BK Murli 21 October 2016 Tamil

BK Murli 21 October 2016 Tamil

21.10.2015    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


இனிமையான குழந்தைகளே! அனைத்து ஆத்மாக்களும் எல்லையற்ற தந்தையிடம் படிப்பதில்லை, ஆனால் நிச்சயம் அவர் கூடவே செல்வர்.

 

கேள்வி:

சக்கரவர்த்தி இராஜா ஆகக் கூடிய குழந்தைகள் எந்த விசயத்தில் மிக அதிக மரியாதை (மதிப்பு) கொடுப்பார்கள்?

 

பதில்:

அவர்கள் படிப்பின் மீது அதிக (முக்கியத்துவம்) மரியாதை கொடுப்பார்கள். எங்கு இருந்தாலும் கண்டிப்பாக படிப்பார்கள். கூடவே உற்றார், உறவினர்களுடன் இருந்தாலும் நினைவில் இருப்பதற்கான பயிற்சி செய்வார்கள், மேலும் தந்தையை நினைவு செய்தால் சாந்திதாமம், சுகதாமத்திற்கு சென்று விடுவீர்கள் என்ற செய்தியும் கொடுப்பார்கள். இந்த ஸ்ரீமத் படி முழுமையாக நடக்கக் கூடிய குழந்தைகள் தான் சக்கரவர்த்தியாக ஆவார்கள்.

 

ஓம்சாந்தி.

அனைத்து ஆன்மீகக் குழந்தைகளையும், கூடவே உலகில் இருக்கக் கூடிய அனைத்து ஆத்மாக்களையும் தந்தை திரும்பி அழைத்துச் சென்றே ஆக வேண்டும். ஏனெனில் இப்போது காரிருள் முடிவடைகிறது. பழைய உலகம் முடிவடைந்து புது உலகம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. உலகம் இருக்கத் தான் செய்யும், ஆனால் பழையதிலிருந்து புதியதாக ஆகிறது. சத்யுகத்தின் ஆரம்பத்தில் ஆதி சநாதன தேவி தேவதா தர்மம் இருந்தது. இப்போது அந்த சூரியவம்சம், சந்திரவம்சம் கிடையாது. அவர்கள் மறுபிறவி எடுத்து எடுத்து இப்போது 84 பிறவிகள் முடித்து விட்டனர் என்று தந்தை புரிய வைக்கின்றார். இந்த நேரத்தில் அனைத்து நடிகர்களும் தமோபிரதானமாக ஆகிவிட்டனர். இராம இராஜ்யம், புது உலகம், புது டெல்லி வேண்டும் என்று விரும்பவும் செய்கின்றனர். எனக்கு இந்த பொருள் வேண்டும் என்று குழந்தை கூறும் அல்லவா அதுபோல பாபா, புது உலகிற்காக எமக்கு புது ஆடை வேண்டும் என்று இவரும் (பிரம்மாவும்) கூறுகின்றார். தீபாவளியன்று மனிதர்கள் புது ஆடை அணித்து கொள்கின்றனர். கிருஷ்ண ஜெயந்தியன்று புது ஆடை அணிந்து கொள்வதற்கான விசயம் இருக்காது. அதிகமாக தீபாவளியன்று புது ஆடை அணிந்து கொள்வதற்காக லீலை கொடுத்து வாங்குவார்கள். தீபாவளியன்று தீபத்தை ஏற்றுவர். உங்களது தீபம் இப்போது ஏற்றப்பட்டிருக்கிறது. நீங்கள் மற்றவர்களது தீபத்தையும் ஏற்ற வேண்டும். அவர்களுடையது பக்தி மார்க்கத்தின் தீபாவளி, உங்களுடையது ஞானத்தின் தீபாவளி ஆகும். நீங்கள் எந்த ஆடையையும் மாற்றுவது கிடையாது. உங்களது தீபம் எப்போது முழுமையாக ஏற்றப்பட்டு விடுகிறதோ அப்போது புது உலகில் புது ஆடை கிடைக்கும். விரும்பினாலும், விரும்பா விட்டாலும் நான் அனைவரையும் அழைத்துச் செல்வேன் என்று தந்தை கூறுகின்றார். ஹே பதீத பாவனனே வாருங்கள் என்று அழைக்கவும் செய்கிறீர்கள். அவர்கள் (அயல் நாட்டினர்) விடுவிப்பவரே (லிபரேட்டர்) வாருங்கள் என்று அவர்கள் கூறுகின்றனர். அவரவர்களது மொழியில் அழைக்கின்றனர். நான் கல்ப கல்பத்திற்கு வந்து அனைவரையும் அழைத்துச் செல்கிறேன். சத்யுகத்தில் மிகக் குறைந்த மனிதர்கள் இருப்பார்கள். இப்போது எத்தனை நடிகர்கள் உள்ளனர்! இவர்கள் ஜீவ ஆத்மாக்கள் ஆவர். சரீரம் தான் ஜீவ் என்று கூறப்படுகிறது. நான் ஒரு சரீரத்தை விடுத்து மற்றொன்றை எடுக்கிறேன் என்று ஜீவ் (சரீரம்) கூறுவது கிடையாது. இல்லை ஆத்மா தான் நான் ஒரு சரீரத்தை விடுத்து மற்றொன்றை எடுக்கிறேன் என்று கூறுகிறது. ஆனால் நாம் 