Brahma Kumaris Murli Tamil 12 January 2020
![]() |
Brahma Kumaris Murli Tamil 12 January 2020 |
12.01.2020 காலை முரளி ஓம் சாந்தி ''அவ்யக்த பாப்தாதா'' ரிவைஸ் 11.04.1985 மதுபன்
'' நன்மை செய்வது தான் ஆதார சொரூப சபையின் விசேஷம் ''
இன்று விசேஷமாக உலக மாற்றத்தின் ஆதார சொரூப, உலகின் எல்லைக்கப்பாற்பட்ட சேவையின் ஆதார சொரூப, சிரேஷ்ட நினைவு, எல்லைக்கப்பாற்பட்ட உள்உணர்வு, இனிமையான, விலைமதிக்கமுடியாத வார்த்தைகளைக் கூறுவதின் ஆதாரம் மூலமாக மற்றவர்களுக்கும் அம்மாதிரி ஊக்கம் உற்சாகத்தைக் கொடுக்கக் கூடிய ஆதார சொரூப பொறுப்பு மற்றும் பணிவு சொரூப விசேஷ ஆத்மாக்களைச் சந்திப்பதற்காக வந்திருக்கிறோம். நீங்கள் ஒவ்வொருவரும் தன்னை அந்த மாதிரி ஆதார சொரூபமாக அனுபவம் செய்கிறீர்களா? ஆதார ரூப ஆத்மாக்களின் இந்த சபை மீது அந்த அளவு அளவற்ற பொறுப்பு இருக்கிறது. ஆதார ரூபம் என்றால், எப்பொழுதும் தன்னை ஒவ்வொரு நேரம், ஒவ்வொரு எண்ணத்தில், ஒவ்வொரு காரியத்தில் பொறுப்பானவர் என்று புரிந்து நடந்து கொள்பவர். இந்த சபையில் வருவது என்றால், எல்லைக்கப்பாற்பட்ட பொறுப்பு என்ற கிரீடத்தை அணிந்திருப்பவர் ஆவது. இந்த சபை எதை நீங்கள் மீட்டிங் (கூட்டம்) என்று கூறுகிறீர்கள், மீட்டிங்கில் வருவது என்றால் நீங்கள் எப்பொழுதும் தந்தையுடன் சேவையுடன், ஈஸ்வரிய குடும்பத்துடன் அன்பின் சிரேஷ்ட எண்ணம் என்ற கயிற்றில் கட்டப்படுவது மற்றும் கட்டுவது என்ற இந்த ஆதார ரூபம் ஆகும். இந்த ஏற்பாடு செய்யப்பட்ட சபையில் வருவது என்றால், தன்னை அனைவருக்காகவும் ஒரு உதாரணமாக ஆக்குவது. இது மீட்டிங் இல்லை, ஆனால் எப்பொழுதும் மரியாதா புருஷோத்தமன் ஆவதற்கான நல்ல எண்ணத்தின் பந்தனத்தில் கட்டப்படுவது. இந்த அனைத்து விஷயங்களின் ஆதார சொரூபம் ஆவது என்பதைத் தான் ஆதார சொரூப சபை என்று கூறுவது. நாலாபுறங்களிலிருந்தும் விசேஷமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இரத்தினங்கள் ஒன்றாகக் கூடியிருக்கிறீர்கள். தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்றால் தந்தைக்குச் சமமாக ஆகியிருப்பவர்கள். சேவைக்கான ஆதார சொரூபம் என்றால் சுயத்திற்கு நன்மை மற்றும் அனைவருக்கும் நன்மை செய்யும் சொரூபம். எந்த அளவு தனக்கு நன்மை செய்யும் சொரூபமாக இருப்பாரோ அந்த அளவே அனைவருக்கும் நன்மை செய்யும் சொரூபம் உள்ள பொறுப்பாளர் ஆவார். பாப்தாதா