BK Murli 2 November 2016 TamilBK Murli 2 November 2016 Tamil

02.11.2016    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்

இனிமையான குழந்தைகளே! ஞானம் நிறைந்தவர் ஆவீர்களானால் செல்வந்தர் ஆகி விடுவீர்கள். ஜெகதம்பா ஞான-ஞானேஸ்வரி தான் ராஜ-ராஜேஸ்வரி ஆகிறார்.

 

கேள்வி :

பாபாவுக்குத் தம்முடைய குழந்தைகள் மீது இரக்கம் வருகின்றது. அதனால் சிரேஷ்டமான அதிர்ஷ்டத்தை அமைத்துக் கொள்வதற்காக எந்த ஒரு ஸ்ரீமத் தருகிறார்?

 

பதில் :

இனிமையான குழந்தைகளே, தலை மீது பாவங்களின் சுமை உள்ளது. அதை இறப்பதற்கு முன்பாகவே நினைவு யாத்திரையில் இருந்து இறக்கி வைத்து விடுங்கள். எந்த ஒரு விகர்மமும் செய்யாதீர்கள். பாபா வந்திருக்கிறார், உங்களை எமனின் தூக்குக் கயிற்றிலிருந்து விடுவிப்பதற்காக.. அதனால் இப்போது அந்த மாதிரியான எந்த ஒரு கர்மமும் செய்ய வேண்டாம்.

 

பாடல் :

இரவு நேரப் பயணி களைத்துப் போகக் கூடாது......

 

ஓம் சாந்தி.

