BK Murli 13 December 2016 Tamil

BK Murli 13 December 2016 Tamil

13.12.2015    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


இனிமையான குழந்தைகளே! உங்களுக்கு ஏராளமான ஈசுவரிய சுகம் கிடைத்துள்ளது. எனவே நீங்கள் மாயாவி சுகங்களை பொருட்படுத்தக் கூடாது. அந்த சுகம் காக்கை எச்சிலுக்குச் சமமாகும்.கேள்வி:

தந்தைக்கு அனைத்து குழந்தைகளிடமும் எந்த ஒரே ஒரு விருப்பம் உள்ளது?பதில்:

எனது எல்லா குழந்தைகளும் நல்ல முறையில் படித்து சிம்மாசனத்தில் அமருபவராக வேண்டும் அல்லது தந்தையின் தோள் மீது அமர வேண்டும். யார் எந்த அளவு தனது நறுமணத்தை பரப்புகிறார்கள் என்று பாபா பார்க்கிறார். குழந்தைகளிடம் துர்நாற்றம் ஏதும் இல்லையே? எனவே குழந்தைகள் கூட அப்பேர்ப்பட்ட முயற்சியில் ஈடுபட்டு விட வேண்டும். ஒரு பொழுதும் கர்ம இந்திரியங்கள் மூலமாக எந்த ஒரு தவறான செயலையும் செய்யக் கூடாது.பாடல்:

உலகமே மாறினாலும் நாங்கள் மாற மாட்டோம்.. .. ..ஓம் சாந்தி.

இந்த பாடனுடைய சிறிய விளக்கம் தந்தை கூறுகிறார். இதில் எந்த ஒரு மாற வேண்டிய விஷயமும் கிடையாது. குழந்தைகள் தந்தையிடம் நாங்கள் உங்களுடைய குழந்தைகள் இல்லை என்று கூற முடியாது. ஆனால் ஏதாவதொரு நேரத்தில் மாறி விடுவார்கள். அப்படியும் குழந்தைகள் ஒரு பொழுதும் தந்தையிடமிருந்து மாறுவதில்லை. குழந்தைகளாகவே இருக்கிறார்கள். ஆனால் குடும்பத்திலிருந்து பிரிந்து விடுகிறார்கள். இப்பொழுது இவர் எல்லையில்லாத தந்தை ஆவார். நான் எனது பரந்தாமத்தில் இருந்து கொண்டிருந்தேன் என்று கூறுகிறார். எப்படி ஆத்மாக்களாகிய நீங்கள் இங்கு வந்து பாகத்தை ஏற்று நடிக்கிறீர்கள், கிரஹஸ்தி ஆக வேண்டி உள்ளது. இங்கு நேரிடையாக நீங்கள் என்னை தாய் தந்தை என்று கூறுகிறீர்கள். நீங்கள் முன்பேயும் தாயும் நீயே, தந்தையும் நீயே, பாபா ! என்று அழைத்துக் கொண்டிருந்தீர்கள். ஆனால் அந்த நேரத்தில் நான் கிருஹஸ்தியாக இருக்கவில்லை. இச்சமயத்தில் வந்து குடும்பஸ்தனாக ஆகி உள்ளேன். குடும்பஸ்தன் கூட 2-4 குழந்தைகள் உடையவனாக அல்ல. ஏராளமான குழந்தைகள் வந்தும் போய்க் கொண்டும் இருக்கிறார்கள். நாங்கள் மாற மாட்டோம் என்றும் கூறுகிறார்கள். ஆனால் மாயை மாற்றி விடுகிறது. தந்தை உயர்ந்ததிலும் உயர்ந்தவர் ஆவார். இவரை விட உயர்ந்த தந்தை வேறு யாரும் இருக்க முடியாது. சாதாரண மனித உடலில் பிரவேசம் செய்துள்ளார். வருங்கால 21 பிறவிகளுக்கு முயற்சிக்கேற்ப சொத்து கிடைக்கிறது