இந்த சபையின் ஆதார ரூபம் மற்றும் நன்மை செய்யும் ரூப குழந்தைகளைப் பார்த்துக் கொண்டிருந்தார். மேலும் விசேஷமாக ஆதார ரூபமாகவும் ஆகிவிட்டார்கள், நன்மை செய்யும் ரூபமாகவும் ஆகிவிட்டார்கள் என்ற விசேஷத்தை பார்த்துக் கொண்டிருந்தோம். இந்த இரண்டு விஷயங்களில் வெற்றி அடைவதற்காக மூன்றாவதாக என்ன விஷயம் வேண்டும்? ஆதார ரூபமாக இருக்கிறீர்கள். அதனால் தான் அழைப்பின் பேரில் வந்திருக்கிறீர்கள் இல்லையா? மேலும் நன்மை செய்யும் ரூபமாக இருக்கிறீர்கள், அதனால் தான் திட்டங்களை உருவாக்கியிருக்கிறீர்கள். நன்மை செய்வது என்றால் சேவை செய்வது. மூன்றாவது விஷயமாக என்ன பார்த்தோம்? எந்தளவு விசேஷ சபையில் இருப்ப வராக இருக்கிறீர்களோ அந்த அளவு நன்மை செய்யும் எண்ணம் உள்ளவர். நன்மை செய்யும் இதயம் மற்றும் நன்மை பயக்கும் வார்த்தைகள் மற்றும் பாவனை எந்த அளவு இருக்கிறது. ஏனென்றால் நன்மை செய்யும் எண்ணம் உள்ளவர் என்றால் எப்பொழுதும் ஒவ்வொரு காரியத்தில் பரந்த மனம் மற்றும் பெரிய மனம் உள்ளவர். எந்த விஷயத்தில் பரந்த மனம் மற்றும் பெரிய மனம் உள்ளவராக இருக்கிறீர்கள்? அனைவர் மீதும் சுபபாவனை மூலமாக முன்னேற்றம் செய்விக்கும் பரந்த மனம். உன்னுடையது என்பது என்னுடையது, என்னுடையது என்பது உன்னுடையதாக ஆனது. ஏனென்றால், நான் ஒரே ஒரு தந்தையினுடையவன். இந்த எல்லைக்கப்பாற்பட்ட உள்உணர்வு பரந்த மனம், பெரிய மனம் இருக்கட்டும். நன்மை செய்யும் உள்ளம் இருக்கட்டும் அதாவது கொடுக்கும் பாவனை நிறைந்த இதயம் இருக்கட்டும். தான் பிராப்தி செய்திருக்கும் குணங்கள், சக்திகள், விசேஷங்கள் அனைத்திலும் பெரிய வள்ளல் ஆகும் பரந்த மனம் இருக்கட்டும். வார்த்தைகள் மூலம் ஞானச் செல்வத்தை தானம் செய்வது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. ஆனால் குண தானம் மற்றும் குணம் கொடுப்பதின் சகயோகி ஆக வேண்டும். இந்த தானம் என்ற வார்த்தை பிராமணர்களைப் பொருத்தளவில் தகுதியான வார்த்தை இல்லை. தன்னுடைய குணம் மூலம் மற்றவர்களை குணம் நிறைந்தவராக ஆக்குவதில், விசேஷத்தை நிரப்புவதில் சகயோகி ஆவது என்பதைத் தான் பெரும் வள்ளல் மற்றும் பரந்த மனம் என்று கூறுவது. அந்த மாதிரி நன்மை பயக்கும் எண்ணம் உள்ளவராக, நன்மை பயக்கும் உள்ளம் உள்ளவராக ஆக வேண்டும். இது தான் பிரம்மா தந்தையை பின்பற்றி நடப்பது. அந்த மாதிரி நன்மை செய்பவரின் அடையாளம் என்னவாக இருக்கும்.
