BK Murli 4 January 2018 Tamil


BK Murli 4 January 2018 Tamil

04.01.2018    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


இனிமையான குழந்தைகளே! குருவாகிய தந்தை உங்களுக்கு மனிதரிலிருந்து தேவதையாகக் கூடிய கலையை கற்பித்திருக்கிறார், பிறகு நீங்கள் ஸ்ரீமத்படி மற்றவர்களை தேவதையாக்கக் கூடிய சேவை செய்யுங்கள்.கேள்வி:

இப்போது நீங்கள் செய்யக்கூடிய எந்த உயர்ந்த கர்மம் பக்தியில் கூட ஒரு வழக்கமாக பின்பற்றப்படுகிறது?பதில்:

நீங்கள் இப்போது ஸ்ரீமத்படி தமது உடல்-மனம்-பொருளை பாரதம் என்ன முழு உலகத்தின் நன்மையின் பொருட்டு அர்ப்பணம் செய்கிறீர்கள், இதுவே பக்தியில் ஈஸ்வரனுடைய பெயரால் தானம் செய்யக் கூடிய வழக்கமாக ஆக்கிக் கொண்டுள்ளனர். அவர்களுக்கு பிறகு அதன் பிரதிபலனாக அடுத்த பிறவியில் இராஜ குடும்பத்தில் பிறவி கிடைக்கிறது. மேலும் குழந்தைகளாகிய நீங்கள் சங்கமத்தில் தந்தையின் உதவியாளர்களாக ஆகிறீர்கள் எனும்போது மனிதரிலிருந்து தேவதையாக ஆகி விடுகிறீர்கள்.பாடல்:

நீ இரவை உறங்கிக் கழித்தாய், பகலை உண்டு கழித்தாய் . . . .ஓம் சாந்தி.

தந்தை குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார், குழந்தைகள் புரிந்து கொள்ளும்போது மற்றவர்களுக்குப் புரிய வைக்கின்றனர். தான் புரிந்து கொள்ளாவிட்டால் பிறருக்குப் புரிய வைக்க முடியாது. தான் புரிந்து கொண்டாலும் பிறருக்குப் புரிய வைக்க முடியாவிட்டால் எதுவுமே புரிந்து கொள்ளவில்லை என்பது போலதாகும். ஏதாவது கலையை கற்றுக் கொண்டால் அதனை பிறரிடமும் பரவச் செய்கின்றனர். மனிதரிலிருந்து தேவதையாக எப்படி ஆக்குவது என்ற இந்தக் கலையை குரு மற்றும் ஆசிரியராகிய தந்தையிடமிருந்து கற்றுக் கொள்ளப் படுகிறது. தேவதைகளின் படங்களும் இருக்கின்றன, மனிதர்களை தேவதையாக ஆக்குகிறார் என்றால் இப்போது அந்த தேவதைகள் இல்லை என அர்த்தம். தேவதைகளின் குணங்களைப் பாடுகின்றனர். அனைத்து குணங்களிலும் நிறைந்தவர்.... இங்கே எந்த மனிதர்களின் குணங்களையும் அப்படி பாடப்படுவதில்லை. மனிதர்கள் கோவில்களுக்குச் சென்று தேவதைகளின் குணங்களைப் பாடுகின்றனர். சன்னியாசிகளும் கூட தூய்மையாகத்தான் இருக்கின்றனர், ஆனால் மனிதர்கள் அவர்களின் குணங்களை இப்படி பாடுவது கிடையாது. அந்த சன்னியாசிகள் சாஸ்திரங்கள் முதலானவைகளைக் கூட சொல்கின்றனர். தேவதைகள் எதையும் சொல்லவில்லை. அவர்கள் பலனை அனுபவிக்கின்றனர். முந்தைய பிறவியில் முயற்சி செய்து மனிதரிருந்து தேவதைகளாக ஆகியிருந்தனர். ஆக