BK Murli 13 March 2017 Tamil

BK Murli 13 March 2017 Tamil

13.03.2017    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்

இனிமையான குழந்தைகளே ! பாபா தான் உங்களுடைய டீச்சர், குருவாக இருக்கிறார். வாழ்ந்துக் கொண்டே அவருடையவராகி மாலையில் (மணியாக) உருட்டபடவேண்டும்.கேள்வி :

குழந்தைகளாகிய நீங்கள் எந்த நிச்சயத்தின் ஆதாரத்தில் பக்கா பிராமணன் ஆகிறீர்கள்?பதில் :

இந்த கண்களினால் பார்க்கக் கூடிய, தேகம் உட்பட அனைத்தும் பழையது என்பதில் உங்களுக்கு முதலில் நிச்சயம் ஏற்பட்டிருக்கிறது. இந்த உலகம் பழைய மிகவும் மோசமானது. இது நாம் வசிப்பதற்கு தகுதி அற்றது. நமக்கு பாபாவிடமிருந்து புது உலகத்தின் ஆஸ்தி கிடைக்கிறது. இந்த நிச்சயத்தின் ஆதாரத்தினால் நீங்கள் வாழ்ந்துக் கொண்டே பழைய உலகம், பழைய உடலில் இருந்து இறந்து பாபாவினுடைவர் ஆகிறீர்கள். பாபா மூலமாகத் தான் உலகத்தின் இராஜ்ய பதவி கிடைக்கிறது என்ற நிச்சயம் உங்களுக்கு இருக்கிறது.பாடல் :

இறந்தாலும் உன் மடியில்.....ஓம் சாந்தி.