என்பதை குழந்தைகள் அறிந்துள்ளார்கள். நிறைய பேர் போகப் போக பின் மாறி விடுகிறார்கள். ஏனெனில், இது மாயையுடன் யுத்தம் ஆகும். இதற்கு முன்பு நீங்கள் மாயையினுடையவராக இருந்தீர்கள். இப்பொழுது தந்தை தத்து எடுத்துள்ளார். அந்த பக்கம் இருப்பது மாயையின் சுகம். இங்கே அந்த சுகம் இல்லை. எனவே மாயையின் சுகம் தன் பக்கம் ஈர்த்து விடுகிறது. இங்கு உங்களுக்கு மறைமுகமான சுகம் உள்ளது. வருங்காலத்தில் ஏராளமான சுகம் பெறுவோம் என்பதை அறிந்துள்ளீர்கள். இங்கு இருக்கும் சுகத்தில் புத்தி சென்றது என்றால், அந்த சுகம் நினைவிற்கு வந்து கொண்டே இருக்கும். கடைசியில் கூட அதுவே நினைவிற்கு வரும். எனவே இந்த மாயாவி சுகங்களை பொருட்படுத்தக் கூடாது. இந்த சுகம் காக்கை எச்சிலுக்குச் சமம் என்று பாடுகிறார்கள். சுகம் நமக்கு சத்யுகத்தில் கிடைக்கும் என்பதை இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். அந்த சுகத்தைப் பெறுவதற்காக நாம் தாய் தந்தையினுடையவராக ஆகி உள்ளோம். தந்தை அவசியம் ஏதோ ஒரு காலத்தில் குடும்பஸ்தனாக ஆகி இருந்திருக்கிறார். அதன் காரணமாக அவரைத் தான் தந்தை என்று கூறப்படுகிறது. பாடச் செய்கிறார்கள். ஆனால் புரிந்து கொள்வதில்லை. எல்லையில்லாத தந்தையும் ஆவார். பின் தாயும் ஆவார் என்பதை இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். இந்த தாய் மூலமாக அதாவது பிரஜாபிதா பிரம்மா மூலமாக சுவீகாரம் செய்துள்ளார். இப்பொழுது பிரஜாபிதா மற்றும் சிவன் இருவருமே தந்தை ஆகிறார்கள். தந்தை தாய் மூலமாக சுவீகாரம் செய்வார் அல்லவா? இப்பொழுது த்வமேவ மாதாஸ் சபிதா. இவருக்கு கூறலாமா இல்லை பிரம்மாவிற்கு கூறலாமா? நாம் எல்லாம் சகோதரர்கள் ஆவோம். அவர் தந்தை ஆவார் என்று பாடவும் செய்கிறார்கள். அதில் தாய் என்ற கேள்வியே இல்லை. நீங்கள் தாய் தந்தை என்று பாடப்படுகிறது. இப்பொழுது தாய் தந்தை எப்படி ஆகிறார் என்பது புரிந்து கொள்ள வேண்டிய அதிசயமான விஷயம் ஆகும். மனிதர்கள் குழம்பவும் செய்கிறார்கள். ஏனெனில் உடல் ஆணினுடையது அல்லவா? எனவே மாதா தத்து எடுக்கப் பட்டார். அவர் சரஸ்வதி. மகள் ஆவார். ஆனால் மகள் மூலமாக தத்து எடுக்கப்படுவது இல்லை. இவர் தாயும் ஆவார், பின் தந்தையும் ஆவார். அவர் இவருக்குள் பிரவேசம் செய்துள்ளார். அதனால் தான் பிரம்மாவை நீ என் குழந்தையும் ஆவாய், மனைவியும் ஆவாய் என்று அவரே (சிவபாபா) கூறுகிறார். உண்மையில் தந்தை இவர் மூலமாக சுவீகாரம் செய்கிறார். எனவே