BK Murli 18 December 2016 Tamil

BK Murli 18 December 2016 Tamil

18.12.2016    காலை முரளி       ஓம் சாந்தி             ''அவ்யக்த பாப்தாதா'' ரிவைஸ் 06.01.1982 மதுபன


''சங்கமயுக பிராமண வாழ்க்கையில் தூய்மையின் மகத்துவம் ''


இன்று பாப்தாதா விசேஷமாக குழந்தைகளின் தூய்மையின் ரேகையைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.சங்கமயுகத்தில் வரமளிக்கும் தந்தையிடமிருந்து அனைத்து குழந்தைகளுக்கும் விசேஷமாக இரண்டு வரதானம் கிடைக்கின்றன. ஒன்று சகஜயோகி ஆகுக, இன்னொன்று தூய்மை ஆகுக ! இந்த இரண்டு வரதானங்களை ஒவ்வொரு பிராமண ஆத்மாவும் வாழ்க்கையில் முயற்சி செய்வதின் அனுசாரம் தாரணை செய்கிறார்கள் அதாவது கடைப்பிடிக்கிறார்கள். அந்த மாதிரியான தாரணை சொரூப ஆத்மாக்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு குழந்தையின் நெற்றி மற்றும் கண்கள் மூலமாக தூய்மையின் ஜொப்பு தென்பட்டுக் கொண்டிருக்கிறது. தூய்மை சங்கமயுகத்து பிராமணர்களின் மகான் வாழ்க்கையின் மகான் தன்மை ஆகும். தூய்மை பிராமண வாழ்க்கையின் சிரேஷ்ட அலங்காரம். எப்படி ஸ்தூல உடல் முக்கியமாக சுவாசம் இருப்பது மிக அவசியம், சுவாசம் இல்லை என்றால் வாழ்க்கை இல்லை. அந்த மாதிரி பிராமண வாழ்க்கையின் சுவாசம் தூய்மை ! 21 ஜென்மங்களின் பிராப்தியின் ஆதாரம் அதாவது அஸ்திவாரம் தூய்மை. ஆத்மா அதாவது குழந்தைகள் மற்றும் தந்தை சந்திப்பிற்கான ஆதாரம் தூய்மையான புத்தி. அனைத்து சங்கமயுகத்தின் பிராப்திகளின் ஆதாரம் தூய்மை. தூய்மை பூஜைக்குரிய பதவியை அடைவதற்கான ஆதாரம். அந்த மாதிரி மகான் வரதானத்தை சுலபமாக அடைந்து விட்டீர்களா? வரதானத்தின் ரூபத்தில் அனுபவம் செய்கிறீர்களா அல்லது கடின முயற்சி செய்து பிராப்தி செய்கிறீர்களா? வரதானத்தில் கடின உழைப்பு இருப்பதில்லை. ஆனால் வரதானத்தை எப்பொழுதும் வாழ்க்கையில் பிராப்தி செய்வதற்காக ஒரு விஷயத்தின் கவனம் மட்டும் வேண்டும். வரம் அளிக்கும் வள்ளல் மற்றும் வரம் பெறுபவர்கள் இருவர்களின் சம்மந்தம் நெருக்கமான மற்றும் அன்பின் ஆதாரத்தினால் நிரந்தரமாக வேண்டும். வரம் அளிக்கும் வள்ளல் மற்றும் வரம் பெறும் ஆத்மாக்கள் இருவருமே எப்பொழுதும் இணைந்த ரூபத்தில் இருக்கிறார்கள் என்றால் தூய்மையின் குடை நிழல் இயல்பாகவே இருக்கும். எங்கு சர்வ சக்திவான் தந்தை இருக்கிறாரோ அங்கு தூய்மையின்மை கனவில் கூட வர முடியாது. எப்பொழுதும் தந்தை மற்றும் நீங்கள் ஜோடி ரூபத்தில் இருங்கள். தனியானவர் அல்ல, ஆனால் தம்பதியினர். தனியானவராக ஆகிவிடுகிறீர்கள் என்றால், தூய்மையின் மாங்கல்யம் சென்று விடுகிறது. இல்லை என்றால் தூய்மையின் மாங்கல்யம் மற்றும் சிரேஷ்ட பாக்கியம் எப்பொழுதும் உங்களுடன் இருக்கும். அப்படி தந்தையை தன்னுடன் வைத்துக் கொள்வது என்றால், தன்னுடைய பாக்கியம் மற்றும் மாங்கல்யத்தை உடன் வைத்துக் கொள்வது. எனவே அனைவரும் தந்தையை எப்பொழுதும் உடன் வைத்துக் கொள்வதில் பயிற்சி பெற்றவர்களாக இருக்கிறீர்கள் தான் இல்லையா?