Brahma Kumaris Murli Tamil 30 December 2019
Brahma Kumaris Murli Tamil 30 December 2019 |
30.12.2019 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா, மதுபன்
இனிமையான குழந்தைகளே! அனைத்திற்கும் ஆதாரம் நினைவாகும். நினைவினால் தான் நீங்கள் இனிமையாக மாறுவீர்கள். இந்த நினைவில் தான் மாயாவின் யுத்தம் நடக்கிறது.
கேள்வி:
நாடகத்தில் எந்த இரகசியம் மிகவும் சிந்திக்கதக்கதாக இருக்கிறது. அதை குழந்தைகளாகிய நீங்கள் தான் அறிகின்றீர்கள்?
பதில்:
நாடகத்தில் ஒரே பாகத்தை இரண்டு முறை நடிக்க முடியாது என நீங்கள் அறிந்துள்ளீர்கள். முழு உலகத்திலும் என்னென்ன பாகம் நடக்கிறதோ அது ஒன்றை விட மற்றொன்று புதியதாகும். சத்யுகத்திலிருந்து இது வரை எப்படி நாட்கள் மாறிக் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் சிந்திக்கிறீர்கள். அனைத்து செயல்பாடுகளும் மாறிக் கொண்டிருக்கிறது. ஆத்மாவில் 5000 வருடங்களின் செயல்பாடுகளின் பதிவுகள் நிறைந்திருக்கிறது. அது ஒரு போதும் மாறாது. இந்த சிறிய விஷயம் குழந்தைகளாகிய உங்களைத் தவிர வேறு யாருடைய புத்தியிலும் வராது.
ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான குழந்தைகளே! நீங்கள் உங்களுடைய எதிர்கால புருஷோத்தம முகம், புருஷோத்தம உடலைப் பார்க்கிறீர்களா? என ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளிடம் கேட்கிறார். இது புருஷோத்தம சங்கமயுகம் அல்லவா! நாம் மீண்டும் புது உலகம் சத்யுகத்தில் இவர்களுடைய (இலஷ்மி- நாராயணன்) வம்சாவளியில் செல்வோம். அதற்கு சுகதாமம் என்று பெயர் என நீங்கள் உணர்கிறீர்கள். அங்கே செல்வதற்காக இப்போது நீங்கள் புருஷோத்தமர்களாக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். உட்கார்ந்த படியே இந்த எண்ணங்கள் வந்து கொண்டிருக்க வேண்டும். நாளை நாம் இவ்வாறு மாறுவோம் என மாணவர்கள் படிக்கும் போது அவர்களின் புத்தியில் நிச்சயமாக இருக்கும். அவ்வாறே நீங்களும் இங்கே அமரும் போது நாம் விஷ்ணுவின் இராஜ்யத்தில் செல்வோம் என அறிகிறீர்கள். உங்களுடைய புத்தி இப்போது அலௌகீகமாக இருக்கிறது. வேறு எந்த மனிதர்களின் புத்தியிலும் இந்த விசயங்கள் மகிழ்ச்சி தருவதாக இருக்காது. இது பொதுவான சத்சங்கம் அல்ல. இங்கே அமரும் போது சத்யமான தந்தை யாரை சிவன் என்று அழைக்கிறோமோ அவருடைய சங்கத்தில் அமர்ந்திருக்கிறோம் என உணர்கிறீர்கள். சிவபாபா தான் படைக்கக் கூடியவர். அவரே இந்த படைப்பின் முதல், இடை, கடையை அறிவார். அவரே இந்த ஞானத்தைக் கொடுக்கிறார். நேற்றைய விசயத்தை சொல்வதை போல சொல்கிறார். இங்கே அமர்ந்திருக்கிறீர்கள் என்றால் நாம் இங்கே ஆடையை புதுப்பித்துக் கொள்வதற்காக