BK Murli 28 January 2017 Tamil

BK Murli 28 January 2017 Tamil

28.01.2017    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


இனிமையான குழந்தைகளே, ஞான இரத்தினங்களை தாரணை செய்து ஆன்மிக மருத்துவமனை, பல்கலைகழகத்தைத் திறந்துகொண்டே செல்லுங்கள். அதன் மூலம் அனைவருக்கும் ஆரோக்கியம், செல்வம் கிடைக்கும்.கேள்வி:

தந்தையினுடைய எந்த ஒரு காரியத்தை எந்த மனித ஆத்மாவும் செய்ய இயலாது?பதில்:

ஆத்மாவிற்கு ஞானம் என்ற ஊசி போட்டு சதா காலத்திற்காக நோயற்றவர் ஆக்குவது என்ற இந்தக் காரியத்தை எந்த மனிதரும் செய்ய இயலாது. யார் ஆத்மாவில் எதுவும் ஒட்டாது (நிர்லேப்) என்று புரிந்திருக்கிறார்களோ, அவர்கள் எவ்வாறு ஞானம் என்ற ஊசி போடுவார்கள்? இந்தக் காரியம் ஒரு அழிவற்ற மருத்துவருடையது ஆகும். அரை கல்பத்திற்கு ஆத்மா மற்றும் சரீரம் இரண்டுமே ஆரோக்கியமானதாக, செல்வம் நிறைந்ததாக ஆகும்படியாக ஞானம், யோகம் என்ற மருந்து அளிக்கின்றார்.பாடல்:

இந்த நேரம் கடந்து கொண்டிருக்கிறது.ஓம்சாந்தி.

குறைவான சமயமே மீதம் உள்ளது என்று யார் கூறினார்கள்? அதிக காலம் கடந்துவிட்டது, இப்பொழுது குறைந்ததிலும் குறைவான காலமே உள்ளது. இப்பொழுது நீங்கள் இந்தப் பழைய உலகத்தில் இருக்கிறீர்கள். இங்கேயோ துக்கமே துக்கமாக உள்ளது. சுகத்தின் பெயர் அடையாளம் கூட இல்லை. சுகமானது சுகதாமத்தில் தான் உள்ளது. கலியுகத்தை துக்கதாமம் என்று கூறுகிறார்கள். இப்பொழுது பாபா, உங்களை சுகதாமம் அழைத்துச் செல்வதற்காக நான் வந்திருக்கின்றேன், பின்னர், நீங்கள் ஏன் நின்றுவிடுகிறீர்கள்? உள்ளம் துக்கதாமத்தில் ஏன் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது? துக்க தாமத்தின் பொருட்கள் அதாவது இந்தப் பழைய சரீரத்தில் ஏன் உள்ளம் ஈடுபடுகிறது? என்று கேட்கின்றார். உங்களை சுகதாமத்திற்கு அழைத்துச் செல்வதற்காகவே நான் வந்திருக் கின்றேன். சந்நியாசிகள், இந்த உலகத்தின் சுகத்தை காக்கை எச்சத்துக்குச் சமமானது என்று கூறுகின்றார்கள். ஆகவே, அதை சந்நியாசம் செய்கின்றனர். குழந்தைகளாகிய உங்களுக்கு இப்பொழுது சுகதாமத்தின் காட்சி கிடைத்திருக்கிறது. இந்தப் படிப்பே சுகதாமத்திற்காகத் தான் மற்றும் இந்தப் படிப்பில் எந்தக் கஷ்டமும் இல்லை. தந்தையை நினைவு செய்ய வேண்டும். இந்த நினைவு மூலமாகக் கூட நீங்கள் நோயற்றவர் ஆவீர்கள். உங்களுடைய சரீரம் கல்ப விருட்சத்திற்குஙச சமமாக நீண்ட காலம் இருக்கும். இந்த மனித சிருஷ்டி மரத்தின் ஆயுள் 5 ஆயிரம் ஆண்டுகள் ஆகும். அதில் அரைக்கல்பம் சுகம், அரைக்கல்பம் துக்கம் உள்ளது. அரைக்கல்பமாக