இனிமையிலும் இனிமையான ஆன்மிகக் குழந்தைகள் இந்தப் பாடலின் பொருளைப் புரிந்து கொண்டீர்கள். பாபா வந்திருக்கிறார், பக்தி என்ற இரவை அழித்துப் பகலை உருவாக்குவதற்காக. ஏனென்றால் பாபாவைத் தான் அழைக்கின்றனர்-ஹே பதீத-பாவனா வாருங்கள் என்று. ஏதோ ஒரு சமயம் நாம் தூய்மையானவர்களாக இருந்தோம், இப்போது தூய்மை இழந்தவர்களாகிவிட்டோம் என்பதைப் புரிந்து கொண்டுள்ளனர். முதலில் இருந்த, இப்போது இல்லாத ஒரு பொருள் தான் கேட்கப்படுகிறது. குழந்தைகள் நீங்கள் அறிவீர்கள், தூய்மையான தேவி-தேவதைகளின் இராஜ்யம் இருந்தது. ஞான-ஞானேஸ்வரி தான் பிறகு ராஜ-ராஜேஸ்வரி ஆவார்கள். எப்படி ஜெகத் அம்பா மற்றும் லட்சுமி வேறு-வேறு அதுபோல. லட்சுமியை ஒரு போதும் ஜெகத் அம்பா எனச் சொல்ல மாட்டார்கள். லட்சுமியை அவருடைய இரண்டு குழந்தைகளைத் தான் மாதேஸ்வரி என அழைப்பார்கள். இங்கே ஜெகத் அம்பாவை தர்ம சிந்தனை உள்ளவர்கள் அனைவரும் அம்மா என அழைக்கின்றனர். தேவி-தேவதைகளின் கோவிலுக்குச் சென்று அவர்களுக்கு பக்தி செய்கின்றனர். இப்போது உங்களுக்குத் தெரிந்துள்ளது, நாம் அதிகமாக பக்தி செய்திருக்கிறோம். தான-புண்ணியம் முதலியன எவ்வளவு நீங்கள் செய்திருக்கிறீர்களோ, அவ்வளவு வேறு யாரும் செய்திருக்க மாட்டார்கள். நீங்கள் அனைவரைக் காட்டிலும் அதிக பக்தி செய்திருக்கிறீர்கள். இப்போது உங்கள் நினைவுச் சின்னத்தை உயிரோடு இருந்தவாறே பார்த்திருக்கிறீர்கள். ஆதி தேவ் மற்றும் ஆதி தேவி-ஜெகத் அம்பா என அவரை அழைக்கின்றனர். இப்போது நீங்கள் அறிந்து கொண்டீர்கள், ஜெகத் அம்பா செல்வந்தராக ஆகிறார். நீங்கள் அவருடைய குழந்தைகள் இல்லையா? இப்போது நீங்கள் ஆன்மீகக் கல்வி படித்துக் கொண்டிருக்கிறீர்கள். அவர் ஞான தேவதை. அந்த (வெளியுலகின்) ஞானத்தினால் யாரும் ஒரு போதும் ராஜா-ராணி ஆவதில்லை. நீங்கள் அறிவீர்கள், நாம் ஆத்மாக்கள் சிவபாபாவின் குழந்தைகள் மற்றும் இவர் பிரஜாபிதா பிரம்மா. சிவபாபா இவர் மூலமாகப் புது உலகத்தின் ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறார். பிரம்மா மூலமாக ஸ்தாபனை என்பதாகப் பாடப் பட்டும் உள்ளது. இதை நல்லபடியாகப் புரிந்து கொண்டு தாரணை செய்ய வேண்டும். சிங்கத்தின் பால் தங்க வேண்டுமானால் தங்கப் பாத்திரம் வேண்டும் எனச் சொல்கின்றனர் இல்லையா? இந்த ஞானமும் சர்வசக்திவான் பரமபிதா பரமாத்மாவினுடையது. அதற்காகவும் கூட புத்தி என்ற பாத்திரம் தங்கத்தாலானதாக (தூய்மையானதாக) இருக்க வேண்டும். புது உலகில் ஆத்மா, சரீரம் இரண்டுமே தங்கமாக தூய்மையாக இருக்கும். இப்போது உங்களுக்கு ஆத்மா கல்லால் ஆன பாத்திரமாக உள்ளது. ஆகவே சரீரமும் கூட அது போல் உள்ளது. பாரதத்தில் தான் ஷியர்ம் மற்றும் சுந்தர், தூய்மை இல்லாது (கருமை) மற்றும் அழகு (தூய்மை) எனச் சொல்கின்றனர். வேறு எந்த ஒரு கண்டத்திலும் இது போல் சொல்ல மாட்டார்கள்- தூய்மை இழந்த எங்களை வந்து தூய்மையாக்குங்கள் என்று. துக்கத்திலிருந்து விடுவித்து சாந்தியில் அழைத்துச் செல்லுங்கள் எனச் சொல்கின்றனர். புத்தியும் சொல்கிறது-நாம் பாரதவாசிகள் தூய்மையானவர்களாக இருந்தோம். இந்த லட்சுமி-நாராயணரின் இராஜ்யம் இருந்தது. எவ்வளவு தான் பெரிய மனிதர்களாகவும் இருக்கலாம். அவர்களும் கூட குருவின் கால்களில் விழுகின்றனர். ஏனென்றால் குரு சந்நியாசம் தாரணை செய்துள்ளார். 5 விகாரங்களை விட்டு விட்டனர் என்றால் விகாரிகள் நிர்விகாரிகளுக்கு மதிப்பளிக்கின்றனர். தூய்மைக்குகுத் தான் மதிப்பு உள்ளது. துவாபரயுகத்தில் இருந்து ராஜா-ராணி மற்றும் மந்திரிகள் உள்ளனர். சத்யுகத்தில் ராஜா-ராணிக்கு மந்திரிகள் இருப்பதில்லை. எப்போது தூய்மையற்ற ராஜா-ராணி ஆகின்றனரோ, அப்போது ஒரு மந்திரி வைத்துக் கொள்வர். இப்போது மேலும் அதிக தூய்மையில்லாதவர்களாக ஆகி விட்டுள்ளனர் என்றால் ஆயிரக் கணக்கான மந்திரிகளை வைத்துக் கொள்கின்றனர். இது டிராமாவில் விதிக்கப் பட்டுள்ளது. பாபா சொல்கிறார், பாருங்கள், டிராமாவின் விதி எப்படி அமைக்கப் பட்டுள்ளது! ஆக, முதலில் பாரதம் மட்டுமே இருந்தது. பிறகு மற்ற தர்மத்தினர் வந்தனர். பாபா புரிய வைக்கிறார், இச்சமயம் நீங்கள் ஞான-ஞானேஸ்வரி. ஜெகத் அம்பா பிரம்மாவின் மகள், ஞானத்தின் தேவதை. அவர் அடுத்த பிறவியில் தனலட்சுமி ஆகிறார். உங்களுக்கு இப்போது பாபா ஞானத்தைக் கற்றுத் தந்து கொண்டிருக்கிறார். நீங்கள் அறிவீர்கள், நாம் அங்கே தனவான் ஆவோம். உலகத்தில் இது வேறு யாருக்கும் தெரியாது-இந்த லட்சுமி-நாராயணன் எப்படி தனவான் ஆனார்கள் என்று. லட்சுமி-நாராயணர் அதே பிரம்மா சரஸ்வதி தான். பிரம்மா ஜெகத்பிதா என்றால் நிச்சயமாக பிராமண்-பிராமணிகள் அநேகர் இருப்பார்கள். நீங்கள் எவ்வளவு பிராமண்-பிராமணிகள் இருக்கிறீர்கள்! நீங்கள் அறிவீர்கள், நாம் ஞானத்தினால் வருங்காலத்தில் இது போல் தனவான் ஆவோம். ஒரேயடியாக செல்வத்தின் தேவதையாக, இதை விட அதிக செல்வம் யாரிடமும் இருக்க முடியாது. அதனால் பாடப் படுகின்றது - ஞானம் (கல்வியறிவு) என்பது வருமானத்துக்கு ஆதாரம். நீதிபதி, வக்கீல் முதலானோர் அந்தக் கல்வி கற்றதனால் ஆகின்றனர் இல்லையா? ஆக, அது வருமானம் இல்லையா? சில டாக்டர்களுக்கு ஒரு கேஸிலேயே இலட்சம் ரூபாய் கிடைக்கிறது. யாராவது ராஜா-ராணி அல்லது இளவரசர் நோய்வாய்ப் பட்டால் டாக்டர் வந்து நோயிலிருந்து விடுவித்து விட்டால் குஷியில் வந்து பெரிய-பெரிய கட்டடம் கட்டுவதற்காகப் பணம் கொடுத்து விடுகின்றனர். எவ்வளவு வருமானம் ஆயிற்று! ஆக, படிப்பினால் தான் பதவி அடைகின்றனர். இது உங்களுக்குப் படிப்பாகவும் உள்ளது, தொழிலாகவும் உள்ளது.

