26 April 2017

BK Murli 27 April 2017 Tamil

BK Murli 27 April 2017 Tamil

27.04.2017    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


இனிமையான குழந்தைகளே! ஞானத்தின் ஆழமான விஷயங்களை நிரூபித்துக் கூறுவதற்காக விசாலபுத்தியுள்ளவராகி மிகவும் யுக்தியுடன் புரிய வைக்க வேண்டும். பாம்பும் சாக வேண்டும் கோலும் முறியக் கூடாது என சொல்லப்படுகிறது.கேள்வி:

துயரக் குரல் (அழுகை) எழுகின்ற இறுதிக் காலத்தில் தேர்ச்சியடைவதற்காக எந்த முக்கியமான குணம் தேவைப்படும்?பதில்:

பொறுமை என்ற குணம் போர் மூளும் சமயத்தில்தான் உங்களின் வெளிப்பாடு (பிரத்யக்ஷ்ம்) ஏற்படும். யார் உறுதியாக இருப்பார்களோ அவர்கள்தான் தேர்ச்சியடைய முடியும். பயப்படுபவர்கள் தோற்றுவிடுவார்கள். இறுதியில் குழந்தைகளாகிய உங்களின் பிரபாவம் செல்வாக்கு வெளிப்படும், அப்போது ஆஹா பிரபு! உங்களின் லீலையே லீலை என சொல்வார்கள். பிரபு குப்தமான வேஷத்தில் வந்துள்ளார் என அனைவரும் தெரிந்து கொள்வார்கள்.கேள்வி:

அனைத்தினும் பெரிய சௌபாக்கியம் எது?பதில்:

சொர்க்கத்தில் வருவதும் கூட அனைத்திலும் பெரிய சௌபாக்கியம் ஆகும். சொர்க்கத்தின் சுகத்தை குழந்தைகளாகிய நீங்கள்தான் பார்க்கிறீர்கள். அங்கே முதல்-இடை-கடைசியிலும் கூட துக்கம் இருக்காது. இந்த விஷயங்கள் மனிதர்களின் புத்தியில் பதிவது கஷ்டமாக உள்ளது.பாடல்:

புதிய காலத்தின் மொட்டுக்கள். . .ஓம் சாந்தி.

