BK Murli 26 January 2017 Tamil

BK Murli 26 January 2017 Tamil

26.01.2017    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


இனிமையான குழந்தைகளே! சர்வசக்திவான் தந்தையின் நினைவின் மூலம் ஆத்மாவில் படிந்துள்ள விகாரங்களின் துருவினை நீக்குவதற்கான முயற்சி செய்யுங்கள்.கேள்வி:

தந்தையிடமிருந்து புத்தியின் தொடர்பு துண்டிக்கப்படுவதன் முக்கிய காரணம் என்ன, மேலும் தொடர்பை இணைப்பதற்கான சகஜமான முயற்சி எது?பதில்:

தேக அபிமானத்தில் வருவதன் மூலம், தந்தையின் கட்டளையை மறப்பதன் மூலம், அழுக்கான கெட்ட பார்வை வைப்பதன் மூலம் புத்தியின் தொடர்பு துண்டிக்கப்படுகிறது, ஆகையால் குழந்தைகளே, எவ்வளவு முடியுமோ அவ்வளவு கட்டளைக்குக் கீழ்ப்படிந்தவர் ஆகுங்கள். ஆத்ம அபிமானி ஆவதற்கான முழுமையிலும் முழுமையான முயற்சி செய்யுங்கள். அழிவற்ற சர்ஜனின் நினைவின் மூலம் ஆத்மாவை சுத்தமாக்குங்கள்.பாடல்:

இனி வரப்போகும் நாளின் நீ. . .ஓம் சாந்தி.

