BK Murli 19 December 2016 Tamil

BK Murli 19 December 2016 Tamil

19.10.2015    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்

இனிமையான குழந்தைகளே ! எப்போதும் குஷியாக இருங்கள். எவ்வளவு நினைவில் இருப்பீர்களோ அவ்வளவு சுகம் கிடைக்கும், இது தான் தந்தை உங்களுக்கு கொடுக்கும் ஆசீர்வாதம் ஆகும்.கேள்வி :

முழு கல்பத்திலும் செய்யாத எந்த ஒரு சுப காரியத்தை சங்கமயுகத்தில் குழந்தைகளாகிய நீங்கள் செய்கிறீர்கள்?பதில் :

தூய்மையாக மாறுதல், மாற்றுதல் அனைத்தையும் விட சுப காரியம் ஆகும். தூய்மையாக மாறுவதால் தான் நீங்கள் தூய்மையான உலகத்திற்கு அதிபதியாகிறீர்கள். தூய்மையாவதற்கான யுக்தியை பாபா தெரிவித்திருக்கிறார். அதாவது இனிமையான குழந்தைகளே, நீங்கள் என்னை அன்புடன் நினையுங்கள். ஆத்ம உணர்வுடையவர் ஆகுங்கள். இது போன்ற யுக்தியை அனைவருக்கும் சொல்லிக் கொண்டே இருங்கள்.பாடல் :

இந்த விளையாட்டு முழுவதையும் உருவாக்கியது யார்?.....ஓம் சாந்தி.

சிவபாபா வந்து தன்னுடைய குழந்தைகளுக்கு, சாலிகிராமங்களுக்குப் புரிய வைக்கிறார். அனைவரும் சிவபாபாவை அறிந்திருக்கிறார்கள். சிவபாபாவிற்கு தனக்கென்று உடல் இல்லை என்றும் அறிகிறீர்கள். சிவனின் சித்திரம் ஒன்று தான். இதில் எந்த வித்தியாசமும் வருவதில்லை. அவரை லிங்கத்தைப் போன்று காண்பிக்கிறார்கள். மனிதர்கள் என்றால் மனிதர்களுக்குள் எந்த வித்தியாசமும் இருக்காது. அது போன்று தான். கண், காது, மூக்கு அனைவருக்கும் இரண்டு இருக்கிறது. ஆத்மா மறைந்திருக்கும் பொருள் கிடையாது. மனிதர் களுக்கு, தேவதைகளுக்கு பூஜை நடப்பது போன்று ஆத்மாக்களுக்கும், பரமாத்மாவுக்கும் பூஜை நடக்கிறது. சிவனின் கோவிலுக்கு சென்றால் நிறைய சிறிய சிறிய சாலிகிராமங்களை வைத்திருக்கிறார்கள். அதனுடைய பூஜை நடக்கிறது. மனிதர்களுக்கு இரண்டு விதமான பூஜை நடக்கிறது. ஒன்று விகாரிகளுக்கு, இரண்டாவது நிர்விகாரிகளுக்கு. இதற்கு பூத பூஜை என்று பெயர். ஏனென்றால், இங்கே யாருடைய உடலும் தூய்மையாக இல்லை. 5 தத்துவங்களால் உருவாக்கப்பட்டிருக்கிறது. மண்ணால் உருவாக்கப்பட்ட உடலாகும். சிலைகளை உருவாக்குகிறார்கள் என்றாலும் மண் மற்றும் தண்ணீரைக் கலக்கிறார்கள். பிறகு அதை காய வைப்பதற்கு வெயில் வேண்டும். வெயில் கூட நெருப்பின் அம்சம் ஆகும். முன்பு வெயிலின் மூலமாக நெருப்பை ஏற்றினர். நிராகாரரின் பூஜை நடக்கிறது, சாகார தேவதைகளுக்கும் நடக்கிறது, மனிதர்களுக்கும் பூஜை நடக்கிறது என்பது குழந்தைகளுக்குத் தெரியும். தேவதைகள் தூய்மையானவர்கள், இங்கே தூய்மையற்றவர்கள் இருக்கிறார்கள். மற்றபடி பூதங்களுக்கு (5 தத்துவங்கள்) பூஜை நடக்கிறது. ஆத்மா என்றால் என்ன? இதை