84 பிறவிகள் எடுக்கிறோம் என்பதும் யாருக்கும் தெரியாது. அனைவரும் 84 பிறவிகள் எடுக்கின்றனர் என்பதும் கிடையாது. அனைவருக்கும் அவரவர்களது கணக்கு இருக்கிறது. யார் முதலில் வருகிறார்களோ அவர்கள் அதிக பிறவிகள் எடுப்பர். அதிகபட்ச பிறப்பு 84 ஆகும். குறைந்தபட்சம் ஒரு பிறவியாவது இருக்கும். இதை தந்தை அமர்ந்து புரிய வைக்கின்றார், அனைவருக்கும் கற்பிக்க மாட்டார். ஆனால் அனைவரையும் அவசியத் கூடவே அழைத்துச் செல்வார். அழைத்துச் செல்வதற்காக நானும் நாடகத்தில் கட்டுப்பட்டு இருக்கிறேன். பழைய உலகம் அழியப் போகிறது என்பதை உலகத்தினர் அறியவில்லை. தந்தை வந்து அவசியம் புது உலகை ஸ்தாபனை செய்வார். மனிதர்களிடத்தில் படைப்பவர் மற்றும் படைப்பின் முதல், இடை, கடையின் ஞானம் துளியளவும் கிடையாது. ஆம், பக்தி மார்க்கத்தைப் பற்றி அறிந்திருக்கின்றனர். பக்தி மார்க்கத்தின் சடங்குகள் தனிப்பட்டது, ஞான மார்க்கத்தின் சடங்குகள் முற்றிலும் தனிப்பட்டது. சத்யுகத்திலிருந்து கலியுகம் வரை பக்தி மட்டுமே இருக்கிறது என்பது கிடையவே கிடையாது. ஞானம் என்றால் பகல், பக்தி என்றால் இரவு என்றும் பாடப்படுகிறது. காரிருளில் மனிதர்கள் ஏமாற்றம் அடைகின்றனர். கல், முள்ளில் என்னை தேடுகின்றனர் என்று தந்தை கூறுகின்றார். சிலர் ஹனுமானின் சாட்சாத்காரம் செய்கின்றனர், சிலர் கணேசரின் சாட்சாத்காரம் செய்கின்றனர். இவர்கள் அனைவரும் பகவான் கிடையாது. என்கென்று எந்த சரீரமும் கிடையாது. மாயை இராவணன் அனைவரையும் முட்டாள்களாக ஆக்கிவிட்டது. இராம இராஜ்யம் என்று எது கூறப்படுகிறது? என்பது கூட பாரதவாசிகளுக்கு தெரியாது. லெட்சுமி நாராயணனின் இராஜ்யம் இந்த உலகில் இருந்தது என்ற கவனமும் யாருக்கும் வருவது கிடையாது. இராம இராஜ்யம் வேண்டும் என்று மட்டும் கூறிவிடுகின்றனர். இரகுபதி என அழைக்கப்படுபவர் இராமர் கிடையாது. அவரைப் பற்றி சாஸ்திரங்களில் தவறான விசயங்களை எழுதி விட்டனர். மனிதர்கள் மரணத்தைப் பார்த்து எவ்வளவு பயப்படுகின்றனர்! வாழ்க்கையை காப்பாற்றிக் கொள்ள ஆசிர்வாதங்களை கேட்டுக் கொண்டே இருக்கின்றனர். இப்போது பலர் இறக்க இருக்கின்றனர். அவர்களுக்கு என்ன செய்வது? பாபா, நம்மை தூய்மையான உலகிற்கு அழைத்துச் செல்லுங்கள் என்பதற்காகவே அவரை அழைத்தோம். சாந்திதாமத்திற்கு சரீரத்தை எடுத்துக் கொண்டு செல்லமாட்டோம். அங்கு ஆத்மாக்கள் செல்லும். இது பழைய சீ சீ சரீரமாகும். காடு தீ பற்றி எரியும், அதனால் தான் வெடிகுண்டுகளை உருவாக்கிக் கொண்டு