சன்னியாசிகள் முதலானவர்களிலும் கூட தேவதைகளைப் போன்ற குணங்கள் இல்லை. எங்கே குணங்கள் இல்லையோ அங்கே அவகுணங்கள் கண்டிப்பாக இருக்கின்றன. சத்யுகத்தில் இதே பாரதத்தில் இராஜா இராணி போல பிரஜைகள் அனைத்து குணங்களிலும் நிறைந்தவர்களாக இருந்தனர். அவர்களுக்குள் அனைத்து குணங்களும் இருந்தன. அந்த தேவதைகளின் குணங்கள்தான் பாடப்படுகின்றன. அந்த சமயத்தில் வேறு தர்மங்கள் இருக்கவில்லை. குணங்கள் நிறைந்த தேவதைகள் சத்யுகத்தில் இருந்தனர் மற்றும் அவகுணங்கள் நிறைந்த மனிதர்கள் கலியுகத்தில் இருக்கின்றனர். இப்போது இப்படிப்பட்ட அவகுணங்கள் நிறைந்த மனிதர்களை தேவதைகளாக யார் ஆக்குவார்? மனிதரிலிருந்து தேவதை... என பாடவும் படுகிறது. இந்த மகிமை பரமபிதா பரமாத்மாவுடையதாகும். தேவதைகளும் மனிதர்களே, ஆனால் அவர்களுக்குள் குணங்கள் இருக்கின்றன, மனிதர்களிடம் அவகுணங்கள் இருக்கின்றன. குணங்கள் தந்தையிடமிருந்து பலனாகக் கிடைக்கின்றன, அவர் சத்குரு எனவும் சொல்கின்றனர். அவகுணங்கள் மாயை இராவணனிடமிருந்து பெறப்படுகின்றன. இவ்வளவு குணவானாக இருப்பவர்கள் பின்னர் அவகுணம் நிறைந்தவர்களாக எப்படி ஆகின்றனர். அனைத்து குணங்களும் நிறைந்தவர்கள் மற்றும் அனைத்து அவகுணங்களும் நிறைந்தவர்களாக யார் ஆக்குவது? இதனை குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். குணமற்ற எனக்குள் எந்த குணமும் இல்லை என பாடவும் செய்கின்றனர். தேவதைகளின் குணங்களை எவ்வளவோ பாடுகின்றனர். இந்த சமயத்தில் அந்த குணங்கள் யாரிடமும் கிடையாது. உண்வுப் பழக்க வழக்கமெல்லாம் எவ்வளவு அழுக்காக இருக்கின்றன. தேவதைகள் வைஷ்ணவ சம்பிரதாயத்தவர் மற்றும் இந்த சமயத்து மனிதர்கள் இராவண சம்பிரதாயத்தவர்களாக இருக்கின்றனர். உணவுப் பழக்கங்கள் எவ்வளவு மாறிவிட்டது. உடைகளை மட்டும் பார்க்கக் கூடாது. உணவுப் பழக்கம் மற்றும் விகார தன்மை பார்க்கப்படுகின்றன. நான் பாரதத்தில்தான் வர வேண்டியிருக்கிறது என தந்தை தாமே சொல்கிறார். பிரம்மாவின் வாய்வழி வம்சாவளி பிராமண பிராமணியர் மூலம் ஸ்தாபனை செய்விக்கிறேன். இது பிராமணர்களின் யக்ஞம் அல்லவா. அந்த விகாரம் நிறைந்த பிராமணர்கள் வயிற்று வழி வம்சாவளியினர் ஆவர், இவர்கள் வாய் வழி வம்சாவளியினர் ஆவர். மிகவும் வித்தியாசம் இருக்கிறது. அந்த பணக்கார மனிதர்கள் யக்ஞத்தைப் படைக்கின்றனர், அதில் ஸ்தூலமான பிராமணர்கள் இருப்பார்கள். இந்த எல்லைக்கப்பாற்பட்ட தந்தை செல்வந்தருக்கெல்லாம் செல்வந்தர், இராஜாக்களுக்கெல்லாம் இராஜா