சிவ பகவானுடைய மகா வாக்கியம். குழந்தைகள் பாடலைக் கேட்டீர்கள். நம் முன்னால் பாபா அமர்ந்திருக்கிறார், அவர் பதித பாவனர் (தூய்மையற்றவரை தூய்மை யாக்குபவர்) என சொல்லப்படுகிறார் என குழந்தைகள் புரிந்துள்ளனர். பரமபிதா பரமாத்மாவைத்தான் கண்டிப்பாக பதித பாவனர் என சொல்வோம். பிரம்மா, விஷ்ணு, சங்கரரை பதித பாவனர் என சொல்ல மாட்டோம். அவர் ஞானக் கடலாக இருப்பவர். ஆத்மாக்களாகிய நாம் பரமபிதா பரமாத்மாவிடமிருந்து ஞானம் கேட்கிறோம் என குழந்தைகள் அறிவார்கள். நீங்கள் இப்போது ஆத்ம அபிமானியாக ஆகியுள்ளீர்கள். உலகில் அனைவரும் தேக-அபிமானிகளாக இருக்கின்றனர். ஆத்ம-அபிமானிகள் சிரேஷ்டாச்சாரி (மேன்மையானவர்) ஆகின்றனர். அவர்களை பரமாத்மாதான் அமர்ந்து ஆத்ம-அபிமானிகளாக ஆக்குகிறார். ஆத்மாதான் பாவாத்மாவாகவும் புண்ணிய ஆத்மாவாகவும் ஆகிறது என தந்தை புரிய வைக்கிறார். பாவ ஜீவன் (உடல்), புண்ணிய ஜீவன் என சொல்லப்படுவது கிடையாது. ஆத்மாவில்தான் சம்ஸ்காரங்கள் இருக்கின்றன. சரீரமோ அடிக்கடி அழிந்து போய் விடுகிறது. சிவபாபாவை அழிவற்ற சர்ஜன் (அறுவைச் சிகிச்சை யாளர்) எனவும் சொல்கின்றனர் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். ஆத்மாவும் அழிவற்றது, தந்தையும் அழிவற்றவர். ஆத்மா ஒருபோதும் அழிவதில்லை. மற்றபடி ஆம், ஆத்மாவின் மேல் விகார செயல்களின் தனமான துரு ஏறுகிறது. அழுக்கிலும் அழுக்கான முதல் நம்பர் துரு ஏறுவது காம விகாரத்தினுடையதாகும், அடுத்தது கோபத்தின் துரு ஆகும். ஆத்மாக்களுக்கு தந்தை அமர்ந்து புரிய வைக்கிறார் எனும்போது பரமபிதா பரமாத்மா இந்த சாதாரண பிரம்மாவின் உடலில் பிரவேசம் செய்கிறார் என்பதில் உறுதியான நிச்சயம் இருக்க வேண்டும். அவர் இந்த ரதத்தின் சாரதி (ஓட்டுபவர்) ஆவார். குதிரை வண்டியின் ரதம் அல்ல. ஓ ஆத்மா, உன் மேல் 5 விகாரங்களின் துரு படிந்துள்ளது என பரமபிதா பரமாத்மா குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார். 5 விகாரங்கள் இராவணன் எனப்படுகிறது. இராவணனின் துரு ஏறிவிட்டதாலேயே நீங்கள் அனைவரும் விகாரிகளாகவும் துக்கம் மிக்கவர்களாகவும் ஆகி விட்டிருக்கிறீர்கள். இப்போது நான் உங்களுடைய துருவினை நீக்குகிறேன். இந்த துருவை நீக்கக் கூடிய சர்ஜன் நான் மட்டும்தான் ஆவேன். மனித ஆத்மாவின் சர்ஜன் வேறொருவர் இருக்க முடியாது. மனிதர்கள் ஒருபோதும் ஆத்மாவின் துருவை நீக்க முடியாது. இந்த துருவை நீக்குவதற்கு சர்வசக்திவான் பரமாத்மா தேவை. அவர் சொல்கிறார் - ஓ ஜீவாத்மாக்களே! ஓ என்னுடைய குழந்தைகளே! என்னை நினைவு செய்தீர்கள் என்றால் உங்களுடைய ஆத்மாவின் துரு நீங்கியபடி இருக்கும். நினைவு செய்யாவிட்டால் துரு இறங்காது. தாரணை ஏற்படாவிட்டால் உயர் பதவியும் அடைய முடியாது. துரு ஏறியுள்ளவர்கள் பதிதர்கள் (தூய்மையற்றவர்கள்) என சொல்லப்படுகின்றனர். ஆத்மா தூய்மையற்றதாக ஆகும்போது சரீரமும் கூட தூய்மையற்றதாக கிடைக்கிறது. சதோபிரதான ஆத்மா எனில் அவருக்கு சரீரமும் கூட சதோபிரதானமாக கிடைக்கிறது. மாவில் உப்பு போல துரு மெல்ல மெல்ல ஏறுகிறது, பிறகு துவாபரத்தில் நிறைய துரு ஏறுகிறது. ஆத்மாவின் கலைகள் மெல்ல மெல்ல குறைந்தபடி செல்கிறது. 