BK Murli 1 January 2017 Tamil

bk murli today

Posted by: BK Prerana

BK Prerana is executive editor at bkmurlis.net and covers daily updates from Brahma Kumaris Spiritual University. Prerana updates murlis in English and Hindi everyday.
Twitter: @bkprerana | Facebook: @bkkumarisprerana
Share:






    BK Murli 1 January 2017 Tamil

    01.01.2017    காலை முரளி  ஓம் சாந்தி  ''அவ்யக்த பாப்தாதா'' ரிவைஸ்  31.12.1999    மதுபன்

    புது நூற்றாண்டில் தன்னுடைய நடத்தை மற்றும் முகம் மூலம் பரிஷ்தா சொரூபத்தை வெளிப்படுத்துங்கள்

    இன்று பாப்தாதா தன்னுடைய பரமாத்மா வளர்ப்பிற்கு உரிமையுள்ள குழந்தைகளைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்து கொண்டிருக்கிறார். சுயம் பரமாத்மாவின் வளர்ப்பில் வளர்ந்து கொண்டிருக்கும் இவர்கள் எவ்வளவு பாக்கியம் நிறைந்தவர்கள். உலகத்தினர் எங்களுக்கு பரமாத்மா தான் உணவளிக்கிறார் (படியளக்கிறார்) என்று கூறுகிறார்கள், ஆனால் மிகக்குறைந்த விசேஷ ஆத்மாக்கள் நீங்கள் நடைமுறையில் அவருடைய வளர்ப்பில் வளர்ந்து கொண்டிருக்கிறீர்கள். பரமாத்மாவின் வளர்ப்பு இருக்கிறது, பரமாத்மாவின் ஸ்ரீமத் இருக்கிறது, அந்த ஸ்ரீமத்படியே நடந்து கொண்டிருக்கிறீர்கள், வளர்ந்து கொண்டிருக்கிறீர்கள். அந்த மாதிரி தன்னை விசேஷ ஆத்மாக்கள் என்று அனுபவம் செய்கிறீர்களா? தன்னுடைய மகான் நிலையை தெரிந்திருக்கிறீர்களா? தற்சமயமோ பிராமண ஆத்மாக்கள் மகான் தான் ! மேலும் எதிர்காலத்திலும் சர்வ சிரேஷ்ட மகானாக இருக்கிறீர்கள். துவாபர்யுகத்திலும் உங்களுடைய ஜட விக்கிரகங்கள் அந்த அளவு மகான் ஆகிவிடுகின்றன. உங்களுடைய ஜட விக்கிரகங்களின் எதிரில் யார் சென்றாலும் தலை வணங்குவார். உங்களுடைய மகான் நிலை அந்த மாதிரியானது, இந்நாட்களால் கூட எந்தவொரு ஆத்மாவையும் வேஷம் போட்டு தேவதை போன்று ஆக்கிவிடுகிறார்கள், லட்சுமி நாராயணன் ஆக்கிவிடுகிறார்கள், ஸ்ரீராம் ஆக்கிவிடுகிறார்கள் என்றாலும் எதுவரை அந்த ஆத்மா தேவதையின் கதாபாத்திரத்தை நடித்துக் கொண்டிருக்கிறதோ அதுவரையிலும் அவர் சாதாரண மனிதன் தான் என்று தெரிந்திருந்தும், தேவதை வேடம் பூண்டிருக்கும் அந்த சாதாரண ஆத்மாவைக் கூட தலைவணங்குவார்கள். அப்படி உங்களுடைய ரூபத்திற்கும் மகான் தன்மை இருக்கிறது. ஆனால் வெறும் பெயர் சூட்டப்படட ஆத்மாக்களையும் மகான் என்று நினைக்கிறார்கள். எனவே அந்த மாதிரியான மகான் நிலையை அனுபவம் செய்கிறீர்களா? தெரிந்திருக்கிறீர்களா? புரிந்திருக்கிறீர்களா மற்றும் வெளிப்படும் ரூபத்தில் தன்னை அனுபவம் செய்கிறீர்களா? ஏனென்றால், மூல ஆதாரமே. அனுபவம் செய்வது தான் !


