BK Murli 27 May 2017 Tamil

BK Murli 27 May 2017 Tamil

27.05.2017    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


இனிமையான குழந்தைகளே! நாம் ஸ்ரீமத்படி தன்னுடைய உடல், மனம், பொருளால் குறிப்பாக பாரதத்தை, பொதுவாக முழு உலகத்தை சொர்க்கமாக்கக் கூடிய சேவை செய்து கொண்டிருக்கிறோம் என்ற சுத்தமான போதை உங்களுக்கு இருக்க வேண்டும்.கேள்வி:

குழந்தைகளாகிய உங்களிலும் கூட அனைவரையும் விட அதிகமான சௌபாக்கியசாலி என்று யாரை கூற முடியும்?பதில்:

யார் ஞானத்தை நல்ல முறையில் தாரணை செய்கின்றார்களோ மற்றும் பிறரையும் செய்விக்கிறார்களோ அவர்களே மிக மிக சௌபாக்கியசாலிகள். பாரதவாசிக் குழந்தைகளாகிய உங்களுக்கு சுயம்பகவான் இராஜயோகத்தை கற்பித்துக் கொண்டிருக்கிறார் என்பது மிகச்சிறந்த சௌபாக்கியம் ஆகும். நீங்கள் உண்மையிலும் உண்மையான வாய்வழி வம்சத்து பிராமணர்களாக ஆகியிருக்கிறீர்கள். உங்களுடைய இந்த மரம் சிறிது சிறிதாக வளர்ந்து கொண்டே செல்லும். ஒவ்வொரு வீட்டையும் சொர்க்கமாக்கக் கூடிய சேவையை நீங்கள் செய்ய வேண்டும்.ஓம் சாந்தி.

நாம் சேனைகள் என்று குழந்தைகளாகிய நீங்கள் புரிந்திருக்கிறீர்கள். நீங்கள் அனைவரையும் விட சக்தி வாய்ந்தவர்கள். ஏனெனில், நீங்கள் சர்வசக்திவானுடைய சிவசக்தி சேனை ஆவீர்கள். இந்த அளவு போதை ஏறி இருக்க வேண்டும். பாபா இங்கே போதை ஏற்றிவிடுகின்றார், வீட்டிற்குச் சென்றவுடன் மறந்துவிடுகின்றனர். சிவசக்தி சேனைகளாகிய நீங்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள்? இராவணனுடைய விலங்குகளில் மாட்டி இருக்கக்கூடிய முழு உலகத்தை விடுவிக்கிறீர்கள். இந்த உலகம் சோகவனத்தில் ஆக உள்ளது. ஏரோபிளேனில் சுற்றுகின்றனர். பெரிய பெரிய கட்டிடங்கள் உள்ளன, ஆனால், இவை அனைத்தும் அழிந்து போகக் கூடியவை. இதை கானல் நீர் போன்ற இராஜ்யம் என்று சொல்லப்படுகிறது. வெளியில் இருந்து பார்க்கும்பொழுது மிகவும் பகட்டாகத் தென்படுகிறது, உள்ளுக்குள்ளே சாரமற்றதாக உள்ளது. திரௌபதியின் உதாரணமும் உள்ளது. நான் எப்பொழுது வந்திருந்தேனோ, அப்பொழுது, நீங்கள் இப்பொழுது பார்த்துக் கொண்டிருக்கும் அனைத்தும் இருந்தன என்று பாபா கூறுகின்றார். இப்பொழுது நடைபெற்ற பிரிவினையையும் பார்க்கிறீர்கள். மற்றபடி, யுத்த மைதானம் போன்றவற்றிற்கான விசயம் எதுவும் கிடையாது. இந்த இரதத்தில் சிவபாபா வீற்றிருந்து குழந்தைகளுக்கு ஞானம் அளிக்கின்றார். நீங்கள் பாரதத்தின் சேவை செய்து கொண்டு இருக்கிறீர்கள். என்னவெல்லாம் பண்டிகைகள் இந்த பாரதத்தில் கொண்டாடப்படுகின்றனவோ, அவை அனைத்தும் இந்த சமயத்தை சேர்ந்தவை ஆகும். மூன்றாவது கண் பற்றிய கதை, கீதையின் கதை, சிவபுராணம், இராமாயணம் போன்ற அனைத்தும் இந்த சமயத்திற்காக உருவாக்கப்பட்டு இருக்கின்றன. சத்யுகம், திரேதாயுகத்திலோ இந்த விசயம் கிடையாது. அதற்குப் பிறகே சாஸ்திரங்களை உருவாக்க ஆரம்பித்தனர். அவை மீண்டும் உருவாகும். குழந்தைகளாகிய நீங்கள் அனைத்தையும் புரிந்து கொண்டீர்கள். இதற்கு முன்னர் முற்றிலும் காரிருளில் இருந்தீர்கள். இந்த சமயத்தில் எவருமே சிருஷ்டிச் சக்கரத்தை சரியான முறையில் அறிந்திருக்கவில்லை. இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு சுத்தமான அகங்காரம் இருக்க வேண்டும். நீங்கள் உடல், மனம், பொருளால் பாரதத்தினுடைய சேவை செய்து கொண்டு இருக்கிறீர்கள். முக்கியமாக பாரதத்தினுடைய, பொதுவாக முழு உலகத்தினுடைய சேவை செய்து கொண்டு இருக்கிறீர்கள். தந்தையினுடைய உதவியினால் நாம் முக்தி, ஜீவன் முக்திக்கான வழியைச் சொல்கின்றோம். நீங்கள் ஸ்ரீமத்படி இந்த சேவை செய்கிறீர்கள். ஸ்ரீமத் சிவபாபாவினுடையது ஆகும். ஆனால், சிவனது பெயரை மறைத்துவிட்டனர். மற்றபடி, பிரம்மாவின் வழி மற்றும் ஸ்ரீ கிருஷ்ணருடைய வழி காண்பிக்கப்பட்டு இருக்கிறது. அதுவும் கிருஷ்ணரை துவாபரயுகத்தில் காண்பித்து விட்டனர். நீங்கள் பாரதத்தை சொர்க்கமாக அதாவது வைரம் போல் ஆக்குகிறீர்கள். ஆனால், எவ்வளவு சாதாரணமாக இருக்கிறீர்கள்! எந்த கர்வமும் இல்லை. நீங்கள் இங்கே தன்னுடைய அனைத்தையும் அர்ப்பணம் செய்ய வேண்டும். அதாவது சிவபாபாவிடம் முழுமையிலும் முழுமையாக பலியாக வேண்டும். சிவபாபா பிறகு 21 பிறவிகளுக்கு பலியாகின்றார். இல்லறத்தைப் பராமரிக்க வேண்டாம் என்று பாபா கூறுவதில்லை. அதையும் பராமரிக்க வேண்டும், ஆனால் ஸ்ரீமத் படி. அழிவற்ற சர்ஜனிடம் எதையும் மறைக்கக்கூடாது. குரு இல்லை என்றால் காரிருளே இருக்கும் என்று கூறப்படுகிறது. சிவபாபா இல்லாமல் நாமும், நீங்களும் முற்றிலும் காரிருளில் இருந்தோம் என்று இந்த பிரம்மா தாதா கூட கூறுகின்றார். அவர்கள் சிவன், சங்கரரை ஒன்றாக ஆக்கிவிட்டனர். பிரம்மா யார்? எப்பொழுது வருகின்றார்? வந்து என்ன செய்கின்றார்? ஒவ்வொரு விஷயத்தையும் புரிந்துகொள்ள வேண்டும் அல்லவா! மிருகமோ புரிந்து கொள்ளாது. இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் வரிசைக்கிரமமான முயற்சியின் அனுசாரமாக அறிந்து கொண்டீர்கள். வித்வான், பண்டிதர்கள் போன்ற எவருமே சத்குரு இல்லை என்றால் காரிருளே இருக்கும் என்பதை அறிந்திருக்கவில்லை. குருக்களோ அநேகர் உள்ளனர். அனைவருடைய சத்குரு ஒருவர் ஆவார், அவரை விருட்சபதி என்று கூறுகின்றனர். எனவே, குழந்தைகளாகிய உங்களுக்கு போதை அதிகமாக இருக்க வேண்டும். எந்த உலகத்தை இந்தக் கண்களால் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களோ, அது இருக்காது. எதை இப்பொழுது புத்தியால் அறிந்து இருக்கிறீர்களோ, அதுவே இருக்கும். எனவே இந்தப் பழைய உலகத்திலிருந்து பற்றை அழித்து