விசேஷமாக இரட்டை வெளிநாட்டுக் குழந்தைகளுக்கு தனியாக வாழ்வது விருப்பம் இல்லை தான் இல்லையா? எப்பொழுதுமே வாழ்க்கைத் துணை வேண்டும் இல்லையா? எனவே இந்த மாதிரி வாழ்க்கைத் துணைவன் மற்றும் துணை முழுக் கல்பத்திலும் கிடைக்காது. எனவே தந்தையை வாழ்க்கைத் துணைவனாக ஆக்கியிருக்கிறீர்களா அதாவது தூய்மையை நிரந்தரமாகக் கடைபிடிக்கிறீர்களா? அந்த மாதிரி ஜோடியாக இருப்பவர்களுக்கு தூய்மையைக் கடைபிடிப்பது மிக சுலபம். தூய்மையே இயற்கையான வாழ்க்கை ஆகிவிடும். தூய்மையாக நான் இருக்க வேண்டும், நான் தூய்மை ஆக வேண்டும். இந்தக் கேள்வியே இருக்காது. பிராமணர்களின் வாழ்க்கையே தூய்மை தான் ! பிராமண வாழ்க்கையின் உயிர்தானமே தூய்மை தான். ஆதி அனாதி சொரூபமுமே தூய்மை. நான் ஆதி அனாதி தூய்மையான ஆத்மா என்ற நினைவு வந்து விடுகிறது என்றால், தூய்மையின் பலம் வந்து விடுகிறது. எனவே நினைவு சொரூபம், சக்தி சொரூப ஆத்மாக்கள் இயற்கையாகவே தூய்மையான சம்ஸ்காரம் உள்ளவர்கள். தீய சேர்க்கையின் சம்ஸ்காரம் தூய்மையின்மை. எனவே தன்னுடைய சம்ஸ்காரத்தை வெளிப்படுத்துவது சுலபமா அல்லது தீய சேர்க்கையின் சம்ஸ்காரத்தை வெளிப்படுத்துவது சுலபமா? பிராமண வாழ்க்கை என்றால் சகஜயோகி மற்றும் நிரந்தரமாக தூய்மையானவர். தூய்மை பிராமண வாழ்க்கையின் விசேஷ ஜென்மத்தின் சிறப்பாகும். தூய்மையான எண்ணம் பிராமணர்களின் புத்திக்கான உணவு. தூய்மையான பார்வை பிராமணர்களின் கண்களுக்கான ஒளி. தூய்மையான காரியம் பிராமண வாழ்க்கையின் விசேஷ தொழில். தூய்மையான சம்மந்தம் மற்றும் தொடர்பு பிராமண வாழ்க்கையின் மரியாதை.அப்படியானால் பிராமண வாழ்க்கையின் மகான் தன்மை என்னவானது என்று யோசித்துப் பாருங்கள். தூய்மை தான் இல்லையா. அந்த மாதிரி மஹானான ஒன்றைக் கடைப்பிடிப்பதில் கஷ்டப்படாதீர்கள். பிடிவாத மாகவும் கடைப்பிடிக்காதீர்கள். கஷ்டப்பட்டு செய்வது மற்றும் வலுக்கட்டாயமாக செய்வது நிரந்தரமாக இருக்க முடியாது. ஆனால் இந்த தூய்மையோ உங்கள் வாழ்க்கையின் வரதானம். இதில் கஷ்டப்படுவதும் வலுக்கட்டாயமாக செய்வதும் ஏன்? இது தன்னுடைய இயல்பான ஒன்றாகும். தன்னுடையதைக் கடைபிடிப்பதில் ஏன் கடின முயற்சி செய்ய வேண்டும். மற்றவர்களின் ஒன்றை கடைப்பிடிப்பதில் கடினம் இருக்கும். மற்றர்வகளின் ஒன்று