16 இருந்து 14 கலைகளாக ஆவதற்கு 1250 வருடங்கள் ஆகின்றன. பி. கு. க்களாகிய நாம் ராமனின் குழந்தைகள் என்ற நினைவு உங்களுக்கு இருக்க வேண்டும். அவர்கள் அனைவரும் இராவணனின் குழந்தைகள், ஏனென்றால் விஷத்தின் (விகாரத்தின்) மூலம் பிறவி எடுக்கின்றனர். சத்யுகத்தில் விஷம் இருப்பதே கிடையாது. இந்த சமயம் யார் எவ்வளவுதான் ஆசீர்வாதங்கள் கொடுப்பவர்களாக இருந்தாலும் அவருக்கு ஆசீர்வாதம் கொடுப்பதற்கு கண்டிப்பாக யாராவது இருப்பார்கள். ஆசீர்வாதம் கொடுக்கிறார் என போப் ஆண்டவர் குறித்தும் சொல்கின்றனர், ஆனால் அவருக்கும் கூட பரமபிதா பரமாத்மாவின் ஆசீர்வாதம் தேவை, அவர் உயர்ந்தவரிலும் உயர்ந்தவர் ஆவார். நீங்கள் ஸ்ரீமத்படி நடக்கும்போது ஆசீர்வாதம் கிடைக்கிறது. யார் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தவர்களாக இல்லையோ அவர்களுக்கு எப்படி ஆசீர்வாதம் கிடைக்கும், ஆத்ம அபிமானி ஆகுங்கள் என பாபா சொல்கிறார். தேகத்தின் அபிமானம் இருந்தது என்றால் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தவர் அல்ல என அர்த்தம், மேலும் பதவியும் கீழானதாகி விடும். இப்போது தந்தை வந்திருக்கிறார், நீங்கள் பாரதத்தை சிரேஷ்டாச்சாரியாக (உயர்வானதாக) ஆக்கக் கூடிய சேவை செய்கிறீர்கள், உங்களுக்கு 3 அடி நிலம் கிடைப்பது கூட கடினமாக உள்ளது. இப்போது நான் உங்களுக்காக முழு சிருஷ்டியையும் புதியதாக ஆக்கி விடுகிறேன். கண்காட்சியில் நீங்கள் பெரிய பெரியவர்களுக்கெல்லாம் கூட நாங்கள் இந்த உயர்ந்த சேவையில் இருக்கிறோம் என புரிய வைக்க முடியும். பாரதத்தை சிரேஷ்டாச்சாரியாக ஆக்கிக் கொண்டிருக்கிறோம், எப்படி என்பதை வந்து புரிந்து கொள்ளுங்கள். நாங்கள் உங்களுக்குச் சொல்ல முடியும். கண்காட்சியை காட்டி பிறகு புரிய வைக்க வேண்டும். ஸ்ரீமத் ஒரு பரமாத்மாவுடையது, அவர் எப்போதும் தூய்மை மாறாமல் இருப்பவர், அவர்தான் அபோக்தா (எதையும் அனுபவிக்காதவர்), கவலையற்றவர் ஞானக்கடல் ஆவார். அவர்தான் சொர்க்கத்தைப் படைக்கிறார். அவருடைய ஸ்ரீமத்படி நாங்கள் பாரதத்திற்கு சேவையை செய்து கொண்டிருக்கிறோம். பாண்டவர்களுக்கு 3 அடி நிலம் கூட கிடைக்கவில்லை என பாடலும் உள்ளதல்லவா. புரிய வைப்பதற்கு மிகவும் விசால புத்தி தேவை. யோகம் (நினைவு) முழுமையாக இருக்கும்போது அது (விசால புத்தி) இருக்கும். அப்போதுதான் தேக அபிமானத்தின் துருவும் கூட நீங்கும். நாங்கள் அனைவரும் உறுதி மொழி எடுத்திருக்கிறோம் என வருபவர்களுக்கெல்லாம் புரிய வையுங்கள் என பாபா வழி கூறுகிறார். எங்களிடம் புகைப்படமும் இருக்கிறது. இந்த புகைப்படங்கள் அனைத்தும் தலைமை அலுவலகத்தில், டெல்லி யில் மற்றும் செண்டர்களிலும் கூட இருக்க வேண்டும். இதில் கூட பெரிதும் விசாலமான புத்தி தேவை. புகைப்படத்தின் 4-5 காப்பிகள் இருக்க வேண்டும். ஆனால் மாயை எந்த நேரத்திலும் எந்த குழந்தையையும் வெற்றி கொண்டு விடுகிறது, பிறகு ஆச்சரியப்படும்படியாக பரமாத்மாவுடையவராக ஆகி, உலக இராஜ்யத்தை அடைந்து, பிறகும் கூட ஓடிப்போய் விடுகின்றனர்.நான் முழு சிருஷ்டியையும் மாற்றுகிறேன், பிறகு உங்களுக்கு முதல் தரமான சிருஷ்டியை உருவாக்கி கொடுக்கிறேன். அங்கே நீங்கள் இராஜ்யம் செய்ய வேண்டும், மற்ற அனைவரும் வினாசமாகி விடுவார்கள். குழந்தைகள் ஆத்ம அபிமானியாக கண்டிப்பாக ஆக வேண்டும். தூய்மை அடையும் உரிமை அனைவருக்குமே உண்டு, இந்த சமயத்தில் தந்தை வந்திருக்கிறார், என்னுடன் நினைவின் தொடர்பை ஈடுபடுத்தி, ஞான அமிர்தத்தைக் குடித்தீர்கள் என்றால் சிரேஷ்டாச்சாரியாக ஆகி விடுவீர்கள் என சொல்கிறார். சன்னியாசிகளும் கூட விகாரத்தை வெறுக்கின்றனர், தூய்மையாய் இருப்பது நல்லதுதானே. தேவதைகளும் தூய்மையாய் இருந்தனர். தந்தை தான் வந்து தூய்மையற்றவரிலிருந்து தூய்மையானவர்களாக ஆக்குகிறார். அங்கே அனைவரும் விகார மற்றவர்களாக இருப்பார்கள். அது விகாரமற்ற உலகமாகும். பாரதம் விகாரமற்றதாக இருந்தது, அப்போது தங்கக் குருவியாக