    பாப்தாதா அனைத்து குழந்தைகளையும் கேட்பவர்களாக மற்றும் தெரிந்து கொள்பவர்களாக மட்டுமின்றி அனுபவம் நிறைந்தவர்களாக ஆக்குகிறார். அனுபவமோ ஒவ்வொருவரின் முகத்திலிருந்தும் நடத்தையிலிருந்தும் தெரிய வந்து விடும். நடத்தை மூலம் அவருடைய நிலை தெரிய வந்து விடும். அப்படியானால் என்னுடைய நடத்தை எப்படி இருக்கிறது? பிராமண நடத்தையா? பிராமணன் என்றால் எப்பொழுதும் நிரம்பிய ஆத்மா. சக்திகளினாலும் நிரம்பியவர், குணங்களினாலும் நிரம்பியவர். . . அப்படியெனில் நடத்தை அப்படி இருக்கிறதா? இவர் சாதாரணமாக இருந்த போதிலும் தெய்வீகமானவர் என்று உங்களுடைய முகத்திலிருந்து தென்படுகிறதா? உங்கள் அனைவரின் பார்வை, உள்உணர்வு, எண்ண அலைகள் ஆன்மீகத்தை, தெய்வீகத்தை அனுபவம் செய்விக்கிறதா? எப்பொழுது கடைசி ஜென்மம் வரையிலும் உங்களுடைய தெய்வீக நிலை, மகான் நிலையை ஜட விக்கிரகங்களிலிருந்து அனுபவம் செய்கிறார்கள் என்றால், தற்சமயம் சைத்தன்ய சிரேஷ்ட அந்த ஆத்மாக்கள் உங்கள் மூலமாக அனுபவம் ஆகிறதா? ஜட விக்கிரகங்கள் உங்களுடையவை தான் இல்லையா?


    என்னுடைய பார்வை தெய்வீகமாக, ஆன்மீகமாக இருக்கிறதா என்று அமிர்தவேளையில் தொடங்கி ஒவ்வொரு நடத்தையிலும் சோதனை செய்யுங்கள்? முகத்தின் ரூபம் எப்பொழுதும் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கிறதா? ஒரே சீரான ஆன்மீக நிலை இருக்கிறதா அல்லது அவ்வப்பொழுது மாறிக் கொண்டே இருக்கிறதா? யோகாவில் அமரும் நேரத்தில் மற்றும் ஏதாவது விசேஷ சேவையின் நேரத்தில் மட்டும் ஆன்மீக நினைவு மற்றும் உள்உணர்வு இருக்கிறது. ஆனால் சாதாரண காரியம் செய்து கொண்டிருந்தாலும் நடத்தை மற்றும் முகத்தில் விசேஷம் தென்படுகிறதா? யாராவது உங்களைப் பார்த்தாலும் நீங்கள் செயல்களைச் செய்வதிலேயே மிகவும் பிஸியாக இருக்கிறீர்கள், ஏதாவது குழப்பமான விஷயம் எதிரில் இருந்தாலும், நீங்கள் உங்களை ஆன்மீகமானவர் என்று நினைக்கிறீர்களா? எனவே பேச்சு, முகம் சாதாரண காரியம் செய்வதிலும் விலகியிருந்து அன்பானதாக இருப்பதாக அனுபவம் ஆகிறதா என்று சோதனை செய்யுங்கள். எந்த நேரத்திலும் திடீரென்று ஏதாவது ஒரு ஆத்மா உங்கள் எதிரில் வந்து விட்டார் என்றால், உங்களுடைய எண்ண அலைகள் மூலம், பேச்சுவார்த்தைகள் மூலம் இவர் ஒரு ஆன்மீக பரிஷ்தா என்று புரிந்து கொள்வாரா? ஏனென்றால் இன்றைய நாள் சங்கமத்தின் நாளாகும். பழையது சென்று கொண்டிருக்கிறது, புதியது வந்து கொண்டிருக்கிறது. எனவே உலகின் எதிரில் என்ன புதுமை தென்பட வேண்டும்? மனதில் நினைவிருக்கிறது மற்றும் புரிந்து கொள்கிறீர்கள் என்ற விஷயம் வேறு. ஆனால் ஸ்தாபனை காரியம் தொடங்கி எவ்வளவு காலம் ஆகிவிட்டது? எவ்வளவு காலம் கடந்து சென்று விட்டது? என்று இதனை யோசியுங்கள். கடந்து சென்ற காலத்தின் கணக்குப்படி இன்னும் எத்தனை காலம் மிச்சம் இருக்கிறது? என்ன அனுபவம் ஆக வேண்டும்? மிக நல்ல நல்ல முயற்சி செய்பவர்களும் இருக்கிறார்கள், முயற்சி செய்து கொண்டும் இருக்கிறார்கள், பறந்து கொண்டும் இருக்கிறார்கள் என்று பாப்தாதா தெரிந்திருக்கிறார். ஆனால் பாப்தாதா இந்த 21வது நூற்றாண்டில் புதுமையைப் பார்க்க விரும்புகிறார். நீங்கள் அனைவரும் நல்லவர்கள், விசேஷமானவர்கள், மகானாகவும் இருக்கிறீர்கள். ஆனால் தந்தையின் பிரத்யக்ஷத்தின் (வெளிப்படுத்துதல்) ஆதாரம் - சாதாரண காரியம் செய்து கொண்டும் பரிஷ்தாவின் நடத்தை மற்றும் நிலை இருக்க வேண்டும். விஷயமே அப்படி இருந்தது, காரியமும் அப்படி இருந்தது, சூழ்நிலைகள், பிரச்சனைகளும் அந்த மாதிரி இருந்தன. எனவேதான் சாதாரண நிலை ஆகி விட்டது என்ற இந்த நிலையைப் பாப்தாதா பார்க்க விரும்பவில்லை. பரிஷ்தா சொரூபம் என்றால் நினைவு சொரூபம் இருக்க வேண்டும், வெளிப்படும் ரூபத்தில் இருக்க வேண்டும். புரிந்து கொள்வது வரை இல்லை, நினைவு வரை இல்லை. ஆனால் சொரூபத்தில் இருக்க வேண்டும். அந்த மாதிரியான மாற்றம் அதன் காரணமாக எந்த நேரத்திலும், எந்த நிலையிலும் ஆன்மீக சொரூபம் அனுபவம் ஆக வேண்டும். அந்த மாதிரி இருக்கிறதா? அல்லது கொஞ்சம் மாறுகிறதா? எப்படி விஷயமோ அப்படி தன்னுடைய சொரூபத்தை உருவாக்காதீர்கள். விஷயம் உங்களை ஏன் மாற்ற வேண்டும், நீங்கள் விஷயத்தை மாற்றுங்கள்! விஷயம் உங்களை மாற்ற வேண்டுமா அல்லது நீங்கள் விஷயத்தை மாற்ற வேண்டுமா? பரிவர்த்தனை (மாற்றம்) என்று எதைக் கூறுவது. நடைமுறை வாழ்க்கையின் உதாரணம் என்று எதைக் கூறுவது? எப்படி நேரமோ, எப்படி சூழ்நிலையோ அதே போல் சொரூபம் உருவாவது என்ற இதுவோ சாதாரண மனிதர்களிடமும் இருக்கிறது. ஆனால் பரிஷ்தா என்றால் பழைய அல்லது சாதாரண நடத்தையிலிருந்தும் விலகியிருப்பது.


