BK Murli 13 October 2016 Tamil

BK Murli 13 October 2016 Tamil

13.10.2016    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


இனிமையான குழந்தைகளே! மாயையிடம் பயப்படாதீர்கள். எவ்வளவுதான் மறக்க வைக்க முயற்சி செய்தாலும் மனம் தளர்ந்து விடாதீர்கள். அமிர்தவேளை எழுந்து நினைவில் இருப்பதற்கான முழுமையிலும் முழுமையான முயற்சி செய்யுங்கள்.கேள்வி:

முயற்சியில் முதல் நம்பர் எந்த குழந்தைகள் எடுக்கின்றனர்?பதில்:

யார் தந்தையின் மீது முழுமையிலும் முழுமையாக பலியாகின்றனரோ அதாவது அர்ப்பணம் ஆகின்றனரோ அவர்கள்தான் அனைவரையும் விட முன்னால் செல்கின்றனர். தந்தையிடம் குழந்தைகள் பலியாகின்றனர், குழந்தைகள் மீது தந்தை பலியாகிறார். நீங்கள் உங்களுடைய குப்பை (அசுத்தமானவை) பழைய உடல்-மனம்-பொருள் அனைத்தும் தந்தைக்கு கொடுக்கிறீர்கள் மற்றும் தந்தை உங்களுக்கு உலகின் இராஜ்யத்தைக் கொடுக்கிறார், ஆகையால் அவர் ஏழைப்பங்காளர் எனப்படுகிறார். ஏழையான பாரதத்திற்குத்தான் தானம் கொடுக்க தந்தை வந்துள்ளார்.பாடல்:

கண்ணற்றவர்களுக்கு வழி காட்டுங்கள். . .ஓம் சாந்தி.

இனிமையிலும் இனிமையான, மிக இனிமையான, இப்படி சொல்வார்கள் அல்லவா! எல்லைக்கப் பாற்பட்ட தந்தை மற்றும் எல்லைக்கப்பாற்பட்ட அன்பு. இனிமையான, காணாமல் கண்டெடுத்த செல்லக் குழந்தைகள் பாடலைக் கேட்டீர்கள் அல்லவா என கேட்கிறார். ஒரு தந்தைதான் வழியைக் காட்டுகிறார். பக்தி மார்க்கத்தில் வழி காட்டக் கூடியவர்கள் யாரும் கிடையாது. அங்கேயே வழி தெரியாமல் அலைந்து கொண்டே இருக்கின்றனர். இப்போது வழி என்னவோ கிடைக்கவே செய்கிறது, ஆனாலும் மாயை தந்தையுடன் புத்தியின் தொடர்பை ஏற்படுத்த விடுவதில்லை. ஒரு தந்தையை நினைவு செய்வதன் மூலமே நம்முடைய துக்கம் அனைத்தும் நீங்கும், கவலைப்படுவதற்கான விசயம் எதுவும் கிடையாது என புரிந்து கொள்ளவும் செய்கின்றனர், என்றாலும் மறந்து விடுகின்றனர். தன்னை ஆத்மா என புரிந்து கொண்டு பதீத பாவன தந்தையாகிய என்னை நினைவு செய்யுங்கள் என தந்தை சொல்கிறார். தந்தை ஞானக்கடல் அல்லவா. அவர்தான் கீதா ஞானத்தின் வள்ளல் ஆவார். சொர்க்கத்தின் இராஜ்யம் அல்லது சத்கதியை கொடுக்கிறார். கிருஷ்ணரை ஞானக்கடல் என சொல்ல முடியாது. கடல் ஒன்றுதான் இருக்கும். இந்த பூமியின் நாலாபுறங்களிலும் கடலே கடல் சூழ்ந்துள்ளது. முழுவதும் ஒரே கடல்தான் ஆகும். பிறகு அது பிரிக்கப்பட்டு விட்டது. நீங்கள் உலகின் எஜமானாக ஆகும்போது முழு கடல், பூமி என அனைத்திற்கும் எஜமான் ஆகிறீர்கள். இது எங்களுடைய எல்லை, எங்களுடைய