ஆவார். செல்வந்தருக்கெல்லாம் செல்வந்தர் என ஏன் சொல்லப்படுகிறார்? ஏனென்றால் செல்வந்தர்களும் கூட எங்களுக்கு ஈஸ்வரன் செல்வங்களை கொடுத்தார் என சொல்கின்றனர், ஈஸ்வரனின் பெயரால் தானம் செய்தார்கள் என்றால் அடுத்த பிறவியில் செல்வந்தர்களாக ஆகின்றனர். இந்த சமயத்தில் நீங்கள் சிவபாபாவுக்கு உடல்-மனம்-பொருள் என அனைத்தும் அர்ப்பணம் செய்கிறீர்கள் எனும்போது எவ்வளவு உயர்ந்த பதவியை அடைகிறீர்கள்.நீங்கள் ஸ்ரீமத்படி இவ்வளவு உயர்ந்த கர்மங்களை கற்றுக் கொள்கிறீர்கள் எனும்போது உங்களுக்கு கண்டிப்பாக பலன் கிடைக்க வேண்டும். உடல்-மனம்-பொருளை அர்ப்பணம் செய்கிறீர்கள். அவர்களும் கூட யார் மூலமாவது ஈஸ்வரன் பெயரால் செய்கின்றனர். இந்த வழக்கம் பாரதத்தில்தான் உள்ளது. ஆக தந்தை உங்களுக்கு மிக நல்ல கர்மங்களைக் கற்பிக்கிறார். நீங்கள் இந்த காரியத்தை பாரதம் மட்டுமென்ன, முழு உலகின் நன்மையின் பொருட்டு செய்கிறீர்கள் எனும்போது அதற்கு ஈடாக மனிதரிலிருந்து தேவதை ஆகக் கூடிய பலன் கிடைக்கிறது. யார் ஸ்ரீமத்படி எப்படிப்பட்ட கர்மம் செய்கின்றனரோ அப்படிப்பட்ட பலன் அவர்களுக்குக் கிடைக்கிறது. யாம் சாட்சியாகி பார்த்தபடி இருக்கிறோம். யார் ஸ்ரீமத்படி நடந்து மனிதரிலிருந்து தேவதையாக ஆக்கக் கூடிய சேவை செய்கின்றனர்? வாழ்க்கை எந்தளவு மாற்றமடைகிறது என்று. ஸ்ரீமத்படி நடப்பவர்கள் பிராமணர்கள் ஆவர். பிராமணர்களின் மூலம் சூத்திரர்களுக்கு அமர்ந்து இராஜயோகம் கற்பிக்கிறேன் என தந்தை சொல்கிறார் - 5 ஆயிரம் வருடங்களின் விசயம் ஆகும். பாரதத்தில்தான் தேவி தேவதைகளின் இராஜ்யம் இருந்தது. படங்களைக் காட்ட வேண்டும். படங்கள் இல்லாவிட்டால் இது என்ன தர்மமோ தெரியவில்லையே, ஒரு வேளை வெளி நாட்டிலிருந்து வந்ததாக இருக்கலாம் என புரிந்து கொள்வார்கள். படங்களை காட்டினால், இவர்கள் தேவதைகளை ஏற்றுக் கொள்கின்றனர் என புரிந்து கொள்வார்கள். ஆக ஸ்ரீ நாராயணரின் 84 ஆவது பிறவியில் பரமபிதா பரமாத்மா பிரவேசம் செய்திருக்கிறார் மற்றும் இராஜயோகம் கற்பித்துக் கொண்டிருக்கிறார் என புரிய வைக்க வேண்டும். அப்போது கிருஷ்ணருடைய விசயம் பறந்து போய் விடும். இது அவருடைய 84-ஆவது பிறவியின் கடைசியாகும். யார் சூரியவம்சத்தின் தேவதைகளாக இருந்தனரோ அவர்கள் அனைவரும் வந்து மீண்டும் இராஜயோகத்தைக் கற்க வேண்டும். நாடகத்தின்படி கண்டிப்பாக முயற்சியும் செய்வார்கள். குழந்தைகளாகிய நீங்கள் நேரடியாக கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள், மற்ற குழந்தைகள் பிறகு இந்த