அதாவது இந்த உடலை தெய்வீக உடலாக மாற்றுவதற்காக வந்திருக்கிறோம் என்பது நினைவிருக்கும் அல்லவா! இது நம்முடைய தமோபிரதானமான பழைய உடல் என ஆத்மா கூறுகிறது. இதை மாற்றி இப்படிப்பட்ட (தெய்வீக) உடல் எடுக்க வேண்டும். எவ்வளவு எளிதான குறிக்கோள்! படிக்க வைக்கக் கூடிய டீச்சர் நிச்சயமாக படிக்கக் கூடிய மாணவர்களை விட புத்திசாலியாக இருப்பார் அல்லவா! படிக்கவும் வைக்கிறார், நல்ல கர்மங்களையும் கற்றும் கொடுக்கிறார். நம்மை உயர்ந்ததிலும் உயர்ந்த பகவான் படிக்க வைக்கிறார் என்றால் நிச்சயமாக தேவி தேவதையாக மாற்றுவார் என இப்போது நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். இந்த படிப்பே புதிய உலகத்திற்காக ஆகும். வேறு யாருக்கும் புது உலகத்தைப் பற்றி சிறிதும் தெரியாது. இந்த இலஷ்மி நாராயணன் புது உலகத்திற்கு அதிபதியாக இருந்தனர். தேவி தேவதைகள் கூட வரிசைக் கிரமத்தில் இருப்பார்கள் அல்லவா! அனைவரும் ஒன்று போல இருக்க முடியாது. ஏனென்றால் இராஜ்யம் அல்லவா! இந்த எண்ணங்கள் உங்களுக்குள் ஓடிக் கொண்டே இருக்க வேண்டும். ஆத்மாக்களாகிய நாம் பதீத்தத்தி-ருந்து தூய்மையாவதற்காக தூய்மையான தந்தையை நினைவு செய்கிறோம். ஆத்மா தனது இனிமையான தந்தையை நினைவு செய்கிறது. நீங்கள் என்னை நினைவு செய்தால் தூய்மையாக சதோபிரதானமாக மாறுவீர்கள் என பாபாவே கூறுகின்றார். அனைத்திற்கும் ஆதாரம் நினைவு யாத்திரையாகும். குழந்தைகளே! என்னை எவ்வளவு நேரம் நினைவு செய்கிறீர்கள் என பாபா நிச்சயம் கேட்பார். நினைவு யாத்திரையில் தான் மாயாவின் யுத்தம் நடக்கிறது. நீங்கள் யுத்தத்தைக் கூட புரிந்து கொள்கிறீர்கள். இது யாத்திரை கிடையாது. ஆனால் போர் ஆகும். இதில் தான் மிகவும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். ஞானத்தில் மாயாவின் புயல் போன்றவை கிடையாது. பாபா நாங்கள் உங்களை நினைக்கிறோம். ஆனால் மாயையின் ஒரேயொரு புயல் கீழே தள்ளி விடுகிறது, விழ வைக்கிறது என குழந்தைகள் கூறுகிறார்கள். நம்பர் ஒன் புயல் தேக அபிமானம் ஆகும். பிறகு காமம், கோபம், பேராசை, பற்று வருகிறது. பாபா நாங்கள் நினைவில் இருப்பதற்கு மிகவும் முயற்சி செய்கிறோம். எந்த தடையும் வரக் கூடாது, இருப்பினும் புயல் வருகிறது என குழந்தைகள் கூறுகிறார்கள். இன்று கோபம், சில நேரம் பேராசையின் புயல் வந்து விடுகிறது. சிலர் சொல்கின்றனர்! பாபா இன்று எங்களுடைய நிலை மிகவும் நன்றாக இருக்கிறது. முழு நாளும் எந்தப் புயலும் வரவில்லை. மிகவும் குஷியாக இருக்கிறது. பாபாவை மிகவும் அன்போடு நினைத்தேன். அன்புக் கண்ணீர் வந்து கொண்டு இருந்தது! பாபாவின் நினைவினால் தான் மிகவும் இனிமையாக மாறலாம்.
