BK Murli 20 August 2016 In Tamil

BK Murli 20 August 2016 In Tamil

20.08.2016 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா, மதுபன்


இனிமையான குழந்தைகளே! உங்கள் அதிர்ஷடத்தை விழிக்கச் செய்ய பாபா வந்துள்ளார், பாவனமானால் தான் அதிர்ஷடம் விழிப்படையும்.

கேள்வி:

குழந்தைகளின் அதிர்ஷ்டம் விழித்துள்ளது என்றால் அவர்களின் அடையாளம் என்ன?

பதில்:-

அவர்கள் சுகத்தின் தேவதையாக இருப்பார்கள். அவர்கள் எல்லையற்ற தந்தையிடமிருந்து சுகத்தின் ஆஸ்தியை பெற்று அனைவருக்கும் சுகத்தினைக் கொடுப்பார்கள். அவர்கள் ஒருபோதும் மற்றவர்களுக்கு துக்கம் கொடுக்க மாட்டார்கள். அவர்கள் வியாசரின் உண்மையிலும் உண்மையான சுகதேவர்கள். 2) அவர்கள் ஐந்து விகாரத்தினை சன்யாசம் செய்வது உண்மையிலும்-உண்மையான இராஜயோகி, இராஜரிஷி என்று அழைக்கப்படுகின்றனர். 3) அவர்களின் மனநிலை ஒருநிலையாக இருக்கும், அவர்கள் எந்த விஷயத்திற்காகவும் அழ மாட்டார்கள். அவர்களைத் தான் மோகத்தை வென்றவர்கள் என்று கூறலாம்.

பாட்டு:-

அதிர்ஷ்டத்தை விழிக்கச் செய்து வந்துள்ளேன்.....

ஓம்சாந்தி.


