16 May 2017

BK Murli 17 May 2017 Tamil

BK Murli 17 May 2017 Tamil

17.05.2017    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


இனிமையான குழந்தைகளே! தூக்கத்தை வென்றவர் ஆகுங்கள். இரவில் கண் விழித்து ஞான சிந்தனை செய்யுங்கள். பாபாவின் நினைவில் இருப்பீர்களானால் குஷியின் அளவு அதிகரிக்கும்.கேள்வி :

பாரதத்தில் அநேக விடுமுறைகள் உள்ளன. ஆனால் சங்கமயுகத்தில் உங்களுக்கு ஒரு விநாடியின் விடுமுறை கூடக் கிடைப்பதில்லை. ஏன்?பதில் :

ஏனென்றால் சங்கமயுகத்தின் ஒவ்வொரு விநாடியும் மிகவும் மதிப்பு வாய்ந்தது. இதில் ஒவ்வொரு சுவாசத்திலும் பாபாவை நினைவு செய்ய வேண்டும். இரவும் பகலும் சேவை செய்ய வேண்டும். கீழ்ப்படிதலுள்ளவராக, நன்றியுள்ளவராக ஆகி, நினைவின் மூலம் விகர்மங்களை விநாசம் செய்து, கௌரவத்தோடு நேராக வீட்டுக்குச் செல்ல வேண்டும். தண்டனைகளில் இருந்து விடுபட வேண்டும். ஆத்மா மற்றும் சரீரம் இரண்டையும் தங்கமாக (தூய்மையாக) ஆக்க வேண்டும். அதனால் உங்களுக்கு ஒரு விநாடி கூட விடுமுறை கிடையாது.பாடல் :

நமது தீர்த்த ஸ்தலம் தனிப்பட்டதுஓம் சாந்தி.

குழந்தைகளுக்குத் தெரியும், தீர்த்த யாத்திரை இரண்டு வகைப் படும் - ஒன்று ஆன்மிகம், இன்னொன்று சரீர சம்மந்தமானது. படித்துறையும் (ஸ்நானம் செய்யும் இடம்) கூட இரண்டு வகையாக ஆகி விட்டுள்ளன. ஒன்று நதிகளின் படித்துறை. இன்னொன்று பிறகு குழந்தைகளாகிய உங்களின் புதுப்புது சென்டர்கள், அதாவது துறைகள் ( ஞான ஸ்நானம் செய்விக்கும் இடங்கள்) உருவாகிக் கொண்டே செல்கின்றன. கேட்பார்கள், கான்பூரில் ஞான அமிர்தம் அருந்துவதற்கு அல்லது ஞான ஸ்நானம் செய்வதற்கு எத்தனை சென்டர்கள் (துறைகள்) உள்ளன என்று 4-5 சென்டர்கள் உள்ளன எனச் சொல்வார்கள். முகவரிகளும் அனைத்து துறை களினுடையவை போடப் பட்டுள்ளன. இது இன்ன துறை, அங்கே சென்று ஞான ஸ்நானம் செய்பவர்கள் ஜீவன் முக்தி பெற முடியும். குழந்தைகள் அறிவார்கள், முக்தி மற்றும் ஜீவன்முக்தி எனச் சொல்லப் படுவது எது என்று. நிச்சயமாக பாரதம் ஜீவன்முக்த் நிலையில் இருந்தது. அது தான் சொர்க்கம் எனச் சொல்லப்படுகின்றது. பிறகு ஜீவன் பந்தனத்தில் வருகின்றனர் என்றால் அது நரகம் எனச் சொல்லப் படுகின்றது. குழந்தைகள் நீங்கள் அறிவீர்கள், நாம் தீர்த்தங்களுக்குச் செல்கிறோம், ஞான ஸ்நானம் செய்வதால் தான் சத்கதி கிடைக்கிறது. சத்கதியின் சாட்சாத்காரமும் குழந்தைகள் உங்களுக்குக் கிடைத்துள்ளது. சொர்க்கம் சத்கதி என்றும், நரகம் துர்கதி என்றும் சொல்லப்படுகிறது. சத்கதி சொர்க்கம் என்றால் அது