BK Murli 5 November 2016 Tamil

BK Murli 5 November 2016 Tamil

05.11.2016    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


இனிமையான குழந்தைகளே! சேவையின் கூடவே நினைவு யாத்திரையும் கூட நிலையானதாக இருக்கவேண்டும். இந்த ஆன்மிக யாத்திரையில் ஒருபொழுதும் சோர்ந்து (களைத்து) விடக் கூடாது.

 

கேள்வி:

குழந்தைகளுடைய மனம் ஒருவேளை, ஆன்மிக சேவையில் ஈடுபடவில்லை என்றால், அதற்கான காரணம் என்ன?

 

பதில்:

ஒருவேளை ஆன்மிக சேவையில் மனம் ஈடுபடவில்லை என்றால், அவசியம் தேகஅபிமானத்தின் கிரஹச்சாரம் உள்ளது. போகப் போக தேகஅபிமானத்தின் காரணத்தால் பரஸ்பரம் தங்களுக்குள் கோபம் கொள்கிறார்கள் என்றால் சேவையையே விட்டுவிடுகிறார்கள். ஒருவருக்கொருவர் முகத்தைப் பார்க்கும்பொழுதே சேவைக்கான எண்ணம் மறைந்துவிடுகிறது. ஆகையால், இந்த கிரஹச்சாரத்திலிருந்து பாதுகாப்பாக இருங்கள் என்று பாபா கூறுகின்றார்.

 

பாடல்:

நம்முடைய தீர்த்த யாத்திரை தனிப்பட்டது

 

ஓம்சாந்தி.