எல்லைக்குள் வரக்கூடாது என யாரும் சொல்ல மாட்டார்கள். இங்கே கடலில் கூட எத்தனை துண்டுகளாக ஆக்கி விட்டனர். முழு உலகமே பாரதமாக இருந்தது, அதற்கு நீங்கள் எஜமானாக இருந்தீர்கள் என நீங்கள் புரிந்திருக்கிறீர்கள். பாபா, உங்களிடமிருந்து நாங்கள் யாராலும் பறித்துக் கொள்ள முடியாத உலகின் இராஜ்யத்தை அடைகிறோம் என பாடலும் உள்ளதல்லவா. இங்கே பாருங்கள் தண்ணீருக்காகவும் கூட சண்டை நடக்கிறது. ஒருவர் மற்றவருக்கு தண்ணீர் கொடுப்பதற்காகவும் கூட இலட்சக்கணக்கில் பணம் கொடுக்க வேண்டியிருக்கிறது. குழந்தைகளாகிய உங்களுக்கு முழு உலகின் இராஜ்யம் கல்பத்திற்கு முன்பு போல கிடைத்துக் கொண்டிருக்கிறது. தந்தை ஞானத்தின் மூன்றாம் கண்ணைக் கொடுத்திருக்கிறார். ஞானத்தின் வள்ளல் பரமபிதா பரமாத்மாவே ஆவார். இந்த சமயத்தில் வந்து ஞானத்தைக் கொடுக்கிறார். சத்யுகத்தில் லட்சுமி நாராயணரிடம் இந்த ஞானம் இருக்காது. ஆம், முந்தைய பிறவியில் ஞானம் எடுத்து இப்படி ஆனார்கள் என வேண்டுமானால் சொல்லலாம். நீங்கள்தான் அப்படி இருந்தீர்கள். பாபா நீங்கள் அதே தந்தைதான் என நீங்கள் சொல்கிறீர்கள். நீங்கள் எங்களை உலகின் எஜமானாக ஆக்கியிருந்தீர்கள். என்னுடைய வழி ஏதும் மிக நீண்டது கடினமானது அல்ல. அந்த படிப்பு (உலகில் படிக்கும் படிப்பு) எவ்வளவு நீண்டதாக கடினமாக உள்ளது. இந்த படிப்பு மிகவும் சகஜமானதே. படைப்பவர் மற்றும் படைப்பின் முதல், இடை, கடைசியை நீங்கள் அறிந்து கொண்டு மற்றவர் களுக்கும் கூறிக்கொண்டு இருக்கிறீர்கள். எப்படி 84 பிறவிகளின் சக்கரத்தைச் சுற்றினோம். இப்போது தந்தையிடம் திரும்பிச் செல்ல வேண்டும். இதையும் தந்தை சொல்லியிருக்கிறார் - மாயையின் புயல்கள் நிறைய வரும், இதைக் கண்டு பயப்படாதீர்கள். அதிகாலை எழுந்து அமர்ந்தால் புத்தி வேறு ஏதேதோ சிந்தனைகளில் சென்று விடும். இரண்டு நிமிடங்கள் கூட நினைவு இருக்காது. களைத்து விடாதீர்கள் என தந்தை சொல்கிறார். நல்லது, ஒரு நிமிடம் நினைவு இருந்தது, பிறகு நாளை உட்காருங்கள், நாளை மறுநாள் உட்காருங்கள். நாம் நினைவு செய்ய வேண்டும் என உள்ளுக்குள் கண்டிப்பாக மிகவும் உறுதியாக்குங்கள். யாராவது விகாரத்தில் சென்று கொண்டிருந்தால் பிறகு புயல்கள் நிறைய வரும். தூய்மைதான் முக்கியமாகும். இன்று இந்த உலகம் தூய்மை இழந்து விஷம் நிறைந்து உள்ளது. நாளை தூய்மையான சிவாலயமாக ஆகப் போகிறது. இது பழைய சரீரம் என அறிவீர்கள். தந்தையை நினைவு செய்து கொண்டே இருந்தீர்கள் என்றால் அந்த நேரத்தில் சரீரம் விடுபட்டுவிட்டால் சொர்க்கத்திற்குச் செல்லத் தகுதி