நிச்சயமாக சத்யுகம் தான் மற்றும் துர்கதி நரகம் கலியுகமாகும். குழந்தைகள் நீங்கள் அனைவருக்கும் அழைப்புக் கொடுக்கிறீர்கள்-இந்தக் கலியுகமாகிய நரகத்திலிருந்து சத்யுக சொர்க்கத்திற்குச் செல்வோமா? என்று சொர்க்கம் என்பதுடன் சத்யுகம் என்ற வார்த்தையை அவசியம் போட வேண்டும். அப்போது சொர்க்கம் மற்றும் நரகம் தனித்தனி என்று ஆகி விடும். இல்லை என்றால் மனிதர்கள் சொல்லி விடுகின்றனர்-சொர்க்கம், நரகம் எல்லாம் இங்கேயே தான் உள்ளன என்று. சொர்க்கம் மற்றும் நரகம் பற்றி பாரதவாசிகளுக்குத் தான் தெரியும். அங்கே தேவி-தேவதா தர்மத்தினர் செல்வார்கள், வேறு யாருக்கும் தெரியாது. ஒவ்வொருவருக்கும் அவரவர் தர்மம் மற்றும் தர்ம சாஸ்திரம் உள்ளது. ஆக, ஒவ்வொருவரும் தங்களின் தர்ம சாஸ்திரத்தைத் தான் படிக்க வேண்டும். தங்களின் தர்ம சாஸ்திரம் தான் நன்மை செய்வதாக இருக்கும்.குழந்தைகள் நீங்கள் அறிவீர்கள், நாம் நிச்சயமாக உயர்ந்த குலத்தைச் சேர்ந்தவர்கள். எது வரை நீங்கள் மனிதர்களுக்கு டிராமாவின் ரகசியத்தைப் புரிய வைக்கவில்லையோ, அது வரை அவர்கள் பயங்கர இருளில் உள்ளனர். அதனால் இந்தச் சித்திரங்கள் பற்றியும் புரிய வைக்க வேண்டும். குழந்தைகள் நீங்கள் அனைத்து யுகங்கள் பற்றியும் அறிவீர்கள். சித்திரங்கள் இல்லாமல் மனிதர்களால் புரிந்து கொள்ள இயலாது. புத்தியில் பதியவே செய்யாது. நீங்கள் பள்ளிக்கூடத்தில் மேப் (வரைபடம்) இல்லாமல் யாருக்காவது பிரான்ஸ், இங்கிலாந்து இங்கே இருக்கிறது எனச் சொல்வீர்களானால் முற்றிலும் புரிந்து கொள்ள மாட்டார்கள். ஆக, இந்த விஷயமும் கூட சித்திரங்கள் இல்லாமல் புரிந்து கொள்ள முடியாது. சித்திரங்களின் முன்னால் அழைத்து வந்து புரிய வைக்க வேண்டும்-இது டிராமா. இப்போது சொல்லுங்கள், நீங்கள் எந்த தர்மத்தைச் சேர்ந்தவர்? உங்கள் தர்மம் எப்போது வருகிறது? சத்யுகத்தில் எந்த தர்மம் உள்ளது? சித்திரத்தில் முற்றிலும் தெளிவாக எழுதப் பட்டுள்ளது. சத்யுக திரேதாவில் சூரியவம்சி சந்திரவம்சி தர்மம் இருந்த போது வேறு தர்மம் இருந்ததில்லை. இப்போது அந்த தேவதா தர்மம் இல்லை. அதனால் நிச்சயமாக அது ஸ்தாபனை ஆக வேண்டும். இப்போது உலகம் பழையது என்றால் அவசியம் பிறகு புது உலகம் ஸ்தாபனை ஆக வேண்டும். புது உலகத்தில் லட்சுமி-நாராயணரின் இராஜ்யம் இருந்தது. லட்சுமி-நாராயணரின் சித்திரம் தான் முக்கியமானது. லட்சுமி-நாராயணரின் பெயர் புகழ் பெற்றது. அவர்களின் பெரிய-பெரிய கோவில்களையும் கட்டுகின்றனர். சிவனுக்கும் அநேகம் பெயர்கள் வைத்து நிறைய கோவில்களைக் கட்டியுள்ளனர். அவரது