BK Murli 15 October 2016 Tamil

BK Murli 15 October 2016 Tamil

15.10.2016    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


இனிமையான குழந்தைகளே! இப்பொழுது இந்த பழைய உலகத்தின் இறுதி (நேரம்) ஆகும். ஆகையால், சங்கமயுகத்தில் நீங்கள் வருங்கால இராஜ்யத்திற்குத் தகுதியானவர் ஆகவேண்டும்.கேள்வி:

குழந்தைகளிடம் என்ன ஆர்வம் இருந்தால் சிம்மாசனதாரி ஆக முடியும்?பதில்:

ஆல்ரவுண்ட் (எல்லாவித) சேவையையும் செய்வதற்கான ஆர்வம் இருந்தால் சிம்மாசனதாரி ஆக இயலும். யார் ஆல்ரவுண்ட் சேவை செய்து அனேகருக்கு சுகம் கொடுக்கின்றனரோ, அவர்களுக்கு அதற்கான பிரதிபலன் கூட கிடைக்கிறது. குழந்தைகள் எப்பொழுதும் ஒவ்வொரு சேவையிலும் ஆஜராக இருக்க வேண்டும். தாய் தந்தையை வெளிப்படுத்தும்படியாக சாமர்த்தியசாலி ஆகுங்கள். மம்மா பாபா என்று கூறுகிறீர்கள் என்றால் அவர்களைப் போல் ஆகிக்காட்டுங்கள்.பாடல்:

இந்த பாவ உலகத்திலிருந்துஓம்சாந்தி!

பாவ உலகம் மற்றும் புண்ணிய உலகம் என்று எதை சொல்லப்படுகிறது என்பதை இனிமையிலும் இனிமையான பிரம்மா குமாரர்கள், குமாரிகள் மட்டும் தான் அறிந்திருக்கின்றீர்கள். எதை தூண்மையில்லா உலகம் என்றும், எதை தூய்மையான உலகம் என்றும் கூறப்படுகிறது? ஹே! தூய்மை இழந்த உலகத்தை தூய்மையாக ஆக்குபவரே வாருங்கள் என்று மனிதர்கள் அழைக்கின்றனர், எனினும், அறிந்திருக்கவில்லை.ஹே! பதீத பாவனரே என்று கூட ஆத்மா தான் சொல்கின்றது. மனிதர்கள் அனைவரும் அழைத்துக் கொண்டே இருக்கின்றனர். ஆனால், தூய்மையான உலகம் என்று எதை சொல்லப்படுகிறது என்று எவருக்கும் தெரியாது. அது எப்பொழுது மற்றும் எப்படி ஸ்தாபனை ஆகும்? இப்பொழுது நீங்கள் ஞானம் நிறைந்தவரான தந்தை யினுடையவர் ஆகி இருக்கிறீர்கள். ஆகையால் ஞானம் நிறைந்தவரான ஞானக்கடல் தந்தையை நீங்கள் மட்டும் தான் அறிந்திருக்கிறீர்கள். தூய்மையான உலகம் பின்னர் எவ்வாறு தூய்மை இல்லாததாகின்றது என்பதை வேறு எவரும் முற்றிலும் அறியவில்லை. தூய்மையற்ற உலகம் பின்னர் எவ்வாறு தூய்மை ஆகின்றது? அசுத்தமான உலகில் யார் இருக்கிறார்கள் மற்றும் சுத்தமான உலகில் யார் இருக்கின்றார்கள்? இந்த அனைத்து விசயங்களையும் நீங்கள் இப்பொழுது அறிந்திருக்கிறீர்கள். சத்யுகத்தை தூய்மையான உலகம் என்று சொல்லப்படுகிறது. தூய்மையான உலகம் நிச்சயம் பாரதத்தில் தான் இருந்தது. அப்பொழுது ஒரே ஒரு ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தின் இராஜ்யம் இருந்தது. ஆகையினால் பாரதம், அனைத்தையும் விட பழமையான தேசம் என்று புகழப்படுகிறது. நாம் மீண்டும் தூய்மையான உலகிற்குச் செல்வதற்காக பதீத பாவனர் தந்தை யுக்திகள் கூறிக்கொண்டு இருக்கின்றார் என்று இப்பொழுது நீங்கள் புரிந்திருக்கிறீர்கள். ஒரு வினாடியில் யுக்தியைச் சொல்கின்றேன் என்று