தூய்மையின்மையே அன்றி தூய்மை கிடையாது. இராவணன் மாற்றான். நம்முடையவன் இல்லை. தந்தை நம்முடையவர், இராவணன் மாற்றான். தந்தையின் வரதானம் தூய்மை, இராவணனின் சாபம் தூய்மையின்மை ! எனவே மாற்றான் இராவணனினுடையதை ஏன் கடைபிடிக்கிறீர்கள்? மாற்றான் பொருள் மிகவும் பிடித்திருக்கிறதா? தன்னுடையதின் மேல் போதை இருக்கும். எனவே எப்பொழுதும் சுயசொரூபம் தூய்மை, சுயதர்மம் பவித்திர தன்மை அதாவது ஆத்மாவின் முதல் தாரணை பவித்ரதா. சுயதேசம் பவித்ர தேசம். சுயராஜ்யம் பவித்ர ராஜ்யம். சுயத்தின் நினைவுச் சின்னம் பரம் பவித்ர பூஜைக்குரிய நிலை. கர்ம இந்திரியங்களின் அனாதி சுபாவம் சுகர்மம் அதாவது நல்ல காரியம். இந்த ஒன்றை மட்டும் எப்பொழுதும் நினைவில் வைத்தீர்கள் என்றால் கடின உழைப்பு மற்றும் வலுக்கட்டாயத்திலிருந்து விடுபட்டு விடுவீர்கள். பாப்தாதாவால் குழந்தைகள் கஷ்டப்படுவதை பார்க்க முடியாது. எனவே நீங்கள் அனைத்து ஆத்மாக்களும் தூய்மையானவர்கள் தான். இந்த உங்களுடைய சுயமரியாதையில் நிலைத்திருந்து விடுங்கள். உங்களுடைய சுயமரியாதை என்ன? நான் 'பரம் பவித்ர ஆத்மா'. எப்பொழுதும் தன்னுடைய இந்த சுவமானம் என்ற ஆசனத்தில் அமர்ந்து ஒவ்வொரு காரியத்தையும் செய்யுங்கள். எனவே சுலபமாகவே வரம் பெற்றவராக ஆகிவிடுவீர்கள். இது சுலபமான ஆசனம். எனவே எப்பொழுதும் தூய்மையின் ஜொலிப்பு மற்றும் பொலிவில் இருங்கள். சுவமானத்தின் (சுயமரியாதையின்) எதிரில் தேக அபிமானம் வர முடியாது. புரிந்ததா?இரட்டை வெளிநாட்டினரோ இதில் தேர்ச்சி அடைந்திருக்கிறீர்கள் தான் இல்லையா? நீங்கள் ஹடயோகி இல்லை தான் இல்லையா? கடினமாகச் செய்யும் யோகி இல்லை தான் இல்லையா? அன்பில் இருந்தீர்கள் என்றால், கடும் முயற்சி அகன்று விடும். அன்பில் ஐக்கியமாகி இருக்கும் ஆத்மாவாக ஆகுங்கள். எப்பொழுதும் ஒரு தந்தையைத் தவிர வேறு யாரும் இல்லை, இது தான் இயற்கையான தூய்மை. அப்படி இந்தப் பாடலை பாடத் தெரியாதா? இந்தப் பாடலைப் பாடுவது என்பது சுலபமாக தூய்மையான ஆத்மா ஆவது. நல்லது.அந்த மாதிரி எப்பொழுதும் சுயத்தின் இருக்கையின் உரிமை உள்ள ஆத்மாக்களுக்கு, எப்பொழுதும் பிராமண வாழ்க்கையின் மகான் தன்மை மற்றும் விசேஷத்தை வாழ்க்கையில் தாரணை செய்யக்கூடிய ஆதி, அனாதி தூய்மையான ஆத்மாக்களுக்கு, சுய சொரூபம், சுயதர்மம், சுகர்மத்தில் நிலைத்திருக்கக்கூடிய சிரேஷ்ட ஆத்மாக்களுக்கு, பரம் பவித்ர பூஜைக்குரிய ஆத்மாக்களுக்கு, தூய்மையின் வரதானத்தைப் பெற்றிருக்கும் மகான் ஆத்மாக்களுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.