    நேரத்தின் அழைப்பு என்பது தானே உங்களுடைய தற்போதைய தலைப்பு இல்லையா? இப்பொழுது நேரத்தின் அழைப்பு விசேஷ மகான் ஆத்மாக்கள் உங்களுக்காக ! பரிஷ்தா என்றால் ஆன்மீக வாழ்க்கையின் சொரூபம் (பிரபாவம்) தென்பட வேண்டும் என்பதே! அவ்வாறு நடக்க முடியுமா? டீச்சர்கள் நடக்க முடியுமா என்று கூறுங்கள். எப்பொழுது நடக்கும்? முடியும் என்பதோ மிக நல்ல விஷயம் தான் இல்லையா? எப்பொழுது முடியும்? ஒரு வருடம் வேண்டுமா? 2000-ம் ஆண்டு முடிவடைய வேண்டுமா? கொஞ்சம் காலம் வேண்டும் என்று யாராவது நினைக்கிறீர்களா? ஒரு வருடம் இல்லை என்றால், 6 மாதம், 6 மாதம் இல்லை என்றால் 3 மாதம் வேண்டுமா? இதில் கையை உயர்த்தவில்லை. உங்களுடைய சுலோகன் என்ன, நினைவிருக்கிறதா? இப்பொழுது இல்லை எனில், எப்போதும் இல்லை இந்த சுலோகன் யாருடையது? பிராமணர்களுடையதா அல்லது தேவதைகளினுடையதா? பிராமணர்களினுடையது தான் இல்லையா? எனவே இந்த புது வருடத்தில் என்ன நடந்தாலும் சரி, ஆனால் ஆன்மீக நிலை சென்று விடக் கூடாது என்ற இதைத் தான் பாப்தாதா பார்க்க விரும்புகிறார். இதற்காக நான்கு வார்த்தைகளின் மீது மட்டும் கவனம் வைக்க வேண்டும். அது என்ன? அது புதிய விஷயம் இல்லை, பழையது தான். அதை மீண்டும் ஞாபகப்படுத்துகிறோம்.