இந்த பாடலின் வரியானது குழந்தைகளை எச்சரிக்கை செய்துவிட்டது. என்ன சொல்லப்பட்டுள்ளது? நாம் தீர்த்த யாத்திரை செய்து கொண்டிருக்கிறோம், மேலும், நமது இந்த யாத்திரையானது அனைத்தையும்விட தனிப்பட்டது ஆகும் என்பதை புத்தியில் நினைவு வைக்கவேண்டும். இந்த யாத்திரையை மறக்காதீர்கள். அனைத்திற்கும்ஆதாரம் யாத்திரையே ஆகும். உலகாய யாத்திரைகளுக்குச் சென்ற பின்னர், திரும்பி வந்துவிடுகின்றனர். மேலும், ஜென்ம ஜென்மங்களாக யாத்திரை செய்து கொண்டே வருகின்றனர். நம்முடைய யாத்திரை அதுவல்ல. அமர்நாத்திற்குச் சென்று பிறகு, மரண உலகிற்கு திரும்பி வரும் அந்த யாத்திரை உங்களுடையது அல்ல. அந்த யாத்திரைகள் மற்ற அனைத்து மனிதர்களுடையது ஆகும். தீர்த்த யாத்திரைக்குச் சென்று, சுற்றி வந்த பின்னர் மறுபடியும் தூய்மையற்றவர்களாக ஆகிவிடுகின்றனர். விதவிதமான யாத்திரைகள் உள்ளன அல்லவா. தேவிகளுடைய எண்ணற்ற கோவில்கள் உள்ளன. விகாரிகளுடன் இணைந்து எத்தனை பேர் யாத்திரை செல்கின்றனர். குழந்தைகளாகிய நீங்கள் நிர்விகாரியாக இருப்பதற்கான வாக்களித்திருக்கிறீர்கள். நிர்விகாரிகளாகிய உங்களுடைய யாத்திரை இது. எப்பொழுதும் தூய்மையாக இருக்கும் நிர்விகாரி தந்தையை நினைவு செய்ய வேண்டும். நீர் நிறைந்துள்ள கடலை விகாரி என்றோ அல்லது நிர்விகாரி என்றோ சொல்ல முடியாது. மேலும், அதிலிருந்து உருவாகி இருக்கும் கங்கைகளும் கூட நிர்விகாரி ஆகாது. மனிதர்கள், எதையுமே புரிந்துகொள்ள முடியாத அளவிற்கு தூய்மை இல்லாதவர்களாகிவிட்டனர். அந்த உலகாய யாத்திரைகளானது அல்பகால பலன் தரும் யாத்திரைகள் ஆகும். இந்த (நினைவு) யாத்திரை உயர்ந்தது ஆகும். குழந்தைகளாகிய உங்களுக்கு எழுந்தாலும் அமர்ந்தாலும் யாத்திரையைப் பற்றிய சிந்தனை இருக்க வேண்டும். யாத்திரைக்குச் செல்லும்பொழுது தொழில், இல்லற விவகாரம் முதலிய அனைத்தும் மறக்கப்படுகிறது. அமர்நாத் வாழ்க என்று சொல்லிக் கொண்டே செல்வார்கள். ஓரிரு மாதங்கள் யாத்திரை சென்றுவிட்டு வந்த பின்னர் அசுத்தத்தில் விழுந்துவிடுகின்றனர். பின்னர், கங்கா ஸ்நானம் செய்யச் செல்கின்றனர். நாம் தினமும் தூய்மை இழக்கின்றோம் என்பது அவர்களுக்குத் தெரிவதே இல்லை. கங்கை, யமுனைக் கரையில் இருப்பவர்களும் கூட தினமும் தூய்மை அற்றவர்களாகின்றனர். தினமும் கங்கையில் சென்று ஸ்நானம் செய்கின்றனர். ஒன்று நியமமாக உள்ளது, மற்றும் இரண்டாவது முக்கியமான நாட்களில் செல்கின்றனர். கங்கை பதீத பாவனி (தூய்மை ஆக்கக்கூடியது) எனப் புரிந்திருக்கின்றனர். குறிப்பாக அந்த ஒரு நாளன்று கங்கை தூய்மை ஆக்கக்கூடியதாக ஆகிறது, பின்னர் அப்படி இருப்பதில்லை என்பது கிடையாது. எந்த நாள் திருவிழா நடக்கிறதோ, அந்த நாள் அது பதீத பாவனி ஆகிறது என்பதல்ல. அது எப்பொழுதும் ஒரே மாதிரியாகவே உள்ளது. தினமும் ஸ்நானம் செய்யச் செல்கின்றனர். குறிப்பாக திருவிழா தினத்தன்று செல்கின்றனர். அர்த்தமே இல்லை. கங்கை, யமுனை எல்லாம் ஒன்றுதான். அதில் பிணத்தையும் போட்டுவிடுகிறார்கள்.

 

இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் ஆன்மிக யாத்திரை செய்ய வேண்டும். இப்பொழுது நாம் வீட்டிற்குச் செல்கிறோம் அவ்வளவு தான். இதில் கங்கை ஸ்நானம் செய்வதற்கான அல்லது சாஸ்திரங்களை படிப்பதற்கான எந்த விஷயமும் இல்லை. தந்தை வருவதே ஒருமுறை தான். முழு உலகமும் கூட துய்மை இல்லாமலிருந்து தூய்மையாக ஒருமுறை தான் ஆகிறது. சத்யுகம் புதிய உலகம், கலியுகம் பழைய உலகம் என்பதையும் அறிந்திருக்கிறீர்கள். புதுஉலகை ஸ்தாபனை செய்வதற்கும் மற்றும் பழைய உலகை வினாசம் செய்வதற்கும் தந்தை அவசியம் வரவேண்டியுள்ளது. இது அவருடைய காரியமே ஆகும். ஆனால், எதையும் புரிந்து கொள்ள இயலாத அளவு மாயா புத்தியை தமோபிரதானம் ஆக்கிவிட்டது. கண்காட்சிக்கு பெரிய மனிதர்கள் எவ்வளவு அதிகமாக வருகிறார்கள் ! சந்நியாசிகளும் வருவார்கள். ஆனாலும், கோடியில் ஒருவரே புரிந்து கொள்வார்கள். நீங்கள் இலட்சக்கணக்கான, கோடிக் கணக்கானவர்களுக்கு புரிய வைக்கிறீர்கள் என்றால் யாரோ ஒருவர் வருகிறார். அனேகருக்கு புரிய வைக்க வேண்டும். கடைசியில், உங்களுடைய இந்த ஞானம் மற்றும் சித்திரங்கள் முதலிய அனைத்தும் செய்தித்தாள்களில் கூட வெளிவரும். ஏணிப்படியும் செய்தித்தாளில் வெளிவரும். இது பாரதத்திற்காகவே உள்ளது, மற்ற தர்மத்தினர் எங்கே செல்வார்கள் என்று கேட்பார்கள். இறுதி நேரம் பற்றியும் பாடப்பட்டுள்ளது. இறுதி என்றால் வீடு திரும்புவதற்கான நேரம் ஆகும். பழைய உலகின் வினாசம், புது உலகின் ஸ்தாபனை ஆகும்பொழுது, அவசியம் அனைவரும் திரும்பிச் செல்வார்கள் அல்லவா! அனைத்தினுடைய அழிவு ஏற்படப்போகிறது. புது உலகம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. குழந்தைகளாகிய உங்களைத் தவிர வேறு யாரும் இந்த விஷயங்களை அறிந்திருக்கவில்லை. நரகவாசிகளின் வினாசம், சொர்க்கவாசிகளின் ஸ்தாபனை நடந்துகொண்டிருக்கிறது என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். கல்ப கல்பம் அவ்வாறு தான் நடக்கும். இப்பொழுது மீதம் இருக்கும் கொஞ்ச காலத்திலும் அனேகருக்கு ஞானம் கிடைத்துவிடும். மேளா (உற்சவம்) நடைபெற்றுக் கொண்டேயிருக்கும். நாங்கள் மேளா செய்யலாமா, கண்காட்சி வைக்கலாமா என்று அனைத்து பக்கங்களிலிருந்தும் (கடிதம்) எழுதிக் கொண்டேயிருக்கிறார்கள். ஆனால், அதன் கூடவே தனது நினைவு  யாத்திரையையும் மறந்துவிடக்கூடாது. குழந்தைகள் முற்றிலுமாக (மனம்) தளர்வாகி