தந்தை கூறுகின்றார். புது உலகத்தின் இராஜ்ய பாக்கியத்தை அளிப்பதற்காகவே தந்தை வருகின்றார். இது எல்லையற்ற தந்தையினுடைய எல்லையற்ற ஆஸ்தி ஆகும். தந்தை தான் வந்து இராஜயோகம் கற்பிக்கின்றார். நாம் இராஜயோகம் கற்றுக்கொண்டு இருக்கின்றோம். நீங்கள் தான் சதோபிரதானமாக இருந்தீர்கள், மீண்டும், சதோபிரதானமாக ஆகவேண்டும் என்று தந்தை கூறுகின்றார். ஆதி சனாதன தேவி தேவதா தர்மம் இருந்தது, ஹிந்து தர்மம் அல்ல. தேவி தேவதா தர்மம், பாரதத்தின் முதன்முதல் தர்மமாக இருந்தது. பிறகு, அவசியம் மறுபிறவி எடுத்து வந்திருப்பார்கள். கிறிஸ்தவர்களும் மறுபிறவி எடுத்து விருத்தி அடைகிறார்கள்.பௌத்தர்களின் தர்மத்தை ஸ்தாபனை செய்யக்கூடியவர் புத்தர், அவர் தர்ம ஸ்தாபகர் ஆவார். ஒரு புத்தர் மூலம் எத்தனை நிறைய பௌத்தர்கள் உருவாகிவிட்டனர்! ஒரு கிறிஸ்து இருந்தார். இப்பொழுது பாருங்கள், எத்தனை கிறிஸ்தவர்கள் ஆகிவிட்டனர். அனைத்து தர்மங்களும் அவ்வாறே நடந்து வந்திருக்கின்றன. எப்பொழுது ஆதி சனாதன தேவி தேவதா தர்மம் இருந்ததோ, அப்பொழுது வேறு எந்த தர்மமும் கிடையாது. மற்றதைப் (தர்மங்களை) பற்றி அறிந்திருக்கிறார்கள். கிறிஸ்துவ தர்மத்தை கிறிஸ்து, இஸ்லாமிய தர்மத்தை இப்ராஹிம் ஸ்தாபனை செய்தார்கள். நல்லது, சத்யுகத்தில் இருந்த ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தை யார் ஸ்தாபனை செய்தது? சத்யுகத்தில் தேவி தேவதைகளின் இராஜ்யம் நடந்தது அல்லவா! எனில், யாரேனும் ஒருவர் இராஜ்யத்தை ஸ்தாபனை செய்திருக்கிறார். சத்யுகத்தில் தேவி தேவதா தர்மம் இருந்தது. அதை இப்பொழுது தந்தை ஸ்தாபனை செய்கின்றார். ஆகையால், தந்தை, சங்கமயுகத்தில் வரவேண்டியதாக இருக்கிறது. இப்பொழுது அனைத்து மனிதர்களும் தூய்மை இல்லாத உலகில் இருக்கின்றார்கள். பழைய உலகில் கோடிக்கணக்கான மனிதர்கள் உள்ளனர். புது உலகிலோ இத்தனை மனிதர்கள் இருக்க இயலாது. அங்கு ஒரு தர்மம் இருந்தது. இஸ்லாமியர், பௌத்தர், கிறிஸ்துவர் முதலிய எவரும் இல்லை. அந்த தேவதா தர்மம் இப்பொழுது மறைந்துவிட்டது. அதை இறைவன் எவ்வாறு ஸ்தாபனை செய்தார் என்பது எவருக்கும் தெரியாது. தேவதா தர்மம் என்ற பெயரைக் கூட மறந்துவிட்டனர், ஹிந்து தர்மம் என்று கூறுகின்றனர். எப்பொழுது பழைய உலகம் மாறவேண்டுமோ, அப்பொழுது நான் வருகின்றேன் என்று இப்பொழுது தந்தை புரிய வைத்துக் கொண்டிருக்கின்றார். இப்பொழுது இந்த பழைய உலகத்தின் இறுதியாகும். இதை பிராமணர்களாகிய நீங்கள் மட்டும் தான் அறிந்திருக்கிறீர்கள். இந்த மிகப்பெரிய யுத்தம் மூலம் தான் பழைய உலகத்தின் முடிவு ஏற்பட்டிருந்தது. அனைவரும் அழிந்துவிட்டனர். எவரும் மிஞ்சவில்லை. 5 பாண்டவர்கள் தப்பித்தனர். அவர்களும் கூட மலைகளில் மறைந்துவிட்டனர் என்று கீதையில் காண்பிக்கிறார்கள்.