BK Murli 10 December 2016 Tamil

BK Murli 10 December 2016 Tamil

10.12.2016    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


இனிமையான குழந்தைகளே! உங்களுக்கு பக்தியின் பலனைக் கொடுப்பதற்காக தந்தை வந்திருக்கின்றார். பக்தியின் பலன் ஞானம் ஆகும். ஞானத்தின் மூலம் தான் சத்கதி ஏற்படுகிறது.கேள்வி:

இந்த பிராமண குலத்தில் யார் உயர்ந்தவர்கள் என்று கருதப்படுகிறார்கள்? அவர்களுடைய அடையாளத்தைக் கூறுங்கள்?பதில்:

யார் நன்றாக சேவை செய்யக்கூடியவர்களோ, அவர்களே பிராமண குலத்தில் உயர்ந்ததிலும் உயர்ந்தவர்கள் ஆவார்கள். அவர்களுக்கு எப்பொழுதும் தன்னுடைய முன்னேற்றத்தைப் பற்றிய சிந்தனை தான் இருக்கும். அவர்கள் படித்து மிகவும் தீவிரமாகச் செல்வார்கள். அத்தகைய மகாவீரர் குழந்தைகள் தனது உடல், மனம், செல்வம் ஆகிய அனைத்தையும் ஈஸ்வரிய சேவையில் தான் வெற்றிகரமானதாக ஆக்குவார்கள். தனது நடத்தையின் மீது மிகுந்த கவனம் கொடுப்பார்கள்.பாடல்:

நீங்கள் இரவை தூங்கிக் கழித்தீர்கள்ஓம்சாந்தி.

இது பிழையான பாடல் ஆகும். இந்த உலகத்தில் என்னவெல்லாம் கேட்கிறீர்களோ, அவை அனைத்தும் தவறானது அதாவது பொய்யானது ஆகும். ஹே! பாரதவாசி குழந்தைகளே என்று தந்தை புரிய வைக்கின்றார். குழந்தைகள் யார் தந்தையின் எதிரில் இருக்கிறார்களோ, அவர்களுக்குத் தான் சொல்லப்படுகிறது. அது பக்திமார்க்கம் ஆகும் என்பது இப்பொழுது உங்களுக்குத் தெரிகிறது. பக்தி மார்க்கத்தில் ஜென்ம ஜென்மங்களாக எவ்வளவு வேதங்கள், சாஸ்திரங்கள், உபநிடதங்கள் போன்றவற்றை படித்து வந்திருக்கிறீர்கள். கங்கா ஸ்நானம் செய்து வந்திருக்கிறீர்கள். இந்த கும்ப மேளாவானது எப்பொழுதிலிருந்து நடைபெற்று வருகிறது என்று கேளுங்கள். இது அனாதியானது என்று கூறுவார்கள். எப்பொழுதிலிருந்து செய்து கொண்டு வருகிறார்கள்? இதைக் கூற இயலாது. பக்தி மார்க்கம் எப்பொழுதிலிருந்து ஆரம்பம் ஆகிறது என்பதும் அவர்களுக்குத் தெரியாது. கல்பத்தின் ஆயுளையே தலைகீழாக ஆக்கிவிட்டார்கள். பிரம்மாவின் பகல் மற்றும் பிரம்மாவின் இரவு என்று சாஸ்திரங்களில் எழுதப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்கள். இது கீதையில் தான் உள்ளது. பிராமணர்களான உங்களுடைய பகல் மற்றும் இரவானது எல்லைக்கப்பாற்பட்டது ஆகும் என்று இப்பொழுது தந்தை புரிய வைக்கின்றார். அரைக்கல்பம் பகல், அரைக்கல்பம் இரவு. அவசியம் இரண்டு சமமாக இருக்க வேண்டும் அல்லவா. அரைக்கல்பத்திலிருந்து பக்தி மார்க்கம் ஆரம்பம் ஆகிறது என்பது யாருக்கும் தெரியாது. சோமநாதர் கோவில் எப்பொழுது கட்டப்பட்டது? ஒரு இறைவனின் பக்தி செய்வதற்காக முதன்முதலில் சோமநாதர் கோவில் உருவானது. அரைக்கல்பம் முடிவடைந்த பின் பிரம்மாவின் இரவு ஆரம்பமாகிறது என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். இலட்சக்கணக்கான வருடங்களுக்கான விஷயமாக இருக்க இயலாது. முகம்மது கஜினி, கோவிலிருந்து