மனிதர்கள் அறியவில்லை. உங்களைப் புரிந்துக் கொள்ளுங்கள் என கூறப்படுகிறது. (ரியலைஸ் யுவர் செல்ஃப்). ஆத்மாவை உணருங்கள். ஆத்மா புள்ளியைப் போன்று இருக்கிறது. பலருக்கு காட்சிகள் கிடைத்திருக்கிறது. சிறிய ஒளி போன்று இருக்கிறது. அவரிலிருந்து வெளியே வந்து எனக்குள் நுழைந்து விட்டது என கூறுகிறார்கள். நல்லது. இதனால் நன்மை எதுவும் நடக்கவில்லை. நாரதரும் மீராவும் பக்தியில் சிறந்தவர் என பாடப்பட்டிருக்கிறது. காட்சிகள் கிடைத்திருக்கிறது. ஆனால் ஏணிப்படியில் இறங்கி தான் ஆக வேண்டும் அல்லவா? அல்ப காலத்திற்குத் தான் நன்மை நடக்கிறது. இப்போது குழந்தைகளாகிய நீங்கள் ஆத்ம உணர்வு அடைகிறீர்கள். முன்பு நாம் ஆத்ம உணர்வுடையவராக இருந்தோம் என அறிகிறீர்கள். ஆத்மா படித்துக் கொண்டிருக்கிறது. இதை நன்கு உறுதிப் படுத்திக்கொள்ள வேண்டும். பாபா நம்மை படிக்க வைக்கின்றார். இதில் முதலில் நன்கு நிச்சயம் வர வேண்டும். ஆத்ம உணர்வுடையவராக வேண்டும். அரை கல்பத்திற்கு ஆத்ம உணர்வடைகிறீர்கள். பிறகு அரை கல்பத்திற்கு தேக உணர்வுடையவராக மாறுகிறீர்கள். சத்யுகத்தில் ஆத்மாவிற்கு, நாம் பரமாத்மாவை அறிகின்றோம் என்ற சுத்த அபிமானமும் இருக்காது. சுத்த அபிமானம் மற்றும் அசுத்த அபிமானம் இருக்கிறது அல்லவா ! கடமைகளும் சுபம் மற்றும் அசுபமாக இருக்கின்றன. சுப காரியத்தை தாமதப் படுத்தக் கூடாது என கூறப்படுகிறது. நான் உங்களை எவ்வளவு நன்றாக மாற்றுகிறேன் என பாபா கூறுகின்றார். நீங்கள் தூய்மையாக மாறினால் தூய்மையான உலகத்திற்கு அதிபதியாவீர்கள். இதைப் போன்று சுப காரியம் வேறு எதுவும் இருக்க முடியாது. நீங்கள் தூய்மையாக இருந்தீர்கள். இப்போது அடிக்கடி ஆத்ம உணர்வுடையவராக மாறுங்கள் என்று பாபா கூறுகிறார். தன்னை ஆத்மா என உணர்ந்து தந்தையிடம் முழு அன்பும் வைக்க வேண்டும். ஆத்மாவின் உறவும் ஒரு தந்தையிடம் இருக்கிறது. அவர் வந்து படிக்க வைக்கிறார். இது நடைமுறை அனுபவத்தின் நிச்சயம் ஆகும். எல்லையற்ற தந்தையிடமிருந்து நாம் எல்யைற்ற ஆஸ்தியை அடைந்துக் கொண்டிருக்கிறோம். தந்தையும் இனிமையிலும் இனிமையான குழந்தைகளே ! என்று கூறுகிறார். ஆத்மாக்களுக்கு கூறுகின்றார். ஆத்மா இந்த காதுகளினால் கேட்கிறது. இன்று நம்மை யார் இனிமையிலும் இனிமையான குழந்தைகளே! என கூறிக் கொண்டிருக்கிறார் என நீங்கள் புரிந்துக் கொள்கிறீர்கள். இனிமையிலும் இனிமையான குழந்தைகளே! பாபாவிற்கு குழந்தைகள் மீது அன்பிருக்கிறது அல்லவா? மிகவும் மகிழ்ச்சியோடு குழந்தைகளை பாலனை செய்கிறார்கள். இவரும் குழந்தைகளின் எல்லையற்ற தந்தையாக இருக்கிறார். நாம் சரீரத்தின் உறுப்புகள் மூலமாகச் சொல்கிறேன் என ஆத்மா கூறுகிறது. அறியாமை