இருந்தது. கண்டிப்பாக தந்தைதான் அப்படி ஆக்கியிருப்பார். ஆத்மாதான் தூய்மையற்றதாக, நோயாளியாக ஆகியுள்ளது. இப்போது ஆத்மாக்களின் சர்ஜன் பரமாத்மா ஆவார். மனிதர்கள் (சர்ஜனாக) இருக்க முடியாது. நானே பதித பாவனனாக இருக்கிறேன் என தந்தை சொல்கிறார். என்னை அனைவரும் நினைக்கின்றனர். தூய்மையாய் இருப்பது நல்லதல்லவா. சாது சன்னியாசி முதலானவர்கள் என்னைத்தான் நினைவு செய்து வந்தனர். பதித பாவனா வாருங்கள் என பிறவி பிறவிகளாக நினைவு செய்கின்றனர். ஆக, பகவான் ஒருவரே ஆவார், பக்தர்கள்தான் பகவான் என்பதல்ல. பகவானைக் கூட தெரிந்து கொள்ள வில்லை. கல்பத்திற்கு முன்பும் கூட நான் புரிய வைத்திருந்தேன். பகவானுடைய மகா வாக்கியம் - நான் உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கிறேன். பிரம்மாவின் உடலில் வருகிறேன், அவர் பூஜைக்குரியவராக இருந்தார், இப்போது பூஜாரியாக ஆகியிருக்கிறார். தூய்மையான இராஜாவாக இருந்தார், இப்போது தூய்மையற்ற பிச்சைக்காரராக ஆகி விட்டார். நாங்கள் பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகள் பி.கு. க்கள் என நீங்கள் உறுதிப்படுத்துகிறீர்கள். பரமபிதா பரமாத்மா பிரம்மாவின் மூலம் பிராமணர்களைப் படைத்தார். பிராமணர் களுக்குத்தான் தானம் கொடுக்கப்படுகிறது. எதனை தானம் கொடுக்கிறேன்? முழு உலகத்தை. அவர்கள் சூத்திரரிலிருந்து பிராமணர் ஆகி, என்னுடைய சேவை செய்கின்றனர், அவர்களின் முன்னால் அமர்ந்து புரிய வைக்கிறார் உங்களுடைய திருஷ்டி ஒருபோதும் அழுக்கானதாக இருக்கக் கூடாது. கண்காட்சிகளில் புரிய வைப்பதற்கு மிகவும் தைரியம் தேவை. தூய்மையற்றவர்களை தூய்மையாக்குபவர் ஒரு தந்தைதான் ஆவார். நீங்கள் அவரை நினைவு செய்கிறீர்கள், இவர்கள் (பி.கு) ஞானக்கடலிருந்து வெளிப்பட்ட ஞானகங்கையர், இவர்கள் சிவசக்திகள் என சொல்லப்படுகின்றனர். சிவபாபாவை நினைவு செய்வதன் மூலம் சக்தி கிடைக்கிறது. 5 விகாரங்களின் துரு நீங்குகிறது. தூய்மையாய் இருக்கும்போது ஊசியை காந்தம் கவர்ந்து ஈர்க்கிறது. ஆத்மாக்களாகிய உங்கள் மீது மாயையின் துரு ஏறிவிட்டிருக்கிறது. இப்போது என்னுடன் நினைவின் தொடர்பை ஈடுபடுத்தும் போதுதான் துரு இறங்கும். இப்போது இது இராவண இராஜ்யமாக உள்ளது. அனைவருடைய புத்தியும் தமோபிரதானமாக உள்ளது. அப்போது, நான் வந்து அஜாமின் போன்ற பாவிகள், விலைமாதர், சாதுக்கள் முதலானோரின் முன்னேற்றத்தையும் ஏற்படுத்துகிறேன் என பரமாத்மா சொன்னார்; அனைவரையும் சிரேஷ்டாச்சாரியாக ஆக்கக் கூடியவர் ஒரு தந்தை மட்டுமே ஆவார். பதீத பாவன தந்தைதான் வந்து இந்த மாதர்களின் மூலமாக பாரதத்தை தூய்மையாக ஆக்குகிறார், ஆகையால் தாய்மார்கள், தூய்மையை இழப்பதிலிருந்து காப்பாற்றுங்கள் என கூக்குரலிடுகின்றனர். கணவர் தூய்மையாய் இருப்பதற்கு விடுவதில்லை. இதில் எனக்கு உதவி செய்யுங்கள் என நீங்கள் அரசாங்கத்திற்குச் சொல்ல வேண்டும், ஆனால் பெண்களும் உறுதி மிக்கவர்களாக இருக்க வேண்டும். பிறகு கணவரை, குழந்தைகளை நினைவு செய்து கொண்டே இருக்குமாறு ஆகிவிடக் கூடாது, பிறகு இன்னும் அதோகதி ஆகிவிடும். தந்தை அனைத்து விஷயங்களையும் புரிய வைத்த படி இருக்கிறார். எப்படியாவது யுக்தியை உருவாக்குங்கள். இப்போது குழந்தைகளாகிய உங்களின் சுகத்தின் நாட்கள் வரவுள்ளன. நான் உங்களுக்கு தங்கயுகத்தின் உலகத்தை உருவாக்கிக் கொடுக்கிறேன், அது சொர்க்கம் என சொல்லப்படுகிறது. தந்தையாகிய என்னுடன் நினைவின் தொடர்பை ஈடுபடுத்தினால் துரு இறங்கும் என இப்போது ஸ்ரீமத் சொல்கிறது. இல்லாவிட்டால் அவ்வளவு நல்ல பதவியை