12 May 2017

BK Murli 13 May 2017 Tamil

BK Murli 13 May 2017 Tamil

13.05.2017    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


இனிமையான குழந்தைகளே! ஸ்ரீமத்தில் ஒருபொழுதும் மனவழியைக் (மன்மத்) கலப்படம் செய்யக் கூடாது. மனவழிப்படி நடப்பது என்றால், தன்னுடைய அதிர்ஷ்டத்தைத் துண்டித்துக் கொள்வது என்பதாகும்.கேள்வி:

குழந்தைகள் தந்தை மீது எந்த நம்பிக்கை வைக்கக் கூடாது?பதில்:

பாபா, எங்களுடைய நோயை குணப்படுத்துங்கள், கொஞ்சம் கருணை காட்டுங்கள் என்று சில குழந்தைகள் கூறுகின்றனர். பாபா கூறுகின்றார் - இவை உங்களுடைய பழைய உறுப்புகள் ஆகும். இதில் கொஞ்சம் கஷ்டம் ஏற்படத்தான் செய்யும், அதற்கு பாபா என்ன செய்வது? யாராவது இறந்துவிட்டால், திவாலா ஆகிவிட்டால் பாபாவிடம் கருணை என்ன கேட்கிறீர்கள்? இது உங்களுடைய கணக்கு வழக்கு ஆகும். ஆம், யோக பலத்தின் மூலம் உங்களுடைய ஆயுள் அதிகரிக்கும், எவ்வளவு முடியுமோ யோக பலத்தைப் பயன்படுத்துங்கள்.பாடல்:

நீங்கள் இரவைத் தூங்கிக் கழித்தீர்கள்...ஓம்சாந்தி.

குழந்தைகளுக்கு ஓம் என்பதன் அர்த்தம் கூறப்பட்டிருக்கிறது. ஓம் என்றால் பகவான் என்று அர்த்தம் கிடையாது. ஓம் என்றால் அகம் அதாவது நான் என்று பொருள். நான் யார்? இவை என்னுடைய உறுப்புகள். நான் ஆத்மா, ஆனால், நான் பரம ஆத்மாவாக இருக்கின்றேன். அதாவது பரமாத்மா ஆவேன் என்று தந்தை கூட கூறுகின்றார். அவர் பரந்தாம நிவாசி பரமபிதா பரமாத்மா ஆவார். நான் இந்த சரீரத்தின் எஜமானர் கிடையாது. நான் படைப்பாளர் (கிரியேட்டர்), இயக்குனர் (டைரக்டர்), நடிகனாக (ஆக்டர்) எவ்வாறு இருக்கின்றேன் என்பது புரிந்து கொள்வதற்கான விஷயங்கள் ஆகும். நான் சொர்க்கத்தின் படைப்பாளராக இருக்கின்றேன் என்று கூறுகின்றார். சத்யுகத்தைப் படைத்து கலியுகத்தினுடைய விநாசத்தை அவசியம் செய்விக்கத் தான் வேண்டும். நான் செய்பவர் செய்விப்பவராக இருக்கும் காரணத்தினால் நான் செய்விக்கின்றேன். இதை சொல்வது யார்? பரமபிதா பரமாத்மா. பிறகு, நான் பிரம்மாண்டத்தின் எஜமானராக இருக்கின்றேன் என்று கூறுகின்றார். எப்பொழுது தந்தையுடன் இருக்கின்றீர்களோ, குழந்தைகளாகிய நீங்களும் கூட பிரம்மாண்டத்தின் எஜமானர்களாக இருக்கிறீர்கள். அதை இனிமையான வீடு என்றும் கூறுகிறார்கள். பிறகு, எப்பொழுது சிருஷ்டி படைக்கப்படுகிறதோ, அப்பொழுது முதலில் பிராமணர்களைப் படைக்கின்றார், அவர்களே பிறகு தேவதை ஆகின்றனர். அவர்கள் முழுமையாக 84 பிறவிகள் எடுக்கின்றனர். சிவபாபா எப்பொழுதும் பூஜைக்குரியவராக இருக்கின்றார். ஆத்மாவோ மறுபிறப்பு எடுத்து தான் ஆகவேண்டும். மற்றபடி, 84 இலட்சப் பிறவிகள் எடுக்க இயலாது. நீங்கள் தங்களுடைய பிறவிகளை அறியவில்லை, நான் எடுத்துரைக்கின்றேன் என்று தந்தை கூறுகின்றார். 