காலத்திலும் குழந்தைகளின் மீது அப்பாவின் அன்பு எவ்வளவு இருக்கின்றது ! இவர்கள் வாரிசுகள், இவர்களை நான் தகுதி அடைய வைக்கிறேன். இதனால் மிகவும் சுகமுடையவர்கள் ஆகட்டும் என அறிகிறார்கள். நன்கு ஆஸ்தியை அடையட்டும். குழந்தைகளே! நன்கு வாழுங்கள், சுகமுடையவராகுங்கள் என கூறுகிறார்கள் அல்லவா? ஆசீர்வாதம் வந்துக் கொண்டே இருக்கிறது. குழந்தை எப்போதும் சுகமடையட்டும். ஆனால் அவர்கள் எப்போதும் சுகமாக இருக்க முடியாது. எப்போதும் சுகமாக இருங்கள். என்னை நினையுங்கள் என பாபா நமக்கு ஆசீர்வாதம் கொடுத்துக் கொண்டிருக்கிறார் என குழந்தைகள் அறிகிறீர்கள். பாபா எவ்வளவு அன்பு, சினேகம், பணிவோடு புரிய வைக்கின்றார். பாபா குழந்தைகளின் வேலைக்காரன் அல்லவா? எத்தனை குழந்தைகளுக்கு வேலை செய்ய வேண்டியிருக்கிறது. தாய் இறந்து விட்டால் தந்தை குழந்தைகளுக்கு அனைத்தும் செய்ய வேண்டியிருக்கிறது. இந்த தந்தை குழந்தைகளுக்கு எவ்வளவு அன்போடு புரிய வைக்கிறார். தங்கள் கால்களில் நிற்க வேண்டும். ஆத்மாக்களே! நீங்கள் தந்தையிடமிருந்து ஆஸ்தியை அடைய வேண்டும். தேக உணர்வை விட்டு விட்டு தன்னை ஆத்மா என்று உணருங்கள். இது மிகப் பெரிய பாடமாகும். குழந்தைகள் அடிக்கடி மறந்து விடுகிறார்கள். தந்தையை நினைப்பதை மறந்து விடுகிறோம் என கூறுகிறார்கள். நினைவு என்ற வார்த்தை மிகவும் எளிதாக இருக்கிறது. யோகம் அல்லது நேஷ்டை என்பது சாஸ்திரங்களின் வார்த்தையாகும். பாபா எவ்வளவு எளிதாக நினைவு மட்டும் செய்யுங்கள் என புரிய வைத்திருக்கிறார். பாபாவைப் பார்ப்பதால் மிகவும் குஷி அடைய வேண்டும். நமக்கு கிடைத்திருக்கும் பாபாவைப் போன்று உலகத்தில் யாருக்கும் கிடைக்கவில்லை. ஆத்மாக்களாகிய நாம் தூய்மையற்று இருந்தோம் என அறிகிறீர்கள். எனவே தான் பதீத பாவனா வாருங்கள், வந்து எங்களை தூய்மையாக்குங்கள் ! என அழைக்கிறீர்கள். இப்போது பாபா தூய்மையாக மாற்றுகிறார். பாபாவை நினைப்பதைத் தவிர வேறு எந்த கஷ்டமும் கொடுக்கவில்லை. இதனுடைய பெயரே எளிய நினைவு, எளிய ஞானம் ஆகும். இதையும் குழந்தைகள் புரிந்துக் கொண்டீர்கள். பாபா உண்மையானவர், சைத்தன்யமானவர். அவருடைய ஆத்மா ஞானக் கடல் ஆகும். ஞானத்தின் அதிகாரம் இருக்கிறது. இங்கே மனிதர்களுக்கு இந்த சாஸ்திரத்தின் அதிகாரம் இருக்கிறது என மகிமை இருக்கிறது. இங்கே நான் தான் அனைத்து வேத சாஸ்திரங்களையும் அறிகிறேன், அதிகாரம் உடையவன் என பாபா கூறுகின்றார். விஷ்ணுவின் நாபியிலிருந்ந்து பிரம்மா வந்தார் என பக்தி மார்க்கத்தில் சித்திரங்களில் காட்டப்பட்டிருக்கிறது. பிறகு அவரிடம் சாஸ்திரங்களைக் கொடுத்திருக்கிறார்கள். பிரம்மா மூலமாக அனைத்து வேத சாஸ்திரங்களின் சாரத்தையும் புரிய வைக்கின்றார்.