வாய்ந்தவர்களாக ஆகிவிடுவீர்கள். தந்தையிடம் கொஞ்சமாவது ஞானத்தைக் கேட்டிருக்கிறீர்கள் அல்லவா. இங்கிருந்து விலகிச் சென்று பிறகு மீண்டும் வந்து தம்முடைய ஆஸ்தியை எடுத்துக் கொண்டிருப்பவர்களும் உள்ளனர். கடைசி மன நிலைக்குத் தக்க கதி ஏற்படும் என்பதையும் புரிய வைத்திருக்கிறார். யாராவது சரீரத்தை விட்டார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள், அவர்கள் ஞானத்தின் சம்ஸ்காரத்தை எடுத்துச் செல்வதால் சிறு வயதிலேயே இந்தப் பக்கம் ஈர்ப்பு இருக்கும். கர்மேந்திரியங்கள் சிறியதாய் இருக்கலாம், பேச முடியாமல் இருக்கலாம், ஆனால் ஈர்க்கப் படுவார்கள். சிறு வயதிலிருந்தே நல்ல சம்ஸ்காரம் இருக்கும். சுகமிக்கவர்களாக இருப்பார்கள். ஆத்மாவுக்குத்தான் தந்தை கற்றுத் தருகிறார் அல்லவா. இராணுவத்தில் இருப்பவர்களின் உதாரணத்தை தந்தை கொடுப்பது போல - சம்ஸ்காரம் எடுத்துச் சென்றால் பிறகு யுத்தத்தில் சென்று சேர்ந்து விடுவார்கள். சாஸ்திரம் படிப்பவர்கள் சம்ஸ்காரத்தை எடுத்துச் சென்றால் சிறு வயது முதலேயே சாஸ்திரங்களை மனனம் செய்து விடுகின்றனர். அவர்களுடைய மகிமையும் வெளிப்படு கின்றன. ஆக, இங்கிருந்து செல்பவர்களுக்கு சிறு வயதிலேயே மகிமை வெளிப்படும். ஆத்மாதான் ஞானத்தை தாரணை செய்கிறதல்லவா. மீதியிருக்கும் கணக்கு வழக்கை முடிக்க வேண்டியிருக்கும். சொர்க்கத்தில் என்னவோ வருவார்கள் அல்லவா. தந்தையிடம் வந்து வணக்கம் (மரியாதை) செலுத்துவார்கள். அளவற்ற பிரஜைகள் உருவாகி விடுவார்கள். தந்தையிடமிருந்து ஆஸ்தி எடுப்பார்கள். ஆஹா பிரபு உங்களின் லீலையே லீலை, என கடைசி காலத்தில் சொன்னார்கள் அல்லவா.ஆஹா பாபா உங்களின் லீலை நாடகத்தின் திட்டப்படி இப்படி உள்ளது, பாபா உங்களின் செயல் அனைத்து மனிதர்களிடமிருந்தும் வித்தியாசமானது என இப்போது நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். யார் தந்தையின் சேவையை நன்றாகச் செய்கின்றனரோ அவர்களுக்கு பிறகு மிக நல்ல பரிசும் கூட கிடைக்கும். வெற்றி மாலையில் உருட்டப்படுகின்றனர். இது ஆன்மீக ஞானம், இதை தந்தையான ஆத்மா, ஆத்மாக்களுக்கு கற்றுக் கொடுக்கிறார். மனிதர்கள் அனைவருமே சரீரங்களைத்தான் நினைவு செய்வார்கள், சிவானந்தா, கங்கேஷ்வரானந்தா. ... முதலானவர்கள் இந்த ஞானத்தை கொடுக்கின்றனர் என சொல்வார்கள். இங்கேயோ நிராகார சிவபாபா ஞானத்தைக் கொடுக்கிறார் என சொல்வோம். நான் உயர்ந்தவரிலும் உயர்ந்தவனாக இருக்கிறேன். ஆத்மாவாகிய என்னுடைய பெயர் சிவன் என்பதாகும். சிவ பரமாத்மாய நமஹ என