84 பிறவிகளின் சக்கரம் என்று கூறப்படுகிறது. 84 இலட்சம் கிடையாது. இந்தச் சக்கரத்தை நினைவு செய்வதன் மூலம் சக்கரவர்த்தி இராஜா ஆகிறீர்கள். என் ஒருவரை நினைவு செய்யுங்கள், தேக சகிதம் தேகத்தின் அனைத்து சம்பந்தங்களையும் மறந்துவிடுங்கள் என்று இப்பொழுது தந்தை கூறுகின்றார். இப்பொழுது இது உங்களுடைய கடைசி பிறப்பாகும். எதுவரை இந்த விஷயங்கள் புத்தியில் வரவில்லையோ, அதுவரை புரிந்து கொள்ள இயலாது. இது பழைய சரீரம், பழைய உலகமாகும். பாபா, இந்த ஞானம் எதுவரை நடைபெறும்? என்று குழந்தைகள் கேட்கின்றனர். எதுவரை எதிர்கால தெய்வீக இராஜ்யம் ஸ்தாபனை ஆகுமோ, அதுவரை கூறிக்கொண்டே இருப்பேன். தேர்வு முடிவடைந்த பின்பு புது உலகிற்கு மாற்றமாகிவிடுவீர்கள். அதுவரை சரீரத்திற்கு ஏதாவது ஏதாவது ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது. இந்த சரீர நோய் கூட கர்ம வினைப்பயன் ஆகும். பாபாவிற்கு இந்த சரீரம் எவ்வளவு பிரியமானது! ஆனாலும் கூட உங்களுடைய இந்த உறுப்புகள் பழையவை ஆகிவிட்டன, ஆகையினால் கஷ்டம் ஏற்படுகின்றது. இதில் பாபா உதவி செய்ய வேண்டும் என்ற நம்பிக்கை கொள்ள வேண்டாம் என்று பாபா கூறுகின்றார். திவாலாகி விட்டது, நோய் வந்துவிட்டது என்றால், அது உங்களுடைய கணக்கு வழக்கு என்று தந்தை கூறுவார். ஆம், ஆனாலும் யோகத்தின் மூலம் ஆயுள் அதிகரிக்கும், இதன் மூலம் உங்களுக்குத் தான் இலாபம். தான் முயற்சி செய்யுங்கள், கருணை கேட்காதீர்கள். தந்தையின் நினைவில் நன்மை அடங்கி உள்ளது. எவ்வளவு முடியுமோ அவ்வளவு யோகபலத்தைப் பயன்படுத்துங்கள். என்னை கண்ணிமைகளில் மறைத்து வைத்துக் கொள்ளுங்கள். என்று பாடுகிறார்கள் அல்லவா! பிரியமான பொருளை கண்ணின் மணி, உயிரிலும் மேலானது என்று கூறுகின்றனர். இந்தத் தந்தையோ மிகவும் பிரியமானவர் ஆவார். ஆனால், மறைமுகமாக (குப்தமாக) இருக்கின்றார், ஆகையினால், அன்பு முழுமையாக நிலைப்பதில்லை. இல்லையெனில் அவர் மீது அத்தகைய அன்பிருக்க வேண்டும் - அதைப் பற்றி கேட்கவே வேண்டாம். குழந்தைகளைத் தந்தை இமைகளில் மறைத்து வைத்துக் கொள்கின்றார். இமைகள் ஒன்றும் இந்தக் கண்களினுடையது கிடையாது. இந்த ஞானத்தை நமக்கு யார் அளித்துக் கொண்டிருக்கிறார்கள்? என்பது புத்தியில் நினைவு வைக்க வேண்டும். மிகவும் அன்பான நிராகார தந்தையினுடைய மகிமை என்னவென்றால் பதீத பாவனர், ஞானக்கடல், சுகக்கடல் என்பதாகும். அவரை பின்னர் சர்வவியாபி