பாபா அனைத்து விஷயங்களையும் நன்கு புரிய வைக்கிறார். இப்போது பிரம்மா சூட்சும வதனத்தில் இருக்கிறார். பகவான் இருப்பிடம் மூல வதனமாகி விட்டது. இப்போது சூட்சும வதனத்தில் யாருக்கு ஞானம் கூறுவார்? நிச்சயமாக இங்கே வந்து தான் கூறுவார் அல்லவா. இது மிகவும் புரிந்துக் கொள்ள வேண்டிய விஷயமாகும் பிரம்மா, மூலமாக அனைத்து சாஸ்திரங்களின் சாரத்தையும் பகவான் எங்கே கூறுவார்? சொல்லக் கூடிய விஷயம் இங்கே தான் !பகவான் எப்படி பிரம்மாவின் உடலில் வந்து நமக்குக் கூறுகின்றார் என்பதை நீங்கள் நடைமுறையில் அறிகிறீர்கள். குழந்தைகளுக்கு அளவற்ற மகிழ்ச்சி இருக்க வேண்டும். மனிதர்கள் 5-10 லட்சங்களை சம்பாதிக்கிறார்கள். அவர்களுக்கு எவ்வளவு மதிப்பு இருக்கிறது. இங்கே பாபா வந்து உங்களுடைய பொக்கிஷங்களை நிரப்புகிறார். என்னை நினைத்தால் நீங்கள் தங்கம் போன்று மாறிவிடுவீர்கள் என கூறுகின்றார். இந்த பாரதம் தங்கக் குருவியாக மாறிவிடும். பாபா மூல வதனத்தில் இருந்து வந்து பிரம்மா மூலமாக நமக்கு சாஸ்திரங்களின் சாரத்தைப் புரிய வைத்துக் கொண்டிருக்கிறார் என நீங்கள் அறிகிறீர்கள். அனைத்து ரகசியங்களையும் புரிய வைக்கிறார். அந்த யோகம், தவம், தானம், புண்ணியம் போன்றவைகளால் யாரும் முக்தியைப் பெறுவதில்லை. இந்த அனைத்து வழிகளாலும் நாம் முக்திக்குச் செல்கிறோம் என மனிதர்கள் நினைக்கிறார்கள். ஒரு வேளை இவ்வாறு நடக்கிறது என்றால் பதீத பாவனர் பாபா வர வேண்டிய அவசியம் என்ன? ஒரு வேளை அவர்கள் திரும்பிச் செல்வதற்கான வழி இருக்கிறது என்றால், யாராவது போக வேண்டும் அல்லவா. உலகத்தில் மனிதர்களுக்கு பல வழிகள் உள்ளன. இப்போது யாரும் திரும்பிச் செல்ல முடியாது என பாபா புரிய வைத்திருக்கிறார். நான் இவர் மூலமாக அனைத்து வேத சாஸ்திரங்களின் சாரத்தைப் புரிய வைக்கிறேன் என பாபா கூறுகிறார். இவர் கூட பல குருக்களிடம் சென்றிருக்கிறார், படித்திருக்கிறார், எழுதியிருக்கிறார். இவை அனைத்தையும் மறந்து விடுங்கள் என பாபா புரிய வைக்கிறார். பதீத பாவனர் என்று பரம்பிதா பரமாத்மாவைத் தான் கூறுவார்கள். அவர் மனித சிருஷ்டியின் விதை ரூபம், விருட்ஷபதி உணர்வுடன் இருக்கிறார். ஆத்மாக்கள் அனைத்தும் உணர்வுடையதாக இருக்கின்றன. நாம் மூலவதனத்திற்குச் சென்று பிறகு நடிப்பதற்காக வருவோம் என அறிகிறீர்கள். அரை கல்பம் சுகத்தின் பாகத்தை நடிப்பீர்கள். அனைத்திற்கும் ஆதாரம் படிப்பாகும். எவ்வளவு படிக்கிறீர்களோ அவ்வளவு உயர்ந்த பதவியைப் பெறுவீர்கள். இந்த படிப்பு மிகவும் உயர்ந்தது. நரனிலிருந்து நாராயணனாக, மனிதனிலிருந்து தேவதையாக மாறுவதே குறிக்கோள் ஆகும். ஆதி சனாதன தேவி தேவதா தர்மம் இருந்த போது எந்த இம்சையும் இல்லை. அங்கே விகாரத்தின் விஷயம் கிடையாது. எந்த ஒரு சண்டை சச்சரவும் கிடையாது.