பெயரும் பகழ் பெற்றது. சோமரசம் அருந்தச் செய்கிறார். அதனால் சோமநாத் என்ற பெயர் வைக்கப் பட்டுள்ளது. மனிதர்கள் அநேகமான பெயர்களை வைத்துள்ளனர் என்றால் அதைப் புரிய வைக்க வேண்டியுள்ளது. ருத்ரன், சிவன், சோமநாத் இந்த பெயர்கள் அனைத்தையும் ஏன் வைத்துள்ளனர்? பத்ரிநாத் என்றால் அர்த்தம் என்ன? அநேகம் பெயர்களைப் புரிந்து கொள்ளாமலே வைத்துள்ளனர். அதனால் மனிதர்கள் குழம்பிப் போய் உள்ளனர். இதன் யதார்த்தமான பெயரே ருத்ர கீதா ஞான யக்ஞம். பாபா சொல்கிறார், என்னுடைய இந்த ஞான யக்ஞத்திலிருந்து விநாச ஜ்வாலை கொழுந்து விட்டு எரிந்துள்ளது. இது பகவான் வாக்கு. ஆகவே எப்போது யாராவது வருகிறார்களோ, அவர்களுக்கு அவசியம் கீதையைப் பற்றி புரிய வையுங்கள். அதில் எழுதப் பட்டுள்ளது - பகவான் வாக்கு-மாமேகம் அதாவது என்னை மட்டும் நினைவு செய்யுங்கள். அப்போது உங்கள் விகர்மங்கள் விநாசமாகும். மேலும் நீங்கள் என்னிடம் வந்து விடுவீர்கள். அவர் எல்லையற்ற தந்தை, சொர்க்கத்தைப் படைப்பவர், ஜீவன்முக்தியைப் படைப்பவர். பெயரே ஹெவன்லிகாட் ஃபாதர் - சொர்க்கத்தைப் படைப்பவர். சொர்க்கத்தில் வசிப்பவர் அல்ல. சொர்க்கத்தை ஸ்தாபனை செய்பவர் பகவான். ஸ்தாபனை, விநாசம், பாலனையின் காரியத்தைச் செய்கிறார் இல்லையா? ஆக, இப்போது பாபா சொல்கிறார், பரலௌகிகத் தந்தையாகிய என்னை நினைவு செய்யுங்கள், மற்றும் தன்னை அசரீரி ஆத்மா என உணருங்கள். இல்லையென்றால் என்னிடம் எப்படி வருவீர்கள்? பாபா சொல்கிறார், இது உங்களுடைய கடைசி ஜென்மம். அதனால் என்னிடம் நினைவு மூலம் தொடர்பு வைப்பதன் மூலம் உங்களுடைய விகர்மங்கள் விநாசமாகும். இது யோக அக்னி எனச் சொல்லப்படுகிறது. மனிதர்களோ, ஆரோக்கியத்திற்காக அநேக விதமான யோக முறைகளைக் கற்பிக்கின்றனர். இப்போது பரலௌகிகத் தந்தை சொல்கிறார், என்னிடம் நினைவின் தொடர்பை வையுங்கள் மற்றும் இந்த ஞானத்தை தாரணை செய்யுங்கள். அப்போது உங்கள் விகர்மங்கள் விநாசமாகும். பிறகு நான் உங்களுக்கு சத்யுக வைகுண்டத்தின் இராஜபதவி தருவேன். ஆக, இதை ஏற்றுக் கொள்ள வேண்டும் இல்லையா? பாபா சொல்கிறார், ஹே தூக்கத்தை வெல்லக்கூடிய குழந்தைகளே, தூக்கத்தை வென்று பாபாவை நினைவு செய்யுங்கள். ஏனென்றால் நீங்கள் என்னிடம், என்னுடைய நிராகாரி உலகத்திற்கு வர வேண்டும். கிருஷ்ணராக இருந்தால் சொல்வார், என்னுடைய வைகுண்டத்திற்கு வர வேண்டும் என்று. யார் எந்த இடத்தில் வசிக்கிறாரோ, அந்த இடத்தின் இலக்கைத் தான் காட்டுவார் இல்லையா? நிராகார் தந்தை சொல்கிறார், நீங்கள் என்னை நினைவு செய்வீர்களானால் என்னுடைய நிராகாரி