மாயாவிடம் நாம் தோல்வி அடைந்து அடைந்து எது வரை வந்துவிட்டோம் என்பதையும் புரிந்து கொள்கிறார்கள். இதை யாரும் புரிந்து கொள்வதில்லை. மனிதர்கள் இலட்சக் கணக்கான வருடங்கள் என்கிறார்கள் அல்லது பரம்பரையாக என்கிறார்கள். நாம் மீண்டும் மனிதனிலிருந்து தேவதையாக மாறிக் கொண்டிருக்கிறோம் என நீங்கள் கூறுவீர்கள். இந்த ஞானத்தை பாபா தான் வந்து கொடுக்கிறார். விசித்திரமான உடலற்ற தந்தை தான் விசித்திரமான ஞானத்தைக் கொடுக்கிறார். நிராகாரருக்கு விசித்திரமானவர் என்று கூறப்படுகிறது. நிராகாரர் இந்த ஞானத்தை எப்படிக் கொடுப்பார்? நான் இந்த உடலில் எப்படி வருகிறேன் என்பதை பாபாவே புரிய வைக்கிறார். இருப்பினும் மனிதர்கள் குழம்புகிறார்கள். இந்த ஒரே உடலிலா வருவார். ஆனால் நாடகத்தில் இந்த உடல் தான் நிமித்தமாக இருக்கிறது. சிறிது கூட மாறுவதில்லை. இந்த விசயங்களை நீங்கள் புரிந்து கொண்டு மற்றவர்களுக்கும் புரிய வைக்கிறீர்கள். ஆத்மா தான் படிக்கிறது. ஆத்மா தான் கற்றுக் கொண்டு கற்பிக்கிறது. ஆத்மா மிகவும் விலை மதிப்பற்றதாகும். ஆத்மா அழிவற்றது. இந்த சரீரம் அழிகிறது. ஆத்மாக்களாகிய நாம் நம்முடைய பரம்பிதா பரமாத்மாவிடமிருந்து படைப்பவர் மற்றும் படைப்பின் முதல், இடை, கடை 84 பிறவிகளின் ஞானத்தை அறிந்து கொண்டிருக்கிறோம். ஞானத்தை யார் எடுக்கிறார்கள்? ஆத்மாக்களாகிய நாம். ஆத்மாக்களாகிய நீங்கள் தான் நாலெட்ஜ்ஃபுல் பாபாவிடமிருந்து மூலவதனம், சூட்சும வதனத்திற்கு செல்கிறீர்கள். நாம் நம்மை ஆத்மா என உணர வேண்டும் என்பதே மனிதர்களுக்குத் தெரியாது. மனிதர்கள் தன்னை உடல் என தலைகீழாக புரிந்து கொண்டிருக்கிறார்கள். ஆத்மா சத்சித் ஆனந்த சொரூபம் என பாடப் பட்டிருக்கிறது. பரமாத்மாவிற்கு எல்லோரையும் விட அதிகமான மகிமை இருக்கிறது. ஒரு தந்தைக்கு எவ்வளவு மகிமை இருக்கிறது! அவரே துக்கத்தை நீக்கி சுகத்தைக் கொடுக்க கூடியவர். துக்கத்தை நீக்கி சுகம் அளிப்பவர், ஞானக் கடல் போன்ற மகிமைகள் கொசு போன்றவைகளுக்கு கிடையாது. குழந்தைகளாகிய நீங்களே மாஸ்டர் துக்கத்தை நீக்கி சுகம் அளிப்பவர்கள். குழந்தைகளாகிய உங்களுக்கும் இந்த ஞானம் கிடையாது. பேபி புத்தியாக (குழந்தைதனமாக) இருந்தது. குழந்தைகளுக்குள் ஞானமும் இல்லை, அவகுணமும் இல்லை. பவித்ரமாக இருப்பதால் அவர்களுக்கு மகாத்மா என்று பெயர். எவ்வளவு சிறிய குழந்தையோ அவ்வளவு நம்பர் ஒன் மலர். முற்றிலும் கர்மாதீத் நிலை போன்றாகும். கர்மம்-அகர்மம்-விகர்மம் எது பற்றியும் தெரியவில்லை. ஆகவே அவர்கள் மலர். ஒரு தந்தை அனைவரையும் கவர்ந்திழுப்பது போல அனைவரையும் கவர்ந்திழுக்கிறார்கள். அனைவரையும் கவர்ந்து மணமுள்ள மலராக மாற்றுவதற்காக தந்தை வந்திருக்கிறார். பலர் முள்ளிலும் முள்ளாகவே இருந்து விடுகிறார்கள். 5 விகாரங்களுக்கு வசமாகக் கூடியவர்களுக்கு முள் எனக் கூறப்படுகிறது. தேக அபிமானம் நம்பர் ஒன் முள்ளாகும். இதனால் மற்ற முட்கள் தோன்றுகிறது. முள்காடு மிகவும் துக்கம் அளிக்கிறது. காட்டில் விதவிதமான முட்கள் இருக்கிறது அல்லவா! ஆகவே இதற்கு துக்க தாமம் என்று பெயர். புது உலகில் முட்கள் கிடையாது. ஆகவே அதற்கு சுக தாமம் என்று பெயர். சிவ பாபா மலர்களின் தோட்டத்தை உருவாக்குகிறார். இராவணன் முட்களின் காட்டை உருவாக்குகிறான். ஆகவே தான் இராவணனை முள் செடிகளால் எரிக்கிறார்கள். மேலும் தந்தையின் மீது மலர்களைத் தூவுகிறார்கள். இந்த விசயங்களை அப்பா அறிகிறார், குழந்தைகள் அறிகிறார்கள், வேறு யாரும் அறியவில்லை.