டேப் (ஒலி நாடா) மூலம் கேட்கும்போது நாமும் கூட தாய் தந்தையருடன் மீண்டும் தேவதைகளாக ஆகிக் கொண்டிருக்கிறோம் என புரிந்து கொள்வார்கள். இந்த சமயத்தில் 84ஆவது பிறவியில் முழுமையான பிச்சைக்காரர்களாக ஆக வேண்டும். ஆத்மா தந்தைக்கு அனைத்தையும் சமர்ப்பணம் செய்கிறது. இந்த சரீரமே குதிரையாகும், இது ஸ்வாஹா (சமர்ப்பணம்) ஆகிறது. நாம் தந்தையுடையவர்களாக ஆகியுள்ளோம் என ஆத்மா தானே சொல்கிறது. வேறு யாரும் இல்லை. ஆத்மாவாகிய நான் இந்த ஜீவன் (உடல்) மூலமாக பரமபிதா பரமாத்மாவின் வழிப்படி சேவை செய்து கொண்டிருக்கிறேன். நினைவின் தொடர்பையும் (யோகமும்) கற்றுக் கொடுங்கள், சிருஷ்டி சக்கரம் எப்படி சுற்றுகிறது என்பதையும் புரிய வையுங்கள் என தந்தை சொல்கிறார். யார் முழு சக்கரத்தையும் கடந்து வந்திருப்பார்களோ அவர்கள் இந்த விசயங்களை உடனே புரிந்து கொள்வார்கள். யார் இந்த சக்கரத்தில் வரக்கூடியவர் இல்லையோ அவர்கள் இருக்க மாட்டார்கள். முழு சிருஷ்டியும் வருவார்கள் என்பதல்ல. இதிலும் கூட பிரஜைகள் நிறைய பேர் வருவார்கள். இராஜா, இராணி என ஒருவர் இருப்பார் அல்லவா. இலட்சுமி-நாராயணர் ஒருவர் என பாடப்படுகிறது, இராமன் சீதை ஒருவர் என பாடப்படுகிறது. இளவரசன்-இளவரசி இன்னும் இருப்பார்கள். முக்கியமானவர் ஒருவர்தான் இருப்பார் அல்லவா. ஆக இப்படி இராஜா-இராணி ஆவதற்கு நிறைய முயற்சி செய்ய வேண்டும். சாட்சியாகி பார்ப்பதன் மூலம் தெரிய வரும் - இவர் செல்வந்தரான இராஜ குலத்தவரா அல்லது ஏழை குலத்தவரா. சிலர் மாயையிடம் எப்படி தோற்கின்றனர், ஓடிப் போகவும் செய்கின்றனர். மாயை ஒரேயடியாக காயாகவே சாப்பிட்டு விடுகிறது, ஆகையால் சௌக்கியமாக இருக்கிறாயா? என பாபா கேட்கிறார். மாயையின் அடியினால் மயக்கமோ அல்லது நோய் வாய்ப்பட்டோ போகவில்லையல்லவா! அப்படி சிலர் நோய் வாய்ப்பட்டு விடுகின்றனர், பிறகு குழந்தைகள் அவர்களிடம் செல்கின்றனர், ஞான-யோகத்தின் சஞ்சீவினி மூகையை கொடுத்து விழிப்புறச் செய்து விடுகின்றனர். ஞானம் மற்றும் யோகத்தில் இல்லாத காரணத்தால் மாயை ஒரேயடியாக கலைகள் எல்லாவற்றையும் (உடல் ஆரோக்கியம்) இல்லாமல் செய்து விடுகிறது. ஸ்ரீமத்-ஐ விட்டு மனதின் வழியில் நடக்கத் தொடங்குகின்றனர். மாயை ஒரேயடியாக மயக்கமடைய வைத்துவிடுகிறது. உண்மையில் சஞ்சீவினி மூகை என்பது ஞானத்தினுடைய விசயமாகும், இதன் மூலம் மாயையால் ஏற்படும் மயக்கம் நீங்குகிறது. இந்த விசயங்கள் அனைத்தும் இப்போதையதாகும். சீதையரும் கூட நீங்கள்தான். இராமன் வந்து இராவணனிடமிருந்து உங்களை விடுவிக்கிறார் - சிந்து மாகாணத்தில் குழந்தைகளை விடுவித்தது போல. இராவணனின் மனிதர்கள் பிறகு கடத்திக் கொண்டு சென்று விட்டனர். பிறகு இப்போது நீங்கள் மாயையின் பந்தனத்திலிருந்து அனைவரையும் விடுவிக்க வேண்டும். பாபாவுக்கு இரக்கம் ஏற்படுகிறது, மாயை எப்படி அடித்து குழந்தைகளின் புத்தியையே ஒரேயடியாக திருப்பி வைத்து விடுகிறது. இராமனிடமிருந்து புத்தியை இராவணனின் பக்கமாக திருப்பி விட்டு விடுகிறது. எப்படி ஒரு பக்கம் இராமனும், மறு பக்கம் இராவணனும் இருப்பது போன்ற ஒரு பொம்மை உள்ளதோ அப்படி, இதுதான் ஆச்சரியப்படும்படியாக தந்தையுடையவராக ஆகி, பிறகு இராவணனுடையவராக ஆவது என சொல்லப்படுகிறது. மாயை மிகவும் கெட்டதாக உள்ளது. எலியைப் போல கடித்து உணவை கெடுத்து விடுகிறது, ஆகையால் ஸ்ரீமத்-ஐ ஒரு போதும் விட்டு விடக் கூடாது. ஏறுவதற்குக் கடினமான உயரம் (இலட்சியம்) அல்லவா! தனது வழி என்பது இராவணன் வழியாகும். அதன்படி சென்றீர்கள் என்றால் நிறைய ஏமாற்றம் அடைவீர்க. பலர் கெட்ட பெயரை ஏற்படுத்தி விடுகின்றனர். இப்படிப்பட்டவர்கள் அனைத்து செண்டர்களிலும் இருக்கின்றனர். நஷ்டத்தை தனக்குத்தான் ஏற்படுத்திக் கொள்கின்றனர். சேவை செய்யக் கூடிய ஞான-யோகத்தில் சிறந்தவர்கள் மறைந்து இருக்க மாட்டார்கள். தெய்வீக இராஜ்யம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது, இதில் அனைவருமே தங்கள் தங்களுடைய நடிப்பை கண்டிப்பாக நடிப்பார்கள். நன்றாக ஓடினார்கள் என்றால் தனக்கு நன்மை செய்து கொள்வார்கள். நன்மையும் கூட ஒரேயடியாக சொர்க்கத்தின் எஜமான் ஆவதாகும் - எப்படி தாய் தந்தையர் சிம்மாசன அதிகாரியாக இருக்கும்போது குழந்தைகளும் ஆவார்களோ அது போலவேயாகும். தந்தையை பின்பற்ற வேண்டும். இல்லாவிட்டால் தனது பதவியை குறைத்துக் கொள்வீர்கள். இந்தப் படங்களை அப்படியே வைத்துக் கொள்வதற்காக பாபா உருவாக்கவில்லை. இவைகளை வைத்து நிறைய சேவை செய்ய வேண்டும். பெரிய பெரிய செல்வந்தர்கள் இலட்சுமி-நாராயணரின் கோவிலை கட்டுகின்றனர், ஆனால் அனைவருமே நினைவு செய்யக் கூடிய இவர்கள் எப்போது வந்தார்கள், பாரதத்தை எப்படி சுகம் மிக்கதாக ஆக்கினார்கள் என்பது யாருக்கும் தெரியாது.