அடைய முடியாது. தாரணையும் ஏற்படாது. எந்த பாவ கர்மமும் செய்யக் கூடாது. தேக அபிமானம் வருவதன் மூலம் புத்தியின் தொடர்பு விடுபட்டு விடுகிறது. இந்த பிரம்மாவும் அந்த தந்தையை நினைவு செய்கிறார். பரமபிதா பரமாத்மா இந்த பிரம்மாவின் உடல் அமர்ந்து இவர்களுக்குச் சொல்கிறார் - ஓ பிரம்மாவின்ஆத்மாவே ஓ ராதையின் ஆத்மாவே என்னை நினைவு செய்தீர்கள் என்றால் உங்களின் துரு இறங்கும். தன்னை ஆத்மா என புரிந்து கொள்ளும் போது, ஸ்ரீமத்படி முழுமையாக நடக்கும் போது நினைவு செய்ய முடியும். பேராசையும் ஒன்றும் குறைந்ததல்ல. ஏதாவது நல்ல பண்டம் இருந்தது என்றால் சாப்பிடலாம் என மனதில் தோன்றும், இது பேராசை எனப்படுகிறது.மாயை எலி போல ஊதி மரத்துப் போகச் செய்கிறது, கடித்தும் விடுகிறது. சாஸ்திரங்களில் கூட இப்படி நிறைய கற்பனை நிறைந்த கதைகளை எழுதியுள்ளனர். பிறகு சன்னியாசிகள், இந்த படங்கள் உங்களுடைய கற்பனை என சொல்கின்றனர். பாபா அனைத்து விஷயங்களையும் குழந்தைகளுக்குப் புரிய வைத்தபடி இருக்கிறார். நாம் என்ன செய்தாலும் பாபாவுக்குத் தெரியப் போவதில்லை என புரிந்து கொள்ள வேண்டாம். இந்த உலகில் எவ்வளவு அழுக்கு உள்ளது என்பது பாபாவுக்குத் தெரியும். அபலைகளின் மீது கொடுமைகள் ஏற்படவே செய்யும். தன்னை யுக்தியுடன் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் பதவி கீழானதாகி விடும். நாடகத்தின்படி இவையனைத்தும் நடக்கவே வேண்டும் என புரிந்து கொள்ளப்படுகிறது. நான் புரியவைத்தபடி இருந்தாலும் புரிந்து கொள்ளாவிட்டால் சிலர் தாச தாசியாகவும், சிலர் பிரஜைகளாகவும் ஆகி விடுன்றனர். நாடகத்தில் அவ்வாறு விதிக்கப்பட்டுள்ளது. என்ன செய்ய முடியும். ஏழை, பணக்கார பிரஜைகள் என அனைவரும் கண்டிப்பாக உருவாக வேண்டியுள்ளது. பாபா வருவதும் பாரதத்தில், இது தூய்மையற்ற உலகம். பாபா வந்து முழு உலகையும் தூய்மையான உலகாக உருவாக்குகிறார். பாரதத்திற்குத்தான் முழு வெண்ணையும் கிடைக்கிறது. கதை எவ்வளவு சகஜமானது. ஆனால் ஞான யோகத்தின் இருப்பதற்கு மிகவும் தைரியம் தேவை. ஸ்ரீமத்படி நடக்காவிட்டால் பதவி கீழாகி விடும். இப்படி இப்படியாக புரிய வையுங்கள் என பாபா வழி கொடுக்கிறார். புரிய வைப்பவர்கள் மிகவும் புத்திசாலியாக இருக்க வேண்டும். தந்தை மீது எவ்வளவு அன்பு இருக்கிறது. நாங்கள் சிவபாபாவின் ரதத்திற்கு ஸ்வெட்டர் அனுப்புகிறோம் என எவ்வளவு அன்போடு குழந்தைகள் எழுதுகின்றனர். சிவபாபா நம்முடைய எல்லைக்கப்பாற்பட்ட தந்தை ஆவார். நம்மை சொர்க்கத்தின் எஜமானாக ஆக்குகிறார். புத்தியில் அந்த பாபாவின் நினைவு வருகிறது. சிவபாபாவின் ரதத்திற்கு நாங்கள் டோலி அனுப்புகிறோம். ஹுசைனின் குதிரையை அலங்கரிப்பது போல. இது உண்மையிலும் உண்மையான குதிரையாகும். தூய்மைபடுத்துபவராகிய தந்தை தான் தூய்மையாக ஆக்குபவர் ஆவார். இவரும் (பிரம்மா) தன்னுடைய அலங்காரத்தை செய்து கொண்டிருக்கிறார். பாபாவையும் நினைவு செய்கிறார் மற்றும் தன்னுடைய பதவியையும் நினைவு செய்கிறார். இவர்கள் இருவருமே உறுதியானவர்கள். ஞான ஞானேஸ்வரி, பிறகு ராஜ ராஜேஸ்வரியாக ஆகிறார் எனும்போது அவர்களுடைய குழந்தைகளும் அவ்வாறு உருவாக வேண்டும். வரிசைக்கிரமமான முயற்சியின்படி எஜமானாக ஆகின்றனர். இராஜயோகத்தின் மூலம் ராஜ ராஜேஸ்வரியாக ஆகின்றனர், பிறகு அவரவர்களின் முயற்சிக்குத் தகுந்தாற்போல ஆகின்றனர். பாபா அனைத்து யுக்திகளையும் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். நல்லது!இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.தாரணைக்கான முக்கிய சாரம் :