விசேஷமாக மூன்று அடையாளங்கள் இருக்கும். அம்மாதிரியான ஆத்மா பொறாமை, வெறுப்பு மற்றும் விமர்சனம் செய்வதிலிருந்து எப்பொழுதும் விடுபட்டு இருப்பார். இவரைத் தான் நன்மை செய்பவர் என்று கூறுவது. பொறாமை தன்னையும் தொந்தரவு செய்யும் மேலும் மற்றவர்களையும் தொந்தரவு செய்யும். எப்படி கோபத்தை அக்னி என்று கூறுகிறார்கள், அதே போல் பொறாமையும் அக்னி மாதிரியே காரியம் செய்கிறது. கோபம் பெரிய அக்னி, பொறாமை சிறிய அக்னி. வெறுப்பு ஒருபொழுதும் நற்சிந்தனையாளர் மற்றும் நற்சிந்தனை நிறைந்த நிலையை அனுபவம் செய்விக்காது. வெறுப்பு என்றால் தானும் விழுவது மற்றும் மற்றவர்களையும் விழ வைப்பது. அந்த மாதிரி விமர்சனம் செய்ய விரும்பினீர்கள் என்றால், நகைச்சுவையோடு செய்யுங்கள் அல்லது சீரியசாகி செய்யுங்கள். ஆனால் இது அந்த மாதிரி துக்கம் கொடுக்கிறது எப்படி யாராவது சென்று கொண்டிருக்கிறார் அவரைத் தள்ளிவிட்டு விழ வைப்பது. எப்படி யாரையாவது விழ வைக்கிறோம் என்றால் சின்ன காயமோ அல்லது பெரிய காயமோ ஏற்படுவதினால் அவர் தைரியமற்றவர் ஆகிவிடுகிறார். அந்த காயத்தையே தான் யோசித்துக் கொண்டிருப்பார். எதுவரை காயம் இருக்குமோ அதுவரை காயப்படுத்தியவரை ஏதாவது ரூபத்தில் நினைவு செய்து கொண்டே இருப்பார். இது சாதாரண விஷயம் இல்லை. யாரைப் பற்றியாவது ஏதாவது கூறிவிடுவது மிக சுலபம். ஆனால் நகைச்சுவையோடு கூறிய வார்த்தைகளால் ஏற்படும் காயம் கூட துக்கம் தருவதாக ஆகிவிடுகிறது. இதுவும் துக்கம் கொடுக்கும் பட்டியலில் வந்து விடுகிறது. புரிந்து கொண்டீர்களா? எந்த அளவு ஆதார சொரூபமாக இருக்கிறீர்களோ அந்த அளவு நன்மை செய்யும் சொரூபம், நன்மை செய்யும் உள்ளம், நன்மை செய்பவராக ஆவதற்காக பொறுப்பு சொரூபம். அடையாளங்களைப் புரிந்து கொண்டீர்கள் இல்லையா. நன்மை செய்பவர் பரந்த மனமுடையவராக இருப்பார்.
சபையோ மிக நன்றாக இருக்கிறது. அனைத்து பெயர் பெற்றவர் வந்திருக்கிறார்கள். திட்டங்களையும் நல்ல நல்லதாக உருவாக்கியிருக்கிறீர்கள். திட்டத்தை நடைமுறையில் கொண்டு வருவதற்கான தைரியம் இருக்கட்டும். எவ்வளவு நல்ல திட்டத்தை உருவாக்கியிருக்கிறீர்களோ அந்த அளவு நீங்களும் நல்லவர்களாக இருக்கிறீர்கள். தந்தைக்கு விருப்பமான நல்லவர்களாக இருக்கிறீர்கள். சேவையின் ஈடுபாடு மிக நன்றாக இருக்கிறது. சேவையில் சதா காலத்திற்கும் வெற்றிக்கான ஆதாரம் நன்மை செய்வது. அனைவரின் லட்சியம், நல் எண்ணங்கள் மிக நன்றாக இருக்கிறது. மேலும் ஒன்றே ஒன்று தான் இருக்கிறது. ஒரே ஒரு வார்த்தையை மட்டும் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு தந்தையின் பிரத்யக்ஷம் (வெளிப்படுத்துவது) செய்ய வேண்டும். ஒருவருடையவர் ஆகி