    ஒன்று - நற்சிந்தனையாளர். இரண்டாவது நற்சிந்தனை, மூன்றாவது சுபபாவனை, இவர் மாறினார் என்றால் நான் மாறுவேன் என்ற இந்த பாவனை இல்லை. அவருக்காகவும் சுபபாவனை, தனக்காகவும் சுபபாவனையுடன் இருப்பது. மேலும் நான்காவது, நல்ல சிரேஷ்ட நினைவு மற்றும் சொரூபம் ! ஒரே ஒரு சுபம் என்ற வார்த்தையை மட்டும் நினைவு வைத்துக் கொள்ளுங்கள். இதில் நான்கு விஷயங்களும் வந்து விடும். நான் அனைத்திலும் சுபம் என்ற வார்த்தையை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பது மட்டும் தான். இதையோ பல தடவைகள் கேட்டிருக்கிறீர்கள். மற்றவர்களுக்கும் பல தடவை கூறியிருக்கிறீர்கள். இப்பொழுது அதை சொரூபத்தில் கொண்டு வருவதற்கான கவனம் வைக்க வேண்டும். இவர்கள் தான் ஆக வேண்டும் என்பதை பாப்தாதா தெரிந்திருக்கிறார். மேலும் இனிமேல் வரக்கூடியவர்கள் சாகார ரூபத்திலோ (நடைமுறையில்) உங்களைத் தானே பார்ப்பார்கள்.


    இன்று வருடத்தின் இறுதி நாள் இல்லையா? எனவே பெரும்பான்மையான குழந்தைகளின் வருடாந்திர கணக்கை பாப்தாதா பார்த்தார். என்ன பார்த்திருந்திருப்பார்? முக்கியமாக ஒரு காரணம் பார்த்தார். அழிப்பது மற்றும் உள்ளடக்கும் சக்தி குறைவாக இருக்கிறது என்று பாப்தாதா பார்த்தார். அழிக்கவும் செய்கிறார்கள், தவறாகப் பார்ப்பது, கேட்பது, நினைப்பது, கடந்த காலத்தில் நடந்ததை அழிக்கிறார்கள். ஆனால் எப்படி நீங்கள் கூறுகிறீர்கள் இல்லையா, ஒன்று உணர்வு, இன்னொன்று உள்உணர்வு. அழிக்கிறார்கள் ஆனால் மனதின் தட்டு என்று கூறினாலும் சிலேட் என்று கூறினாலும், காகிதம் என்று கூறினாலும், என்ன கூறினாலும் முழுமையாக அழிப்பதில்லை. ஏன் அழிக்க முடிவதில்லை? அதற்கான காரணம் உள்ளடக்கும் சக்தி, ஆற்றல் மிக்கதாக இல்லை. நேரத்தின் அனுசாரம் உள்ளடக்கியும் விடுகிறார்கள். ஆனால் பிறகு அந்த நேரத்தில் வெளியாகிவிடுகிறது. எனவே நான்கு வார்த்தைகளாக என்ன பாப்தாதா கூறினாரோ அது எப்பொழுதும் இருப்பதில்லை. ஒருவேளை உதாரணமாக மனம் என்ற சிலேட் அல்லது காகிதத்தில் முழுமையாக அழிக்க வில்லை என்றால் அதன் மேல் அதற்கு பதிலாக வேறு ஏதாவது நல்ல விஷயம் எழுத விரும்பினாலும் அது தெளிவாக இருக்குமா? அதாவது அனைத்து குணங்களையும், அனைத்து சக்திகளையும் தாரணை செய்ய விரும்புகிறீர்கள் என்றால் நிரந்தரமாக மற்றும் முழு சதவிகிதத்தில் இருக்குமா? முற்றிலும் சுத்தமாகவும் இருக்க வேண்டும், தெளிவாகவும் இருக்க வேண்டும். அப்பொழுது தான் இந்த சக்திகளை சுலபமாக காரியத்தில் ஈடுபடுத்த முடியும். இது தான் காரணம். பெரும்பான்மையோரின் சிலேட் சுத்தமாகவும் தெளிவாகவும் இல்லை. கொஞ்சம் கொஞ்சமாவது கடந்த காலத்து விஷயங்கள் அல்லது கடந்த காலத்து நடத்தை, வீணான விஷயங்கள் அல்லது வீணாக நடந்து கொண்டது, சூட்சும ரூபத்திலும் உள்ளடங்கி இருக்கிறது என்றால், பிறகு அது அந்த நேரத்தில் வெளிப்படையான ரூபத்தில் வந்து விடுகிறது. எனவே நேரத்திற்குத் தகுந்தாற்போல் முதல் உங்களை சோதனை செய்யுங்கள். தன்னை சோதனை செய்யுங்கள். மற்றவர்களை சோதனை செய்வதில் ஈடுபட்டு விடாதீர்கள். ஏனென்றால், மற்றவர்களை சோதனை செய்வது சுலபமாக இருக்கும், தன்னை சோதனை செய்வது கடினமாக இருக்கும். எனவே எனது மனம் என்ற சிலேட் வீணானவற்றிருலிந்து மற்றும் கடந்த காலத்து விஷயங்களிலிருந்து முற்றிலும் சுத்தமாக இருக்கிறதா என்று சோதனை செய்யுங்கள். மிக சூட்சும ரூபமாக இருக்கிறது. வைப்ரேஷனின் (எண்ண அலைகளின்) ரூபத்தில் இருந்து விடுகிறது. பரிஷ்தா என்றால் முற்றிலும் சுத்தமான மற்றும் தெளிவான நிலை. உள்ளடக்கும் சக்தி மூலம் எதிர்மறையையும் நேர்மறை ரூபத்தில் மாற்றம் செய்து உள்ளடக்குங்கள். எதிர்மறையை அப்படியே உள்ளடக்கி விடாதீர்கள். அதை நேர்மறையில் மாற்றம் செய்து உள்ளடக்குங்கள். அப்பொழுது தான் புது வருடத்தில் புதுமை வரும்.