துக்கத்தை நீங்கள் பார்த்துவிட்டீர்கள், தூய்மையான உலகிற்குச் செல்ல வேண்டும் என்றால் தூய்மை ஆகுங்கள் என்று தந்தை கூறுகின்றார். இந்த விஷத்தின் கொடுக்கல் வாங்கலில் செய்வதை விட்டுவிடுங்கள், ஞானம் மற்றும் யோகத்தை தாரணை செய்யுங்கள் என்று ஸ்ரீமத் கூறுகிறது. எவ்வளவு ஞான இரத்தினங்களை தாரணை செய்வீர்களோ அவ்வளவு நோயற்றவராக ஆவீர்கள்.இது ஆன்மிக மருத்துவமனையாகவும் உள்ளது. பல்கலைக்கழகமாகவும் உள்ளது என்று தந்தை புரிய வைத்திருக்கின்றார். பரமபிதா பரமாத்மா வந்து ஆன்மிக மருத்துவமனை மற்றும் பல்கலைக்கழகத்தை ஸ்தாபனை செய்கின்றார். உலகத்தில் நிறைய மருத்துவ மனைகள் உள்ளன. ஆனால், இதுபோன்று மருத்துவமனை மற்றும் பல்கலைக் கழகம் ஆகிய இரண்டும் எங்கேயும் ஒன்றிணைந்து இருப்பதில்லை. மருத்துவமனை மற்றும் பல்கலைக்கழகம், ஆரோக்கியம் மற்றும் செல்வம் ஆகிய இரண்டும் இங்கே ஒருசேர கிடைக்கின்றன. இது அதிசயம் ஆகும். பின்னர் ஏன் இந்தப் பொக்கிஷத்தைப் பெறுவதற்கு தயாராகுவதில்லை? தற்சமயம் திடீரென வினாசம் வந்துவிடும். தந்தை உயர்ந்ததிலும் உயர்ந்த வழியைக் கூறுகின்றார். அனைவருக்கும் ஆரோக்கியம், செல்வம் இரண்டும் கிடைக்கும் படியான மருத்துவமனை மற்றும் பல்கலைக்கழகத்தை இந்த சமயம் எல்லையற்ற தந்தை திறக்கின்றார் என்று நீங்கள் அரசாங்கத்திற்கும் புரிய வையுங்கள். அரசாங்கம் கூட மருத்துவ மனை, பல்கலைக்கழகத்தைத் திறக்கிறது. இந்த உலகாய மருத்துவமனையைத் திறப்பதனால் என்ன ஆகும் (லாபம்)? என்று அவர்களுக்குப் புரிய வைத்திடுங்கள். இது அரைக்கல்பமாக நடந்து வந்திருக்கிறது மற்றும் நோயாளிகளும் உருவாகிக் கொண்டே தான் இருக்கிறார்கள். இதுவோ ஆன்மிக மருத்துவமனை மற்றும் பல்கலைக்கழகம் ஆகும், இதன் மூலம் மனிதர்கள் 21 பிறவிகளுக்கு எப்பொழுதும் ஆரோக்கியம் உடையவர்களாக, செல்வம் நிறைந்தவர்களாக ஆக இயலும். எல்லையற்ற தந்தை இந்த மருத்துவமனை மற்றும் பல்கலைக்கழகம் ஆகிய இரண்டையும் ஒன்றாக சேர்த்துத் திறக்கின்றார், அவ்வாறு திறந்தால் மனிதர்களுக்கு நன்மை ஏற்படும் என்று உங்களுக்கும் ஆலோசனை வழங்குகின்றார் என்று கல்வித்துறை அமைச்சர், சுகாதாரத்துறை அமைச்சருக்கு புரிய வைத்திடுங்கள். மற்றபடி, எப்பொழுதிலிருந்து இராவண இராஜ்யம் ஆரம்பம் ஆனதோ அப்பொழுதிலிருந்து இந்த நோய்கள் ஆரம்பமாகிவிட்டன. முன்னர் இயற்கை வைத்தியர்களின் மருந்துகள் இருந்தன. இப்பொழுதோ ஆங்கேலேய மருந்துகள் அதிகம் வந்துவிட்டன. இவர் அழிவற்ற மருத்துவர் ஆவார், அழிவற்ற மருந்து கொடுக்கின்றார். எனவே தான், ஞான