 

இனிமையான குழந்தைகள் நீங்கள் பாபாவிடம் கொடுக்கல்-வாங்கல் செய்வதற்காக வந்திருக்கிறீர்கள். ஒன்றுக்கும் உதவாததைக் கொடுத்து இலட்சம் சம்பாதிக்கிறீர்கள். பாபா அவிநாசி சர்ஜனாகவும் உள்ளார், சதா ஆரோக்கியமானவராக ஆவதற்காக யோகம் கற்றுத் தந்து கொண்டிருக்கிறார். பாபா சொல்கிறார் - நான் கேரண்டி தருகிறேன், 21 பிறவிகளுக்கு நீங்கள் சதா ஆரோக்கியமானவராக ஆவீர்கள். ஆக, அப்படிப்பட்ட சர்ஜனின் மருந்து, அதாவது ஸ்ரீமத் படி ஏன் நடக்கக் கூடாது? தந்தையின் அறிவுரையை ஏற்றுக் கொள்ளுங்கள். என்னை நினைவு செய்யுங்கள். சொல்கின்றனர் இல்லையா - நினைத்து-நினைத்து சுகம் பெறுங்கள், உடலைப் பற்றிய பயம்-வேதனை அனைத்தும் நீங்கி விடும் என்று? பக்தி மார்க்கத்தில் வேதனை, துயரம் எதுவும் நீங்குவதில்லை. அநேக சந்நியாசிகளும் கூட நோய்-நொடியில் விழுந்து விடுகின்றனர். பைத்தியம் பிடித்தது போல் ஆகி விடுகின்றனர். குழந்தைகள் நீங்கள் அறிவீர்கள், தந்தையின் ஸ்ரீமத் படி நடப்போமானால் நாம் சதா ஆரோக்கியமானவராக ஆகி விடுவோம். அங்கே ஆயுள் சராசரியாக 125-150 ஆண்டுகள் இருக்கும். துவாபர யுகத்திலிருந்து ஒரேயடியாக ஆயுள் 35 ஆக ஆகி விடும் என்பது கிடையாது. முதலில் 100-125 இருக்கும். பிறகு 70-80 ஆகும். இப்போதோ 35-40 ஆண்டு வரை வந்து சேர்ந்துள்ளது. சிறு வயதிலேயே இறந்து போகின்றனர். ஏனென்றால் போகியாக உள்ளனர். நீங்கள் அறிவீர்கள், இப்போது போகியிலிருந்து யோகி ஆகிக் கொண்டிருக்கிறோம். அங்கே ஆயுள் அவ்வளவு அதிகமாக இருக்கும், அகால மரணம் ஒரு போதும் நிகழாது. பாபா நினைவு படுத்துகிறார், உங்களுக்கு எவ்வளவு இராஜ்ய பாக்கியம் இருந்தது! இப்போது இராவணன் அபகரித்துக் கொண்டான். அங்கே இந்தக் கோவில் முதலியவை இருக்காது. உங்களது ஸ்லோகனும் உள்ளது - பாரதத்தின் ஆதி சநாதன தேவி-தேவதா தர்மம் வாழ்க, மற்ற அனைத்தும் ஒழிக – அதாவது அநேக தர்மங்கள் அழிந்து போகும். அங்கே ஒரே ஒரு பாரத கண்டம் மட்டுமே இருந்தது. ஒரு கண்டத்தில் மனிதர்களும் கொஞ்சம் பேர் தான் இருப்பார்கள். நீங்கள் எழுத முடியும்-சிறிது காலத்தில் பாரதத்தின் ஜனத்தொகை 9 இலட்சமாக ஆகி விடும் என்று. மற்ற அனைவரும் அழிந்து இறந்து போவார்கள். ஒரு தர்மத்தின் ஸ்தாபனை இப்போது நடைபெற்றுக் கொண்டுள்ளது. புதிய தெய்விக இராஜ்யத்தில் ஒரே மொழி, ஒரே மாதிரியான பழக்க-வழக்கங்கள் இருக்கும். இங்கே ஒவ்வொருவரின் பழக்க-வழக்கமும் வெவ்வேறாக உள்ளது. அங்கே ஒரே இராஜ்யம், ஒரே குலம் இருந்தது. நீங்கள் இப்படி-இப்படி ஸ்லோகன் செய்தித்தாளில் கூட போட முடியும். பாபாவிடம் அறிவுரை பெறுகின்றனர்-பணம் செலவழித்து செய்தித்தாளில் போடட்டுமா? பாபா சொல்வார், தாராளமாகப் போடுங்கள். மனிதர்களுக்குத் தெரியட்டும் என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று. சொல்லவும் செய்கின்றனர், கிறிஸ்துவுக்கு 3000 ஆண்டுகளுக்கு முன் சொர்க்கம் இருந்தது என்று. ஒரே தர்மம், சூரியவம்சி தேவி-தேவதாக்களின் ஒரே குலம் இருந்தது. இந்த மகாபாரத யுத்தத்திற்குப் பின் சொர்க்கத்தின் கதவு திறந்திருந்தது. செய்தித்தாளில் போடுங்கள், பெயர் பி.