சொல்கின்றனர். பிறகு பிரம்மா, விஷ்ணு, சங்கரரை தேவதாய நமஹ என சொல்வார்கள், இவர்களும் படைப்புகள்தான், அவர்களிடமிருந்து எந்த ஆஸ்தியும் கிடைக்காது. நீங்கள் ஒருவருக்கொருவர் சகோதர-சகோதரனாக இருக்கிறீர்கள். சகோதரனை நினைவு செய்வதன் மூலம் ஆஸ்தி கிடைக்காது. இவர் (பிரம்மா தாதா) கூட உங்கள் சகோதரர் ஆவார், மாணவர் அல்லவா. படித்துக் கொண்டிருக்கிறார், இவரிடமிருந்து எந்த ஆஸ்தியும் கிடைக்காது. இவரும் கூட சிவபாபாவிடமிருந்து ஆஸ்தியை அடைந்து கொண்டிருக்கிறார். முதலில் இவர் கேட்கிறார். பாபா நான் (பிரம்மா) உங்களுடைய முதன் முதல் குழந்தை ஆவேன் என தந்தைக்குச் சொல்கிறேன். உங்களிடமிருந்து நான் கல்பம் தோறும் ஆஸ்தி எடுக்கிறேன். கல்பம் தோறும் உங்களுடைய ரதமாக ஆகிறேன். சிவனின் ரதம் பிரம்மா. பிரம்மாவின் மூலம் விஷ்ணுபுரியின் ஸ்தாபனை. பிராமணராகிய நீங்கள் கூட உதவியாளர்கள், பிறகு நீங்கள் எஜமான் ஆகிறீர்கள். நாம் 5 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு போல தந்தையின் மூலம் இராஜ்ய பாக்கியத்தை அடை கிறோம் என நீங்கள் அறிவீர்கள், யார் கல்பத்திற்கு முன்பு இராஜ்ய பாக்கியத்தை எடுத்திருக்கின்றனரோ அவர்களே வருவார்கள். ஒவ்வொருவரின் முயற்சியின் மூலம் தெரிந்து விடும் - யார் மகாராஜா – மகாராணி ஆவார்கள், யார் பிரஜைகள் ஆவார்கள் என்பது. கடைசி சமயத்தில் உங்களுக்கு அனைத்தும் காட்சிகளில் தெரியும். அனைத்திற்கும் ஆதாரம் முயற்சியில் உள்ளது. பலியாகவும் வேண்டியுள்ளது. நான் ஏழைப்பங்காளன் என தந்தை சொல்கிறார். ஏழைகளாகிய நீங்கள்தான் என் மீது பலியாகிறீர்கள். ஞானம் எப்போதும் ஏழைகளுக்குத் தான் கொடுக்கப்படுகிறது. யாராவது கல்லூரியை கட்டுகிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள், அது ஏதோ ஏழைகளுக்கு தானம் கொடுத்ததாகாது. நீங்கள் தந்தைக்கு தானம் கொடுக்கிறீர்கள். தந்தை உங்களுக்கு தானம் கொடுக்கிறார். உங்களிடமிருந்து சோழிகளைப் பெற்று உங்களுக்கு உலகின் இராஜ்யத்தை கொடுக்கிறார். இந்த சமயம் நீங்கள் உடல், மனம், பொருள் அனைத்தும் தந்தைக்கு தானமாக கொடுக்கிறீர்கள். அந்த மனிதர்கள் இறக்கும்போது உயில் எழுதி விட்டுச் செல்கின்றனர். இன்ன ஆசிரமத்திற்கு கொடுக்க வேண்டும் அல்லது இந்த ஆரிய சமாஜம் எடுத்துக் கொள்ளட்டும். உண்மையில் ஏழைகளுக்கு தானம் கொடுக்க வேண்டும், அவர்கள் பசித்திருப்பார்கள். இப்போது பாரதம் ஏழையாக உள்ளதல்லவா. சொர்க்கத்தில் பாரதம் எவ்வளவு பணக்கார தேசமாக இருக்கும். அங்கே எந்த அளவு தானியம், தனம் முதலானவை