மையை சத்குரு அளித்தார் என்று பாடப்படுகிறது. ஆத்மாக்களுக்கு ஆன்மிகத் தந்தை ஞானம் என்ற ஊசி போடுகின்றார். ஆத்மாவிற்கு ஊசி போடக்கூடியவர் வேறு எவரும் இருக்க முடியாது. அவர்களோ ஆத்மாவில் எதுவும் ஒட்டாது என்று கூறுகின்றனர். அந்த மருத்துவமனை மற்றும் பல்கலைக்கழகத்தில் இலட்சக்கணக்கான ரூபாய் செலவாகும், இங்கேயோ செலவிற்கான விசயமே கிடையாது என்று நீங்கள் புரிய வைத்திடுங்கள். 3 அடி நிலம் போதும். யார் வந்தாலும் அவர்களுக்குப் புரிய வைக்கப்படவேண்டும். தந்தையை நினைவு செய்தீர்கள் என்றால் எப்பொழுதும் ஆரோக்கியமானவர் ஆகிவிடுவீர்கள் மற்றும் சக்கரத்தை அறிந்து கொள்வதன் மூலம் சக்கரவர்த்தி இராஜா ஆவீர்கள். செல்வந்தராக இருந்தால் பெரிய மருத்துவமனை, பல்கலைக்கழகத்தைத் திறப்பார்கள். ஏழ்மையானவர்கள் சிறியதாகத் திறப்பார்கள். அரசாங்கம் எத்தனை திறக்கிறது? தற்காலத்தில் கூடாரம் போட்டு கூட கற்பிக்கின்றார்கள், மேலும், 2, 3 வகுப்புகள் நடத்துகிறார்கள். ஏனெனில், இடம் இருப்ப தில்லை. பணம் இருப்பதில்லை. இங்கு செலவிற்கான எந்த விசயமும் இல்லை. எந்த இடம் கிடைத்தாலும் சரி. எந்தக் கருவி போன்றவற்றை வைக்கப் போவதில்லை. மிகவும் எளிமையான விசயம் ஆகும். சகோதர்களும் திறக்கின்றனர், தாய்மார்களும் திறக்கின்றனர். நீங்களே திறங்கள், நீங்களே பராமரியுங்கள் என்று தந்தை கூறுகின்றார். யார் செய்வார்களோ, அவர்கள் பலன் அடைவார்கள், அனேகருக்கு நன்மை ஏற்படும். உயர்ந்த நிலையை (சிரேஷ்டம்) அடைவதற்காக எல்லையற்ற தந்தை ஸ்ரீமத் கொடுக்கின்றார். அநேக பேர் கேட்கின்றனர் ஆனால், செயல்படுத்துவதில்லை. ஏனெனில், அதிர்ஷ்டத்தில் இல்லை. தந்தையிடமிருந்து ஆரோக்கியம், செல்வம் கிடைக்கிறது. வைகுண்டத்தின் ஆஸ்தியைக் கொடுப்பதற்காக பாபா வந்திருக்கின்றார். வைர வைடூரியங்களாலான மாளிகை கிடைக்கும். பாரதத்தில் தான் இலட்சுமி, நாராயணருடைய இராஜ்யம் நடந்தது. அவசியம் அவர்களுக்கு தந்தை ஆஸ்தி அளித்திருப்பார். இப்பொழுதோ கலியுகத் தில் துக்கமே துக்கம் நிறைந்து உள்ளது. பின்னர் சத்யுகத்தை நான் தான் ஸ்தாபனை செய்ய வேண்டும். மனிதர் யாராவது மருத்துவமனை கட்டினார்கள் என்றால் திறப்புவிழா நடத்துகிறார்கள். நான் சொர்க்கத்தின் திறப்புவிழா செய்கின்றேன். இப்பொழுது நீங்கள் ஸ்ரீமத்படி நடந்து சொர்க்கத்திற்குத் தகுதி யானவர் ஆகுங்கள். கல்ப கல்பமாக நீங்கள் தகுதியானவர் ஆகின்றீர்கள். இது புது விசயம் கிடையாது. ஏழ்மையானவர்கள் அதிகமாக வருகின்றனர். நான் ஏழைப் பங்காளன் என்று பாபா