பொக்கிஷங்களைக் கொள்ளையடித்துக் கொண்டு சென்று 1300, 1400 வருடங்கள் ஆகியிருக்கும் என்று கூறுகின்றனர். இந்த பழைய உலகத்திடம் நமக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று நீங்கள் இப்பொழுது புரிந்திருக்கிறீர்கள். மற்ற தர்மத்தினர் யார் வருகிறார்களோ, அவர்களுடையது அனைத்தும் இடையிடையில் வரும் பல பிரிவினர் ஆகும். இப்பொழுது அவர்களுக்கும் இறுதிகாலம் ஆகும். தமோபிரதானமாக இருக்கிறார்கள். எத்தனை வர்ணத்தைச் சேர்ந்தவர்கள். சூரியவம்சத்தினர் பிறகு சந்திரவம்சத்தினர் ஆனார்கள், இரண்டு கலைகள் குறைந்துவிட்டன. பின்னர், பிற தர்மத்தினர் வந்தனர். இந்த சமயம் இருப்பதோ பக்திமார்க்கம் ஆகும். ஞானத்தின் மூலம் பகல், சுகம் ஏற்படுகிறது. பக்தியின் மூலம் இரவு, துக்கம் ஏற்படுகிறது. எப்பொழுது பக்தி முடிவடைகிறதோ அப்பொழுது ஞானம் கிடைக்கும். ஞானம் அளிக்கக்கூடியவர் ஒரே ஒரு ஞானக்கடல் தந்தை ஆவார். அவர் எப்பொழுது வருகின்றார்? சிவஜெயந்தி எப்பொழுது கொண்டாடப்படுகிறது ? இது கூட எவருக்கும் தெரியாது. பக்தி எவ்வளவு சமயத்திற்கு நடைபெறுகிறது, பிறகு, ஞானம் எப்பொழுது கிடைக்கிறது என்பதை இப்பொழுது உங்களுக்குத் தந்தை அமர்ந்து புரியவைக்கின்றார். அரைக்கல்பமாக இந்த பக்தி மார்க்கம் நடைபெற்று வந்திருக்கிறது. சத்யுக, திரேதாயுகத்தில் இந்த பக்தி மார்க்கத்தின் சித்திரங்கள் முதலிய எதுவும் இருக்காது. பக்தியின் அம்சம் கூட இருக்காது.இப்பொழுது கலியுகத்தின் இறுதி ஆகும். இப்பொழுது தான் பகவான் வரவேண்டியதாக உள்ளது. இடையில் எவருக்கும் பகவான் கிடைப்பதில்லை. எந்த உருவில் பகவான் கிடைப்பார் என்பது தெரியவில்லை என்று கூறுகின்றனர். கீதையின் பகவான் ஒருவேளை கிருஷ்ணர் என்றால் அவர் இராஜயோகத்தைக் கற்பிப்பதற்காக எப்பொழுது வருவார்? மனிதர்களுக்கு எதுவும் தெரியவில்லை. பக்தி மார்க்கம் முற்றிலும் வேறுபட்டது ஆகும். ஞானம் முற்றிலும் தனிப்பட்டது ஆகும். கீதையில் பகவானின் மகாவாக்கியம் என்று உள்ளது. ஹே! பதீத பாவனரே வாருங்கள் என்று பாடவும் செய்கிறார்கள். ஒருபக்கம் அழைத்துக் கொண்டே இருக்கிறார்கள், மற்றொரு பக்கம் கங்கையில் ஸ்நானம் செய்யச் செல்கிறார்கள். பதீத பாவனர் பரமாத்மா யார் என்ற நம்பிக்கை கொஞ்சம் கூட இல்லை. குழந்தைகளாகிய உங்களுக்கு இப்பொழுது ஞானம் கிடைத்திருக்கிறது. இப்பொழுது நாம் யோகசக்தியின் மூலம் சத்கதியை அடைகிறோம் என்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். என்னை நினைவு செய்தீர்கள் என்றால் பாவகர்மங்கள் (விகர்மங்கள்) அழிந்துவிடும் என்று பாபா கூறுகின்றார். நான் உத்திரவாதம் அளிக்கின்றேன். நான் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பும் கூட, ஹே குழந்தைகளே! தேக சகிதம் தேகத்தின் சம்மந்தங்கள் அனைத்திலிருந்தும் புத்தியின் தொடர்பை துண்டித்து என்னை நினைவு செய்யுங்கள் என்று கூறியிருந்தேன் என்று பதீத பாவனர் தந்தை கூறுகின்றார். இது கீதையின் மகாவாக்கியம் ஆகும். ஆனால், நான் எப்பொழுது கீதை சொன்னேன் என்பது எவருக்கும் தெரியாது. 