இந்த குழந்தைகள் பாடலைப் பாடுகிறார்கள். யார் கல் புத்தி உடையவராக இருந்தார்களோ அவர்கள் இப்போது தங்க புத்தி உடையவராக மாறுவதற்காகப் பாடலைப் பாடுகிறார்கள். கற்கள் கூட பாடியது என்று ஒரு பாட்டு இருக்கிறது. அந்த கற்கள் பாடலை பாடாது. ஆனால் கல்புத்தி உடைய மனிதர்கள் பாடுகிறார்கள். இப்போது உங்களுக்கு ஈஸ்வரிய புத்தி கிடைத்திருக்கிறது. ஈஸ்வரன் தனது குழந்தைகளுக்கு புத்தியைக் கொடுத்திருக்கிறார். நாம் ஈஸ்வரனுடையவர்களாக மாறி இருக்கிறோம் என்றால், தேகம் உட்பட இந்த உலகம் முழுவதையும் நாம் மறந்து போகின்றோம். ஏனென்றால் இது வசிப்பதற்குத் தகுதி அற்ற உலகம் ஆகும். மிகவும் மோசமாக இருக்கிறது. இதில் நிறைய பூசல்கள், குழப்பமான வேலைகள் இருக்கின்றது. எந்த சுகமும் இலலை. ஆகையால் நாங்கள் தங்களின் கழுத்தில் சுழலப் போகின்றோம். தன்னை ஆத்மா என நிச்சயபடுத்திக் கொண்டு நாங்கள் உங்களுடையவராக மாறுகின்றோம். எனவே, பழைய உலகம் பழைய உடலிருலிந்து மனதை விலக்க வேண்டும். ஏனென்றால் எங்களுக்கு தங்களிடமிருந்து புது உலகத்தின் ஆஸ்தி கிடைக்கிறது என அறிகிறீர்கள். எதுவரை இந்த நிச்சயம் ஏற்படவில்லையோ அது வரை பிராமணன் ஆக முடியாது. வாழ்ந்து கொண்டிருக்கும் போதே பாபாவினுடையவராக வேண்டும். நிராகார பாபாவைத் தான் பாபா என்று கூறப்படுகிறது. தாங்கள் எங்களுடைய தந்தையாகவும் இருக்கிறீர்கள், ஆசிரியராகவும் இருக்கிறீர்கள், சத்குருவாகவும் இருக்கிறீர்கள். தாங்கள் எங்களுக்கு வெளிப்படையான நல்ல பலனைக் கொடுக்கக் கூடியவர். பாபாவின் ரூபத்தில் விஷ்வத்தின் இராஜ்ய பதவியின் ஆஸ்தியை அளிக்கக் கூடியவர். ஆசிரியர் ரூபத்தில் முழு பிரம்மாண்டம் மற்றும் உலகத்தின் முதல், இடை, இறுதியின் ஞானத்தை கொடுக்கிறேன். சத்குருவின் ரூபத்தில் நம்மை முக்தி தாமத்திற்கு அழைத்துச் செல்வார். பிறகு ஜீவன் முக்திக்கு அனுப்பி விடுவார். ஓ, பாபா! நாங்கள் உங்களுடன் தான் வருவோம், என்று கூறுகிறார்கள். தாங்கள் தான் எங்களுடைய உண்மையான சத்குரு. உலகீய அந்த குருக்கள் உடன் அழைத்து செல்வதில்லை. அவர்களுக்கு முக்தி ஜீவன் முக்தியின் வழி தெரியாது. அவர்கள் தங்களையே சர்வ வியாபி என கூறுகிறார்கள் எனும் போது ஆஸ்தியை யார் கொடுப்பார்கள். ஓ, கடவுளே ! என்று யாரை அழைப்பார்கள். இப்போது குழந்தைகளாகிய நீங்கள் நாம் நிராகார் சிவபாபாவினுடையவராகி இருக்கிறோம் என புரிந்துக் கொள்கிறீர்கள். இப்போது நம்முடைய தேக உணர்வு துண்டிக்கப்பட்டுவிட்டது. நாங்கள் உங்களுடைய உத்தரவின் படி நடக்கின்றோம். தேகத்தின் உறவுகளிலிருந்து புத்தியை நீக்கி தன்னை ஆத்மா என்று நிச்சயபடுத்திக் கொண்டு என்னை நினையுங்கள் என தாங்கள் கூறுகிறீர்கள். ஆத்மா உடலில் இருந்து வெளியே சென்று விட்டால் நீங்கள் இறந்து விட்டீர்கள். உலகமும் இறந்து விட்டது. பிறகு எந்த சம்பந்தமும் இல்லை என பாபா கூறுகின்றார்.. எதுவரை தாயின் கருவில் நுழையவில்லையோ அதுவரை உங்களுக்கு எந்த உலகமும் இல்லை. உலகத்திலிருந்து நீங்கள் தனி. குழந்தைகளே, நீங்கள் வாழ்ந்துக்கொண்டே அனைத்தையும் மறந்து என்னுடையவராகுங்கள் என்று பாபா கூறுகின்றார். நான் உங்களை உடன் அழைத்துச் செல்வேன். இந்த உலகம் அழியப் போகிறது. தேவதைகள் ஒரு போதும் அழுக்கான உலகத்தில் வர மாட்டார்கள். லஷ்மியை அழைக்கிறார்கள் என்றால், நிறைய தூய்மைப் படுத்துகிறார்கள். ஆனால் லஷ்மி வருவதற்கு இது சத்யுகம் கிடையாது. பிறகு நாராயணன் எங்கிருந்து வருவார்? நல்லது மகாலஷ்மிக்கு ஏன் நான்கு புஜங்களைக் கொடுத்திருக்கிறார்கள். இவர்கள் இருவருமே இருக்கிறார்கள் என்று யாரும் புரிந்துக் கொள்ளவில்லை. நான்கு