கூறுகின்றார். செல்வந்தர்களிடம் பணம் அதிகம் உள்ளது, ஆகையினால் நாம் சொர்க்கத்தில் இருக்கிறோம் என்று நினைக்கின்றனர். பாரதம் ஏழ்மையானது. அதிலும் யார் மிகவும் ஏழ்மையாக இருக்கிறார்களோ, அவர்களைத் தான் தந்தை உயர்த்துகின்றார். செல்வந்தர்களோ தூங்கிக் கொண்டிருக்கின்றனர். எவ்வளவு ஞானம் மற்றும் யோகத்தை பாபா கற்பிக்கின்றார்! மூன்றாவது கண்ணைக் கூட பாபா தான் கொடுக்கின்றார். இதன் மூலம் நீங்கள் முழு சக்கரத்தை அறிந்து கொண்டீர்கள். மற்ற அனைவரும் காரிருளில் இருக்கின்றனர். நாடகத்தின் முதல், இடை, கடைசியைப் பற்றி யாருக்கும் தெரியாது. பதீத பாவனர் தந்தையையே மறந்துவிட்டனர். சிவபரமாத்மா கல்லிலும் முள்ளிலும் இருக்கின்றார் என்று கூறுகின்றனர்.இப்பொழுது அனைவருடைய அழிவிற்கான நேரம் என்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். நெருப்பில் எரிந்து மரணமடைந்து அழிந்து போவார்கள். பின்னர், அனைவரையும் என்னுடன் திரும்ப அழைத்துச் செல்வேன். நான் வழிகாட்டி ஆகி வந்திருக்கின்றேன். நீங்கள் பாண்டவ சேனை ஆவீர்கள் அல்லவா. அவர்கள் உலகாயத யாத்திரைக்கு அழைத்துச் செல்கின்றனர். அதை ஜென்ம ஜென்மங்களாக செய்து வந்திருக்கிறீர்கள். இது ஆன்மிக தீர்த்த யாத்திரை ஆகும். இதில் நடக்க வேண்டிய, சுற்ற வேண்டிய அவசியம் இல்லை. என்னை மட்டும் நினைவு செய்யுங்கள் என்று தந்தை கூறுகின்றார். இரவில் கூட கண்விழித்து என்னை நினைவு செய்யுங்கள். என்னிடம் புத்தியின் தொடர்பை ஈடுபடுத்துங்கள். தூக்கத்தை வென்றவர் ஆனீர்கள் என்றால் நீங்கள் என் அருகாமையில் வந்து கொண்டே இருப்பீர்கள். அவர்கள் விகாரத்தின் மூலமான வம்சாவளி பிராமணர்கள் ஆவார்கள். நீங்கள் பிரம்மா வாய்வழி வம்ச பிராமணர்கள் ஆவீர்கள். இப்பொழுது நீங்கள் ஆன்மிக யாத்திரையில் ஈடுபட்டு இருக்கின்றீர்கள், நீங்கள் தூய்மையாக இருக்க வேண்டும். அந்த பிராமணர்கள் சுயம் தூய்மை அற்றவர்களாக இருக்கின்றனர். எனவே, பிறரை தூய்மை ஆக்க முடியாது. நீங்கள் தூய்மையாக இருக்க வேண்டும். ருத்ர ஞான யக்ஞத்தில் தூய பிராமணர்கள் தான் இருக்கின்றனர். அந்த பிராமணர்கள் கோவில்களில் இருக்கின்றனர். பிராமணன் என்ற பெயர் கொண்டிருந்தால் தேவதைகளின் மூர்த்தியின் மீது கை வைக்க முடியும் மற்றும் அவற்றிற்கு ஸ்நானம் முதலியவை செய்விக்க முடியும், ஆனால், அவர்களே தூய்மை இல்லலாமல் தான் இருக்கிறார்கள். மற்றபடி, கோவிலுக்குச் செல்லும் பிற மனிதர்கள் பிராமணன் என்ற பெயர் கொண்டிருக்கவில்லை என்றால் அவர்களை கை வைத்துத் தொட அனுமதிப்பதில்லை. பிராமணர்களுக்கு அதிக மதிப்பு உள்ளது. ஆனாலும், அவர்கள் தூய்மையற்றவர்கள், விகாரிகளே ஆவார்கள். சிலர் பிரம்மச்சாரியாக இருப்பார்கள். யார் 21 குலத்தை முன்னேற்றுகிறார்களோ, அவர்களே உண்மையிலும் உண்மையான பிராமண, பிராமணிகள் ஆவார்கள் என்று தந்தை வந்து புரிய வைக்கின்றார். கன்னிகை ஒருவேளை முன்னேற்றம் அடையச் செய்தால் அவருடைய தாய், தந்தையும் அவ்வாறே இருப்பார்கள். 