விடவேண்டும். குழந்தைகளையும் பராமரிக்க வேண்டும். பாபாவிற்கு எவ்வளவு நிறைய பாலகர்கள், குழந்தைகள் இருக்கின்றனர்! சிலர், பாபா! நான் உங்களுடைய இரண்டு மாதக் குழந்தை என்று கூறுகின்றனர். சிலர் நான் ஒரு மாதக் குழந்தை என்று கூறுகின்றனர். ஒரு மாதக் குழந்தைகள் கூட உடனடியாக தாரணை செய்து இளைஞர்கள் ஆகிவிடுகின்றனர். மற்றும் சிலரோ 20 வருடங்கள் ஆனவர்களாக இருந்தபோதிலும் கூட வளர்ச்சி அடையாதவர்களாக இருக்கின்றனர். இது புதிய மரம் ஆகும், இது சிறிது சிறிதாக வளர்ச்சி அடையும் என்பதை நீங்கள் அறிவீர்கள். முதலில் இலைகளே வெளிப்படும். பின்பே மலர்கள் மலரும். இங்கேயே மலர் ஆகவேண்டும். அங்கே அனைவருமே மலர்களாகவே இருப்பார்கள். இங்கேயே சிலர் ரோஜாவாக, சிலர் செண்பக மலராக ஆகின்றனர். எத்தகைய தாரணை உள்ளதோ, அதற்கேற்றாற்போல் பதவி கிடைக்கிறது. அங்கே மலருக்கான விசயம் கிடையாது. பதவிக்கான விசயம் ஆகும். நாம் இந்தக் கண்கள் மூலம் தூய்மையான, சிவாலயமான சொர்க்கத்தைப் பார்க்கப் போகிறோம் என்ற இந்த போதை இருக்க வேண்டும். இன்னார் சொர்க்கலோகம் சென்றார் என்று மட்டும் அரைக்கல்பமாக கூறி வந்தீர்கள். இந்த விருப்பத்தை தந்தை தான் நடைமுறையில் இப்பொழுது பூர்த்தி செய்கின்றார்.இப்பொழுது நீங்கள் தந்தையினுடைய குழந்தைகள் ஆகிறீர்கள். ஆகையால், பாரதம் வளமானதாக ஆகிறது. 33 கோடி தேவதைகள் என்று பாடுகின்றனர், அவர்கள் இத்தனை பேர் சத்யுகம், திரேதாயுகத்தில் இருப்பதில்லை. இது முழு பாரதத்தினுடைய தேவி தேவதை தர்மத்தினைச் சேர்ந்தவர்களுடைய எண்ணிக்கை ஆகும். வெளியே (உலகில்) பாருங்கள், எத்தனை பிரிவுகள் ஆகிவிட்டன! சீனர்கள் மற்றும் ஜப்பானியர்களோ பௌத்த தர்மத்தைச் சேர்ந்தவர்கள், பௌத்த தர்மத்தின் பெயரையே கூறுவார்கள். ஆனால், எவ்வளவு கொள்கை வேறுபாடு உள்ளது! இங்கே பாரதத்தில் சிவபாபாவை மறைத்துவிட்டார்கள், அவரை முற்றிலும் அறியவே இல்லை. சித்திரங்கள் உள்ளன, பாடல் பாடுகின்றனர், நந்தியும் உள்ளது, ஆனால், அறிந்திருக்கவில்லை. நாம் பரந்தாமத்திருந்து வந்து இங்கே இந்த சரீரத்தை எடுத்து நடிப்பு நடித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை தந்தை கூறியிருக்கின்றார். இப்பொழுது சக்கரத்தை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். ஞான மையை சத்குரு அளித்தார், அஞ்ஞான இருள் விலகி விட்டது. இதற்கு முன்னர் எதுவுமே தெரியாமல் இருந்தது. இப்பொழுது எல்லையற்ற தந்தை, படைப்பாளர், இயக்குநர், முக்கிய நடிகரை நீங்கள் அறிந்து கொண்டீர்கள். 