BK Murli 1 December 2016 Tamil

BK Murli 1 December 2016 Tamil

01.12.2016    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


இனிமையான குழந்தைகளே! நீங்கள் இப்போது 21 பிறவிகளுக்கு உலகத்தின் எஜமானர் ஆகிறீர்கள். இப்போது உங்கள் மீது அழிவற்ற குருவின் (பிரகஸ்பதி) தசை ஏற்பட்டுள்ளது.கேள்வி.

உண்மையான சேவாதாரி குழந்தைகளின் புத்தியில் எந்த ஒரு விஷயத்தின் நினைவு எப்போதும் இருக்கிறது?பதில்:

தானம் கொடுத்த செல்வம் குறைவதில்லை. அவர்கள் எப்போதும் தானம் கொடுத்தபடியே இருக்கின்றனர். நாம் தனக்குத் தான் நன்மையை செய்து கொள்கிறோம் என்பது அவர்களுடைய புத்தியில் இருக்கிறது. தந்தையும் கூட யார் யார் தம்முடைய வாழ்க்கையை உயர்வானதாக ஆக்கிக் கொள்கின்றனர் மற்றும் யார் தேர்ச்சி அடைவார்கள் என்பதை சாட்சியாகிப் பார்க்கிறார். ஞானத்தில் மிகவும் நல்ல பண்புகளும் இருக்க வேண்டும். ஒருபொழுதும் சின்ன சின்ன விஷயங்களில் மனச் சோர்வு அடையக் கூடாது.பாடல்.

நீங்கள் தான் தாயும் தந்தையும்...ஓம் சாந்தி!

குழந்தைகளுக்கு காலை வணக்கங்கள். இன்று குரு வாரமாக (வியாழன்) உள்ளது. குழந்தைகளாகிய உங்களுக்கு இது விருட்சபதியின் நாள் அல்லது பிரகஸ்பதியின் உத்தமமான நாளாகும். வாரத்தில் அனைத்தையும் விட உத்தமமான நாள் இதுவாகும். விருட்சபதியின் பெயர் பாடப்பட்டுள்ளது - பிரகஸ்பதியின் திசை அமர்ந்துள்ளது. விருட்சபதி பாபா மீண்டும் நமக்கு தனது எல்லைக்கப்பாற்பட்ட சுகத்தின் ஆஸ்தியைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார், எல்லைக்கப்பாற்பட்ட சன்யாசத்தையும் செய்விக்கிறார். துறவற மார்க்கத்தைச் சேர்ந்தவர்களுடையதோ எல்லைக்குட்பட்ட சன்யாசம் ஆகும். அனைத்தையும் சன்யாசம் செய்ய வேண்டும். இன்னும் போகப்போக நிறையவே கேட்பீர்கள் என்று தந்தை கூறுகிறார். தூய்மையற்றவரை தூய்மையாக்கக் கூடிய தந்தை வழிகாட்டியாகவும், விடுவிப்பவராகவும் உள்ளார், அவரே கூறுகிறார் - நான் அனைவரையும் முக்தி தாமத்திற்கு அழைத்துச் செல்வதற்காக வந்துள்ளேன். பக்தி மார்க்கத்தில் முக்திக்காகத் தான் முயற்சி செய்கின்றனர். பக்தியில் எவ்வளவு சமயம் இருக்க வேண்டி உள்ளது. அந்த பக்திக்குப் பிறகு பக்தியின் பலன் கிடைக்க வேண்டும். இது உங்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. இதற்கு முழுமையாக 2500 வருடம் பிடிக்கிறது என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். இதுவும் கூட