உங்களிடம் இருக்குமோ அந்த அளவு யாரிடமும் இருக்க முடியாது என நீங்கள் அறிவீர்கள். அங்கே எதற்கும் விலை கொடுக்க வேண்டியதில்லை. கைப்பிடி அவலை தானம் செய்கிறீர்கள், அதன் பிரதிபலனாக 21 பிறவிகளுக்கு மாளிகைகள் கிடைத்து விடுகின்றன. நிலமும் கிடைக்கும். இப்போது தத்துவங்களும் கூட தமோபிரதானமாக இருப்பதன் காரணமாக துக்கத்தை கொடுக்கின்றன, அங்கே தத்துவங்கள் சதோபிரதானமாக இருக்கும். சத்யுகத்தில் யார் யார் வருவார்கள் என நீங்கள் அறிவீர்கள். பிறகு துவாபரத்தில் இன்ன இன்னார் வருவார்கள். கலியுகத்தின் கடைசியில் சின்னச் சின்ன இலை, கிளைகள், மடாதிபதிகள், தர்மத் தலைவர்கள் முதலானவர்கள் உருவாக்கிக் கொண்டே இருக்கின்றனர் அல்லவா. இப்போது உங்களுடைய புத்தியில் கல்ப மரம், நாடகம் முதலானவற்றின் ஞானம் உள்ளது. தந்தையின் நடிப்பைப் பற்றியும் அறிவீர்கள். மகாபாரதச் சண்டையில் காட்டுகின்றனர் – 5 பாண்டவர்கள் தப்பித்தனர். நல்லது, பிறகு என்ன ஆயிற்று? கண்டிப்பாக யார் இராஜயோகத்தை கற்றனரோ, அவர்களே சென்று இராஜ்யம் செய்வார்கள் அல்லவா. முன்னர் நீங்களும் கூட எதையும் அறிந்திருக்கவில்லை. பாபாவும் கூட கீதை முதலானவற்றைப் படித்துக் கொண்டிருந்தார். நாராயணர் மீது பக்தி செய்து கொண்டிருந்தார். கீதையின் மீதும் மிகவும் அன்பாக இருந்தார். இரயில் வண்டியில் சென்று கொண்டிருந்த போதும் கூட கீதை படித்துக் கொண்டிருந்தார். இப்போது பார்க்கிறார், கொஞ்சமும் புரியவில்லை. டப்பாவில் வெறும் உடைந்து போன துண்டுப் பொருட்கள் இருந்தது போல உணர்கிறார். பக்தி மார்க்கத்தில் என்னவெல்லாம் செய்தபடி வந்தார், ஆனால் அதனால் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. உலகில் எவ்வளவு சண்டைகள் உள்ளன. இங்கும் கூட அனைவரும் தூய்மையடைய முடியாது, ஆகையால் சண்டை உண்டாகிறது. தந்தை அடைக்கலமும் கொடுக்கிறார், பிறகு சொல்கிறார் - நோய் மீண்டும் தீவிரமாக வெளி வரும். குழந்தைகள் முதலானவர்களின் நினைவு வரும், இதில் மோகத்திலிருந்து விடுபட்டவராக ஆகவேண்டியிருக்கிறது. நாம் இறந்து விட்டோம் என புரிந்து கொள்ள வேண்டும். தந்தையுடையவர்களாகி விட்டோம் என்றால் இந்த உலகிலிருந்து இறந்து விட்டோம். பிறகு சரீரத்தின் உணர்வு இருக்காது. தந்தை சொல்கிறார் - தேகத்துடன் சேர்த்து அனைந்து சம்மந்தங்களையும் மறந்து விட வேண்டும். இந்த உலகில் எதையெல்லாம் பார்க்கிறீர்களோ, அவை எதுவும் இல்லை என்பது போலாகும். இந்த பழைய சரீரத்தையும் கூட விட வேண்டும். நாம் வீட்டுக்குச் செல்ல வேண்டும். வீட்டிற்குச் சென்று பிறகு