கே. என்று இருக்கட்டும். ஆனால் எப்போது தூய்மையாக இருக்கின்றனரோ, அப்போது தான் பி.கே. என்று சொல்லிக் கொள்ள முடியும். தந்தையை அழைத்திருக்கிறீர்கள். இப்போது தந்தை வந்திருக்கிறார் என்றால் இப்போது தந்தையிடம் வாக்குறுதி கொடுங்கள். பக்தி மார்க்கத்தில் எவ்வளவு அடி வாங்கினீர்கள், யக்ஞம், தவம், தானம் முதலியன செய்தீர்கள்! முதலில் ஒரு சிவனுக்கு பக்தி செய்து வந்தீர்கள். பிறகு தேவதைகளுக்குச் செய்தீர்கள். இப்போதோ கலப்பட பக்தி செய்பவராக ஆகி விட்டிருக்கிறீர்கள். இப்போது பாபா உங்களை அனைத்து துக்கங்களில் இருந்தும் விடுவிக்கிறார். பாபா குழந்தைகளாகிய உங்களுக்கு ஞானம் கொடுத்து எவ்வளவு உயர்ந்தவராக, மனிதரிலிருந்து தேவதையாக ஆக்குகிறார்! சத்யுகத்தில் உங்களிடம் அனைத்தும் தங்கத்தால் ஆனதாக இருக்கும். பாபா உங்களுக்கு ஸ்ரீமத் கொடுத்து சொர்க்கத்தின் எஜமானர் ஆக்குகிறார். நீங்கள் பிறகு ஏன் ஸ்ரீமத் படி நடப்பதில்லை? பாபா எமனின் தூக்குக் கயிற்றில் இருந்து விடுவிக்கிறார். கர்ப்ப சிறையின் தண்டனைகளில் இருந்து விடுவிக்கிறார். நீங்கள் சொர்க்கத்தில் கர்ப்ப மாளிகையில் இருப்பீர்கள். இங்கே இருப்பது சிறை. ஏனென்றால் மனிதர்கள் பாவ கர்மங்களைச் செய்கின்றனர். அங்கே 5 விகாரங்களே கிடையாது. பிறகும் கூட ராஜா-ராணி மற்றும் பிரஜைகளுக்கிடையில் பதவியில் வேறுபாடோ இருக்கத் தான் செய்யும் இல்லையா? பணம் சம்பாதிப்பதற்காக மனிதர்கள் முயற்சியோ செய்கின்றனர் இல்லையா? அங்கே மந்திரிகள் கிடையாது. ஏனென்றால் நீங்கள் இங்யேயே பலனை அடைகிறீர்கள். இப்போது பாபா சொல்கிறார், குழந்தைகளே, நீங்கள் ஸ்ரீமத் படி நடந்து செல்லுங்கள். நான் தூரதேசத்தில் இருந்து வந்துள்ளேன்-தூய்மையற்ற சரீரத்தில், தூய்மையற்ற இராஜ்யத்தில். இது இராவணனின் தேசம், குழந்தைகளாகிய உங்களுக்கு வந்து ஆஸ்தி தருகிறேன். அப்படிப்பட்ட தந்தையின் கட்டளையை ஏற்று நடக்கவில்லை என்றால் கெட்ட குழந்தை ஆகின்றனர். விகாரங்களுக்குப் பின்னால் போய் இந்த அளவு துன்பப் பட வேண்டியதில்லை. பாபா சொல்கிறார், இந்த விகாரங்கள் துக்கம் தருபவை. தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்குவது எனது வேலை. எவ்வளவு அன்போடு புரிய வைக்கிறார்! - உண்ணுங்கள், அருந்துங்கள், சுகமாக இருங்கள், இதை நினைவு வையுங்கள்-நாம் சிவபாபாவிடம் வந்துள்ளோம், அவரால் நமது வளர்ப்பு நடைபெறுகின்றது. உற்றார்-உறவினரின் பொருட்களை அணிந்து கொள்வீர்களானால் அந்த நினைவு வந்து கொண்டே இருக்கும். பதவி கீழானதாக ஆகி விடும். இங்கே சிவபாபாவின் பண்டாராவில் இருந்து, பதீத பாவனரின் யக்ஞத்தின் மூலம் வளர்ப்பு நடைபெற வேண்டுமேயல்லாமல் தூய்மை இல்லாத