பகவானுடைய மகா வாக்கியம். முன்பு ஸ்ரீகிருஷ்ண பகவானுடைய மகா வாக்கியம் என சொல்லிக்கொண்டிருந்தனர். இப்போது ஸ்ரீ கிருஷ்ண பகவானுடைய மகா வாக்கியம் அல்ல என குழந்தைகளாகிய உங்களுக்கு நிச்சயம் ஏற்பட்டிருக்கிறது. ஸ்ரீ கிருஷ்ணர் திரிகாலதரிசி அதாவது சுயதரிசன சக்கரதாரி அல்ல. இப்போது இதனை பக்தர்கள் கேட்டார்கள் என்றால் கோபித்துக் கொள்வார்கள். நீங்கள் இவருடைய முக்கியத்துவத்தை ஏன் குறைக்கிறீர்கள்? என கேட்பார்கள். அவர் சுயதரிசன சக்கரதாரி, சுயதரிசன சக்கரத்தை எப்போதும் விஷ்ணு அல்லது கிருஷ்ணருக்குத்தான் கொடுப்பார்கள் என இவர்களின் நம்பிக்கை கிருஷ்ணரின் மேல் இருக்கிறது. ஸ்ரீகிருஷ்ணர் மற்றும் விஷ்ணுவுக்கிடையில் என்ன சம்மந்தம் என உலகினருக்குத் தெரியாது, தெரியாதிருக்கும் காரணத்தினால் விஷ்ணுவையும் கிருஷ்ணரையும் மட்டும் சுயதரிசன சக்கரதாரி என சொல்லிவிடுகின்றனர். சுயதரிசன சக்கரத்தின் அர்த்தம் கூட யாருக்கும் தெரியாது. கொல்வதற்காக சக்கரத்தை மட்டும் கொடுத்து விட்டனர். அதனை துன்புறுத்தும் ஆயுதமாக ஆக்கி விட்டனர். உண்மையில் அவரிடம் இம்சையின் சக்கரமும் கிடையாது, அஹிம்சையின் சக்கரமும் கிடையாது. ஞானமும் கூட ராதாகிருஷ்ணருக்கோ அல்லது விஷ்ணுவுக்கோ கிடையாது. எந்த ஞானம்? இந்த சிருஷ்டி சக்கரம் சுற்றும் ஞானம். அது உங்களிடம் மட்டுமே இருக்கிறது. இப்போது இவை மிகவும் ஆழமான விசயங்கள் ஆகும். அன்பும் மாறாதிருக்க வேண்டும், எனவே இந்த அனைத்து விஷயங்களையும் அனைவரும் புரிந்து கொள்ளும்படி யுக்தியுடன் புரிய வைக்க வேண்டும்? எடுத்தவுடன் நேரடியாகக் கூறினால் கோபப்படுவார்கள். நீங்கள் தேவி தேவதைகளை நிந்தனை செய்கிறீர்கள் என சொல்வார்கள் ஏனென்றால் உங்களைத் தவிர அவர்கள் அனைவரும் ஒரே சமமாக நம்பிக்கையில் இருக்கின்றனர். நீங்கள் எவ்வளவு சிறிய சிறிய குழந்தைகள். பாபா சொல்கிறார் - சிறிய சிறிய குழந்தைகளை கண்காட்சியில் புரிய வைக்கத் தகுந்தாற்போல புத்திசாலிகளாக உருவாக்க வேண்டும். யாருக்கு ஞானம் இருக்குமோ அவர்கள் தாமாகவே முன் வருவார்கள் - நான் கண்காட்சியில் புரிய வைக்க முடியும் என்று. பிராமணிகளுக்கு மிகவும் விசால புத்தி இருக்க வேண்டும். கண்காட்சியில் புரிய வைப்பதற்காக சேவை செய்யத் தகுந்தவர்களை அனுப்ப வேண்டும். வெறுமனே பார்ப்பதில் மட்டும் ஆர்வம் இருப்பவர்களை அல்ல. முதன் முதலில் இந்த நிச்சயம் இருக்க வேண்டும் - கீதையின் பகவான் நிராகார பரமபிதா பரமாத்மா சிவன், ஸ்ரீ கிருஷ்ணரை பகவான் என சொல்லப் படுவதில்லை, ஆகையால் கீதையும் தவறாகும். உலகில் இது முற்றிலும் புதிய விஷயமாக ஆகி விட்டது. கிருஷ்ணர் கீதை சொன்னார் என உலகில் அனைவரும் சொல்கின்றனர். கிருஷ்ணர் கீதை சொல்ல முடியாது என இங்கே புரிய வைக்கப்படுகிறது. மயிலிறகு மகுடம் தரித்தவர், இரட்டை கிரீடதாரி அல்லது ஒற்றை கிரீட சூரிய வம்சத்தவர், சந்திர வம்சத்தவர், வைசிய, சூத்திர வம்சத்தவர் என யாருக்குமே கீதையின் ஞானம் தெரியாது. கீதை ஞானத்தை பகவான்தான் சொன்னார், பாரதத்தை சொர்க்கமாக உருவாக்கினார். ஆக உலகில் உண்மையான