    இன்னொரு விஷயம் என்ன பார்த்தோம் என்று கூறலாமா? கூறலாமா அல்லது கஷ்டமாக இருக்குமா? எப்படியாவது ஏதாவது செய்து நான் என்னுடன் பரந்தாமத்திற்கு அழைத்துச் செல்லத் தான் வேண்டும், அடித்தாவது அல்லது அன்புடனோ அழைத்துச் செல்லத் தான் வேண்டும் என்று ஏற்கனவே பாப்தாதா கூறியிருக்கிறார். அஞ்ஞானிகளை அடித்து மற்றும் குழந்தைகள் உங்களை அன்புடன் அழைத்துச் செல்வோம். அதே போலவே பாப்தாதா இப்பொழுதும் கூறுகிறார் எப்படியாவது, என்ன செய்தாவது, உலகின் எதிரில் மகான் ஆத்மாக்களை பரிஷ்தா ரூபத்தில் பிரத்யக்ஷம் (வெளிப்படுத்தத்) செய்யத் தான் வேண்டும். தயாராக இருக்கிறீர்கள் தான் இல்லையா? எப்படியாவது உருவாக்கத் தான் வேண்டும் என்று பாப்தாதா கூறியிருக்கிறார் இல்லையா? இல்லையென்றால் புது உலகம் எப்படி வரும்? நல்லது.