வீட்டில் இருந்து அல்ல. வேறு யாராவது கொடுத்த பொருள் இருந்தால் அவர் நினைவு வந்து கொண்டிருக்கும். அதற்காகப் பாடப் பட்டுள்ளது-கடைசி காலத்தில் பெண்ணை நினைத்தால்......... எவ்வளவு நல்ல மனநிலை இருக்க வேண்டும்! இல்லற விவகாரங்களில் இருந்து கொண்டே புத்தியால் புரிந்து கொள்ள வேண்டும்-இவை அனைத்தும் அழிந்து விட்டன என்று. என்னுடையவர் ஒரு பாபா மட்டுமே. இப்போது தந்தையின் மாலை எப்போதாவது நினைவு செய்யப் படுகின்றதா என்ன? நான் குழந்தைகளாகிய உங்களுக்கு நினைவு படுத்துகிறேன்-என்னை நினைவு செய்யுங்கள். உங்களுக்கு மிகுந்த சக்தி கிடைக்கும். விகர்மங்கள் விநாசமாகும். சக்தி நிறைந்தவர்களாகி விடுவீர்கள். இந்த லட்சுமி-நாராயணர் யோக பலம் நிறைந்தவர்கள் இல்லையா? யார் சக்திசாலியாக உள்ளனரோ, அவர்கள் இராஜ்யத்தை அடைகிறார்கள். (பிரம்மா) பாபா தம்முடைய உதாரணம் சொல்கிறார். எனக்கு 12 குருமார் இருந்தனர். குரு சொன்னார், அதிகாலை எழுந்து 1000 மாலைகள் ஜெபிக்க வேண்டும். நான் சொன்னேன், வேறு ஏதாவது நேரம் சொல்லுங்கள். நாள் முழுவதும் வேலை-தொழிலில் களைத்துப் போகிறேன். எப்படி நீங்களும் சொல்கிறீர்கள்- பாபா, காலையில் எழுந்திருக்க முடிவதில்லை. பாபா சொல்கிறார்-என்னால் தூய்மையாக இருக்க முடிவதில்லை நினைவில் இருக்க முடிவதில்லை என்று சொல்லாதீர்கள். நினைவு செய்யவில்லை என்றால் விகர்மங்கள் எப்படி விநாசமாகும்? நீங்கள் தமோபிரதானத்திலிருந்து சதோபிரதானமாக அவசியம் ஆக வேண்டும். இது கடைசிப் பிறவி, அவசியம் தூய்மையாகுங்கள். பாபாவின் ஸ்ரீமத் படி நடக்கவில்லை என்றால் என்ன பதவி அடைவீர்கள்? அரைக்கல்பமாக என்னை அழைத்தீர்கள். இப்போது நான் சொல்கிறேன், தூய்மையாகி என்னை நினைவு செய்யுங்கள். மற்றவர்களுக்கும் கூட வழி சொல்லிக் கொண்டே இருங்கள். செய்தி கொடுத்துக் கொண்டே இருங்கள். பாபா சொல்கிறார்-மன்மனாபவ. மரணம் முன்னாலேயே நின்று கொண்டுள்ளது. நீங்கள் தான் மெசஞ்சர் (செய்தி கொடுப்பவர்) அல்லது பைகம்பர் எனச் சொல்லப் படுகிறீர்கள். பிராமணர்களாகிய உங்களைத் தவிர யாரும் மெசஞ்சர் ஆக முடியாது. பதித-பாவனர் சிவபாபா வருகிறார். அவர் யாருக்குள் பிரவேசமாகிறார் என்பதும் எழுதப் பட்டுள்ளது. பிரம்மாவின் மூலம் ஸ்தாபனை. இதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை. சூட்சும வதனத்தில் பிரஜாபிதா பிரம்மா இருப்பாரா என்ன? இங்கே தான் தூய்மையில்லாமலிருந்து தூய்மையானவராகின்றார். அமைதியின் சக்தியால் ஸ்தாபனை நடைபெறுகின்றது. விஞ்ஞான பலத்தினால் விநாசம். சாந்தி எப்படிக் கிடைக்கும் என்று அனைவருமே கேட்கின்றனர். இப்போது ஆத்மாவோ சாந்த சொரூபமாகவே உள்ளது. இங்கே வந்துள்ளனர், பாகத்தை நடிப்பதற்காக. இங்கே எப்படி சாந்தமாக இருப்பார்கள்? அந்த சாந்தி சாந்திதாமத்தில் கிடைக்கும். இங்கோ துக்கம் தான் கிடைக்கும். சத்யுகத்தில் சுகம்-சாந்தி இரண்டும் இருக்கும்.