இவர் தாயும் ஆகி விடுகிறார். பிறகும் நீங்கள் நினைவு என்னை செய்ய வேண்டும் என்று தந்தை கூறுகிறார். பிரம்மாவை நினைவு செய்ய வேண்டாம். மனிதர்கள் உலகத்தில் நிறைய லாக்கெட் அணிகிறார்கள். இவர் தந்தை ஆவார். குழந்தைகளே நீங்கள் உங்களுடையது அனைத்தையுமே மறந்து விட வேண்டும் என்று தந்தை கூறுகிறார். தேக சகிதம் தேகத்தின் உறவினர்கள் யாரெல்லாம் இருக்கிறார்களோ அனைவரையும் மறந்து பரமபிதா பரமாத்மாவுடன் யோகம் கொள்ளுங்கள் என்பது குழந்தைகளாகிய உங்களுக்கு கட்டளையாகும். நான் இவருக்குள் பிரவேசம் செய்து உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கிறேன். இதில் பிரேரணை (உந்துதல்) என்ற எந்த விஷயமும் கிடையாது. உந்துதல் மூலமாக பாபா காரியம் செய்வதில்லை. இது நாடகப்படி எல்லாமே ஆகவே வேண்டி உள்ளது. தந்தையின் நினைவினால் விகர்மங்கள் விநாசம் ஆகும். மற்றபடி எந்த ஒரு தேகதாரியை நினைவு செய்வதால் நேரம் வீணாகிப் போகிறது. மற்றவர்களுடம் புத்தி யோகத்தை ஈடுபடுத்துகிறீர்கள் என்றால் தந்தையின் கட்டளையை மீறுபவர் ஆகி விடுகிறீர்கள். தந்தையை நினைவு செய்வதில் உழைப்பு உள்ளது. இதில் தான் தவறுகள் ஆகின்றது. நீங்கள் பிரியதரிசினிகள் ஆவீர்கள் என்று தந்தை கூறுகிறார். நடந்தாலும் சென்றாலும் பிரியதரிசனனான என்னை நினைவு செய்வதற்கான முயற்சி செய்யுங்கள். என் ஒருவனை நினைவு செய்யுங்கள் என்று கீதையிலும் கூட பகவான் கூறுகிறார் என்று உள்ளது. தேகசகிதம் தேகத்தின் அனைத்து சம்பந்தங்களையும் விடுத்து தன்னை ஆத்மா என்று உணருங்கள். இதை யார் கூறுகிறார்? சிவபாபாவா? இல்லை ஸ்ரீகிருஷ்ணரா? யாரை நினைவு செய்ய வேண்டும்? ஸ்ரீகிருஷ்ணர் சங்கமத்தில் இருக்க முடியாது. ஆம். கிருஷ்ணரின் ஆத்மா அவசியம் இருக்கிறார். அவர் கூட கற்றுக் கொண்டு மற்றவர்களுக்கும் கற்பிக்கிறார். இவர் முக்கியமான முதல் நம்பர் இளவரசர் ஆவார். இவருடன் கூட மற்றவர்கள் இருப்பார்கள் அல்லவா? இராதையும் கூட இருக்கிறார். ஆனால் முதல் இளவரசர் இவர் ஆவார். இராதை பிறகும் பின்னால் இருக்கிறார். முதல் இவர் பெயர் உள்ளது. இவை எவ்வளவு ஆழமான விஷயங்கள் ஆகும். எனவே முக்கியமாக ஒரே ஒரு விஷயத்தை எடுங்கள் என்று தந்தை கூறுகிறார். இதை கிருஷ்ணர் பாடவில்லை. கிருஷ்ணரை பகவான் என்று கூற முடியாது. இந்த விஷயத்தில் தான் வெற்றி அடைவதற்கான எல்லா விஷயங்களுமே உள்ளது. ஒரு தந்தை தான் பிராமணர் தேவதை க்ஷத்திரியர் என்று இந்த 3 