ஒருவரை பிரத்யக்ஷம் செய்ய வேண்டும். இதை மட்டும் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு தந்தையின் அறிமுகம் கொடுப்பதற்காக அஞ்ஞானி மனிதர்களும் ஒரு விரலால் சமிக்ஞை கொடுப்பார்கள். இரண்டு விரல்களைக் காண்பிக்க மாட்டார்கள். சகயோகி ஆவதின் அடையாளமாக கூட ஒரு விரலை காண்பித்திருக்கிறார்கள். விசேஷ ஆத்மாக்கள் உங்களுடைய இந்த விசேஷத்தின் அடையாளம் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த பொன்விழாவை கொண்டாடுவதற்காக மற்றும் திட்டங்களை உருவாக்குவதற்காக எப்பொழுதும் 'ஒற்றுமை மற்றும் ஒருமித்த நிலை' என்ற இந்த இரண்டு விஷயங்கள் நினைவில் இருக்கட்டும். செய்யும் காரியத்தின் வெற்றிக்காக இந்த இரண்டும் சிரேஷ்ட புஜங்கள். ஒருமித்த நிலை என்றால் எப்பொழுதும் வீணான மற்றும் தீய எண்ணம் இல்லாத நிலை. எங்கு ஒற்றுமை மற்றும் ஒருமித்த நிலை இருக்கிறதோ அங்கு வெற்றி கழுத்தின் மாலையாக இருக்கிறது. பொன்விழா ஆண்டின் காரியத்தை இந்த விசேஷ இரண்டு புஜங்களால் செய்யுங்கள். அனைவருக்கும் இரண்டு புஜங்களோ இருக்கின்றன. இந்த இரண்டையும் ஈடுபடுத்தினீர்கள் என்றால், நான்கு புஜங்கள் உள்ளவராக ஆகிவிடுவீர்கள். சத்திய நாராயணன் மற்றும் மகாலட்சுமிக்கு நான்கு புஜங்கள் காண்பித்திருக்கிறார்கள். நீங்கள் அனைவரும் சத்திய நாராயணன் மற்றும் மகாலட்சுமிகள். நான்கு புஜங்கள் உள்ளவராகி ஒவ்வொரு காரியம் செய்வது என்றால் சாட்சாத்கார சொரூபம் ஆவது. இரண்டு புஜங்களால் மட்டும் காரியம் செய்யாதீர்கள். நான்கு புஜங்களால் செய்யுங்கள். இப்பொழுது பொன்விழா ஆண்டிற்கான ஸ்ரீகணேஷ் (பிள்ளையார் சுழி) போட்டிருக்கிறீர்கள் இல்லையா? (துவக்கம் செய்திருக்கிறீர்கள் இல்லையா). கணேஷிற்கும் நான்கு புஜங்கள் காண்பிக்கிறார்கள். பாப்தாதா தினசரி மீட்டிங்கில் வருகிறார். ஒரு தடவை சுற்றி வந்தாலே அனைத்து செய்திகளும் தெரிந்து விடுகிறது. பாப்தாதா அனைவரின் சித்திரத்தை வரைந்து எடுத்துச் செல்கிறார். எப்படி எப்படி அமர்ந்திருக்கிறார்கள். உடல் ரூபத்தில் அல்ல, மனதின் நிலையின் ஆசனத்தின் புகைப்படம் எடுக்கிறார். வாய் மூலம் யாராவது என்ன தான் பேசிக் கொண்டிருந்தாலும், மனதால் என்ன பேசுகிறார் என்று மனதின் பேச்சை ஒலியையும் நாடாவில் பதிவு செய்கிறார். பாப்தாதாவிடமும் அனைவரையும் பதிவு செய்த ஒலிநாடா இருக்கிறது. சித்திரமும் இருக்கிறது, இரண்டும் இருக்கிறது. வீடியோ, டி.வி ஆகியவை என்ன விரும்புகிறீர்களோ அவை அனைத்தும் இருக்கின்றன. உங்கள் அனைவரிடமும் உங்களுடைய கேசட் இருக்கிறது தான் இல்லைய?. ஆனால் சிலருக்கு தன்னுடைய மனதின் பேச்சு, எண்ணம் தெரிய வருவதில்லை. நல்லது.