21 தலைமுறைக்கு நீங்கள் சொர்க்கத்தின் எஜமானர் ஆக முடியும் என்று இந்தத் தாய், தந்தை கற்பிக்கின்றார்கள். தந்தை மறைமுகமாக (குப்தமாக) இருக்கின்றார் என்று குழந்தைகள் அறிவீர்கள். சிவபாபா பிரம்மா மூலம் நமக்கு அனைத்து இரகசியங் களையும் புரிய வைக்கின்றார். இந்த தாதாவோ தொழில் செய்து கொண்டு இருந்தார். இப்பொழுது அனேக பிறவிகளின் கடைசி பிறவியின் இறுதியில் சிவபாபா வந்து பிரவேசம் செய்திருக்கிறார். மேலும், இவர் மூலமே ஞானம் சொல்கின்றார். இது ரதம் ஆகும். சிவபாபா சாரதி ஆவார். இந்த ரதம் அனேக பிறவிகள், தூய்மையற்றது என்று இப்பொழுது நிராகார பரமாத்மா புரிய வைக்கின்றார். முதன்முதலில் இவரே (பிரம்ம பாபா) தூய்மை ஆகின்றார். அருகில் இருக்கின்றார். நான் பகவான் என்று இவர் சொல்வதில்லை. இது என்னுடைய அனேக பிறவிகளின் கடைசியிலும் கடைசி பிறவி ஆகும், வானப்பிரஸ்த நிலை ஆகும், தூய்மை இல்லாத நிலை ஆகும் என்று இவர் கூறுகின்றார். பாபா இவருக்குள் பிரவேசம் செய்திருக்கின்றார். நீங்கள் தனது பிறவிகளைப் பற்றி அறியவில்லை, நான் உங்களுக்கு எடுத்துரைக்கின்றேன் என்று இப்பொழுது தந்தை கூறுகின்றார். பதீத பாவனர் பரமபிதா பரமாத்மாவே ஆவார் என்பது கூட புத்தியில் வருகிறது. அவர் தந்தையாகவும் இருக்கின்றார், ஆசானாகவும் இருக்கின்றார், குருவாகவும் இருக்கின்றார். முழு நாடகத்தின் முதல், இடை, கடை பற்றிய இரகசியத்தைப் புரிய வைக்கின்றார். பாபா நம்மை உடன் அழைத்துச் செல்வார் என்று நீங்கள் அறிந்துள்ளீர்கள். இந்தத் தந்தை, ஆசான், குருவின் வழிகாட்டு தலைப் பெறுவதன் மூலம் நீங்கள் உயர் பதவியை அடைவீர்கள். எவ்வளவு நல்ல முறையில் புரிய வைக்கின்றார். சிலரோ தாரணை செய்து ஸ்ரீமத்படி நடந்து உயர்பதவியை அடைகின்றனர். யார் ஸ்ரீமத்தை ஏற்றுக் கொள்வதில்லையோ அவர்கள் உயர்பதவியை அடைவதில்லை. சுகதாமம் மற்றும் சாந்திதாமத்தை நினைவு செய்து இந்த துக்கதாமத்தை மறந்து கொண்டே செல்லுங்கள் என்று பாபா கூறுகின்றார். தன்னை அசரீரி எனப் புரிந்து கொள்ளுங்கள். இப்பொழுது நாம் திரும்பிச் சென்று கொண்டு இருக்கிறோம். பாபா அழைத்துச் செல்ல வந்திருக்கின்றார். ஒவ்வொருவரும் அவரவர் நடிப்பை