தர்மங்களை ஸ்தாபனை செய்கிறார். முதல் தேவதா தர்மம் பிறகு இஸ்லாமியர்கள், பௌத்தர்கள், கிறித்தவர்கள்.. .. அவ்வளவே ! மேலும் சிறுச் சிறு தர்மங்கள் நிறைய உள்ளன. கீதையின் பகவான் மூலமாக சத்கதி ஏற்படுகிறது. அனைவருக்கும் சத்கதி அளிக்கும் வள்ளல் தந்தை ஆவார். அனைவரின் ஜகத்குரு கூட ஒரே ஒரு சத்குரு ஆவார். சத்குரு என்றால் சத்கதி அளிப்பவர். இதை எல்லோருக்கும் நல்ல முறையில் புரிய வைக்கலாம்.பாபாவின் முரளி எது வெளிப்படுகிறதோ அந்த முரளியை நல்ல முறையில் படிப்பதற்கான உரிமை எல்லா மாணவர்களுக்கும் இருக்கிறது. யாருக்கு முரளியில் ஆர்வம் இருக்குமோ அவர்கள் அவசியம் 3-4 முறை முரளி படிப்பார்கள். முரளியைத் தவிர வேறு எதுவுமே தோன்றவே கூடாது. முரளியை யாராவது 5-8 முறை படித்தார்கள் என்றால் பிராமணியை விடவும் உயர்ந்து செல்ல முடியும். எல்லோரும் தங்களுக்கு முன்னேற்றம் செய்து கொள்ள வேண்டும். உண்மையில் பிராமணிகள் மிகவுமே கீழ்ப்படிதலுள்ள சேவகர்கள் ஆவார்கள். யாருக்காவது நல்ல உணவு வகைகள் பக்கம் புத்தி சென்றது என்றால், இறக்கும் நேரத்தில் கூட அது நினைவிற்கு வந்து விடும். இப்பொழுது சேவை வாங்கிக் கொண்டு இருந்தார்கள் என்றால் முடிந்தது. சேவையில் இருப்பவர்கள் எப்பொழுதும் கீழ்ப்படிதலுள்ளவர்களாக ஆகி இருப்பார்கள். எப்படி ஜனக் குழந்தை (ஜானகி தாதி) இருக்கிறார் - ஒரு பொழுதும் யாரிடமும் வேலை வாங்க மாட்டார். ஒரு சிலருக்கு பழக்கம் ஏற்பட்டு விடுகிறது என்றால் பின் கேட்கவே வேண்டாம். துணி துவைப்பவர்கள் கிடைக்கவில்லை என்றால் நோய்வாய்ப்பட்டு விடுகிறார்கள். எங்கும் போக முடியாது. இதில் அதிகமாக அதிகாரம் செலுத்துவது நடக்காது. சேவகர் ஆகி சேவை செய்ய வேண்டும். தந்தை கூட சேவகர் ஆவார் அல்லவா? நான் உயர்ந்ததிலும் உயர்ந்தவன். எவ்வளவு சாதாரண உடலில் வருகிறேன் என்று கூறுகிறார். நான் ஒன்றும் குதிரை வண்டி ஆகியவற்றைக் கேட்பதில்லை. இவர் பிறகும் தந்தை ஆவார். வான பிரஸ்தத்திற்குப் பிறகு தந்தைக்கு சேவை செய்வது குழந்தைகளின் கடமை ஆகிறது. சிவபாபாவின் ரதம் ஆவார். பிறகும் பாபா குழந்தைகளிடம் எந்த சேவையும் வாங்குவதில்லை. குழந்தைகள் தங்களது படிப்பில் முழு கவனம் கொடுக்க வேண்டும். முறைப்படி படிப்பீர்கள். ன்கு கற்பீர்கள் என்றால் சத்யுகத்தில் கூட முறைப்படி ஆட்சி புரிவீர்கள். சத்யுகத்தில் முறை தவறிய எந்த விஷயமும் இருக்காது. ஒவ்வொரு விஷயத்திலும் (அக்யூரேட்) மிக சரியானவர் ஆக