இருக்கின்றனர். வெடிகுண்டு உருவாக்கக் கூடாது என்று அவர்கள் கூறுகின்றனர். யாரிடத்தில் அதிக வெடிகுண்டுகள் இருக்கின்றனவோ அவர்கள் அவசியம் சக்தி வாய்ந்தவர்களாக ஆகிவிடுவர் என்பதையும் புரிந்து கொள்வது கிடையாது. ஒருவேளை தான் வெடிகுண்டுகளை உருவாக்கவில்லையெனில் பிறகு தன்னை எப்படி காப்பாற்றிக் கொள்ள முடியும்? உருவாக்கிய அனைத்தையும் கடலில் போடும் போது தான் உருவாக்குவதையும் நிறுத்துவார்கள். ஆனால் கடல் நீரும் மேகமாக ஆகி மழையாக பொழிகிறது, பிறகு அதுவும் நஷ்டப்படுத்தி விடும். விளைநிலங்களில் தண்ணீர் சென்று விடும், அதனால் தான் நாடகத்தில் யுக்தி உருவாக்கப்பட்டிருக்கிறது. முன்பு இந்த வெடிகுண்டுகள் இல்லாமல் இருந்தது. இப்போது உருவாக்கப்பட்டிருக்கிறது. அதனால் தான் மிகுந்த பயமுறுத்தல்கள் இருக்கிறது. இவை அனைத்தும் நிச்சயிக்கப்பட்டது என்பதை இப்போது நீங்கள் அறிவீர்கள். உங்களிலும் பலருக்கு நிச்சயிக்கப் பட்ட விநாசத்தின் மீது நம்பிக்கை கிடையாது. ஒருவேளை இருந்தால் யோகாவில் (நினைவு யாத்திரையில்) மிக நல்ல முறையில் இருப்பீர்கள். யோக பலத்தின் மூலம் உலக இராஜ்யத்தை அடைய வேண்டும். உங்களது அனைத்தும் குப்தமானது, கற்றுக் கொடுப்பவரும் குப்தமானவர். இந்த கண்களினால் பார்க்க முடியாது. எனது ஆத்மாவில் 84 பிறவிகளுக்கான பாகம் பதிவாகியிருக்கிறது என்பதை இப்போது உங்களது ஆத்மா உணர்ந்திருக்கிறது. நான் ஆத்மா, அழிவற்றவன். இது மிகவும் ஆழமான விசயாகும். சரீரத்திலிருக்கும் ஆத்மா என்றால் என்ன? என்று யாராவது கூறினால் அவர்களுக்கு இலட்சம் ரூபாய் கொடுக்கப்படும் என்று செய்தித்தாளிலும் எழுதப்பட்டிருக்கிறது. ஆத்மா என்றால் என்ன? எங்கிருந்து வருகிறது. எப்படி நடிப்பு நடிக்கிறது. என்பதை யாரும் அறியவில்லை. நீர்குமிழி போன்று இருப்பதாக சிலர் கூறுகின்றனர், பிரம்ம தத்துவம் மிகப் பெரிய ஜோதியாக இருக்கிறது, அதில் ஆத்மாக்கள் ஐக்கியமாகிவிடும் என்று சிலர் கூறுகின்றனர். அநேக விசயங்களை கூறிக் கொண்டே இருக்கின்றனர். ஆத்மா பிந்து போன்று இருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். அதில் நடிப்பதற்கான நடிப்பு பதிவாகியிருக்கிறது. இந்த நாடகம் ஏற்கெனவே உருவாக்கப்பட்டிருக்கிறது, அது ஒருபோதும் அழிவதில்லை. ஆத்மாவும் அழிவற்றது. ஆத்மா அதே நடிப்பை நடிக்க வேண்டும். வித்தியாசம் ஏற்பட முடியாது. யாருடைய புத்தியில் கல்பத்திற்கு முன்பு அமர்ந்திருந்ததோ அவர்களது புத்தியில் தான் இந்த விசயங்கள் அமரும்.