நாடகத்தில் பதிவாகியுள்ளது. இது உருவாகி, உருவாக்கப்பட்ட விளையாட்டாகும். ஒவ்வொருவரும் தத்தம்முடைய நடிப்பை நடித்தபடி இருக்கின்றனர். நீங்களும் கூட கல்பம் கல்பமாக இதே நடிப்பையே நடிக்கிறீர்கள். எவ்வளவு மகிழ்ச்சியான விஷயமாகும். நம்மீது பிரகஸ்பதியின் தசை அமர்ந்துள்ளது. நாம் 21 பிறவிகளுக்கு சொர்க்கத்தின் எஜமானர்களாக ஆகிறோம்.இப்போது நம்முடையது ஏறும் கலையாகும். நரகம் ஒழிக!, சொர்க்கம் வாழ்க! என்று ஆகப்போகிறது. சுக துக்கத்தின் விளையாட்டும் கூட குழந்தைகளாகிய உங்களுக்காகத்தான். இந்த ஆதி சனாதன, தேவி தேவதா தர்மம் மிகவும் சுகத்தைக் கொடுக்கக் கூடியது என்று தந்தை கூறுகிறார். அது புதிய உலகமாகும். அங்கே கனிவளங்களும் புதிதாக இருக்கும். அங்கே உருவாக்கப்படக் கூடிய அனைத்தும் புதிதாக இருக்கும். பழைய பொருளாக ஆகும் போது அவை உண்மையாக இருப்பதில்லை. ஆக, இப்போது உலகத்திலும் கூட சாரம் எதுவும் இல்லை. தந்தையை சர்வ சக்திவான் என்று கூறுகின்றனர். அவர் என்ன சக்தியைக் காட்டுகிறார் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் தான் அறிவீர்கள். தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்கக் கூடிய, சத்கதி வழங்கும் வள்ளல், விடுவிப்பவராகிய தந்தை வந்து உங்களுக்கு எவ்வளவு சக்தியைக் கொடுக்கின்றார். பல தர்மங்களை வினாசம் செய்வித்து ஒரு தர்மம் ஒரு ராஜ்யத்தை ஸ்தாபனை செய்வது என்பது சக்தியின் காரியம் அல்லவா! இந்த உயர்வான காரியத்தைக் குழந்தைகளாகிய உங்கள் மூலமாக செய்விக்கிறார். உங்களுக்கு எவ்வளவு சக்தி கிடைக்கிறது. அதன் மூலம் உங்களுடைய அனைத்து பாவங்களும் நீங்கிவிடுகின்றன. மேலும் நீங்கள் புண்ணிய ஆத்மா ஆகிவிடுவீர்கள். யார் எவ்வளவு முயற்சி செய்வார்களோ அவ்வளவு உயர்ந்த பதவி அடைவார்கள். இல்லாவிட்டாலும் கூட சொர்க்கத்திற்குத் தகுதியானவராக ஆகியே தீருவீர்கள். முதலில் புது உலகமாக இருந்தது, இப்போது பழைய உலகமாக உள்ளது. இதைக் கூட புரிந்து கொள்வதில்லை. முழுக்க முழுக்க மூடநம்பிக்கையாக உள்ளது. குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள் - முதல் நாம் புத்தியற்றவராக இருந்தோம். குருடரின் வாரிசு குருடர் என்று பாடவும் பட்டுள்ளது. அனைவரும் பகவானை தேடியபடியே இருக்கின்றனர். ஏமாற்றங்களை அடைந்தபடி இருக்கின்றனர். எதுவும் கிடைப்பதில்லை. மிகவும் முயற்சி செய்கின்றனர். சிலரோ பாவம் உயிரையும் தியாகம் செய்கின்றனர். தேவதைகளைத் திருப்தி படுத்துவதற்காக பயும் கொடுக்கின்றனர். அதனை பிறகு மகாபிரசாதம் என்று புரிந்து கொள்கின்றனர். இப்போது பசுவதைக்காக அறிவிப்பு வெளியிடுகின்றனர். பசு தாய் போன்றது, பால் கொடுக்கிறது என்று புரிந்து கொள்கின்றனர்.