உலகத்திற்கு வந்து விடுவீர்கள். என்னிடம் வருவதற்கு இந்த ஒரு வழி தான் உள்ளது. இப்போது குழந்தைகள் நீங்கள் (முகவாய் வழி) வம்சாவளி. குக வம்சாவளி மற்றும் முக வம்சாவளி என்ற வார்த்தைகள் முற்றிலும் சுலபமானவை. இப்போது நீங்கள் சொல்கிறீர்கள், பாபா, நான் உங்களுடையவன். நானும் சொல்கிறேன், ஆம் குழந்தைகளே, நீங்கள் என்னுடையவர்கள். ஆகவே இப்போது நீங்கள் என்னுடைய அறிவுரைப்படி நடந்து செல்லுங்கள்.நீங்கள் அறிவீர்கள், பாரதம் சொர்க்கமாக இருந்த போது மற்ற இத்தனை ஆத்மாக்களும் எங்கே இருந்தனர்? முக்திதாமத்தில். அங்கே (சத்யுகத்தில்) இருப்பது ஒரு தர்மம். அதனால் கை தட்டப் படுவதில்லை. சண்டை-சச்சரவின் பெயரே இல்லை. இந்த மனிதர்கள் சொல்கின்றனர் - இந்தியர்-சீனர்கள் சகோதர-சகோதரர்கள். ஆனால் எங்கே? இவர்களோ சண்டையிட்டுக் கொண்டே இருக்கின்றனர். பதீத-பாவனா சீதாராம் எனப் பாடுகின்றனர் என்றால் தாங்கள் பதீத்தாக (தூய்மையின்றி ) இருப்பதால் தான் பாடுகின்றனர். சத்யுகத்தில் இருப்பது தூய்மை யான உலகம் என்பதால் அங்கே இது போல் பாட மாட்டார்கள். இது பதீத் உலகம். அதனால் பாடுகின்றனர். பாவன உலகம் எனச் சொல்லப் படுவது சத்யுகம். பதீத் (தூய்மையில்லா) உலகம் எனச் சொல்லப்படுவது கலியுகம். இதையும் மனிதர்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை. எவ்வளவு அசுத்த மோசமான புத்தி! நாமும் புரிந்து கொள்ளாமல் இருந்தோம். தமோபிரதான புத்தியாக இருப்பதால் அனைவரும் மறந்து விடுகின்றனர். பாபா சொல்கிறார், நீங்கள் முற்றிலும் புத்தியற்றவர்களாக ஆகி விட்டீர்கள். நீங்கள் எவ்வளவு புத்திசாலிகளாக இருந்தீர்கள்! நீங்கள் தான் தேவதைகளாக சதோபிரதானமாக இருந்தீர்கள். இப்போது புத்தியற்ற, சூத்திரர், தமோபிரதானமாக ஆகி விட்டிருக்கிறீர்கள். நீங்கள் சொர்க்கத்தில் எவ்வளவு சுகம் பெற்றீர்கள்! பாரதவாசிகளாகிய உங்களுடையது உயர்ந்ததிலும் உயர்ந்த தேவி-தேவதா குலமாக இருந்தது. இப்போது நீங்கள் எவ்வளவு கீழான நரகவாசியாக ஆகியிருக்கிறீர்கள்! இதை பாபா தான் வந்து தம்முடைய குழந்தைகளுக்குச் சொல்கிறார். குழந்தைகள் உணர்கிறார்கள், நாம் தான் பூஜைக்குரிய தேவதையாக இருந்தோம். பிறகு பூஜாரி ஆகி விட்டோம். பாபா எவ்வளவு புத்திசாலியாக ஆக்கியிருந்தார்! இப்போது மீண்டும் ஆக்கிக் கொண்டிருக்கிறார். இந்த விஷயங்களை இரவில் சிந்தனை செய்து மிகுந்த குஷியில் வர வேண்டும். அமிர்தவேளையில் எழுந்து பாபாவை நினைவு செய்யுங்கள். மேலும் இதைச் சிந்தனை செய்வீர்களானால் குஷியின் அளவு மிகவும் அதிகரிக்கும். அநேகக் குழந்தைகளோ நாள் முழுவதிலும் ஒரு விநாடி கூட நினைவு செய்வதில்லை. இங்கே கேட்டுக் கொண்டிருக்கலாம். ஆனால் புத்தியோகம் வேறு பக்கம் உள்ளது. நிராகார் பரமாத்மா என்று யார் சொல்லப்படுகிறார் - இதைக்கூடப் புரிந்து கொள்வதில்லை. பள்ளிக்கூடத்தில் ஒரு சிலர் இரண்டு-மூன்று தடவை கூட ஃபெயிலாகி விடுகின்றனர். கடைசியில் படிக்க முடியவில்லை என்றால் பள்ளிக்கூடத்தை விட்டே சென்று விடுகின்றனர். மாயா வேகமாக அடி கொடுத்து விடுகின்றது. விகாரத்தின் குத்து விழுந்தது என்றால் எல்லாம் அழிந்தது. மாயா அந்த மாதிரி சக்தி வாய்ந்தது, மிகவும் கொடியது. உங்கள் குத்துச் சண்டை எந்த ஒரு மனிதரோடும் இல்லை, ஆனால் மாயாவோடு தான். நாம் மாயாவை வெற்றி கொள்கிறோம். இதற்காகக் குழந்தைகள் நீங்கள் மிகுந்த முயற்சி மேற்கொள்ள வேண்டும். எவ்வளவு முடியுமோ, இரவில் கண் விழித்து விசார் சாகர் மந்தன் செய்ய வேண்டும். பயிற்சி ஆகி விடும். பகவான் சொல்வது அனைத்துக் குழந்தைகளுக்காகவும் தான். ஒரு அர்ஜுனனுக்கு மட்டும் அல்ல. அனைவரும் யுத்த மைதானத்தில் உள்ளனர். பாபா குழந்தைகள் அனைவருக்கும் சொல்கிறார், குழந்தைகளே, இரவில் கண் விழித்து மிக-மிக அன்பான தந்தையை நினைவு செய்வீர்களானால் விகர்மங்கள் விநாசமாகும், ஞான தாரணையும் ஆகும். இல்லையென்றால் ஒரு சிறிதும் தாரணை ஆகாது. எனது கட்டளைக்கு விரோதமாக நடப்பீர்களானால், என்னை நினைவு செய்வதில்லை என்றால் அதிக தண்டனைகள் பெற நேரிடும். ஈஸ்வரிய கட்டளை கிடைக்கிறது இல்லையா? நான் உங்களுடைய மிகவும் இனிமையிலும் இனிமையான தந்தை. என்னை நினைவு செய்வதன் மூலம் நீங்கள் என்னிடம் வந்து விடுவீர்கள். தண்டனை பெற்றுப் பிறகு வருவது என்பது சரியாக இருக்காது. நேராக வருவதால் கௌரவம் கிடைக்கும். அதனால் எனது கட்டளைக்கு விரோதமாக நடக்காதீர்கள். கட்டளையை ஏற்று நடக்காதவர்கள் பெயரைக் கெடுப்பவர் எனச் சொல்லப்படுவார்கள். இவர் உண்மையான பாபா, உண்மையான சத்குரு. ஆகவே அவரது கட்டளையை ஏற்று நடக்க வேண்டும் இல்லையா? சிவபாபாவோ மிக இனிமையானவர். ஆத்மா மற்றும் சரீரம் இரண்டையுமே தங்கமாக ஆக்கி விடுகிறார். தங்கமான தேகம் என்பது வெறுமனே ஆரோக்கியத்திற்கு மட்டும் சொல்லப் படுவதில்ல. ஆத்மாவும் தூய்மையானது, சரீரமும் தூய்மையானது அது தான் தங்கமான சரீரம் எனச் சொல்லப் படுகிறது. தேவதைகளுக்கு தங்கமான சரீரம் இருந்தது. இப்போதோ அனைவருக்கும் அழுக்கான தேகம் உள்ளது. 