84 பிறவிகளை யார் எடுக்க வேண்டும்? யார் எடுத்திருப்பார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். உங்களுடைய மூன்றாவது கண் இப்பொழுது திறந்திருக்கிறது. எனவே, அவ்வளவு போதை இருக்க வேண்டும். மனிதர்கள் திவாலாகி இருந்தாலும் கூட, மது அருந்தும்பொழுது போதையில் நான் அனைவரையும் விட செல்வந்தன் என்று நினைக்கின்றனர். பாபாவோ வைஷ்ணவராக இருந்தார், ஒருபொழுதும் (மதுவை) தொட்டது கிடையாது. மற்றபடி, மது அருந்தினார்கள் மற்றும் போதை ஏறியது என்று கேள்வியுற்று இருக்கின்றார். யாதவர்கள் கூட மது அருந்தினார்கள், உலக்கை வெளிப்பட்டு குலத்தை அழித்தது என்று கூறுகின்றனர். இங்கே கூட இராணுவத்தினருக்கு மது அருந்தக் கொடுப்பதனால் மரணமடைவது மற்றும் பிறரை மரணமடையச் செய்வது பற்றிய எண்ணம் இருக்காது, போதை ஏறிவிடுகிறது. எனவே, குழந்தைகளாகிய உங்களுக்கும் கூட எப்பொழுதும் நாராயணீ போதை இருக்க வேண்டும். நாம் கல்பத்திற்கு முன்பு இருந்த அதே சக்திசேனை தான். அநேக முறை நாம் பாரதத்தை வைரம் போல் உருவாக்கியிருக்கிறோம், இதில் குழப்பமடைவதற்கான விசயமில்லை. சந்தேக புத்தி உடையவர்களுக்கு அழிவும், நிச்சய புத்தி உடையவர்களுக்கு வெற்றியும் கிடைக்கிறது. சந்தேக புத்தி உடையவர்கள் உயர்ந்த பதவியை அடைய மாட்டார்கள். பிரஜையில் குறைந்த பதவி அடைவார்கள். அங்கே உங்களுடைய மாளிகைகளில் எப்பொழுதும் வாத்தியங்கள் இசைக்கப்பட்டுக் கொண்டே இருக்கும். துக்கத்திற்கான விஷயமே இருக்காது. முற்காலத்தில் இராஜாக்களினுடைய மாளிகைகளின் வாசலுக்கு வெளியே உள்ள மேடையில் வாத்தியங்கள் இசைக்கப்பட்டுக் கொண்டே இருந்தன. இப்பொழுதோ அந்த இராஜாக்களினுடைய பகட்டு முடிந்துவிட்டது. பிரஜைகளின் இராஜ்யம் ஆகிவிட்டது.நாம் தூய்மையாகி யோகத்தில் இருந்து மற்றும் சக்கரத்தை நினைவு செய்து, செய்து பாரதத்தை சொர்க்கம் ஆக்கிவிடுவோம் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அறிந்திருக்கிறீர்கள். ஆனால், அநேகக் குழந்தைகள் மறந்துவிடுகின்றனர். அனைத்தையும் விட நல்ல காரியம் ஏழைகளுடைய சேவை செய்வது என்று பாபா அறிவுரைகள் வழங்குகின்றார். தற்காலத்தில் ஏழைகள் அதிகமாக உள்ளனர். நோயாளிகள் சுகமடைவதற்காக மனிதர்கள் அதிக மருத்துவமனைகளைக் கட்டுகிறார்கள். யார் மருத்துவமனையைக் கட்டித் திறப்பார்களோ, அவர்களுக்கு அடுத்த பிறவியில் கொஞ்சம் நல்ல உடல் (ஆரோக்கியமான) கிடைக்கும், நோயாளி ஆகமாட்டார்கள். சிலர் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பார்கள், நோய்வாய்ப்படமாட்டார்கள். எனில், அவசியம் முந்தைய பிறவியில் ஆரோக்கியமாக இருப்பதற்கான தானம் அளித்திருப்பார்கள். அது மருத்துவமனை திறப்பதே ஆகும். சிலர் கல்வியில் மிகவும் புத்திசாலியாக இருக்கிறார்கள் என்றால் அவசியம் கல்வியின் தானம் அளித்திருப்பார்கள். சிற்சில சன்னியாசிகளுக்கு சிறு வயதிலேயே சாஸ்திரங்கள் மனப்பாடம் ஆகிவிடுகிறது எனில், பூர்வ ஜென்மத்தினுடைய சமஸ்காரத்தை ஆத்மா எடுத்து வந்திருக்கிறது என்று கூறுவார்கள். இங்கே கூட யாராவது 3 அடி நிலத்தைப் பெற்று