புஜங்கள் இருப்பது போன்று சித்திரங்களை உருவாக்க முடியாது. பிறகு இரண்டு வாய் கொடுக்க வேண்டும். ஒரு போதும் நான்கு கால்களைக் காண்பிக்க மாட்டார்கள். ஏனென்றால், இப்படிப்பட்ட மனிதர்கள் ஒரு போதும் இருக்க முடியாது. இது அனைத்தும் புரிய வைப்பதற்காகும். அதாவது இந்த ஜோடி லஷ்மி நாராயணன் இருக்கிறார்கள். தனியாக இருந்தால் இரண்டு புஜங்கள், இரண்டு கால்கள் இருக்கும். நம்முடைய தந்தை, ஆசிரியர், குரு மூவரும் இருக்கிறார்கள் நம் அனைவரையும் அழைத்துச் செல்வார்கள் என்பதில் முதன் முதலில் நிச்சயத்தை ஏற்படுத்துங்கள் என்று பாபா கூறுகிறார். கடைசியில் ஞானம் கொடுப்பதற்கோ அல்லது உடன் அழைத்து செல்வதற்கோ என்று இவருக்கு, எந்த ஒரு சீடரும் கிடையாது.. இப்போது வீட்டிற்குத் திரும்ப வேண்டும். ஏனென்றால், நாடகம் முடியப் போகிறது என்று பாபா புரிய வைக்கின்றார். அனைவருக்கும் சத்கதி வழங்கும் வள்ளல் பதீத பாவனன் நான், என பாபா கூறுகின்றார். இந்த எம தூதுவர்களின் காட்சிகள் கூட கிடைக்கிறது. ஏனென்றால், பாவம் செய்கிறார்கள் என்றால் தண்டனைகளை அடைகிறார்கள். மற்றபடி எமதூதுவர்கள் போன்றோர் கிடையாது. ஆத்மா ஒரு உடலை விட்டு இன்னொன்றை எடுக்கிறது. கர்ப்பத்தில் தண்டனை கிடைப்பதால் ஐயோ ! ஐயோ ! என்கிறார்கள். நம்முடைய தந்தை, ஆசிரியர், சத்குரு இருக்கிறார். அவர் ஒருவரையே நினைக்க வேண்டும் என்பதை முதன் முதலில் குழந்தைகளுக்கு இப்போது நிச்சயபடுத்த வேண்டும். படைப்பவர் கூட ஒருவரே. 10 அல்லது 100 படைப்பவர் கிடையாது. 10 உலகங்களும் கிடையாது.பாபா நாங்கள் உங்களின் கழுத்து மாலையாக வேண்டும் என்று குழந்தைகள் கூறுகிறார்கள். பிறகு என்னுடைய ருத்ர மாலை உருவாகும். இச்சமயம் பிராமணர்களாகிய நீங்கள் முயற்சியாளர்கள். உங்களுடைய மாலை உருவாக முடியாது. ஏனென்றால், விழுகிறீர்கள், பிறகு ஏறுகின்றீர்கள். நாம் பாபாவின் மாலையாகி, பிறகு விஷ்ணுவின் மாலையாகுவோம் என நினைக்கிறீர்கள். முதன் முதலில் தங்களுடைய நிராகார மாலையில், பரந்தாமத்திற்கு வருவார்கள். பிறகு சாகார மாலையாகி விஷ்ணுலோகத்தில் வருவார்கள். மனிதர்கள் இந்த விஷயங்களை அறிவதில்லை. நாங்கள் வாழ்ந்துக் கொண்டே தங்களுடையவராகி இருக்கிறோம் என குழந்தைகள் கூறுகிறார்கள். இல்லை என்றால் சாகார மனிதர்கள், சாகார மனிதர்களை தத்தெடுக்கிறார்கள். இங்கே நிராகார ஆத்மாக்களாகிய உங்களை நிராகார் சிவபாபா தத்தெடுக்கிறார். ஓ, ஆத்மாக்களே ! நீங்கள் என்னுடையவர் என பிரம்மா மூலமாகக் கூறுகின்றார். ஓ, சாகார் ! நீங்கள் என்னுடையவர் என்று கூறுவதில்லை. இங்கே நிராகார் நிராகாரரை நான் உங்களுடையவன், என்று கூறுகிறார்கள். மற்றபடி தத்தெடுப்பவர்கள் உடலைப் பார்க்கிறார்கள். தன்னை ஆத்மா என்று புரிந்துக் கொள்வதில்லை. சகோதரன் சகோதரியைத் தத்தெடுத்தால் என்ன கிடைக்கும்? இங்கேயோ பாபா ஆஸ்தி அளிப்பதற்காகத் தத்தெடுக்கிறார். இது மிகவும் ஆழமான விஷயமாகும். யார் நன்கு படிக்கிறார்களோ அவர்களின் புத்தியில் இந்த விஷயங்கள் நன்கு பதியும். தேக உணர்வை விட்டு விட்டு என்னுடையவர் ஆகினால், நான் உங்களை நிராகார உலகத்திற்கு அழைத்துச் செல்வேன் என்று நிராகார தந்தை கூறுகின்றார். கிருஷ்ணரின் ஆத்மாவை பரமாத்மா என்று கூற முடியாது. அவர் கூட 84 பிறவிகளை முழுமையாக எடுக்கின்றார். லஷ்மி நாராயணனின் இராஜ்யம் நடந்தது. இராஜா, இராஜா தான். இராணி இராணி தான். அனைவருக்கும் அவரவருக்கென்று நடிப்பு கிடைத்துள்ளது. 84 பிறவிகளை எடுக்கிறார்கள். ஒருவரின் விஷயம் அல்ல. அனைவரும் மறுபிறவி எடுக்க வேண்டும். 84 பிறவிகளின் சக்கரம் எப்படி சுழல்கிறது என்பதை குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். 