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நான் உங்களுக்கு கீதை சொல்லியிருந்தேன் என்று நான் கூறுகின்றேன். இந்த சமயம் முழு மனித சிருஷ்டி மரமானது இற்றுப்போன நிலையை அடைந்துவிட்டது. இப்பொழுது தந்தை வந்து உங்களுக்கும் கூட நாடகத்தின் முதல், இடை மற்றும் கடை பற்றிய முழு சக்கரத்தின் இரகசியத்தை புரிய வைத்திருக்கின்றார். தந்தை அவசியம் இறுதியில் தான் வருவார் அல்லவா! புதிய உலகத்தின் படைப்பு மற்றும் பழைய உலகத்தின் அழிவு எவ்வாறு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். நாம் புது உலகமான சொர்க்கத்தின் எஜமானர்கள் ஆக போகிறோம் என்பது இப்பொழுது உங்களுடைய புத்தியில் உள்ளது. இது இராஜயோகம் என்றால் பிறகு நாம் ஏன் பிரஜை ஆகவேண்டும்? மம்மா, பாபா இராஜா, இராணி ஆகின்றார்கள் என்றால் நாமும் ஏன் இராஜா இராணி ஆகக்கூடாது? மம்மா இளமைப் பருவத்தில் இருந்தார்கள். இந்த பாபாவோ வயோதிகர் ஆவார். ஆனாலும் கூட அனைவரையும் விட மேன்மை யாகக் கற்றுக் கொண்டிருக்கின்றார் அல்லவா. அனைவரையும் விட இளைஞர்கள் தீவிரமாக இருக்க வேண்டும் அல்லவா. எவ்வளவு முடியுமோ என்னை மட்டும் நினைவு செய்யுங்கள், மற்ற அனைத்தையும் மறந்துவிடுங்கள் என்று தந்தை கூறுகின்றார். பழைய உலகத்தின் மீது வைராக்கியம் கொள்ள வேண்டும். எவ்வாறு புதிய கட்டடம் உருவாகிறது என்றால் புத்தி அதன் பக்கம் சென்றுவிடுகிறது அல்லவா. அதை கண்கள் மூலம் பார்க்கப்படுகிறது. இதை புத்தி மூலம் அறிகிறீர்கள். அனேகருக்குக் காட்சியும் கிடைக்கிறது. வைகுண்டம், பாரடைஸ், ஹெவன் (சொர்க்கம்) என்றும் கூறுகின்றனர் அவசியம் எப்பொழுதோ இருந்தது அல்லவா. இப்பொழுது இல்லை. பிறகு, இராஜ்யத்தை பிராப்தியாக அடைவதற்காக நீங்கள் இப்பொழுது இராஜயோகம் கற்றுக் கொண்டிருக்கிறீர்கள்.இது சிவபகவானுடைய மகாவாக்கியம் என்பதே முதன்முதல் முக்கியமான விஷயம் ஆகும். கிருஷ்ணர் பகவானாக இருக்க முடியாது. அவரோ முழுமையான 84 பிறவிகளை எடுக்கிறார். பகவானோ பிறப்பு இறப்பில் வருவதில்லை. இது மிகவும் தெளிவான விசயம் ஆகும். சத்யுகத்தில் கிருஷ்ணருடைய உருவம் எதுவாக இருந்ததோ, அது பிறகு இப்போது இருக்க முடியாது. மறுபிறவி எடுத்து எடுத்து பெயர், உருவம் மாறிவிடுகிறது. இந்த சமயம் அந்த ஆத்மாவும் தமோபிரதானமாக உள்ளது. கிருஷ்ணர் துவாபரயுகத்தில் வாழ்ந்தார் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால், அவருடைய அந்த உருவம் துவாபரயுகத்தில் இருக்க முடியாது. பதீதத்திலிருந்து பாவனம் ஆக்குவதற்காக துவாபரயுகத்தில் வரமுடியாது. கிருஷ்ணர் சத்யுகத்தில் தான் இருக்கிறார். அவரை பதீத பாவனர் என்று கூறமுடியாது. கீதையின் பகவான் கிருஷ்ணர் அல்ல, சிவன் ஆவார். அவர் அவசியம் வருகை தருகிறார். சிவஜெயந்தியும் கொண்டாடப்படுகிறது. அவசியம் ஏதாவதொரு ரதத்தில் (உடல்) பிரவேசம் செய்வார். நான் சாதாரண உடலில் வருகின்றேன், அவருக்கு பிரம்மா என பெயர் வைக்கின்றேன் என்று அவரே கூறுகின்றார். பிரம்மா மூலம் விஷ்ணுபுரி ஸ்தாபனை ஆகிறது. மகாபாரதப் போரும் எதிரில் நிற்கிறது. இந்த ஞானத்தை நல்ல முறையில் புத்தியில் நினைவு வைக்க வேண்டும். நாம் மாணவர்கள், தந்தை கற்பித்துக் கொண்டிருக்கின்றார் என்ற நினைவு புத்தியில் இருக்க