கீதையின் ஞானம் எங்கிருந்து வந்தது? இவை அனைத்தும் பக்தியின் வரிசையில் வந்து விடுகின்றன. வேத சாஸ்திரங்கள் முதலானவைகளை படித்து படித்து விளைவு என்ன ஆனது? கீழே இறங்கியே வந்தனர், விழுந்தபடிதான் வந்தனர், கலைகள் குறைந்தபடிதான் சென்றது. எவ்வளவுதான் தீவிரமான தவம் செய்யட்டும், தலையை வெட்டி வைக்கட்டும், எந்த லாபமும் ஏற்பட முடியாது. அனைத்து மனிதர்களுமே தமோபிரதானமாக கண்டிப்பாக ஆக வேண்டும். அதிலும் குறிப்பாக தேவி தேவதா தர்மத்தின் பாரதவாசிகள்தான் அனைவரை விடவும் கீழே இறங்கி வந்துள்ளனர். முதலில் அனைவரை விடவும் சதோபிரதானமாக இருந்தனர், இப்போது தமோபிரதானமாக ஆகி விட்டனர். யார் முற்றிலும் உயர்வான சொர்க்கத்தின் எஜமானாக இருந்தார்களோ அவர்கள் இப்போது நரகத்தின் எஜமானாக ஆகி விட்டனர். குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் இருக்க வேண்டும் - சரீரம் பழைய செருப்பு போல உள்ளது, அதன் மூலம் நாம் படித்துக் கொண்டிருக்கிறோம். தேவி தேவதா தர்மத்தவர்களுடையது அனைவரைவிடவும் பழைய செருப்பாகும். பாரதம் சிவாலயமாக இருந்தது, தேவதைகளின் இராஜ்யம் இருந்தது. வைர வைடூரியங்களாலான மாளிகைகள் இருந்தன. இப்போது அசுர விகாரிகளின் இராஜ்யம் இருக்கிறது. நாடகத்தின் படி மீண்டும் இது விகாரிகளின் ஆலயத்திலிருந்து சிவாலயமாக ஆகத்தான் வேண்டும். அனைவரை விடவும் அதிகமாக பாரதவாசிகள்தான் கீழே இறங்கிவிட்டார்கள். அரைக் கல்ப காலம் நீங்கள்தான் விஷம் நிறைந்த விகாரிகளாக இருந்தீர்கள். அஜாமிளன் போன்ற பாவாத்மாக்களும் கூட பாரதத்தில்தான் இருந்தனர். அனைத்தினும் பெரிய பாவம் விகாரத்தில் செல்வதாகும். சம்பூரண நிர்விகாரிகளாக இருந்த தேவதைகள் இப்போது விகாரிகளாக ஆகியுள்ளனர். வெள்ளையாக இருந்து கருப்பாக ஆகியுள்ளனர். அனைவரை விடவும் உயர்ந்தவர்கள்தான் அனைவரை விடவும் கீழானவர்களாக ஆகியுள்ளனர். தந்தை சொல்கிறார் - முழுமையான தமோபிரதானமாகி விடும்போது நான் வந்து முழுமையான சதோபிரதானமாக ஆக்குகிறேன். இப்போது யாரையும் சம்பூரண நிர்விகாரி என சொல்ல முடியாது, மிகவும் வித்தியாசம் உள்ளது. இந்த பிறவி கொஞ்சம் நன்றாக உள்ளது. முந்தைய பிறவி அஜாமிளன் போல இருந்திருக்க வேண்டும். நான் பதிதமான உலகத்தில் பதிதமான சரீரத்தில் பிரவேசம் செய்கிறேன், அவர் முழுமையாக 84 பிறவிகளை அனுபவம் செய்து தமோபிரதானமாகி இருக்கிறார், இந்த சமயத்தில் ஏதோ நல்ல வீட்டில் பிறப்பு ஏற்பட்டுள்ளது ஏனென்றால் மீண்டும் அவர் பாபாவின் ரதமாக ஆக வேண்டும். நாடகம் கூட விதிப்படி உருவாகியுள்ளது, ஆகையால் சாதாரண ரதத்தைப் பிடித்திருக்கிறார். இவையும் கூட புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும். குழந்தைகளாகிய உங்களுக்கு சேவையில் மிகுந்த ஆர்வம் இருக்க வேண்டும், பாபாவைப் பாருங்கள், எவ்வளவு ஆர்வம் உள்ளவராக இருக்கிறார். தந்தை தூய்மையற்றவரை தூய்மையாக்குபவர், அனைவரின் அழிவற்ற சர்ஜனாக இருக்கிறார். உங்களுக்கு எப்படிப்பட்ட நல்ல மருந்து கொடுக்கிறார். என்னை நினைவு செய்தால் நீங்கள் எப்போதும் நோயாளியாக ஆக மாட்டீர்கள் என