அது போலவே ஆடுகளும் கூட பால் கொடுக்கின்றன. அவற்றை ஏன் பாதுகாப்பதில்லை? ஆக கிருஷ்ணருக்கு பசுவின் மீது அன்பு இருந்தது என்று கூறுகின்றனர். இப்போது அப்படிப்பட்ட விஷயம் எதுவுமில்லை. நீங்களோ சத்யுகத்தின் இளவரசன் இளவரசியாக இருந்தீர்கள். பிறகு 84 பிறவிகள்ற எடுத்து வந்து தமோ பிரதானம் ஆகியுள்ளீர்கள். இப்போது மீண்டும் முயற்சி செய்து சதோபிரதானமான இளவரசன் இளவரசி ஆகவேண்டும். இது இரட்டை கிரீடதாரிகளான இளவரசன் இளவரசி ஆக்கக் கூடிய பாடசாலை ஆகும். கீதா பாடசாலைகளோ நிறைய உள்ளன. ஆனால், அங்கே நீங்கள் சொர்க்கத்தில் இளவரசன் இளவரசியாக கிருஷ்ணரைப் போல ஆவீர்கள் என்று கூறுவதில்லை. இப்படி கீதையை படிக்கக் கூடிய யாராவது கூறுகிறார்களா? இங்கேயோ தந்தை கூறுகிறார் - இந்த பரீட்சை இளவரசன் இளவரசி ஆவதற்கானதாகும். அவர்களிலும் நிறைய நம்பர் (வரிசைக்கிரமம்) உள்ளது. 16108 மாலை பாடப்படுகிறது. 108 மட்டும் இருப்பதில்லை. இப்பொழுதோ எண்ணற்ற மனிதர்கள் இருக்கின்றனர். அவர்கள் குறையத்தான் வேண்டும். நீங்கள் சில விஷயங்களை செய்தித் தாட்களில் கூட போட முடியும் - பசு வதைக்காக நீங்கள் செய்யும் இந்த உண்ணா விரதம் கல்பத்திற்கு முன்பும் கூட செய்தீர்கள். எதுவும் புதிதல்ல. இந்த சமயம் எங்களைத் தூய்மையான உலகத்திற்கு அழைத்துச் செல்லுங்கள் என்று பரமாத்மாவைக் கூப்பிடுகின்றனர். இப்போது எப்படி அழைத்துச் செல்வார் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். ஆனால் அந்த தெய்வீக குணங்கள் இன்னும் வரவில்லை. தெய்வீக குணங்களை தாரணை மிகவும் குறைவாக உள்ளது. ஞானமோ பலருக்கு பிடிக்கவும் செய்கிறது. பிரம்மாகுமார் குமாரிகள் தூய்மையாக இருக்கின்றனர், எளிமையாக இருக்கின்றனர் என்று புரிந்து கொள்கின்றனர். நகை முதலானவைகளை அணிவதில்லை, ஆனால் நடத்தையும் நன்றாக இருக்க வேண்டும். வீட்டில் இருப்பவர்களும் கூட தம் கணவரிடமோ அல்லது தாய் தந்தையரிடமோ எனக்கு நல்ல ஆபரணங்கள், நல்ல துணி மணிகள் எடுத்துக் கொடுங்கள் என்று கூற முடியாது. ஏனென்றால் இப்போது வனவாசத்தில் அமர்ந்திருக்கிறோம் என்று நீங்கள் அறிவீர்கள். இது