 

பாபா கூறுகின்றார் - இவ்வளவு மனிதர்களுக்கு நான் எப்படி படிப்பு கற்பிப்பேன்? என்னை நினைவு செய்தால் உங்களது விகர்மங்கள் விநாசம் ஆகிவிடும் என்று தந்தை கூறுகின்றார் என்ற அளவிற்கு குழந்தைகள் புரிந்து கொள்வர். அனைவருக்கும் செய்தி கிடைத்து விடும், தந்தை அனைவருக்காகவும் இந்த மந்திரத்தை கொடுக்கின்றார். குழந்தைகளாகிய நீங்கள் தெய்வீக குணங்களை தாரணை செய்ய வேண்டும் என்று பாபா புரிய வைக்கின்றார். அவகுணங்களை விட்டு விட வேண்டும். தேக அபிமானத்தை விட வேண்டும். இருப்பினும் விடுவது கிடையாது. அப்படிப்பட்டவர்களுக்கு என்ன கிடைக்கும்? ஒருவருக்கொருவர் அன்பாக நடந்து கொள்வது கிடையாது. நீங்கள் மிகவும் இனிமையானவர்களாக ஆக வேண்டும். தந்தை அன்புக் கடலாக இருக்கின்றார். நீங்கள் அவரது குழந்தைகள் எனில் நீங்களும் மிக அன்பானவர்களாக ஆக வேண்டும். யாராவது எவ்வளவு தான் கோபப்பட்டாலும், புகழ், இகழ் அனைத்தையும் பொறுத்துக் கொள்ள வேண்டும். யாராவது திவால் ஆகிவிட்டார்கள் என்றால் பாபா இப்போது உதவி செய்ய வேண்டும் என்ற நினைக்கின்றனர். அரே, இது உங்களது கர்ம கணக்காகும். இதை நீங்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும். தந்தை இதில் என்ன செய்ய முடியும்? அனைத்து ஆத்மாக்களையும் அழைத்துச் செல்வதற்காக தந்தை வந்திருக்கின்றார். இதையும் குழந்தைகளாகிய நீங்கள் தான் அறிவீர்கள். உலகில் அனைவரும் காரிருளில் இருக்கின்றனர். பக்தி மார்க்கத்தில் பக்தர்களுக்கு கண்டிப்பாக மரியாதை தேவைப்படுகிறது. சங்காராச்சாரியர் போன்ற அனைவரும் பக்தர்கள் ஆவர். அவர்கள் தூய்மையான பக்தர்கள் என்று கூறுகிறோம். பக்தர்களின் கலாச்சாரம் இருக்கிறது அல்லவா! யார் தூய்மையாக இருக்கிறார்களோ அவர்களுக்கு பெரிய பெரிய மடங்கள் கட்டப்படடிருக்கின்றன. அவர்களுக்கு எவ்வளவு மரியாதை இருக்கிறது! ஆன்மீக புத்தகங்களிலும் அதிக மரியாதை இருக்கிறது. அவர்களை அதிகம் வலம் வருகின்றனர். பக்திக்கு அதிக மரியாதை இருக்கிறது. ஞானம் பற்றி யாருக்கும் தெரியாது. நீங்கள் எப்போது தேவதைகளாக ஆவீர்களோ அப்போது உங்களுக்கு எவ்வளவு மகிமை ஏற்படுகிறது! கோயிலுக்கு செல்லாத தாய் தந்தையர் இருக்கவே மாட்டார்கள். பக்தியின் சின்னம் அவசியம் ஏதாவது இருக்கவே செய்யும். ஹே பகவான் என்று கூறுவதும் பக்தியாகும். இப்போது நீங்கள் எல்லையற்ற தந்தையினுடையவர்களாக ஆகியிருக்கிறீர்கள். இவர் தந்தை, இவர் மூத்த சகோதரர் (தாதா), ஆகையால் திரிமூர்த்தி சித்திரத்தை வைத்து புரிய வைப்பது மிகவும் நல்லது. தாதாவை ஏன் வைத்திருக்கிறீர்கள்? என்று சிலர் கேட்கின்றனர். அரே! பிரஜாபிதா பிரம்மா அவசியம் இங்கு வேண்டும் அல்லவா! இவர் மரத்தின் அடியில் தபஸ்யாவில் அமர்ந்திருக்கின்றார். ஆனால் அவர்கள் மாறிக் கொண்டே இருக்கின்றனர். இவர்கள் முக்கியமானவர்கள், சதா நிலைத்திருக்கக் கூடியவர்கள். இதில் குழந்தைகள் மிகவும் இனிமையானவர்களாக ஆக வேண்டும். நடத்தைகள் மிகவும் ராயலாக இருக்க வேண்டும். குறைவாக பேச வேண்டும். முதன் முதலில் தந்தையின் அறிமுகம் கொடுக்க வேண்டும். அதிகம் பேசுவதும் தவறாகும். மிகவும் குறைவாகப் பேசுங்கள். நீங்களும் பக்தியில் அதிகம் பேசி யிருக்கிறீர்கள், கூக்குரலிட்டீர்கள். எவ்வளவு ஏமாற்றம் அடைந்தீர்கள்! பாபாவை மட்டும் நினைவு செய்யுங்கள், போதும், யோக பலத்தின் மூலம் உலகிற்கு எஜமானர்களாக ஆகிவிடுவீர்கள் என்று உங்களுக்கு எளிதாக புரிய வைக்கின்றார். நாளடைவில் வரிசைக் கிரமமாக யார் என்ன நிலை அடைவார்கள்? என்பது தெரிந்து விடும். பிரஜைகளுக்கான கணக்கு எடுக்கப்படமாட்டாது. அவர்கள் இலட்சக்கணக்கில், கோடி கணக்கில் ஆகிவிடுவார்கள். யார் பிராமணர்களாக ஆவார்களோ, அவர்களே சூரியவம்சி, சந்திரவம்சிகளாக ஆவார்கள். நாளடைவில் பலர் நினைவு செய்ய ஆரம்பித்து விடுவார்கள். மரணம் எதிரில் வரும் போது வைராக்கியம் வந்து விடும். இது அதே மகாபாரத யுத்தமாகும். அனைத்து ஆத்மாக்களும் கணக்கு வழக்குகளை முடித்துக் கொண்டு செல்வார்கள். இது கடைசி நேரம் என்று கூறப்படுகிறது. இவ்வளவு சரீரங்கள் அனைத்தும் அழிந்து போய் விடும். இயற்கை சீற்றங்கள் ஏற்படும், இதுவும் நாடகத்தில் பதிவாகியிருக்கிறது. புது விசயம் கிடையாது. பஞ்சத்தின் காரணத்தினால் மனிதர்கள் பட்டினால் இறக்கின்றனர்.