பாடலின் ஒரு வரியைக் கேட்டவுடன் இனிமையிலும்- இனிமையான குழந்தைகளுக்கு மெய்சிலிர்ப்பு ஏற்பட வேண்டும். இது பொதுவான பாடல் தான், ஆனால் இந்த பாடலின் சாரத்தை யாரும் அறியவில்லை. பாபா தான் வந்து ஒவ்வொரு பாடலின், சாஸ்த்திரத்தின் அர்த்தத்தை புரிய வைக்கின்றார். இனிமையிலும்- இனிமையான குழந்தைகள் கூட இந்த கலியுகத்தில் அனைவரின் அதிர்ஷ்டம் உறங்கி உள்ளது என்பதை தெரிந்து கொண்டீர்கள். சத்தியயுகத்தில் அனைவரின் அதிர்ஷ்டம் விழிப்படைந்திருக்கும். உறங்கிக் கொண்டிருக்கும் அதிர்ஷ்டத்தை விழிக்கச் செய்யக் கூடியவர், மேலும் வழி காட்டக் கூடியவர், அதாவது அதிர்ஷ்டத்தை உருவாக்கக் கூடியவர் ஒரு பாபா தான். அவர் தான் வந்து குழந்தைகளின் அதிர்ஷ்டத்தை விழிக்கச் செய்கின்றார். உலகத்தில் எப்படி குழந்தைகள் பிறந்தவுடன் அதிர்ஷ்டம் விழித்து விடுகின்றது. குழந்தைகள் பிறந்தவுடன் நாங்கள் வாரிசுகள் என்பது புரிந்து விடுகின்றது. இது நிச்சயிக்கப்பட்ட எல்லையற்ற விஷயம் ஆகும். கல்ப-கல்பமாக நம்முடைய அதிர்ஷ்டம் விழிக்கின்றது பின்பு உறங்கி விடுகின்றது. பாவனம் ஆகின்றீர்கள் என்றால், அதிர்ஷ்டம் விழித்துக் கொள்கின்றது என்று அர்த்தமாகும். பாவன கிரஹஸ்த ஆசிரமம் என்று கூறப்படுகின்றது. ஆசிரமம் என்ற சொல்லே துôய்மையைக் குறிக்கின்றது. பவித்திர கிரஹஸ்த ஆசிரமம் ஆகும், அதற்கு எதிர்மறையாக உள்ளது அபவித்திர பதீத தர்மம் ஆகும், ஆசிரமம் என்று சொல்ல முடியாது. கிரஹஸ்த தர்மம் என்பது அனைவருக்கும் உள்ளது. மிருகங்களுக்கும் கூட உள்ளது. குழந்தைகளை அனைவரும் பெற்று எடுக்கின்றார்கள். மிருகங்களுக்கும் கூட கிரஹஸ்த தர்மம் என்று கூறுவார்கள். இப்பொழுது நாம் சொர்க்கத்தில் பவித்திர கிரஹஸ்த ஆசிரமமாக இருந்தது என்பதை குழந்தைகள் நீங்கள் அறிந்து கொண்டீர்கள். அவர்கள் தேவி-தேவதைகளாக இருந்தார்கள். அவர்களைத் தான் சர்வகுண சம்பன்ன என்று புகழ்பாடப் படுகின்றது, நீங்கள் உங்களையே பாடிக் கொண்டு இருந்தீர்கள். இப்பொழுது நாம் மனித நிலையிலிருந்து தேவதையாக மீண்டும் ஆகிக் கொண்டு இருக்கின்றோம் என்று நீங்கள் அறிந்து கொண்டீர்கள். தேவி-தேவதைகளின் தர்மமாக இருந்தது. பின்பு பிரம்மா-விஷ்ணு-சங்கரர் கூட தேவதை என்று கூறுகின்றார்கள். பிரம்மா தேவதாய நமஹ! விஷ்ணு தேவதாய நமஹ! சிவனுக்காக பரமாத்மாய நமஹ! என்று கூறுகின்றார்கள் வித்தியாசம் ஏற்படுகின்றது அல்லவா? சிவனையும், மேலும் சங்கரையும் ஒன்று என்று கூற முடியாது. கல் புத்தியாக இருந்த நீங்கள் பாரஸ் புத்தியாக ஆகிக் கொண்டிருக்கின்றீர்கள். தேவதைகளை கல் புத்தி என்று கூற முடியாது. பின்பு நாடகத்தின் படி இராவண இராஜ்யம் வரும் போது அவர்களும் கூட ஏணிப்படியில் கீழே இறங்க வேண்டி உள்ளது. பாரஸ் புத்தியிலிருந்து கல் புத்தி ஆக வேண்டும். அனைவரையும் விட புத்திசாலியாக ஆக்கக் கூடியவர் ஒரு சிவபாபா தான். உங்களை பாரஸ் புத்தி ஆக்குகின்றார். நீங்கள் இங்கே பாரஸ் புத்தி ஆக வந்துள்ளீர்கள். பாரஸ்நாத்துக்குக் கூட கோவில் உள்ளன. அவர் தான் புத்திசாலிக்கெல்லாம், புத்திசாலி ஆவார். இந்த ஞானம் குழந்தைகளின் புத்திக்கு டானிக் ஆகும். புத்தி எவ்வளவு மாறுகின்றது. தீயதைப் பார்க்காதீர்கள்! என்று பாடப்படுகின்றது இதற்கு குரங்கைக் காட்டுகின்றார்கள். மனிதர்கள் தான் குரங்குக்கு