5 தத்துவங்கள் தமோபிரதானம் என்றால் அதனால் சரீரம் பாருங்கள், எப்படி உருவாகிறது! முகங்களைப் பாருங்கள், எப்படி இருக்கின்றன! கிருஷ்ணருக்கோ அதிக மகிமை உள்ளது. அந்த மாதிரி சரீரமோ உங்களுக்கு சொர்க்கத்தில் தான் கிடைக்கும். இப்போது நீங்கள் மீண்டும் அது போன்ற தேவதை ஆகிறீர்கள். ஆக, முக்கிய விஷயம் இரவில் கண் விழித்து நினைவு செய்வீர்களானால் பழக்கமாகி விடும். உறக்கத்தை விட்டுவிட வேண்டும். பயிற்சி செய்வதன் மூலம் அனைத்தும் நடைபெறுகின்றது. வேலை-வெட்டி, ரொட்டி சுடுவது, சமைப்பது முதலிய அனைத்தும் பயிற்சியினால் கற்றுக் கொள்ளப் படுகிறது இல்லையா? பாபாவை நினைவு செய்யவும் கற்றுக் கொள்ள வேண்டும். யாரை கல்பம் முழுவதும் மறந்து இருந்தீர்களோ, இப்போது அந்தத் தந்தையை நினைவு செய்ய வேண்டும். அப்போது பாபா குஷியடைவார். இல்லையென்றால் இவர்கள் உண்மையான, கட்டளைப்படி நடக்கும் குழந்தை அல்ல எனச் சொல்வார். பிறகு அதிகத் தண்டனை பெறுவார்கள். அவர்களின் அதிர்ஷ்டத்தில் அடி விழுந்துள்ளது. இங்கே யாராவது கொஞ்சம் யார் மீதாவது கோபப் பட்டால் கோபித்துக் கொள்கின்றனர். அங்கே தர்மராஜர் தண்டனை கொடுத்தால் பிறகு எதுவும் செய்ய முடியாது. எப்படி சிறையில் அரசாங்கம் மிகவும் இலவசமாக வேலை வாங்குகிறது. சிலர் உழைப்பு இல்லாமலே சிறைத் தண்டனையை அனுபவிக்கின்றனர். சிலருக்கு முயற்சி செய்ய வேண்டியுள்ளது. ஆக, தர்மராஜபுரியிலும் எப்போது தர்மராஜர் தண்டனை தருகிறாரோ, அப்போது எதுவும் செய்ய முடியாது. உள்ளுக்குள் புரிந்து கொள்வார்கள், நம்முடைய குற்றம் தான், அதனால் தான் தண்டனை கிடைத்துள்ளது. இதையும் உணர்வார்கள்-அதாவது நாம் தந்தையின் கட்டளையை ஏற்று நடக்கவில்லை, அதனால் தண்டனை கிடைக்கிறது. அதனால் பாபா சொல்கிறார், எவ்வளவு முடியுமோ, என்னை நினைவு செய்யுங்கள். நல்லது.பாருங்கள், பாரதத்தில் அனைவருக்கும் எவ்வளவு விடுமுறை கிடைக்கிறதோ, அவ்வளவு வேறெங்கும் கிடைப்பதில்லை. ஆனால் இங்கே நமக்கு ஒரு விநாடி கூட விடுமுறை கிடைப்பதில்லை. ஏனென்றால் பாபா சொல்கிறார், ஒவ்வொரு சுவாசத்திலும் பாபாவின் நினைவில் இருங்கள். ஒவ்வொரு சுவாசமும் மிகவும் மதிப்பு வாய்ந்தது. குழந்தைகள் இரவும் பகலும் பாபாவின் சேவையில் இருக்க வேண்டும்.நீங்கள் சர்வசக்திவான் பாபாவின் மீது அன்பு வைத்த நாயகியாக இருக்கிறீர்களா அல்லது அவரது ரதத்தின் மீதா? அல்லது இரண்டின் மீதுமா? நிச்சயமாக இருவரின் மீதும் நேசம் உள்ளவராக இருக்க வேண்டும். புத்தியில் இது இருக்கும்-அவர் இந்த ரதத்தில் இருக்கிறார். அவரின் காரணத்தால் நீங்கள் இவர் மீது நேசம் கொண்டிருக்கிறீர்கள். சிவனுடைய ஆலயத்திலும் கூட நந்தி வைக்கப் பட்டுள்ளது. அதுவும் பூஜிக்கப் படுகின்றது. எவ்வளவு ஆழமான