ஒரு தில்வாடா கோவில் இருக்க வேண்டும் என நீங்கள் அறிகிறீர்கள். இந்த ஒன்றே போதுமானதாகும். இலட்சுமி-நராயணரின் கோவிலின் மூலம் என்ன ஆகப்போகிறது? வர்கள் ஏதும் நன்மை செய்பவர்கள் அல்ல. சிவனின் கோவிலை கட்டுகின்றனர், அதுவும் அர்த்தமில்லாமல்... அவருடைய தொழிலைப் பற்றி தெரிந்து கொள்ளவே இல்லை. கோவிலை கட்டினார்கள், அவர்களின் தொழிலைப் பற்றி தெரியாது என்றால் என்ன சொல்வார்கள்? சொர்க்கத்தில் தேவதைகள் இருக்கும் போது கோவில்கள் இருப்பதில்லை. கோவிலை கட்டுபவர்களிடம் சென்று கேட்க வேண்டும் - இலட்சுமி-நாராயணர் எப்போது வந்திருந்தார்கள்? அவர்கள் என்ன சுகத்தைக் கொடுத்திருந்தார்கள்? அவர்களால் கொஞ்சம் கூட புரிய வைக்க முடியாது. யாருக்குள் அவகுணங்கள் உள்ளனவோ அவர்கள் குணவான்களின் கோவிலை கட்டுகின்றனர் என இதிலிருந்து தெரிகிறது. ஆக குழந்தைகளுக்கு சேவையின் மீது மிகவும் ஆர்வம் இருக்க வேண்டும். பாபாவுக்கு சேவையில் மிக மிக ஆர்வம் உள்ளது, எனவேதான் இப்படி இப்படியான படங்களை உருவாக்க வைக்கிறார். படத்தை சிவபாபா உருவாக்குகிறார், ஆனால் புத்தி இருவருடையதுமே வேலை செய்கிறது. நல்லது!இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.இரவு வகுப்பு - 28.06.1968இங்கே அனைவருமே அமர்ந்திருக்கின்றனர், நாம் ஆத்மாக்கள், தந்தை அமர்ந்திருக்கிறார் என புரிந்து கொள்கின்றனர். இது ஆத்ம அபிமானி ஆகி அமர்ந்திருப்பது என சொல்லப்படுகிறது. அனைவருமே, நாம் ஆத்மாக்கள், பாபாவின் முன்னால் அமர்ந்திருக்கிறோம் என்று புரிந்து அமர்ந்திருக்கவில்லை. இப்போது பாபா நினைவூட்டும் போது நினைவுக்கு வரும், கவனத்தைக் கொடுப்பார்கள். புத்தி வெளியில் அலைய விடுபவர்களும் நிறைய பேர் இருக்கின்றனர். இங்கேயே அமர்ந்திருந்தாலும் கூட காதுகள் மூடியிருப்பது போல இருக்கின்றனர். புத்தி வெளியில் எங்காவது அலைந்து கொண்டிருக்கும். தந்தையின் நினைவில் அமர்ந்திருக்கும் குழந்தைகள் வருமானத்தை சேமித்துக் கொண்டிருக்கின்றனர். பலருடைய புத்தியின் தொடர்பு வெளியில் இருக்கிறது, அவர்கள் யாத்திரையிலேயே இல்லாதது போல இருக்கின்றனர். நேரம் வீணாகிக் கொண்டிருக்கிறது. தந்தையை பார்க்கும் போது கூட பாபாவின் நினைவு வரும். வரிசைக்கிரமமான முயற்சியின்படி இருக்கவே இருக்கின்றனர். ஒரு சிலருக்கு உறுதியான பழக்கம் ஏற்பட்டு விடுகிறது. நாம் ஆத்மாவாக இருக்கிறோம், உடல் அல்ல. தந்தை ஞானம் நிறைந்தவர் எனும்போது குழந்தைகளுக்கும் கூட ஞானம் வந்து விடுகிறது. இப்போது திரும்பிச் செல்ல வேண்டும். சக்கரம் முடிவடைகிறது, இப்போதே முயற்சி செய்ய வேண்டும். நிறைய காலம் கடந்து போய் விட்டது, குறைவான சமயம் தான் மீதமிருக்கிறது. . . பிறகு இறுதித் தேர்வின் நாட்களில் பிறகு நிறைய முயற்சி செய்யத் தொடங்குவார்கள். நாம் முயற்சி செய்யாவிட்டால் தோல்வியடைந்து