வந்து புதிய அழகான உடலை எடுப்போம். இப்போது சியாம் (கருப்பாக) இருக்கிறீர்கள், பிறகு சுந்தரமாக (அழகாக) ஆகப் போகிறீர்கள். பாரதம் இப்போது சியாமாக இருக்கிறது. பிறகு சுந்தரமாக ஆகப் போகிறது. இப்போது பாரதம் முள் நிறைந்த காடாக உள்ளது. ஒருவர் மற்றவரை குத்தியபடி இருக்கின்றனர். எந்த விஷயத்திலாவது கோபித்துக் கொண்டுவிட்டால் நிந்தனை செய்கின்றனர், சண்டையிட்டுக் கொள்கின்றனர். குழந்தைகளாகிய நீங்கள் வீட்டிலும் கூட மிகவும் இனிமையானவராக ஆகவேண்டும். இல்லா விட்டால் இவர் 5 விகாரங்களை தானம் கொடுத்துள்ளார், பிறகு ஏன் கோபித்துக் கொள்கிறார் என சொல்வார்கள். கோபத்தை தானம் கொடுக்கவில்லை போலும். தந்தை சொல்கிறார் - குழந்தைகளே, பையில் (ஒட்டு மொத்தமாக) 5 விகாரங்களை தானமாக கொடுத்துவிடுங்கள், அப்போது உங்களுடைய கிரஹணம் விடுபட்டுவிடும். சந்திரனுக்கு கிரகணம் பிடிக்கிறதல்லவா. நீங்களும் கூட இப்போது சம்பூரணம் அடைகிறீர்கள் என்றால் இந்த விகாரங்களை தானமாக கொடுத்து விடுங்கள் என தந்தை சொல்கிறார். உங்களுக்கு சொர்க்கத்தின் இராஜ்யம் கிடைக்கும். ஆத்மாவுக்கு தந்தையிடமிருந்து ஆஸ்தி கிடைக்கிறது. இந்த பழைய உலகின் ஆயுள் இன்னும் கொஞ்ச நேரம் மிகுந்திருக்கிறது என ஆத்ம சொல்கிறது. வேலை பற்றிய நினைவுகளை நீக்க வேண்டும். எந்த சிந்தனைகள் இருந்தாலும் நீக்க வேண்டும். பல விதமான சிந்தனைகள் வரவே செய்யும் என பாபாவுக்குத் தெரியும். தொழில் சம்மந்தமான சிந்தனைகள் வரும். பக்தி மார்க்கத்தில் பக்தி செய்யும் நேரத்தில் வாடிக்கையாளர்கள், தொழில் முதலானவைகளின் நினைவு வரும்போது தன்னை விரல்களால் கிள்ளிக் கொள்வார்கள். நான் நாராயணனின் நினைவில் அமர்ந்திருக்கிறேன், பிறகு இந்த விஷயங்கள் ஏன் நினைவுக்கு வருகின்றன! இங்கும் கூட அப்படி நடக்கிறது. இந்த ஆன்மீக சேவையில் நல்ல விதமாக ஈடுபட்டு விட்டால் பிறகு புரிய வைக்கப்படுகிறது - நல்லது, வேலை தொழிலை விட்டு விடுங்கள். பாபாவின் சேவையில் ஈடுபட்டு விடுங்கள். நீங்கள் விட்டால் அதுவும் விடுபடும் என சொல்கின்றனர். தேக அபிமானத்தை விட்டபடி இருங்கள். தந்தையை நினைவு மட்டும் செய்தீர்கள் என்றால் குரங்கிலிருந்து கோவில்களில் மூர்த்தியாகத் தகுந்தவர் ஆகி விடுவீர்கள். குளவியின், ஆமையின் உதாரணங்களையும் கூட தந்தை கூறுகிறார், அதனை பிறகு பக்தி மார்க்கத்தில் அவர்கள் உதாரணமாகக் கொடுக்கின்றனர். இப்போது புழுக்கள் யார் என நீங்கள் அறிவீர்கள். நீங்கள் பிராமணிகளாக இருக்கிறீர்கள். நீங்கள் பூம் பூம் செய்கிறீர்கள். இந்த