என்று கூறிவிடுகின்றனர் எனில், ஒவ்வொரு மனிதரும் ஞானக்கடலாக, சுகக்கடலாக இருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு இல்லை. ஒவ்வொரு ஆத்மாவிற்கும் அதனதன் அழிவற்ற நடிப்பு கிடைத்திருக்கிறது. இவை மிகவும் இரகசியமான (குப்தமான) விசயங்கள் ஆகும். முதலில் தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும். பரலௌகீக தந்தை சொர்க்கம் என்ற படைப்பைப் படைக்கின்றார். சத்திய கண்டமான சத்யுகத்தில் தேவி தேவதைகளின் இராஜ்யம் நடைபெறுகிறது. அந்தப் புது உலகத்தை தந்தை படைக்கின்றார். எவ்வாறு படைக்கின்றார் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். நான் தூய்மையற்றவர்களை தூய்மை ஆக்குவதற்காகவே வருகின்றேன் என்று கூறுகின்றார். எனவே, தூய்மையற்ற சிருஷ்டியில் வந்து தூய்மை ஆக்க வேண்டியதாக உள்ளது அல்லவா? பிரம்மா மூலமாக ஸ்தாபனை நடைபெறுகிறது என்று பாடவும் செய்கின்றனர். எனவே, அவரது வாய்மூலம் ஞானம் அளிக்கின்றார் மற்றும் சிரேஷ்ட கர்மத்தைக் கற்பிக்கின்றார். அங்கே உங்களுடைய கர்மம் விகர்மம் ஆகாத அளவிற்கு நான் உங்களுக்கு கர்மத்தை செய்வதற்குக் கற்பிக்கின்றேன். ஏனெனில், அங்கே மாயையே கிடையாது. ஆகையினால், உங்களுடைய கர்மம், அகர்மம் ஆகிவிடுகிறது. இங்கே மாயை உள்ளது, ஆகையினால், உங்களுடைய கர்மம் விகர்மம் ஆகத்தான் செய்யும். மாயையின் இராஜ்யத்தில் என்ன செய்தாலும் தலைகீழாகத் தான் செய்வீர்கள் என்று குழந்தைகளுக்குக் கூறுகின்றார்.என் மூலமாக நீங்கள் அனைத்தையும் அறிந்து கொண்டீர்கள் என்று தந்தை கூறுகின்றார். பரமாத்மாவை சந்திப்பதற்காக அவர்கள் தவம் முதலியவற்றை செய்கிறார்கள். அனேகவிதமான ஹடயோகம் போன்றவற்றைக் கற்பிக்கின்றார்கள். இங்கேயோ ஒரு தந்தையை நினைவு செய்ய வேண்டும், அவ்வளவு தான். வாயினால் சிவ, சிவா என்று கூட சொல்லத் தேவையில்லை. இது புத்தியின் யாத்திரை ஆகும். எவ்வளவு நினைவு செய்வீர்களோ, அவ்வளவு ருத்ரமாலையின் மணி ஆகிவிடுவீர்கள், தந்தையின் நெருக்கத்தில் வந்துவிடுவீர்கள். சிவபாபாவின் கழுத்துமாலை ஆகவேண்டும் அல்லது ருத்ரமாலையில் நெருக்கத்தில் வரவேண்டும், இதற்கான பந்தயம் நடைபெறுகிறது. சார்ட் வைக்க வேண்டும், அப்பொழுது இறுதி நேர ஸ்திதியின் ஆதாரத்தில் நல்ல நிலை ஏற்படும். தேகம் கூட நினைவு வரக்கூடாது, அத்தகைய மனோநிலை இருக்க வேண்டும்.