பழைய சரீரம், இந்த வஸ்திரத்தை (ஆடையை) விடுத்து நாம் விஷ்ணுபுரிக்குச் சென்று கொண்டிருக்கிறோம். நம்முடைய சிவபாபா பதிகளுக்கெல்லாம் பதி, குருமார்களுக்கும் குருவாக இருப்பதனால்தான் பதீத பாவனா வாருங்கள் ! என்று அனைவரும் அவரை நினைவு செய்கின்றனர். அவர்தான் வந்து அனைவருக்கும் சத்கதியை வழங்குகிறார். அகால மூர்த்தி என்று சீக்கியர்களும் கூட அவரைக் கூறுகின்றனர். சத்ஸ்ரீ அகாலன். ஆத்மாவை ஒருபோதும் காலன் சாப்பிடுவதில்லை. சரீரமோ அழிந்து விடுகிறது. ஆத்மாவோ அழிவதில்லை. ஆக அந்த சத்குருவை, அகால மூர்த்தியை, வந்து எங்களுக்கு சத்கதி கொடுங்கள் என்று நினைவு செய்கின்றனர். எங்கிருந்து வந்தோமோ அந்த அகால வீட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள். ஆக, குழந்தைகளாகிய நீங்கள் புரிய வைக்க வேண்டும் - சத்குரு அகால மூர்த்தி அவர் ஒருவர்தான் எனும்போது நீங்கள் தங்களை குரு என்று எப்படி சொல்க் கொள்ள முடியும்? பக்தி மார்க்கத்தின் அளவற்ற குருமார்கள் உள்ளனர். ஞானக்கடல் ஒரே ஒரு தந்தைதான் ஆவார். அவரிடமிருந்து நதிகளாகிய நீங்கள் வெளிப்படுகிறீர்கள். இந்த விஷயங்களை தந்தைதான் புரிய வைக்கிறார். எல்லைக்கப்பாற்பட்ட தந்தை எல்லைக்கப்பாற்பட்ட ஆஸ்தி கொடுக்கிறார். லௌகீக ஆசிரியரும் கூட படிப்பின் ஆஸ்தியைக் கொடுக்கிறார். என்னை மட்டும் நினைவு செய்தீர்கள் என்றால் பாவ கர்மங்கள் அழியும் என்று இப்போது பாபா வந்து கூறுகிறார். தலையின் மீது பாவங்களின் சுமை இருக்கிறது அல்லவா! தந்தையை நினைவு செய்வதன் மூலம் புத்தி தங்கம் போல் ஆகிவிடும். இப்போதோ அனைவரின் புத்தியும் கீழான, இரும்பு யுகத்தினுடையதாக உள்ளது. மூர்த்திகளுக்கு முன்பாகச் சென்று நாங்கள் சீச்சீ ஆகிவிட்டோம் (கீழானவர்கள்) என்கின்றனர். நீங்கள் ஆஹா! ஆஹா ! என்று இருக்கிறீர்கள். நீங்கள்தான் தூய்மையானவராக, உயர்வானவராக இருந்தீர்கள். நீங்கள்தான் தூய்மையற்றவராகி கீழே இறங்கி வந்தீர்கள். நாடகமே பாரதத்தில்தான் ஆகும். 84 பிறவிகளின் கதையும் உங்களால்தான் ஏற்படுகிறது. கிருஷ்ணரின் ராஜ்யத்தில் முதல் வரக்கூடியவர்கள் தான் முழுமையாக 84 பிறவிகள் எடுப்பார்கள். இப்போது சொர்க்கம் எனப்படுகின்ற கிருஷ்ணபுரி ஸ்தாபனை ஆகிக்கொண்டிருக்கிறது என்பது கூட யாருக்கும் தெரியாது. நீங்கள் தெளிவாக எழுதி வைக்க முடியும் – நாங்கள் யோக பலத்தின் மூலம் பாரதத்தை சிரேஷ்டச்சாரியாக ஆக்குவோம். பிறப்பைக் கட்டுப்படுத்துவதற்காக