வேண்டும். நாம் உலகத்தின் இராஜகுமாரன் இராஜகுமாரி ஆகிறோம் என்றால் அந்த நடத்தையை இங்கு கற்றுக் கொள்கிறோம். கிருஷ்ணருக்கு மகா இராஜகுமாரன் என்று எவ்வளவு மகிமை உள்ளது. தந்தையை விடவும் கிருஷ்ணரின் பெயர் அதிகமாக உள்ளது. இராதை கிருஷ்ணரின் தாய் தந்தையர் ஒன்றும் இராதை கிருஷ்ணர் எடுக்கும் அளவிற்கு அவ்வளவு மதிப்பெண்கள் எடுக்க முடியாது. உயர்ந்த படிப்பை இவர்கள் படிக்கிறார்கள். எல்லோரையும் விட அதிகமான மார்க்குகள் கிருஷ்ணர் பெறுகிறார். ஆனால் ஜென்மமோ பிறகும் எங்காவது எடுக்க வேண்டியே இருக்கும். எனவே யாரிடம் ஜென்மம் எடுத்தாரோ அவர்களுக்கு அந்த அளவிற்கு மரியாதை இருப்பதில்லை. முதலில் அவசியம் அவர்களது தாய் தந்தையர் ஜென்மம் எடுத்திருக்கக் கூடும். பிறகும் குழந்தை கிருஷ்ணரின் பெயர் பிரசித்தமாகி விடுகிறது. இந்த விஷயங்கள் மிகவுமே மறைமுகமானது. இவை எல்லாமே சுவாரசியமான பேச்சு விஷயங்கள். மூல விஷயமாவது தன்னை அசரீரி ஆத்மா என்று உணருங்கள். நாம் எல்லையில்லாத தந்தையின் குழந்தைகள் ஆவோம். நாம் சர்வ குணங்களில் சம்பன்னராக (நிறைந்தவர்) இங்கேயே ஆக வேண்டும். இப்பொழுது யாருமே சம்பூர்ணம் ஆகவில்லை. எல்லோருமே முயற்சியாளர்கள் ஆவார்கள். இவருடைய ரிஸல்ட் கூட பாபா பார்க்கிறார் அல்லவா? இவர் (பிரம்மா) எல்லோரையும் விட உயர்ந்து சென்று விடுவார். எனவே ஃபாலோ ஃபாதர் தந்தையைப் பின்பற்றுங்கள் என்று கூறப்படுகிறது. கடைசிவரையும் தந்தையைத் தான் பின்பற்ற வேண்டி இருக்கும். நாடகத்தில் எதெல்லாம் நடக்கிறதோ அதுவே சரியானது என்று புரியப்படுகிறது. எந்த ஒரு விஷயத்திலும் சந்தேகம் வர முடியாது. அம்மா இறந்தாலும் அல்வா சாப்பிடுங்கள்.. நீங்கள் மன்மனாபவ ஆகி இருக்க வேண்டும். துக்கத்தின் எந்த விஷயமுமே கிடையாது. நாடகத்தில் எது பொருந்தி இருக்கிறதோ அது ஆகிக் கொண்டே இருக்கும். அனாதி அமைந்த அமைக்கப்பட்ட நாடகமாகும். எது பொருந்தி இருக்கிறதோ அது ஆகிக் கொண்டே இருக்கும். குழந்தைகளுடைய வேலையாவது முயற்சி செய்து தங்களது வாழ்க்கையை வைரம் போல ஆக்குவது. கர்ம இந்திரியங்களால் ஒன்றும் தவறான காரியம் செய்யக் கூடாது. எது பாக்கியத்தில் இருக்குமோ என்பதல்ல. முயற்சி (புருஷார்த்தம்) செய்ய வேண்டும். பாபாவிற்கு முழு விசயங்களைத் தெரியப்படுத்த வேண்டும். ஒரு சில சென்டர் பற்றி ஒன்றுமே தெரியவருவதில்லை. நிறைய சென்டர்கள் நடக்கின்றன. ஒரு சிலர் பிராமணி இல்லாமலேயே கூட கீதா பாடசாலை திறந்து சேவை