ஆனால், அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. தந்தை ஸ்தாபனை செய்கின்றார். பிரளயமோ அல்லது தண்ணீர் மயமாவதோ ஏற்படுவதில்லை. ஹே! பதீத பாவனரே வாருங்கள், எங்களது துக்கத்தை நீக்கி சுகம் கொடுங்கள் என்று பாபாவை அழைக்கின்றனர். ஏனெனில், இப்பொழுது இராவண இராஜ்யம் நடக்கிறது. இராம இராஜ்யத்தை விரும்புகிறார்கள் என்றால் அவசியம் இராவண இராஜ்யம் நடக்கிறது அல்லவா! இப்பொழுது இராம இராஜ்யத்தின் ஸ்தாபனை, இராவண இராஜ்யத்தின் வினாசம் ஏற்படுகிறது என்று தந்தை புரிய வைக்கின்றார். நான் கற்பிக்கும் யுக்தியை யார் கற்கின்றார்களோ, அவர்களே சென்று புது உலகில் இராஜ்யம் செய்கின்றார்கள். அங்கு இந்த ஞானம் எதுவும் இருக்காது. இப்பொழுது உங்களுடைய புத்தியில் முழு ஞானம் உள்ளது. யாருடைய புத்தியில் உள்ளதோ, அவர்கள் பிறருக்கு புரிய வைக்கின்றார்கள். வரிசைக்கிரமமாக உள்ளனர் அல்லவா! சேவாதாரி குழந்தைகளின் புத்தியில் முழு ஞானம் சிந்தனையில் ஓடிக்கொண்டே இருக்கும். அவர்கள் அவசியம் சத்யுகத்தில் முதன்முதலில் தேவி தேவதா தர்மத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். இதைக் கூட நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். தந்தை பிரஜாபிதா பிரம்மா மூலம் முதன் முதலில் பிராமணர்களைத் தான் படைக்கின்றார். இது ஞான யக்ஞம் அல்லவா! எனவே, அவசியம் பிராமண சம்பிரதாயத்தினர் தான் தேவை. பிராமண சம்பிரதாயமானது அவசியம் சங்கமயுகத்தில் தான் இருக்கும். கலியுகத்தில் அசுர சம்பிரதாயம், சத்யுகத்தில் தெய்வீக சம்பிரதாயம் உள்ளது. எனவே, தெய்வீக சம்பிரதாயமானது அவசியம் சங்கமயுகத்தில் தான் ஸ்தாபனை ஆகும். குட்டிகரண விளையாட்டு விளையாடும்பொழுது தலையும் காலும் சந்திக்கின்றன. நீங்கள் பிராமணர்களாக இருக்கிறீர்கள், பின்னர், நினைவு வருகிறது. விராட ரூபத்தின் சித்திரம் கூட அவசியமானதாக உள்ளது. இதன் விளக்கம் மிக நன்றாக உள்ளது. பாபா நாங்கள் உங்களுடைய 6 மாதக் குழந்தைகள் என்றும், 4நாள் குழந்தைகள் என்றும் சிலர் கூறுகின்றனர். நான் ஒரு நாள் குழந்தை அதாவது இன்று தான் பாபாவினுடையவர் ஆகி இருக்கின்றேன், வாய்வழி வம்சத்தினர் ஆகியிருக்கிறேன் என்று சிலர் கூறுகின்றனர். யார் உயிருடன் இருந்துகொண்டே தந்தையினுடையவர் ஆகின்றார்களோ, அவர்கள், பாபா நாங்கள் உங்களுடையவர்கள் என்று கூறுகிறார்கள். சிறிய குழந்தை சொல்ல இயலாது. இந்த ஞானம், பெரியவர்களுக்கானது ஆகும். பாபா, நான் உங்களுடைய சிறிய குழந்தை என்று கூறுகின்றனர். சிறிய குழந்தைகளுக்கு படங்களைப் புரிய வைப்பது எளிதானது ஆகும். நாளுக்கு நாள் ஞான விளக்கம் விஸ்தாரம் ஆகிக் கொண்டிருக்கிறது. இந்தச் சித்திரங்களின் யுக்தியானது நாடக திட்டத்தின் அனுசாரமாக5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு போல் உருவாகியுள்ளது. துவக்கத்தில் ஏன் இது உருவாகவில்லை, இப்பொழுது ஏன் உருவாகியுள்ளது? என்ற இந்தக் கேள்வியை யாரும் எழுப்ப முடியாது.