பிரான்ஸ், ப்ரேசில் மற்றும் அன்னிய சில இடங்களிலிருந்து வந்திருக்கும் வெளிநாட்டு குழந்தைகளோடு அவ்யக்த பாப்தாதாவின் சந்திப்பு –1) நீங்கள் அனைவரும் எப்பொழுதும் தன்னை மாஸ்டர் சர்வ சக்திவான் என்று புரிந்து கொண்டு ஒவ்வொரு காரியத்தையும் செய்கிறீர்களா? எப்பொழுதும் சேவைக்களத்தில் தன்னை மாஸ்டர் சர்வ சக்திவான் என்று புரிந்து சேவை செய்தீர்கள் என்றால் சேவையில் வெற்றி நிச்சயிக்கப்பட்டது. ஏனென்றால், தற்சமயத்தின் சேவையில் வெற்றிக்கான விசேஷ சாதனம் உள்உணர்வு மூலமாக வாயுமண்டலத்தை உருவாக்குவது. இன்றைய நாட்களின் ஆத்மாக்களுக்கு தன்னுடைய உழைப்பு மூலம் முன்னேறிச் செல்வது கடினம். எனவே தன்னுடைய எண்ண அலைகள் மூலமாக வாயுமண்டலத்தை அந்த மாதிரி சக்திசாலி ஆக்குங்கள். அதன் காரணமாக ஆத்மாக்கள் இயல்பாகவே ஈர்க்கப்பட்டு வந்து விட வேண்டும். அப்படி சேவையின் வளர்ச்சிக்கான அஸ்திவாரம் இது. மற்றபடி இதன் கூடவே சேவைக்கான வேறு என்னென்ன சாதனங்கள் இருக்கின்றனவோ அதை நாலாபுறங்களிலும் செய்ய வேண்டும்.ஒரே பகுதியில் மட்டும் அதிகமான உழைப்பையும் நேரத்தையும் ஈடுபடுத்தாதீர்கள். மேலும் நாலாபுறங்களிலும் சேவையின் சாதனங்கள் மூலமாக சேவையை அதிகரியுங்கள். அப்பொழுது தான் அனைத்து பக்கங்களிலிருந்தும் வெளிப்பட்டிருக்கும் சைத்தன்ய மலர்களின் பூச்செண்டு தயாராகும்.2) அதிர்ஷ்டம் நிறைந்த குழந்தைகளைப் பார்த்து பாப்தாதா மிகவும் மகிழ்ச்சி அடைகிறார். ஒவ்வொருவரும் ஆன்மீக ரோஜா மலர். ஆன்மீக ரோஜா மலரின் குரூப் என்றால் ஆன்மீக தந்தையின் நினைவில் அன்பில் ஐக்கியமாகி இருக்கும் குரூப். அனைவரின் முகத்தில் குஷியின் ஜொலிப்பு மின்னிக் கொண்டிருக்கிறது.பாப்தாதா ஒவ்வொரு இரத்தினத்தின் மதிப்பை தெரிந்திருக்கிறார். ஒவ்வொரு இரத்தினமும் உலகில் விலைமதிக்க முடியாத இரத்தினம். எனவே பாப்தாதா அதே விசேஷத்தை பார்த்துக் கொண்டே ஒவ்வொரு இரத்தினத்தின் மதிப்பைப் பார்க்கிறார். ஒவ்வொரு இரத்தினமும் அனேகர்களுக்கு சேவை செய்வதற்கு பொறுப்பாளர் ஆகுபவர்கள். எப்பொழுதும் தன்னை வெற்றி இரத்தினம் என்று அனுபவம் செய்யுங்கள். எப்பொழுதும் தன்னுடைய நெற்றியில் வெற்றித் திலகம் இடப்பட்டு இருக்கட்டும். ஏனென்றால், எப்பொழுது நீங்கள் தந்தையின் குழந்தை ஆகிவிட்டீர்களோ அப்போது வெற்றி உங்களுடைய பிறப்புரிமை. எனவே அதன் நினைவாகவும் வைஜெயந்தி (வெற்றி) மாலை வர்ணிக்கப்படுகிறது மற்றும் பூஜை செய்யப்படுகிறது. அனைவரும் வைஜெயந்தி மாலையின் மணிகள் தான் இல்லையா? இன்னும் முடிவு செய்யப்படவில்லை. எனவே வாய்ப்பு இருக்கிறது, நீங்கள் எந்த இடத்தைப் பிடிக்க வேண்டுமோ அதைச் செய்ய முடியும்.3) எப்பொழுதும் தன்னை ஒவ்வொரு குணம், ஒவ்வொரு