இந்த ஆன்மிக மருத்துவமனையைத் திறக்க வேண்டும். மேலும், இங்கே வந்து 21 பிறவிகளுக்கு ஆரோக்கியமாக இருப்பதற்கான ஆஸ்தியை தந்தையிடமிருந்து பெறுங்கள் என்று எழுத வேண்டும். எவ்வளவு எளிமையான விஷயம் ஆகும்! இலட்சுமி நாராயணருக்கு இந்த ஆஸ்தியை யார் அளித்தார்கள், கூறுங்கள் என்று நீங்கள் கேட்கிறீர்கள் எனில், அவசியம் கேட்கக்கூடியவர் சுயம் அறிந்திருப்பார். தந்தை தான் சொர்க்கத்தின் படைப்பாளர் ஆவார், எவ்வாறு படைக்கின்றார்? என்பதை வந்து அமர்ந்தீர்கள் என்றால் நாங்கள் புரிய வைக்கிறோம். நாங்கள் கூட அவரிடமிருந்து ஆஸ்தியை அடைந்து கொண்டு இருக்கிறோம். சிவபாபா, பிரம்மா பாபா மூலமாக ஸ்தாபனை செய்வித்துக் கொண்டு இருக்கின்றார். பிறகு, பாலனையும் அவரே செய்வார். சங்கரர் மூலமாக விநாசமும் ஏற்பட வேண்டும். அவசியம் நரகத்தினுடைய விநாசம் ஏற்படும் அல்லவா. புது உலகம் இப்பொழுது உருவாகிக் கொண்டு இருக்கிறது. பிரம்மா மூலமாக ஸ்தாபனை ஆகிக் கொண்டு இருக்கிறது என்பதை சிறிய பேட்ஜை வைத்து நீங்கள் புரிய வைக்க முடியும். இதுவே இராஜயோகமாகும். மனிதனிலிருந்து தேவதை ஆகவேண்டும். யார் நம்முடைய குலத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பார்களோ, அவர்களுக்கு உடனடியாக உள்ளத்தில் பதிந்து விடும். அவர்களுடைய முகமே ஒளி பொருந்தியதாகிவிடும் மற்றும் முயற்சியின் மூலம் தன்னுடைய ஆஸ்தியை அடைவார்கள். யார் நம்முடைய பிராமண குலத்தைச் சேர்ந்தவர்களோ, அவர்கள் சூத்திர குலத்தில் இருந்து அவசியம் மாறத்தான் வேண்டும். இது நாடகத்தில் பதிவாகி உள்ளது. நீங்கள் பாரதத்திற்கு மிகுந்த சேவை செய்கிறீர்கள். ஆனால், மறைமுகமாக செய்கிறீர்கள். முன்பும் கூட இவ்வாறு செய்து இருந்தீர்கள். நாடகத்தை இப்பொழுது நல்ல முறையில் அறிந்து கொள்ள வேண்டும். நீங்கள் இறந்து விட்டால் உலகம் இறந்து விட்டது என்று பாடப்பட்டு இருக்கிறது. மற்றபடி, ஆத்மா நிலைத்து இருக்கிறது. ஆத்மாவிற்கு மரணம் என்பது இல்லை. ஆத்மா சரீரத்திலிருந்து தனிப்பட்டுவிடுகிறது என்றால் அதற்கு உலகமே இல்லை என்று ஆகிவிடுகிறது. பிறகு, எப்பொழுது சரீரத்தில் செல்லுமோ, அப்பொழுது தாய், தந்தையின் சம்மந்தம் போன்றவை புதியதாகக் கிடைக்கும். இங்கே கூட நீங்கள் அசரீரி ஆகவேண்டும். இப்பொழுதோ, இந்த உலகம் நடைமுறையில் முடிவடைய வேண்டும்.என்னை நினைவு செய்து கொண்டே இருந்தீர்கள் என்றால் விகர்மங்களின் சுமை இறங்கிவிடும், மற்றும் நீங்கள் சம்பூரணம் ஆகிவிடுவீர்கள் என்று தந்தை கூறுகின்றார். குழந்தைகளுடைய நடத்தை மிகவும் நன்றாக இருக்க வேண்டும். பேசுவது, நடப்பது, உண்பது, குடிப்பது மிகவும் குறைவாகப் பேச வேண்டும். இராஜாக்கள் மிகவும் குறைவாக மற்றும் மெதுவாகப் பேசுவார்கள், அமைதியாக இருப்பார்கள். உங்களுக்குள் மிகுந்த பண்பாடு