எவ்வளவு தலையை அடித்துக் கொள்கின்றனர். ஆனால் இந்தக் காரியமோ தந்தையினுடையது தான் ஆகும். வினாசத்திற்குப் பிறகு 9 லட்சம் பேர் தான் மீதி இருப்பார்கள். இதில் தந்தை எந்த செலவும் செய்வதில்லை. ஆசீர்வாதம் முதலான எந்த விசயமும் கிடையாது. ஆனால் இந்த பழைய உலகத்தின் வினாசம் ஆகத் தான் வேண்டும். இது சங்கமயுகமாகும். பிரம்மா மூலமாக ஸ்தாபனை என்று பாடவும் பட்டுள்ளது எனும்போது கண்டிப்பாக இங்கேதான் ஆகவேண்டும். எனவே பிரம்மா அமரவைக்கப் பட்டுள்ளார். தாதா ஏன் அமரவைக்கப்பட்டுள்ளார் என்று மனிதர்கள் கேட்கிறார்கள். யாரை அமர வைத்தாலும் கூட இன்னார் ஏன் அமர வைக்கப்பட்டுள்ளார் என்று தான் கூறுவார்கள். பிரம்மாவோ முற்றிலும் சாதாரணமானவராக உள்ளார். அனைவரையும் விட பெரியவராக பிரம்மா தான் இருக்க முடியும். விசயம் முற்றிலும் எளிமையானது தான். ஆனால் எவ்வளவு புரியவைக்க வேண்டி உள்ளது! பகவான் வருவதே தூய்மையற்ற சரீரம் மற்றும் தூய்மையற்ற உலகத்தில் தான். தூய்மையான சரீரமோ இங்கே யாருக்கும் இருக்க முடியாது. முள் நிறைந்த காட்டில் நின்றுள்ளனர் என்று ஏணிப்படி படத்திலும் கூட காட்டப்பட்டுள்ளது. இது தூய்மையற்ற உலகமாக உள்ளதல்லவா! பகவான் வருவதே தூய்மையற்ற சாதாரணமான உடல் தான். பிறகு அவருடைய பெயர் பிரம்மா என வைக்கப்பட்டுள்ளது. இந்த அனைத்து விசயங்களையும் புத்தியில் வைக்க வேண்டும். பலவிதமான மனிதர்கள் கேள்விகளைக் கேட்கின்றனர். ஏணிப்படி படத்தை புரிய வைப்பவர்களுடைய புத்தி மிகவும் நன்றாக இருக்க வேண்டும். ஆனால் யாருக்கு இங்கே வரக்கூடிய பாகமே இல்லையோ அவர்கள் பயனற்ற கேள்விகளைக் கேட்பார்கள். 84 பிறவிகளின் சக்கரம் பாடவும் பட்டுள்ளது. அதையும் கூட அனைவரும் எடுக்க முடியாது. பூஜைக்குரியவர்கள் தான் பூஜாரிகள் ஆகின்றனர். ஞானமோ முற்றிலும் எளிமையானதாகும். தந்தையை நினைவு மட்டும் செய்தீர்கள் என்றால், பாவகர்மங்கள் அழிந்துவிடும். பிறகு நீங்கள் தேவி தேவதை ஆகிவிடுவீர்கள். பிராமணர்கள் தான் பிறகு தேவதைகள் ஆவார்கள். விராட ரூபம், சிருஷ்டிச்சக்கரம், ஏணிப்படிகள், திரிமூர்த்தி என்ற இந்த படங்களுக்கிடையே தொடர்பு உள்ளது. தந்தை புரிய வைப்பதற்காக எவ்வளவு யுக்திகளைக் கூறுகிறார். சிலர் தாரணை செய்கின்றனர். சிலர் ஒரு காதில் வாங்கி மற்றொரு காதில் விட்டுவிடுகின்றனர். நம்முடைய ராஜ்யம் ஸ்தாபனை ஆகிக்கொண்டிருக்கிறது என்பதை குழந்தைகளாகிய உங்களுடைய