனர். இது பகவான் கொடுத்தது எனச் சொல்கின்றனர். பக்தி மார்க்கத்தில் நீங்கள் எல்லைக்குட்பட்ட இன்சுரன்ஸ் செய்கிறீர்கள். தாய்-தந்தை பாருங்கள், இன்சுரன்ஸ் செய்துள்ளனர் என்றால் பதிலுக்கு எவ்வளவு தருகிறார்! கன்யாக்களிடமோ பணம் இருக்காது. அவர்கள் பிறகு இந்த சேவையில் ஈடுபட்டு விட்டார்களானால் அனைவரைவிடவும் உயர்ந்து செல்ல முடியும். மம்மா எதுவும் இன்சுரன்ஸ் செய்யவில்லை. ஆம், சரீரத்தை இந்த சேவைக்காகக் கொடுத்து விட்டார். அதனால் எவ்வளவு உயர்ந்த பதவி பெறுகிறார்! ஆத்மாவுக்குத் தெரியும், இந்த சரீரத்தின் மூலம் எல்லையற்ற தந்தையின் சேவை செய்து கொண்டிருக்கிறேன். ஜெகத் அம்பாவுக்கு எவ்வளவு பெரிய பதவி! ஜெகத் அம்பா, ஞான-ஞானேஸ்வரி, பிறகு அவரே இராஜ-ராஜேஸ்வரி ஆகிறார். இவை அனைத்தையும் நீங்கள் தான் அறிவீர்கள். நல்லது.இனிமையிலும் இனிமையான தேடிக் கண்டெடுக்கப் பட்ட குழந்தைகளுக்கு தாய்-தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மிகக் குழந்தைகளுக்கு ஆன்மிகத் தந்தையின் நமஸ்காரம்.தாரணைக்காக முக்கிய சாரம்:

1. நல்ல குழந்தையாக ஆவதற்கு பாபாவின் ஸ்ரீமத் படி நடக்க வேண்டும். யாசிப்பதற்கான, திருடுவதற்கான, பொய் பேசுவதற்கான கெட்ட பழக்கங்கள் என்னென்ன உள்ளனவோ, அவற்றை நீக்கிவிட வேண்டும்.2. தன்னிடமுள்ள அனைத்தையும் பாபாவிடம் இன்சூர் செய்து கொள்ள வேண்டும். சரீரத்தையும் ஈஸ்வரிய சேவையில் ஈடுபடுத்த வேண்டும். மாயாவின் பிரவேசம் எந்த ஒரு காரணத்தாலும் ஆகி விடாதவாறு மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.வரதானம்:

எனது-எனது என்பதை உனது என மாற்றி உயர்ந்த குறிக்கோளை அடையக்கூடிய நஷ்டோமோஹா (பற்றற்றவர்) ஆகுக !எங்கே எனது என்பது உள்ளதோ, அங்கே குழப்பம் இருக்கும். எனது படைப்பு, எனது கடை, எனது பணம், எனது வீடு இந்த எனது என்பதன் சிறதளவாவது ஒட்டுதல் இருந்தாலும் குறிக்கோளின் கரையை அடைய முடியாது. உயர்ந்த குறிக்கோளை அடைவதற்கு எனது என்பதை உனது என மாற்றி விடுங்கள். எல்லைக்குட் பட்ட எனது அல்ல. எல்லையற்ற எனது. அவர் என்னுடைய பாபா. பாபாவின் நினைவு மற்றும் டிராமாவின் ஞானத்தினால் எதுவும் புதிதல்ல என்ற ஆடாத உறுதியான நிலை இருக்கும். மேலும் பற்றற்றவராக (நஷ்டோமோஹா) ஆகி விடுவீர்கள்.சுலோகன்:

உண்மையான சேவாதாரி ஆகி சுயநலமற்ற சேவை செய்து கொண்டே செல்வீர்களானால் சேவையின் பலன் தானாகவே கிடைக்கும்.


***OM SHANTI***


Whatsapp Button works on Mobile Device only