1. தந்தையின் ஆசீர்வாதங்களை பெறுவதற்காக கட்டளைக்கு கீழ்ப்படிந்தவர் ஆக வேண்டும். ஆத்ம அபிமானியாக ஆக வேண்டும் என்ற கட்டளையை பின்பற்ற வேண்டும்.2. மாயை எலி போன்றது, அதனிடமிருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும். பேராசை கொள்ளக் கூடாது. ஸ்ரீமத்படி முழுமையிலும் முழுமையாக நடந்தபடி இருக்க வேண்டும்.வரதானம் :

வியக்த (ஸ்தூல) உணர்வின் ஈர்ப்பிலிருந்து விலகி அவ்யக்த (அசரீரி) நிலையின் அனுபவம் செய்யக் கூடிய அனைத்து பந்தனங்களிலிருந்தும் விடுபட்டவர் ஆகுக.இல்லறத்தில் இருந்தபடி பந்தனங்களிலிருந்து விடுபட்டவர் ஆவதற்காக எண்ணத்தாலும் கூட எந்த சம்மந்தத்திலோ தனது தேகத்திடமோ மற்றும் பொருட்களிடமோ மாட்டிக் கொள்ளக் கூடாது. எண்ணத்தாலும் கூட எந்த பந்தனமும் ஈர்க்கக் கூடாது, ஏனென்றால் எண்ணத்தில் வந்தது என்றால் பிறகு எண்ணத்திற்குப் பின் கர்மத்திலும் கூட வந்துவிடும். ஆகையால் வியக்த (தேக) உணர்வின் ஈர்ப்பில் வரக்கூடாது, அப்போது தான் விடுபட்ட அன்பான நிலையின் அனுபவம் செய்ய முடியும்.சுலோகன்:

தந்தையின் உதவியின் அனுபவம் செய்ய வேண்டும் எனில் எல்லைக்குட்பட்ட இடங்களின் உதவியை நாடுவதை விட்டு விடுங்கள்.தபஸ்வி மூர்த்தி ஆகுக !

தபஸ்வி சொரூபத்தில் இருந்து கொண்டு பறக்கும் கலை மூலம் ஃபரிஷ்தாவாகி நாலாபுறமும் சுற்றி வாருங்கள் மற்றும் யாருக்கெல்லாம் அமைதி வேண்டுமோ, குஷி வேண்டுமோ, திருப்தி வேண்டுமோ, ஃபரிஷ்தா சொரூபத்திலிருந்து அவர்களுக்கு அனுபவம் செய்யுங்கள். அவர்கள் இந்த ஃபரிஷ்தாக்கள் மூலம் சாந்தி, சக்தி மற்றும் குஷி அடைந்துவிட்டோம் என்று அனுபவம் செய்யட்டும்.


***OM SHANTI***