84 லட்சம் பிறவிகள் என்று சொல்வதால் முழு விஷயமும் கெட்டுப் போகிறது. லட்சக்கணக்கான வருடங்களின் விஷயம் கூட நினைவிருக்காது. இப்போது நினைவு ஏற்படுகிறது. இன்று கீழான உலகமாக இருக்கிறது. நாளை உயர்ந்ததாக மாறும். சாஸ்திரி, நாங்கள் புது இந்தியாவை உருவாக்கியே தீருவோம் என்று எழுதினார். புது இந்தியா, புது உலகத்தில் தான் இருக்கும் என்று இப்போது நாம் எழுத முடியும். அங்கே தேவதா தர்மத்தைத் தவிர வேறு தர்மமும் (மதம்) இருக்காது. இப்போது பாரதத்தில் அளவற்ற தர்மங்கள் உள்ளன. பல்வேறு விதமான கிளைகள் இருக்கின்றது. இது அனைத்தும். கடைசி நேரத்தினுடையதாகிறது. லஷ்மி நாராயணலிருந்து இப்போது பிரம்மா சரஸ்வதி ஆகியிருக்கிறார்கள் என்பது இப்போது காட்டப்பட்டிருக்கிறது. பின் பிரம்மா சரஸ்வதியிலிருந்து லஷ்மி நாராயணன் ஆவார்கள். ஆகவே விஷ்ணுவிலிருந்து பிரம்மா வந்தார், பிரம்மாவிலிருந்து விஷ்ணு வந்தார் என காட்டப்பட்டிருக்கிறது. இப்போது நீங்கள் விஷ்ணுவின் குலத்தை உடையவர் ஆகியிருக்கிறீர்கள். இந்த நாடகம் முடியப் போகிறது என்பதை யார் நன்கு புரிந்துக் கொள்கிறார்களோ அவர்களுக்கு குஷியின் அளவு அதிகரிக்கும். நாடகம் என்பதால் முதல் இடை, இறுதி அனைத்தும் நினைவிற்கு வருகிறது. உங்களிடம் யார் புத்திசாலிகளாக இருக்கிறார்களோ அவர்களுக்கு எல்லையற்ற நாடகத்தின் நினைவிருக்கும். முதலில் சூரிய வம்சத்தினர், சந்திர வம்சத்தினுடைய இராஜ்யம் இருக்கும். பிறகு வெளியிலிருந்து வந்தனர். வைசிய வம்சத்தினர், சூத்திர வம்சத்தினர் ஆகினர். ஆத்மாக்களாகிய நாம் இவ்வாறு 84 பிறவிகள் எடுத்தோம். இருப்பினும் நிறைய பேருக்கு நினைவில்லை. நாடகத்தின் முதல், இடை, இறுதியின் ஞானம் இருக்க வேண்டும். இதுவே 5000 வருடத்தின் ஞானம் ஆகும். இது புத்தியில் இருக்க வேண்டும். ஆத்மா எவ்வளவு சிறியது 84 பிறவிகளின் நடிப்பை நடிக்கிறது. பரமாத்மா கூட எவ்வளவு சிறியதாக இருக்கிறார். அவரும் தனது நடிப்பை நடிப்பதற்காக கட்டுண்டு இருக்கிறார். நாடகத்தின் வசமாக இருக்கிறார். சங்கமம் ஏற்படும் போது அவர்களுடைய பாகத்தின் நடிப்பின் நேரம் வெளிப்படுகிறது. சாஸ்திரங்களில் பகவானிற்கு புதிய உலகத்தைப் படைக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது என்று எழுதிவிட்டனர். ஆனால் இவ்வாறு எழுதப்பட்டிருக்கிறது. யாரும் எதையும் புரிந்துக் கொள்ள முடியாது. அது அனைத்தும் முடிந்து போன விஷயங்களாகும். நீங்கள் நடைமுறையில் நடிப்பை நடித்துக் கொண்டிருக்கிறீர்கள். நம்முடைய தந்தை, ஆசிரியர், குரு மூவரும் இருக்கிறார்கள் என அறிகிறீர்கள். லௌகீக தந்தையை ஒரு போதும் இவ்வாறு அழைக்க மாட்டார்கள். அவர்களுக்குள் முழு மரத்தின் ஞானமும் இருக்கிறது. ஏனென்றால் சைத்தன்யமானவர் வந்து முழு ஞானத்தையும் கொடுக்கின்றார். இந்த தேகத்தை விட்டு விட்டு பாபாவுடன் செல்ல போகிறோம் என இப்போது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். எப்போது நீங்கள் கர்மாதீத நிலையை அடைகிறீர்களோ அப்போது உங்களுக்குள் எந்த பூதமும் இருக்காது. தேக உணர்வு முதல் நம்பர் பூதமாகும். இந்த பூதங்கள் அனைத்திற்கும் பெரியது இராவணன். பாரதத்தில் தான் இராவணனை எரிக்கிறார்கள். ஆனால் இராவணன் என்றால் யார்? என்பதை யாரும் அறியவில்லை. இந்த தசரா, ரக்ஷாபந்தன், தீபாவளி போன்றவைகளை எப்போதிலிருந்து கொண்டாடிக் கொண்டே வருகிறார்கள்? எதையும் அறியவில்லை. கடைசியில் இந்த இராவணன் இறக்க வேண்டும் அல்லது இப்படியே தான் நடந்துக் கொண்டே இருக்குமா என்று எதைப் பற்றியும் தெரியவில்லை. இராவணனை எரிக்கிறீர்கள். இருப்பினும் மீண்டும் உயிர்த்தெழுந்து விடுகிறான். ஏனென்றால் அவனுடைய இராஜ்ஜியம் ஆகும். சத்யுகத்தில் இராவணன் இருக்க மாட்டான். அங்கே யோக பலத்தால் குழந்தைகள் உருவாகிறார்கள். யோக பலத்தினால் நீங்கள் உலகத்திற்கே அதிபதியாகும் போது குழந்தைகள் பிறக்க மாட்டார்களா? அங்கே இராவணன் கிடையாது. ஆகையால் அனுபவித்தல் என்ற பெயரே கிடையாது. எனவே, கிருஷ்ணரை யோகேஷ்வர் என்கிறார்கள். அவர் சம்பூரண நிர்விகாரி ஆவார். யோகி ஒரு போதும் அனுபவிப்பதில்லை .