சமமாக ஆகி விட்டார்கள். வனக்குரங்கையும் மனிதனோடு ஒப்பிடுகின்றார்கள். இதைத்தான் முட்கள் நிறைந்த காடு என்று சொல்லப்படுகின்றது. ஒருவருக்கு ஒருவர் எப்படி துக்கம் கொடுக்கின்றார்கள். இப்பொழுது குழந்தைகள் உங்களது புத்திக்கு டானிக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. எல்லையற்ற தந்தை டானிக் கொடுத்துக் கொண்டு இருக்கின்றார். இதை படிப்பு என்று கூறலாம், இதை ஞான அமிர்தம் என்றும் கூறுகின்றார்கள். இது தண்ணீர் ஒன்றும் இல்லை. தற்காலத்தில் அனைத்து விஷயங்களையும் அமிர்தம் என்று கூறுகின்றார்கள். கங்கை நீரைக் கூட அமிர்தம் என்று கூறுகின்றார்கள். தேவதைகளின் கால்களைக் கழுவி அதை குடிக்கின்றார்கள், தண்ணீரை தேவதை முன்னால் வைக்கின்றார்கள் அதைத் கூட அமிர்தத்தின் அஞ்சலி என்று நினைக்கின்றார்கள். அஞ்சலியைப் பெறக் கூடியவர்களை பதீத-பாவனமாக ஆக்கக் கூடியவர் என்று கூற முடியாது. கங்கை நீரை பதீத-பாவனி என்று கூறுகின்றார்கள். மனிதர்கள் இறந்து விட்டால் அவர்கள் வாயில் கங்கை நீரை ஊற்ற வேண்டும் என்று கூறுகின்றார்கள். அர்ச்சுனன் அம்பை எய்தார் அதிலிருந்து வெளிப்பட்ட அமிர்த ஜலத்தை அனைவருக்கும் கொடுத்தார் என்று கூறப்படுகின்றது. குழந்தைகள் உங்களுக்கு யாரும் இங்கு அம்பு எதுவும் எய்யவில்லை. ஒரு கிராமத்தில் அம்புகளால் தான் சண்டை போடுவார்கள். அங்குள்ள இராஜாவை அவர்கள் ஈஸ்வரரின் அவதாரம் என்று கூறுவார்கள். இவர்கள் அனைவரும் பக்தி மார்க்கத்தின் குருக்கள் என்று பாபா கூறுகின்றார். உண்மையிலும்-உண்மையான சத்குரு ஒருவர்தான். அனைவருக்கும் சத்கதியைத் தரும் வள்ளல் ஒருவர் தான். அவர் தான் அனைவரையும் அழைத்துச் செல்லக் கூடியவர். பாபாவைத் தவிர வேறு யாரும் அழைத்துச் செல்ல முடியாது. பிரம்மத்தில் யாரும் ஐக்கியம் ஆக முடியாது. இந்த நாடகம் உருவாக்கப்பட்டது. இந்த சக்கரம் அழியாதது சுற்றிக் கொண்டிருக்கின்றது. உலகத்தின் சரித்திர- பூகோளம் எப்படி திரும்பிச் சுற்றுகின்றது என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்து கொண்டீர்கள். மனிதர்கள் என்றால் ஆத்மாக்கள் தன்னுடைய தந்தையின் படைப்பைக் கூட அறியவில்லை, அவரைத் தான் ஹே கடவுளே! தந்தையே! என்று நினைக்கின்றார்கள். எல்லைக்குட்பட்ட தந்தையை ஒருபோதும் இறை தந்தை என்று கூற முடியாது. இறை தந்தை என்ற வார்த்தையை மிகவும் மரியாதையோடு கூறுகின்றார்கள். அவரைத்தான் பதீத-பாவனர் என்று கூறுகின்றார்கள், துக்கத்தை நீக்கி சுகத்தைக் கொடுக்கக் கூடியவர் என்று கூறுகின்றார்கள். ஒரு புறம் துக்கத்தை நீக்கி, சுகத்தைக் கொடுப்பவர் என்று கூறுகின்றார்கள், இன்னொரு புறம் குழந்தை இறந்து விட்டால் ஈஸ்வரர் தான் சுகம்-துக்கம் கொடுக்கின்றார் என்று கூறுகின்றார்கள். ஈஸ்வரன் நம்முடைய குழந்தையை எடுத்துக் கொண்டார் என்று சொல்கின்றார்கள், இது என்ன செயல்! ஈஸ்வரனை நிந்தனை செய்கின்றோம் அல்லவா! ஈஸ்வரன் தான் குழந்தையைக் கொடுத்தார் என்று சொல்கின்றார்கள் பின்பு திருப்பி அவரே எடுத்துக் கொண்டார் என்றால், ஏன் அழுகின்றார்கள்? ஈஸ்வரனிடம் போய்விட்டது அல்லவா! சத்திய யுகத்தில் யாரும் ஒரு போதும் அழுவதில்லை. அழுவதற்கு எந்த அவசியமும் இல்லை என்று பாபா புரிய வைக்கின்றார். ஆத்மாவுக்கு தனது கணக்கு- வழக்குப்படி