வேண்டும். மீதம் கொஞ்ச சமயமே உள்ளது. பின்னர், பாபா நம்மை திரும்ப அழைத்துச் செல்வார். யார் தன்னை உயர்ந்தவர்களாக ஆக்குவார்களோ, அவர்களே உயர்ந்த பதவி அடைவார்கள். ஆனால், மாயை முற்றிலும் தோசைக்கல் போல் ஆக்கவல்லது ஆகும். சில குழந்தைகளிடம் சேவை செய்வதற்கான மிகுந்த ஆர்வம் உள்ளது. சிறு சிறு கிராமங்களுக்கு படம் காட்டும் இயந்திரத்தை (புரொஜெக்டர்) எடுத்துச் சென்று சேவை செய்து கொண்டு இருக்கின்றனர். அனேக பிரஜைகளை உருவாக்குகிறார்கள் என்றால் அவசியம் சுயம் இராஜா ஆகுவார்கள். இல்லற விவகாரத்தில் இருந்தபோதிலும் தூய்மையாகவும் இருக்க வேண்டும். அதிக முயற்சி செய்ய வேண்டும். தாய்மார்கள் தூய்மை ஆகின்றார்கள், ஆனால், கணவர் ஆகவிடுவதில்லை என்றால் சண்டை ஏற்படுகிறது. சந்நியாசிகள் சுயம் தூய்மை ஆகின்றார்கள் என்றால் மனைவியை விட்டுவிடுகின்றார்கள். தனது படைப்பை விட்டுவிட்டு ஏன் ஓடுகிறீர்கள் என்று அவர்களை யாரும் எதுவும் கேட்பதில்லை. தூய்மை ஆவதற்காக யாரும் தடை விதிக்க இயலாது. நாம் யாரையும் வீடு வாசலை விட்டுவிடச் சொல்லவில்லை. தூய்மை ஆகவேண்டும் என்று மட்டும் கூறுகின்றார். பிறகு, இதற்கு ஏன் தடை ஏற்படுத்த வேண்டும்? ஆனால், இதைப் பற்றி பேசுவதற்கு மிகுந்த சக்தி வேண்டும். நீங்கள் தூய்மை ஆனீர்கள் என்றால் தூய்மையான உலகத்தின் எஜமானர் ஆகுவீர்கள் என்பது பகவானின் மகாவாக்கியம் ஆகும். இதற்கு மனோநிலையானது மிக நன்றாக உறுதியாக இருக்க வேண்டும். நினைவு வந்துகொண்டே இருக்கும்படியாக, புத்தியின் நினைவு குடும்பத்தின் பக்கம் சென்று கொண்டே இருக்கும்படியாக மோகம் போன்றவை இருக்கக்கூடாது. இதனால் பிறகு, சேவைக்குத் தகுதியானவர் ஆக இயலாது. இங்கேயோ எல்லைக்கப்பாற்பட்ட சந்நியாசம் செய்ய வேண்டும். இது சுடுகாடு ஆகும். தந்தையை நாம் நினைவு செய்ய வேண்டும். அவர் சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லக்கூடியவர் ஆவார். இந்த பிராமண குலத்தில் யார் நன்றாக சேவை செய்கிறார்களோ, அவர்கள் உயர்ந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள். அவர்களுக்கு மிகுந்த மரியாதை கொடுக்க வேண்டும். அவர்களைப் போல் சேவை செய்ய வேண்டும். அப்பொழுதே உயர்ந்த பதவி அடைவீர்கள். இப்பொழுது தன்னுடைய முன்னேற்றத்தைப் பற்றிய கவலை இருக்க வேண்டும். நாம் பாபாவிடமிருந்து ஆஸ்தியைப் பெறுவதற்குத் தகுதியானவர் ஆகியிருக்கிறோமா என்று தன்னைப் பார்க்க வேண்டும். தூய்மை ஆக்கி தன்னுடன் அழைத்துச் செல்லவே தந்தை வந்திருக்கின்றார். அவர் எவ்வாறு ஒதுக்கி (பிரித்து) வைப்பார்? பாபா அனைவரிடமும் கேட்டால் நாங்கள் மகாராணி ஆகுவோம் என்று கூறுகின்றனர். எனில், நடத்தையும் அத்தகையதாக இருக்க வேண்டும் அல்லவா. சிலரோ மிக நல்ல குழந்தைகளாக உள்ளனர். ஆனால், யார் முயற்சியே செய்வதில்லையோ, அவர்கள் என்ன பதவி அடைவார்கள்? ஒவ்வொரு விஷயத்திலும் முயற்சி மூலமே பிராப்தி கிடைக்கிறது. சிலர் நோய்வாய்ப்படுகிறார்கள். பின்னர், சரியான உடனேயே இரவு பகலாக முயற்சியில் ஈடுபட்டு படிப்பில் தீவிரமாகிவிடுகின்றனர். இங்கேயும் கூட சேவையில் ஈடுபட வேண்டும். சேவைக்கான யுக்திகளை (வழிகளை) பாபா அதிகமாகக் கூறுகின்றார். கண்காட்சியில் புரிய வைப்பதற்குப் பயிற்சி செய்யுங்கள்.