சக்தியின் அனுபவம் நிறைந்தவர் என்று அனுபவம் செய்கிறீர்களா? ஏனென்றால் சங்கமயுகத்தில் தான் அனைத்து அனுபவங்களும் நிறைந்தவராக ஆக முடியும். எது சங்கமயுகத்தின் விசேஷமாக இருக்கிறதோ, அதை அவசியம் அனுபவம் செய்ய வேண்டும் இல்லையா? நீங்கள் அனைவரும் தன்னை அந்த மாதிரி அனுபவம் நிறைந்தவர் என்று நினைக்கிறீர்களா? சக்திகள் மற்றும் குணம் இரண்டுமே மிகப் பெரிய பொக்கிஷங்கள். அப்படியானால் எத்தனை பொக்கிஷங்களின் அதிபதியாக ஆகியிருக்கிறீர்கள்? பாப்தாதாவோ அனைத்து பொக்கிஷங்களையும் குழந்தைகளுக்குக் கொடுப்பதற்காகத் தான் வந்திருக்கிறார். எவ்வளவு விரும்புகிறீர்களோ அந்த அளவு எடுத்துக் கொள்ள முடியும். தந்தை கடல் இல்லையா? கடல் என்றால் அளவற்றது, அளக்க முடியாது. நீங்களும் மாஸ்டர் கடலாக ஆகியிருக்கிறீர்களா?வெளிநாட்டினருக்கு அனைவரையும் விட அதிக பாக்கியம். அவர்களுக்கு வீட்டில் அமர்ந்து கொண்டிருக்கும்போதே தந்தையின் அறிமுகம் கிடைத்து விட்டது. தன்னை அந்த அளவு பாக்கியம் நிறைந்தவர் என்று நினைக்கிறீர்கள் தான் இல்லையா? நீங்கள் மிகவும் ஆர்வம் நிறைந்த ஆத்மாக்கள், அன்பு நிறைந்த ஆத்மாக்கள். அன்பின் பிரத்யக்ஷ சொரூபம் தந்தை மற்றும் குழந்தைகளின் சந்திப்பு நடந்து கொண்டிருக்கிறது. நீங்கள் ஒவ்வொருவரும் தன்னை சூரியவம்சத்து ஆத்மா என்று நினைக்கிறீர்களா? முதல் இராஜ்யத்தில் வருவீர்களா அல்லது இரண்டாம் நம்பரின் இராஜ்யத்தில் வருவீர்களா? முதல் இராஜ்யத்தில் வருவதற்காக ஒரே ஒரு முயற்சி தான் இருக்கிறது, அது எது? எப்பொழுதும் ஒருவரின் நினைவில் இருந்து ஒரே சீரான நிலையை உருவாக்கினீர்கள் என்றால் ஒன், ஒன் மற்றும் ஒன்-ல் வந்து விடுவீர்கள். நல்லது.ஜப்பான் குரூப்போடு சந்திப்பு -

நீங்கள் அனைவரும் பாப்தாதாவின் இதயசிம்மாசனதாரி ஆத்மாக்கள். தன்னை இந்த அளவு சிரேஷ்ட ஆத்மா என்று நினைக்கிறீர்களா? வகை வகையான மலர்களின் மலர்ச்செண்டு எவ்வளவு நன்றாக இருக்கிறது. நீங்கள் அந்த மலர்ச்செண்டில் எந்த இடத்தில் இருக்கிறீர்கள்? சிறு குழந்தைகள் கடவுளுக்கு சமமானவர்களாக இருப்பார்கள். குழந்தைகளை எவ்வளவு காலமாக நினைவு செய்கிறார்? பாப்தாதா ஜப்பானைச் சேர்ந்த குழந்தைகளை எவ்வளவு காலமாக, வெகு காலத்திற்கு முன்பிருந்தே குழந்தைகள் உங்களை நினைவு செய்தோம் மற்றும் இப்பொழுது நடைமுறையில் தந்தையின் வரதான பூமியில் நீங்கள் வந்து சேர்ந்து விட்டீர்கள். அந்த மாதிரி பாக்கியம் நிறைந்தவர் என்று தன்னை நினைக்கிறீர்களா? ஜப்பானின் விசேஷ அடையாளமாக எதைக் காண்பிக்கிறார்கள்? ஒன்றோ கொடி இன்னொன்று விசிறி (காற்றிற்காக அனைவருக்கும் விசிறி