சென்றுகொண்டிருக்கின்றனர். வயதானவர்கள் போல் யாத்திரை செய்கின்றனர். சக்தியே இல்லாததுபோல், எதுவுமே சாப்பிடாதவர்கள் போல் இருக்கிறார்கள். பாபாவிற்கு எவ்வளவு சிந்தனை வந்து கொண்டே இருக்கிறது? சிந்தனை செய்து செய்து தூக்கமே கலைந்துவிடுகிறது. அனைவரும் ஞானத்தை ஆழ்ந்து சிந்திக்க (விசார் சாகர் மந்தன்) வேண்டும் அல்லவா! நமக்கு எல்லையற்ற தந்தை கற்பிக்கின்றார் என்று குழந்தைகள் அறிந்திருக்கிறீர்கள். எனவே, குழந்தைகளுக்கு எவ்வளவு எல்லையற்ற குஷி இருக்க வேண்டும்! இந்த படிப்பின் மூலம் நாம் உலகத்திற்கே எஜமானர் ஆகின்றோம். சிலருடைய நடத்தை நண்டு போல் உள்ளது. நண்டு போன்றவர்களை தந்தை தேவதை ஆக்குகின்றார். ஆனாலும், சிலருடைய நடத்தை மாறுவதில்லை. இந்த ஏணிப்படி சித்திரத்தில் மிக நல்ல ஞானம் உள்ளது. ஆனால், குழந்தைகள் அந்தளவு பயன்படுத்துவதில்லை. யாத்திரையே செய்வதில்லை. தந்தையை நினைவு செய்தால் புத்தியின் பூட்டு கூட திறந்துவிடும். தங்கபுத்தி ஆகிவிடும்.குழந்தைகளாகிய உங்களுடைய புத்தி தங்கம் போன்ற புத்தியாக இருக்க வேண்டும். அனேகருக்கு நன்மை செய்ய வேண்டும். நீங்கள் சதோபிரதானத்தில் இருந்து இப்பொழுது தமோபிரதானம் ஆகிவிட்டீர்கள், மறுபடியும் சதோபிரதானம் ஆகவேண்டும். என்னை நினைவு செய்யுங்கள் என்று தந்தை கூறுகின்றார். கிருஷ்ணரை பகவான் என்று கூற முடியாது. அவரை சியாம் (கருநீல நிறம் கொண்டவர்) என்று கூறுகின்றனர். தந்தை கருநீலநிறம் கொண்டவருடைய ஆத்மாவிற்குள் அமர்ந்து பிறகு புரியவைத்திருக்கின்றார். பாபா நம்மை உலகத்தின் எஜமானர் ஆக்குகின்றார் என்று இந்த ஆத்மா அறிந்திருக்கிறது. எனில், புத்தியில் எந்தளவு குஷி நிறைந்து இருக்க வேண்டும்! இதில் கர்வம் கொள்வதற்கான எந்த விஷயமும் கிடையாது. தந்தை எவ்வளவு நிர்அகங்காரியாக இருக்கின்றார். புத்தியில் எவ்வளவு குஷி உள்ளது! நாளை நாம் வைர, வைடூரியங்களால் ஆன மாளிகையை உருவாக்குவோம். புது உலகில் இராஜ்யம் நடத்துவோம். இதுவோ முற்றிலும் அழுக்கான உலகமாக உள்ளது. இந்த உலகத்தின் மனிதர்களோ எதற்கும் பயன்படாதவர்கள், எதையும் அறிந்திருக்கவில்லை. வைரம் போன்ற வாழ்க்கை இருந்தது. அவர்களே பிறகு 84 பிறவிகள் எடுத்ததால் சோழி போல் ஆகிவிட்டார்கள் என்பதையும் காண்பிக்க வேண்டும். இந்த ஏணிப்படி சித்திரம் நம்பர் ஒன் ஆகும். பிறகு, இரண்டாம் எண்ணில் இருப்பது திருமூர்த்தி சித்திரம் ஆகும்.