சொல்கிறார். நீங்கள் மருத்துவம் பார்க்க வேண்டிய அவசியம் இருக்காது. இது ஸ்ரீமத் (உயர்ந்த வழி) ஆகும், ஏதோ குருவின் மந்திரம் அல்ல. என்னை நினைவு செய்வதன் மூலம் உங்கள் பாவ கர்மங்கள் அழியும். பிறகு மாயையின் தடைகள் வராது. நீங்கள் மகாவீரர்கள் என புகழப்படுவீர்கள். பள்ளியில் தேர்வு முடிவுகள் கடைசியில்தான் வெளி வருகின்றன. இந்த முடிவும் கடைசியில் தெரிந்து விடும். சண்டை எப்போது ஏற்படுமோ அப்போது நீங்கள் வெளிப்படுவீர்கள். நீங்கள் எவ்வளவு பயமற்றவர்களாக ஆகியுள்ளீர்கள் என பார்ப்பார்கள். தந்தையும் பயமற்றவர் அல்லவா. எவ்வளவுதான் கூக்குரல் (மரண ஓலம்) ஏற்பட்டாலும் நீங்கள் பொறுமையுடன் புரிய வைக்க வேண்டும் - நாம் போகத்தான் வேண்டும், வாருங்கள் நாம் போகலாம் நம்முடைய சேருமிடமான அபு மலைக்கு. . . பாபாவிடம். பயப்படக் கூடாது, பயப்படுவதாலும் தோல்வி அடைந்து விடுகின்றனர். அந்த அளவு உறுதியானவராக ஆக வேண்டும். முதன் முதலாக பஞ்சத்தின் ஆபத்து ஏற்படும். வெளியிலிருந்து தானியங்கள் வர முடியாது, அடிதடி சண்டைகள் ஏற்பட்டுவிடும். அந்த சமயம் எவ்வளவு பயமற்று இருக்க வேண்டும். சண்டையில் எத்தனை பயில்வான்கள் இருக்கின்றனர், சாக வேண்டும் மற்றும் சாகடிக்க வேண்டும் என சொல்கின்றனர். உயிரைப் பற்றிய பயம் கூட கிடையாது. சரீரத்தை விட்டு விட்டு மற்றொன்று எடுப்போம் என்ற ஞானம் கூட அவர்களுக்குக் கிடையாது.. அவர்கள் சேவை செய்ய வேண்டும்,. குரு நானக்குக்கு ஜெய். . . அனுமானுக்கு ஜெய். . . என அவர்கள் கற்பிக்கின்றனர். சிவபாபாவை நினைவு செய்யுங்கள் என்பது உங்களுடைய படிப்பாகும். சரீர நிர்வாகத்திற்கான வேலையை செய்யத்தான் வேண்டும் அல்லது தேசத்தின் சேவையை செய்யத்தான் வேண்டும். நீங்கள் சிவபாபாவை நினைவு செய்வது போல மற்றவர்கள் செய்வதில்லை, சிவனின் பக்தர்கள் நிறைய இருக்கின்றனர். ஆனால் உங்களுக்கு சிவபாபாவை நினைவு செய்யுங்கள் என அறிவுரை கிடைக்கின்றன. திரும்பிச் செல்ல வேண்டும், பிறகு சொர்க்கத்தில் வர வேண்டும். இப்போது சூரிய வம்சம், சந்திர வம்சம் ஆகிய இரண்டின் ஸ்தாபனையும் நடந்து கொண்டிருக்கிறது. இந்த ஞானம் அனைவருக்கும் கிடைக்கும். யார் பிரஜைகளாக ஆக வேண்டியிருக்குமோ அவர்கள் அவ்வளவுதான் புரிந்து கொள்வார்கள். இறுதியில் உங்களின் செல்வாக்கு வெளிப்படும், அப்போது ஆஹா பிரபு உங்களின் லீலையே லீலை என சொல்வார்கள். பிரபு குப்தமான வேஷத்தில் வந்திருக்கிறார் என தெரிந்து கொள்வார்கள். பரமாத்மா மற்றும் ஆத்மாவின் காட்சி தெரிய வேண்டும் என சிலர் சொல்வார்கள், ஆனால் காட்சிகளால் எந்த லாபமும் கிடையாது. ஒளி உடலைப் பார்க்கின்றனர் என வைத்துக் கொள்ளுங்கள், ஆனால் இவர் யார், யாரோ ஒருவருடைய ஆத்மாவா அல்லது பரமாத்மாவா என எதுவும் புரிந்து கொள்ள மாட்டார்கள். எனினும், தேவதைகளின் காட்சிகளில் கொஞ்சம் ஈர்ப்பு இருக்கும், குஷி ஏற்படும். இங்கே பரமாத்மாவின் ரூபம் என்ன என்பதையும் அறிந்திருப்பதில்லை, கடைசி காலம் நெருங்க நெருங்க பாபா புத்தியின் பூட்டை திறந்தபடி இருப்பார். சொர்க்கத்தில் வருவதும் கூட