போய் நடிக்க வேண்டியுள்ளது. ஞானம் இல்லாத காரணத்தால் மனிதர்கள் எவ்வளவு அழுகின்றார்கள். பைத்தியம் போல் ஆகின்றார்கள், அம்மா இறந்தாலும் அல்வா சாப்பிடுங்கள் ! அப்பா இறந்தாலும் அல்வா சாப்பிடுங்கள்! என்று பாபா புரிய வைக்கின்றார், நஷ்டமோகா ஆக வேண்டும். நமக்கு ஒரு சிவபாபாவைத் தவிர வேறு யாரும் இல்லை, இப்படிப்பட்ட ஸ்திதி (நிலை) குழந்தைகளுக்கு இருக்க வேண்டும். மோகத்தை வென்ற இராஜா கதையைக் கேட்டிருப்பீர்கள். சத்தியயுகத்தில் ஒரு போதும் துக்கம் என்ற விஷயமே இருக்காது. ஒரு போதும் அகால மரணம் ஏற்படாது. இப்பொழுது நாம் காலன் மீது வெற்றி அடைகின்றோம் என்பதை குழந்தைகள் அறிவீர்கள். பாபாவை மகாகாலன் என்றும் கூட கூறுவார்கள், அவர் தான் காலனுக்கு எல்லாம் காலனாக இருக்கின்றார். நீங்கள் காலன் மீது வெற்றி அடைய வேண்டும் அதாவது காலன் ஒரு போதும் பிடிக்காது. காலன் ஆத்மாவையோ, உடலையோ பிடிக்க முடியாது, ஆத்மா ஒரு உடலை விட்டு இன்னொரு உடலை எடுக்கின்றது. அதைத் தான் காலன் பிடித்து விட்டது என்று சொல்கின்றார்கள், மற்றபடி காலன் என்ற விஷயம் வேறு இல்லை. மனிதர்கள் கூறுகின்றார்கள், அச்சுதம், கேசவம் (அச்சுதம், கேசவம் என்று மகிமைபாடுகிறார்கள்) ஆனால் அர்த்தம் ஒன்றுமே புரிந்து கொள்வதில்லை. இந்த ஐந்து விகாரங்கள் உங்களை எவ்வளவு கெடுத்து விட்டது என்று பாபா புரிய வைக்கின்றார். இந்த நேரம் யாரும் பாபாவை அறியவில்லை, அதனால் தான் இந்த உலகை அனாதை உலகம் என்று கூறப்படுகின்றது. தங்களுக்குள் எத்தனை சண்டை போட்டுக் கொள்கின்றார்கள். முழு உலகம் பாபாவின் வீடு அல்லவா! பாபா முழு உலக குழந்தைகளையும் பதீததர்களிலிருந்து பாவனம் ஆக்குவதற்காக வந்துள்ளார். அரைக்கல்பம் முற்றிலும் பாவன உலகமாக இருந்தது. இராம இராஜா, இராம பிரஜா என்று பாடுகின்றார்கள் என்றால், அங்கே அதர்மம் என்ற விஷயம் எப்படி இருக்க முடியும்? அங்கே ஆடும், புலியும் ஒரே ஓடையில் ஓடும் நீரைக் குடித்தது என்று பாடப்படுகின்றது. பிறகு அங்கே இராவணன் எங்கிருந்து வருவார்? வெளியில் உள்ளவர்கள் இதையெல்லாம் கேட்டு சிரிக்கின்றார்கள், புரிந்து கொள்வதில்லை. பாபா வந்து ஞானம் கொடுக்கின்றார், இது பதீத உலகம் இல்லையா? இப்பொழுது ப்ரேரணையில் பதீதர்களை பாவனம் ஆக்க முடியுமா என்ன! பதீத பாவனரே வாருங்கள் என்று அழைக்கின்றார்கள் என்றால், அவசியம் பாரதத்தில் தான் வந்திருப்பார். இப்பொழுது கூட நான் ஞானக்கடல் வந்துள்ளேன் என்று கூறுகின்றார்- உங்களை தனக்குச் சமமாக மாஸ்டர் ஞானக் கடல் ஆக்குகின்றார். பாபாவைத் தான் உண்மையிலும்-- உண்மையான வியாசர் என்று கூறப்படுகின்றது. அதனால் அவர் வியாச தேவர் மற்றும் நீங்கள் அவரது குழந்தைகள் சுகதேவன், நீங்கள் இப்பொழுது சுகதேவதை ஆகின்றீர்கள். சிவனின் குழந்தைகள் ஆகின்றீர்கள். அவரின் உண்மையான பெயர் சிவன். ஆத்மாவையும் தெரிந்து கொள்ள வேண்டும், வியாசர், சிவாச்சாரி இடமிருந்து சுகம் என்ற ஆஸ்தியை எடுத்துக் கொண்டிருக்கின்றீர்கள். வியாசரின் குழந்தைகள் நீங்கள்! ஆனால் நீங்கள் குழப்பம் அடையக் கூடாது ஆகையால் தான் சிவனின் குழந்தைகள் என்று கூறுகின்றோம். அவருடைய உண்மையான பெயர் சிவன். ஆத்மாவை அறிந்து கொள்ள வேண்டும், பரமாத்மாவையும் அறிந்து கொள்ள வேண்டும். அவர் தான் பதீதமானவர்களை வந்து