 

விரைவில் வரும் எதிர்காலத்தில் சிரேஷ்டமான பாரதம் உருவாகிவிடும் என்று நீங்கள் கூறுகிறீர்கள். சிரேஷ்டமான உலகத்தில் மிகவும் குறைவான மனிதர்கள் இருப்பார்கள், இப்பொழுது கோடிக்கணக்கான மனிதர்கள் இருக்கின்றார்கள். மகாபாரத போரும் கூட எதிரில் நிற்கிறது. அனைத்து ஆத்மாக்களும் கொசுக் கூட்டம் போல் செல்வார்கள். நெருப்பு கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது. சீர்திருத்துவதற்காக எவ்வளவு முயற்சி செய்கிறீர்களோ அவ்வளவு, சீர்கெட்டுப் போகிறார்கள். தந்தை குழந்தைகளுக்கு இராஜயோகம் கற்பித்துக் கொண்டு இருக்கின்றார். குழந்தைகளுக்கு எவ்வளவு போதை ஏற்றுகின்றார். சிலருக்கோ இங்கிருந்து வெளியில் சென்றதுமே முழுஞானமும் மறைந்து விடுகிறது. நினைவில் சிறிதும் இருப்பதில்லை. இல்லையென்றால், சேவை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். தந்தை கூட குணத்தைப் பார்த்து சேவைக்கு அனுப்புவார் அல்லவா! இதில் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். சேவையில் அளவற்ற குஷி ஏறும். நல்ல நல்ல பழைய குழந்தைகள், சின்னச் சின்ன விஷயத்தில், பரஸ்பரம் தங்களுக்குள் கோபித்துக் கொள்கிறார்கள். இந்த மாதிரி விஷயங்களின் காரணத்தினால் நீங்கள் சேவை செய்வதில்லை என்பது கூடாது. சேவையை குஷியாக செய்ய வேண்டும். யாருடன் ஒத்துப் போகவில்லையோ, அவர்களுடைய முகத்தை பார்த்த உடனேயே சேவை செய்வதற்கான எண்ணம் மறைந்துவிடுகிறது. சேவையில் மனம் ஈடுபடவில்லை என்றால் ஒதுங்கிவிடுகிறார்கள். பிறகோ, ஞானி மற்றும் அஞ்ஞானிக்கிடையில் எந்த வேறுபாடும் இல்லை. தேக அபிமானம் என்ற கிரஹச்சாரம் வந்து அமர்ந்து கொள்கிறது. இது முதல் நம்பர் வியாதி ஆகும். குழந்தைகளே, ஆத்ம அபிமானி ஆகுங்கள் என்று தந்தை கூறுகின்றார். ஆத்மா தான் அனைத்தும் செய்கிறது அல்லவா! ஆத்மா தான் விகாரியாக மற்றும் நிர்விகாரியாக ஆகிறது. சொர்க்கத்தில் நிர்விகாரியாக இருந்தது. இராவண இராஜ்யத்தில் ஆத்மா தான் விகாரி ஆகி இருக்கிறது. இது கூட நாடகத்தில் அவ்வாறு உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஆகையினாலேயே, ஹே! பதீத பாவனரே வாருங்கள் என்று அழைக்கிறார்கள். யார் நிர்விகாரிகளாக இருந்தார்களோ, அவர்களே மோசமான விகாரிகள் ஆகிவிட்டார்கள். நாம் தான் நிர்விகாரிகளாக இருந்தோம், இப்பொழுது விகாரிகளாக ஆகி இருக்கிறோம் என்பது யாருடைய புத்தியிலும் இல்லை. நாம் ஆத்மாக்கள் மூலவதனத்தில் இருக்கக்கூடியவர்கள். அங்கு நாம் ஆத்மாக்கள் நிர்விகாரிகளாக இருப்போம். இங்கு சரீரத்தில் வந்து நடிப்பு நடித்து நடித்து விகாரி ஆகிவிட்டோம். இதை தந்தை புரிய வைக்கின்றார். ஆத்மா சாந்திதாமத்தில் இருந்து வருகிறது என்றால் அவசியம் தூய்மையாகத்தான் வரும். பிறகு, தூய்மையற்றதாக ஆகிவிடுகிறது. தூய்மையான உலகத்தில் 9 இலட்சம் பேர் இருப்பார்கள். பிறகு, இத்தனை ஆத்மாக்கள் எங்கிருந்து வந்தார்கள்? அவசியம் சாந்திதாமத்தில் இருந்து வந்திருப்பார்கள். அது அமைதியான நிராகாரி உலகம் ஆகும். அங்கு அனைத்து ஆத்மாக்களும் தூய்மையாக இருக்கின்றன, பிறகு, நடிப்பு நடித்து நடித்து, சதோ, ரஜோ, தமோ நிலைக்கு வந்துவிடுகின்றன. பாவனமான நிலையில் இருந்து தூய்மை இழக்க வேண்டும், பிறகு, தந்தை வந்து அனைவரையும் தூய்மை ஆக்குவார். இந்த நாடகம் நடந்து கொண்டே இருக்கிறது. நாடகத்தின் முதல், இடை, கடை பற்றிய இரகசியத்தை தந்தையைத் தவிர வேறு எவரும் சொல்ல இயலாது. அந்தத் தந்தையை யாரும் அறியவேயில்லை. ரிஷிகள், முனிவர்கள் கூட தெரியாது தெரியாது என்றே கூறிச் சென்றுவிட்டனர் - நாங்கள் இறைவன் மற்றும் அவருடைய படைப்பைப் பற்றி அறியவில்லை. பிறகு, இறைதந்தையானவர் ஞானம் நிறைந்தவர் என்றும் கூறுகிறார்கள். பரமாத்மா அனைத்து ஆத்மாக்களின் தந்தை, விதை ரூபம் ஆவார். அவர் ஆத்மாக்களின் விதை ரூபம் ஆவார் மற்றும் இந்த பிரஜாபிதா பிரம்மா மனித சிருஷ்டியின் விதை ரூபம் ஆவார். அந்த நிராகார தந்தை இவருக்குள் பிரவேசம் செய்து, மனிதர் மூலமாக மனிதர்களுக்குப் புரிய வைக்கின்றார். அவரை மனித சிருஷ்டியின் விதை ரூபமானவர் என்று சொல்ல முடியாது. அவர், ஆத்மாக்களின் தந்தை ஆவார் மற்றும் இந்த பிரம்மா மனித சிருஷ்டியின் பிரஜாபிதா ஆவார். தந்தை வந்து இவர் மூலம் ஞானம்அளிக்கின்றார். சரீரம் வேறு ஆத்மா வேறு அல்லவா! மனம், புத்தி, உள்ளம் ஆத்மாவில் உள்ளது. நடிப்பு நடிப்பதற்காக ஆத்மா வந்து, சரீரத்தில் பிரவேசம் செய்கிறது.