    வருடத்தின் இறுதி நாள் இல்லையா? பாருங்கள், பாப்தாதா பெரும்பான்மையோர் என்ற வார்த்தையைக் கூறுகிறார், அனைவரும் என்று கூறவில்லை, பெரும்பான்மையோர் என்று கூறுகிறார். இன்னொரு விஷயம் என்ன பார்த்தோம்? ஏனென்றால் காரணத்தை நிவாரணம் செய்தீர்கள் என்றால் தான் புது படைப்பு ஏற்படும். அப்படி இன்னொரு காரணம் - அலட்சியப் போக்கை வித விதமான ரூபத்தில் பார்த்தோம். சிலரிடம் மிக ராயல் ரூபத்தின் அலட்சியத்தையும் பார்த்தோம். இந்த அலட்சியப் போக்கிற்கான காரணம் ஒரு வார்த்தை. இதெல்லாம் இருக்கத் தான் செய்யும். ஏனென்றால் ஸ்தூலமாகவோ ஒவ்வொருவரும் செய்யும் அனைத்து செயல்களையும் யாரும் பார்க்க முடியாது, சாகார பிரம்மா பாபாவும் சாகாரத்தில் அதாவது நேரெதிரில் பார்க்க முடியாது. ஆனால் இப்பொழுது அவ்யக்த ரூபத்தில் இருக்கும் அவர் ஒருவேளை அவர் விரும்பினார் என்றால், யாருடைய ஒவ்வொரு செயலையும் பார்க்க முடியும். பரமாத்மாவிற்கு ஆயிரம் கண்கள் இருக்கின்றன, லட்சக்கணக்கான கண்கள் இருக்கின்றன, லட்சக்கணக்கான காதுகள் இருக்கின்றன என்ற வர்ணனை உள்ளது. இப்பொழுது உடலற்ற தந்தையும் அவ்யக்த பிரம்மா பாபா இருவரும் இணைந்து பார்க்க முடியும். ஒருவர் எவ்வளவு தான் மறைத்தாலும் இராயலாக, சாதாரணமாக அல்ல, மறைக்கவும் செய்கிறார்கள். அப்படி அலட்சியத்தன்மை ஒன்று வெளிப்படையான ரூபமுடையது மற்றும் இன்னொன்று நுண்ணிய ரூபமுடையது. ஆனால் இரண்டுக்குமே ஒரே மாதிரியான வார்த்தைகளைத் தான் பயப்படுத்துகிறார்கள். இதெல்லாம் இருக்கத் தான் செய்யும், (எவ்வளவோ) பார்த்து விட்டோம், என்ன நடக்கும்! ஒன்றும் நடப்பதில்லை. இப்பொழுதோ செய்து விடுவோம், பிறகு பார்த்துக் கொள்ளலாம், இது அலட்சியமான எண்ணம். விரும்பினார் என்றால் பாப்தாதா அனைவர் கூறுவதையும் கேட்க முடியும். ஆனால் நீங்கள் கூறுகிறீர்கள் இல்லையா? கொஞ்சம் மரியாதையைக் காப்பாற்றுங்கள் என்று. எனவே பாப்தாதாவும் அவருடைய மரியாதையைக் காப்பாற்றிக் கொள்கிறார். ஆனால் இந்த அலட்சியப் போக்கு முயற்சி செய்வதைத் தீவிரமாக ஆக்க முடியாது. மதிப்புடன் தேர்ச்சி அடைபவர்களாக ஆக்காது. எப்படி இதெல்லாம் நடக்கத் தான் செய்யும் என்று நினைக்கிறார்கள் இல்லையா? அப்படி ரிசல்ட்டிலும் நடந்து விடும் ஆனால் அவர்களால் உயரே பறக்க முடியாது. இரண்டு விஷயங்கள் என்ன பார்த்தோம் என்று கேட்டீர்களா? மாற்றம் செய்வதில் ஏதாவது ரூபத்தில் ஒவ்வொருவரிடமும் வேறு வேறு ரூபத்தில் அலட்சியத்தன்மை இருக்கிறது. இதை ஏன் இன்று கூறுகிறோம்? ஏனென்றால் நீங்கள் விரும்பினாலும் அல்லது விரும்பாவிட்டாலும் வலுக்கட்டாயமாக உங்களை (பாபா சமமாக) ஆக்கத் தான் வேண்டும். மேலும் நீங்களும் ஆகத் தான் வேண்டும். இன்று கொஞ்சம் கடுமையாக கூறிவிட்டோம். ஏனென்றால் இதைச் செய்வோம், இதைச் செய்வோம் என்று நீங்கள் திட்டமிடுகிறீர்கள் இல்லையா. . . ஆனால் காரணத்திற்கான நிவாரணம் ஏற்படவில்லை என்றால், தற்காலிகமாக நடக்கும். பின்பு ஏதாவது விஷயம் வந்தது என்றால் விஷயமே அப்படி இருந்தது, அதனால் தான்......... என்று கூறுவீர்கள். என்னுடைய கணக்கு வழக்கே அப்படி இருந்தது என்றும் கூறுவார்கள். எனவே கண்டிப்பாக ஆகித் தான் ஆக வேண்டும். சம்மதம் தான் இல்லையா? டீச்சர்கள் சம்மதமா? வெளிநாட்டினர் சம்மதமா? கண்டிப்பாக ஆகத் தான் வேண்டும் என்று பாப்தாதா கூறுகிறார். பிறகு புது வருடத்தில் ஆகி விட்டோம் என்று கூறுவீர்கள். அந்த மாதிரி தான் இல்லையா? மிகக் குறைந்த காலம் எடுக்க வேண்டும். ஆனால் பாப்தாதாவோ ஒரு வருடம் கொடுக்கிறார். பின்போ சுலபம் தான் இல்லையா? மிக சௌகரியமாக (ஆராம் சே) செய்யுங்கள். ஆராம் என்பதின் அர்த்தம் ஆ, ராம் ! அதாவது தந்தையை நினைவு செய்து பிறகு செய்யுங்கள். அந்த டன்லப் மெத்தையின் ஓய்வை (ஆராம்) செய்யாதீர்கள். பாப்தாதாவிற்கு உங்கள் மேல் அதிக அன்பு இருக்கிறதா அல்லது உங்களுக்கு தந்தை மீது அதிக அன்பு இருக்கிறதா? யாருக்கு இருக்கிறது தந்தைக்கா அல்லது உங்களுக்கா?