இப்பொழுது உங்களுக்கு வைரம் போன்ற பிறப்பு கிடைத்திருக்கிறது என்று தந்தை கூறுகின்றார். எனவே, என்னுடைய செல்லக்குழந்தைகளே, தூக்கத்தை வெல்லக்கூடிய குழந்தைகளே, குறைந்ததிலும் குறைந்தது 8 மணி நேரம் என்னுடைய நினைவில் இருங்கள். இப்பொழுது அந்த நிலை வரவில்லை. நான் முழுநாளில் எவ்வளவு சமயம் நினைவு யாத்திரை செய்கின்றேன்? எங்கேயும் நின்றுவிடுவதில்லை தானே? என்பதன் சார்ட் எழுதுங்கள். தந்தையை நினைவு செய்வதன் மூலம் ஆஸ்தியும் புத்தியில் இருக்கும். இது இல்லற மார்க்கம் அல்லவா! தந்தையால் ஸ்தாபனை செய்யப்பட்ட சொர்க்கத்தின் தேவி தேவதை தர்மமானது முதல் எண் (நம்பர் 1) ஆகும். தந்தை இராஜயோகத்தைக் கற்பித்து சொர்க்கத்தின் எஜமானர் ஆக்குகின்றார். பின்னர், இந்த ஞானம் மறைந்துவிடுகிறது. பிறகு, இந்த ஞானம் சாஸ்திரங்களில் எங்கிருந்து வந்தது? இராமாயணம் போன்றவை பிற்காலத்தில் உருவாக்கப்பட்டவை ஆகும். முழு உலகமுமே இலங்கையாக உள்ளது. இராவணனுடைய இராஜ்யம் நடைபெறுகிறது அல்லவா? குரங்கு போன்ற மனிதர்களை தூய்மையானவர்களாக கோவிலில் வைத்துப் பூஜிக்கத் தகுதியானவர்களாக ஆக்கி இராவண இராஜ்யத்தை அழித்துவிடுகின்றார். சத்கதியை வழங்கும் வள்ளல் தந்தை சத்கதிக்காக ஞானம் அளிக்கின்றார். இறுதியிலேயே அவர் சத்கதியை அளிக்க வேண்டியதாக உள்ளது.குழந்தைகளே! பற்று அனைத்தையும் விடுத்து நான் ஒருவன் கூறுவதை மட்டும் கேளுங்கள் என்று இப்பொழுது தந்தை கூறுகின்றார். நான் யார் என்ற நம்பிக்கை முதலில் இருக்க வேண்டும். நான் உங்களுடைய அதே தந்தையே. நான் உங்களுக்கு மீண்டும் அனைத்து வேதங்கள், சாஸ்திரங்களின் சாரத்தைக் கூறுகின்றேன். இந்த ஞானத்தையோ தந்தை எதிரில் வந்து கூறுகின்றார். பின்னர், விநாசம் ஆகிவிடுகிறது. பிறகு, எப்பொழுது துவாபரயுகத்தில் தேடுகிறார்களோ, அப்பொழுது அதே கீதை போன்ற சாஸ்திரங்கள் வெளிப்படுகின்றன. பக்தி மார்க்கத்திற்காக அவசியம் அதே சாதனங்கள் தேவை. பிறருடைய ஞானமோ பரம்பரையாக இருந்து வருகிறது என்பதை நீங்கள் பார்க்கிறீர்கள். இந்த ஞானமோ இங்கேயே முடிந்துவிடுகிறது. பின்னர், எப்பொழுது தேடுகிறார்களோ, அப்பொழுது இதே சாஸ்திரம் போன்றவை கையில் கிடைக்கின்றன. ஆகையினால், இதை அனாதியானது என்று கூறிவிடுகின்றனர். துவாபரயுகத்தில், அனைத்தும் அதே சாஸ்திரங்களே வெளிப்படுகின்றன. அப்பொழுதே நான் வந்து மீண்டும் அனைத்தின் சாரத்தைக் கூறுகின்றேன். பிறகு, அதுவே மறுபடியும் நடைபெறும். சிலர் இந்த மறுசுழற்சியை ஏற்றுக் கொள்கின்றனர், சிலர் வேறு ஏதாவது கூறுகின்றனர். அனேக வழிகள் உள்ளன. உலகத்தின் சரித்திரம், பூகோளத்தை குழந்தைகளாகிய நீங்கள் தான் அறிந்திருக்கிறீர்கள், வேறு எவரும் அறிந்து கொள்ள இயலாது. அவர்களோ கல்பத்தின் ஆயுளை இலட்சக்கணக்கான ஆண்டுகள் என்று கூறிவிட்டனர். மகாபாரத யுத்தம் நடந்து 5 ஆயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டன என்றும் கூட அனேகர் கூறிவிட்டனர். இப்பொழுது மீண்டும் அதே யுத்தம் நடைபெறுகிறது. எனில், அவசியம் கீதையின் பகவான் கூட இருப்பார் அல்லவா! ஒருவேளை கிருஷ்ணர் இருப்பார் என்றால், அவர் பிறகு மயிலிறகு கொண்ட கிரீடம் அணிந்தவராக இருக்க வேண்டும். கிருஷ்ணரோ சத்யுகத்தில் தான் இருப்பார். அதே கிருஷ்ணர் இப்பொழுது இருக்க முடியாது. அவரது இரண்டாவது பிறப்பில் கூட அதே கலைகள் இருக்காது. 16 கலைகளில் இருந்து 14 கலைகள் உடையவராக ஆகவேண்டும். ஒவ்வொரு பிறப்பிலும் கொஞ்சம் கொஞ்சம் வித்தியாசம் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும் அல்லவா. அத்தகைய மயிலிறகு கொண்ட கிரீடம் அணிந்தவர்கள் அனேகர் உள்ளனர். யார் முதல் எண்ணில் இருக்கும் 16 கலைகள் சம்பூரணமான கிருஷ்ணரோ, அவருடைய மறுபிறவியிருந்து சிறிது சிறிதாக கலைகள் குறைந்து கொண்டே வருகின்றன. இது மிகவும் ஆழமான இரகசியம் ஆகும்.நடந்து கொண்டும், அலைந்து கொண்டும், சுற்றித் திரிந்து கொண்டும் நேரத்தை வீணாக்காதீர்கள் என்று தந்தை கூறுகின்றார். இதுவே வருமானம் செய்வதற்கான சமயம் ஆகும். யாரிடம் செல்வம் அதிகமாக உள்ளதோ, அவர்கள், நமக்கு இதுவே சொர்க்கம் என்று நினைக்கின்றனர். இது சொர்க்கம் என்றால், உங்களுக்கு வாழ்த்துக்கள் என்று தந்தை கூறுகின்றார். தந்தையோ ஏழைப்பங்காளன் ஆவார். ஏழ்மையானவர்களுக்கு தானம் அளிக்க வேண்டும். ஏழைகளுக்கு சமர்ப்பணம் ஆவது எளிதாக இருக்கிறது. ஆம், யாரோ, எங்கேயோ ஒரு செல்வந்தர் (வகுப்புக்கு) வருகின்றார். இவை மிகவும் புரிந்து கொள்வதற்கான விஷயங்களாகும் தேக உணர்வைக்கூட விட்டுவிட வேண்டும். இந்த உலகமே அழியப்போகிறது. பிறகு, நாம் பாபாவிடம் சென்று விடுவோம். சிருஷ்டி புதியதாகிவிடும். சிலர் முன்கூட்டியே சென்றுவிடுவார்கள். ஸ்ரீகிருஷ்ணருடைய தாய் தந்தையர் கூட கிருஷ்ணரை மடியில் பெறுவதற்கு முன்கூட்டியே செல்ல வேண்டும். கிருஷ்ணரில் இருந்து தான் சத்யுகம் ஆரம்பமாகிறது. இவை மிகவும் ஆழமான விஷயங்களாகும். யார் தாய், தந்தையாக ஆவார்கள் என்பது புரிந்து கொள்வதற்கான விஷயம் ஆகும். யார் இரண்டாவது எண்ணில் வருவதற்குத் தகுதியானவர்கள் ஆகின்றார்கள்? சேவை மூலம் கூட நீங்கள் புரிந்து கொள்ள இயலும். அதிர்ஷ்டத்தினால் கூட சிலர் விரைந்து ஓடி முன்னால் வந்துவிடுகின்றனர். பின்னால் வருபவர்கள் மிகவும் முதல் தரமான சேவை செய்து கொண்டிருக்கிறார்கள், இவ்வாறு நடந்து கொண்டிருக்கிறது. குழந்தைகளாகிய நீங்கள் ஞானமழை பொழிபவர்கள் ஆவீர்கள். தந்தையைக் கூட கடல் என்று