சௌபாக்கியமாகும். சொர்க்கத்தின் சுகத்தை வேறு யாராலும் பார்க்க முடியாது. சொர்க்கத்தில் ராஜா ராணி போல பிரஜைகள் இருப்பார்கள். இப்போது புது தில்லி என்ற பெயர் வைத்திருக்கின்றனர். ஆனால் புது பாரதம் எப்போது இருந்தது? இது பழைய பாரதமாகும். புது பாரதத்தில் தேவதைகளின் தர்மம் மட்டுமே இருந்தது. கொஞ்சம் பேர் மட்டுமே இருந்தனர். இப்போது நிறைய பேர் இருக்கின்றனர். எவ்வளவு இரவுக்கும் பகலுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் உள்ளது. செய்தித்தாள்களிலும் புரிய வைக்க முடியும். நீங்கள் புது தில்லி, புது பாரதம் என சொல்கிறீர்கள், ஆனால் புதிய பாரதம், புது தில்லி புதிய உலகத்தில் இருக்கும். அது சொர்க்கமாக இருக்கும். அதனை நீங்கள் எப்படி உருவாக்க முடியும்? இங்கே பல தர்மங்கள் உள்ளன. அங்கே ஒரே ஒரு தர்மம் இருக்கும். இவை அனைத்தும் புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும். நாம் அனைவரும் மூல வதனத்திலிருந்து வந்தோம். நாம் அனைவரும் ஆத்மாக்கள், நட்சத்திரங்கள் போல ஒளிப்புள்ளிகளாக இருப்பவர்கள், எப்படி நட்சத்திரங்கள் ஆகாயத்தில் விழாமல் நின்றிருக்கின்றனவோ அப்படி ஆத்மாக்களாகிய நாம் பிரம்மாண்டத்தில் வசிப்பவர்கள். நிர்வாண தாமத்தில் ஆத்மாக்கள் பேச முடியாது ஏனென்றால் சரீரம் கிடையாது என குழந்தைகளுக்கு இப்போது தெரிந்துள்ளது. ஆத்மாக்களாகிய நாம் பரமதாமத்தில் வசிப்பவர்கள், இது புதிய விஷயம் என நீங்கள் சொல்ல முடியும். ஆத்மா நீர்க்குமிழி போன்றது, கடல் ஐக்கியமாகி விடுகிறது என சாஸ்திரங்களில் எழுதி விட்டனர். தூய்மையற்றவரை தூய்மையாக்கும் தந்தை அனைவரையும் அழைத்துச் செல்வதற்காக வந்துள்ளார் என நீங்கள் இப்போது அறிவீர்கள். 5 ஆயிரம் வருடங்களுக்குப் பிறகுதான் பாரதம் சொர்க்கமாக ஆகிறது. இந்த ஞானம் யாருடைய புத்தியிலும் கிடையாது. தந்தைதான் வந்து புரிய வைக்கிறார் - நாம்தான் இராஜ்யத்தை எடுக்கிறோம், நாம்தான் இராஜ்யத்தை இழக்கிறோம். இதற்கு முடிவே கிடையாது. நாடகத்திலிருந்து யாரும் விலக முடியாது. எவ்வளவு சகஜமான விசயம், ஆனால் யாருடைய புத்தியிலும் பதிவதில்லை. இப்போது ஆத்மாவுக்கு தன்னுடைய 84 பிறவிகளின் சக்கரத்தைப் பற்றி தெரிந்து விட்டது, இதன் மூலம் சக்ரவர்த்தி மகாராஜா, மகாராணியாக ஆகின்றனர். இவை அனைத்தும் அழியப் போகிறது. வினாசம் முன்னால் நின்றுள்ளது எனும்போது பிறகு ஏன் அதிக பேராசை ஏற்படுகிறது.. சேவை செய்யத்தகுந்த குழந்தையின் பாலனை யக்ஞத்தில் நடக்கிறது. சேவை செய்யாவிட்டால் உயர் பதவியும் கிடைக்காது. நாங்கள் இவ்வளவு சேவை செய்கிறோம், உயர் பதவி அடைவோமா? என பாபாவிடம் கேட்கலாம். நீங்கள் பிரஜைகளில் சென்று விடும்படியான அறிகுறிகள்தான் தென்படுகின்றன என பாபா சொல்லிவிடுவார். இங்கேயே தெரிந்து விடும். சிறு சிறு குழந்தைகளுக்கும் கூட கற்றுக் கொடுத்து அந்த அளவு புத்திசாலியாக ஆக்க வேண்டும், அவர்கள் கண்காட்சியில் சேவை செய்து (பாபாவை) வெளிப்படுத்துவார்கள். நல்லது!இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.தாரணைக்கான முக்கிய சாரம் :