(விகாரம் கிடையாது) ஒரு வேளை அனுபவிப்பவர்களாக இருந்தால் யோகம் கை கூடாது. நீங்கள் இப்போது யோகத்தை கற்றுக் கொண்டிருக்கிறீர்கள். அனுபவிக்க வேண்டும் என்று நினைத்தாலோ அல்லது விகாரத்தில் ஈடுபட்டாலோ யோகா செய்ய முடியாது. குழந்தைகளாகிய உங்களுக்கு தந்தை, ஆசிரியர், குருவின் ஆஸ்தி கிடைக்கிறது. சத்குரு அனைவரையும் உடன் அழைத்துச் செல்கிறார். அனைவரையும் அழைத்து தான் செல்வார். ஆனால் நீங்கள் கழுத்தின் மாலையாகிறீர்கள். பிரிய தர்ஷன் அனைத்து பிரிய தர்ஷினிகளையும் அழைத்துச் செல்வார். முதலில் பிரிய தர்ஷன் செல்வார். பிறகு சூரிய வம்சத்தினர், சந்திர வம்சத்தினர். பிறகு அனைத்து வம்சங்களும், இஸ்லாமியர்களின் ஊர்வலம் அல்லது வம்சத்தினர், பௌத்த மத வம்சத்தினர் செல்வர். அனைத்து ஆத்மாக்களும் அவரவர் பிரிவில் சென்று அமர்வார்கள். ஆத்மா நட்சத்திரம் போன்று இருக்கிறது. இது மிகவும் புரிந்துக் கொள்ள வேண்டிய விஷயமாகும். அதிர்ஷ்டசாலிகள் தான் கடைபிடித்து மற்றவர்களுக்கும் புரிய வைப்பார்கள். பிறகு அவர்கள் மகிமைகளை எழுதுகிறார்கள். இன்னார் எங்களுக்கு புரிய வைத்தார் என்றால், எங்களுடைய வாசல் (புத்தி) திறந்து விட்டது. இவர்கள் எங்களுக்கு உயிர் தானம் அளித்து விட்டனர். பிறகு அவர்கள் மீதே அன்பு ஏற்படுகிறது. அவர்களையே நினைவு செய்துக் கொண்டிருக்கிறார்கள். பிறகு அவர்களிடமிருந்து விடுவிக்க படுகிறது. தரகரைப் போய் யாரும் நினைக்க மாட்டார்கள். தரகர் தரகு முடித்து வைத்தார். அவ்வளவு தான்! பிறகு மணவாளனை மணப்பெண் நினைக்கிறார். பிரம்மாவும் தரகர் ஆகிவிட்டார். அந்த சிவபாபாவைத்தான் நினைக்க வேண்டும். இந்த தரகரும் அவரைத்தான் நினைக்கின்றார். இவருக்கு மகிமை கிடையாது. இவர் தூய்மையற்றவராக இருக்கிறார். முதலில் இவருக்குள் பிரவேசமாகி இவரை தூய்மையாக மாற்ற வேண்டும். ஒருவர் தூய்மையற்றவர், ஒருவர் தூய்மையானவர். சூட்சும வதனத்தில் தூய்மையானவர், அவருடைய முகத்தையும் காட்ட வேண்டும். பல முறை புரிய வைக்கப்படுகிறது. ஆனால் பாபாவின் குழந்தையாக மாற வேண்டும். பாபா நாங்கள் உங்களுடையவராகி விட்டோம் தாங்கள் எங்களுடைய தந்தை, டீச்சர், சத்குருவாக இருக்கிறீர்கள். நானும் உங்களை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் எனது மரியாதையை கெடுத்துவிடக் கூடாது என பாபா கூறுகிறார். என்னுடையவராகி, பிறகு விகாரத்தில் ஈடுபடக் கூடாது. உண்மையில் இச்சமயம் அனைவரும் நரகவாசிகளாக இருக்கிறார்கள். சொர்க்கத்தை நினைக்கிறார்கள். இன்னார் சொர்க்கவாசி ஆகிவிட்டனர் என்கிறார்கள். அட, சொர்க்கம் எங்கிருக்கிறது. ஒரு வேளை சொர்க்கத்திற்குப் போய்விட்டார் என்றால், பிறகு இங்கு அழைத்து ஏன் உணவை அளிக்க வேண்டும். தூய்மையற்ற உலகத்தில் தூய்மையற்ற பிராமணர்களுக்குத் தான் உணவளிக்கிறார்கள். யாரும் தூய்மையானவர்கள் கிடையாது. ஆனால் இந்த சிறிய விஷயத்தைக் கூட யாரும் புரிந்துக் கொள்வதில்லை. நல்லது.இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு, ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.தாரணைக்கான முக்கிய சாரம் :