 

எனது குழந்தைகள் அதிகம் துக்கத்தில் இருக்கின்றனர் என்பதை தந்தை அறிவார். அனைவரையும் துக்கத்திலிருந்து விடுவித்து திரும்பி அழைத்துச் செல்வேன். இவர்கள் அனைவரும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வர் என்று தந்தை கூறுகின்றார். உங்களுக்குத் தான் வெண்ணெய் கிடைக்கும். முழு உலகிற்கும் நீங்கள் எஜமானர்களாக ஆகிறீர்கள். வாயில் சந்திரனின் சாட்சாத்காரம் செய்தார் அல்லவா! வாயில் இந்த உலக உருண்டை வந்து விட்டது. நீங்கள் இளவரசன், இளவரசியாக ஆகிறீர்கள். முழு உலகமும் உங்களது கையில் இருக்கிறது. வாயிலும், கையிலும் காண்பிக்கின்றனர். இப்போது சொர்க்கத்தின் உலக உருண்டை உங்களது வாயில் இருக்கிறது. யோக பலத்தின் மூலம் நாம் உலகிற்கு எஜமானர்களாக ஆகிறோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். யோகா மூலம் ஆரோக்கியமும், ஞானத்தின் மூலம் செல்வமும் கிடைக்கிறது. நீங்கள் சக்கரவர்த்தி இராஜா ஆகிறீர்கள். ஆனால் குழந்தைகளிடத்தில் அந்த அளவிற்கு படிப்பின் மீது மரியாதை கிடையாது. மாற்ற மடைந்து சென்று விடுகின்றனர், ஆனாலும் எங்கு இருந்தாலும் கண்டிப்பாக படிக்க வேண்டும் என்று தந்தை கூறுகின்றார். தூய்மையாக இருங்கள், உணவு முறைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். அனைவரோடும் சேர்ந்தும் வாழ வேண்டும். இந்த உலகம் துக்கம் கொடுக்கக் கூடியது. முக்கியமானது காம விகாரத்தில் செல்வது, அதை விடுவதற்கும் கஷ்டப்படுகின்றனர். ஏதாவது கூறிவிட்டால் துரோகிகளாக ஆகிவிடுகின்றனர். பிறகு அபலைகளுக்கு எவ்வளவு தடைகள் ஏற்படுகின்றன! இந்த ஆரிய சமாஜத்தினர் இப்போது வந்திருக்கின்றனர். கடைசி கிளை (பிரிவினர்) ஆகும். தேவதைகளை ஏற்றுக் கொள்பவர் கிடையாது. மகாவீர், ஹனுமான் பெயர் இருக்கிறது, வீரத்தை காண்பித்திருக்கின்றனர். ஜைனர்களும் மகாவீர் என்று பெயர் வைத்து விட்டனர். அதன் பொருளை இப்போது நீங்கள் புரிந்திருக்கிறீர்கள். குழந்தைகளாகிய நீங்களும் மகாவீரர்களாக இருக்கிறீர்கள், இராவணன் மீது வெற்றி அடைகிறீர்கள். இவை அனைத்தும் யோக பலத்திற்கான விசயமாகும். நீங்கள் தந்தையை நினைவு செய்கிறீர்கள், அதன் மூலம் உங்களது விகர்மங்கள் விநாசம் ஆகும். பிறகு அமைதி, சுகத்திற்குச் சென்று விடுவீர்கள். இந்த செய்தியை அனைவருக்கும் கொடுக்க வேண்டும். இந்த ஸ்தாபனை மிகவும் ஆச்சரியமானது ஆகும். இதை யாரும் அறியவில்லை. உங்களிலும் வரிசைக்கிரமம் இருக்கிறது. எந்த விகாரமும் உள்ளுக்குள் இருக்கக் கூடாது. ஆத்மாவிற்கு தந்தை ஞானம் கொடுத்துக் கொண்டிருக்கின்றார். ஆத்மா விகாரியாக ஆகிறது, அனைத்தும் ஆத்மா தான் செய்கிறது. ஆக இப்போது தந்தையின் ஸ்ரீமத் படி முழுமையாக நடக்க வேண்டும். சத்குருவின் எதிரில் இருந்து கொண்டு நிந்தனை செய்தால் நிலைத்து இருக்க முடியாது. ஏதாவது பாவம் செய்தால் இது நிந்தனை ஆகிவிடுகிறது. ஆசிரியரின் வழிப்படி நடக்கவில்லையெனில் நிலைத்து இருக்க முடியாது, தோல்வியடைந்து விடுவீர்கள். ஆசிரியரிடமிருந்து கல்வி அடைந்து கொண்டே இருந்தால் நேர்மையுடன் தேர்ச்சி பெறுவீர்கள். அது எல்லைக்குட்பட்ட விசயம், இது எல்லையற்ற விசயமாகும். பகவான் யார்? என்பது உலகில் யாருக்கும் தெரியாது. மாயையும் சதோ, ரஜோ, தமோவாக இருக்கிறது. இப்போது மாயையும் தமோ பிரதானமாக இருக்கிறது. என்ன என்ன செய்து கொண்டிருக்கிறது பாருங்கள்! நாம் யாரை எரிக்கிறோம்? என்ற புத்தியும் யாருக்கும் கிடையாது. இதுவும் நாடகத்தில் பதிவாகியிருக்கிறது. எதுவெல்லாம் நடக்கிறதோ நாடகப்படி நடக்கிறது. யாதவர்களின் திட்டம், கௌரவர்களின் திட்டம் மற்றும் பாண்டவர்களின் திட்டம், என்ன என்ன செய்தனர்? பாண்டவர்களுக்கு உயர்ந்ததிலும் உயர்ந்த திட்டத்தை வகுப்பவர் தந்தை ஆவார். புது உலகில் லெட்சுமி நாராயணனின் இராஜ்யம் இருந்தது. இப்போது பழைய உலகம் விநாசம் ஆக வேண்டும். மிக அன்பான தந்தையிடமிருந்து மிக அன்பான குழந்தைகளாகிய நீங்கள் ஆஸ்தி அடைந்து கொண்டிருக்கிறீர்கள். நான் உங்களை என் கூடவே அழைத்துச் செல்வேன் என்று தந்தையைத் தவிர வேறு யாரும் கூற முடியாது. அனைத்தும் பரமாத்மாவே பரமாத்மா தான் என்ற அவர்கள் கூறிவிடுகின்றனர். பிறகு இவ்வாறு எப்படி கூற முடிகிறது? இந்த அனைத்து விசயங்களையும் குழந்தைகளாகிய நீங்கள் மட்டுமே அறிவீர்கள், வேறு யாரும் அறியவில்லை. நல்லது.