நாடகத்தில் ஒரு பாகத்தை இரண்டு முறை நடிக்க முடியாது என குழந்தைகள் அறிகிறார்கள். முழு உலகத்திலும் என்ன நடிப்பு நடந்து கொண்டிருக்கிறதோ அது ஒவ்வொன்றும் புதியது என புத்தியில் இருக்கிறது. சத்யுகத்தில் இருந்து இது வரை எப்படி நாட்கள் மாறிக் கொண்டிருக்கிறது என நீங்கள் சிந்தியுங்கள். அனைத்து செயல்களுமே மாறிக் கொண்டிருக்கிறது. 5000 வருடத்தின் செயல் பாடுகளின் பதிவுகள் ஆத்மாவில் நிரம்பியிருக்கிறது. அது ஒரு போதும் மாறாது. ஒவ்வொரு ஆத்மாவிலும் அவரவருக்கென்று பாகம் பதிவாகியிருக்கிறது. இந்த சிறிய விஷயம் கூட யாருடைய புத்தியிலும் தோன்றவில்லை. இந்த நாடகத்தின் கடந்த காலம், நிகழ் காலம், எதிர்காலத்தை நீங்கள் அறிகிறீர்கள். இது பள்ளிக் கூடம் அல்லவா! தூய்மையாகி பாபாவை நினைக்கக் கூடிய படிப்பை பாபா படிக்க வைக்கிறார். தந்தை வந்து இப்படி பதீதமாக இருக்கக் கூடியவர்களை பரிசுத்தமாக மாற்றக் கூடிய படிப்பை படிக்க வைப்பார் என எப்போதாவது சிந்தனை செய்துள்ளீர்களா? இந்தப் படிப்பினால் தான் நாம் உலகத்திற்கு அதிபதியாகலாம். பக்தி மார்க்கத்தின் புத்தகங்கள் தனிப் பட்டவையாகும். அதற்கு படிப்பு என்று கூற முடியாது. ஞானம் இல்லாமல் எப்படி சத்கதி கிடைக்கும்? சத்கதி அடைவதற்கு தந்தை இல்லாமல் ஞானம் எங்கிருந்து வந்தது? சத்கதியில் நீங்கள் இருக்கும் போது பக்தி செய்வீர்களா? இல்லை, அங்கேயே அளவற்ற சுகம் இருக்கும். பிறகு பக்தி எதற்காக செய்வது? இந்த ஞானம் இப்போது தான் கிடைக்கிறது. அனைத்து ஞானமும் ஆத்மாவில் இருக்கிறது. ஆத்மாவிற்கு எந்த தர்மமும் கிடையாது. ஆத்மா சரீரத்தை ஏற்கும் போது தான் இன்னார், இந்த தர்மம் என்று கூறப்படுகிறது. ஆத்மாவின் தர்மம் என்ன? ஒன்று ஆத்மா பிந்துவாக இருக்கிறது. மேலும் சாந்த சொரூபமாக இருக்கிறது. சாந்தி தாமத்தில் இருக்கிறது.