1. ஞானத்தை அளிக்கக் கூடிய தரகரரிடம் அன்பு வைக்காமல், ஒரு சிவபாபாவை மட்டுமே நினைக்க வேண்டும். அவரே உயிர் தானம் அளிப்பவர் ஆவார்.2. இந்த எல்லையற் நாடகத்தை புத்தியில் வைத்து, அளவற்ற குஷியில் இருக்க வேண்டும். தேக உணர்வை விட்டு விட்டு அசரீரி ஆவதற்குப் பயிற்சி செய்ய வேண்டும்.வரதானம் :

தூய்மையின் அடிதளத்தை உறுதியாக்கி அதீந்திரிய சுகத்தின் அனுபவத்தை செய்யக் கூடிய முழுமையானவர் மற்றும் நிறைந்தவர் ஆகுக.பிராமண வாழ்க்கையின் அடித்தளம் தூய்மையாகும். இந்த அடித்தளம் உறுதியாக இருந்தால் சம்பூரணமாக சுகம், சாந்தி அனுபவம் ஆகிறது. ஒரு வேளை அதீந்திரிய சுகம் மற்றும் இனிமையான அமைதியின் அனுபவம் குறைவாக இருந்தால் தூய்மையின் அடித்தளம் பலவீனமாக இருக்கிறது. இந்த விரதத்தை மேற்கொள்வது சாதாரண விஷயம் கிடையாது. பாப்தாதா தூய்மையின் விரதத்தை கடைபிடிக்கக் கூடிய ஆத்மாக்களுக்கு இதயத்திலிருந்து ஆசீர்வாதங்கள் உட்பட வாழ்த்துக்களையும் வழங்குகிறார். இந்த விரதத்தில் முழுமையாகுங்கள் நிறைந்தவராகுங்கள் என்ற வரத்தையும் அடைவதற்கு, வீணானவைகளை யோசித்தல், பார்த்தல், பேசுதல் மற்றும் செய்தல் போன்றவைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, பரிவர்த்தனை (மாற்றம்) செய்யுங்கள்.சுலோகன் :

எப்போதும் ஒருவருக்குள்ளேயே மூழ்கி இருத்தலே ஏகாந்தவாசி ஆதல் ஆகும்.


***OM SHANTI***