 

யாராவது சரீரம் விட்டுவிட்டால், சென்று மற்றொரு சரீரம் மூலம் நடிப்பு நடிப்பார்கள் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். இதில் அழுவதால் என்னவாகும்? போனவர்கள் போனவர்கள் தான். மறுபடியும் வந்து நமது மாமா, சித்தப்பா ஆகமாட்டார்கள். அழுவதால் என்ன பயன்? உங்களுடைய மம்மா சென்றுவிட்டார்கள், நாடகத்தின் அனுசாரமாக நடிப்பு நடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவ்வாறு அனேகர் சென்றுவிட்டனர். ஒவ்வொருவரும் எங்கேயாவது சென்று பிறப்பு எடுக்கிறார்கள். எந்தளவு கட்டளைப்படி நடக்கக்கூடிய குழந்தையாக இருப்பாரோ, அந்தளவு அவசியம் நல்ல வீட்டில் பிறவி எடுத்திருப்பார் என்று புரிந்து கொள்ளப்படுகிறது. இங்கிருந்து சென்றாலே நல்ல வீட்டிற்குத் தான் செல்வார்கள். வரிசைக்கிரமமாக உள்ளார்கள் அல்லவா. யார் எத்தகைய கர்மம் செய்கிறார்களோ, அதற்கேற்ற வீட்டிற்குச் (குழந்தையாக) செல்வார்கள். பின்னால் நீங்கள் சென்று இராஜாவின் வீட்டில் பிறப்பு எடுப்பீர்கள். யார் இராஜாவிடம் செல்வார்கள் என்பதை அவரவர் புரிந்து கொள்ள முடியும் அல்லவா! ஆனாலும், தெய்வீக சமஸ்காரத்தை எடுத்து செல்கிறார்கள் அல்லவா! இதில் மிக பரந்த புத்தியோடு விசார் சாகர் மந்தன் (ஞானத்தை ஆழ்ந்து சிந்திப்பது) செய்ய வேண்டும். தந்தை ஞானக் கடலாக இருக்கின்றார். எனவே, குழந்தைகளும் ஞானக் கடல் ஆக வேண்டும். வரிசைக்கிரமமாக இருக்கத்தான் செய்வார்கள். போகப் போக முன்னேற்றம் ஏற்படும் என்று புரிந்து கொள்ளப்படுகிறது. யார் இன்று நடைமுறையில் (முயற்சி) செய்ய முடியாதவர்களாக இருக்கிறார்களோ, அவர்கள் நாளை அனேக பேரை விட தீவிரமாக முன்னேறிச் சென்று விட முடியும். கிரஹச்சாரம் இறங்கிவிடும். யார் மீதாவது இராகுவின் கிரஹச்சாரம் பிடித்து இருக்கிறது என்றால் சாக்கடையில் விழுந்துவிடுகிறார்கள். எலும்புகள் உடைந்துவிடுகின்றன. எல்லையற்ற தந்தையிடம் உறுதிமொழி செய்துவிட்டு பின்னர் கீழே விழுந்துவிட்டால் தர்மராஜர் மூலம் தண்டனைகள் கூட அதிகமாகக் கிடைக்கும். இவர் எல்லையற்ற தந்தை, எல்லையற்ற தர்மராஜர் ஆவார், பிறகு, எல்லையற்ற தண்டனை கிடைக்கிறது. யார் ஏதாவது சாக்குப் போக்கு சொல்லி ஸ்ரீமத்படி நடந்து கொள்ளாமல் இருந்தாலோ அல்லது தலைகீழான வேலை செய்தாலோ அவசியம் தண்டனை அடைவார்கள். நாம் பகவானை