செய்துக் கொண்டே இருக்கிறார்கள். வரிசைக்கிரமமாக இருப்பார்கள் அல்லவா? யார் நன்றாக சேவை செய்கிறார்களோ அவர்களே பாபாவின் இதயத்தில் அமருகிறார்கள். சிம்மாசனத்தில் அமருபவராக ஆகிறார்கள். தந்தையோ குழந்தைகள் நல்ல முறையில் படித்து தந்தையின் தோளில் ஏறி விட வேண்டும் என்று விரும்புகிறார். பரிட்சை ஒன்றே தான். ஆனால் பதவியில் எவ்வளவு வகைகள் உள்ளன. ஒவ்வொரு மலர் கூட அதனதனுடைய நறுமணத்தை அளிக்கிறது. ஒரு சிலர் முற்றிலும் துர்நாற்றம் உடையவராகக் கூட இருக்கிறார்கள். ஒரு சில குழந்தைகள் அற்புதம் செய்பவர்கள் கூட இருக்கிறார்கள் அல்லவா? பிரேம் இருக்கிறார், மனோகர் இருக்கிறார், தீதி இருக்கிறார் .. இவர்களை எல்லோருமே மகிமை செய்கிறார்கள். ஒரு சிலருடைய பெயரையே கூட எடுப்பதில்லை. தந்தைக்கு பதீதர்களை பாவனமாக ஆக்குவதில் எவ்வளவு உழைப்பு செய்ய வேண்டி இருக்கிறது. குரங்குகளை கோவிலுக்கு உகந்தவர்களாக ஆக்குகிறார். சூரிய வம்சம், சந்திர வம்சத்து ராஜா, பிரஜைகள், ஏழைகள், பணக்காரர்கள் எல்லோருமே ஆகிறார்கள் அல்லவா? முயற்சி செய்து உயர்ந்த பதவி அடைய வேண்டும். இல்லையென்றால் ஜன்மஜன்மாந்திரத்திற்கு அப்படியே ஆகி விடுவீர்கள். பிறகு மிகவும் பச்சாதாபப்பட வேண்டி வரும். பாபாவிடமிருந்து நாம் முழு ஆஸ்தி எடுக்கவில்லை. ஆசிரியர் குரு போன்றோரையும் பின்பற்றுங்கள் என்றே கூறுவார்கள். இவர் தந்தை ஆசிரியர் குரு மூன்றும் ஒருவரே ஆவார். சுப்ரீம் ஃபாதர், சுப்ரீம் டீச்சர், சுப்ரீம் குருவும் ஆவார். அவர் நிராகாரமானவர் தான். நாலேஜ்ஃபுல் ஞானம் நிறைந்தவர் ஆவார். அவரிடமிருந்து தான் ஆஸ்தி கிடைக்கிறது. அனைவருக்கும் சத்கதி அளிக்கும் வள்ளல் அவர் ஆவார். அதற்காகத் தான் எல்லோரும் சாதனை செய்கிறார்கள். சாது என்றால் சாதனை செய்பவர். பின் அவர்கள் எப்படி யாருக்காவது முக்தி அளிக்க முடியும்? புரிய வைப்பதற்கான யுக்தி (வழி முறை) மிகவும் நல்லதாக இருக்க வேண்டும். கண்காட்சியை திறந்து வைப்பவர்கள் கூட கொஞ்சம் புரிந்திருப்பவர்களாக இருக்க வேண்டும். இந்த கண்காட்சி மனிதனை வைரம் போல ஆக்கக் கூடியது என்று கூறக் கூடியவர்களாக இருக்க வேண்டும். இந்த கண்காட்சி பரமபிதா பரமாத்மாவின் உத்தரவுபடி (டைரக்ஷன்) அமைக்கப்பட்டுள்ளது. திறப்பு விழா எப்பேர்ப்பட்டவர் மூலமாக செய்விக்க வேண்டும் என்றால், அவர் கொஞ்சம் புரிய வைக்கக் கூடியவராகவும் இருக்க வேண்டும். ஒரு நாள் பெரியவர்கள் கூட வந்து உங்களிடம் புரிந்து