பல தர்மங்கள் வரும் போது மொழிகளும் பலவாகிறது என இப்போது நீங்கள் புரிய வைக்கிறீர்கள். அனைவருக்கும் ஒரு மொழி இருக்க முடியாது. இப்போது உங்களுடைய அத்வைத தர்மம் ஸ்தாபனையாகிக் கொண்டிருக்கிறது. அத்வைதம் அல்லது தேவதை ஒரே வார்த்தை ஆகிவிடுகிறது. இப்போது நீங்கள் தேவதா தர்மத்தினராகிக் கொண்டிருக்கிறீர்கள். பாபா நாங்கள் உங்களிடமிருந்து 21 பிறவிகளுக்கு முழு உலகத்தின் சக்கரவர்த்தி பதவியை அடைகிறோம் என்று பாட்டு இருக்கிறது அல்லவா? அங்கே யாரும் இது எங்களுடைய இடம் இங்கே நீங்கள் செல்லக் கூடாது என கூற மாட்டார்கள். இங்கேயோ ஒருவர் இன்னொருவரை அச்சுறுத்திக் கொண்டே இருக்கிறார்கள். உட்கார்ந்துக் கொண்டே இருக்கும் போதே சண்டை சச்சரவின் பூதம் வந்து அமர்ந்துக் கொள்கிறது. நாம் ஸ்ரீமத் படி நம்முடைய இராஜ்யத்தை ஸ்தாபனை செய்துக் கொண்டிருக்கின்றோம். நாம் உலகத்திற்கே அதிபதியாகின்றோம். நாம் பாரதத்தில் தான் இருப்போம். டெல்லியின் அருகாமையில் நதிகளின் அருகில் இருப்போம். அங்கே எப்போதும் வசந்த காலமாக இருக்கிறது. அனைவரும் சுகமாக இருக்கிறார்கள். இயற்கையும் சதோபிரதானமாக இருக்கிறது அல்லவா? நாம் எப்படி தெய்வீக இராஜ்யத்தை மீண்டும் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம் என நீங்கள் புரிந்துக் கொள்கிறீர்கள். எனவே குழந்தைகள் பாபாவின் நினைவில் மிகவும் மகிழச்சியில் இருக்க வேண்டும். நிரந்தரமாக நினைவில் இருங்கள். வேறு எந்த துன்பமும் கொடுப்பதில்லை. இதில் தான் கடின உழைப்பு இருக்கிறது. அடிக்கடி தந்தையின் நினைவு மறந்து போகிறது. தேக உணர்வில் வருவதால் தவறான வேலைகளைச் செய்கிறார்கள். முதல் விகாரம் தேக உணர்வு ஆகும். இது உங்களுடைய மிகப் பெரிய எதிரி. ஆத்ம உணர்வு இல்லாத காரணத்தால் பிறகு காமம் போன்ற விகாரங்கள் தீண்டுகிறது. குறிக்கோள் உயர்ந்தது என குழந்தைகளும் புரிந்துக் கொள்கிறார்கள். தூய்மையாகவும் இருக்க வேண்டும். நீங்களே உண்மையிலும் உண்மையான பிராமணர்கள். கோடிகணக்கானவர்களுக்கு ஊதிக் கொண்டே (ஞானத்தை) இருங்கள். ஆமையின் எடுத்துக்காட்டு கூட இங்கே உங்களுக்குப் பொருந்தும். நீங்கள் உங்களுடைய வேலை போன்றவைகளை செய்யுங்கள், அலுவலகத்தில் அமருங்கள், யாரும் வாடிக்கையாளர் இல்லை என்றால் நினைவில் அமருங்கள் என பாபா புரிய வைக்கிறார். கூடவே படத்தையும் வையுங்கள். பிறகு உங்களுக்கு பழக்கமாகி விடும். நாம் பாபாவின் நினைவில் அமரலாம். பல்வேறு விதமான யுக்திகளை பாபா தெரிவிக்கின்றார். பக்தி மார்க்கத்தில் சித்திரங்களை நினைக்கிறார்கள். இங்கேயோ இது விசித்திரமான நினைவாகும். இது