இருக்க வேண்டும். தேவதைகளிடம் தெய்வீக பண்பாடு இருந்தது. இங்கேயோ மனிதர்கள் குரங்கைப் போன்று இருப்பதால் பண்பாடு இல்லாதவர்களாக இருக்கின்றனர். அறிவு சிறிதும் இல்லை. எல்லையற்ற தந்தை, யார் சிருஷ்டியை சொர்க்கம் ஆக்குகின்றாரோ, அவரை கல், முள், நாய், பூனை ஆகிய அனைத்திலும் இருப்பதாக கூறிவிட்டனர். மாயை முற்றிலுமாக புத்திக்கு கோத்ரெஜ் பூட்டு போட்டுவிட்டது. இப்பொழுது பாபா வந்து பூட்டைத் திறக்கின்றார். இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் புத்திவான் ஆகிவிட்டீர்கள். சிவபாபா, பிரம்மா, விஷ்ணு, சங்கரர், இலட்சுமி, நாராயணர், ஜெகதம்பா போன்ற அனைவருடைய வாழ்க்கைச் சரித்திரத்தைத் நீங்கள் அறிந்து கொண்டீர்கள். இப்பொழுது உங்களுக்கு சத்குரு சிவபாபாவிடமிருந்து முழுமையான அறிவு கிடைத்திருக்கிறது. பாபா ஞானக்கடலானவர் அல்லவா! ஒவ்வொருவரும் தன்னுடைய உள்ளத்திடம் கேட்க வேண்டும், நாம் எதையும் அறியாமல் இருந்தோம், குரங்கு போன்ற நடத்தை இருந்தது. இப்பொழுது நாம் அனைத்தையும் அறிந்து கொண்டோம். பாபா புதிய படைப்பை எவ்வாறு படைக்கின்றார்? உயர்ந்ததிலும் உயர்ந்த பிராமண குலத்தை உருவாக்குகின்றார் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். பூஜைக்குரிய மூர்த்தி எதுவும் பேசுவதில்லை. பூஜைக்குரியவர்களாகவும், பிறகு பூஜாரிகளாகவும் ஆகின்றோம் என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்திருக்கின்றீர்கள்.இப்பொழுது நீங்கள் உண்மையிலும் உண்மையான, பிரம்மா வாய்வழி வம்சத்தைச் சேர்ந்த பிராமணர்கள் ஆவீர்கள். சங்கமயுகத்தில் எவ்வாறு சத்யுகம் படைக்கப்படுகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். இதை வேறு எவரும் அறிந்திருக்கவில்லை. வக்கீலாக இருப்பவர் கற்பித்தார் என்றால் என்னவாக ஆக்குவார்? பகவான் கூட வந்து எளிய இராஜயோகத்தை கற்பிக்கின்றார். பாரதவாசிக் குழந்தைகள் ஓஹோ என கூறும்படியான சௌபாக்கியமானவர்கள். உங்களில் கூட யார் நல்ல முறையில் தாரணை செய்து, பிறரையும் செய்ய வைத்துக் கொண்டு இருக்கிறார்களோ, அவர்களே சௌபாக்கியசாலிகள் ஆவார்கள். சிறிது காலத்திற்குப் பிறகு அநேக வீடுகள் சொர்க்கம் ஆகிவிடும். மரம் சிறிது சிறிதாக வளர்கிறது. அதிக முயற்சி உள்ளது. எவ்வளவு உயர்ந்த நிலையில் செல்வீர்களோ, அவ்வளவு மாயையின் புயல் வேகமாக வரும். மலையில் எவ்வளவு உயரே செல்வார்களோ அவ்வளவு புயல், குளிர் போன்றவற்றை எதிர்நோக்க வேண்டியது இருக்கும். சேவைக்கு எவ்வளவு நேரம் கிடைக்குமோ, அவ்வளவு நல்லது, விளம்பரப்படுத்துங்கள். உள்ளத்தில் என்ன ஆலோசனை வருகிறதோ, அதை, இப்படி இப்படிச் செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள். தாராளமாகச் செய்யுங்கள் என்று பாபா கூறுவார். பாவம் மனிதர்கள் மிகுந்த