அனைத்து குழந்தைகளுக்கும் பாபா மீது உரிமை இருக்கிறது என பாபா புரிய வைக்கிறார். நிறைய குழந்தைகள் வேறு தர்மங்களிலும் மாறியிருக்கிறார்கள். அவர்கள் மீண்டும் தன்னுடைய உண்மையான தர்மத்தில் வந்து விடுவார்கள். தேவி தேவதா தர்மத்தை விட்டு மற்ற தர்மத்தில் யார் சென்றிருக்கிறார்களோ அந்த இலைகள் அனைத்தும் தன்னுடைய இடத்திற்கு வந்து விடுவார்கள். நீங்கள் முதன் முதலில் பாபாவின் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும். இந்த விசயங்களில் தான் அனைவரும் குழம்பி இருக்கிறார்கள். இப்போது நம்மை யார் படிக்க வைக்கிறார்கள். எல்லையற்ற தந்தை. கிருஷ்ணர் தேகம் உடையவர். இவருக்கு(பிரம்மா பாபா) தாதா என்று கூறுவார்கள். நீங்கள் அனைவரும் சதோதரர்கள் அல்லவா! பிறகு பிறவியைப் பொருத்ததாகும். சகோதரரின் சரீரம் எப்படி இருக்கிறது? சகோதரியின் சரீரம் எப்படி இருக்கிறது? ஆத்மா ஒரு சிறிய நட்சத்திரம் போன்று இருக்கிறது. இவ்வளவு ஞானம் அனைத்தும் ஒரு சிறிய நட்சத்திரத்தில் இருக்கிறது. நட்சத்திரம் உடல் இல்லாமல் பேச முடியாது. நட்சத்திரம் நடிப்பதற்காக இவ்வளவு உறுப்புகள் கிடைத்திருக்கிறது. நட்சத்திரங்களாகிய உங்களின் உலகம் தனி. ஆத்மா இங்கே வந்து சரீரத்தை ஏற்கிறது. சரீரம் சிறியதிலிருந்து பெரியதாகிறது. ஆத்மா தான் தனது தந்தையை நினைவு செய்கிறது. அதுவும் இந்த உடலில் இருக்கும் வரை தான். வீட்டில் ஆத்மா பாபாவை நினைவு செய்யுமா? இல்லை. நாம் எங்கேயிருக்கிறோம் என்பது அங்கே எதுவுமே தெரியாது. ஆத்மா மற்றும் பரமாத்மா இரண்டும் சரீரத்தில் இருக்கும் போது ஆத்மாக்கள் மற்றும் பரமாத்மாவின் திருவிழா என்று கூறப்படுகிறது. ஆத்மா மற்றும் பரமாத்மா நீண்ட காலமாக பிரிந்து விட்டது...... என்று பாடப்பட்டிருக்கிறது. எவ்வளவு காலம் பிரிந்திருக்கிறது. எவ்வளவு காலம் தனியாக இருக்கிறோம்? என்பது நினைவிற்கு வருகிறது. ஒவ்வொரு நொடியாக கடந்து 5000 வருடங்கள் ஆகி விட்டது. பிறகு நம்பர் ஒன்றிலிருந்து மீண்டும் ஆரம்பம் ஆகும். துல்லியமாக கணக்கிருக்கிறது. உங்களை யாராவது இவர்கள் எப்போது ஜென்மம் எடுத்தார் எனக் கேட்கலாம். உடனே நீங்கள் துல்லியமாகக் கூற முடியும். ஸ்ரீ கிருஷ்ணர் தான் முதல் நம்பரில் பிறவி எடுக்கிறார். சிவனுடையதைப் பற்றி நொடி, நிமிடம் எதையும் கணக்கிட முடியாது. கிருஷ்ணருக்கு நாள், நேரம், நொடி, நிமிடம் கணக்கிடலாம். மனிதர்களின் கடிகாரத்தில் வித்தியாசம் ஏற்படுகிறது. சிவபாபாவின் அவதாரத்தில் எந்த வித்தியாசமும் கிடையாது. எப்போது வந்தார் என்பதே தெரியவில்லை. சாட்சாத்காரம் கிடைத்தது. அப்போது வந்தார் என்றும் கூற முடியாது. தோராயமாகக் கணக்கிடலாம். நொடி, நிமிடத்தின் கணக்கைக் கூற முடியாது. அவருடைய அவதாரம் கூட அலௌகீகமானது. அவர் எல்லையற்ற இரவில் வருகிறார். மற்றபடி வேறு யாரெல்லாம் அவதாரம் எடுக்கிறார்களோ அவர்களுடையது தெரிகிறது. ஆத்மா சரீரத்தில் நுழைகிறது. சிறிய உடலை அணிந்து கொள்கிறது. பிறகு மெல்ல மெல்ல பெரியதாகிறது. சரீரத்துடன் ஆத்மா வெளியே செல்கிறது. இந்த விசயங்கள் அனைத்தையும் நன்கு சிந்தித்து பிறகு மற்றவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். எவ்வளவு மனிதர்கள் இருக்கிறார்கள். ஒருவரைப் போன்று ஒருவர் இருக்க முடியாது. எவ்வளவு பெரிய மேடை!. மிகப் பெரிய ஹாலாக (மண்டபம்) இருக்கிறது. அதில் எல்லையற்ற நாடகம் நடக்கிறது.