இளைஞர்கள் தயாரித்த திட்டங்கள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன. இதுவும் ஊக்கம் உற்சாகத்தின் விஷயம். கட்டாயத்தின் விஷயம் இல்லை. உள்ளப்பூர்வமான ஊக்கம் என்னவாக இருக்கிறதோ அது இயல்பாகவே மற்றவர்களிலும் ஊக்கம் நிறைந்த சூழ்நிலையை உருவாக்கும். அப்படி இது பாதயாத்திரை இல்லை. ஆனால் ஊக்கத்தின் யாத்திரை. இதுவோ ஒரு காரணத்திற்காக செய்வது. எந்தவொரு காரியம் செய்தாலும் அதில் ஊக்கம் உற்சாகத்தின் விசேஷம் இருக்கட்டும். அனைவருடைய திட்டம் பிடித்திருக்கிறது. இன்னும் வரும் நாட்களிலும் நான்கு புஜங்கள் உள்ளவராகி திட்டங்களை நடைமுறையில் கொண்டு வந்து கொண்டே இருந்தீர்கள் என்றால் இன்னும் அதில் சேர்ந்து கொண்டே இருக்கும். அனைவருக்கும் பொன்விழா ஆண்டை கோலாகலமாக கொண்டாடுவதற்கான ஒரே ஒரு ஊக்கம் உற்சாகம் நிறைந்த எண்ணம் இருக்கிறது என்பது பாப்தாதாவிற்கு மிக நல்ல விஷயமாகத் தென்பட்டது. இந்த அஸ்திவாரம் அனைவரின் ஊக்கம் உற்சாகம் நிறைந்த எண்ணம் ஒன்றாகவே இருக்கிறது. இந்த ஒரு வார்த்தையை எப்பொழுதும் அடிக்கோடிட்டு முன்னேறிச் செல்லுங்கள். ஒருவர் இருக்கிறார், அந்த ஒருவருடைய காரியம். உலகத்தில் எந்தவொரு மூலையில் நடந்து கொண்டிருந்தாலும் பாரதத்திலோ அல்லது வெளிநாட்டிலோ நடந்தாலும் எந்த மண்டலத்தில் கிழக்கு மற்றும் மேற்கு அப்படி எந்த மண்டலத்தில் நடந்தாலும் ஆனால் ஒருவர், அந்த ஒருவரின் காரியம். அனைவரின் எண்ணமும் அந்த மாதிரியே தான் இருக்கிறது இல்லையா? முதலில் இந்த உறுதிமொழி செய்தீர்கள் தான் இல்லையா? வாயினால் செய்யும் உறுதிமொழி இல்லை, மனதில் இந்த உறுதிமொழி என்றால் உறுதியான எண்ணம். என்ன நடந்தாலும் சரி, ஆனால் இதைத் தவிர்க்க முடியாது, அப்படி உறுதியான நிலை. இந்த மாதிரி உறுதிமொழியை அனைவரும் செய்தீர்களா? எப்படி ஏதாவது ஒரு நல்ல காரியம் செய்கிறீர்கள் என்றால், உறுதிமொழி செய்வதற்காக முதலில் அனைவரும் மனதில் எண்ணம் வைக்கும் அடையாளமாக கங்கணம் கட்டுகிறீர்கள். காரியம் செய்பவர்களுக்கு நூலில் செய்யப்பட்ட அல்லது ஏதாவது ஒரு கங்கணத்தை கட்டுகிறீர்கள். அப்படி இது சிரேஷ்ட எண்ணத்தின் கங்கணம் இல்லையா? எப்படி இன்று அனைவருமே பண்டாரியில் (உண்டியல்) மிக ஊக்க உற்சாகத்தோடு ஸ்ரீகணேஷ் செய்தீர்கள். அதே போல் இப்பொழுது இந்த பெட்டியையும் வையுங்கள். அதில் அனைவரும் உறுதியான உறுதிமொழி என்று புரிந்து துண்டுச் சீட்டையும் போடட்டும். இரண்டு உண்டியலும் சேர்ந்தே இருந்தால் தான் வெற்றி கிடைக்கும். மனப்பூர்வமாக இருக்க வேண்டும், மற்றவர்களுக்கு காண்பிப்பதற்காக மட்டும் என்று இருக்கக்கூடாது. இது தான் அஸ்திவாரம். பொன்னானவராகி பொன்விழாவைக் கொண்டாடுவதற்கான ஆதாரம் இது. இதில் ஒரே ஒரு 'பிரச்சனையாக ஆக மாட்டோம், பிரச்சனையை கண்டு குழப்பம் அடைய மாட்டோம்' என்ற