மறுபடியும் நடிக்க வேண்டும். ஒவ்வொரு ஆத்மாவும் அழிவற்ற நடிகன் ஆகும். உலகத்தில் ஒருபொழுதும் பிரளயம் ஏற்படுவதில்லை. இது துக்கதாமம் ஆகும். பின்னர், சாந்திதாமம் மற்றும் சுகதாமத்திற்குச் செல்வோம். புத்தியில் இந்த சுயதரிசன சக்கரத்தைச் சுழற்றிக் கொண்டே இருங்கள் மற்றும் தூய்மையாக இருங்கள். அப்பொழுது படகு கரை சேர்ந்துவிடும். நீங்கள் காலன் மீது வெற்றி அடைந்து கொண்டு இருக்கிறீர்கள். அங்கே உங்களுக்கு அகால மரணம் ஏற்படாது. எவ்வாறு பாம்பு தனது பழைய தோலை விடுத்து புதியதைப் பெறுகிறதோ அவ்வாறே நீங்கள் கூட சட்டையை (சரீரத்தை) மாற்றி புதியதைப் பெறுவீர்கள். அத்தகைய நிலையை இங்கேயே உருவாக்க வேண்டும். நாம் இந்த சரீரத்தை விடுத்து இனிமையான வீட்டிற்குச் செல்வோம். நம்மை காலன் விழுங்க முடியாது. உண்மையில் சந்நியாசிகள் பாம்பின் உதாரணத்தைக் கூறமுடியாது. வண்டினுடைய உதாரணமும், கூட இல்லற மார்க்கத்தைச் சேர்ந்தவர்களுடையது ஆகும். ஜனகருக்குக் கிடைத்தது போல் ஒரு நொடியில் ஜீவன்முக்தி அளிக்க இயலும் என்று கூறுகின்றனர். இதுவும் கூட காப்பி (ஸ்ரீர்ல்ஹ்) செய்கின்றனர். ஜீவன்முக்தியில் இருவருமே வேண்டும். அந்த சந்நியாசிகள் எவ்வாறு ஜீவன்முக்தியை கொடுக்க இயலும்? வீடு திரும்புங்கள், என்னை நினைவு செய்தீர்கள் என்றால் விகர்மம் வினாசம் ஆகும் என்று இப்பொழுது தந்தை கூறுகின்றார். இல்லை யெனில், மிகுந்த தண்டனையை அடைவீர்கள் மேலும், கீழான பதவியே கிடைக்கும். கடைசியில் யாருடைய நினைவாவது வந்தது என்றால் பிறகு மறுபிறவி எடுத்தே ஆக வேண்டும். நினைவின் மூலம் ஆரோக்கியம் மற்றும் ஞானத்தின் மூலம் செல்வம் கிடைப்பதையே ஒரு வினாடியில் ஜீவன்முக்தி கிடைப்பதாகக் கூறப்படுகிறது. பின்னர், இவ்வளவு பணத்தை செலவு செய்வதற்கும், அலைந்து திரிவதற்கும் அவசியம் என்ன இருக்கிறது! ஆகையினால், சுகாதாரத் துறை அமைச்சர், கல்வித்துறை அமைச்சருக்கு, நீங்கள் இந்த மருத்துவமனை, பல்கலைக்கழகத்தை திறந்தீர்கள் என்றால் உங்களுக்கு மிகுந்த லாபம் கிடைக்கும் என்று புரிய வையுங்கள். யார் செய்வார்களோ அவர்கள் அதற் கான பலனை அடைவார்கள். செல்வந்தர்களின் வேலை செல்வந்தர்களை முன்னேற்றுவது ஆகும். ஏழைகள் தான் ஆஸ்தியைப் பெறுகின்றனர். மற்றபடி, யாருடைய செல்வம் மண்ணோடு போகும் என்று யார் கோடீஸ்வரர்களோ அவர்களுக்காக சொல்லப்பட்டு இருக்கிறது. கடைசியில் நெருப்பு பிடித்து அனைத்தும் அழிந்து போய்விடும். எனவே, ஏன் வினாசத்திற்கு முன்பு ஏதாவது செய்து ஏதாவது ஒரு பதவியை அடையக்கூடாது? மரணமடைந்து