நரனிலிருந்து நாராயணனாக மாறுவதற்காக, பாபா படைக்கின்ற புதிய உலகத்தில் உயர்ந்த பதவி அடைவதற்காக குழந்தைகளாகிய நீங்கள் இங்கே வந்திருக்கிறீர்கள். மற்றபடி இந்த பழைய உலகம் அழியப் போகிறது. பாபா மூலமாக புதிய உலகம் உருவாகிக் கொண்டிருக்கிறது. பிறகு பாபா பாலனையும் செய்ய வேண்டும். இந்த சரீரத்தை விடும் போது நிச்சயமாக சத்யுகத்தில் புதிய உடல் எடுத்து பாலனை செய்வீர்கள். அதற்கு முன்பு இந்த பழைய உலகம் அழியத்தான் வேண்டும். மூங்கில் காடு பற்றி எரியப் போகிறது. பிறகு இந்த பாரதம் மட்டும் தான் இருக்கும். பாரதத்தில் மிகச் சிலரே இருப்பார்கள். இப்போது நீங்கள் வினாசத்திற்குப் பிறகு தண்டனை அடையாமல் இருக்க கடினமாக உழைக்கிறீர்கள். ஒரு வேளை விகர்மம் வினாசம் ஆகவில்லை என்றால் தண்டனைகள் அடைவீர்கள். மேலும் பதவியும் கிடைக்காது. நீங்கள் யாரிடம் செல்கிறீர்கள் என யாராவது உங்களிடம் கேட்டால் சிவபாபாவிடம் எனக் கூறுங்கள். அவர் பிரம்மாவின் உடலில் வந்திருக்கிறார். இந்த பிரம்மா சிவன் கிடையாது எவ்வளவு பாபாவை அறிகிறீர்களோ அவ்வளவு பாபாவிடம் அன்பு ஏற்படும். குழந்தைகளே நீங்கள் வேறு யாரையும் விரும்பாதீர்கள். மற்ற சங்கத்தின் (தொடர்பு) அன்பை விட்டுவிட்டு ஒரு சங்கத்தில் வையுங்கள். பிரியதர்ஷன் பிரியதர்ஷினி இருக்கிறார்கள் அல்லவா. இங்கேயும் அப்படித்தான். 108பேர் உண்மையான பிரிய தர்ஷினிகள் ஆகிறார்கள். அதிலும் கூட 8 பேர் உண்மையிலும் உண்மையானவர்களாக மாறுகிறார்கள். 8-ன் மாலை இருக்கிறது அல்லவா. 9 ரத்தினங்கள் என பாடப்பட்டிருக்கிறது. 8 மணிகள் 9-வது பாபா. 8 தேவதைகள் முக்கியமானவர்கள். பிறகு 16108 பேர் இளவரசன் இளவரசிகளின் குடும்பமாக திரேதா கடைசி வரை மாறுகிறார்கள். பாபா உள்ளங்கையில் சொர்க்கத்தைக் காண்பிக்கிறார். நாம் சிருஷ்டிக்கே அதிபதியாகிறோம் என்ற போதை குழந்தைகளாகிய உங்களிடம் இருக்க வேண்டும். பாபாவிடம் இப்படி பட்ட வியாபாரம் செய்ய வேண்டும். விரல் விட்டு எண்ணக் கூடிய அளவிற்குத் தான் வியாபாரிகள் இந்த வியாபாரத்தை செய்கிறார்கள். இது போன்ற வியாபாரிகள் யாரும் கிடையாது. குழந்தைகள் நாம் பாபாவிடம் செல்கிறோம் என்ற உற்சாகத்தில் இருங்கள். மேலே பாபா இருக்கிறார். உலகில் இருப்பவர்களுக்குத் தெரியவில்லை. அவர் கடைசியில் வருவார் என அவர்கள் கூறுவார்கள். அதுவே கலியுகத்தின் கடைசி. அதுவே கீதை, மகாபாரதத்தின் நேரம், அதே யாதவர்கள் ஏவுகணைகளைக் கண்டுபிடித்து கொண்டிருக்கிறார்கள். அதே கௌரவர்களின் இராஜ்யம், அதே பாண்டவர்களாகிய நீங்கள் இருக்கிறீர்கள்.