புது விஷயம் அல்லவா? தன்னை ஆத்மா என புரிந்துக் கொண்டு தந்தையை நினையுங்கள். புது விஷயமாக இருக்கின்ற காரணத்தினால் உழைக்க வேண்டியிருக்கிறது. இதில் பயிற்சி செய்ய வேண்டியிருக்கிறது. ஞானம் கிடைத்து விட்டது. விஷ்ணுவிலிருந்து பிரம்மாவாக எப்படி மாறுகிறார் என்பதும் புரிய வைக்கப்பட்டிருக்கிறது. விஷ்ணு என்றால் லஷ்மி நாராயணனின் 84 பிறவிகளுக்குப் பிறகு அவரே பிரம்மா, சரஸ்வதி ஆகிறார், இந்த விஷயங்கள் வேறு எந்த சாஸ்திரத்திலும் இல்லை. விஷ்ணுவின் நாபியிலிருந்து பிரம்மா வந்தார் என்பது கிடையாது. நான் குழந்தைகளாகிய உங்களை சுய தரிசன சக்கரதாரியாக மாற்றுகிறேன் என பாபா கூறுகிறார். அதனுடைய பொருளை நீங்கள் அறிகிறீர்கள். உங்களுடைய வார்த்தைகள் குப்தமாக இருக்கிறது. இதை யாரும் காப்பி செய்ய முடியாது. இன்று காப்பி கூட செய்கிறார்கள் அல்லவா? வெள்ளை உடை அணிந்தவர்கள் கூட நிறைய பேர் இருகிறார்கள், போட்டி போடுகிறார்கள். இதில் யாரும் காப்பி செய்ய முடியாது.நாம் தினந்தோறும் பாபாவிற்கு முன்பு அமர்ந்து கேட்கிறோம் என இப்போது குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துக் கொள்கிறீர்கள். வெளியில் கூட குழந்தைகள் மதுபனில் சிவபாபா பிரம்மா மூலாக முரளியைக் கூறுகிறார் என புரிந்துக் கொள்வார்கள். ஆத்மா தான் அப்பாவை நினைக்கிறது. நினைவினால் தான் விகர்மங்கள் அழியும். விகாரியாக ஆனதிலிருந்து பாவம் செய்துக் கொண்டே வந்ததால் பல பிறவிகளின் சுமை தலை மீது இருக்கிறது. தமோபிரதானம் ஆகிக் கொண்டே இருக்கிறார்கள். தமோபிரதானம் ஆவதில் அரை கல்பம் ஆகிறது. சதோ, ரஜோ, தமோவாகி துருபடிவதால் ஆத்மா அழுக்காகிறது அல்லவா? அந்த துருவை நிச்சயம் நீக்க வேண்டும். இல்லை எனில் பாபாவின் நினைவில்லாமல் ஆத்மா பறக்க முடியாது. மாயா இராவணன் அனைவரின் சிறகுகளையும் துண்டித்திருக்கிறான். இது புரிந்துக் கொள்ள வேண்டிய விஷயம் ஆகும். மோட்சம் யாருக்கும் கிடைப்பதில்லை. தூய்மையற்றவராகி எங்களை வந்து தூய்மையாக்குங்கள் என அழைக்கிறார்கள். அவ்வளவு தான் ! இதில் வேறு எந்த விஷயமும் இல்லை. நீங்கள் தமோபிரதானத்திலிருந்து சதோபிரதானமாக எப்படி மாறுவது என பாபா கற்பிக்கிறார். குழந்தைகளுக்கு எழுதிக் கொண்டேயும் இருக்கிறார். குழந்தைகளே, நீங்கள் பாபாவை மறந்ததால் தமோபிரதானமாக மாறிவிட்டீர்கள். இப்போது தந்தையை நினைத்தால் சதோபிரதானம் ஆவீர்கள். மிகத் தூய்மையான உலகத்திற்கு அதிபதியாவதற்காக தந்தையை நினையுங்கள். உங்களுடைய ஆத்மாவில் 84 பிறவிகளின் ஞானம் இருக்கிறது. 