புத்தியில் உள்ளது. நீங்கள் இப்போது சங்கமயுகத்தில் இருக்கிறீர்கள். ஆத்மாவும் பரமாத்மாவும் வெகுகாலம் பிரிந்திருந்தனர் என்பது சங்கம யுகத்தின் மகிமையாகும். நாம் தான் முதல் சத்யுகத்தில் வருகின்றோம். மற்ற அனைவரும் சாந்திதாமத்தில் இருப்பார்கள். யார் கல்பத்திற்கு முன்பு வந்திருப்பார்களோ மற்றும் நல்ல விதமாகப் படிப்பார்களோ அவர்கள் தான் முதல் வருவார்கள். நல்லவிதமாகப் படிக்காதவர்கள் பின்னால் வருவார்கள். அனைத்தும் கணக்கு வழக்காகும். இந்த விசயங்கள் சேவை செய்யக்கூடிய குழந்தைகளின் புத்தியில் பதியும். செல்வம் கொடுக்கக் கொடுக்க குறைவதில்லை என்று பாடவும் பட்டுள்ளது. தானம் கொடுப்பதில்லை என்றால் படிப்பதே இல்லை என்று பொருள். யார் பாரதத்தின் ஆன்மீக சேவாதாரியாக உள்ளனர் என்று தந்தை பார்க்கிறார். அவர்கள் தனக்குத்தான் நன்மை செய்து கொள்வது போலாகும். தந்தை படிப்பையும் படிக்க வைக்கிறார். யார் யார் தம்முடைய வாழ்க்கையை உயர்வாக்கிக் கொள்கிறார்கள் மற்றும் யார் தேர்ச்சி அடைகிறர்கள் என்று சாட்சியாகி பார்க்கவும் செய்கிறார். அனைவரையும் விட உயர்வான சேவாதாரி யார் என்பதை நீங்களும் பார்க்கிறீர்கள். கண்காட்சிகளிலும் கூட அந்தக் குழந்தைகளைத் தான் அழைக்கின்றனர். சென்று பார்ப்போம் அனுபவம் செய்வோம் என்று நினைக்காமல் சிலர் அப்படியே சென்றுவிடுகின்றனர். இந்த ஞானத்தில் நல்ல ஒழுக்கங்களும் இருக்க வேண்டும். மனச்சோர்வும் அடையக்கூடாது. தொட்டால் சிணுங்கி என்று ஒரு செடி உள்ளது. கை பட்டதும் அது சுருங்கிவிடுகிறது. எவ்வளவு அதிசயமான மூகையாக உள்ளது. மற்றொன்று சஞ்சீவினி மூகை ஆகும். அது மலைகளின் மீது இருக்கும். உண்மையில் பாபா வந்து உங்களுக்கு மன்மனாபவ என்ற சஞ்சீவினி மூகையைக் கொடுக்கின்றார். மற்றபடி சாஸ்திரங்களிலோ என்னென்னவோ எழுதிவைத்து விட்டனர். நீங்கள் தான் வரிசைக்கிரமமான முயற்சிக்கு ஏற்றாற்போல மகாவீரர், மகாவீராங்கனைகள் ஆவீர்கள். நீங்களும் கூட மாயையின் மீது வெற்றி அடைகிறீர்கள். நீங்கள் கண்ணுக்குத் தெரியாத போராளிகள் ஆவீர்கள். மிகப் பெரிய இம்சை காம ஆயுதத்தால் தாக்குவதாகும். கோபித்துக் கொள்வது, கடுமையாகப் பேசுவது என்பது 2வது நம்பராகும். இதுவும் கூட இம்சை தான் ஆகும்.