    நீங்கள் அனைத்து குழந்தைகளும் அன்பின் நன்றிக் கடனாக அவ்யக்த பிரம்மா பாபாவிற்குச் சமமாக அவசியம் ஆவோம் என்ற இந்த விஷயத்தில் பாப்தாதாவிற்கு உங்கள் அனைவர் மீது நிச்சயம் இருக்கிறது. ஆவீர்கள் தான் இல்லையா? பாப்தாதா விட மாட்டார். அன்பு இருக்கிறது இல்லையா? யார் மேல் அன்பு இருக்கிறதோ அவரை அப்படியே தனியாக விட முடியாது. பிரம்மா பாபாவிற்கு உங்கள் மீது மிகுந்த அன்பு இருக்கிறது. என்னுடைய குழந்தைகள் எப்பொழுது வருவார்கள் என்று காத்துக் கொண்டே இருக்கிறார். எனவே சமமாகவோ ஆவீர்கள் தான் இல்லையா?


    பிரம்மா பாபாவின் ஒரு (ஆன்மீக) உரையாடலைக் கூறுகிறோம். இப்பொழுது 18 ஜனவரி வரப்போகிறது இல்லையா? எனவே பிரம்மா பாபா சிவபாபாவிடம் நீங்கள் குழந்தைகளிடம் தேதியை நிச்சயம் செய்து வாங்குங்கள், நான் எதுவரை காத்துக் கொண்டிருப்பது என்று கூறுகிறார். இந்த தேதியை நிச்சயம் செய்யச் சொல்லுங்கள். அப்பொழுது சிவபாபா என்ன கூறுவார்? புன்முறுவலிட்டுக் கொள்கிறார். இருந்தாலும் குழந்தைகளே அந்த தேதியை நிர்ணயம் செய்யட்டும் என்று பாப்தாதா கூறுகிறார். அதை பாப்தாதா செய்ய மாட்டார். அந்த மாதிரி பிரம்மா பாபா மிகவும் நினைவு செய்கிறார். அப்படியானால் அந்த தேதியை நிர்ணயம் செய்வீர்களா?


    புது வருடத்தில் சமமாக ஆவதற்கான உறுதியான எண்ணத்தை வையுங்கள். நான் பரிஷ்தாவாக கண்டிப்பாக ஆகத் தான் வேண்டும் என்ற லட்சியத்தை வையுங்கள். இப்பொழுது பழைய விஷயங்களுக்கு முடிவு கட்டுங்கள். தன்னுடைய அனாதி மற்றும் ஆதி சம்ஸ்காரங்களை வெளிக்கொணருங்கள். போனாலும் வந்தாலும் காரியங்கள் செய்து கொண்டே நான் தந்தைக்குச் சமமான பரிஷ்தா, எனக்கு பழைய சம்ஸ்காரங்களுடன், பழைய விஷயங்களுடன் எந்த ரிஷ்தா அதாவது உறவும் இல்லை என்பதை நினைவில் வையுங்கள். புரிந்ததா? இந்த பரிவர்த்தனையின் எண்ணத்திற்கு தண்ணீர் விட்டுக் கொண்டே இருங்கள். எப்படி விதைக்கு தண்ணீரும் வேண்டும், வெயிலும் வேண்டும். அப்பொழுது தான் அது வளர்ந்து பழம் கொடுக்கும். அப்படி இந்த எண்ணத்திற்கு, விதைக்கு நினைவின் தண்ணீர் மற்றும் வெயிலைக் கொடுத்துக் கொண்டே இருங்கள். பாப்தாதாவிற்கு நான் என்ன உறுதிமொழி கொடுத்தேன் என்பதை அடிக்கடி நினைவில் கொண்டு வாருங்கள்.நல்லது.