தன்னை முன்னேற்றி வாழ்க்கையை உயர்வடையச் செய்யுங்கள் என்று பாபா கூறுகின்றார். நான் எவ்வளவு சேவை செய்திருக்கிறேன்? எத்தனை பேரை தனக்கு சமமாக ஆக்கியிருக்கிறேன்?என்ற இந்த கவலை இருக்க வேண்டும். யாரையும் தனக்கு சமமாக ஆக்கவில்லை என்றால் உயர்ந்த பதவியை எவ்வாறு அடைவீர்கள்? அவர்கள் பிரஜையில் சென்றுவிடுவார்கள் அல்லது வேலைக்காரன், வேலைக்காரி ஆகுவார்கள் என்று புரிய வைக்கப்படுகிறது. செய்ய வேண்டிய சேவை அதிகமாக உள்ளது. இப்பொழுது உங்களுடையது சிறிய மரம் ஆகும். உறுதியானதாக இல்லை. புயல் அடித்தவுடன் பக்குவப்படாதவர்கள் விழுந்துவிடுவார்கள். மாயை மிகவும் துன்பமடையச் செய்கிறது. மாயையின் வேலையே பாபாவிடமிருந்து முகத்தைத் திருப்புவது ஆகும். போகப் போக கிரஹச்சாரம் இறங்கிய பின்னர் இப்பொழுது நாங்கள் பாபாவிடமிருந்து முழு ஆஸ்தியைப் பெறுவோம்; உடல், மனம், செல்வத்தின் மூலம் முழுமையாக சேவை செய்வோம் என்று கூறுகின்றனர். அவ்வபொழுது மாயை கவனக்குறைவாக ஆக்கிவிடுகிறது. பிறகு, ஸ்ரீமத்படி நடப்பதை விட்டுவிடுகின்றனர். பின்னர், எப்பொழுது நினைவு வருகிறதோ, அப்பொழுது ஸ்ரீமத்படி நடக்கின்றனர். இந்த சமயம் உலகத்தில் இராவண சம்பிரதாயம் உள்ளது. இந்த தேவதைகள் இராம சம்பிரதாயத்தினர் ஆவர். இராம சம்பிரதாயத்தினர் முன்பு இராவண சம்பிரதாயத்தினர் தலை வணங்குகின்றனர். நாம் விஷ்வத்தின் எஜமானர்களாக இருந்தோம் என்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். 84 பிறவிகள் எடுத்து எடுத்து இப்பொழுது என்ன நிலைமை ஆகிவிட்டது? இப்பொழுது தந்தை அனைவரையும் முயற்சி செய்ய வைக்கின்றார். இல்லையென்றால், நான் பகவானுடைய ஸ்ரீமத்படி நடக்கவில்லையே என்று மிகவும் வருத்தப்பட (பச்சாதாபப்பட) நேரிடும். குழந்தைகளே தவறு செய்யாதீர்கள் என்று பாபா தினமும் புரியவைக்கின்றார். எவ்வாறு நன்றாக சேவை செய்கிறார்கள் என்று சேவை செய்யக்கூடியவர்களைப் பார்க்கிறீர்கள். இன்னார் முதல் தரம், இன்னார் இரண்டாம் தரமாக சேவை செய்யக்கூடியவர்கள். வித்தியாசம் உள்ளது அல்லவா. தந்தை குழந்தைகளுக்குப் புரியவைப்பது சரிதானே அல்லவா! அஞ்ஞான காலத்தில் தந்தை அடியும் கொடுப்பார். இங்கே இந்த எல்லையற்ற தந்தையோ, தன்னை முன்னேற்றமடையச் செய்யுங்கள் என்று அன்போடு புரியவைக்கின்றார். எப்படி இயலுமோ அப்படி முயற்சி செய்ய வேண்டும். 5 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் வந்து குழந்தைகளுடன் சந்திக்கின்றேன், இராஜயோகம் கற்பித்துக் கொண்டிருக்கின்றேன் என்று தந்தைக்கு குஷி ஏற்படுகிறது. நீங்களும் அவர்களே, நாமும் அவரே என்று பாடல் உள்ளது அல்லவா. எனவே, குழந்தைகளாகிய நீங்களும் அதே குழந்தைகள் தான் என்று தந்தை கூறுகின்றார். வேறு எவரும் இந்த விஷயங்களைப் புரிந்துகொள்ள இயலாது. நல்லது.இனிமையிலும் இனிமையான தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்காக தாய், தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மிகக் குழந்தைகளுக்கு ஆன்மிக தந்தையின் நமஸ்காரம்.தாரணைக்காக முக்கியமான சாரம்:-