சுலோகனின் நினைவு வைத்துக் கொள்ள வேண்டும். சுயம் தானும் சமாதான சொரூபமாக இருப்போம் மேலும் மற்றவர்களுக்கும் சமாதானம் கொடுப்பவர்களாக ஆவோம்.. இந்த நினைவு இயல்பாகவே பொன் விழாவை வெற்றி சொரூபமாக ஆக்கிக் கொண்டே இருக்கும். எப்பொழுது இறுதி பொன்விழா நடக்குமோ அப்பொழுது அனைவருக்கும் உங்களுடைய பொற்கால சொரூபம் அனுபவம் உண்டாகும். உங்களில் பொன் உலகத்தை பார்ப்பார்கள். பொன்னுலகம் வருகிறது என்று கூற மட்டும் மாட்டார்கள். ஆனால் நடைமுறையில் காண்பிப்பார்கள். எப்படி மந்திரவாதிகள் இதைப் பாருங்கள், இதைப் பாருங்கள் என்று காண்பித்துக் கொண்டே செல்கிறார்கள், கூறிக் கொண்டே செல்கிறார்கள். அதே போல் உங்களுடைய பொன்னான முகம், பிரகாசமான நெற்றி, பிரகாசமான கண்கள், பிரகாசமான உதடுகள் இவை அனைத்தும் பொற்காலத்தின் காட்சிகளைக் கொடுக்கட்டும். எப்படி சித்திரங்களை உருவாக்குகிறீர்கள் இல்லையா? ஒரே படத்தில் இப்பொழுது பிரம்மாவைப் பாருங்கள், இப்பொழுது கிருஷ்ணரைப் பாருங்கள், இப்பொழுது விஷ்ணுவைப் பாருங்கள் என்று காண்பிக்கிறீர்கள் இல்லையா? அதே போல் உங்களுடைய சாட்சாத்காரம் கிடைக்கட்டும். இந்த நேரம் ஃபரிஷ்தா அடுத்த நேரம் விஷ்வ மகாராஜன், விஷ்வ மகாராணி ரூபம், அடுத்த நேரம் சாதாரண வெந்நிற ஆடை தரித்தவர். இந்த விதவிதமான சொரூபம் உங்களுடைய இந்த பொன்னான உருவத்திலிருந்து தென்படட்டும். புரிந்ததா?
எப்பொழுது இந்தளவு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆன்மீக ரோஜா மலர்களின் பூச்செண்டு ஒன்றாகக் கூடி யிருக்கிறது. ஒரு ஆன்மீக ரோஜா மலரின் நறுமணம் எவ்வளவு இருக்கிறது என்றால் இவ்வளவு பெரிய இந்த பூச்செண்டு எவ்வளவு அதிசயம் செய்யும். மேலும் ஒவ்வொரு நட்சத்திரத்தில் உலகமும் இருக்கிறது. நீங்கள் தனியாக இருக்கவில்லை. அந்த நட்சத்திரங்களில் உலகம் இல்லை. ஆனால் நட்சத்திரங்கள் உங்களில் உலகம் இருக்கிறது இல்லையா?. அதிசயமோ நடக்கத்தான் வேண்டும். அது நிச்சயிக்கப்பட்டது. நான் தான் முதல் செய்பவன் அர்ஜுனன் என்று மட்டும் ஆக வேண்டும். மற்றபடி வெற்றியோ கண்டிப்பாக கிடைக்கும். அது உறுதியானது. ஆனால் அர்ஜுனன் ஆக வேண்டும். அர்ஜுனன் என்றால் நம்பர் ஒன். இப்பொழுது இதன் மேல் பரிசு கொடுங்கள். முழு பொன்விழா ஆண்டில் பிரச்சனையாகவும் ஆகவில்லை, பிரச்சையையும் பார்க்க வில்லை. தடையற்ற, தீய எண்ணமற்ற, விகாரமற்ற என்ற இந்த மூன்று விசேஷங்களும் இருக்கட்டும். அம்மாதிரி பொன்னான நிலையில் இருக்கக்கூடியவர்களுக்கு பரிசு கொடுங்கள். பாப்தாதாவிற்கும் குஷி இருக்கிறது. விசால புத்தி உடைய குழந்தைகளைப் பார்த்து குஷியோ ஏற்படும் இல்லையா? எப்படி விசால புத்தியோ அப்படி விசால மனம். நீங்கள் அனைவரும் விசால புத்தியுடையவர்கள் அதனால் தான் திட்டம் போடுவதற்காக வந்திருக்கிறீர்கள். நல்லது.