 

இப்போது குழந்தைகள் நீங்கள் நேரடியாகவே கேட்கிறீர்கள். பாபா சொல்கிறார்-தூய்மையற்றவர்கள் என்னோடு ஒரு போதும் சந்திக்க முடியாது. இல்லையென்றால் அழைத்து வரும் பிராமணிகள் மீது பாவம் சேரும். (இந்திரசபையில் பரியின் உதாரணம்). உண்மையில் இந்திரசபை என்பது இது தான். இங்கே இருப்பவர்கள் ஞான புஷ்பராகங்கள் மற்றும் மரகதங்கள். ஆக, இன்னும் அதிகமாகக் கூட்ட நெரிசல். பாபா கடுமையாகத் தடை செய்கிறார். எந்த ஒரு தூய்மை இல்லாதவரையும் அழைத்துவரக் கூடாது. முன்பு பாபா எப்போதுமே கேட்பார்-உறுதிமொழி எடுத்துக் கொண்டீர்களா? முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் எனச் சொல்வார்கள். எப்போது பக்கா நிச்சயம் ஏற்படுகிறதோ, அப்போது சந்திக்கலாம். சந்தித்த பின் விகாரத்தில் செல்வார்களானால் நூறு மடங்கு தண்டனை கிடைக்கும். பாபா புரிந்து கொள்வார், ஒரு வேளை இவர்களின் அதிர்ஷ்டத்தில் இல்லை என்று. பாபாவோ அதிர்ஷ்டத்தை அமைத்துக் கொள்வதற்கான முயற்சியை மேற்கொள்ளச் சொல்கிறார். பிறகு அப்படிப்பட்ட தந்தையின் சொல்லைக் கேட்கவில்லை என்றால் என்ன கதி (நிலைக்கு) ஆவார்கள்? பாபாவுக்கு இரக்கம் வருகின்றது. பாபா சொல்கிறார்-தன்னைத் தான் திருத்திக் கொண்டே செல்லுங்கள். போய்க் கொண்டிருக்கும் போதே இறந்து விட்டீர்கள் என்று ஆகக் கூடாது. பயம் இருக்க வேண்டும். நாம் பாபாவை நினைவு செய்து பாவங்களின் சுமையைப் போக்க வேண்டும். நல்லது.