1. தன்னை சேவைக்குத் தகுதியானவராக ஆக்கவேண்டும். யார் நன்றாக சேவை செய்கிறார்களோ, அவர்களுக்கு முழுமையிலும் முழுமையாக மரியாதை கொடுக்க வேண்டும். தனது முன்னேற்றத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும்.2. உடல், மனம், செல்வத்தின் மூலம் முழுமையாக சேவை செய்ய வேண்டும். ஸ்ரீமத்படி நடக்க வேண்டும். தவறுகள் செய்யக் கூடாது.வரதானம்:

உலக மாற்றம் என்ற உயர்ந்த காரியத்தில் தனது விரல் கொடுக்கக்கூடிய மகான் மற்றும் படைப்பாளர் ஆகுக.எவ்வாறு ஒரு ஸ்தூலமான பொருளை தயாரிக்கும்பொழுது, அதில் அனைத்து பொருட்களையும் போடுகின்றனர். சாதாரணமான இனிப்போ அல்லது உப்போ குறைந்துவிட்டால், சிறந்த பொருள் கூட உண்பதற்குத் தகுந்ததாக ஆக இயலாது. அவ்வாறே, உலக மாற்றம் என்ற இந்த உயர்ந்த காரியத்திற்காக ஒவ்வொரு இரத்தினமும் அவசியமானதாக உள்ளது. அனைவருடைய விரலும் தேவைப்படுகிறது. அனைவரும் அவரவர் ரீதியில் மிக மிக அவசியமானவர்கள், உயர்ந்த மகாரதிகள் ஆவார்கள். ஆகையால், தனது காரியத்தின் சிறப்பினுடைய மதிப்பை அறிந்து கொள்ளுங்கள். அனைவரும் மகான் ஆத்மாக்கள் ஆவீர்கள். எனினும், எவ்வளவு மகானாக இருக்கிறீர்களோ, அவ்வளவு படைப்பாளராகவும் ஆகுங்கள்.சுலோகன்:

தன்னுடைய சுபாவத்தை இணக்கமுள்ளதாக (சரளமாக) ஆக்குங்கள், அப்பொழுது அனைத்து காரியங்களும் எளிதானதாக (ஈஸி) ஆகிவிடும்.
***OM SHANTI***