கொடுக்கிறார்கள்). பாப்தாதாவும் குழந்தைகளுக்கு பறந்து கொண்டே இருங்கள் என்று நினைவூட்டுகிறார். எனவே விசிறியைச் காண்பிக்கிறார்கள். முதன் முதலில் வெளிநாட்டு சேவையின் அஸ்திவாரமே ஜப்பான் தான். அப்படி மகத்துவமானதாக ஆகிவிட்டது இல்லையா? பாப்தாதாவின் அழைப்பின் காரணமாக நீங்கள் இங்கே வந்து சேர்ந்திருக்கிறீர்கள். பாப்தாதா அழைத்தார் அதனால் தான் வந்திருக்கிறீர்கள். நீங்கள் அனைவரும் அலங்கார பெட்டகத்தின் (ஷோ கேசின்) நல்ல அலங்கார பொருள் (ஷோ பீஸ்). அனைத்து பிராமண பரிவாரமும் பொன்னான பொம்மைகள் உங்களைப் பார்த்து குஷி அடைகிறார்கள். குடும்பத்தினருக்கும் கண்டெடுக்கப்பட்டவர்கள் மற்றும் பாப்தாதாவிற்கும் கண்டெடுக்கப்பட்டவர்கள் என்று அந்த மாதிரி அனுபவம் செய்தீர்களா? இப்பொழுது ஜப்பானிருந்து அந்த மாதிரி ஏதாவது விசேஷ ஆத்மாவை உருவாக்குங்கள். அவர் ஒருவர் வருவதினால் அனேகர்களுக்கு செய்தி கிடைத்து விட வேண்டும். அங்கே வகை வகையான சேவை உருவாக முடியும். கொஞ்சம் உழைத்தீர்கள் என்றால் பலன் அதிகமாகக் கிடைக்கும். இதற்காக ஒன்று, ஸ்தானத்தின் சூழ்நிலையை மிக சக்தி நிறைந்ததாக ஆக்குங்கள். வருபவர்களுக்கு சைத்தன்ய கோவிலுக்கு சென்று கொண்டிருக்கிறேன் என்று அனுபவம் ஆக வேண்டும். அந்த மாதிரி ஆன்மீக நறுமணம் நிறைந்த சூழலாக இருக்க வேண்டும். அது தொலைதூரத்தில் இருந்தே அனைவரையும் ஈர்க்க வேண்டும். சூழ்நிலை ஆத்மாக்களை மிகவும் ஈர்க்க முடியும். நிலம் மிக நல்லது, மேலும் பழமும் (பலனும்) அதிகம் உருவாக முடியும். சிறிதளவு உழைப்பும் மற்றும் அதற்கேற்ற வாயுமண்டலமும் வேண்டும். சேவை செய்வதற்கான எண்ணத்தை வைப்பீர்கள், உடன் வெற்றி உங்கள் எதிரில் வரும். வாயுமண்டலம் எப்பொழுது ஆன்மீகமாக ஆகிவிடுகிறது என்றால் அனைத்து விஷயங்களும் தானாகவே சரியாகி விடும். அனைவரும் ஒற்றுமையாகவும் ஒரே சீராகவும் நடந்து கொள்பவராக ஆகிவிடுவார்கள். பிறகு மாயாவும் வராது. ஏனென்றால், வாயுமண்டலம் சக்திசாலியாக இருக்கும். வாயுமண்டலத்தை சக்திசாலியாக ஆக்குவதற்காக நினைவு செய்வதற்கான நிகழ்ச்சிகள் வையுங்கள். மேலும் முன்னேற்றம் அடைவதற்காக உங்களுக்குள் ஆன்மீக உரையாடலின் வகுப்புக்கள் வையுங்கள். அன்பு சந்திப்பு நிகழ்ச்சிகளை வையுங்கள். தாரணையின் வகுப்புக்கள் வைத்தீர்கள் என்றால் வெற்றி கிடைத்து விடும்.ஜெர்மனி குரூப்புடன் சந்திப்பு -