 

இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!

 

தாரணைக்கான முக்கிய சாரம் :

1) கடைசிக் காலத்தில் ஒரு பாபாவின் நினைவு மட்டுமே வருகிற மாதிரியான மனநிலையை அமைத்துக் கொள்ள வேண்டும். வேறு எந்த ஒரு நினைவும் வரக் கூடாது. இவை அனைத்தும் அழிந்து விடப் போகின்றன என்பது புத்தியில் இருக்க வேண்டும்.

 

2) தன்னைத் தான் சீர்திருத்திக் கொள்ள வேண்டும். இந்தக் கடைசிப் பிறவியில் அவசியம் தூய்மையாக வேண்டும். நம்மால் எந்த ஒரு பாவமும் நிகழ்ந்துவிடக் கூடாது என்ற பயம் இருக்க வேண்டும்.

 

வரதானம் :

முதல் ஸ்ரீமத் படி விசேˆ கவனம் கொடுத்து அஸ்திவாரத்தை உறுதியானதாக ஆக்கக் கூடிய சகஜயோகி ஆகுக !

 

பாப்தாதாவின் நம்பர் ஒன் ஸ்ரீமத்-தன்னை ஆத்மா என உணர்ந்து தந்தையை நினைவு செய்யுங்கள். ஆத்மாவுக்குப் பதிலாகத் தன்னை சாதாரண சரீரதாரி எனப் புரிந்து கொண்டிருந்தால் நினைவு நிலைத்திருக்காது. அவ்வாறே இரண்டு பொருட்களை ஒன்றாகச் சேர்க்கும் போது முதலில் சமமாக ஆக்குகின்றனர். அது போலவே ஆத்மா என உணர்ந்து நினைவு செய்வீர்களானால் நினைவு சகஜமாக ஆகி விடும். இந்த ஸ்ரீமத் தான் முக்கிய அஸ்திவாரமாகும். இந்த விஷயத்தின் மீது அடிக்கடி கவனம் கொடுப்பீர்களானால் சகஜயோகி ஆகி விடுவீர்கள்.

 

சுலோகன் :

கர்மம் என்பது ஆத்மாவை தரிசனம் செய்ய வைக்கும் கண்ணாடியாகும். அதனால் கர்மத்தின் மூலமாக சக்தி சொரூபத்தை வெளிப்படுத்துங்கள்.

 

***ஒம்சாந்தி***