எப்பொழுதும் தன்னை ஆதார சொரூபம், நன்மை செய்பவர் சொரூபம், எப்பொழுதும் நன்மை செய்யும் நன்மை நிறைந்த உள்ளம், நன்மை நிறைந்த எண்ணம் உள்ள, எப்பொழுதும் ஒருவர் தான் அந்த ஒருவரின் காரியம் தான் என்று அம்மாதிரி ஒரே சீரான நிலையில் நிலைத்திருக்கக்கூடிய, எப்பொழுதும் ஒற்றுமை மற்றும் ஒருமித்த நிலையில் நிலைத்திருக்கக்கூடிய, அந்த மாதிரி விசால புத்தி, விசால மனம் மற்றும் விசால சிந்தனை நிறைந்த குழந்தைகளுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.
முக்கிய சகோதர சகோதரிகளுடன் சந்திப்பு -
அனைவரும் மீட்டிங் செய்தீர்கள். சிரேஷ்ட எண்ணங்களின் சித்தி (வெற்றி) கண்டிப்பாக இருக்கும். எப்பொழுதும் ஊக்கம் உற்சாகத்துடன் முன்னேறிச் செல்வது என்பது தான் விசேஷம். விசேஷமாக மனசேவை செய்வதற்கு முயற்சி செய்யுங்கள். மனசேவை ஒரு காந்தம் மாதிரி. எப்படி காந்தம் எவ்வளவு தான் தூரத்தில் இருக்கும் ஊசியை ஈர்க்க முடிகிறது, அதே போல் மனசேவை மூலமாக வீட்டில் அமர்ந்து கொண்டே அருகில் சென்றடைந்து விடுவீர்கள். இப்பொழுது நீங்கள் வெளியில் அதிகமாக பிஸியாக இருக்கிறீர்கள், மனசேவையை உபயோகப்படுத்துங்கள். ஸ்தாபனை காரியத்தில் என்னென்ன பெரிய காரியம் நடந்திருக்கிறதோ அவைகளின் வெற்றி மனசேவை மூலம் தான் கிடைத்தது. எப்படி அந்த மனிதர்கள் இராம் லீலா அல்லது என்ன காரியம் செய்தாலும் அந்தக் காரியம் செய்வதற்கு முன்பு தன்னுடைய மனநிலையை அந்த காரியத்தின் அனுசாரம் விரதத்தில் வைக்கிறார்கள். நீங்கள் அனைவரும் மனசேவையின் விரதத்தை எடுத்துக் கொள்ளுங்கள். விரதம் எடுக்காததினால் குழப்பத்தில் அதிகம் இருக்கிறீர்கள். எனவே முடிவு ஒரு நேரம் ஒரு மாதிரியும் இன்னொரு நேரம் வேறு மாதிரியும் இருக்கிறது. மனசேவையின் பயிற்சி அதிகம் வேண்டும். மனசேவை செய்வதற்காக லைட் ஹவுஸ் மற்றும் மைட் ஹவுஸின் நிலை வேண்டும். லைட் மற்றும் மைட் இரண்டும் சேர்ந்தே இருக்க வேண்டும். மைக்கின் எதிரில் மைட் ஆகி பேச வேண்டும். மைக்கும் இருக்க வேண்டும், மைட்டும் இருக்க வேண்டும். வாயும் மைக் தான். அப்படி மைட் ஆகி மைக் மூலம் பேசுங்கள். எப்படி சக்திசாலியான நிலையில் மேலே இருந்து இறங்கியிருக்கிறார், அவதாரம் ஆகி அனைவருக்காகவும் செய்தியைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அவதாரம் பேசிக் கொண்டிருக்கிறது. அவதரித்திருக்கிறார். அவதாரத்தின் நிலை சக்திசாலியாக இருக்கும் இல்லையா? எனவே எந்த நேரம் உங்களை நீங்கள் அவதாரம் என்று நினைப்பீர்களோ அது தான் சக்திசாலியான நிலை. நல்லது.