கூறப்படுகிறது. அவரோ நட்சத்திரம் போன்று இருக்கின்றார். அவ்வளவு பெரிய உருவமும் கிடையாது. பரம ஆத்மா என்றால் பரமாத்மா. ஆத்மாவின் ரூபம் ஒன்றும் பெரியதல்ல. ஆனால், மனிதர்கள் குழம்பி விடக்கூடாது என்பதற்காக பெரிய உருவம் காண்பிக்கப்பட்டுள்ளது. உயர்ந்ததிலும் உயர்ந்தவர் சிவபாபா ஆவார். பிறகு பிரம்மா, விஷ்ணு, சங்கரர். பிரம்மா கூட வியக்தத்திலிருந்து அவ்யக்தம் ஆகின்றார். வேறு எந்த சித்திரமும் கிடையாது. விஷ்ணுவினுடைய இரண்டு ரூபம் இலட்சுமி, நாராயணர் ஆகின்றார்கள். சங்கரருடைய நடிப்பு சூட்சுமவதனம் வரை மட்டும் உள்ளது. இங்கே ஸ்தூல சிருஷ்டியில் வந்து நடிப்பு நடிப்பது இல்லை, பார்வதிக்கு அமரகதையைக் கூறவும் இல்லை. இவை அனைத்தும் பக்திமார்க்கத்தின் கதைகள் ஆகும். இந்த சாஸ்திரங்கள் மீண்டும் உருவாகும். அதில் சிறிது மாவில் உப்பு போடும் அளவே உண்மை உள்ளது. எவ்வாறு ஸ்ரீமத் பகவத்கீதை என்ற வார்த்தை சரியானதாக உள்ளது! பிறகு ஸ்ரீகிருஷ்ண பகவான் என்று கூறிவிடுகின்றனர். இது முற்றிலும் தவறு ஆகும். தேவதைகளின் மகிமை தனிப்பட்டது. உயர்ந்ததிலும் உயர்ந்தவர் பரமபிதா பரமாத்மாவே ஆவார். அவரை அனைவரும் நினைவு செய்கின்றனர். அவருடைய மகிமை தனிப்பட்டது. அனைவரும் ஒன்றாக எவ்வாறு இருக்க முடியும்! சர்வவியாபி என்பதன் அர்த்தமே கிடையாது.நீங்கள் ஆன்மிக மீட்புப்படை ஆவீர்கள். ஆனால், மறைமுகமாக இருக்கிறீர்கள், ஸ்தூலமான ஆயுதங்கள் போன்றவை இருக்க முடியாது. இது ஞான அம்பு, ஞான வாளுக்கான விஷயமாகும். தூய்மை ஆவதில் தான் கடினமுயற்சி உள்ளது. பாபாவிடம் முழுமையாக உறுதிமொழி செய்ய வேண்டும். பாபா, நான் தூய்மையாகி சொர்க்க ஆஸ்தியை அவசியம் பெறுவேன். குழந்தைகளுக்குத் தான் ஆஸ்தி கிடைக்கிறது. தந்தை வந்து ஆசீர்வாதம் செய்கின்றார், மாயை இராவணனோ சாபம் அளிக்கின்றான். எனவே, அத்தகைய மிகவும் அன்பான தந்தையிடம் எவ்வளவு அன்பு இருக்க வேண்டும். குழந்தைகளினுடைய சுயநலமற்ற சேவை செய்கின்றார். பதீத உலகம், பதீத சரீரத்தில் வந்து குழந்தைகளாகிய உங்களை வைரம் போல் ஆக்கிவிட்டு சுயம் நிர்வாண தாமத்தில் அமர்ந்துவிடுகின்றார். இந்த சமயத்தில் உங்கள் அனைவருடைய நிலையும் வானப்பிரஸ்த நிலையாகும். ஆகையினால், பாபா வந்திருக்கிறார். அனைவருடைய ஜோதியும் ஒளிவீசுகிறது. எனில், அனைவரும் இனிமையாகிவிடுகின்றனர். பாபாவைப் போல் இனிமையானவர் ஆக வேண்டும். எவ்வளவு இனிமையானவர், எவ்வளவு அன்பானவர்... என்று பாடுகிறீர்கள் அல்லவா? ஆனால், பாபா எவ்வளவு அகங்காரம் அற்றவர் ஆகி, குழந்தைகளாகிய உங்களுடைய சேவை செய்கின்றார்! குழந்தைகளாகிய