தான் ஆகவேண்டும். நாடகம் முடிவுறத் தான் வேண்டும். பாபா எவ்வளவு நல்ல முறையில் புரிய வைக்கின்றார். நதிகளோ சுற்றி வந்து கொண்டிருக்கின்றனர். பாக்கி, இந்த பிரம்மா தான் பிரம்மபுத்ரா ஆவார். சரஸ்வதி மம்மா ஆவார். மற்றவர்கள் ஞான கங்கைகள் ஆவார்கள். தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கும் கங்கைகள் எவ்வாறு தூய்மை ஆக்கும். அது ஒன்றும் மேளா (சந்திப்பு) கிடையாது. ஆத்மாக்கள் பரமாத்மாவுடன் சந்திப்பதே உண்மையான மேளா ஆகும். ஆகையாலேயே, ஆத்மா பரமாத்மா நீண்டகாலமாக தனித்து இருந்தார்கள்.... என்று கூறுகின்றனர். இப்பொழுது பரமாத்மாவோடு ஜீவாத்மாக்களின் சந்திப்பு நடக்கிறது. பரமாத்மா கூட சரீரத்தை இரவலாகப் (லோனாக) பெற்று இருக்கின்றார். இல்லையெனில் எவ்வாறு கற்பிப்பது? ஆகையினால், அவரை சிவபகவான் என்று அழைக்கப்படுகிறது. அவர் இவருக்குள் பிரவேசம் செய்து ஞானம் அளிக்கின்றார். சரஸ்வதியை ஞானத்தின் தேவி என்று கூறப்படுகிறது. பிரம்மாவிற்கும் கூட ஞானம் இருக்கும். அவருக்கு ஞானம் அளிப்பவர் யார்? ஞானக்கடல். வரிசைக்கிரமமான முயற்சியின் அனுசாரமே உங்களிடம் இந்த ஞானம் உள்ளது. எனவே, இந்த ஞானத்தை தாரணை செய்து ஸ்ரீமத்படி நடக்க வேண்டும். அனைத்தும் தூய்மையின் ஆதாரத்தில் உள்ளது. இதற்காகத் தான் அபலைகள் மீது கொடுமைகள் இழைக்கப்படுகின்றன. திரௌபதி அழைத்தார்கள். சகித்துக் சகித்து 21 பிறவிகளுக்கு தூய்மை இழப்பதிலிருந்து தப்பித்து விடுகின்றனர். நான் சாதுக்களையும் முன்னேற்றுகின்றேன் என்று கீதையிலும் கூட உள்ளது. ஆனால், சாதுக்கள் இந்த வார்த்தைகளை எடுத்துச் சொல்வதில்லை.இந்த சமயம் முழு உலகமும் இலஞ்சம் வாங்கும் உலகமாக ஆகிவிட்டது என்று நீங்கள் அறிவீர்கள். ஆகையினால், இவை அனைத்தும் வினாசம் ஆகியே தீரவேண்டும். யார் ஆஸ்தியைப் பெறவேண்டுமோ அவர்களே பெறுவார்கள். சில குழந்தைகள் பாபாவிடம், நாங்கள் ஏழை வீட்டில் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! என்று கூறுகின்றனர். செல்வந்தர்களோ வெளியே விட மறுக்கிறார்கள். பாபா நாங்கள் கன்னிகைகளாக இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! தாய்மார்கள் ஏணிப்படியில் இறங்க வேண்டியதாக உள்ளது. ஆஸ்தியைப் பெறுங்கள் என்று பாபா கூறுகின்றார். மனிதர்கள் மரணத்தை அடைய தாமதம் ஆவதில்லை. அதிகமாக ஆபத்துக்கள் ஏற்படு கின்றன. நீங்கள் தன்னை ஆத்மா என்று புரிந்து தந்தையாகிய என்னை நினைவு மட்டும் செய்யுங்கள். 