அனைவரின் நெற்றியில் என்ன மின்னிக் கொண்டிருக்கிறது? தன்னுடைய நெற்றியில் மின்னிக் கொண்டிருக்கும் நட்சத்திரத்தைப் பார்க்கிறீர்களா? பாப்தாதா அனைவரின் நெற்றியில் மின்னிக் கொண்டிருக்கும் மணியைப் பார்க்கிறார். எப்பொழுதும் தன்னை பல கோடி மடங்கு பாக்கியம் நிறைந்த ஆத்மா என்று நினைக்கிறீர்களா? ஒவ்வொரு நேரமும் எவ்வளவு வருமானத்தை சேமிப்பு செய்கிறீர்கள்? கணக்கு போட முடியுமா? முழுக் கல்பத்திலும் இந்த அளவு வருமானம் செய்யும் மாதிரி வேறு யாராவது வியாபாரி இருக்க முடியுமா? நான் தான் ஒவ்வொரு கல்பத்திலும் அந்த மாதிரி சிரேஷ்ட ஆத்மாவாக ஆகியிருக்கிறேன் என்ற இந்த குஷி நிறைந்த நினைவு எப்பொழுதும் இருக்கிறதா? நான் அந்த அளவு மிகப்பெரிய வியாபாரி என்று எப்பொழுதுமே நினையுங்கள் மற்றும் அந்த அளவே சம்பாத்தியம் செய்வதில் பிஸியாக இருங்கள். எப்பொழுதும் பிஸியாக இருப்பதினால் எந்த விதத்திலும் மாயா தாக்குதல் செய்யாது என்றால் பிஸியாக இருந்தீர்கள் என்றால் பிஸியாக இருப்பதைப் பார்த்து மாயா திரும்பிச் சென்று விடும், தாக்குதல் செய்யாது. சுலபமாக மாயாவை வென்றவர் ஆவதற்கான வழி எப்பொழுதும் சம்பாத்தியம் செய்து கொண்டே மற்றும் செய்வித்துக் கொண்டே இருங்கள். மாயாவின் அனேக விதங்களைத் தெரிந்தவராக எப்படியெல்லாம் ஆகிக்கொண்டே இருப்பீர்களோ அதற்கேற்ப மாயா உங்களிடமிருந்து விலகிச் சென்று கொண்டே இருக்கும். இன்னொரு விஷயம் நீங்கள் ஒரு விநாடி கூட தனியாக இருக்கவில்லை, எப்பொழுதும் தந்தையின் துணையோடு இருந்தீர்கள் என்றால் தந்தை துணையாக இருப்பதைக் கண்டு மாயா வர முடியாது. ஏனென்றால், முதல் மாயா தந்தையிடமிருந்து பிரிக்கிறது. அப்பொழுது தான் வருகிறது. எப்பொழுது நீங்கள் தனியாக ஆவதேயில்லை என்றால் மாயா என்ன செய்யும்? நீங்கள் தந்தைக்கு மிகப் பிரியமானவர்கள் என்ற இந்த அனுபவமோ இருக்கிறது தான் இல்லையா? அப்படியானால் பிரியமான ஒன்றை எப்படி மறக்க முடியும்? எனவே மிகவும் அன்பானவர் யார் என்ற இந்த நினைவை எப்பொழுதும் வையுங்கள். எங்கே மனம் இருக்குமோ அங்கே உடலும், பணமும், செல்வமும் இயல்பாகவே இருக்கும். எனவே மன்மனாபவ என்ற மந்திரம் நினைவு இருக்கிறது தான் இல்லையா. எங்கெல்லாம் மனம் செல்கிறதோ முதலில் இதை விட சிறந்த, இதை விட சிரேஷ்டமான வேறு ஏதாவது ஒன்று இருக்கிறதா அல்லது எங்கு மனம் செல்கிறதோ அது தான் சிரேஷ்டமானதா என்று சோதனை செய்யுங்கள். அந்த நேரமே சோதனை செய்தீர்கள் என்றால், சோதனை செய்வதினால் மாறி விடுவீர்கள். ஒவ்வொரு காரியம், ஒவ்வொரு எண்ணத்தை வைப்பதற்கு முன்பு சோதனை செய்யுங்கள். செய்த பிறகு அல்ல. முதலில் சோதனை பிறகு நடைமுறையில் செய்ய வேண்டும். நல்லது.விடைபெறும் நேரத்தில் தீதி, தாதியுடன் சந்திப்பு -