உதாரணம் இப்போதையதாகும். பண்டிகை முதலான அனைத்தும் இந்த சமயத்தினுடையதாகும், சத்யுகம், திரேதாவில் எந்த பண்டிகையும் இருப்பதில்லை. இவையனைத்தும் பக்தி மார்க்கத்தினுடையதாகும். இப்போது பாருங்கள் - கிருஷ்ண ஜெயந்தி இருந்தது. மண்ணாலான கிருஷ்ணரை உருவாக்கினார்கள், அவருக்கு பூஜை செய்து ஆற்றில் மூழ்கடித்து விட்டனர். இவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். இது குருட்டு நம்பிக்கை ஆகும். நீங்கள் யாருக்காவது புரிய வைத்தீர்கள் என்றால் அவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள். யாருக்காவது நோய் முதலானவை ஏற்பட்டது என்றால் அப்போது சொல்வார்கள் - பாருங்கள், நீங்கள் கிருஷ்ணரின் பூஜையை விட்டு விட்டீர்கள், ஆகையால் இந்த நிலை ஏற்பட்டது. ஆச்சரியப்படும்படியாக கேட்டு, பிறருக்கு எடுத்து, சொல்லி, விலகிப்போய் விடுகின்றனர். ஆகையால் பிராமணரின் மாலை உருவாக முடியாது. உயர்ந்தவரிலும் உயர்ந்தவர்கள் இந்த பிராமண குல பூஷணர்கள். ஆனால் அவர்களின் மாலை உருவாக முடியாது. இது சிவபாபாவின் மாலை என்பது உங்கள் புத்தியில் உள்ளது, பிறகு நாம் சென்று சத்யுகத்தில் வரிசைக்கிரமமாக விஷ்ணுவின் மாலையின் மணியாக ஆவோம். உங்களின் ஒவ்வொரு வார்த்தையும் யாரும் புரிந்து கொள்ள முடியாததாக உள்ளது. தந்தை கற்பித்துக் கொண்டு இருக்கிறார். வளர்ச்சி அடைந்து கொண்டு இருக்கின்றனர். கண்காட்சிகளில் எவ்வளவு பேர் வருகின்றனர். நாங்கள் வந்து புரிந்து கொள்கிறோம் என சொல்லவும் செய்கின்றனர், பிறகு வீட்டுக்குச் சென்றுவிட்டால் அவ்வளவுதான். அங்கே உள்ளது அங்கேயே நின்று விட்டது. பிரபுவை சந்திப்பதற்கான மிக நல்ல வழியை சொல்லிக் கொடுக்கின்றனர் என சொல்கின்றனர். ஆனால் நாம் அதன்படி செல்வோம், ஆஸ்தியை எடுப்போம் என புத்தியில் வருவதில்லை. பிரம்மாகுமாரிகள் மிக நல்ல சேவை செய்கின்றனர். அவ்வளவுதான். அட நீங்களும் புரிந்து கொள்ளுங்களேன். ஸ்தூலமான சேவை செய்தபடி இருக்கிறீர்கள். இப்போது இந்த ஆன்மீக சேவை செய்யுங்கள். சமூக சேவையை அனைத்து மனிதர்களும் செய்தபடி இருக்கின்றனர். இலவசமாக யாரும் சேவை செய்வதில்லை. இல்லாவிட்டால் எங்கிருந்து சாப்பிடுவார்கள்? இப்போது குழந்தைகளாகிய நீங்கள் மிக நல்ல சேவை செய்து கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு பாரதத்தின் மீது மிகவும் இரக்கம் உள்ளது. நம்முடைய பாரதம் என்னவாக இருந்தது, பிறகு இராவணன் என்ன கதிக்கு கொண்டு வந்து விட்டான். இப்போது நாம் தந்தையின் ஸ்ரீமத்படி நடந்து கண்டிப்பாக ஆஸ்தி எடுப்போம்.