விடுவோம் என புரிந்து கொள்வார்கள். பதவியும் கூட மிகவும் குறைவாக ஆகி விடும். குழந்தைகளின் முயற்சி நடந்தபடிதான் இருக்கிறது. தேக அபிமானத்தின் காரணமாக பாவ கர்மங்கள் ஏற்படும். இதற்கு நூறு மடங்கு தண்டனை கிடைக்கும், ஏனென்றால் என்னை நிந்தனை செய்விக்கின்றனர். தந்தையின் பெயர் கெடும்படியான கர்மம் செய்யக் கூடாது. அதனால்தான் சத்குருவை நிந்திப்பவர்களுக்கு நிலையான இடம் கிடைக்காது என பாடுகின்றனர். நிலையான இடம் என்றால் இராஜ்யம். படிப்பிக்கக் கூடியவரும் தந்தை ஆவார். வேறு சத்சங்கங்களில் எங்குமே இலட்சியம், குறிக்கோள் என எதுவும் கிடையாது. இது நம்முடைய இராஜயோகமாகும். நாங்கள் இராஜயோகம் கற்பிக்கிறோம் என வேறு யாரும் வாயால் எதுவும் சொல்ல முடியாது. அவர்கள் அமைதியில்தான் சுகம் இருக்கிறது என புரிந்து கொள்கின்றனர். அங்கே துக்கத்தின் விசயமும் இல்லை, சுகத்தின் விசயமும் இல்லை. அமைதியே அமைதியாக இருக்கிறது. பிறகு, இவர்களின் அதிர்ஷ்டத்தில் இல்லை என புரிந்து கொள்ளப்படுகிறது. யார் முதலிலிருந்தே நடிப்பை நடிக்கின்றனரோ அவர்களுடைய அதிர்ஷ்டம் அனைவரை விடவும் உயர்ந்ததாகும். அங்கே அவர்களுக்கு இந்த ஞானம் இருக்காது. அங்கே சங்கல்பமே நடக்காது. நாம் அனைவரும் அவதாரம் எடுக்கிறோம் என குழந்தைகள் தெரிந்திருக்கின்றனர்.வித விதமான பெயர் உருவங்களில் வருகிறோம். இது நாடகமல்லவா ! ஆத்மாக்களாகிய நாம் சரீரத்தை தாரணை செய்து இதில் நடிப்பை நடிக்கிறோம். அந்த அனைத்து இரகசியங்களையும் தந்தை அமர்ந்து புரிய வைக்கிறார். குழந்தைகளாகிய உங்களுக்கு உள்ளுக்குள் அதீந்திரிய (இந்திரியங்களுக்கு அப்பாற்பட்ட) சுகம் இருக்கிறது. உள்ளுக்குள் குஷி இருக்கிறது. இவர் ஆத்ம அபிமானியாக இருக்கிறார் என சொல்வார்கள். நீங்கள் மாணவர்கள் என தந்தை புரிய வைக்கவும் செய்கிறார். நாம் தேவதைகளாக சொர்க்கத்தின் எஜமானாக ஆகக் கூடியவர்கள் என தெரிந்திருக்கிறீர்கள். வெறும் தேவதையாக மட்டுமல்ல, நாம் உலகத்தின் எஜமானாக ஆகக் கூடியவர்கள். கர்மாதீத (கர்மங்களை வென்ற முழுமை) நிலை ஏற்படும்போது இந்த நிலை நிரந்தரமாக ஏற்படும். நாடகத்தின் திட்டப்படி கண்டிப்பாக நடக்க வேண்டியுள்ளது. நாம் ஈஸ்வரிய குடும்பத்தில் இருக்கிறோம் என நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். சொர்க்கத்தின் இராஜ்யம் கண்டிப்பாக கிடைக்க வேண்டும். யார் அதிகமாக சேவை செய்கின்றனரோ, பலருக்கு நன்மை செய்கின்றனரோ, அவர்களுக்கு கண்டிப்பாக உயர்ந்த பதவி கிடைக்கும். இந்த