84ன் சக்கரம் முடிவடைந்து விட்டது. ஆத்மாவில் எவ்வளவு பெரிய பாகம் பதிவாகியிருக்கிறது. இது அதிசயமாக இருக்கிறது. இவ்வளவு சிறிய ஆத்மாவில் எவ்வளவு பெரிய பாகம் பதிவாகி இருக்கிறது. நாம் 84 பிறவிகளை எடுக்கிறோம் என ஆத்மா கூறுகிறது. இதையும் இப்போது தான் நீங்கள் புரிந்துக் கொண்டீர்கள். மனிதர்களுக்கு எதுவும் தெரியாது. ஆத்மாக்களாகிய நீங்கள் 84 பிறவிகளை அனுபவிக்கிறீர்கள் என பாபா இப்போது புரிய வைத்துக் கொண்டிருக்கிறார். ஒரு உடலை விட்டு விட்டு இன்னொன்றை எடுக்கிறீர்கள். மறுபிறவி எடுத்து எடுத்து ஏணிப்படியில் கீழே இறங்கி கொண்டே வந்துள்ளீர்கள். மீண்டும் இப்போது தூய்மையாகி ராஜ்ஜியம் செய்ய வேண்டும் என்றால் எவ்வளவு மகிழ்ச்சி அடைய வேண்டும். பாபா நமக்கு எல்லையற்ற ஆஸ்தியை கல்ப கல்பமாகக் கொடுக்கின்றார். குழந்தைகளாகிய உங்களுக்கு இப்போது அறிமுகம் கிடைத்திருக்கின்றது. நாம் மாலையின் மணியாக மாறுகிறோம். பிறகு வரிசைக் கிரமத்தில் இராஜ்ஜியம் செய்வோம் என நீங்கள் அறிகிறீர்கள். அவ்விடத்தின் இராஜ்ஜியத்தின் பழக்க வழக்கங்கள் என்ன இருக்குமோ அது மீண்டும் திரும்ப வரும். அதற்காக வீணான எண்ணங்களை உருவாக்க வேண்டிய அவசியம் இல்லை. இது எப்படி நடக்கும்? என்ன நடக்கும்? எப்படி இராஜ்யம் செய்தீர்களோ அப்படி செய்வீர்கள் அதை சாட்சியாக இருந்து பார்க்க வேண்டும். என்ன நடக்கும் என்று கவலைப் பட வேண்டிய அவசியம் இல்லை. நல்லது.இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.தாரணைக்கான முக்கிய சாரம் :

1. சுப காரியத்தை தாமதப் படுத்தக் கூடாது. தூய்மையாகி பாபாவிடமிருந்து முழு ஆஸ்தியும் அடைய வேண்டும். தன்னைத் தகுதி உடையவராகி தன்னுடைய கால்களில் நிற்க வேண்டும். ஒரு தந்தையிடம் முழு அன்பும் வைக்க வேண்டும்.2. வேலைகளைச் செய்தாலும் ஒரு விசித்திரமான தந்தையை நினைக்க வேண்டும். எந்த வீண் சிந்தனைகளும் கூடாது. சதோபிரதானமாக வேண்டும். அளவற்ற குஷியில் இருக்க வேண்டும்.வரதானம் :

இதயத்தில் எப்போதும் ஒரு இராமை வைத்து உண்மையான சேவை செய்யக் கூடிய மாயையை வென்றவர், வெற்றியாளர் ஆகுக !அனுமானின் சிறப்பம்சமாக அவர் எப்போதும் சேவாதாரி, மகாவீரனாக இருந்ததாக காண்பிக்கிறார்கள். அதனால் தான் எரியவில்லை. ஆனால் வால் மூலமாக இலங்கையை எரித்தார். எனவே, இங்கேயும் யார் சேவாதாரியாக இருக்கிறார்களோ அவர்கள் மாயாவின் அதிகாரத்தை அழித்து விட முடியும். யார் சேவாதாரியாக இல்லையோ, அவர்கள் மாயாவின் இராஜ்ஜியத்தை எரிக்க முடியாது. அனுமானின் இதயத்தில் சதா ஒரு இராம் இருந்தார். எனவே, பாபாவைத் தவிர வேறு யாரும் இதயத்தில் இருக்கக் கூடாது. தனது தேகத்தின் நினைவு கூட இருக்க கூடாது. அப்போது தான் மாயையை வென்ற வெற்றியாளராக ஆகலாம்.சுலோகன் :

ஆத்மாவும் உடலும் இணைந்திருப்பது போல தாங்களும் பாபாவும் இணைந்திருங்கள் ***OM SHANTI***