வரதானம்:
சாட்சியாகி உயர்ந்த நிலை மூலமாக அனைத்து ஆத்மாக்களுக்கு சக்தி கொடுக்கக்கூடிய தந்தைக்குச் சமமான அவ்யக்த ஃபரிஷ்தா ஆகுக.
சென்றாலும் வந்தாலும், காரியங்கள் செய்து கொண்டே எப்பொழுதும் தன்னை நிராகார ஆத்மா மேலும் காரியம் செய்யும் போது அவ்யக்த ஃபரிஷ்தா என்று புரிந்து கொண்டீர்கள் என்றால், எப்பொழுதும் குஷியில் மேலே பறந்து கொண்டே இருப்பீர்கள். ஃபரிஷ்தா என்றால், உயர்ந்த நிலையில் இருப்பவர். இந்த தேகத்தின் உலகத்தில் என்ன நடந்து கொண்டிருந்தாலும், சாட்சியாகி அனைத்துக் காட்சிகளையும் பார்த்துக் கொண்டே இருங்கள். மேலும் சக்தி கொடுத்துக் கொண்டே இருங்கள்.இருக்கையில் இருந்து கீழே இறங்கி சக்தி கொடுக்கப்பட மாட்டாது. உயர்ந்த நிலையில் நிலைத்திருந்து உள் உணர்வு, திருஷ்டி மூலம் சகயோகத்தின், நன்மை பயக்கும் சக்தி கொடுங்கள், கலப்படம் ஆனவராக இல்லாமல் அப்பொழுது தான் எந்தவிதமான சூழ்நிலைகளிலும் பாதுகாப்பாக இருந்து தந்தைக்குச் சமமாக அவ்யக்த ஃபரிஷ்தா ஆகுக என்ற வரம் பெறுபவராக ஆவீர்கள்.
சுலோகன் :
நினைவு பலம் மூலம் துக்கத்தை சுகத்தில், மேலும் அசாந்தியை சாந்தியில் பரிவர்த்தனை செய்யுங்கள்.
அவ்யக்த நிலையின் அனுபவம் செய்வதற்காக விசேஷ ஹோம் ஒர்க் (வீட்டுப் பாடம்) -
பிரம்மா தந்தை மேல் அன்பு இருக்கிறது என்றால், அன்பின் அடையாளங்களை நடைமுறையில் காண்பிக்க வேண்டும். எப்படி பிரம்மா தந்தைக்கு நம்பர் ஒன் அன்பு முரளி மீது இருந்தது. அதனால் முரளீதரன் ஆனார். எனவே எதன் மீதும் பிரம்மா தந்தைக்கு அன்பு இருந்ததோ மேலும் இப்பொழுதும் இருக்கிறதோ அதன் மீதும் எப்பொழுதும் அன்பு தென்பட வேண்டும். ஒவ்வொரு முரளியையும் மிகவும் அன்புடன் படித்து அதன் சொரூபம் ஆக வேண்டும்.
***ஓம்சாந்தி ***
Brahma Kumaris Murli Tamil 12 January 2020
No comments
Say Om Shanti to all BKs