நாடகத்தின் அனுசாரமாக எந்த யுக்தி எப்பொழுது வெளிப்பட வேண்டுமோ அப்பொழுது வெளிப்படும். பள்ளியில்படிப்பினுடைய வரிசைக்கிரமமான நிலைகள் இருக்கும். முதலிலேயே பெரிய தேர்வில் தேர்ச்சி பெறுவார்கள் என்பது இருக்காது. முதலில் தந்தை மற்றும் ஆஸ்தியைப் பற்றி மட்டும் கற்பிக்கப்படுகிறது அல்லவா! தந்தையின் குழந்தை ஆகுவதன் மூலம் தான் தந்தை சொர்க்கத்தின் இராஜ்யத்தை அளிக்கின்றார். தந்தையை, தந்தை என்று கூறிய பின் நம்பிக்கை உடைவதில்லை.இங்கோ பாபா, பாபா என்று சொல்லும்பொழுதே நம்பிக்கை உடைந்துவிடுகிறது. இவர் எல்லையற்ற தந்தை என நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.நீங்கள் எல்லையற்ற தந்தையிடமிருந்து எல்லையற்ற ஆஸ்தியை பெற்றுக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் அவருடைய ஸ்ரீமத்படி நடக்க வேண்டும். மற்ற அனைத்து விஷயங்களை விட்டுவிட்டு என்னை நினைவு செய்யுங்கள் மற்றும் ஆஸ்தியை நினைவு செய்யுங்கள் என்று தந்தை கூறுகின்றார். நடந்தாலும் சுற்றினாலும் இந்த நினைவு இருப்பதன் மூலம் குஷியும் ஏற்படும். ஆனால், இந்த நினைவு ஏன் இருப்பதில்லை? பாபா நான் உங்களுடையவர் ஆகிவிட்டால் எனக்கு வேறு எவர் மீதும் பற்று இருக்காது; நான் உங்கள் வழிப்படித் தான் நடப்பேன் என்பது நீங்கள் அளித்த உத்திரவாதம் (கியாரண்டி) ஆகும். ஸ்ரீமத்படி நடக்கவில்லை என்றால் தவறுகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்; ஸ்ரீமத்படி நடந்தால் குஷி அளவற்றதாக இருக்கும் என்று தந்தையும் கூறுகின்றார். ஆத்மாவிற்கு அதீந்திரிய சுகம் கிடைக்கிறது என்றால் எவ்வளவு குஷி ஏற்படுகிறது. பரமபிதா பரமாத்மா நமக்கு இராஜ்ய பாக்கியம் கொடுத்திருந்தார். அதை 84 பிறவிகள் எடுத்து எடுத்து இழந்துவிட்டோம். பிறகு, தந்தை கொடுத்துக் கொண்டு இருக்கின்றார். என்பதை ஆத்மா அறிந்திருக்கிறது. எனில், அபாரமான குஷி இருக்க வேண்டும் அல்லவா! உள்ளார்ந்த குஷியும் வெளிப்படுகிறது அல்லவா? இந்த இலட்சுமி, நாராயணருடைய முகத்தில் தென்படுகிறது அல்லவா! அஞ்ஞான காலத்தில் சிலர் மிகவும் நல்லவராக குஷியாக இருப்பார்கள். பேசுவதிலும் வல்லவராக இருப்பார்கள். மனித சிருஷ்டியில் அனைத்தையும் விட உயர்ந்த பதவி யாருடையது? அனைவரையும் விட உயர்ந்தவர் சிவபரமாத்மா ஆவார். அவரை அனைவரும் தந்தை என்று அழைக்கின்றார்கள். ஆனால், அவரது தொழிலை அறிந்திருக்கவில்லை. எப்பொழுது தந்தை வந்தாரோ, அப்பொழுதே தனது அறிமுகத்தைக் கொடுத்தார். நமக்குத் தந்தையிடமிருந்து வைகுண்டத்தின் இராஜ்யம் கிடைக்கிறது என்பதை குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அறிந்திருக்கிறீர்கள். குஷி ஏற்பட வேண்டும் அல்லவா! நாம் நரனிலிருந்து நாராயணர் ஆகிறோம் என்று கையை உயர்த்துகிறார்கள், ஆனாலும், எதுவும் புரிந்திருக்கவில்லை. யாருக்கு நம்பிக்கை உள்ளதோ, அவர்களுக்கு, இப்பொழுது நாம் 84 பிறவிகள் எடுத்து முடித்துவிட்டோம் என்ற இந்த குஷி இருக்கும். இப்பொழுது நாம் பாபாவினுடைய வழிப்படி நடந்து விஷ்வத்தின் எஜமானர்கள் ஆகின்றோம். இந்த படிப்பினுடைய போதை எவ்வளவு இருக்க வேண்டும்! ஜனாதிபதி, கவர்னர் போன்றோருக்கு போதை உள்ளது அல்லவா!அவர்களை சந்திக்க பெரிய பெரிய மனிதர்கள் வருகின்றனர். பதவியை அறியாமல் ஒருபொழுதும் யாரையும் சந்திக்க இயலாது. பாபாவும் ஒருபொழுதும் சந்திப்பதில்லை. பாபாவினுடைய பதவியை குழந்தைகளாகிய நீங்கள் மட்டும் தான் அறிந்திருக்கிறீர்கள், அதுவும் வரிசைக்கிரமமான முயற்சியின் அனுசாரம் அறிந்திருக்கிறீர்கள். நான் பிரம்மாகுமார் என்று கூறிக்கொள்கிறார்கள்; ஆனாலும் நாம் சிவபாபாவின் குழந்தைகள்; அவரிடமிருந்து நாம் சொர்க்கத்தின் ஆஸ்தியை பெற்றுக் கொண்டிருக்கிறோம் என்பது புத்தியில் இல்லை. தந்தையையும், ஆஸ்தியையும் நினைவு செய்ய முடிவதில்லை. நினைவு இருந்தால் உள்ளார்ந்த குஷியும் இருக்குமல்லவா.கன்னிகையை திருமணம் செய்விக்கும்பொழுது அவருக்கு குப்தமாக (இரகசியமாக) தானம் அளிக்கப்படுகிறது. பெட்டியை பூட்டி அதன் சாவியை கையில் கொடுத்துவிடுவார்கள். தந்தையும் கூட உங்களுக்கு விஷ்வ இராஜ்யத்தின் சாவியை கையில் கொடுத்துவிடுகின்றார். நீங்கள் புதிய சத்யுக உலகத்தை துவக்கி வைக்கிறீர்கள். சொர்க்கத்திற்கும் கூட நீங்கள் செல்வீர்கள். பாபா உங்களை தகுதியானவர் ஆக்குகின்றார். பக்தர்கள் சொர்க்கத்திற்குச்செல்ல தகுதியானவர் ஆக இயலாது. எதுவரை தந்தை, ஞானம் அளிக்கவில்லையோ தூய்மை அடைய வில்லையோ அதுவரை செல்ல இயலாது. ஆகையால், நாரதரின் உதாரணம் உள்ளது. நல்ல நல்ல பக்தர்கள் அனேகர் இருக்கின்றனர், எனினும், ஆத்மா தூய்மையற்றதாக உள்ளது அல்லவா! ஜென்ம ஜென்மங்களாக அவர்கள் தூய்மை இழந்து கொண்டே வந்திருக்கின்றனர். எதுவரை தந்தை கிடைக்கவில்லையோ, அதுவரை சொர்க்கம் செல்ல முடியாது. உங்களை தந்தை பிரம்மா மூலம் தத்தெடுத்திருக்கின்றார். நீங்கள் சென்று புதுஉலகில் இராஜ்யம் செய்வீர்கள். வேறு எவரும் இராஜ்யத்தை ஸ்தாபனை செய்யவே இல்லை. எவருக்கும் தெரியாது. தந்தை தான் சங்கமயுகத்தில் வந்து வருங்கால 21 பிறவிகளுக்கான இராஜ்யத்தை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கின்றார். இந்தத் தந்தையை எவரும் அறிந்திருக்கவில்லை. 