குழந்தைகளுக்கோ எப்போதும் குஷியின் அளவு அதிகரித்தபடி இருக்க வேண்டும். சேவையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளவர்களின் பெயர்களிலும் தாய்மார்களின் பெயர் முன்னால் உள்ளது. நீங்கள் சிவசக்தி சேனையைச் சேர்ந்தவர்கள் ஆவீர்கள். தாய்மார்கள் செய்து கொண்டிருக்கக்கூடிய இந்தக் காரியம் மிக நன்றாக உள்ளது என்று கவர்னரும் கூறினார். ஆனால் இங்கேயோ இது இருபாலருக்குமான ஞானமாகும். ஆம் தாய்மார்கள் பெரும்பான்மையாக உள்ளனர். பிரஜாபிதா பிரம்மா மூலமாக குமாரிகள் மட்டுமே வந்தனர் என்பதல்ல. குமார்களும் கூட உள்ளனர் அல்லவா! இருவரும் ஞானத்தை எடுக்கும் போது இல்லறம் நல்ல விதமாக நடக்கும். பெண் குழந்தை பிறந்தது என்றால் லட்சுமி வந்துவிட்டாள் என்று புரிந்து கொள்கின்றனர். பெண் குழந்தை பிறக்கவில்லை என்றால் வீடு வெறிச்சோடியதாக புரிந்து கொள்கின்றனர். பாருங்கள் - லட்சுமிக்கு பூஜை செய்கின்றனர். பெண்ணை வீட்டின் அலங்காரம் என்று ஏற்றுக் கொள்கிறார்கள். லட்சுமி இருக்கிறார் என்றால், அவருடன் நாராயணரும் இருப்பார். இன்றைய நாட்களில் தாய்மார்களுக்கு அதிக மதிப்பு கொடுக்கின்றனர். அனைவரையும் விட அதிகமான மதிப்பை தந்தை தான் வந்து கொடுக்கிறார். முதல் லட்சுமி பிறகு நாராயணர் ஆவர். இன்றைய நாட்களில் மிஸ்டர் மற்றும் மிஸஸ் என்ற வார்த்தையை விட்டு ஸ்ரீ என்ற பெயர் வைத்துவிட்டனர். இது மாயையின் வழியாகும். வேறு எந்தக் கண்டத்திலும் ஸ்ரீ என்ற வார்த்தை ஒருபோதும் கிடையாது. ஸ்ரீ கிறிஸ்து என்று ஒருபோதும் கூறுவதில்லை. ஸ்ரீமத் ஒரு பகவானுடையது தான் ஆகும். அந்த ஸ்ரீமத் மூலமாக சிரேஷ்டாச்சாரியாக ஆக்குகிறார். குழந்தைகளாகிய நீங்களோ நிறைய முயற்சி செய்ய வேண்டும். ஆனால் சிலர் தேக அபிமானத்தில் வந்து தம்முடைய பதவியை கீழானதாக ஆக்கிவிடுகின்றனர். இந்த சமயம் அனைவரும் தேக அபிமானிகளாக உள்ளனர். ஆத்மாக்களுக்கு பரமாத்மா வந்து கல்வியைக் கற்றுக் கொடுக்கிறார் என்ற விசயம் வேறு எந்த பாடசாலையிலும் இருக்க முடியாது. தன்னை ஆத்மா என்று புரிந்து தந்தையை நினைவு செய்யுங்கள் என்ற கல்வியைக் கற்றுக் கொடுக்கிறார். நாடகத்தில் இப்படிப்பட்ட நடிப்பு யாருக்கும் இல்லை. ஆத்மாவில்தான் முழுமையாக 84 பிறவிகளின் அழிவற்ற நடிப்பு அடங்கியுள்ளது. ஏணிப்படிகளின் படம் தெளிவாக்கி விடுகிறது. 