 

இனிமையிலும் இனிமையான, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாய் தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1) நடக்கவிருக்கும் விநாசத்தைப் புரிந்துக் கொண்டு முழுமையிலும் முழுமையாக ஸ்ரீமத் படி நடக்க வேண்டும். நினைவு பலத்தின் மூலம் உலக இராஜ்யம் அடைவதற்கான முயற்சி செய்ய வேண்டும். ஒளி ஏற்றப்பட்ட தனது தீபத்தின் மூலம் அனைவரின் தீபத்தையும் ஏற்றி உண்மையான தீபாவளி கொண்டாட வேண்டும்.

 

2) புகழ்-இகழ் அனைத்தையும் பொறுத்துக் கொண்டு பாபாவிற்கு சமம் அன்புக் கடலாக ஆக வேண்டும். நடத்தைகள் மிகவும் ராயலாக வைத்துக் கொள்ள வேண்டும். மிகக் குறைவாகப் பேச வேண்டும்.

 

வரதானம்:

தனது ஞான சொரூபத்தின் மூலம் ஞானம் கொடுக்கக் கூடிய ஞானம் நிறைந்த தகுதியான ஆசிரியர் ஆகுக !

 

தனது ஞான சொரூபத்தின் மூலம் ஞானம் கொடுப்பவர் தான் தகுதியான ஆசிரியர் என்று கூறப்படுகிறார். அவர்களது சொரூபமே ஞானம் நிறைந்ததாக இருக்கும். அவர்களது பார்வை மற்றும் நடத்தை மற்றவர்களுக்கு ஞானம் போதிக்கும். எவ்வாறு சாகார ரூபத்தில் ஒவ்வொரு அடியிலும் ஒவ்வொரு காரியமும் ஞானத்தின் ரூபத்தில் நடைமுறையில் பார்த்தீர்கள், அதையே மற்றொரு வார்த்தையில் குணாதிசயம் அல்லது சொரூபம் என்று கூறுகிறோம். மற்றவர்களுக்கு வார்த்தையின் மூலம் பாடம் கற்பிப்பது என்பது பொதுவான விசயமாகும், ஆனால் அனைவரும் அனுபவம் செய்யவே விரும்புகின்றனர். ஆக தனது சிரேஷ்ட செயல், சிரேஷ்ட எண்ணங்களின் சக்தியின் மூலம் அனுபவம் செய்வியுங்கள்.

 

சுலோகன்:

எண்ணங்களில் வெற்றியை பிராப்தியாக அடைவதற்காக ஆத்ம சக்தி என்ற பெட்ரோல் நிரப்பிக் கொண்டே செல்லுங்கள்.

 

***ஓம்சாந்தி.***