84 பிறவிகள் முடிந்துவிட்டன. இப்பொழுது வீடு திரும்ப வேண்டுமா அல்லது இங்கேயே ஏமாற்றமடைய வேண்டுமா? மன்மனாபவ, மத்யாஜிபவ. இராவணனது ஆஸ்தியை மறந்துவிடுங்கள். இராவணன் சாபம் அளிக்கின்றார். குழந்தைகள் ஆனீர்கள் என்றால் ஆஸ்தியை அடைவீர்கள் என்று தந்தை கூறுகின்றார். ஸ்ரீமத்படி நடக்கவில்லை என்றால் ஆஸ்தியை எவ்வாறு அடைவீர்கள்? இந்த ஆன்மிக மருத்துவமனையை திறந்துகொண்டே செல்லுங்கள். காலி இடம் இருக்கிறது. வாடகைக்குக் கொடுத்தாலும் கூட நல்லது தான், மிகுந்த லாபம் உள்ளது. நல்லது.இனிமையிலும் இனிமையான தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்காக தாய், தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மிகக் குழந்தைகளுக்கு ஆன்மிக தந்தையின் நமஸ்காரம்.தாரணைக்காக முக்கிய சாரம்:

1. தந்தையின் சமீபமாக வருவதற்கு ஆன்மிக யாத்திரையில் இருக்க வேண்டும். இரவில் கண்விழித்துக் கூட இந்த புத்தியின் யாத்திரை அவசியம் செய்ய வேண்டும்.2. உண்மையிலும் உண்மையான பிராமணன் ஆகி 21 குலத்தை முன்னேற்ற வேண்டும். சுயதரிசன சக்கரதாரி ஆகவேண்டும். காலன் மீது வெற்றி பெறுவதற்காக இந்த பழைய சட்டையிலிருந்து பற்றை நீக்க வேண்டும்.வரதானம்:

குஷி என்ற சத்துணவு மூலம் மனம் மற்றும் புத்தியை சக்திசாலி ஆக்கக்கூடிய ஆடாத அசையாதவர் ஆகுக.ஆஹா பாபா ! ஆஹா மற்றும் ஆஹா எனது பாக்கியம் ! ஆஹா! சதா இந்தக் குஷியின் பாடலைப் பாடிக்கொண்டே இருங்கள். குஷி என்பது அனைத்தையும் விட நல்ல சத்தான உணவாகும். குஷியைப் போன்ற வேறு சத்தான உணவு கிடையாது. யார் தினமும் குஷி என்ற சத்துணவை சாப்பிடுகிறார்களோ, அவர்கள் எப்பொழுதும் ஆரோக்கியமாக இருப்பார்கள். ஒருபொழுதும் பலவீனமாக ஆகமாட்டார்கள். ஆகையினால், குஷி என்ற உணவு மூலம் மனம் மற்றும் புத்தியை சக்திசாலி ஆக்குங்கள்,அப்பொழுது ஸ்திதி (மனோநிலை) சக்திசாலியாக இருக்கும். அத்தகைய சக்திசாலி ஸ்திதி உடையவர்கள் எப்பொழுதுமே ஆடாத அசையாதவர்களாக இருப்பார்கள்.சுலோகன்:

மனம் மற்றும் புத்தியை அனுபவம் என்ற சீட்டில் (ஆசனத்தில்) செட் (நிலைக்கச் செய்தல்) செய்துவிட்டீர்கள் என்றால் ஒருபொழுதும் அப்செட் (மனோநிலை மாறியவர்) ஆகமாட்டீர்கள்.தபஸ்வி மூர்த்தி ஆகுங்கள்:

இந்த தேகத்தின் உலகத்தில் என்ன வேண்டுமானாலும் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும், நீங்கள் சாட்சி ஆகி அனைத்து நடிப்பையும் பார்த்துக் கொண்டே தனது தபஸ்வி சொரூபத்தின் மூலம் ஒளி மற்றும் சக்தி (சகாஷ்) கொடுத்துக் கொண்டே இருங்கள். உயர்ந்த நிலையில் நிலைத்திருந்து ஒளி மற்றும் சக்தி கொடுத்தால் எந்த விதமான சூழ்நிலையின் தாக்கம் ஏற்படாது. 

  

***OM SHANTI***