குழந்தைகளாகிய நீங்கள் இப்போது வீட்டில் அமர்ந்தபடியே சம்பாதித்துக் கொண்டிருக்கிறீர்கள். பகவான் வீட்டிலிருந்தபடியே வந்திருக்கிறார். ஆகவே நீங்கள் வருமானத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள் என பாபா கூறுகிறார். இந்த வைரம் போன்ற பிறவி விலைமதிப்பற்றது என பாடப்பட்டிருக்கிறது. இப்போது இதை கிளிஞ்சல்களுக்காக இழந்து விடக் கூடாது. இப்போது நீங்கள் முழு உலகத்தையும் இராம இராஜ்யமாக மாற்றுகிறீர்கள். உங்களுக்கு சிவனிடமிருந்து சக்தி கிடைத்துக் கொண்டிருக்கிறது. மற்றபடி தற்காலத்தில் பலருக்கு அகால மரணம் ஏற்படுகிறது. பாபா புத்தி பூட்டைத் திறக்கிறார். மாயா புத்தி பூட்டை பூட்டிவிடுகிறது. இப்போது தாய்மார்களாகிய உங்களுக்கு ஞான கலசம் கிடைத்திருக்கிறது. அபலைகளுக்கும்(பெண்கள்) பலம் கொடுப்பவர் இவரே. இதுவே ஞான அமிர்தம் ஆகும். சாஸ்திரங்களின் ஞானத்தை அமிர்தம் என்று கூற முடியாது. நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. ஒரு பாபாவின் கவர்ச்சியில் வந்து மணமுள்ள மலராக வேண்டும். தன்னுடைய இனிமையான தந்தையை நினைத்து தேக அபிமானம் என்ற முள்ளை எரித்து விட வேண்டும்.
2. இந்த வைரம் போன்ற பிறவியில் அழியாத வருமானத்தை சேமிக்க வேண்டும். கிளிஞ்சல்களுக்காக இதை இழக்கக் கூடாது. ஒரு தந்தையிடம் உண்மையான அன்பு வைக்க வேண்டும். ஒரு சங்கத்தில் இருக்க வேண்டும்.
வரதானம்:
பழைய சுபாவம் - சம்ஸ்காரத்தின் சுமையை சமாப்தி செய்து டபுள் லைட்டாக (உஞமஇகஊ கஒஏஐப) இருக்கக்கூடிய ஃபரிஸ்தா ஆகுக.
பாபாவினுடையவர் ஆகிவிட்டீர்கள் என்றால், முழு சுமையையும் பாபாவிற்குக் கொடுத்து விடுங்கள். பழைய சுபாவ - சம்ஸ்காரத்தின் சிறிதளவு சுமை இருந்தால் கூட மேலிருந்து கீழே வந்து விடுவீர்கள். பறக்கும் கலையை அனுபவம் செய்ய விடாது, ஆகையால் பாப்தாதா சொல்கிறார் அனைத்தையும் கொடுத்து விடுங்கள். இந்த இராவணனின் சொத்தை தன்னிடம் வைத்துக் கொண்டால் துக்கம் தான் வரும். ஃபரிஸ்தா என்றாலே சிறிதளவு கூட இராவணனின் சொத்து இருக்கக் கூடாது. அனைத்து பழைய கணக்குகளை சாம்பாலாக்கி விடும் பொழுது டபுள் லைட் ஃபரிஸ்தா.
சுலோகன்:
பயமற்றவராகவும் முகமலர்ச்சியுடனும் இருந்து எல்லைக்கு அப்பாற்பட்ட விளையாட்டை பார்த்தீர்கள் என்றால் குழப்பத்தில் வரமாட்டீர்கள்.
***ஓம்சாந்தி ***
Brahma Kumaris Murli Tamil 30 December 2019
No comments
Say Om Shanti to all BKs