யோகத்தில் அமர்வது என்பது இங்கே (மதுபன்) நடக்கலாம், வெளியில் செண்டர்களில் இப்படி நடக்க முடியாது. நான்கு மணிக்கு வருவதும், நிஷ்டையில் (நினைவில்) அமர்வதும் அங்கே எப்படி நடக்கும். நடக்காது. செண்டரில் தங்குபவர்கள் வேண்டுமானால் அமர்வார்கள். வெளியில் இருப்பவர்களுக்கு தப்பித் தவறி கூட சொல்லக் கூடாது. நேரம் அப்படிப்பட்டதாக இருக்கிறது. அது இங்கே சரியாக இருக்கும். வீட்டில்தான் அமர்ந்திருக்கிறீர்கள். அங்கேயோ வெளியிலிருந்து வர வேண்டியிருக்கும். இது இங்கே மட்டும் செய்வதற்கானதாகும். புத்தியில் ஞானத்தின் தாரணை ஏற்பட வேண்டும். நாம் ஆத்மாவாக இருக்கிறோம். ஆத்மாவின் அகால சிம்மாசனம் இதுவாகும். பழக்கம் ஏற்பட்டு விட வேண்டும். நாம் சகோதர - சகோதரர்களாக இருக்கிறோம். சகோதரனிடம் நான் பேசுகிறேன். தன்னை ஆத்மா என புரிந்து கொண்டு தந்தையை நினைவு செய்தீர்களானால் பாவ கர்மங்கள் அழிந்து போய் விடும். நல்லது !இனிமையிலும் இனிமையான ஆன்மீக குழந்தைகளுக்கு ஆன்மீக பாப்தாதாவின் அன்பு நினைவுகள், இரவு வணக்கம் மற்றும் நமஸ்காரம்.தாரணைக்கான முக்கிய சாரம் :

1. ஞான - யோகத்தின் சஞ்சீவினி மூகையின் மூலம் தன்னை மாயையின் மயக்கத்திலிருந்து விடுவித்தபடி இருக்க வேண்டும். மனதின் வழியில் ஒருபோதும் நடக்கக் கூடாது.2. ஞானம் - யோகம் மிக்கவராகி சேவை செய்ய வேண்டும். தாய் தந்தையரைப் பின்பற்றி சிம்மாசன அதிகாரி ஆக வேண்டும்.வரதானம்:

தெய்வீக புத்தி மற்றும் ஆன்மீக திருஷ்டி (பார்வை)யின் வரதானத்தின் மூலம் முதலில் நம்பர் (எண்) எடுக்கக் கூடிய உயர்ந்த முயற்சியாளர் ஆகுக.ஒவ்வொரு பிராமண குழந்தைக்கும் தெய்வீக புத்தி மற்றும் ஆன்மீக திருஷ்டி பிறவியிலேயே பிராப்தி ஆகிறது. இந்த வரதானம்தான் பிராமண வாழ்க்கையின் அடித்தளம் ஆகும். இந்த இரண்டு விசயங்களின் ஆதாரத்தில்தான் சங்கம யுகத்தின் முயற்சியாளர்களுக்கு நம்பர் (தர வரிசை) உண்டாகிறது. இவைகளை அனைத்து எண்ணம், சொல், செயல்களில் யார் எவ்வளவு பயன்படுத்துகின்றனரோ அந்த அளவே வரிசை எண்ணில் முன்னேறுகின்றனர். ஆன்மீக பார்வையின் மூலம் உள்ளுணர்வு மற்றும் செயல்கள் தாமாக மாறி விடும். தெய்வீக புத்தியைக் கொண்டு சரியான தீர்மானம் செய்வதன் மூலம் சுயம், சேவை, சம்மந்தம், தொடர்பு ஆகியவை மிகச் சரியான முறையில் சக்திசாலியானதாக ஆகி விடும்.சுலோகன்:

எண்ணம், சொல், செயல்களில் தூய்மையின் தாரணை ஏற்படும்போது அங்க இலட்சணங்களில் ஆன்மீகத்தன்மையின் ஜொலிப்பு வரும்.

***OM SHANTI***

Powered by Blogger.