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பகவான் வந்திருந்தார்; கீதை ஞானம் அளித்தார்; அதன் மூலம் மனிதனிலிருந்து தேவதை ஆனோம் என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்திருக்கிறீர்கள். கீதை, ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தின் சாஸ்திரம் ஆகும். சத்யுகத்திலோ சாஸ்திரம் போன்றவை எதுவும் இருக்காது. தந்தை கூறுகின்றார், நான் சங்கமயுகத்தில் தான் வருகின்றேன். மீண்டும் வந்து சிருஷ்டியின் முதல், இடை, கடை பற்றிய ஞானம் அளிக்கின்றேன். அவர்களே தேவி தேவதை ஆகின்றார்கள். பிறகு, 84 பிறவிகளின் சக்கரத்தில் சுற்றி எப்பொழுது இறுதிக்கு வருகின்றார்களோ, அப்பொழுது அவர்களுக்குத் தான் வந்து புரிய வைக்கின்றேன். இடையில் ஒருபொழுதும் நான் வருவதே இல்லை. கிறிஸ்து நடுவில் வந்துவிடுவார் என்பதல்ல மற்றும் யாரெல்லாம் தர்மத்தை ஸ்தாபனை செய்கின்றார்களோ, அது இந்த உலகத்திற்காகவே செய்கின்றார்கள். புது உலகை ஸ்தாபனை செய்வதற்காக நான் வருவதே சங்கமயுகத்தில் தான். கிறிஸ்துவின் ஆத்மா வந்து பிரவேசம் செய்து தன்னுடைய தர்மத்தை ஸ்தாபனை செய்கிறது. இந்தத் தந்தையோ இராஜ்யத்தை ஸ்தாபனை செய்கின்றார். இந்த இலட்சுமி, நாராயணருடைய இராஜ்யத்தை எப்பொழுது, யார் ஸ்தாபித்தது என்று யாருக்கும் தெரியாது. இதை இலட்சுமி, நாராயணர் கோவில் கட்டுவோரிடம் கேட்க வேண்டும். நீங்கள் சபையில் கூட கேட்க முடியும். இந்த இரகசியம் உங்களுடைய புத்தியில் உள்ளது. கல்ப கல்பமாக, பாபா, பிரம்மா மூலம் ஸ்தாபனை செய்கின்றார். வேறு எவரும் அறிய முடியாது. இந்த வார்த்தைகளும் உள்ளன, எனினும், யாருடைய புத்தியிலும் சரியான முறையில் தங்கவில்லை. சில சில குழந்தைகள் மீது கிரஹச்சாரம் பிடித்துக் கொள்கிறது. தேக அபிமானம் முதல் நம்பர் கிரஹச்சாரம் ஆகும். குழந்தைகளே! ஆத்மஅபிமானி ஆகுங்கள் என்று தந்தை கூறுகின்றார். இந்த இலட்சுமி, நாராயணர் சித்திரம் மற்றும் ஏணிப்படி சித்திரம், புரிய வைப்பதற்கு மிக நல்ல சித்திரங்கள் ஆகும். அனேகருக்கு இதன் மூலம் நன்மை ஏற்பட முடியும். ஆனால், நாடகத்திலேயே அனேகமாக தாமதம் என்பது உள்ளது போல் இருக்கிறது, ஆகையினால், இராஜ்யம் ஸ்தாபனை ஆவதில் தடை ஏற்படுகின்றது. அதிகத் தடைகள் ஏற்படுகின்றன என்று தந்தையே கூறுகின்றார். மாயா மிகவும் சக்தி வாய்ந்தது.எனது குழந்தைகளை சீக்கிரமாக மூக்கை, காதை பிடித்துக் கொள்கிறது. இது இராகுவின் கிரஹச்சாரம் என்று சொல்லப்படுகிறது. பாரதத்தில், குறிப்பாக இந்த சமயத்தில் விகாரங்கள் என்ற இராகுவின் முழுமையான கிரஹச்சாரம் பிடித்துள்ளது. இதே பாரதம் தூய்மையாக வைரம் போல் இருந்தது; இப்பொழுது விகாரியாக, சோழி போல் ஆகிவிட்டது; பிறகு, வைரம் போல் ஆகவேண்டும் என்று நீங்கள் ஒரு நொடியில் நிரூபிக்க முடியும். கதை முழுவதும் பாரதத்தினுடையது ஆகும். தந்தை வந்து வைரம் போல் ஆக்குகின்றார். ஆனால், எத்தனை விதமான