1. தந்தைக்குச் சமமாக, அச்சமற்றவராக, பயமற்றவராக ஆக வேண்டும். பொறுமையுடன் செயல்பட வேண்டும், பயப்படக் கூடாது.2. வினாசம் முன்னால் உள்ளது. ஆகையால் அதிக ஸ்தூல செல்வம் சேர்க்க வேண்டும் என்ற பேராசை வைக்கக் கூடாது. உயர் பதவிக்காக ஈஸ்வரிய சேவை செய்து வருமானத்தை சேமிக்க வேண்டும்.வரதானம்:-

உறுதியான நிச்சயத்தின் ஆதாரத்தில் வெற்றியின் அனுபவம் செய்யக் கூடிய எப்போதும் மகிழ்ச்சியானவராகவும் கவலையற்றவராகவும் ஆகுக.

 நிச்சயத்தின் அடையாளம் - மனம், சொல், செயல், சம்மந்தம், தொடர்பில் அனைத்து விஷயங்கலிளிலும் சகஜமான வெற்றியாளர். எங்கே நிச்சயம் உறுதியாக இருக்கிறதோ அங்கே வெற்றியின் தலைவிதியை மாற்ற முடியாது. இப்படிப்பட்ட நிச்சய புத்தியுள்ளவர்கள்தான் எப்போதும் மகிழ்ச்சியாகவும் கவலையற்றவர்களாகவும் இருப்பார்கள். எந்த விஷயத்திலும் என்ன இது, ஏன், எப்படி என சொல்வதும் கூட கவலையின் அடையாளம் ஆகும். நிச்சயபுத்தியுள்ள கவலையற்ற ஆத்மாவின் சுலோகன் - எது நடந்ததோ நன்றாக நடந்தது, நன்றாக நடக்கிறது, மேலும் நன்றாகத்தான் நடக்கும். அவர்கள் கெட்டதிலும் கூட நல்லதையே அனுபவம் செய்வார்கள். கவலை என்ற வார்த்தையையே அறிந்திராதவர் ஆகியிருப்பார்கள்.

சுலோகன் :

எப்போதும் மகிழ்ச்சி நிறைந்தவராக வேண்டும் என்றால் புத்தி எனும் கம்ப்யூட்டரில் முற்றுப் புள்ளியின் குறியீட்டை வையுங்கள்.


***OM SHANTI***

Whatsapp Button works on Mobile Device only