பாவனம் ஆவதற்கான வழியைக் கூறுகின்றார். நான் ஆத்மாக்களாகிய உங்களுக்கு தந்தையாக உள்ளேன் என்று கூறுகின்றார். நான் கட்டை விரல் போல் உள்ளேன் என்று கூறுகின்றனர். இவ்வளவு பெரியவராக இருந்தால் இங்கே உட்கார முடியாது. அவர் மிகவும் சூட்சமமாக இருக்கின்றார். ஆத்மாவைப் பார்பதற்காக- டாக்டர்களும் தலை உடைத்துக் கொள்கின்றார்கள். ஆனால் பார்க்க முடிவதில்லை. ஆத்மாவை உணர வேண்டும். இப்பொழுது நீங்கள் ஆத்மாவை உணர்ந்தீர்களா? என்று பாபா கேட்கின்றார். இவ்வளவு சிறிய ஆத்மாவில் அழியாத நடிப்பு பதிவாக்கப்பட்டுள்ளது. ரிக்கார்டு போல் பதிவாக்கப்பட்டுள்ளது. முதலில் நீங்கள் தேக அபிமானத்தில் இருந்தீர்கள், இப்பொழுது நீங்கள் ஆத்மா அபிமானி ஆகிவிட்டீர்கள். நம்முடைய ஆத்மா 84 ஜென்மம் எப்படி எடுக்கின்றது என்று நீங்கள் அறிவீர்கள். அதற்கு முடிவே கிடையாது. இந்த நாடகம் எப்பொழுது இருந்து ஆரம்பம் ஆனது என்று சிலர் கேட்கின்றார்கள். ஆனால் இது அனாதி, இது ஒருபோதும் அழிவதே இல்லை. இதைத்தான் ஏற்கனவே உருவாக்கப்பட்ட அழியாத உலக நாடகம் என்று கூறப்படுகின்றது. உலகத்தைக் கூட நீங்கள் அறிவீர்கள். படிக்காத குழந்தைகளுக்கு எப்படி கல்வி புகட்டப்படுகின்றது. அது போல பாபா குழந்தைகளாகிய உங்களுக்கு கற்பிக்கின்றார். ஆத்மாதான் இந்த உடல் மூலமாக படிக்கின்றது. இது கல் புத்திக்கான உணவு. புத்திக்கு அறிவு கிடைக்கின்றது. குழந்தைகளுக்காகத் தான் பாபா இந்த படங்களை உருவாக்கியுள்ளார். மிகவும் எளிதாக உள்ளது. திரிமூர்த்தி பிரம்மா, விஷ்ணு, சங்கரர், இப்பொழுது பிரம்மாவை திரிமூர்த்தி என்று ஏன் சொல்லப்படுகின்றது! தேவ்-தேவ் மகாதேவ்! என்று புகழ் பாடுகின்றார்கள். ஒருவருக்கு மேல் ஒருவரை புகழ்பாடுகின்றனர். ஆனால் அர்த்தம் ஒன்றும் புரிந்து கொள்வதில்லை. இப்பொழுது பிரம்மா எப்படி இருக்க முடியும், பிரம்மாவை பிரஜாபிதா என்று கூறுகின்றார்கள். அப்படியென்றால், சூட்சும லோகத்தில் தேவதை எப்படி இருக்க முடியும்? பிரஜாபிதா இங்கே தானே வேண்டும். இந்த விஷயங்கள் எந்த சாஸ்த்திரத்திலும் கிடையாது. நான் இந்த உடலில் பிரவேசம் செய்து இவர் மூலமாக புரிய வைக்கின்றேன், இவரை என்னுடைய ரதமாக ஆக்குகின்றேன். இவரின் அநேக ஜென்மத்தின் கடைசியில் நான் வருகின்றேன் என்று பாபா கூறுகின்றார். இவர் கூட ஐந்து விகாரத்தை தியாகம் செய்கின்றார். சன்யாசம் செய்பவர்களை யோகி, ரிஷி என்று கூறப்படுகின்றது. இப்பொழுது நீங்கள் இராஜரிஷியர்க உள்ளீர்கள். நீங்கள் உறுதிமொழி கொடுக்கின்றீர்கள். உலகில் உள்ள சன்யாசிகள் வீட்டை விட்டுச் செல்கின்றார்கள். இங்கே ஆண்-பெண் இருவரும் ஒன்றாக இருக்கின்றார்கள். நாங்கள் ஒரு போதும் விகாரத்தில் போக மாட்டோம் என்று கூறுகின்றார்கள். விகாரம் தான் முக்கியமான விஷயமாகும். சிவபாபா புதிய உலகத்தைப் படைக்கின்றார் என்பது உங்களுக்குத் தெரியும். அவர் புதியதைப் படைக்கின்றார். அவர் விதை ரூபமாக இருக்கின்றார் சத்-சித்-ஆனந்தக்கடல், ஞானக்கடலாக இருக்கின்றார். ஸ்தாபனை, பாலனை, வினாச காரியங்களை எப்படி செய்கின்றார் - பாபா தான் அறிவார். இந்த விஷயங்களை மனிதர்கள் அறிய மாட்டார்கள். குழந்தைகள் நீங்கள் இப்பொழுது இந்த அனைத்து வியங்களையும் அறிந்து கொண்டீர்கள். ஆகையால் அனைவருக்கும் புரிய வைக்க முடியும். நல்லது.