விஷயங்கள்! யார் தினந்தோறும் கேட்பதில்லையோ, அவர்கள் ஏதாவதொரு விஷயத்தைத் தவற விட்டு விடுவார்கள். தினந்தோறும் கேட்பவர்கள் ஒரு போதும் ஃபெயிலாக மாட்டார்கள். மேனர்ஸ் கூட நல்லதாக இருக்கும். பாபாவை நினைவு செய்வதில் மிக நல்ல இலாபம் உள்ளது. பிறகு அதை விடவும் நல்ல இலாபம் பாபாவின் ஞானத்தை நினைவு செய்வது. நினைவு செய்வதும் நன்மை, ஞானமும் நன்மை. பாபாவை நினைவு செய்வதாலோ விகர்மங்கள் விநாசமாகின்றன. மேலும் பதவியும் உயர்ந்ததாகக் கிடைக்கின்றது. எங்கே பாபா இருக்கிறாரோ, அது முக்திதாமம், பிரம்ம லோகம். ஆனால் அனைத்தையும் விட நல்லது இந்த பிராமணர்களின் உலகம். பிராமணர்கள் பூணூலை அவசியம் அணிகின்றனர். குடுமியும் வைத்துக் கொள்கின்றனர். ஏனென்றால் பாபா பிராமணர்களாகிய நம்மைக் குடுமியைப் பிடித்து அழைத்துச் செல்கிறார். நல்லது.இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!தாரணைக்கான முக்கிய சாரம் :

1) சரீரம், ஆத்மா இரண்டையும் தங்கமாக ஆக்குவதற்காக பாபாவை நினைவு செய்வதற்கான பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு போதும் கட்டளைக்கு விரோதமாக நடக்கக் கூடாது.2) படிப்பிற்கான நேரத்தில் புத்தி அங்கே-இங்கே அலையாதிருக்கிறதா? என்று சோதிக்க வேண்டும். ஒரு போதும் படிப்பைத் தவற விடக் கூடாது. மாயாவின் குத்துச் சண்டையில் தோல்வியடையக் கூடாது.வரதானம் :

சுயஸ்திதி (தன் சுய நிலைப்பாட்டின்) மூலம் ஒவ்வொரு பரிஸ்திதியையும் (சூழ்நிலையையும்) கடந்து செல்லக் கூடிய மாஸ்டர் திரிகாலதரிசி ஆகுக.எந்தக் குழந்தைகள் திரிகாலதரிசி ஸ்திதியில் நிலைத்திருக்கின்றனரோ, அவர்கள் தங்களின் சுயஸ்திதி மூலம் ஒவ்வொரு பரிஸ்திதியையும் எதுவுமே (பாதிப்பு) இல்லாத மாதிரி கடந்து சென்று விடுவார்கள் - ஞானம் நிறைந்த, திரிகாலதரிசி ஆத்மாக்கள் சமயத்தின் பிரமாணம் ஒவ்வொரு சக்தியையும் ஒவ்வொரு விசயத்தையும் ஒவ்வொரு குணத்தையும் கட்டளைப்படி நடத்துவார்கள். தக்க சமயம் வரும்போது சகிப்புத்தன்மையின் சக்திக்குக் கட்டளை இடுகிறீர்கள். ஆனால் காரியம் முடிந்த பிறகு சகிப்புத்தன்மையின் சக்தி வருகிறது என்று இருக்கக் கூடாது. எந்தச் சமயம் எந்த சக்தி, எந்த விதியின் படி வேண்டுமோ-அந்தச் சமயம் தனது காரியத்தைச் செய்ய வேண்டும். அப்போது தான் கஜானாவின் எஜமானர், மாஸ்டர் திரிகாலதரிசி எனச் சொல்வார்கள்.சுலோகன் :

யார் சதா குஷியாக இருக்கின்றனரோ, மற்றும் அனைவருக்கும் குஷியைப் பகிர்ந்தளிக்கின்றனரோ, அவர்கள் தான் உண்மையான சேவாதாரி ஆவார்கள்.***OM SHANTI***

Whatsapp Button works on Mobile Device only