நீங்களும் விழித்திருக்க வேண்டியதாக இருக்கிறது. முழு நாளும் கடுமையாக உழைக்கிறீர்கள். மேலும் இரவிலும் விழித்திருக்க வேண்டியதாக இருக்கிறது. பாப்தாதாவோ எப்பொழுதுமே குழந்தைகளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறார். உங்களுடைய தைரியம் மற்றும் ஊக்கத்தின் மேல் தந்தையும் பலியாகி விடுகிறார். பார்த்து பார்த்து மகிழ்ச்சி அடைகிறார். மகிமை செய்தோம் என்றால் எவ்வளவு ஆகிவிடும். எப்படி தந்தையின் மகிமையைப் பற்றி கடலை மை ஆக்குங்கள்..... என்று கூறப்பட்டிருக்கிறது. அப்படி குழந்தைகளையும் எவ்வளவு மகிமை செய்வது. தந்தை குழந்தைகளின் மகிமையைப் பார்த்து எப்பொழுதும் அடிக்கடி பலியாகி விடுகிறார். ஒவ்வொரு குழந்தையும் அவரவர்களின் மேடையில் கதாநாயக பாத்திரம் ஏற்று செய்து கொண்டிருக்கிறார்கள். ஒரு தந்தையின் குழந்தை உண்மையான கதாநாயக நடிகன் என்றால், தந்தைக்கு எவ்வளவு பெருமிதம் இருக்கும். முழுக் கல்பத்திலும் அந்த மாதிரி தந்தையும் இருக்க முடியாது என்றால், குழந்தைகளும் இருக்க முடியாது. ஒவ்வொருவரின் மகிமையின் பாடலை பாடத் தொடங்கினோம் என்றால், எவ்வளவு பெரிய பாடல்களின் மாலையாக ஆகிவிடும். பிரம்மா பாபாவும் மற்றும் சிவபாபாவும் அவர்களிடையே மிகவும் உரையாடிக் கொள்கிறார்கள். பிஸியாகவும் இருக்கிறார்கள் மற்றும் முழு நாளும் ஃப்ரீயாகவும் இருக்கிறார்கள். சுதந்திரமாகவும் இருக்கிறார்கள், மேலும் துணைவனும் இருக்கிறார். இணைந்தே இருக்கிறார்கள் என்றால் பிரிந்திருப்பதாக எப்படி தென்படும்? நீங்கள் தனியாக பிரிக்க முடியுமா? நீங்கள் பிரித்தாலும் அவர்கள் அவர்களிடையே கூடிக்கொள்வார்கள். எப்படி பாப்தாதாவிற்கு அவர்களுக்குள் இணைந்த ரூபத்தில் இருக்கிறார்கள் என்றால், அது உங்களுடையதும் தான் இல்லையா? நீங்களும் தந்தையிடமிருந்து பிரிய முடியாது.வரதானம் :

சிந்தனை சக்தியின் மூலமாக ஒவ்வொரு ஞானத்துளியின் அனுபவி ஆகக்கூடிய எப்பொழுதும் சக்திசாலியான மாயாவால் தாக்க முடியாத, தடைகளால் தாக்க முடியாதவர் ஆகுக !எப்படி உடன் சக்திக்காக ஜீரண சக்தி அவசியமாக இருக்கிறதோ, அதே போல் ஆத்மாவை சக்திசாலியாக ஆக்குவதற்காக சிந்தனை சக்தி வேண்டியதாக இருக்கிறது. சிந்தனை சக்தி மூலமாக அனுபவ சொரூபம் ஆகிவிடுவது என்ற இது தான் அனைத்தையும் விட மிகப்பெரிய சக்தி. அந்த மாதிரி அனுபவம் நிறைந்தவர் ஒருபொழுதும் ஏமாற்றம் அடைய முடியாது. அங்கே இங்கே கேட்ட விஷயங்களினால் மனம் சஞ்சலம் ஆக முடியாது. அனுபவம் நிறைந்தவர் எப்பொழுதும் நிரம்பியவராக இருப்பார். அவர் எப்பொழுதும் சக்திசாயாக, மாயாவால் தாக்க முடியாத, தடைகளால் தாக்க முடியாதவர் ஆகிவிடுகிறார்.சுலோகன்:

குஷியின் பொக்கிஷம் எப்பொழுதும் உடன் இருக்கிறது என்றால் மற்ற அனைத்து பொக்கிஷங்களும் இயல்பாகவே வந்து விடும்.

***OM SHANTI***