அவமரியாதை செய்கின்றோம் என்பதைக் கூட புரியாமல் இருக்கிறார்கள். இந்த அனைத்து விஷயங்களை தந்தை புரிய வைத்துக் கொண்டிருக்கின்றார். ஸ்ரீமத்படி நடந்து கொள்ளுங்கள், சேவையில் உதவியாளர் ஆகுங்கள். நினைவு யாத்திரையில் இருங்கள். சித்திரங்களை வைத்து புரிய வைக்கும் பயிற்சி செய்தால் பழக்கம் ஆகிவிடும், இல்லையெனில், உயர்பதவி எவ்வாறு கிடைக்கும்? அஞ்ஞான காலத்தில் சிலருடைய மகன் மிக நல்லவராக இருப்பார், சிலர் மிகக் கெட்டவராகவும் இருப்பார்கள். இங்கேயும் கூட சில சிலர் தந்தையின் காரியத்தை உடனேயே செய்து காண்பிக்கின்றனர். எனவே, குழந்தைகள், எல்லையற்ற சேவை செய்ய வேண்டும். எல்லையற்ற ஆத்மாக்களுக்கு நன்மை செய்ய வேண்டும். மன்மனாபவ என்ற செய்தியைக் கொடுக்க வேண்டும். தந்தையை நினைவு செய்வதன் மூலம் உங்களுடைய புத்தி தமோபிரதானத்திலிருந்து சதோபிரதானம் ஆகிவிடும். இப்பொழுது கலியுக தமோபிரதான உலகத்தின் இறுதியாகும். இப்பொழுது சதோபிரதானம் ஆகவேண்டும். அங்கு, ஆத்மாக்கள் கூட வரிசைக்கிரமமாக இருக்கும் உலகம் அல்லவா. பிறகு, அங்கிருந்து வரிசைக்கிரமமாக வந்து நடிப்பு நடிக்கின்றனர். வருவதும் கூட நாடகத்தின் அனுசாரமாக வரிசைக்கிரமமாக வருகிறீர்கள். இப்பொழுது அனைத்து ஆத்மாக்களும் இராவண இராஜ்யத்தில் துக்கத்தில் இருக்கின்றார்கள். ஆனால், அதையும் புரிந்து கொள்ளவில்லை. ஒருவேளை, யாரிடமாவது நீங்கள் தூய்மையின்றி இருக்கின்றீர்கள் என்று சொன்னால் கோபித்துக் கொள்வார்கள். இதுவே விகாரி உலகம் என்று தந்தை புரிய வைக்கின்றார். நீங்கள் தன்னுடைய இராஜ்ய பாக்கியத்தை அடைவீர்கள். மற்ற அனைவரும் வினாசம் அடைந்து திரும்பச் செல்வார்கள் என்று தந்தை கூறுகின்றார். மகாபாரதப் போர் நடக்கப் போகிறது. இதன் மூலம் அனைத்து தர்மங்களும் அழிந்து மீதம் ஒரு தர்மம் மட்டுமே இருக்கும் என்று பாடப்பட்டுள்ளது. இந்த யுத்தத்திற்குப் பின் சொர்க்க வாசல் திறக்கும். எவ்வளவு நல்ல முறையில் குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றார்! போகப் போக உங்களுடைய விஷயங்களை கேட்டுக் கொண்டே இருப்பார்கள், மேலும், வந்து கொண்டே இருப்பார்கள். சூரிய வம்சத்தினர், சந்திரவம்சத்தினர் யார் தூய்மை இல்லாமலாகிவிட்டார்களோ, அவர்களே வந்து வரிசைக்கிரமமாக தனது ஆஸ்தியை அடைவார்கள். அனேக பிரஜைகள் உருவாகுவார்கள்.