தடைகள் ஏற்படுகின்றன! தேக அபிமானத்தினுடைய மிகப்பெரிய தடை ஏற்படுகிறது. இலட்சுமி, நாராயணருடைய சித்திரத்தை பற்றி பிறருக்குப் புரிய வைப்பது மிக எளிதாகும். குழந்தைகளுக்கு சேவைக்கான மிகுந்த ஆர்வம் இருக்க வேண்டும். சேவையில் கூட பல விதம் உள்ளது அல்லவா! அனேகருக்கு சுகம் அளித்தால், அதற்கான பிரதிபலன் அதிகம் கிடைக்கிறது. சிலர் ஆல்ரவுண்டராக எலும்பு தேய சேவை செய்கின்றனர். நாம் ஆல்ரவுண்டராக ஆகவேண்டும் என்ற குஷி இருக்க வேண்டும். பாபா, நாங்கள் சேவையில் ஆஜராக இருக்கிறோம். நல்ல நல்ல குழந்தைகள், ஆன்மிக சேவை செய்யக் கூடியவர்கள், உணவை தன் கையாலேயே சமைக்கின்றனர். சிம்மாசனத்தை பெற்றுவிடும் அளவு குழந்தைகள் கூட அவ்வளவு சாமர்த்தியசாலி ஆகிவிடுகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். இங்கோ, தாய்மார்கள் வீட்டை பராமரிக்கக்கூடியவர்களாக உள்ளனர். இப்பொழுது தாய்மார்கள், குமாரிகள் இந்த சேவையில் பங்கேற்க வேண்டும். மம்மாவைப் போல் சேவை செய்து காண்பிக்க வேண்டும். நடைமுறையில் செய்ய வேண்டும். மற்றபடி, மம்மா மம்மா என்று சொல்வதால் மட்டும் என்ன லாபம் உள்ளது! அவர்களைப் போல் ஆக வேண்டும். நல்லது.இனிமையிலும் இனிமையான தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்காக தாய்,தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மிகக் குழந்தைகளுக்கு ஆன்மிக தந்தையின் நமஸ்காரம்.தாரணைக்காக முக்கியமான சாரம்:-

1. தேகஅபிமானத்தின் கிரஹச்சாரம் தான் யக்ஞத்தில் தடை ரூபம் ஆகின்றது. ஆகையால், எவ்வளவு முடியுமோ ஆத்மஅபிமானி ஆவதற்கான முயற்சி செய்ய வேண்டும்.2. தனது படிப்பு மற்றும் சத்யுக பதவியின் அந்தஸ்தினுடைய குஷி மற்றும் போதையில் இருக்க வேண்டும், ஸ்ரீமத்படி நடக்க வேண்டும். எந்தத் தவறும் செய்யக்கூடாது.வரதானம்:

முறையீடுகளை நினைவினால் மாற்றம் செய்யக்கூடிய இயற்கையான மற்றும் நிரந்தரயோகி ஆகுக !இப்பொழுது முயற்சி செய்தால், இப்பொழுதே பிரத்யட்சபலன் கிடைப்பதே சங்கமயுகத்தின் சிறப்புத்தன்மை ஆகும். இப்பொழுது நினைவு சொரூபமாக இருந்தால், இப்பொழுதே ப்ராப்தியின் அனுபவம் கிடைக்கும். எதிர்காலத்திற்கான உத்திரவாதம் இருந்தாலும் எதிர்காலத்தை விட சிரேஷ்ட பாக்கியம் இப்போதையது ஆகும். இந்த பாக்கியத்தின் போதையில் இருந்தீர்கள் என்றால் தானாகவே நினைவு இருக்கும். எங்கு நினைவு இருக்கிறதோ, அங்கு முறையீடு இருக்காது. என்ன செய்வது, எப்படிச் செய்வது, இதுநடப்பதில்லை, கொஞ்சம்உதவி செய்யுங்கள் போன்ற இவையே முறையீடுகள் ஆகும்.எனவே, முறையீடுகளை விட்டுவிட்டு இயற்கையான யோகி நிரந்தரயோகி ஆகுங்கள்.சுலோகன்:

யார் தன்னை விருந்தாளி எனப் புரிந்து நடக்கிறார்களோ, அவர்களே மிக உயர்ந்த நிலையை அனுபவம் செய்கிறார்கள்.
***OM SHANTI***