84 பிறவிகள் யார் எடுத்தனரோ அவர்கள்தான் வருவார்கள் என்று நீங்கள் அறிவீர்கள். மற்றவர்கள் பின்னால் வரக்கூடியவர்கள் என்று புரிந்து கொள்ள வேண்டும். இப்போது குழந்தைகள் மிகவும் புத்திசாகளாக ஆக வேண்டும். நல்ல விதமாகப் படிக்க வேண்டும். நன்றாகப் படித்து மற்றும் படிக்க வைப்பவர்கள் தான் உயர்ந்த பதவியை அடைவார்கள். தேகத்துடன் சேர்ந்து அனைத்தையும் மறந்து விடுங்கள் என் தந்தை மிகவும் நல்ல விதமாக புத்திமதி கொடுக்கிறார். தன்னை ஆத்மா என்று புரிந்து கொள்ளுங்கள். இந்த பழைய உலகத்தை மறந்து விடவேண்டும். ஒரு தந்தையை மட்டும் நினைவு செய்ய வேண்டும். நினைவின் மூலம் தான் தந்தையின் ஆஸ்தியை அடைவீர்கள். இன்றைய நாட்களில் பகவானை நினைவு செய்யுங்கள் என்று சுட்டிக் காட்டுகின்றனர். அப்போது கண்டிப்பாக தந்தை ஒருவர் தான் அல்லவா! மற்ற அனைவரும் குழந்தைகள் ஆவர். உயர்விலும் உயர்வானவர் சிவபாபா தான் ஆவார். பிறகு பிரம்மா விஷ்ணு சங்கரர் பிறகு ஜெகதம்பா... பக்தி மார்க்கத்தின் விஸ்தாரம் மரமாகும். ஞானம் என்பது விதையாகும். நல்லது.இனிமையிலும் இனிமையான காணாமல்போய் கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கங்கள்.ஆன்மீகக் குழந்தைகளுக்குஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.தாரணைக்கான முக்கிய சாராம்:

1. இந்த சமயம் தன்னை வனவாசத்தில் உள்ளவராகப் புரிந்து கொள்ள வேண்டும். நல்ல உடைகள் நல்ல ஆபரணங்கள் அணிய வேண்டும் என்ற ஆர்வத்தை விட்டுவிட வேண்டும். எளிமையாக இருந்தபடி நடத்தையை மிகவும் ராயலாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்.2. தொட்டால் சிணுங்கியாக ஒருபோதும்ஆகக்கூடாது. வாயினால் கடுமையான பேச்சுகளை பேசக்கூடாது. சஞ்சீவினி மூகை மூலம் மாயையை வென்றவர் ஆகவேண்டும்.வரதானம் :

ஒரு வினாடியில் திட எண்ணத்தின் மூலம் சுயத்தின்-உலகத்தின் மாற்றத்தைக் கொண்டு வரக்கூடிய, ஆன்மீக மந்திரவாதி ஆகுக !எப்படி மந்திரவாதிகள் குறைந்த நேரத்தில் மிக அற்புத விளையாட்டுகளைக் காண்பிக்கின்றனரோ, அப்படி ஆன்மிக மந்திரவாதிகளாகிய நீங்கள், உங்களது ஆன்மிக சக்தியின் மூலம் முழு உலகில் மாற்றத்தைக் கொண்டு வரக்கூடியவர்கள், அனைத்தையும் இழந்தவரை இரட்டை கிரீடதாரி ஆக்கக் கூடியவர்கள், உங்களை மாற்றிக் கொள்ள ஒரே ஒரு வினாடியின் திட எண்ணம் கொள்கிறீர்கள், அதாவது, நான் ஆத்மா உலகத்தை மாற்றுவதற்காக, தன்னை உலகின் ஆதார மூரத், உதார மூரத்திகளாக உணர்ந்து, உலக மாற்றத்தின் காரியத்தில் சதா மூழ்கி இருக்கிறீர்கள். எனவே, அனைவரிலும் சிறந்த மந்திரவாதிகள் நீங்களே ஆவீர்கள் !சுலோகன் :

யார் சுயராஜ்ய அதிகாரிகளோ, அவர்கள் ஒருபோதும் பிறருக்கு, பிறவற்றிற்கு அடிமைகளாக இருக்க மாட்டார்கள்.
***OM SHANTI***