நாம் சங்கமயுகத்தினர் என நீங்கள் அறிகிறீர்கள், மற்றவர்கள் அனைவரும் கலியுகத்தினர். நாம் அந்தக் கரைக்குச் சென்று கொண்டிருக்கிறோம். தந்தையின் நினைவில் நல்ல விதமாக இருப்பவர்கள் அப்படியே அமர்ந்தபடி நினைவு செய்தபடியே சரீரத்தை விட்டு விடுவார்கள். அவ்வளவுதான். பிறகு ஆத்மா திரும்பியே வரப்போவதில்லை. அமர்ந்தபடி தந்தையின் நினைவிலிருந்தபடி சென்றது. இங்கே ஹடயோகம் முதலானவற்றின் விஷயம் ஏதும் இல்லை. அமர்ந்தபடி அப்படியே தியானத்தில் (காட்சிகள் பார்க்க) சென்று விடுவதை பார்க்கிறீர்கள்,, அது போல நீங்கள் அமர்ந்தபடியே இந்த சரீரத்தை விட்டு விடுவீர்கள். சூட்சும வதனத்திற்குச் சென்று பிறகு தந்தையிடம் சென்று விடுவீர்கள். நினைவின் யாத்திரையின் முயற்சியை நிறைய செய்பவர்கள், அப்படியே சரீரத்தை விட்டு விடுவார்கள், காட்சிகள் ஏற்படும். ஆரம்பத்தில் உங்களுக்கு நிறைய காட்சிகள் தெரிந்தது, அதுபோல கடைசியிலும் கூட நிறைய காட்சிகளை பார்க்கப் போகிறீர்கள். நல்லது!இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.தாரணைக்கான முக்கிய சாரம் :

1. கோவில்களில் மூர்த்தியாகத் (பூஜிக்கத்) தகுந்தவர் ஆவதற்காக தேக அபிமானத்தை விட்டு விட வேண்டும். ஆன்மீக சேவையில் ஈடுபட்டு விட வேண்டும்.2. இப்போது வீட்டுக்குச் செல்ல வேண்டிய நேரமாகும். ஆகையால் இருக்கும் கணக்கு வழக்குகளை, வேலை, தொழில்களின் சிந்தனைகளை நீக்க வேண்டும். நினைவின் யாத்திரையில் செல்லும் முயற்சி செய்ய வேண்டும்.வரதானம் :

விருந்தினராக வந்துள்ளோம் என்ற உள்ளுணர்வின் மூலம் இல்லறத்தை (ஸ்தூல வாழ்க்கை) உயர்வாக, நிலையை மேலானதாக ஆக்கக் கூடிய எப்போதும் விடுபட்டவர் ஆகுக.தன்னை விருந்தினார் என நினைத்து செல்பவர்கள் தமது தேகம் எனும் வீட்டின் மீதும் மோகமற்றவர் ஆகி விடுகின்றனர். விருந்தினருக்கு தனது என எதுவும் இருக்காது. காரியத்தில் அனைத்து பொருட்களையும் ஈடுபடுத்துவார்கள், ஆனால் தனது எனும் பாவனை இருக்காது. அவர்கள் அனைத்து சாதனங்களையும் தனதாக்கியபடி இருந்தாலும் எந்த அளவு விடுபட்டவராக இருக்கின்றனரோ அந்த அளவு தந்தைக்கு அன்பானவராக இருப்பார்கள். தேகம், தேகத்தின் சம்மந்தம் மற்றும் பொருட்களிலிருந்து சகஜமாக விடுபட்டவராக ஆகி விடுகின்றனர். எந்த அளவு விருந்தினர் என்ற உள்ளுணர்வு இருக்குமோ அந்த அளவு இல்லறம் உயர்வாகவும் நிலை மேலானதாகவும் இருக்கும்.சுலோகன் :

தனது சுபாவத்தை சுத்தமானதாக (நிர்மலமாக) ஆக்கிக் கொண்டீர்கள் என்றால் ஒவ்வொரு காலடியிலும் வெற்றி அடங்கி இருக்கும்.***OM SHANTI***