    நாலாபுறங்களிலும் உள்ள மகான் ஆத்மாக்களுக்கு, எப்பொழுதும் பரிவர்த்தனை சக்தியை ஒவ்வொரு நேரமும் காரியத்தில் ஈடுபடுத்தும், உலக மாற்றம் செய்யும் ஆத்மாக்களுக்கு, எப்பொழுதும் திட நிச்சயத்துடன் பிரத்யக்ஷ சொரூபம் காண்பிக்கக்கூடிய, பிராமண நிலையிலிருந்து பரிஷ்தாவாக ஆகும் ஆத்மாக்களுக்கு, எப்பொழுதும் ஒரு தந்தையைத் தவிர வேறு யாரும் இல்லை என்றிருக்கும், தந்தைக்குச் சமமாக ஆகக்கூடிய பாப்தாதாவின் அன்பிற்கு பிரதிபலன் கொடுக்கக்கூடிய மகாவீர் ஆத்மாக்களுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.


    வரதானம்:

    தன்னுடைய நடத்தை மற்றும் முகத்தின் மூலமாக பாக்கிய ரேகையைக் காண்பிக்கும் சிரேஷ்ட பாக்கியவான் ஆகுக !


    பிராமண குழந்தைகள் உங்களுக்கு நேரடியாக அனாதி தந்தை (சிவபாபா) மற்றும் ஆதி தந்தை (பிரம்மா பாபா) மூலமாக இந்த ஆன்மீக ஜென்மம் கிடைத்திருக்கிறது. யாருடைய ஜென்மமே பாக்கியத்தை உருவாக்குபவர் மூலமாக ஆனது என்றால், அவர் எவ்வளவு பாக்கியவனாக ஆனார். தன்னுடைய இந்த சிரேஷ்ட பாக்கியத்தை எப்பொழுதும் நினைவில் வைத்துக் கொண்டே மகிழ்ச்சியாக இருங்கள். நடத்தை மற்றும் முகத்தில் இந்த நினைவு சொரூபம் பிரத்யக்ஷ ரூபத்தில் தனக்கும் அனுபவம் ஆகட்டும், மற்றவர்களுக்கும் தென்படட்டும். உங்களுடைய நெற்றியின் நடுவே இந்த பாக்கியத்தின் ரேகை மின்னிக் கொண்டிருப்பதாகத் தென்படட்டும். அப்பொழுது தான் சிரேஷ்ட பாக்கியவான் ஆத்மா என்று கூறுவோம்.


    சுலோகன் –

    யார் உள்நோக்குமுகமாகி லைட் (ஞானம்) மைட் (சக்தி) ரூபத்தை அனுபவம் செய்கிறாரோ அவர் தான் யோக சொரூப ஆத்மா.


    அறிவிப்பு

    இன்றிலிருந்து நம் அனைவரின் மிகப்பிரியமான பிதாஸ்ரீ பிரம்மா பாபாவின் சம்பன்னம் (நிறைந்த) மற்றும் சம்பூர்ணம் (முழுமை) ஆனதின் இந்த ஜனவரி மாதம் தொடங்குகிறது. நாம் அனைத்து பிரம்மாவின் குழந்தைகள் இந்த மாதத்தை விசேஷமாக அவ்யக்த மாதம், தபஸ்யா மாதத்தின் ரூபத்தில் கொண்டாடுகிறோம். எனவே விசேஷமாக ஒவ்வொரு நாளும் முரளி வகுப்பிற்குப் பிறகு அனைவரும் பத்து நிமிடங்கள் தபஸ்யா ரூபத்தில் ஜுவாலா சொரூப சக்திசாலியான யோகப் பயிற்சி செய்யுங்கள். மேலும் இயற்கையையும் சேர்த்து அனைத்து ஆத்மாக்களுக்கு அமைதி மற்றும் சக்தியின் பலத்தைக் கொடுப்பதற்கான சேவை செய்யுங்கள். இந்த லட்சியத்தோடு ஒவ்வொரு நாளின் முரளியின் கீழே விசேஷமாக ஒரு ஞான பாய்ன்ட் எழுதப்படுகிறது, அது உங்களுக்கு தபஸ்யா செய்வதில் விசேஷ சகயோகம் கொடுக்கும். மேலும் முழு நாளும் கர்மயோகியாகி இருப்பதிலும் உதவி செய்யும் -


    தபஸ்வி மூர்த்தி ஆகுங்கள் -

    தபஸ்வி என்றால் எப்பொழுதும் தந்தையின் அன்பில் ஐக்கியமாகியிருந்து, அன்புக் கடலில் மூழ்கியிருந்து, ஞானம், ஆனந்தம், சுகம், அமைதியின் கடலில் மூழ்கியிருப்பவரைத் தான் தபஸ்வி மூர்த்தி என்று கூறுகிறோம். எனவே அனைவரும் இதே அனுபவங்களில் மூழ்கி விடுங்கள். 


    ***ஒம்சாந்தி***