நீங்களும் கூட கைம்மாறாக அவ்வளவு சேவை செய்ய வேண்டும். இந்த மருத்துவமனை மற்றும் பல்கலைக்கழகமானது ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டும். எவ்வாறு ஒவ்வொரு வீட்டிலும் கோவில் உருவாக்குகிறார்கள். குழந்தைகளாகிய (சகோதரிகள்) நீங்கள் 21 பிறவிகளுக்கு ஸ்ரீமத்படி ஆரோக்கியம், ஆஸ்தி கொடுக்கிறீர்கள். குழந்தைகளாகிய நீங்களும் கூட ஸ்ரீமத்படி நடக்க வேண்டும். எங்கேயாவது தனது வழியை வெளிப்படுத்தினால், அதிர்ஷ்டம் துண்டிக்கப்பட்டுவிடும். யாருக்கும் துக்கம் கொடுக்காதீர்கள். எவ்வாறு மகாரதி குழந்தைகள் சேவை செய்துகொண்டு இருக்கின்றார்களோ, அவ்வாறே பின்பற்ற வேண்டும். சிம்மாசனதாரி ஆவதற்கான முயற்சி செய்ய வேண்டும். நல்லது.இனிமையிலும் இனிமையான தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்காக தாய், தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மிகக் குழந்தைகளுக்கு ஆன்மிகத் தந்தையின் நமஸ்காரம்.தாரணைக்காக முக்கிய சாரம்:

1. தந்தைக்கு சமமாகி, அகங்காரம் அற்றவராகி, சேவை செய்ய வேண்டும். தந்தையிடமிருந்து என்ன சேவையை அடைந்து கொண்டிருக்கிறீர்களோ, அதற்கு உள்ளத்திலிருந்து கைம்மாறு கொடுக்க வேண்டும். மிகவும் இனிமையானவர் ஆகவேண்டும்.2. அலைந்து திரிவதில் தன்னுடைய நேரத்தை இழக்கக்கூடாது. சிவபாபாவின் கழுத்து மாலை ஆவதற்காக ரேஸ் (பந்தயம்) செய்ய வேண்டும். தேகம் கூட நினைவு வரக்கூடாது இதற்கான பயிற்சி செய்ய வேண்டும்.வரதானம்:

பரமாத்ம சிந்தனையின் ஆதாரத்தில் சதா கவலையற்று இருக்கக்கூடிய நிச்சயபுத்தியுடைய சிந்தனையற்றவர் ஆகுக.உலகத்தினருக்கு ஒவ்வொரு அடியிலும் கவலை இருக்கிறது. மற்றும் குழந்தைகளாகிய உங்களுடைய ஒவ்வொரு எண்ணத்தில் பரமாத்ம சிந்தனை இருக்கிறது. ஆகையினால், கவலையற்று இருக்கிறீர்கள். செய்விக்கக்கூடியவர் செய்ய வைத்துக் கொண்டு இருக்கின்றார். நீங்கள் நிமித்தம் ஆகி செய்யக்கூடியவர்கள் ஆவீர்கள், அனைவருடைய சகயோகத்தின் விரல் உள்ளது. ஆகையினால், ஒவ்வொரு காரியமும் எளிதானதாக மற்றும் வெற்றிகரமானதாக ஆகிக்கொண்டிருக்கிறது. அனைத்தும் சரியாக நடந்து கொண்டிருக்கிறது மற்றும் நடந்து தான் ஆகவேண்டும். செய்விக்கக்கூடியவர் செய்ய வைத்துக் கொண்டிருக்கின்றார். நாம் நிமித்தமானவராக மட்டும் ஆகி, உடல், மனம், பொருளை வெற்றிகரமானதாக ஆக்க வேண்டும். இதுவே கவலையற்ற சிந்தனையற்ற நிலை ஆகும்.சுலோகன்:

சதா திருப்தியை அனுபவம் செய்ய வேண்டுமென்றால் அனைவரின் ஆசீர்வாதங்களை பெற்றுக்கொண்டே இருங்கள்.***OM SHANTI***

Whatsapp Button works on Mobile Device only