துக்கம் நிறைந்தவர்களாக உள்ளனர். இந்த சமயம் அனைவரும் தமோபிரதானம் ஆகிவிட்டனர். எந்த ஒரு பொருளும் உண்மையானதாக இல்லை. பொய்யான மாயை, பொய்யான தேகம் இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் சொர்க்கவாசி ஆகிறீர்கள். (பாடல்: புதிதாகத் தோன்றிய மொட்டுக்கள்.....) இந்தப் பாடல் சீதையின் மகிமை செய்கிறார்கள். எந்த நேரத்தில் சீதை இருந்தாரோ, அந்த தேசம் தூய்மையானதாக இருந்தது. அந்த தேசத்தில் பிறகு இராவணன் எங்கிருந்து வந்தான்? அதிசயம் என்னவென்றால், பிறகு குரங்குகளின் சேனையை பயன்படுத்தியதாகக் கூறுகின்றனர். இப்பொழுது குரங்குகளின் சேனை எங்கிருந்து வந்தது? இங்கே கூட மனிதர்களின் சேனை உள்ளது. அரசாங்கம் குரங்குகளின் சேனையை பயன்படுத்துவதில்லை. பிறகு, அங்கே குரங்குகளின் சேனை எவ்வாறு வந்தது? இதைக் கூட புரிந்திருக்கவில்லை. நல்லது.இனிமையிலும் இனிமையான தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்காக தாய், தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மிகக் குழந்தைகளுக்கு ஆன்மிகத் தந்தையின் நமஸ்காரம்.தாரணைக்காக முக்கிய சாரம்:

1. சம்பூரணம் ஆகுவதற்காக நினைவு யாத்திரை மூலம் தன்னுடைய விகர்மங்களின் சுமையை இறக்கி வைக்க வேண்டும், நல்ல நடத்தைகளை தாரணை செய்ய வேண்டும். பண்பாட்டுடன் (பணிவாக) செயல் புரிய வேண்டும். குறைவாகப் பேச வேண்டும்.2. எந்த விஷயத்திலும் சந்தேக புத்தி உடையவர் ஆகக்கூடாது. பாரதத்தை சொர்க்கமாக்கக் கூடிய சேவையில் தன்னுடைய அனைத்தையும் பயனுடையதாக ஆக்க வேண்டும். சிவபாபாவிடம் முழுமையிலும் முழுமையாக பலி ஆகவேண்டும்.வரதானம்:

நான்கு பாடங்களையும் தன்னுடைய சொரூபத்தில் கொண்டு வரக்கூடிய விஷ்வகல்யாணகாரி ஆவீர்களாக!படிப்பினுடைய நான்கு பாடங்கள் என்ன உள்ளனவோ, அவை அனைத்தும் ஒன்றோடு ஒன்று சம்மந்தம் உடையது ஆகும். யார் ஞானம் நிறைந்த ஆத்மாவாக இருப்பார்களோ, அவர்கள் அவசியம் சதா யோகத்தில் இணைந்திருக்கும் ஆத்மாவாகவும் இருப்பார்கள். மேலும், யார் ஞான யோகத்தைத் தன்னுடைய இயல்பான காரியங்களாக ஆக்கிவிட்டார்களோ, அவர்களுடைய கர்மம் இயற்கையாகவே யுக்தி நிறைந்ததாக (பாபா விரும்பும் வகையில் நிறைவேற்றுபவர்) மற்றும் சிரேஷ்டமானதாகவும் இருக்கும். சுபாவம், சமஸ்காரம், தாரணை சொரூபமாக இருக்கும். யாரிடம் இந்த மூன்று பாடங்களினுடைய அனுபவங்களின் பொக்கிஷம் உள்ளதோ, அவர்கள் மாஸ்டர் வள்ளல் அதாவது சேவாதாரியாக தானாகவே ஆகிவிடுகிறார்கள். யார் இந்த நான்கு பாடங்களிலும் முதல் எண்ணைப் பெறுகிறார்களோ, அவர்களைத் தான் விஷ்வகல்யாணகாரி என்று கூறப்படுகிறது.சுலோகன்:

ஞான யோகத்தை தன்னுடைய இயல்பாக ஆக்குங்கள், அப்பொழுது கர்மம் இயற்கையாகவே சிரேஷ்டமானதாக மற்றும் யுக்தி நிறைந்ததாக இருக்கும்.


***OM SHANTI***