 

இனிமையிலும் இனிமையான தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்காக தாய், தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மிகக் குழந்தைகளுக்கு ஆன்மிகத் தந்தையின் நமஸ்காரம்.

 

தாரணைக்காக முக்கியமான சாரம்:-

1. ஒருபொழுதும் பகவானுடைய கட்டளைக்குக் கீழ்படியாமல் இருக்கக் கூடாது. எல்லையற்ற சேவையில் நல்ல குழந்தை ஆகி உதவியாளர் ஆகவேண்டும்.

 

2. ஞான செல்வத்தின் குப்தமான குஷியால் புத்தியை நிறைத்து வைக்கவேண்டும். ஒருவருக்கொருவர் தங்களுக்குள் ஒருபொழுதும் கோபம் கொள்ளக் கூடாது.

 

வரதானம்:

சிரேஷ்டமான அதிர்ஷ்டத்தினுடைய நினைவு மூலம் தன்னுடைய சக்தி சொரூபத்தில் இருக்கக்கூடிய சூரியவம்ச பதவிக்கு அதிகாரமுடையவர் ஆகுக !

 

யார் தன்னுடைய சிரேஷ்டமான அதிர்ஷ்டத்தை சதா நினைவில் வைக்கிறார்களோ, அவர்களே சக்தி சொரூபத்தில் இருப்பார்கள். அவர்களுக்கு சதா தன்னுடைய அனாதி, உண்மையான சொரூபம் நினைவில் இருக்கும். ஒருபொழுதும் செயற்கை முகத்தை தாரணை செய்யமாட்டார்கள். பலமுறை மாயை செயற்கையான குணம் மற்றும் கடமையின் சொரூபம் ஆக்கிவிடுகிறது. சிலரை கோபம் உள்ளவராக, சிலரை பேராசை உள்ளவராக, சிலரை துக்கம் நிறைந்தவராக, சிலரை அசாந்தியாக ஆக்கிவிடுகிறது. ஆனால், உண்மையான சொரூபமானது இந்த அனைத்து விஷயங்களிலிருந்தும் அப்பாற்பட்டது ஆகும். எந்தக் குழந்தைகள்தன்னுடைய உண்மையான சொரூபத்தில் நிலைத்து இருக்கின்றார்களோ, அவர்கள் சூரியவம்ச பதவியின் அதிகாரி (தகுதி) ஆகிவிடுகின்றார்கள்.

 

சுலோகன்:

அனைவரின் மீதும் கருணை காட்டுபவராக ஆனீர்கள் என்றால் நான் என்ற அகங்காரம் மற்றும் வீண் சந்தேகம் அழிந்துவிடும்.

 

***ஒம்சாந்தி***