கொள்வார்கள். சந்நியாசிகள் ஆகியோர் கூட வருவார்கள். அந்த ஆடையில் அமர்ந்து புரிந்து கொள்வார்கள். இப்பொழுது பாபா மன்மனாபவ, தந்தையை நினைவு செய்தீர்கள் என்றால் பாவனம் ஆவீர்கள் என்று உத்தரவு அளிக்கிறார். விநாசமும் முன்னால் நிற்கிறது. நான் எவ்வளவு பெரிய குடும்பஸ்தனாக ஆகி உள்ளேன் என்று தந்தை கூறுகிறார். எல்லோரையும் விட பெரியதிலும் பெரிய இல்லற தர்மத்தை நான் பராமரிக்கிறேன். நாடகத்தில் எனது பாகமே அவ்வாறு இருக்கிறது. குழந்தைகள் உயர்ந்த பதவியை அடைவதற்கான உழைப்பு செய்ய வேண்டும். முயற்சி செய்து தாய் தந்தையின் சிம்மாசனத்தில் அமருபவர் ஆக வேண்டும். நாம் சிவபாபாவின் குழந்தைகள் ஆவோம் என்ற அந்த போதை உள்ளுக்குள் இருக்க வேண்டும். நாம் பாபாவை விட குறைவாக செல்வோமா என்ன? நல்லது.இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்குத் தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு, ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.தாரணைக்கான முக்கிய சாரம்:

1. தந்தைக்குச் சமாமாக உண்மையான சேவாதாரியாக வேண்டும். யாரிடமும் சேவை வாங்கக் கூடாது. கீழ்ப்படிதலுடையவராகி நடத்தல் வேண்டும்.2. நாடகத்தில் என்ன காட்சி நடக்கிறதோ அதுவே சரி ஆகும். அதில் சந்தேகம் எழுப்பக் கூடாது. தங்களது வாழ்க்கையை வைரம் போல ஆக்குவதற்கான முயற்சி செய்ய வேண்டும்.வரதானம்:

தந்தையின் சம்ஸ்காரங்களை தனது உண்மையான சம்ஸ்காரமாக ஆக்கிக் கொள்ளக் கூடிய வீணான மற்றும் பழைய சம்ஸ்காரங்களிருந்து விடுபட்டவர் ஆவீர்களாக.எந்த ஒரு வீணான சங்கல்பம் அல்லது பழைய சம்ஸ்காரம் தேக அபிமானத்தின் சம்பந்தத்தினால் ஆகிறது. ஆத்மீக சொரூபத்தின் சம்ஸ்காரம் தந்தைக்குச் சமானமாக இருக்கும். எப்படி தந்தை எப்பொழுதும் விஷ்வ கல்யாணகாரி, பரோபகாரி, கருணையுள்ளம் உடையவராக வரமளிக்கும் வள்ளலாக.. .. .. இருக்கிறாரோ அதே போல சுயத்தினுடைய சம்ஸ்காரம் இயற்கையாகவே அமைந்து விட வேண்டும். சம்ஸ்காரம் அமைவது என்றால் சங்கல்பம், பேச்சு மற்றும் செயல் இயல்பாகவே அதற்கேற்றபடி நடப்பது. வாழ்க்கையில் சம்ஸ்காரம் என்பது ஒரு சாவி ஆகும். அதன் மூலம் இயல்பாகவே நடந்து கொண்டு இருப்பீர்கள். பிறகு கஷ்டப்பட்டு முயற்சி செய்ய வேண்டிய அவசியம் இருப்பதில்லை.சுலோகன்:

ஆத்மீக ஸ்திதியில் நிலைத்திருந்து தனது ரதத்தின் (சரீரம்) மூலமாக காரியம் செய்விப்பவர்களே உண்மையான புருஷார்த்தி (முயற்சியாளர்) ஆவார்கள்.


***OM SHANTI***