இனிமையிலும்-இனிமையான செல்லமான குழந்தைகளுக்கு தாய்-தந்தை பாப்தாதாவின் அன்பு-நினைவுகள் மேலும் காலை வணக்கங்கள். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

தாரணைக்கான முக்கிய சாரம்:

1) ஒவ்வொருவரின் கணக்கு-வழக்கும் தனித்னியானது, ஆகையால் யார் சரீரம் விட்டாலும் அழக் கூடாது. முழுமையாக மோகத்தை அழிக்க வேண்டும். நமக்கு ஒரு பாபாவைத் தவிர வேறு யாரும் இல்லை என்பது புத்தியில் இருக்க வேண்டும்.

2) ஐந்து விகாரம் புத்தியை கெடுத்து விடுகின்றது , ஆதலால் அதனை தியாகம் செய்ய (நீக்கி விட) வேண்டும். சுகதேவதையாகி அனைவருக்கும் சுகம் கொடுக்க வேண்டும். யாருக்கும் துக்கம் கொடுக்கக்கூடாது

வரதானம்:

அனைத்து ஆத்மாக்களின் பதீத எண்ணங்களைஅதாவது உள்உணர்வுகளை பஸ்பம் செய்யக்கூடிய மாஸ்டர் ஞான சூரியன் பவ.

சூரியன் எப்படி தன்னுடைய கிரணங்களால் குப்பைகள், அழுக்கான பூச்சிகளை பஸ்பம் செய்து விடுகின்றதோ. அது போல நீங்கள் மாஸ்டர் ஞான சூரியனாகி எந்த ஒரு பதீத ஆத்மாவைப் பார்த்தீர்களென்றாலும் அவர்களின் பதீத எண்ணங்கள், பதீத உள் உணர்வுகள் மற்றும் பார்வை பஸ்பம் ஆகிவிடும். பதீத- பாவனி ஆத்மா மீது பதீத எண்ணங்கள் போர் செய்ய முடியாது. பதீத ஆத்மாக்கள் பதீத-பாவனிகளிடம் பலி ஆகிவிடுவார்கள். இதற்காக சக்தி விளக்காக (மைட் ஹவுஸ்) அதாவது ஞான சூரியன் என்ற நிலையில் சதா இருக்க வேண்டும்.

சுலோகன்:

தன்னை தாரணை சொரூபத்தால் யோகி வாழ்க்கையில் பிராபவத்தை ஏற்படுத்துவது தான்- மிகப் பெரிய சேவை ஆகும்.***ஓம் சாந்தி***